வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா நேரியகுளம் பகுதியில் கொரோனா தொற்றினால் வயதான பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு தினங்களிற்கு முன்பாக வீட்டில் மரணமடைந்துள்ளார்.

அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அதன் முடிவுகளின் பிரகாரம் பெண்ணுக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவருடன் நேற்றையதினம் (11.08.2021) வவுனியாவில் இரண்டு பெண்கள் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பேருந்து விபத்து : 20இற்கும் மேற்பட்டோர் காயம்!!

விபத்து..

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே கல்லுண்டாய் வீதியில் வைத்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

பேருந்து வேகமாக பயணித்துள்ள நிலையில் அப்பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

-தமிழ்வின்-

வவுனியாவில் 84 பேருக்கு கொரோனா தொற்று : மக்களே அவதானம்!!

வவுனியாவில்..

வவுனியாவில் 84 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (12.08.2021) வெளியாகின.

அதில் நெளுக்குளம் பகுதியில் இருவருக்கும், சிறிநகர் பகுதியில் நான்கு பேருக்கும், அண்ணாநகர் பகுதியில் ஒருவருக்கும், அவுசலப்பிட்டிய பகுதியில் இருவருக்கும், தவசிகுளம் பகுதியில் நான்கு பேருக்கும், சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருவருக்கும்,

நேரியகுளம் பகுதியில் இருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் இருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவருக்கும், அரசடிக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் இருவருக்கும்,

தம்பனைபுளியங்குளம் பகுதியில் ஏழு பேருக்கும், கல்மடு பகுதியில் ஏழு பேருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஓமேகா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும், கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும்,

சாந்தசோலை பகுதியில் மூன்று பேருக்கும், சிறைச்சாலை கைதிகள் ஐந்து பேருக்கும், சுகாதார திணைக்கள விடுதியில் மூன்று பேருக்கும், வவுனியா இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருககும், நெடுங்கேணி பகுதியில் ஆறு பேருக்கும், நெல்வேலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் ஒருவருக்கும், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பதின்மூன்று பேருக்கும்,

போகவ்வெவ பகுதியில் ஒருவருக்கும், தாலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைளை காணவில்லை : கணவர் முறைப்பாடு!!

காணவில்லை..

வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் சற்குணசிங்கம் தமிழினி மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா, கனிஸ்கா ஆகியோர் வீட்டில் தனிமையில் இருந்த சமயத்தில் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் குடும்பத்தினருடன் கணவர் , மனைவி , இரு பிள்ளைகள் என நால்வர் வசித்து வந்த நிலையில் கடந்த 10.08.2021 அன்று கணவர் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் காணவில்லை இதனையடுதது கணவரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சற்குணசிங்கம் தமிழினி வயது 32 மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா வயது 5, கனிஸ்கா வயது 4 ஆகியோரே காணாமல் போனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிவிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0777111103, 0775945839 என்ற இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று நாடே பாராட்டிய இந்த அழகிய ஐ.ஏ.எஸ் தம்பதி : இன்று எடுத்த திடீர் முடிவு!!

இந்தியாவில்..

இந்தியாவில் இணையத்தில் பலரால் பெரிய அளவில் பேசப்பட்ட அழகிய ஐஏஎஸ் தம்பதி, தற்போது விவகாரத்து செய்து கொண்டுள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தன்னுடைய முதல் முயற்சியிலே டீனா டாபி முதலிடம் பெற்றார்.

பட்டியலினப் பெண்ணான இவர், ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்றது பலரது பாராட்டுக்களை பெற்றது. இவரைத் தொடர்ந்து இதே தேர்வில், காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த அதார் அமீர் கான் இரண்டாவது இடம் பெற்றார்.

இவர்கள் இருவரும் முசோரியில் லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் தான் ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் மலர, அந்தக் காதல் பற்றி டீனா டாபி, அவருக்கு என்னைப் பார்த்ததும் காதல் மலர்ந்துவிட்டது.

காலையில் தான் இருவரும் முதன்முதலாக சந்தித்தோம். மாலையில் அவர் எனக்கு காதலை சொல்லிவிட்டார் எனப் அப்போது தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பேசப்பட்டது. ஏனெனில், அதார் கான் ஓர் இஸ்லாமியர், டீனா டாபி இந்து என்பதே இவர்கள் மீது தேசிய அளவில் கவனம் பெறக் காரணமானது.

இவர்களை எத்தனை பேர் வரவேற்றுக் கொண்டாடினார்களோ அதே அளவுக்கு இவர்களது காதலுக்கும் திருமணத்துக்கும் எதிராக குரல் எழும்பியது. இந்து மகாஜன் சபா வெளிப்படையாக எதிர்ப்புகளைப் பதிவு செய்த்தௌ.

கணவனுக்கு தெரியவந்த உண்மை : அதிர்ச்சியில் 7 மாத கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணத்திற்கு முந்தைய காதல் ரகசியம் கணவனுக்கு தெரிந்ததால் 7 மாத கர்ப்பிணி வி.ஷம் கு.டித்து த.ற்கொலை செ.ய்து கொண்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபி அருகே வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் செல்வநாயகியை (24), பொலவக்காளி பாளையம் அருகே உள்ள பெருமாக்கவுண்டன் வலசை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் கமல்பிரசாத்துக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார்.

கமல் பிரசாத் கட்டிடங்களுக்கு இன்டீரியர் டிசைனராக உள்ளார். செல்வநாயகி திருமணத்திற்கு முன் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். மகள் வேறு ஒருவரை காதலித்து வருவதை அறிந்த அவரது பெற்றோர் அவசர அவசரமாக கமல்பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

செல்வநாயகி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் செல்வநாயகியின் காதல் குறித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் கணவர் கமல்பிரசாத்திற்கு தெரிய வந்துள்ளது.

அதைதொடர்ந்து தனது மனைவியிடம், திருமணத்துக்கு முன் காதல் விவகாரத்தை கூறி இருக்கலாமே என்று கேட்டுள்ளார். இதனால் அ.திர்ச்சியடைந்த செல்வநாயகி தனது காதல் கணவருக்கு,

தனது முந்தைய வாழ்க்கை ரகசியம் தெரிய வந்ததால் காலம் முழுவதும் மன உலைச்சலுடனே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாக நினைத்து வீட்டில் வி.ஷம் கு.டித்து த.ற்கொலை செ.ய்து கொண்டார்.

மனைவி உ.யிரிழந்ததை அறிந்த கமல்பிரசாத் வி.ஷம் கு.டித்து விட்டு கோவையில் இருந்து கோபி் நோக்கி காரில் வேகமாக சென்று, தெக்கலூரில் லாரி மீது காரை மோதி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த கமல்பிரசாத், கோபியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் மீண்டும் ஆபத்தாக மாறியுள்ள கொரோனா : மேலும் 124 பேர் உயிரிழப்பு!!

கொரோனா..

நாட்டில் மேலும் 124 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 10.08.2021 , 124 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 வயதிற்கு கீழ் 01 மரணமும், 30 முதல் 59 வயது வரையிலான 28 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 95 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 49 பெண்களும் 75 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

குளியலறையில் குழந்தை பெற்ற மாணவி : இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!!

கேரளாவில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பள்ளி மா.ணவி க.ர்ப்பமான வி.வகாரத்தில் இ.ளைஞருக்கு ஆ.யுள் வரையில் க.டுங்காவல் த.ண்டனை விதித்து போஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 29 வயதான முகமது ஹர்ஷத் என்பவரையே போஸ்கோ நீதிமன்றம் த.ண்டித்துள்ளது.
காதலிப்பதாக கூறி ஏமாற்றி,

ப.ள்ளி மா.ணவி க.ர்ப்பமடைந்த நிலையில், ர.கசியமாக கு.ளியலறையில் பி.ள்ளை பெ.ற்றெடுத்ததை அடுத்தே குறித்த வி.வகாரம் கு.டும்பத்தினருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து காவல்துறையில் பு.கார் அளித்துள்ளது மா.ணவியின் குடும்பம். தற்போது இந்த வழக்கில் வி.சாரணை முடிவுக்கு வந்த நிலையில், இளைஞர் முகமது ஹர்ஷதுக்கு ஆ.யுள் வரையில் க.டுங்காவல் த.ண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது போஸ்கோ நீதிமன்றம்.

மட்டுமின்றி ஒரு லட்சம் ரூபாய் அ.பராதமும் விதித்துள்ளது. இந்த தொகையுடன் சட்ட சேவைகள் ஆணையம் வாயிலாக ஒரு லட்சம் ரூபாயும் பா.திக்கப்பட்ட மா.ணவிக்கு இ.ழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொ.டர்புடைய கு.ற்றவாளி ஹர்ஷதுக்கு, இதேப்போன்று மேலும் சில பு.கார்கள் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளதும், நீதிமன்ற வி.சாரணையில் தெரிய வந்துள்ளது.

80 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல வாந்தி பறிமுதல் : 5 பேர் கைது!!

திமிங்கல வாந்தி..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 80 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டத்துக்கு விரோதமாக விற்க பதுக்கி வைத்திருந்த, வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படும்,

80 கோடி ரூபாய் மதிப்புள்ள 80 கிலோ திமிங்கல எச்சம், பெங்களூரில் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு பாகல்குண்டே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், மர்ம நபர்கள் சிலர், சட்டத்துக்கு விரோதமாக, Ambergris எனும் திமிங்கலத்திடம் இருந்து எடுக்கப்படும் ஒரு திடப்பொருளை (திமிங்கலத்தின் வாந்தி) விற்பதாக மத்திய குற்றப்பிரிவு பொலிஸாருக்கு (Central Crime Branch) தகவல் கிடைத்தது.

வாசனை திரவியத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த பொருளுக்கு வெளிநாடுகளில் நல்ல விலை உள்ளது. 1 கிலோ, ஒரு கோடி ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த சி.சி.பி., இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல், சிறப்பு குழுவை அமைத்து, சோதனை மேற்கொண்டதை அடுத்து, சட்டத்துக்கு விரோதமாக விற்க பதுக்கி வைத்திருந்த, 80 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, பெங்களூரைச் சேர்ந்த, முஜீப் பாஷா (48), முகமது (45), குலாப் சந்த் (40), சந்தோஷ் (31), ஜகனாத் ஆச்சார் (52) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

5 நாட்களாக கட்டில் கிடைக்காமையினால் உயிரிழந்த கொரோனா தொற்றாளர்!!

கொரோனா தொற்றாளர்..

பியகம பிரதேசத்தில் 5 நாட்களாக கட்டில் கிடைக்காமையினால் கொவிட் தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு வாரமாக தனக்கு சுவாசிக்க முடியவில்லை என கூறி சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்திய,

நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாமல் போனமையினால் நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் எஸ்.டீ.யூ.டீ.குலதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையின் உண்மையான தன்மையை புரிந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்றைய தினம் மாத்திரம் பியகம பிரதேசத்தில் தங்களுக்கு தெரியப்படுத்திய 3 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மரணங்களின் நேரடி எதிர்ப்பு சுகாதார பரிசோதகர்கள் மீதே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் 1200 மரணங்களை தவிர்க்கலாம்!!

ஊரடங்கு..

ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் சுமார் ஆயிரத்து இருநூறு மரணங்களை தவிர்க்க முடியும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால் எதிர்வரும் 20 நாட்களில் ஏற்படக்கூடிய 1200 மரணங்களை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் சுனேத், அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் தொடர்பான நிபுணராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கோவிட் புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயத்தை எதிர்வு கூற முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் பதிவொன்றை இட்டதன் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானம் 5 நாட்கள் பின்தள்ளப்பட்டால் 700 மரணங்களுக்கு அது ஏதுவாக அமையக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு வாரங்களில் நாளாந்த மரண எண்ணிக்கை 150 ஆக உயர்வடையும் எனவும் அவர் கடந்த 7ம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

அதிகரிக்கும் கொரோனா தொற்று : இராணுவத் தளபதியின் மற்றுமொரு அவசர அறிவுறுத்தல்!!

அதிகரிக்கும் கொரோனா..

இலங்கையில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் திருமண நிகழ்வு உள்ளிட்ட அறிவுறுத்தல்களை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மற்மொரு அவசர அறிவுறுத்தலானது வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நிறுவனங்களின் கடமைகளுக்குத் தேவையானவர்களை மட்டுமே பணிக்கு அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களை விருப்பப்படி நிறுவனங்களுக்கு அழைத்தால் கோவிட் தொற்று அபாயம் அதிகரிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நேரத்தில் தேவையான ஊழியர்களை மட்டுமே அழைப்பது நிறுவனங்களின் தலைவர்களின் பொறுப்பு எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா பண்டாரிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் கொரோனா அச்சம் காரணமாக பூட்டு!!

பண்டாரிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம்..

கொரோனா தொற்று அச்சம் காரணமாக வவுனியா பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து கிராம சேவையாளர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம சேவையாளர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அவர்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையிலிருந்து 33 வயதுடைய கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்!!

கொரோனா தொற்றாளர்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 33வயதுடைய கொரோனா தொற்றார் இன்று (11.08.2021) மதியம் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில் அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக காணப்படுகின்றார். குறித்த நபர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கொரோனா தொற்றாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த கொரோனா தொற்றாளர் இன்று மதியம் அவரது வீட்டிற்கு தப்பியோடியுள்ளார். அதன் பின்னர் மனைவி அவரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து வீட்டுள்ளார்.

மனைவியை விட்டு பிரிந்து வாழ முடியாத நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து அவர் தப்பியோடியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் தேர்த்திருவிழா -2021

தேர்த்திருவிழா..

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று (10.08.2021) செவ்வாய்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.

சுகாதார நடைமுறைகளுடன் மட்டுபடுத்தப்பட்ட பக்தர்களின் பிரசன்னத்துடன் மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .

வவுனியாவில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (11.08.2021) வெளியாகின.

அதில் பூந்தோட்டம் பகுதியில் இருவருக்கும், வேலன்குளம் இராணுவ முகாமில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஆறு பேருக்கும், தரணிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகா நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருக்கும்,

அவுசலப்பிட்டிய பகுதியில் ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியில் ஒருவருக்கும், ஒமந்தைப் பகுதியில் இருவருக்கும், கோயில்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

மூன்றுமுறிப்பு இராணுவ முகாமில் எட்டு பேருக்கும், மாமடுவ பகுதியில் ஒருவருக்கும், பூனாவ பகுதியில் ஒருவருக்கும், அட்டமஸ்கட பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

சிறிராமபுரம் பகுதியில் நான்கு பேருக்கும், வைத்தியர் விடுதியில் ஒருவருக்கும், சின்னசிப்பிக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், ஆனைவிழுந்தான் பகுதியில் ஒருவருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறைச்சாலை காவலாளி ஒருவருக்கும் என 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.