வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றயதினம் இரவு தனது வீட்டில் உறங்கச் சென்றுள்ளார்.
எனினும் இன்று (11.08.2021) காலை முதல் குறித்த பெண்ணை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போது அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த மோகன் திலக்சனா என்ற 19 வயதுப் பெண்ணே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இளம் தாயும் ஒரு வார குழந்தையும் மரணமடைந்துள்ளனர்.
இன்று (11.08.2021 காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாய் ஒருவரும், அவரது ஒரு வாரக் குழந்தையும் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்கள் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும், அவரது ஒரு வார குழந்தையுமே இவ்வாறு மரணமடைந்தவராவார். குறித்த இருவரினது சடலத்தையும் பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்வதற்குரிய நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் ஒரேநாளில் இராணுவத்தினர் மற்றும் வைத்தியர்கள் உட்பட 76 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 229 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை இணங்கண்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இன்று (11.08.2021) காலை எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வீதியில் அத்தியாவசிய தேவையின்றி பயணிப்போர், சீரான முறையில் முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார முறைகளை பின்பற்றாதவர்கள்,
பேரூந்தில் சமூக இடைவெளியின்றி பயணித்தோர் என 200க்கு மேற்பட்டவர்களை சுகாதார பிரிவினர் வழிமறித்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து சக உத்தியோகத்தர்களும் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மின் பாவனையாளர் சேவை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதிலும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணாத ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் அவசர மின்சார பழுதுகள், மக்களின் முறைப்பாட்டு சேவை போன்றன இயங்கி வருகின்றன.
வவுனியா பிரதம மின்பொறியியலாளர் காரியாலயத்தில் ஒருவருக்கும், வவுனியா மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் இருவருக்கும், மடு மின்சார சேவை நிலையத்தில் ஒருவருக்கும்,
என நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து அவர்களுடன் தொடர்பினை பேணிய 34 ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹொரண பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றினுள் பெண்ணொருவர் நேற்று(10.08.2021) உயிரிழந்துள்ளார். ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு நேற்று மாலை பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது ஆசனத்தில் இருந்தவாரே உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசனத்தில் அமர்ந்தவாறு நித்திரை கொள்ளும் விதமாக இருந்த பெண் மீது நடத்துநருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த பெண்ணை நித்திரையிலிருந்து எழுப்ப நடத்துநர் முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணிடமிருந்து எந்தவித அசைவுகளையும் அவதானிக்காத நடத்துநர், பெண்ணை அதே பேருந்தில் அழைத்து வந்து, பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும், வைத்தியசாலையில் அனுமதித்த தருணத்தில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 60 அல்லது 65 வயதிற்குட்பட்ட அந்த பெண் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை தெரிவிக்கப்படுகின்றது. இந்த பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தடுப்பு முகாமில் இலங்கைப் பெண் மரணித்த விவகாரம் குறித்து ஜப்பான் மன்னிப்பு கோரியுள்ளது. குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் மரணித்தமைக்காக மன்னிப்பு கோருவதாகவும்,
தடுத்து வைக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் ஜப்பான் உறுதியளித்துள்ளது. ஜப்பானிய நீதி அமைச்சர் யாகோ காமிகாவா இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
33 வயதான விஸ்மா சந்தமாலி என்ற பெண்ணே இவ்வாறு ஜப்பானில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். வீசா காலம் முடிவடைந்தும் ஜப்பானில் தங்கியிருந்த காரணத்திற்காக சந்தமாலி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் குறித்த பெண் வயிற்று வலி உள்ளிட்ட சுகாதார கேடுகள் பற்றி குறிப்பிட்ட போதிலும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தமாலியின் மரணத்திற்காக அவரது தாய் உள்ளிட்ட உறவினர்களிடம் மன்னிப்பு கோருவதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதனை தடுப்பதற்கு தடுப்பு முகாம்களில் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜப்பானிய அரசாங்கத்தின் மன்னிப்பு இந்த சம்பவத்தின் பாரதூரதன்மைக்கு போதுமானதல்ல எனவும் சந்தமாலியின் இறப்பிற்கு யார் பொறுப்பு என குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் தனது பேச்சை கேட்காமல் லட்சக்கணக்கிலான பணத்தை எடுத்து ஆடம்பரமாக மனைவி செலவழித்து வந்ததால் வேதனையடைந்த கணவன் த.ற்கொலை செ.ய்து கொண்டுள்ளார்.
திருவொற்றியூர் கல்யாணி செட்டி நகரைச்சேர்ந்தவர் ஆனந்த் (35). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 2 கு.ழந்தைகளும் உள்ளனர்.
ரம்யா, தனது கணவர் ஆனந்துக்கு தெரியாமலேயே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்தை ஒன்லைன் மூலம் எடுத்து அதனை ஆடம்பரமாக செலவு செய்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் திடீரென தனது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் குறையவே அ.திர்ச்சி அடைந்த ஆனந்த், இதுபற்றி மனைவியிடம் ஏன் இப்படி செய்கிற்றாய், பணம் எல்லாம் எங்கே என கேட்டார்.
அதற்கு ரம்யா, குடும்ப செலவுக்காக செலவு செய்ததாக சாக்குபோக்கு கூறினார். தனக்கு தெரியாமல் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மனைவி தேவையின்றி ஆடம்பரமாக செலவு செய்துவிட்டு குடும்பத்துக்கு செலவழித்தேன் என கூறிய வார்த்தை ஆனந்த் மனதை பாதித்தது.
இதனால் மனமுடைந்த ஆனந்த், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள மி.ன் வி.சிறியில் தூ.க்குப்போட்டு த.ற்கொலை செ.ய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரித்து வருகின்றனர்.
நாட்டில் மேலும் 118 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 09.08.2021 , 118 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 முதல் 59 வயது வரையிலான 17 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 101 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 79 ஆண்களும், 39 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதன்படி, நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5340 ஆக உயர்வடைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் ப.லத்த சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மார்லிமந்து பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சந்திரன் (42).
இவர் மனைவி கீதா (35) மகள் ரக்க்ஷிதா(16) மகன் விஸ்வந்தர் (12) ஆகியோருடன் மார்லிமந்து பகுதியில் வசித்து வருகிறார். இவர் 2 மாடுகள் மற்றும் குத்தகை நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் சந்திரனின் உறவினரான நந்தகுமார் என்பவருக்கு அலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு சந்திரன் வீட்டில் யாரும் இல்லாததால் மாடு க.த்துவதாகவும் கூறியதின் பேரில் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளார்.
சந்திரன் வீட்டு கதவு உள் தாழ் இட்டத்தால் ச.ந்தேகமடைந்த நந்தகுமார் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். காவல் துறையின் உதவியோடு பின் க.தவை உ.டைத்து உ.ள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது சந்திரன் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் க.யி.ற்.றா.ல் தூ.க்.கி.லி.ட்.டு தொ.ங்.கி.ய நி.லையில் இ.ற.ந்.து கி.ட.ந்.தன.ர். தம்பதியின் மகள் ரக்க்ஷிதா, மகன் விஸ்வந்தர் ஆகியோர் வா.யி.ல் நு.ரை த.ள்.ளி.ய.ப.டி ச.ட.ல.மாக கி.ட.க்.க அவர்கள் அருகில் பூ.ச்சு கொ.ல்.லி ம.ருந்து இ.ருந்ததை கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.து.ள்.ளா.ர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் ந.டத்திய முதற்கட்ட வி.சாரணையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு கடன் மேல் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் சந்திரன் குடும்பத்தோடு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக தெரிவித்தனர். இருப்பினும் த.ற்.கொ.லை.க்.கு வேறு ஏதேனும் கா.ரணம் இருக்குமா என்ற கோணத்திலும் பொலிசார் வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.
இந்திய மாநிலம் கேரளாவில் பிறந்து ஓராண்டில் மாயமான தாயாரை, கடும் போ.ராட்டங்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விதுரா பகுதியை சேர்ந்த 22 வயதான அஸ்வின் என்பவரே தனியொருவராக போராடி தமது தாயாரை கண்டு பிடித்துள்ளார்.
அஸ்வின் பிறந்த ஒரு ஆண்டுக்கு பின்னர் தந்தையும் தாயாரும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக தனித்தனியாக பிரிந்துள்ளனர். தொடர்ந்து அஸ்வினின் தந்தை த.ற்கொலை செ.ய்து கொண்டதாக தகவல் வெளியானது.
ஆனால் தந்தை வழி பாட்டியான விசாலாட்சி என்பவரே, அஸ்வினை அதன் பின்னர் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் 16ம் வயதில் தமது பாட்டியை இழந்துள்ளார் அஸ்வின்.
பாட்டியின் மறைவுக்கு பின்னர் மொத்தமாக ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பத்தாம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் வெற்றிபெற்ற அஸ்வின் 12ம் வகுப்பில் இணைந்த நிலையிலேயே பாட்டி மரணமடைந்துள்ளார்.
இதனிடையே ஒரு மேஜிக் நிபுணராக வேண்டும் என்ற ஆசை தலைக்கேற, கேரளாவின் பிரபல மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாடு என்பவரின் நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் அஸ்வினின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது.
கோபிநாத் முதுகாடின் நிறுவனத்தில் வாய்ப்பு தேடிச்சென்ற அவருக்கு முதலில் ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் நம்பிக்கை இழக்காத அஸ்வின், திருவனந்தபுரம் நகரிலேயே தங்கியிருந்து, பிழைப்புக்காக காலியான பீர் போத்தல்களை சேகரித்து விற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் 2016ல் முதுகாடு நிறுவனத்தில் இருந்து அஸ்வினுக்கு, அவரது வாழ்க்கையை மாற்றியமைக்கப்போகும் அந்த அழைப்பு வந்துள்ளது. தொடர்ந்து தாயாரை தேடும் பணியில் இறங்கியுள்ளார் அஸ்வின்.
இதனிடையே ஒரு அகதிகள் முகாமில் 44 வயதான லதா தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தாயாரை நேரடியாக சந்தித்தும் தம்மை அவர் உருக்காணவில்லை என்றே அஸ்வின் தெரிவித்துள்ளார். இருப்பினும், எஞ்சிய நாட்கள் தாயாருடன் வாழவும், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
பண்ணைக் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கோவிட் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணியாற்றும் இளைஞன் பண்ணைப் பாலத்திலிருந்து செல்ஃபி எடுக்க முயன்ற நிலையில் கால் தவறி கடலில் விழுந்து மரணமடைந்தார்.
பின்னர் அவரது சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகாதாரப் பிரிவினர் சடலத்தைப் பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பரவலை தடுப்பதற்கான கடைசி முயற்சியாக மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன நாட்டில், வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கிறது.
நாட்டை முழுமையாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கவில்லை. எனினும், தேவைப்படும் போது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சாத்தியமான பயணக்கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய பயணக்கட்டுப்பாடுகள் குறித்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோவிட் நோயாளிகளின் விரைவான அதிகரிப்பு மற்றும் அதிகரித்து வரும் இறப்புக்களுடன் நாட்டின் சுகாதார அமைப்பு சோர்வடையும் விளிம்பில் இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்க சுகாதார நிபுணர்கள் தங்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்த அழிவு டெல்டா வகையால் ஏற்பட்டதாக நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உடனடி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு 200ஐத் தாண்டும்,
மற்றும் தினமும் 5000க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என்று முன்னணியில் உள்ள மருத்துவர்கள் கணித்துள்ளனர். டெல்டா மாறுபாட்டை எதிர்கொள்ளும் சில நாடுகள், முடக்கல்களை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாணங்களைக் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது சற்று முன் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, திருமணத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையானது 150இலிருந்து 50ஆக மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அமைச்சகம் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் தொகுப்பை இன்று பிற்பகல் வெளியிடும். இதேவேளை நாடளாவிய முடக்கம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்த இளைஞர் குழு வீட்டில் இருந்த தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டாருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
நேற்று (09.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தோணிக்கல், பொதுக்கிணறு வீதிக்கு அருகாமையில் உள்ள பூட்டியிருந்த வீடு ஒன்றிற்குள்,
புகுந்த இளைஞர் குழு அங்கிருந்த கதிரை, மேசைகளை உள்ளிட்ட வீட்டு தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், கதவினையும் உடைக்க முயன்றுள்ளனர்.
வெளியில் சென்ற வீட்டு உரிமையாளர்கள் வீட்டிற்கு வந்த போது குறித்த இளைஞர் குழு வீட்டில் நின்றதுடன், வீட்டு உரிமையாளருக்கும் அச்சுறுத்தல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, பெரிய உளுக்குளம் பகுதியில் 17 பேர் உட்பட 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (10.08.2021) வெளியாகின.
அதில் நேரியகுளம் பகுதியில் இருவருக்கும், மதீனாநகர் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியில் ஒருவருக்கும், அம்பலாங்கொட பகுதியில் ஒருவருக்கும்,
அவுஸ்லப்பிட்டிய பகுதியில் மூவருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், சின்னபூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஆரா நிறுவனத்தைச் சேர்ந்த இருவருக்கும், மூன்று முறிப்பு பகுதியில் இரண்டு இராணுவத்தினருக்கும், கற்குழி பகுதியில் ஒருவருக்கும்,
ஒமந்தை பகுதியில் ஒருவருக்கும், புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தரணிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வெளிவட்டவீதி பகுதியில் ஒருவருக்கும், வெளிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பன்றிகெய்தகுளம் பகுதியில் ஒருவருக்கும்,
சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஆறு பேருக்கும், சின்னசிப்பிக்குளம் பகுதியில் ஆறு பேருக்கும், வைத்தியர் விடுதியில் இருவருக்கும், கொக்கலிய இராணுவ முகாமில் ஒருவருக்கும், உளுக்குளம் ஒன்பது பேருக்கும்,
பெரிய உளுக்குளம் பகுதியில் பதினேழு பேருக்கும், கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், பெரியகுளம் பகுதியில் மூவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், பிரமனாலங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,
மதியாமடு பகுதியில் ஒருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், மின்சாரசபையில் பணியாற்றும் ஒருவருக்கும் என 76 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.