வவுனியாவிலும் சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டத்தை வலுப்படுத்த அதிபர், ஆசிரியர்களுக்கு அழைப்பு!!

அதிபர், ஆசிரியர்களுக்கு அழைப்பு..

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொழிற்சங்கப் போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்களை ஒன்றிணைந்து செயற்படுமாறு ஆசிரியர், அதிபர் ஒன்றிணைந்த சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் ஆசிரியர், அதிபர் ஒன்றிணைந்த சங்கங்களின் சம்மேளனத்தில் ஊடக சந்திப்பு இன்று (09.09) மதியம் இடம்பெற்றது.

இதில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம், ஏகாபத்த குருசேவா சங்கம், அதிபர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் குறித்த தொழிற்சங்க போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட அதிபர், ஆசிரியர்களும் பூரண ஆதரவை வழங்குகின்றோம்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட இரு வலக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளோம். அரசாங்கம் குறித்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்.

குறித்த போராட்டம் தற்போது சர்வதேசத்தினது கவனத்தைப் பெற்றுள்ளது. எனவே எங்களது நியாயமான கோரிக்கைக்கு அரசாங்கம் பதில் தரவேண்டும். அதுவரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

வவுனியாவில் மது போதையில் தாக்குதல் : குடும்பஸ்தர் காயம்!!

மரக்காரம்பளை பகுதியில்..

வவுனியா மரக்காரம்பளை பகுதியில் ம.து போ.தை.யி.ல் நின்ற நபர்கள் தா.க்.கி.ய.தி.ல் குடும்பஸ்தர் ஒருவர் கா.யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (09.08.2021) மாலை குறித்த குடும்பஸ்தர் மரக்காரம்பளையில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளார். இதன்போது அந்தபகுதியில் ம.து போ.தை.யி.ல் நின்ற உணவக உரிமையாளர் மற்றும் ஒருவரும் இணைந்து அவர் மீ.து தா.க்.கு.த.ல் ந.டத்தியுள்ளனர்.

இதனால் கா.யமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

தா.க்.கு.த.லு.ட.ன் தொடர்புடைய இருவரை பொலிசார் கை.து செய்துள்ளதுடன் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். குறித்த நபர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான தா.க்.கு.த.ல் ச.ம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது

துணி காய வைக்கும் போது ஏற்பட்ட விபரீதம் : குழந்தை உட்பட 3 பேர் பலி!!

தமிழகத்தில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, வீட்டில் துணி காய வைக்கும் போது மின்சாரம் தாக்கி தாய், மகள், 3 வயது பேத்தி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த இந்திரா, ஆதி திராவிடர்களுக்கான தொகுப்பு வீட்டில் தனது மகள் மகாலட்சுமி, 3 வயது பேத்தி அவந்திகா ஆகியோருடன் வசித்து வந்தார்.

நேற்றிரவு, ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்திருந்த நிலையில், வீட்டுக்கு மின் இணைப்பு வரும் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, துணி காய வைக்கும் கம்பிக்கும் மின்சாரம் பரவியிருந்துள்ளது.

இதனை அறியாத இந்திரா தனது பேத்தி அவந்திகாவை இடுப்பில் வைத்துக் கொண்டு துணிகளை காய வைப்பதற்காக சென்றுள்ளார். ஏற்கனவே, கம்பியில் மின்சாரம் பரவியிருந்த நிலையில், துணியின் ஈரத்திற்கு இந்திராவையும், இடுப்பில் அமர்ந்திருந்த அவந்திகாவையும் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மகலாட்சுமி, இருவரையும் காப்பாற்ற முயன்ற நிலையில், அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், குழந்தை உட்பட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மின் இணைப்பை துண்டித்து மூவரின் சடலங்களையும் மீட்டனர். சடலங்களை கண்டு உறவினர்கள் கதறி துடித்து அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.

40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இந்த தொகுப்பு வீடு, சீரமைப்பின்றி சிதிலமடைந்து இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு பெய்த மழையில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பரவியதாக சொல்லப்படுகின்றது.

வீட்டுக்கு முன் நீட்டி விடப்பட்டிருந்த கான்கிரீட் கம்பியில் இருந்து மற்றொரு முனைக்கு கொடி கம்பி கட்டப்பட்டிருந்த நிலையில், கான்கிரீட் கம்பியில் பரவிய மின்சாரம்,

கொடி கம்பிக்கும் பரவியிருக்கக் கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் பொது நிகழ்வுக்கு சென்ற ஊடகவியலாளருடன் அநாகரிகமாக நடந்து கொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்!!

பொது நிகழ்வுக்கு சென்ற ஊடகவியலாளருடன் அநாகரிகமாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் அவர்கள் நடந்து கொண்டு உள்ளார்.

இன்று (09.08) பிற்பகல் நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் கொவிட் தொடர்பான உதவித் திட்டம் ஒன்று வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வு தொடர்பில் உதவித் திட்டம் வழங்கும் அரச சார்பற்ற நிறுவனத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர் ஒருவர் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது அங்கு இருந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் குறித்த ஊடகவியலாளரை வெளியேறுமாறும், தரக்குறைவான வகையில் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த ஊடகவியலாளர் அங்கிருந்து வெளியேறிய போது, உதவித்திட்ட வழங்குனர்களால் தாமே ஊடகவியலாளரை அழைத்ததாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

எனினும் அவர் எதனையும் கண்டு கொள்ளவில்லை. இச் சம்பவத்தின் போது வவுனியா உதவிப் மாவட்ட செயலாளர் மு.சபர்ஜா உள்ளிட்டவர்களும் அங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் தயாராகி வருகின்றனர்.

மனைவி பாம்பு கடித்ததில் இறந்துவிட்டதாக கதறி அழுத கணவன் : விசாரணையில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி பாம்பு க.டித்து உ.யிரிழந்துவிட்டதாக கணவன் அ.ழுது நா.டகமாடிய நிலையில் அவரே அ.டி.த்.து கொ.லை செ.ய்.த.து தெரியவந்துள்ளது.

மாமல்லபுரம் அடுத்த பையனூரை சேர்ந்தவர் ரவிக்குமார் (40). இவரது மனைவி ஆனந்தி (31), பையனூரில் உள்ள தனியார் கல்லூரி கேண்டீனில் வேலை செய்து வந்தார்.

இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (16), என்ற மகளும், தமிழ்ச்செல்வன் (14) என்ற மகனும் உள்ளனர். ஆனந்தி, ரவிக்குமாரின் அக்கா மகள் ஆவார். இருவரும் பையனூரை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், ரவிக்குமார் தினமும் கு.டி.த்.து.வி.ட்.டு, அவரது மனைவி ஆனந்தியிடன் த.க.ரா.று செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதேப்போல், நேற்று முன்தினம் இரவு கு.டி.த்.து.வி.ட்.டு போ.தை.யி.ல் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் த.க.ரா.று செ.ய்.து, அ.டி.த்.து உ.தை.த்.து.ள்.ளா.ர்.

அப்போது, உன்னை பற்றி பொலிசில் பு.கா.ர் அளித்து சி.றையில் த.ள்ளுவேன் என ஆனந்தி கணவனிடம் கூறினார். பின்னர், இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனைவரும் படுத்து உ.றங்கி வி.ட்டனர்.

நள்ளிரவில் தி.டுக்கிட்டு எழுந்த ரவிக்குமார் அருகில் இருந்த கிரிக்கெட் ஸ்டெம்ப்பை எடுத்து ஆனந்தியின் த.லை, மு.க.ம் உ.ள்ளிட்ட இடங்களில் ச.ர.மா.ரி.யா.க தா.க்.கி.யு.ள்.ளா.ர். இ.தி.ல், ஆனந்தி ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் து.டி.து.டி.த்.து ச.ம்பவ இ.டத்திலேயே ப.ரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

ஆனந்தி இ.ற.ந்.த.தை தெரிந்து கொண்ட ரவிக்குமார் விடிந்ததும் தனது மனைவியின் நெ.ற்றி, மூ.க்கு உ.ள்ளிட்ட இடங்களில் பூச்சி மற்றும் பா.ம்பு க.டி.த்.து இ.ற.ந்.து வி.ட்டதாக அருகில் உள்ள உறவினர்களிடம் கூறி அ.ழு.து.ள்.ளா.ர்.

இதுகுறித்து, தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது ரவிக்குமார் அ.ழு.து கொ.ண்டிருந்தார். இதையடுத்து ஆனந்தியின் உ.ட.லை பி.ரே.த ப.ரிசோதனைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பொலிசார் விசாரித்தனர்.

இதில், ஆனந்தி பா.ம்.பு க.டி.த்.த.தி.ல் இ.ற.க்.க.வி.ல்.லை, ரவிக்குமார் தா.க்.கி.ய.தி.ல் தா.ன் இ.ற.ந்.தா.ர் என்ற அ.தி.ர்.ச்.சி உண்மை பொலிசாருக்கு தெரியவந்தது. பின்னர் பொலிசார் ரவிக்குமாரை கை.து செய்த நிலையில் அவரிடம் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

படுக்கையறை சுவற்றில் இரத்தக்கறை : கழிவறையில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் புகுந்த வீட்டின் க.ழிவறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட இளம் பெண் தொடர்பில் உறவினர்கள் காவல்துறை தலைவரை நாடியுள்ளனர்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியில் குடியிருக்கும் தேவிகா என்பவரே க.ழிவறையில் தூ.க்.கி.ட்.ட நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

புகுந்த வீட்டில் ஏற்பட்ட க.டு.ம் உ.ளவியல் து.ன்.பு.று.த்.த.லு.க்.கு இ.லக்கானதாலையே அவர் த.ற்.கொ.லை மு.டி.வை எ.டுத்துள்ளார் என உறவினர்கள் கு.ற்.ற.ஞ்சாட்டியுள்ளனர்.

தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த தேவிகாவுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜுன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அர்ஜுன் தேவிகுளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சி.றைச்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அர்ஜுனின் சகோதரர் ஒருவரின் திருமணத்திற்கு பின்னர் வீட்டில் தொடர்ந்து வா.க்குவாதமும் பி.ர.ச்.ச.னை.யு.ம் ஏற்பட்டு வந்துள்ளதாக தேவிகா குடும்பத்தினருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேவிகா தி.டீ.ரெ.ன்.று த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். குடியிருப்பில் நாற்காலி ஒன்று உ.டை.ந்.த நி.லையிலும், ப.டுக்கையறை சுவற்றில் ர.த்.த.க்.க.றை ப.டி.ந்திருந்ததையும் முதற்கட்ட வி.சாரணையில் பொலிசார் க.ண்டறிந்திருந்தனர்.

ஆனால் தேவிகாவின் உ.ட.லி.ல். எந்த கா.ய.ங்.க.ளு.ம் க.ண்டறியப்படவில்லை. மட்டுமின்றி, இதே நிலை நீடித்தால் தாம் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வதாக பலமுறை தேவிகா கூறியிருந்ததாகவும் அர்ஜுன் வி.சாரணையின் போது தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்றும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்ளப் போவதாக தம்முடன் மொபைலில் பேசும் போது அவர் தெரிவித்ததாகவும், இதனால் வீட்டுக்கு திரும்பிய பின்னர் இருவரும் வா.க்குவாதத்தில் ஈ.டுபட்டதாகவும், அந்த ஆ.த்.தி.ர.த்.தி.ல் நாற்காலி ஒன்றை தூ.க்கி வீ.சி உ.டைத்ததாகவும் அர்ஜுன் வி.சாரணையில் கு.றிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தேவிகா நள்ளிரவு 1.30 மணியளவில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட நிலையில், தேவிகாவின் உறவினர்களுக்கு அதிகாலை 3.30 மணி கடந்த பின்னரே தகவல் தெரிய வந்ததாகவும், அதுவும் அர்ஜுன் குடும்பத்தினர் இது தொடர்பில் தெரிவிக்கவில்லை எனவும் தேவிகாவின் உறவினர்கள் கூறுகின்றனர்.

மேலும், அவசர அ.வசரமாக இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவிகாவின் உ.ட.ல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், யுவதியின் ம.ர.ண.த்.தி.ல் ம.ர்.ம.ம் இ.ருப்பதாகவும், இது தொடர்பில் தீ.விர வி.சாரணைக்கு உத்தரவிட காவல்துறை தலைவருக்கும் முதலமைச்சரின் கவனத்திற்கும் தேவிகாவின் உறவினர்கள் பு.கா.ர் ம.னு அ.ளித்துள்ளனர்.

இலங்கையில் மேலும் 111 கொரோனா மரணங்கள் : ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் மேலும் 111 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (08.08.2021) 111 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 முதல் 59 வயது வரையிலான 21 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 90 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் 56 ஆண்களும் 55 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதன்படி, நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5222 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 495 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் நோய்வாய்ப்பட்டு வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசி சேவை!!

நடமாடும் தடுப்பூசி சேவை..

வவுனியா மாவட்டத்தில் நோய்வாய்ப்பட்டு வீடுகளைவிட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்கு நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவையினை வவுனியா சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் நோய்வாய்பட்டு, வீடுகளை விட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவது சிக்கலாக உள்ளது. அதனையடுத்து நடமாடும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலிலும் நடமாடும் தடுப்பூசி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே நோய்வாய்ப்பட்டு வீடுகளை விட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்கள் நடமாடும்,

தடுப்பூசி சேவையை பெற்றுக்கொள்வதற்கு 0242 222761 என்ற வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இலக்கம் அல்லது 0242 222 323 என்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகிய இலக்கத்திற்கு தொடர்புகளை ஏற்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை!!

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்திற்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார்.

பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கோவிட் நிலமை தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் கோவிட் பரம்பலை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் 16 இலட்சம் தடுப்பூசிகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. அதில் முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களத்திற்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளி காரணமாக மக்கள் பாதிக்கபபடுகிறார்கள். இதனால் அதனை களைந்து செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

கட்டுப்பாட்டில் இருந்தது போல் மாகாண போக்குவரத்து முடக்கம் வரக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை.

வவுனியா மாவட்டத்தில் தான் அதிகளவிலான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. மக்கள் அதனைப் பெற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன், இராணுவத்தினர், பொலிசார், அரச அதிகாரிகள், சுகாதார திணைக்களத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதுடன் மாவட்டத்தின் கோவிட் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

வவுனியா நகரசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபைக்கு இரு புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

புதிய உறுப்பினர்கள் நியமனம்..

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் சாா்பில் போட்டியிட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா நகர சபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபையின் இரு உறுப்பினர்கள் பதவி விலகியதை அடுத்து,

அப்பதவிக்கு மேலும் இருவர்கள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தனால் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வவுனியா மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய வவுனியா நகரசபைக்கு திருமதி நிருபா சச்சிதானந்தன், செட்டிகுளம் பிரதேச சபைக்கு திரு பூலோகம் இந்திரன் ஆகியோர் சட்டத்தரணி துரைசிங்கம் ஜெயானந்தன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

வவுனியா நகரசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி நிருபா சச்சிதானந்தன் வவுனியா சென்சுலான் முன்பள்ளியில் 10வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருவதுடன்,பெண் தலைமைத்துவ மகளிர் அமைப்பு ஒன்றின் மதவுவைத்தகுளம் பகுதியின் தலைவராகவும் செயற்பட்டுவருகின்றார்.

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திரு பூலோகம் இந்திரன் வீரபுரம் கூட்டுறவு சங்க கிளை தலைவராகவும் மற்றும் வீரபுரம் ஆட்டோ சங்க தலைவர்,

வீரபுரம் அரசடிப் பிள்ளையார் ஆலயத்தினுடைய தலைவர் மற்றும் சின்னத்தம்பனை கமக்காரர் அமைப்பின் தலைவராக பல்வேறுபட்ட சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நோயாளர்கள் தங்களது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கின்றனர் : டெல்டா தொற்று அடுத்த 3 வாரங்களில் மோசமடையலாம் : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் கொரோனாவின் டெல்டா திரிபடைந்த தொற்று அடுத்து வரும் 3 வாரங்களில் மோ.சமடையலாம் என வைத்தியர்கள் எ.ச்.ச.ரி.த்.து.ள்.ள.ன.ர். டெல்டா திரிபுக்கு எ.திரான த.டுப்பு ந.டவடிக்கை போ.ரா.ட்.ட.ம், நாட்டின் சுகாதார கட்டமைப்பையும் தொற்றாளர்கள் நிறைந்து வழியும் வைத்தியசாலைகளையும் சோ.ர்வடையச் செய்துள்ளதாக வைத்தியர்கள் க.வலை வெளியிட்டுள்ளனர்.

இது வெறும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் மூன்று வாரங்களில் நிலைமை மோ.சமடையக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்துவரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் ம.ரணங்கள் அதிகரிக்கக்கூடும் என அ.ச்சம் வெளியிட்டுள்ள வைத்தியர்கள், ஏனைய நோய்களினால் பா.திக்கப்பட்டுள்ள மக்கள் வைத்திசாலைகளுக்கு செல்ல அ.ஞ்சுவதால் ம.ரணங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

தற்போது ஒக்சிசன் தேவைப்படும் சகல நோயாளர்களுக்கும் அதனை வழங்குவதற்கான செயற்பாடுகள் சமாளிக்கப்படுகின்றபோதிலும் ஒக்சிசனுக்கு தட்டுப்பாடு ஏற்படுமேயானால் இ.றப்புகளைத் தவிர்க்க முடியாமல் போகலாம் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

நாடு முழுவதும் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் போதுமான கட்டில்கள் இல்லாததால் அடுத்துவரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் 200 ம.ரணங்கள் ச.ம்பவிக்கக்கூடும் எனவும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளாந்தம் 5,000ஐ எட்டக்கூடும் எனவும் வைத்தியர்கள் கணிப்பிடுகின்றனர்.

தற்போது வைத்தியசாலைகளின் தீ.விர சி.கிச்சை பிரிவுகளில் ஒரே கட்டிலை 2 முதல் 3 நோயாளிகள்வரை பகிர்வதால் அடுத்துவரும் நாட்களிலும் வாரங்களிலும் இலங்கையில் நிலைமை மோ.சமடையக்கூடும். இதனை விட ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பாய்களிலும் வைத்திசாலை தாழ்வாரங்களிலும் படுக்க நேரிட்டுள்ளது.

இரண்டு நோயாளர்கள் பகிரும் படுக்கைகளில் பல நோயாளர்கள் தங்களது இ.றுதி மூ.ச்சை விட்டுக்கொண்டிருப்பதாக வைத்தியர்கள் க.வலையுடன் தெரிவிக்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபுறம் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் நோயாளர்கள் தமது வாழ்க்கையில் மிக மோ.சமானவற்றை காண்பதால் க.டுமையான ம.ன அ.ழுத்தங்களுக்கும் உள்ளாவதை அவதானிக்க முடிவதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது இவ்வாறிருக்க, உடனடியாக மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் டெல்டா திரிபு அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் உச்சக்கட்டத்தை அடைந்து அ.ழி.வை ஏற்படுத்தும் என இரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறை விரிவுரையாளர் பேராசிரியர் சுனேத் அகம்போதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிலைமை நீடித்தால் ஏற்கனவே நெ.ருக்கடியை எதிர்கொண்டுள்ள சுகாதார சேவை ச.ரிந்துவிழக்கூடும் என மற்றும் சில வைத்திய நிபுணர்கள் எ.ச்சரித்துள்ளனர்.

இலங்கையில் இதற்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா தொற்று அலைகளுக்கு எதிராக களநிலைகளிலேயே போ.ராட வேண்டியிருந்தது. ஆனால். தற்போதைய போ.ராட்டம் வைத்திசாலைகளுக்கு நகர்ந்து பெரும் பி.ரச்சினையாக உருவெடுத்துள்ளது என பேராசிரியர் அகம்போதி கூறினார்.

கொரோனா தொற்றுக்கு மிகச் சரியான சிகிச்சை இல்லாத நிலையில் நோயாளிகளுக்கு பரிகாரம் கிடைக்கக்கூடிய ஆதரவான சிகிச்சைகளை வழங்க வைத்தியர்கள் போ.ராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சுகாதார சேவைகளில் பணியாற்றுபவர்கள் மத்தியிலும் கொரோனா தொற்று பரவுவதால் நிலைமையை மேலும் மோ.சமடையச் செய்துள்ளது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இரத்தினபுரி பொது வைத்தியசாலை, கராபிட்டிய போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் கடந்த வாரம் அ.வசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கை வைத்தியத்துறையில் இது அபூர்வமான நிகழ்வாகும்.

தொற்று நோயாளர்களினது எண்ணிக்கையும் ம.ரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லும் நிலையில் டெல்டா திரிபு பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் மக்களின் பொ.றுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்கும் காத்திரமான கொள்கைகளை அமுல்படுத்தவேண்டும் என அரசாங்கத்தை வைத்தியர்கள் வ.லியுறுத்தியுள்ளனர்.

-வீரகேசரி-

வவுனியாவிலிருந்து சென்ற தனியார் பேரூந்தினர் கிளிநொச்சியில் இ.போ.ச சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்!!

கரடிபோக்கு சந்தியில்..

கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இன்று (09.08.2021) காலை 6.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தினை வழிமறித்த தனியார் பேரூந்தினர் இ.போ.ச பேரூந்தின் நடத்துனர் மற்றும் சாரதி மீது தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேரூந்து கிளிநொச்சி பேரூந்து நிலையத்திலிருந்து இன்று காலை 6.10 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்திருந்தது.

குறித்த பேரூந்து பயணத்தினை ஆரம்பித்த அதே நேரத்தில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தும் கிளிநொச்சி நகரை வந்தடைந்தது.

இதன் போது பயணிகளை ஏற்றுவதில் இரு பேரூந்தினருக்கிடையே வா.க்குவாதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கரடிபோக்கு பகுதியினை இ.போ.ச பேரூந்து அண்மித்த சமயத்தில் குறித்த பேரூந்தினை வழிமறுத்த தனியார் பேரூந்தினர் இ.போ.ச பேரூந்தின் நடத்துனர், சாரதி மீது தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டு அவ்விடத்திலிருந்து சென்றுள்ளனர்.

தா.க்.கு.த.லு.க்.கு.ள்.ளா.கி.ய இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக வி.சாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய ஆசிரியர்களால் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தம் : தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு!!

புதுக்குளம் மகா வித்தியாலய ஆசிரியர்கள்..

அதிபர், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கப் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில்,

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தினர் கல்வி செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.

புதுக்குளம் மகா வித்தியாலய கல்விசார் வன ஆளணியினர் 07.08.2021 ம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை கற்றல் கற்பித்தல் மற்றும் நிகர்நிலைக் கற்பித்தலில் இருந்து தற்காலிகமாக விலகி தொழிற்சங்க போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கியுள்ளனர்.

வவுனியாவில் காதலி மற்றும் கு.ழந்தையை கொ.லை செ.ய்.து எ.ரித்த நபர் 6 வருடங்களின் பின் கைது : எ.ரித்த இ.டத்தில் பொலிசார் தே.டுதல்!!

வவுனியா பொலிசார்..

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யு.வதி ஒ.ருவரையும், கு.ழந்தையையும் கா.தலன், கொ.லை செ.ய்.து எ.ரி.த்.த இ.டத்தில் காதலன் வழங்கிய தகவலின் அடிப்படையில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் தே.டு.த.ல் மே.ற்கொண்டு எ.ச்.ச.ங்.க.ளு.ம் மீ.ட்.க.ப்.பட்.டு.ள்.ள.ன.

இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மே.ற்கொண்ட வி.சாரணைகளில் தெரியவருவதாவது, வவுனியாவைச் சேர்ந்த ச.ந்தேக ந.பர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்த வேலை ஒன்றுக்கு சென்றுள்ளார். இதன்போது அப்பகுதியில் உள்ள 19 வயது யுவதியை காதலித்துள்ளார்.

இதன் போது அந்தப் பெ.ண் க.ர்ப்பமாகியுள்ளார். இது பெ.ண்ணின் உறவினர்களிற்கு தெரியவந்ததையடுத்து யுவதிக்கு பிரசவமான பின் திருமணம் செய்வதாக கூறி வவுனியா மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கடந்த 2015 ஓகஸ்ட் 9 ஆம் திகதி அழைத்து சென்றுள்ளார்.

அங்கு கா.தலியுடன் ஏற்பட்ட மு.ரண்பாட்டையடுத்து கு.ழந்தையை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். பின் கா.தலியையும் கொ.லை செ.ய்.து உ.ட.ல்.க.ளை தெ.ன்னை ம.ட்டை, ம.ண்ணெண்ணெய், சீ.னியை ப.யன்படுத்தி எ.ரி.த்.து.ள்.ளா.ர்.

எ.ஞ்சிய பா.கங்களை தோட்டத்தில் பு.தை.த்.து.ள்.ளா.ர். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பரமேஸ்வரன் சஜிந்திகா மற்றும் ஆறு மாத கு.ழந்தை ஆ.கியோரே இ.வ்வாறு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.ன.ர்.

பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ண அவர்களின் ஆலோசனைக்கு அமைய வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸால் லாலடி சில்வா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே ஆகியோரின் வழிகாட்டலில் பிராந்திய கு.ற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் அசங்க,

உபபொலிஸ் பரிசோதகர் வன்னிநாயக்க, பொலிஸ் சார்ஜன்ட்களான பாலசூரிய (28049), ஜீவானந்தம் (45401), ரங்வல (61518), பொலிஸ் கொன்தாபிள்களான நந்தன (68955), நலிம் (76321),

வீரசேன (78448), பொலிஸ் சாரதி ஹேரத் (25988) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட வி.சேட ந.டவடிக்கையில் 6 வருடங்களுக்கு பின் நேற்று (08.08) கா.தலனை கை.து செ.ய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட வி.சாரணைகளில் குறித்த இ.ருவரையும் கொ.லை செ.ய்.தி.ரு.ந்.த.மை தெ.ரியவந்துள்ளது. கொ.லை.க்.கு பி.ன்னர் இரு தடவைகள் ச.ந்தேக ந.பர் வெளிநாட்டிற்கு சென்று மீள வவுனியாவுக்குத் திரும்பியதை வி.சாரணையின் போது ஒ.ப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இருவரையும் கொ.லை செ.ய்.து எ.ரி.த்.த இ.ட.ம் மற்றும் எ.ஞ்சிய உ.டற்பாகங்களை பு.தை.த்.த இ.டம் என்பவற்றில் பொலிசார் த.டவியல் பொ.லிசாரின் உ.தவியுடன் தே.டு.த.ல் மே.ற்கொண்டு உ.ட.ற்.பா.க.ங்.க.ளை.யு.ம் மீ.ட்.டு.ள்.ள.ன.ர். கு.றித்த ச.ம்பவம் தொடர்பில் பிராந்திய கு.ற்றத் த.டுப்பு பிரிவு பொலிசார் தொடர்ந்தும் வி.சாரணைகளை மு.ன்னெடுத்து வ.ருகின்றனர்.

இலங்கையை முடக்க தயாராகும் அரசாங்கம் : நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்!!

இலங்கையை முடக்க தயாராகும் அரசாங்கம்?

எதிர்வரும் ஓரிரு நாட்களின் நிலைமைக்கமைய இலங்கையை முழுமையாக முடக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

சில நாட்களுக்கு நாட்டை முடக்க நேரிடலாம் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய நாட்டை முடக்கி வைப்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தொற்று நோயின் போது மக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சிறிது காலம் நாட்டை முடக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா ஓமந்தையில் 13 வயது சிறுமி கர்ப்பம் : 12 வயது சகோதரன் பொலிஸாரால் கைது!!

ஓமந்தையில்..

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது அக்காவை 12வயதுடைய தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த 13 வயதுடைய சிறுமி வயிற்று வலி காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது குறித்த சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் வைத்தியர்கள் வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பித்தமையினையடுத்து ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளில் தனது தம்பி தன்னை பா.லியல் து.ஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக சிறுமியளித்த வாக்குமூலத்தின் பிரகாரம் 12 வயதுடைய தம்பி ஒமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது சூம் செயலிகள் மூலம் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுவதனால் சிறுவர்கள் மத்தியில் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளது.

எனினும் பிள்ளைகளின் தொலைபேசிகள் தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்தாமையும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.