வவுனியா நகர் முழுவதும் ”கொத்தலாவல பிரேணையை சுருட்டிக்கொள்” என சுவரொட்டிகள்!!

சுவரொட்டிகள்..

வவுனியா நகரின் பல பகுதிகளில் இலவசக் கல்வியை சீரழிப்பதற்கான மிலிட்டரி பொறியமைப்பினை வகுக்கின்ற கொத்தலாவல பிரேணையை சுருட்டிக்கொள் என்ற வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டிகளின் கீழ்ப் பகுதியில் கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலையம் எனவும் உரிமம் கோரப்பட்டுள்ளதுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரின் குறிப்பாக நூலக வீதி, ஏ9 வீதி, புகையிரத நிலைய வீதி, மன்னார் வீதி, நகர் மத்தி, ஹொரவப்பொத்தானை வீதி ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

வவுனியாவில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (09.08.2021) வெளியாகின.

அதில் பாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், பொலிஸார் இருவருக்கும், மதவாச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், அம்பேபுவே பகுதியில் ஒருவருக்கும்,

கல்மடு பகுதியில் இருவருக்கும், கல்குண்டாமடு பகுதியில் ஐவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் நால்வருக்கும்,

சண்முகபுரம் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் இருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும் என 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 18 தொற்றாளர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று அச்சம் காணப்படுவதாக தாமாகவே வைத்தியசாலைக்கு சென்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களாவர்கள்.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் : அரசு எடுத்த முடிவு!!

கேரளாவில்..

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரின் அரசு வேலை ப.றிக்கப்பட்டுள்ளது

வ.ரதட்சணை கொ.டுமையால் பெ.ண்கள் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்கின்ற சம்பவம் கேரளாவில் அடிக்கடி நிகழ்கிறது. இந்நிலையில் ஜூன் மாதம் 21ஆம் தேதி வ.ரதட்சணை கொ.டுமையால் இ.ளம்பெண் விஸ்மையா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் நாடு முழுவதும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியது.

பலர் விஸ்மையாவிற்காக நீதி கேட்டு போ.ராடியதும் குறிப்பிடத்தக்கது. கிரண் குமாருக்கு மாமியார் வீட்டில் சீதனமாக கொடுக்கப்பட்ட கார் பிடிக்காததால் விஸ்மையாவை கொ.டூ.ர.மா.க தா.க்.கி து.ன்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதனால் மனைவியை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்டிய வழக்கில் கிரண் குமார் கை.து செ.ய்யப்பட்டார். இந்நிலையில் அவரது மேல் சுமத்தப்பட்ட கு.ற்றம் யாவும் உண்மை என்று உறுதியானதால் அவரது அரசு பணி ப.றிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பெ.ண்களுக்கு எ.திராக ந.டக்கும் வ.ன்.கொ.டு.மை.க.ளு.க்.கு கேரள அரசு கண்ணை மூ.டிக்கொண்டு இருக்காது என கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய தமிழக வீராங்கனையிடம் சொல்லப்பட்ட செய்தி : கதறி அழுத பரிதாபம்!!

தமிழக வீராங்கனை தனலட்சுமி..

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக வீராங்கனை தனலட்சுமி, அவருடைய அக்கா இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத சம்பவம் மனதை உருக்கியுள்ளது.

மேலும் நாட்டுக்காக விளையாடச் சென்ற மகளின் கவனம் கடுகளவும் சிதறிவிடக் கூடாது என எண்ணிய தனலட்சுமியின் தாயார், மறைவுச் செய்தியைக் கூட மறைத்தது நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

2021-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதில் கலந்துக்கொள்ள தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி என்பவரும் சென்றிருந்தார்.

இந்நிலையில், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் தனலட்சுமி பங்கேற்றிருந்த சமயத்தில் அவர் அக்கா கடந்த மாதம் ஜூலை 12ம் தேதின்று திடீரென உயிரிழந்துவிட்டார். ஆனால், தனலட்சுமி வீட்டார் யாரும் இதை அவருக்கு தெரிவிக்கவில்லை.

இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால் அவரால் தாங்க முடியாமல் விளையாட்டுப் போட்டியிலிருந்து கவனம் சிதறி விடுவார் என அக்கா உயிரிழந்த தகவலை குடும்பத்தினர் யாரும் தெரியப்படுத்தாமல் இருந்துவிட்டனர்.

தற்போது போட்டி முடிந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பிய தனலட்சுமி, அங்கே வரவேற்க அக்கா ஏன் வரவில்லை எனக் கேட்டுள்ளார். அப்போதுதான் அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட தனலட்சுமி விமான நிலையத்திலேயே நிலைகுலைந்து அழுத சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்ததை கொண்டாடக் கூட முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட தனலட்சுமியை அவரது தாயார் ஆறுதல்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

மனைவி, மகள், தாய் என குடும்பத்தையே கொன்று தற்கொலை செய்து கொண்ட நபர் : எழுதி வைத்திருந்த கண்ணீர் கடிதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி, மகள் மற்றும் தாய் என மூவரையும் கொ.ன்.று.வி.ட்டு நகை வியாபாரி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி சொர்ணபூமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதி மோகன்(41)-ரம்யா(33), இந்த தம்பதிக்கு 10 வயதில் அன்மயா என்ற மகள் உள்ளார்.

இவர்களுடன் மோகனின் தாய் 61 வயது மதிக்கத்தக்க வசந்தம்மாளும் வசித்து வந்துள்ளார். இவர்கள் அனைவரும் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் வசித்து வந்த வீட்டை, வீட்டின் உரிமையாளர் வேறொருவருக்கு விற்றுவிட்டதால், வீட்டை காலி செய்யும் படி கூறியுள்ளார். அதன் படி மோகனுக்கு கடந்த வெள்ளிக் கிழமை தான் கடைசி நாளாக கெடு கொடுக்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை வரை மோகன் வீட்டைக் காலி செய்யாத நிலையிலும், வெள்ளிக்கிழமை காலையிலும் வெகுநேரமாக வீடு திறக்கப்படாத நிலையிலும் இருந்ததால், அந்த வீட்டை வாங்கிய புதிய உரிமையாளர் உள்ளே பார்த்த போது, வீட்டினுள் மின்விசிறி, டிவி ஆகியவை ஓடிக் கொண்டிருந்துள்ளது.

ச.ந்தேகமடைந்த அவர், தங்களிடம் இருந்த மற்றொரு சாவியால் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது மோகன் உள்ளிட்ட நான்கு பேரும் ச.டலமாகக் கி.டப்பதைக் கண்டு கடும் அ.திர்ச்சியடைந்துள்ளார்.

இதில், மோகனின் மு.கத்தில் மட்டும் பிளாஸ்டிக் கவர் இ.றுக்கமாக சுற்றப்பட்டிருந்தது. இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உ.டல்களை மீ.ட்டு, அங்கு சோ.தனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நிலையில், கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில் மோகன், தான் ஆன்லைனில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக வெளியிலும் வங்கியிலும் கடன் வாங்கி முதலீடு செய்ததாகவும்,

பங்குச்சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் சுமை அதிகரித்ததாகவும், வெளியில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்ததாகவும், அதனால் வேறு வழியின்றி த.ற்.கொ.லை மு.டிவு எடுத்ததாகவும், தங்கள் முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்துள்ளார்.

மேலும், முதற்கட்ட வி.சாரணையில் கிடைத்த தகவல்களின் படி குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் மோகனே வி.ஷ.ம் க.லந்து கொடுத்துவிட்டு, அதன் பின்னர், மோகனும் வி.ஷ.ம் அ.ருந்தியுள்ளார்.

இதில் தான் உ.யிர் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக, முகத்தில் பிளாஸ்டிக் கவரை இறுக்கமாக சுற்றிக் கொண்டு த.ற்.கொ.லை செ.ய்.தி.ரு.க்.க வேண்டும் என்று பொலிசார் ச.ந்தேகிக்கின்றனர். இருப்பினும் இதைப் பற்றிய முழு வி.சாரணைக்கு பின்னரே தெரியவரும்.

நாட்டில் மீண்டும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா மரணங்கள் : இன்றும் 100 ஐ அண்மித்த பலி எண்ணிக்கை!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 94 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,111 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 329,268 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,கோவிட் தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 293,357 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் 726 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று இதுவரையில் பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,956 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று இதுவரையில் 2,956 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 329,268 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,111 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டில் சமைத்து கொண்டிருந்த பெண் சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் விஷப்பாம்பு கடித்ததில் பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கவுசம்பியை சேர்ந்தவர் அப்ரோஸ் மெயின். பழ வியாபாரி.

இவரின் தாயார் மஜுதின் பேகம். பேகம் நேற்று வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் ஏதோ ஒன்று சீண்டி விட்டு சென்றது.

முதலில் அதை பேகம் பெரிதாக எடுத்து கொள்ளாத நிலையில் பின்னர் கடுமையான வலி ஏற்பட்ட பின்னரே தன்னை பாம்பு கடித்தது என்பதை உணர்ந்தார். இது குறித்து உடனடியாக தனது குடும்பத்தாருக்கு போனில் தகவல் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் பேகம் கீழே சுருண்டு விழுந்த நிலையில் குடும்பத்தார் வந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பேகமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியடைய செய்தது, பின்னர் பேகம் சடலத்தை கொண்டு சென்ற அவர் மகன் மெயின் கண்ணீர் மல்க இறுதிச்சடங்குகளை செய்தது காண்போர் கண்களை குளமாக்கியது.

பருப்பு மற்றும் சீனியின் விலைகள் அதிகரிப்பு!!

பருப்பு மற்றும் சீனி..

தேசிய வர்த்தக சந்தையில் மைசூர் பருப்பு மற்றும் சீனியின் மொத்த விற்பனை விலைகள் ஒரு வாரத்தில் 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ஒரு கிலோ கிராம் மைசூர் பருப்பு 155 ரூபாயாக இருந்ததுடன் நேற்றைய அதன் விலை 165 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் பருப்பின் மொத்த விற்பனை விலை 170 வரை அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ பருப்பை 220 ரூபாவுக்காவது விற்பனை செய்ய வேண்டும் என சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 125 ரூபாயாக காணப்பட்டதுடன் நேற்றைய தினம் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டதல், அதன் மொத்த விற்பனை விலையானது 142 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

காணப்படும் நிலைமையில் ஒரு கிலோ கிராம் சீனியினை 155 ரூபாவுக்காவது விற்பனை செய்ய வேண்டும் என சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் காணப்படும் தேவைக்கு ஏற்ப மைசூர் பருப்பு மற்றும் சீனி கையிருப்பில் இல்லாத காரணத்தினால் மொத்த விற்பனையாளர்கள் விலைகளை அதிகரித்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

-தமிழ்வின்-

திருமணம் முடிந்த 3 நாளில் மனைவியை எ.ரித்து கொ.லை செ.ய்த கணவன் : விசாரணையில் சொன்ன காரணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணம் முடிந்த மூன்றே நாளில் ம.னைவியை க.ணவன் எ.ரித்து கொ.லை செ.ய்துள்ள ச.ம்பவம் பெ.ரும் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் வறுகடலை மில் உள்ளது. இந்த மில்லிற்கு அருகில் இருக்கும் முட்புதரில் எ.ரிந்த நி.லையில் ச.டலம் .கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து உ.டனடியாக வி.ரைந்து வந்த பொ.லிசார், ச.டலத்தை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வி.சாரணை மே.ற்கொண்டுள்ளனர்.

அப்போது, அது பெ.ண் ஒ.ருவரின் ச.டலம் என்பதும், அவர் சோழவந்தான் பகுதியை சேர்ந்த சகாய ராஜ் – செல்வமேரி தம்பதியினரின் மகள் கிளாடிஸ் ராணி (20) என்பதும் தெரியவந்தது.

கிளாடிஸ் ராணியும், அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் ஒரு கட்டத்தில் எ.ல்லை மீறி இருந்துள்ளனர்.

இதன் விளைவாக கிளாடிஸ் ராணி கர்ப்பம் ஆக, அதன் பின் இது குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவர, கடந்த 2-ஆம் திகதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்ததும் இருவரும் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து அதாவது 4-ஆம் திகதி, வெளியே சென்று வரலாம் என்று ஜோதிமணி, கிளாடிஸ் ராணியை அழைத்துள்ளார்.

இருவரும் கிளாடிஸ் ராணியின் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர். அதன் பின் ஜோதிமணி மட்டும் வீட்டிற்கு தனியாக வர, கிளாடிஸ் ராணி குறித்து கேட்ட போது, அவள் முன்னரே வந்துவிட்டாளே என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து ஜோதிமணியும் ஊர் முழுவதும் தே.டி, அதன் பின் அன்று மாலை அங்கிருக்கும் காவல் நிலையத்தில் பு.கார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் வி.சாரணை மேற்கொண்ட போது, அவர்களுக்கு ஜோதிமணி மீது ச.ந்தேகம் வ.லுத்துள்ளது. அ.வரைப் பி.டித்து வி.சாரணை மே.ற்கொண்ட போது, பொலிசாருக்கு அ.திர்ச்சி கா.த்திருந்தது.

ஏனெனில் ம.னைவியை கொ.ன்.ற.தே அவர் தான் என்பது தெரியவந்துள்ளது. ஏனெனில், காதலித்து திருமணம் செய்த மனைவி கிளாடிஸ் ராணியின் கர்ப்பத்திற்கு தான் காரணமல்ல என்று ச.ந்தேகம் அடைந்த ஜோதிமணி,

அவனியாபுரம் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு மு.ட்புதரில் வை.த்து கிளாடிஸ் ராணியின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து பெ.ட்.ரோ.ல் ஊ.ற்.றி எ.ரி.த்.த.தா.க வா.க்குமூலம் அ.ளித்துள்ளார்.

வேலைக்கு சென்றிருந்த தாய் : வீட்டில் தனியாக இருந்த இ.ளம் பெ.ண்ணுக்கு நே.ர்ந்த ப.ரிதாபம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் குடியிருப்பில் தனியாக இருந்த க.ல்லூரி மா.ணவி மி.ன் வி.சிறியில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ள ச.ம்பவம் கு.டும்பத்தாரை மொ.த்தமாக உ.லுக்கியுள்ளது.

கே.ர.ளா தி.ருவனந்தபுரத்தில் மு.து.க.லை இ.று.தி.யா.ண்.டு ப.டி.க்.கு.ம்  22 வ.ய.து மா.ண.வி ஆ.தி.ரா.

சனிக்கிழமை மாலை நேரம் சுமார் 3 மணியளவில் ச.ம்பவம் ந.டந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாயார் சரஸ்வதி பணி முடித்து குடியிருப்புக்கு தி.ரும்பிய நிலையில், வீட்டின் முன் கதவு உ.ள்ளிருந்து பூ.ட்டப்பட்டிருந்துள்ளது.

கதவு திறக்க ப.லமுறை மு.யன்றும் பலனின்றி போகவே, ஒருகட்டத்தில், வ.லுக்கட்டாயமாக க.த.வை உ.டை.த்.து உ.ள்ளே செ.ன்ற சரஸ்வதி, அ.றைக்குள் மி.ன் வி.சி.றி.யி.ல் தூ.க்.கி.ட்.ட நி.லையில் ம.க.ள் ஆதிராவை க.ண்டுள்ளார்.

இ.தனிடையே, ச.ரஸ்வதியின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்டு கு.விந்த அ.ப் ப.குதி ம.க்கள், ஆ.திராவை மீ.ட்.டு அ.ருகாமையில் உ.ள்ள ம.ருத்துவமனையில் சே.ர்ப்பித்துள்ளனர். ஆ.னால் ஏ.ற்கனவே அ.வர் ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ள.தா.க ம.ருத்துவர்கள் தெ.ரிவித்துள்ளனர்.

ஆ.திராவின் ம.ர.ண.ம் கு.றித்து உ.றுதியான கா.ரணம் எ.ன்ன எ.ன்பது தொ.டர்பில் வி.சா.ர.ணை நடைபெறுவதாகவும் ஆ.திரா எ.ழுதிய க.டிதம் ஒ.ன்று கி.டைத்துள்ளதாகவும் , அ.து தொ.டர்பில் வி.சாரிக்கப்படும் எ.னவும் பொ.லிசார் தெ.ரிவித்துள்ளனர்.

வவுனியாவில் காதலி மற்றும் கு.ழந்தையை கொ.லை செ.ய்து எ.ரித்த நபர் 6 வருடங்களின் பின்னர் கைது!!

முருகனூர் பிரதேசத்தில்..

வவுனியா முருகனூர் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் 6 மாத கைக் கு.ழந்தை மற்றும் கா.தலியை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து, வீட்டிக்குள்ளேயே எ.ரி.த்.து ந.ப.ர், ஆறு வருடங்களுக்கு பின்னர் நேற்று கை.து செ.ய்யப்பட்டதாக வவுனியா பிராந்திய கு.ற்.ற வி.சாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கா.ணாமல் போன, பெண் மற்றும் கு.ழந்தை குறித்து உறவினர்கள் கிளிநொச்சியில் உள்ள மனித உரிமை அலுவலகத்திற்கு அறிவித்திருந்தனர்.

இது குறித்து வவுனியா கு.ற்.ற வி.சாரணைப் பிரிவுக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் மூன்று வருடங்கள் முழுமையான வி.சாரணையின் பின்னர், கொ.லை.யா.ளி.யை க.ண்.டு.பி.டி.த்.து, அதன் பிறகு நடத்திய வி.சாரணைகளில் ச.ம்பவம் தொடர்பான சகல தகவல்களும் வெளியாகியன.

28 வயதான கொ.லை.யா.ளி கொ.லை.யி.ன் பி.ன்னர் இரண்டு முறை வெளிநாடு சென்று வவுனியா திரும்பியுள்ளதுடன் கா.ணாமல் போன பெண் மற்றும் கு.ழந்தை குறித்து பொலிஸார் ச.ந்தேக நபரிடம் வி.சாரித்த போது பொ.ய்யான தகவல்களை கூறி வந்துள்ளார்..

எனினும் பொலிஸார் தொலைபேசி விபரங்களை தே.டி.ய போ.து, ச.ந்தேக ந.பர் கா.ணாமல் போன பெ.ண்ணுடைய தொலைபேசியை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கை.து செ.ய்யப்பட்ட பின்னர் நடத்திய வி.சாரணைகளில் ச.ந்தேக ந.பர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

ச.ந்தேக நபர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தில் ஒப்பந்த வேலை ஒன்றுக்காக சென்றிருந்த போது, அயலில் வசித்து வந்த யுவதியுடன் ஏற்படுத்திக்கொண்ட காதல் தொடர்பால் யுவதி கருவுற்றுள்ளார்.

யு.வதிக்கு கு.ழந்தை பிறந்து 6 மாதத்தின் பின்னர், யு.வதியை தி.ருமணம் செய்துக்கொள்ளவதாக ச.ந்தேக ந.பர் உறவினர்களிடம் கூறி, வவுனியா முருகனூர் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்கு யு.வதியையும் கு.ழந்தையும் அழைத்துச் சென்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வீட்டுக்கு அழைத்துச் சென்ற சந்தேக நபருக்கும் யுவதிக்கும் இடையில் அன்றிரவு ஏற்பட்ட பி.ர.ச்.சி.னை மு.ற்றியதை அடுத்து, சந்தேக நபர் யுவதியையும் கு.ழந்தையையும் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

அதன் பின்னர் வீட்டுக்குள்ளேயே ஓலை, ம.ண்எண்ணெய் மற்றும் சீனியை பயன்படுத்தி, ச.ட.ல.ங்.க.ளை எ.ரி.த்.து.வி.ட்.டு வீ.ட்டுத் தோ.ட்டத்தில் பு.தை.த்.த.தை பொ.லிஸார் க.ண்டறிந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வ.யதான பரமேஸ்வரன் சஜின்திக்காவும் அவரது 6 மாத கு.ழந்தையுமே இவ்வாறு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ள.ன.ர்.

வவுனியாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (08.08.2021) வெளியாகின.

அதில், குட்செட் வீதி பகுதியில் இரண்டு பேருக்கும், ஹொரவப்பொத்தானை பகுதியில் ஒருவருக்கும், தாதியர் விடுதியில் ஒருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

கல்குண்டாமடு பகுதியில் ஒருவருக்கும், உளுக்குளம் பகுதியில் இருவருக்கும், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் ஒருவருக்கும், உக்கிளாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் இருவருக்கும்,

பிரமனாலங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சசூர் பகுதியில் ஒருவருக்கும், பட்டக்காடு பகுதியில் நான்கு பேருக்கும், கற்குழி பகுதியில் ஒருவருக்கும், காத்தார்சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் இருவருக்கும்,

பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் இருவருக்கும், புளியங்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், அரசடிக்குளம் பகுதியில் இருவருக்கும்,

நெடுங்கேணி பகுதியில் மூன்று பேருக்கும், வைத்தியர் விடுதியில் ஒருவருக்கும் என 39 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 6 நாட்களில் நேரியகுளம் பகுதியில் 73 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் முதலாவது தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு நாளை இரண்டாவது தடுப்பூசி!!

இரண்டாவது தடுப்பூசி..

வவுனியாவில் முதலாவது தடுப்பூசியினை பெற்று இரண்டாவது தடுப்பூசிக்காக காத்திருப்போர்கள் நாளையதினம் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நாளை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதுடன்,

காலை 8.30 – மதியம் 1.00 வரை மணி வரையிலான காலப்பகுதியில் வைரவபுளியங்குளம் மற்றும் வவுனியா நகரம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்டோருக்கும்,

மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் வவுனியா நகரம், வடக்கு மற்றும் இறப்பை கல்குளம் கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

மேலும் குறித்த தடுப்பூசி வழங்குவது இணையத்தில் பதிவு மேற்கொள்வதனால் நேரக்கட்டுப்பாடு முக்கியம் என்பதுடன் கிளினிக் புத்தகம், தடுப்பூசி அட்டை, குடும்ப அட்டை, அடையாள அட்டை என்பன முக்கியம் எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலுள்ள ஆலயங்களில் ஆடி அமாவாசை விசேட வழிபாடுகள்!!

ஆடி அமாவாசை..

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல்வேறு சிறப்புகளை பெறலாம் என்பதனால் இவ்விரதம் முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் இன்று (08.08.2021) காலை ஆடி அமாவாசை விரத விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன் போது சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து ஆடி அமாவாசை விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களது பித்துருக்களுக்கான வழிபாடுகளை மேற்கொண்டதுடன் அந்தனர்களுக்கு தானமும் வழங்கினர்.

வவுனியா மாவட்டத்தில் 30வயதிற்கு மேற்பட்ட 82.42 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றி வைப்பு!!

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் 30வயதிற்கு மேற்பட்ட 82.42 வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 98,000 மக்கள் வசித்து வருவதுடன் அவர்களில் 80,770 மக்களுக்கு முதலாவது தடுப்பூசிகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இவை 84.42 வீதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் வடமாகாணத்தில் 30வயதிற்கு மேற்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தில் 75.74வீதமும் , கிளிநொச்சியில் 79.29 வீதமும், முல்லைத்தீவில் 75.83 வீதமும், மன்னாரில் 69.74 வீதமும் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளத்தில் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது!!

செட்டிக்குளத்தில்..

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 1.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நகரில் சந்தேகத்திக்கிடமாக நின்ற இரு இளைஞர்களின் கையில் வைத்திருந்த பையினை சோதனையிட்ட சமயத்தில் 1.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றினர்.

26 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கைப்பற்றிய கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.