நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் தினசரி 75க்கும் மேற்பட்ட மரணங்களும் நிகழ்ந்த வண்ணமுள்ளது.
அத்துடன் மாகாணத்திற்கிடையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் அத்தியாவசிய தேவை நிமிர்த்தம் மாத்திரம் பயணங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆரம்ப கல்வி பாடசாலையினர் சிறுவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் என 50க்கு மேற்பட்டவர்களுடன் நுவரெலியா நோக்கி தனியார் பேரூந்தில் இன்று (08.08.2021) அதிகாலை சுற்றுலா சென்றுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து நாடு அபாய கட்டத்தில் உள்ள இந்நிலையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியவர்கள் பொறுப்பற்ற விதத்தில் சுற்றுலாவை ஒழுங்கமைத்து,
சிறுவர்களை அழைத்து சென்றுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளமையுடன் இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வயல் காணியில் மனித எச்சங்கள் காணப்பட்டதனையடுத்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று (08.08.2021) காலை மனித மண்டை ஒடு காணப்படுவதாக பொதுமகனொருவர் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மேலும் குறித்த மனித மண்டை ஓடு வயல் பகுதிக்கு அருகேயுள்ள மயானத்தில் இருந்து விலங்குகள் எவையேனும் எடுத்து வந்து இவ்விடத்தில் வீசி இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் இளைஞர் ஒருவரின் பொறாமை குணத்தால் இளம் பெண் தன் வாழ்நாள் முழுவதும் துயரத்தை அனுபவிக்கும் கொடூரமான நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த விவகாரத்தில் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட இலங்கை இளைஞர் Lakshman Samarakoon என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமர்ஷாம், பக்கிங்ஹாம்ஷயர் பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தமது பெற்றோரின் வாகனத்தை பயன்படுத்திய Lakshman Samarakoon, அதை தமது காதலியான Dina Sapra மீது மோதியுள்ளார்.
மட்டுமின்றி, வாகனம் Dina Sapra-ன் கால் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் அவரது கால் எலும்புகள் நொறுங்கியுள்ளதுடன், ஒரு கால் மொத்தமாக வெட்டி நீக்கப்படும் பரிதாப சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது 20 வயதாகும் Lakshman Samarakoon தமது காதலியை எப்போதும் கட்டுப்படுத்தவே முயன்று வந்துள்ளார். தொடர்ந்து தமது காதலியை கண்காணிப்பதை வழக்கமாக கொண்டுள்ள அவர் ஆண்கள் எவரேனும் குறுந்தகவல் அனுப்பினால், அவர்களை முடக்கவும் செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று Lakshman Samarakoon மற்றும் Dina Sapra ஆகிய இருவரும் பொதுவான நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்கு தனித்தனியாக சென்றிருந்தனர். இந்த நிலையிலேயே Dina Sapra-ன் மொபைலில் ஆண் நண்பர் ஒருவரின் குறுந்தகவல் ஒன்றை Lakshman Samarakoon காண நேர்ந்துள்ளது.
இதில் ஆத்திரம் மற்றும் பொறாமை கொண்ட Lakshman Samarakoon மொபைலைப் பறித்துக் கொண்டு, தம்மை ஏமாற்றுவதாக Dina Sapra-வை கடுமையாக கண்டித்துள்ளார். தொடர்ந்து வாகனத்தை இயக்கிய Lakshman Samarakoon தமது காதலி மீது மோதி வீழ்த்தியதுடன் 999 இலக்கத்திற்கு அழைத்து தகவலும் அளித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், Lakshman Samarakoon-கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், விடுதலைக்கு பிறகு 8 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இடம்பெற்றதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே இராணுவ தளபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதி தெளிவான ஆலோசனை வழங்கினார். ஏனைய நாடுகள் அவ்வாறு ஒன்று செய்தால் எங்கள் செய்ய நேரிடும் என ஜனாதிபதி கூறினார். அதற்கு அவசியமான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு உடனடியாக கோரிக்கை விடுக்குமாறு குறிப்பிட்டார்.
முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை ஏனைய நாடுகளை விட முதலில் இலங்கை பெற்றுக் கொண்டமையினால் இன்று வரையில் ஒரு சிறந்த நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.
அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட குழுவிற்கு மாத்திரமின்றி அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்குவது அவசியமென்றால் உடனடியாக கோரிக்கை விடுக்க வேண்டும்.
நாட்டில் நூற்றுக்கு 93 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நூற்றுக்கு 23 வீதமானோருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா தாண்டிக்குளம் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால் இன்று (08.08.2021) பிற்பகல் மண்டை ஓடு ஒன்று அவதானிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. வவுனியா பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால் மண்டை ஓடு ஒன்று அவதானிக்கப்பட்டது.
நாட்டில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றினால் சம்பவிக்கும் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
மேலும், நாடளாவிய ரீதியில் டெல்டா திரிபு அசுர வேகத்தில் பரவி வருகின்றது. இந்த நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு அரசு பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.
அதேவேளை, நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய தினம் (06.08.2021) 98 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5017 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் பதிவான 98 கோவிட் மரணங்களில் 47 ஆண்கள் எனவும், 51 பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில், 30 முதல் 59 வயது வரையிலான 20 கோவிட் மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட 78 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 70 வயது தாத்தாவால் பேத்தி கு.ழந்தை பெற்றெடுத்த சம்பவத்தின் அ.திர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் முனியாண்டி.
இவர் பேத்தியை ஆசை வார்த்தை கூறி பா.லி.ய.ல் தொ.ந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் பேத்தி கர்ப்பம் ஆகியிருக்கிறார். திடீரென்று பேத்தியின் வயிறு பெரிதாக இருந்ததால் அவரை அழைத்து கொண்டு அதே பகுதியை சேர்ந்த இந்திரானியிடம் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.
அவர் ஓய்வுபெற்ற நர்ஸ் ராஜாமணியிடம் அழைத்து செல்ல, கருக்கலைப்பு நடந்திருக்கிறது. இதில் கு.ழந்தை இ.றந்து பி.றந்திருக்கிறது. இ.றந்த கு.ழந்தையை ஆற்றில் பு.தைத்துவிட்டார் தாத்தா முனியாண்டி.
ஆனாலும் இந்த தகவல் ஊர் முழுவதும் பரவிவிட்டது. இதையடுத்து விஏஓ திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பு.காரளித்துவிட்டார். முனியாண்டி, ராஜாமணி, இந்திராணி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் போக்சோ வழக்கு பதிவு செய்தனர் பொலிசார்.
இதில் ராஜாமணி மீது வழக்குபதிவு செய்யாமல் இருக்க 23 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதால் ராஜாமணி மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்ததை அடுத்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் இளவழகி, தலைமை காவலர் கீதாரணி, முதல்நிலை காவலர் கோகிலா ஆகியோரை ஆ.யுதடைப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார் காவல் கண்காணிப்பாளர்.
மேலும் கீதாராணி, கோகிலா ஆகியோரை பணிடை நீக்கம் செய்துள்ளனர், அவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இந்தியாவில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் அ.வமானப்படுத்தப்பட்ட 15 வயதான மாணவி வீட்டுக்கு வந்த போது கீழே சுருண்டு விழுந்து உ.யிரிழந்த சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் உன்னவ் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிக்கூடத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு அழுது கொண்டே வந்த அவர் திடீரென வீட்டில் சுருண்டு விழுந்தார்.
இதை பார்த்த குடும்பத்தார் பதறிய நிலையில் மாணவியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ.றந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மாணவியின் குடும்பத்தார் ஒரு அ.திர்ச்சி பு.காரை பொலிசில் அளித்துள்ளனர்.
மாணவியின் பெற்றோர் கூறுகையில், பள்ளி கட்டணம் செலுத்தாததால் எங்கள் மகள் கட்டண சலுகைக்கான கோரிக்கையை கேட்க பாடசாலை அதிபரிடம் சென்றுள்ளார்.
அங்கு எல்லா மாணவ, மாணவிகள் முன்னிலையும், எங்கள் மகளை ஏன் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என கூறி அவர் அவமானப்படுத்தியுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த மகள், என்னை எல்லார் முன்னிலையிலும் அசிங்கப்படுத்திவிட்டார்கள் என அழுதவாறு இருந்த போது கீழே திடீரென சு.ருண்டு வி.ழுந்துவிட்டாள் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த மோகன், ஓசூர் அடுத்த சொர்னபூமி லே அவுட் பகுதியில் மனைவி, மகள் மற்றும் தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கு முன் கிருஷ்ணகிரியில் சொந்தமாக லாட்ஜ் நடத்தி வந்த மோகன், தற்போது ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. தனது தொழிலை மேம்படுத்த வங்கியில் கடன் வாங்கிய மோகன், பிறகு அந்த கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அத்தோடு, தொழிலிலும் போதிய வருமானம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, கீழ் தளத்திலுள்ள படுக்கை அறையில் மோகனின் தாயார் வசந்தா சடலமாக கிடந்துள்ளார். மேல் தளத்திலுள்ள படுக்கை அறையில் மனைவி ரம்யா, மகள் அன்மயி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
மோகன் அதற்கு அருகிலேயே தலை முழுவதும் பாலிதீன் கவரால் சுற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டி.எஸ்.பி. தலைமையிலான பொலிசார் நால்வரின் சடலங்களையும் மீட்டனர்.
அத்தோடு வீட்டில் இருந்து மோகன் எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கும் பொலிசார், அதில் கடன் பிரச்சனையால் த.ற்.கொலை செ.ய்.து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வசந்தா, ரம்யா, அன்மயி ஆகிய மூவரும் வி.ஷம் அருந்தியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
தாய், மனைவி, மகளுக்கு வி.ஷம் கொடுத்து கொ.ன்.றுவிட்டு மோகன் தலையில் பாலிதீன் கவரை சுற்றிக் கொண்டு சினிமா பாணியில் த.ற்.கொ.லை செ.ய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே, தொழில் சம்பந்தமாக எந்த தகவலையும் மோகன் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளமாட்டார் என உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்த பெண், த.ற்.கொ.லை செ.ய்து கொண்டதால், அந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திப்பனூத்து கிராமத்தினை சேர்ந்த தம்பதி கணேசன் – செண்பகவல்லி. இவர்களுக்கு செண்பகராஜ் (24) என்ற மகன் உள்ளார். இவர் எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனத்தில் செயல்பட்டு வரும் தனியார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன் செண்பகராஜ் கடலையூரில் இருக்கும் தீ.ப்.பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த போது, கடலையூரைச் சேர்ந்த முத்துச்சாமி – மாடத்தி மகள் மகாராணி(26) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர், பெண் வீட்டார் வயது வித்தியாசம் காரணமாக திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருந்துள்ளனர். இதனால் இந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செ.ய்.து கொண்டது.
அதன் பின் இவர்களின் காதல் திருமணத்த பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். அதன் பின் நாட்கள் செல்ல செல்ல, இருவருக்கும் இடையே பி.ர.ச்சனை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தினை சிலர் கிண்டல் செய்ய ஆரம்பித்த காரணத்தினால் செண்பகராஜ் வீட்டிற்கு வந்து தனது ம.னை.வியுடன் வா.க்.குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்போது தான் மகாராணி தன்னுடைய தாய்க்கு போன் செய்து வேதனையுடன் நடந்ததை கூறியுள்ளார். அதன் பின் அவர் இருவரையும், கடலையூருக்கு வந்து அங்குள்ள தங்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கும் படி வ.லியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செண்பகராஜிடம் கூறிய போது , இருவருக்கும் மீண்டும் பி.ர.ச்சனை வலுத்துள்ளது. செண்பகராஜ் பெற்றோரும் மகாராணியை திட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் திப்பனூத்து கிராமத்தில் திருவிழா நடைபெற்றுள்ளது.
செண்பகராஜ் மட்டும் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். மகாராணி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 3-ஆம் திகதி நள்ளிரவு திருவிழாவிற்கு போய் விட்டு செண்பகராஜ் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மகாராணி இது குறித்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் பி.ரச்சனை எழுந்துள்ளது. உடனே அவர் ம.னைவியிடம் சத்தம் போட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, செண்பகராணி தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதைக் கண்டு அ.தி.ர்ச்சியடைந்த அவர், க.த்தி அ.ழுததால், அருகில் வசிப்பவர்கள் உடனடியாக வந்து இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொ.லி.சார் உடலை மீ.ட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருமணம் ஆன ஒரு வருடத்தில் மகாராணி உயிர் இ.ழ.ந்துள்ளதால் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணனும் வி.சாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தங்களது மகள் உ.யி.ரிழப்புக்கு அவரது கணவர் செண்பகராஜ் மற்றும் அவரது பெற்றோர் தான் காரணம் என்று மகாராணி பெற்றோர் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக்கொண்ட பொ.லிசார், வி.சாரணை நடத்தி நேற்று மகாராணியை த.ற்.கொ.லைக்கு துண்டியதாக அவரது கணவர் செண்பகராஜ் மீது வ.ழக்கு பதிவு செ.ய்.து கை.து செ.ய்.துள்ளனர்.
வன்னியில் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இரண்டு மணித்தியாலங்களில் வீட்டுக்கு திரும்பி செல்கின்றனர். இது தொடர்பில் குழு ஒன்றை அமைத்து வி.சா.ர.ணை செ.ய்ய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரிடம் வன்னியின் சுகாதாரத்துறை தொடர்பில் கலந்துரையாடிய விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் வைத்தியர்கள் ப.ற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதுபோல் தாதியர் ப.ற்றாக்குறையும் உள்ளது. அதனை விரைவாக நிரப்பினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
வன்னி மாவட்டத்தில் சில வை.த்தியர்கள் காலை 11 மணிக்கு வை.த்தியசாலைக்குச் சென்.று இ.ரண்டு ம.ணித்தியாலங்களில் வை.த்தியர்கள் தி.ரும்பிச் செ.ல்கின்ற நி.லையும் உ.ள்ளது.
இது தொடர்பில் குழு ஒன்றை அனுப்பி தி.டீ.ரெ.ன அவ் வை.த்தியசாலைகளுக்கு சென்று ஆ.ய்வு செ.ய்தால் சிறப்பாக இருக்கும்.
எமது கோ.ரிக்கைக்கு அமைவாக வவுனியா மாவட்ட வை.த்தியசாலைக்கு 251 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டடங்கள் திணைக்களம் மற்றும் மாகாண கட்டிடங்கள் திணைக்களம் என்பன இதுவரை எவ்வித வேலைத்திட்டங்களையும் மு.ன்னெடுக்கவில்லை.
கடந்த அரசாங்கம் நிதிகளை தி.ருப்பி அ.னுப்பியதைப் போன்று அல்லாது எமது அரசாங்கத்தில் இந்த வேலைத்திட்டத்தை தா.ங்கள் மு.டித்து வைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சரிடம் வ.லியுறுத்தியுள்ளதுடன், பாராளுமன்றத்திலும் குறித்த விடயத்தை தெ.ரியப்படுத்தியுள்ளேன் எனத் தெ.ரிவித்தார்.
வவுனியாவில் இரு தினங்களில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (07.08.2021) வெளியாகின.
அதில், மகாறம்பைக்குளம் பகுதியில் ஐந்து பேருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கொக்குவெளி இராணுவ முகாமில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் இருவருக்கும்,
நேரியகுளம் பகுதியில் ஏழு பேருக்கும், உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் நான்கு பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், மதவாச்சி பகுதியில் ஒருவருக்கும், கோவில்குளம் பகுதியில் ஒருவருக்கும்,
பெரிய உளுக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், ஓமேகா ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் அனுராதபுரத்தைச் சேர்ந்த இருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், ஓமந்தை பகுதியில் ஒருவருக்கும்,
காத்தார் சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் இருவருக்கும், சுகாதார திணைக்கள விடுதியில் இருவருக்கும், சூடுவெந்தபுலவு பகுதியில் ஒருவருக்கும்,
வவுனியாவில் வசிக்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியாவில் பணிபுரியும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 5 நாட்களில் நேரியகுளம் பகுதியில் 71 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கண்காணிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுகின்றனரா என்பது கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவையில் விதிகள் மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உரிய காரணமின்றி மாகாணம் விட்டு மாகாணம் மக்கள் பயணம் செய்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவையின்றி மாகாணங்களை கடக்க முயற்சிப்போர் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் மீண்டும் கோவிட் வைரஸ் தொற்றுப்பரவல் அதிகரிக்க டெல்டா வைரஸின் வேகமான பரவலே காரணம் எனவும்,
நாடு சிவப்பு எச்சரிக்கையை நோக்கி நகர்வதாகவும் சுகாதார வைத்திய நிபுணர்கள் நேற்றைய கோவிட் செயலணி கூட்டத்தில் சுட்டிக்காட்டியுளளனர்.
அத்துடன் மேல் மாகாணத்தையேனும் முடக்கி மக்கள் நடமாட்டத்தை நிறுத்தாவிட்டால் இந்த மாத இறுதியில் மிக மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தியாவசியமான தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் கோவிட் தொற்று திரிபு வேகமாக பரவி வருவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் மேலும், இலங்கையில் கோவிட் தொற்றுக்கு இலக்காவோரில் 1.5 வீதமானவர்கள் மரணிக்கின்றனர். அதிக எண்ணிக்கையிலானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாட்டு மக்கள் முடிந்தளவு கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்வதன் மூலம் ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மக்கள் அதிகளவில் குழுமும் திருமண நிகழ்வுகள், மரண வீடுகள் மற்றும் வேறும் நிகழ்வுகளில் பங்கேற்பதனை முற்று முழுதாக தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயமாக முகக் கவசங்களை அணிந்து செல்லுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொற்றா நோய்கள் ஏதும் காணப்பட்டால் பணி நிமித்தம் தவிர வேறும் தேவைகளுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.