வவுனியா நகர அழகுபடுத்தல் திட்டத்தில் எவரும் அரசியல் லாபம் தேட வேண்டாம் : நகரசபைத் தலைவர் இ.கௌதமன்!!

இ.கௌதமன்

இலங்கையின் 100 நகரங்கள் அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் வவுனியா நகர அழகுபடுத்தல் திட்டமும் நகர அபிவிருத்தி அதிகார சபையால் கொண்டு வரப்பாட்டுள்ளது. இதில் எவரும் அரசியல் லாபம் தேட வேண்டாம் என வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையில் இன்று (07.08) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டம் ஒன்று வந்திருக்கின்றது. அத் திட்டத்தின் கீழ் வவுனியா நகரமும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்கள், இந்த நிதியைக் கொண்டு வருவதற்கு தாங்கள் தான் முயற்சி செய்ததாக தெரிவித்திருந்தார். அது ஒரு பொய்யான கருத்து.

இலங்கையின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டம் ஒரு வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்தது. ஏற்கனவே எமது மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சமன்பந்துலசேன மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினருடன் இணைந்து இது தொடர்பில் கள விஜயமும் மேற்கொண்டு வவுனியா நகரத்தை எவ்வாறு அழகுபடுத்துவது என திட்டமிட்டு இருந்தோம்.

இதற்கு நகரசபை அமர்விலும் ஏகமனதாக அனுமதி பெறப்பட்டிருந்தது. இதனை யார் செய்தார்கள் என்பது முக்கியமான விடயமல்ல.

இதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இது நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி மூலம் வந்தது. எநதவொரு அரசியல் உள்வாங்களோ அல்லது அரசியல்வாதியின் செயற்பாட்டாலோ நிதி வரவில்லை.

வவுனியா மட்டுமன்றி வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி என நாடு முழுவதும் 100 நகரங்களுக்கு இந்த நிதி வந்துள்ளது.

இரண்டு கோடி ரூபாய் என்பது இந்த திட்டத்தை செயற்படுத்த மிகச் சிறிய தொகையாகவே காணப்படுகின்றது. இது தொடர்பான முழுமையான திட்டமும் விளக்கமும் எம்மிடமே உள்ளது.

வடக்கில் 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை ஈபிடிபி பெற்றுக் கொடுத்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினரால் கூறப்பட்டது. நல்ல விடயம். அது உங்களது கடமை. அதை சொல்லிக் காட்டி விளம்பரம் தேட வேண்டாம்.

அதற்காகவே மக்கள் வாக்களித்து உங்களை பாராளுமன்றம் அனுப்பினார்கள். அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அரசியல் என்பது மக்களது தேவைகளை பூர்த்தி செய்யவே. அதனை செய்ய வேண்டும்.

அதைவிடுத்து நான் அதை செய்தேன். இதைச் செய்தேன் என சொல்லிக் காட்டி அடுத்த கட்ட அரசியல் நோக்கி எதனையும் செய்ய கூடாது. மக்களுக்காகவே நாம் சேவையாற்றுகின்றோம்.

100 நகரங்களின் வேலைத்திட்டத்தின் உண்மைத் தன்மையை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்தவகையில், வவுனியா நகரின் அழகுபடுத்தல் திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் எவரும் அரசியல் லாபம் தேட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் பிற்போடப்பட்டன!!

வவுனியா பல்கலைக்கழகம்..

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் தனியான பல்கலைக்கழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது.

இந்நிலையில் அதன் ஆரம்ப விழாவை எதிர்வரும் 11ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்வின் முதன்மை விருந்தினராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்தார்.

ஆயினும் கோவிட் பரவல் காரணமாக அரச நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் குறித்த நிகழ்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வைத்தியசாலை பிண அறைகளில் குவிந்து கிடக்கும் கொரோனா சடலங்கள் : துர்நாற்றம் வீசுவதாக தகவல்!!

கொரோனா சடலங்கள்..

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததனை தொடர்ந்து பாணந்துறை வைத்தியசாலையின் பிண அறையில் 45 சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கொவிட் சடலங்கள் 22 வரை உள்ளதாகவும் அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பிண அறையின் குளிரூட்டிகளில் திறனுக்கேற்ப சடலங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவற்றை வைப்பதற்கு பிண அறையில் இடமில்லாமையினால் அதற்கு வெளியே வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வைக்கப்பட்டுள்ள சடலங்களில் பெரும்பான்மையான சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக பிரதேசத்தின் சுடுகாடுகளை 24 மணித்தியாலங்கள் முழுவதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சடலங்களை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை : அரசாங்கம் தீர்மானம்!!

போக்குவரத்து தொடர்பில்..

பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தங்களின் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பில் திடீர் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விடயத்தை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முறையற்ற வகையில் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையை இடைநிறுத்தும் அளவிற்கு வைரஸ் தாக்கம் காணப்படுகிறது. அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் போக்குவரத்து வசதி கருதி மாத்திரமே தொடர்ந்தும் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு : 100 ஐ அண்மித்த மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்று (05) வியாழக்கிழமை 98 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகி54யுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,நாட்டில் மேலும் 1,910 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 323,339 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

தன்னை விட 16 வயது அதிகமான கணவனுக்கு மனைவி செய்த கொ.டூரம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தன்னை விட 16 வயது அதிகமான கணவனை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு நாடகம் நடத்திய மனைவி பொலிசில் சி.க்கிய நிலையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சே.லம் அ.ம்மாபேட்டையை சே.ர்ந்தவர் பி.ரபு. அ.தே ப.குதியில் வா.ழை இ.லை க.டை வை.த்துள்ள இ.வர் அ.வரது சொ.ந்த அ.க்கா ம.க.ள் ஷா.லினியை (22) க.டந்த 5 ஆ.ண்டுகளுக்கு மு.ன்பு தி.ருமணம் செ.ய்துள்ளார்.

இ.ந்த நி.லையில் க.டந்த தி.ங்களன்று ந.ள்ளிரவில் யா.ரோ 2 பே.ர் வ.ந்து ந.கைகளை ப.றி.த்.து.க் கொ.ண்டதோடு த.னது க.ணவர் பி.ரபுவை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ப்.பி.த்.து.வி.ட்.ட.ன.ர் எ.ன்று ஷா.லினி, கீ.ழே மு.த.ல் மா.டியில் இ.ருந்த உ.றவினர்களிடம் கூ.றியுள்ளார்.

உடனே இருவரும் மேலே சென்று பார்த்தபோது பிரபு உ.யி.ர.ற்.று கி.டந்துள்ளார். மாடிக்கு போகும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளபோது எப்படி தி.ருடர்கள் வரமுடியும் என்று பிரபுவின் பெற்றோர் கேட்டதற்கு ஷாலினி முன்னுக்கு பின் மு.ரணாக பதிலளித்துள்ளார்.

ச.ந்தேகமடைந்த பி.ரபுவின் தா.யார் து.ளசி பொ.லிசாருக்கு த.கவல் கொ.டுத்தார். ச.ம்பவ இ.டத்திற்கு வ.ந்த பொ.லிசார் ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்.றி ஷாலினியிடம் வி.சாரித்த போ.து அ.னைத்து உ.ண்மைகளும் வெ.ளிவந்தது.

அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் என் கணவருக்கும் 16 வயது வித்தியாசம் உள்ளது. இதனால் அவரால் என் ரசனைக்கு ஒத்துழைக்க இயலவில்லை.

பேஸ்புக், வாட்ஸ் அப், என எந்த ஒரு தகவல் தொழில் நுட்ப விஷயமும் தெரியாமல் இலை கடையையே கதி என்று இருந்ததால் நான் பேஸ்புக்கில் நண்பர்களை தே.டினேன்.

அப்போது எனது வி.ருப்பத்துக்கு ஏ.ற்றபடியே 23 வயதான காமராஜ் இருந்ததால் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதோடு அதற்கு இ.டை.யூ.றா.க இருந்த கணவனை தீ.ர்த்துக்கட்டி பொலிசில் சி.க்.கா.ம.ல் இ.ருக்க கொ.ள்.ளை.ய.ர்க.ள் வ.ந்ததாக நா.டகமாடியதாகவும் தெரிவித்துள்ளார் ஷாலினி.

மேலும் சம்பவத்தன்று நள்ளிரவு 11;30 மணி அளவில் கணவன் உறங்கி விட்டதாக செல்போன் மூலம் ஷாலு தகவல் சொன்னதை தொடர்ந்து அங்கு காமராஜ் சென்றுள்ளான். வீட்டிற்குள் படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிரபு மு.கத்தில் த.லையணையால் அ.ழுத்தி இருவரும் கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர்.

பேஸ்புக்கில் வெளியிட்ட புகைபடத்தில் பள பளப்பாக தெரிந்த ஷாலினி கைது செய்யப்பட்ட போது டல்லாக உடல் பருமனுடன் காணப்பட்டதால் அது குறித்து அவரிடம் விசாரித்த போது தான் போட்டோஷாப் ஆப் ஒன்றின் மூலம் தன்னை அழகுபடுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.

இதனை நம்பித்தான் பேஸ்புக்கில் 50 பேர் ஷாலினியின் நட்பு வளையத்தில் சி.க்.கி.ய.து.ம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பொலிசார் ஷாலினி மற்றும் காமராஜை கைது செய்துள்ளனர்.

திருமணத்திற்கு மெட்டி எடுக்க சென்ற ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்!!

மேட்டுப்பாளையம்..

மேட்டுப்பாளையம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்தானதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெரியபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜித் (வயது 23).

தாளத்துறை பகுதியைச்சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் பிரியங்கா (வயது 20). இவர்களுக்கு திருமண நிச்சியிக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆடிப்பெருக்கு தினமான நேற்று மேட்டுப்பாளையத்தில் திருமணத்திற்காக மெட்டி எடுக்க தனது அக்கா செவ்வந்தி (வயது 23) உடன் அஜீத்தின் இருசக்கர வாகனத்தில் வந்து விட்டு அன்னூர் சாலை வழியாக சென்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது,புதிய காய்கறி மொத்த மைதானம் அருகே அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த பொள்ளாச்சி கோவில்பாளையம் பகுதியைச்சேர்ந்த அப்துல் ஹமீது மகன் ஷேக் அலாவுதீன் (வயது 23),

சாதிக்(வயது 18) ஆகியோரின் இருசக்கர வாகனமும்,அஜீத்தின் இருசக்கர வாகனமும் நேருக்கு மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை காவல் துறையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த அஜீத், பிரியங்கா இருவர் மற்றும் லேசான காயமடைந்த செவ்வந்தி உள்ளிட்ட மூவர் என 5 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த அஜீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரியங்காவிற்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், காயமடைந்த மூவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சிறுமுகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து உறவினர் கவிதா கூறுகையில் இறந்த பிரியங்காவுடன் பிறந்தவர்கள் 3 பெண்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.பிரியங்காவின் அப்பா கருப்பசாமி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நலமடைந்துள்ளார். அவருக்கு பிரியங்கா இறந்த விஷயமே தெரியாது என வேதனையுடன் தெரிவித்தார்.

கடைசியாக பிரியங்காவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் நேற்று கால் மெட்டி எடுக்க மேட்டுப்பாளையம் வந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் சாலை விபத்தில் ஜோடிகள் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் சகோதரருடன் நடைப்பயிற்சி : இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கேரளாவில்..

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் நகரில் பத்து மாடி குடியிருப்பின் மாடியில் இருந்து தவறி விழுந்து இளம் பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கொச்சின் நகரில் அமைந்துள்ள பத்து மாடி குடியிருப்பின் எட்டாவது மாடியிலேயே தோட்டக்காட்டு எஸ்டேட் உரிமையாளர் ராய் என்பவரது குடும்பம் சமீபத்தில் குடியேறியுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தின் போது ராய் என்பவது மகள் 18 வயதேயான ஐரின் ராய் என்பவர் தமது சகோதரருடன் மாடியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது எட்டாவது மாடியின் வடக்குப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது தவறி விழுந்த ஐரின், அங்கிருந்து கார் நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது விழுந்து, பின்னர் சுவரில் மோதி, அங்கிருந்து தரையில் விழுந்துள்ளார்.

அலறித்துடித்த உறவினர்கள், உடனடியாக எர்ணாகுளம் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உயிரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

சாலக்குடி பகுதியை சேர்ந்த ராய் குடும்பம் கடந்த ஜனவரி மாதத்திலேயே கொச்சின் நகரில் அமைந்துள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியுள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரவில் வீட்டில் இருந்து தனியாக வெளியில் சென்ற புதுப்பெண் : திருமணமான சில மாதத்தில் நடந்த வி.பரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் காதல் திருமணம் செய்த பு.துப்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவத்தின் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் பெக்கா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா (20).

இதுபோல சக்லேஷ்புரா அருகே மலலி கிராமத்தில் வசித்து வருபவர் அஸ்வத். இவர்கள் 2 பேருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் உண்டானது.

அந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உ.யிருக்கு உ.யிராக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆனால் காதலுக்கு எ.தி.ர்.ப்.பு தெரிவித்த பெற்றோர் பூஜாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பூஜா வீட்டைவிட்டு வெளியேறி அஸ்வத்தை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பூஜாவிடம் ச.ண்.டை போ.ட்.ட அஸ்வத் வ.ரதட்சணை வாங்கி வரும்படி கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய.தா.க தெ.ரிகிறது. இதனால் ம.னம் உ.டைந்த பூஜா த.ற்.கொ.லை செ.ய்.ய மு.டிவு செ.ய்தார்.

அ.தன்படி நே.ற்று மு.ன்தினம் இ.ரவு கி.ராமத்தில் ஓ.டும் ஹே.மாவதி ஆ.ற்றை நோ.க்கி செ.ன்ற பூ.ஜா அ.தி.ல் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். பி.ன்னர் ஆ.ற்றில் மி.த.ந்.து வ.ந்த அ.வர் ச.ட.ல.த்.தை க.ண்ட பொ.துமக்கள் அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

இ.து ப.ற்.றி அ.றிந்த பொ.லிசார் தீ.ய.ணை.ப்.பு வீ.ரர்கள் அ.ங்கு செ.ன்று பூ.ஜாவின் உ.ட.லை தே.டி.ன.ர். நீ.ண்.ட நே.ர தே.டு.த.லு.க்.கு பி.ன்னர் பூ.ஜாவின் உ.ட.ல் மீ.ட்.க.ப்.ப.ட்.ட.து. பி.ன்னர் அ.வரது உ.ட.ல் பி.ரே.த ப.ரிசோதனைக்கு அ.னுப்பி வை.க்கப்பட்டது.

வி.சாரணையில் வ.ரதட்சணை கொ.டு.மை.யா.ல் பூஜா ஆ.ற்.றி.ல் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.த.து தெ.ரிந்தது. இ.ந்த ச.ம்பவம் குறித்து பொ.லிசார் வ.ழக்குப்பதிவு செ.ய்து அஸ்வத்தை பி.டி.த்.து வி.சாரித்து வ.ருகின்றனர்.

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு!!

தனியார் துறை ஊதியம்..

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் 10,000இல் இருந்து 16,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2016 ஜனவரி முதல் அமுலுக்கு வந்த 10,000 ரூபா குறைந்தபட்ச ஊதியம் இதுவரை குறைக்கப்பட்டிருக்கவில்லை. 2005 மற்றும் 2016 வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணமாக வழங்கப்பட்ட 3,500 ரூபாவுடன் 12,500 ரூபா வரை அதிகரித்திருந்தது.

அதேபோன்று, அந்த குறைந்தபட்ச ஊதியத்திற்கு வரவு செலவு திட்ட நிவாரண தொகையாக மேலும் 3,500 ரூபா இணைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தனியார் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 16,000 வழங்கப்பட வேண்டும்.

இந்த தொகைக்கமைய, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஒத்துழைப்பும் ஊழியர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாடு தழுவிய முடக்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் : முடிவை அறிவித்தார் இராணுவத் தளபதி!!

கோவிட் – 19..

நாட்டில் நிலவி வரும் கோவிட் – 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சில கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பொதுக் கூட்டங்களில் கூடுபவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ஜெனரல் சில்வா கூறியுள்ளார்.

மேலும், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதுடன், வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் இராணுவ தளபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவிலும் டெல்டா வைரஸ் தொற்றுடன் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டார்!!

டெல்டா வைரஸ் தொற்று..

வவுனியாவிலும் டெல்டா வைரஸ் தொற்றுடன் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவிலும் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (06.08) காலை வெளியாகின.

அதில், வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவருக்கு டெல்ரா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு சென்று வந்த நிலையில் காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்ட போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யபபட்டது.

இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகிய நிலையில், அவருக்கு டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தொற்றாளரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாடு தழுவிய முடக்கத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இராணுவத் தளபதி கூறியுள்ள விடயம்!!

இராணுவத் தளபதி..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இலங்கையில் மீண்டும் கோவிட் பரவல் ஆபத்தான நிலையை எட்டி வரும் தற்போதைய சூழ்நிலையில் நாடு தழுவிய முடக்கலை அமுல்படுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே கோவிட் பரவலின் தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கோவிட் – 19 தொற்றுக்கு இலக்காகும் நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம் என்பவை தொடர்பில் ஆராய்ந்து இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாடு தழுவிய முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென இராணுவ தளபதி ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்பதால், முடக்கத்தை அமுல்படுத்தாமல் இருக்க அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மாணவன் கனடாவில் ஏரியில் மூழ்கி மரணம்!!

அனுராத குடாகொட..

இலங்கை மாணவர் ஒருவர் கனடாவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 28ம் திகதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் வைட் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் தோம்சன் றிவர்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கையை சேர்ந்த அனுராத குடாகொட என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் இறுதி சடங்கு செலவுகளுக்காக நிதிசேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டு 14 ஆயிரம் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றின் கோரத்தாண்டவம் : ஒவ்வொரு மணி நேரமும் மூவர் மரணம்!!

கொரோனா..

நாட்டில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் சராசரியாக கோவிட் காரணமாக மூன்று பேர் மரணிக்கின்றனர் என இலங்கை மருத்துவ சங்கத்தின் உப தலைவர் விசேட நிபணத்துவ மருத்துவர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றுகையின் ஊடாக மட்டும் கோவிட் நிலைமைகளை கட்டுப்படுத்திவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாள்தோறும் பதிவாகி வரும் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் டெல்டா திரிபின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பரவுகை மற்றும் தடுப்பூசி ஏற்றல் ஆகியனவற்றுக்கு இடையிலான போட்டியில் தடுப்பூசி ஏற்றுகையை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாயின் சொற்ப காலத்திற்கேனும் பயணக் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபு பரவுகையினால் நாட்டில் கோவிட் நான்காம் அலையின் ஆபத்து காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் டொக்டர் மனில்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (05.08.2021) வெளியாகின.

அதில் விநாயகபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு பேருக்கும், நேரியகுளம் பகுதியில் பத்து பேருக்கும், தோணிக்கல் பகுதியில் இருவருக்கும், உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மதீனாநகர் பகுதியில் ஒருவருக்கும்,

நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் மூவருக்கும், காத்தார்சின்னக்குளம் பகுதியில் மூவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஐந்து பேருக்கும்,

வவுனியா சிறைச்சாலை கைதிகள் மூவருக்கும், ஒலுமடு பகுதியில் ஒருவருக்கும், பத்தினியார் மகிழம்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பம்பைமடு பகுதியில் ஒருவருக்கும்,

தட்டாங்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் நேரியகுளம் பகுதியில் 64 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.