இம்முறை கவனமாக இருக்கவில்லை என்றால் நிச்சயம் மரணம் ஏற்படும் என விசேட மருத்துவர் நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான அவர், கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இம்முறை கவனமாக இருக்கவில்லை என்றால், உங்களுக்கு மரணம் ஏற்படுவது நிச்சயம். அரசாங்கத்தின் தவறாக இருந்தாலும் பொது சுகாதார பரிசோதகரின் தவறாக இருந்தாலும் பேருந்து சாரதியின் தவறாக இருந்தாலும் நோயை அடையாளம் காணமுடியாமல் போனால் இறப்பது நாமே.
தம்மை பாதுகாப்பதே நமது கடமை. நான் ஒரு வருடமாக தடுப்பூசி போடாமல் நோயை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்தேன். என்னால் நோயாளிகளுடன் இருந்தும் கவனமாக இருக்க முடிந்தது.
உங்களாலும் இதனை செய்ய முடியும். சரியாக சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றினால் தப்பிக்க முடியும் எனவும் மருத்துவர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்றால் மேலும் 94 பேர் மரணித்துள்ளதாக நேற்று (04.08.2021) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4821 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 49 ஆண்களும், 45 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல பெண்களை சீரழித்த போலி சாமியாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம், நல்லகொண்டா மாவட்டம், பி.ஏ.பள்ளி அடுத்த அஜ்மாபூர் கிராமத்தில் சாய் சர்வஸ்வாமு சாய் மான்சி தொண்டு அறக்கட்டளை என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று இயங்கி வந்தது.
இங்கு வரும் பக்தர்களிடம் யாகம், பூஜைகள் செய்வதாக கூறி, அங்கு சாமியாராக இருந்த போலி சாமியார் விஸ்வ சைதன்யா பணம் பறித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஆசிரமத்திற்கு வரும் பல பெண்களை வசியப்படுத்தி, அவர்களிடம் நெருக்கமாக இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து, சாய்பாபாவின் தீர்க்க தரிசனம் என்ற பெயரால் வசதியான பக்தர்களை ஈர்த்து பணம் வாங்கியுள்ளார்.
போலி மூலிகைகள், லேகியம், எண்ணெய் ஆகியவற்றை உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று விற்று வந்துள்ளார். இவரின் பித்தலாட்டம் எல்லாம் இப்போது தெரியவந்ததால், பொலிசார் தற்போது அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் நந்திகாமாவை சேர்ந்த விஸ்வ சைதன்யா, ஐதராபாத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் மையத்தை அமைத்து வந்துள்ளார்.
அங்கு பொதுமக்களிடம் சீட்டு பிடிப்பதாக கூறி, சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின், ஜாமீனில் வெளியே வந்த இவர், சாய்பாபா பக்தராகி தனியார் தொலைக்காட்சியில் சொற்பொழிவு ஆற்றினார். அதன் பின், தீர்க்க தரிசனம் என்ற பெயரில் வீடியோக்கள் எடுத்து தானாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார்.
என்னுடன் உடலுறவு கொண்டால் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என கூறி பல பெண்களுடன் ஆசிரமத்தில் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில், சைதன்யா, அனந்தபுரத்தை சேர்ந்த வீடியோ எடிட்டர் கவுதம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக இருந்த கம்மத்தை சேர்ந்த ஸ்ருஜன் குமார், ஆக்குதோடப்பள்ளியை சேர்ந்த டிரைவர் விஜய் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும், இவர்களிடம் இருந்து 26 லட்சம் ரொக்க பணம், 500 கிராம் தங்க நகைகள், போலி சாமியாரின் 2வது மனைவி சுஜாதா மீது உள்ள 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள், 17 ஏக்கர் நிலம்,
யூடியூப் சேனலுக்கு பயன்படுத்திய 7 லேப்டாப்கள், 4 செல்போன்கள், 1 கார் பல்வேறு வகையான மூலிகைகள், பூஜை பொருட்கள், 50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பக்கத்து வீட்டில் டிவி பார்க்க சென்ற சிறுமியை வ.ன்.கொ.டுமை செ.ய்த இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தின் கிஷ்னி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 11 வயதான சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
குறித்த சிறுமியின் வீட்டில் டிவி இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சிறுமி செல்லும் போதெல்லாம் அங்கிருந்த இளைஞன் ஆசையாக பேசி வந்துள்ளார்.
இதே போன்று கடந்த செவ்வாய்கிழமை இரவு வழக்கம் போல் டிவி பார்க்க சென்ற சிறுமியை கு.றித்த வாலிபர், வீட்டில் யாரும் இல்லாததால் வ.ன்.கொ.டுமை செ.ய்.துள்ளார். மேலும் வெளியில் கூறினால் கொ.லை செ.ய்.துவிடுவதாகவும் மி.ர.ட்டியுள்ளார்.
ஆனால் சிறுமி வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் அ.ழுதுகொண்டே கூறியுள்ளார். இதனைக் கேட்ட அ.திர்ச்சியடைந்த பெற்றோர் பொலிசில் பு.கா.ர் அளித்துள்ளனர்.
பொ.லி.சார் வ.ழக்கு ப.திவு செ.ய்து குறித்த இளைஞனை வலைவீசி தேடி வரும் நிலையில், சிறுமியினை மருத்துவ ப.ரி.சோதனைக்கு ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் காலாவதியான குளிர்பானத்தை வாங்கிக் குடித்த 13 வயது சிறுமி, உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கப்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த தரணி. 13 வயதான இவர் பெசண்ட் நகரிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் அங்கிருந்த மளிகைக் கடையில் Togito Cola என்ற குளிர்பானத்தை வாங்கி குடிக்க, அடுத்த சில மணி நேரங்களிலே அவர் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்.
அதன் பின், கைவிரல், நாக்கு என உடல் நீல நிறமாக மாறியதோடு, மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வந்து சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இருப்பினும், சிறுமியின் முழு பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் உயிரிழப்பிற்கான மொத்த காரணமும் தெரியவரும் என கூறிய பொலிசார், சிறுமி குடித்த குளிர்பானம் காலாவதியானது என்பது தெரியவந்துள்ளது.
சிறுமி குடித்த அந்த குளிர்பானபாட்டிலில் காலாவதியாகும் திகதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குளிர்பானம் வாங்கப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
சிறுமி அருந்திய காலாவதியான குளிர்பானம் போன்று மேலும் சில குளிர்பான பாட்டில்கள் இருப்பதை பறிமுதல் செய்தனர். காலாவதியான குளிர்பானத்தை விற்றதால் கடை உரிமையாளர் மீதும்,
குளிர்பான தயாரிப்பு நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, சட்ட நடவடிக்கைக்கும் காவல் துறைக்கு பரிந்துரைக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
களுபோவில வைத்தியசாலையின் நிலை தொடர்பில் ஊடகவியலாளரொருவர் படங்களுடன் முகப்புத்தகத்தில் இட்ட பதிவொன்று தற்பொழுது வைரலாகி வருகிறது. அதன்படி குறித்த பதிவில்,
கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நீண்ட வரிசை காணப்படுவதாகவும், சில மணித்தியாலங்களுக்குள்ளேயே இருவர் கண்முன் இறந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பற்றி படித்த செய்திகளை தற்போது நேரில் பார்க்க முடிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வார்டில் ஒரு கட்டிலில் இரண்டு அல்லது மூன்று தீவிர நோயாளிகள் இருக்கிறார்கள்.
கட்டில்களுக்கு கீழ் சிலர் உயிருக்கு போராடும் நிலையில், ஒட்சிசனை பெற்றுக் கொள்கின்றார்கள். தரையில் நோயாளிகள் நடக்க பயப்படுகிறார்கள்.
மீதமுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் நீண்ட இருக்கைகளிலும், நாற்காலிகளிலும், மரங்களின் கீழும் மணல் தரையில் படுத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதுடன், சிலர் போர்வை கூட இல்லாமல் படுத்திருப்பதை காண முடிகின்றது.
எனவே மக்களை கோவிட் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்து கொண்டு மிகவும் கவனமாக இருக்குமாறு அந்த பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களாக இலங்கையில் கோவிட் தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை மற்றும் கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் நிலை தீவிரமடைந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியின் கிராங்குளத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்து கொண்டிருந்த வேளை அதே திசையில் எதிரே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சடுதியாக திரும்புவதற்கு முற்படுகையில் இரு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றோடு ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இருவரும் காயங்களுக்குட்பட்டு ஆரையம்பத்தி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு சினோபாம் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் இன்று (05.08) ஏற்றப்பட்டன.
வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு இராணுவத்தினரால் கடந்த மாதம் 5 ஆம் திகதி சினோபாம் கோவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டது.
அதற்கமைவாக, சினோபாம் கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் (05.08) இன்று ஏற்றப்பட்டது. அந்தவகையில் மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தில் இராணுவத்தினரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து அங்கு பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றியிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரு பால்மா வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றதாகவும் சில வர்த்தக நிலையங்களில் பால்மா பொருட்களை பதுக்கும் செயற்பாட்டில் சில வர்த்தகர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிரதான பால்மா வகைக்கும் உள்ளுர் உற்பத்தி பால்மா வகைக்கும் என இரு வகையான பால்மா வகைகளுக்கு வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடுகள் நிலவி வருவதுடன்,
ஒர் சில வர்த்தக நிலையங்களில் பால்மா இருப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் அதனை பதுக்கும் செயற்பாட்டில் சில வர்த்தகர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளமையுடன் தற்போது மக்கள் பசுப் பால் உற்பத்தியினை கொள்வனவு செய்வதினை ஆர்வம் காட்டியுள்ளமையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
பால்மா தட்டுப்பாடு மற்றும் பால்மா பதுக்கல் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரபையினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டபோதும் அவர்கள் பதிலளிக்கவில்லை.
பால்மா தட்டுப்பாடு மற்றும் பால்மா பதுக்கல் தொடர்பில் வடமாகாண பிராந்திய அலுவல்கள் பதில் உதவிப் பணிப்பாளர் திரு.எ.எல்.ஜவ்பார் சாதிக் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்டபோது..
வடமாகாணத்தில் பால்மா உற்பத்தி பதுக்கல் தொடர்பில் 3 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டதுடன் வடமாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள எமது அலுவலர்கள் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பால்மா பதுக்கல் தொடர்பில் எதேனும் முறைப்பாடுகள் இருந்தால் அருகேயுள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை காரியாலயத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
கடந்த 2ம் திகதி முதல் அரச நிறுவனங்களை வழமை போன்று செயற்படுமாறும் அனைத்து அரச சேவை ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கான சுற்று நிருபத்தை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியிலுள்ள தாதியர் தொழிற்சங்கத்தினர் இன்று (05.08.2021) காலை 6.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகள் முடங்கியதுடன் நோயாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா நேரியகுளம் பகுதியில் 39 பேர் உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.
அதில், நேரியகுளம் பகுதியில் 39 பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் இருவருக்கும், புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும், தரணிக்குளம் பகுதியில் இருவருக்கும் என 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கடந்த இரு நாட்களில் நேரியகுளம் பகுதியில் 54 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த 39 வயதான பிரபு என்பவர், அம்மாபேட்டை காவல் நிலையம் அருகே வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். பிபிஏ படித்த அக்காள் மகளான 24 வயதான சாலினியை, கடந்த 4 வருடத்திற்கு முன்பு பெற்றோர் பிரபுவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு அ.லறிக்கொண்டு வெளியே ஓடிவந்த சாலினி, கொ.ள்ளையர்கள் கணவனைத் தா.க்.கி விட்டதாக கூறி சத்தமிட்டபடியே 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சோதித்துப் பார்த்தபோது பிரபு இ.றந்திருப்பது தெரியவந்தால், போலீசில் தகவல் சொல்லும்படி கூறிவிட்டு ச.டலத்தை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இதன் பிறகு சாலினி உறவினர்கள் உதவியுடன் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நள்ளிரவில் புகுந்த கொ.ள்ளையர்கள் தனது தாலிச் ச.ங்கிலியை ப.றிக்க முயன்றதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
க.ழிவறையில் கணவர் ம.யங்கிய நிலையில் கிடந்ததால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்ததாகவும், அவர்கள் வந்து பிரபு இ.றந்து விட்டதாகக் கூறி சென்றதாகவும் சொல்லி க.தறி அ.ழுதார்.
இதையடுத்து, பிரபுவின் ச.டலத்தைக் கை.ப்பற்றிய காவல் துறையினர் உ.டற்கூறு ஆய்வுக்காக சேலம் அ.ரசு மோகன் குமாரமங்கலம் ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ஆனந்த் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக சாலினியின் செல்போனை கை.ப்பற்றி விசாரித்தனர்.
அதில் சாலினி தினமும் 20 பேர் முதல் 30 பேரிடம் செல்போனில் பேசி வந்தது தெரிய வந்தது. சாலினியின் பேஸ்புக்கை பார்த்தபோது, 50 ஆண் நண்பர்களிடம் பழகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எல்லா கேள்விக்கும் அ.ழுதபடியே பதில் அளித்த சாலினியை பி.டித்து போலீசார் விசாரித்தபோது, முகநூல் நண்பருக்கு கொ.லையில் தொடர்பிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.
திருமணத்துக்கு முன்பு ஸ்மார்ட் போனையே பார்க்காத அக்கா மகள் சாலினி மீது கொண்ட அன்பின் பரிசாக பிரபு வாங்கிக் கொடுத்த ஸ்மார்ட் போனே அவரது வாழ்க்கைக்கு எ.திரியாக மாறி உள்ளது.
முப்பொழுதும் முகநூலில் மூ.ழ்கி கிடந்த சாலினியுடன் 50 ஆண் நண்பர்கள் வரை சகவாசம் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. பலர் சாலினியுடன் ஹாய் சொல்லி அழகை வர்ணிப்பதோடு நிறுத்திக் கொள்ள, திருச்சி உறையூரை சேர்ந்த ஆண் நன்பரோ சாலினியின் வீடு தேடி வரும் அளவுக்கு நெ.ருங்கி பழகி உள்ளார்.
மாதத்திற்கு இருமுறை என பிரபு வெளியூர் செல்லும் நாட்களில், வீட்டிற்கு வந்து சாலினியுடன் தனிமையைக் கழித்து சென்றுள்ளான் காதலன். இந்த தகவல் அரசல் புரசலாக கணவன் பிரபுவின் காதுகளுக்கு எட்டியதும், தான் வாங்கி கொடுத்த ஸ்மார்ட்போனை ப.றித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
கணவனுக்கு தெரியாமல் அட்வான்ஸ் மாடல் செல்போன் ஒன்றை வாங்கி தனது ஆண் நண்பர்கள் உடனான தொடர்பை நீடித்து வந்ததால் அவர்களுக்குள் தினமும் ச.ண்டை ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் நிமிர்ந்து பேசிய சாலினியைக் க.ண்டிக்க இயலாமல், வீட்டுக்கு வருவதைக் குறைத்துக் கொண்டு இலைக் கடையிலேயே தங்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளார் பிரபு.
இந்த நிலையில் தனது காதலனாக மாறிய திருச்சி இளைஞனிடம் கணவன் தொ.ல்லை குறித்து தெரிவிக்க, தங்களுக்கு இ.டையூறாக இருந்த பிரபுவை கொ.லை செ.ய்.ய திட்டம் தீட்டி உள்ளனர்.
ஒரு வாரம் பிரபுவிடம் அன்பை பொழிந்து வீட்டில் படுக்க வைத்த சாலினி, தாங்கள் தீட்டிய சதித்திட்டத்தின் படி திங்கட்கிழமை நள்ளிரவு தனது காதலனை செல்போனில் பேசி வரவழைத்து கதவை திறந்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளாள்.
பின்னர் இருவரும் சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்த பிரபுவின் முகத்தில் த.லையணையை வை.த்து அ.ழுத்தி கொ.லை செ.ய்.த.து.ம், அதன்பின் கா.தலனை த.ப்பிக்க விட்ட சாலினி க.த.றி அ.ழுது கொ.ள்.ளை நா.டகம் ஆ.டியதும் வெளிச்சத்திற்கு வந்தது.
திருச்சியைச் சேர்ந்த முகநூல் காதலனை தே.டி த.னிப்படை விரைந்துள்ள நிலையில், சைபர் கி.ரைம் போ.லீஸ் உதவியுடன் சாலினியுடன் சகவாசம் வைத்திருந்த முக நூல் நண்பர்கள் 50 பேரையும் போலீசார் வி.சாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த கொ.லை.யி.ல் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் வி.சாரணையை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவில் 28 வயது இளைஞன் திருமணம் ஆன பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை பலரின் வாழ்க்கையை சீ.ரழித்து, நிர்வாண வீடியோ வைத்துக் கொண்டு, பணம் ப.றித்து வந்துள்ள சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. 28 வயது மதிக்கத்தக்க இவர் தன்னுடைய பொறியியல் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு, வ.ழிப்பறி, தி.ருட்டு உள்ளிட்ட கு.ற்ற செ.யல்களில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வந்துள்ளான்.
தி.ருட்டு வழக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு சி.றைக்கு சென்று திரும்பிய இவனை, பொலிசார் கடந்த 29-ஆம் திகதி மற்றொரு தி.ருட்டு வழக்கில் கை.து செ.ய்து வி.சாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இவர் தி.ருடுவது மட்டுமின்றி பெ.ண்களை மி.ரட்டி பணம் ப.றித்து வந்துள்ளான் என்ற அ.திர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
இது குறித்து, கடப்பா மாவட்ட டிஎஸ்பி சுனில் கூறுகையில், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ஷேர்சாட், இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் நட்பை ஏற்படுத்துக் கொண்ட, இவன் அதன் பின் அவர்களை தன்னுடைய காதல் வ.லையில் வீ.ழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளான்.
அவர்களிடம் நன்றாக பழக்கம் ஏற்பட்ட பின், அவர் நி.ர்வாண வீடியோ மற்றும் பு.கைப்படம் கேட்பதையும், அந்த பெண்களும் காதலன் தானே என்று அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால், ஒரு கட்டத்தில் அதை வைத்தே அவர் பெ.ண்களை மி.ரட்டி பணம் மற்றும் நகைகள் போன்றவைகளை பறித்து வந்துள்ளான். அப்படி அவர்கள் பணம் தரவில்லை என்றால், இதை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிடுவேன் என்று மி.ரட்டியுள்ளான்.
இதனால் பெண்களும் ப.யத்தில் அவன் கேட்பதை கொடுத்து வந்துள்ளனர். இதுவரை பா.திக்கப்பட்ட பெண்கள் யாரும் பு.கார் கொடுக்கவில்லை. கடப்பா, விஜயவாடா, ஐதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை என காதல் வ.லையில் வீ.ழ்த்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், பொலிசார் அவனின் செல்போனை ஆராய்ந்து பார்த்த போது, அதில் ஏராளமான பெண்கள் அ.ரை நி.ர்வாணமாக இருக்கும் பு.கைப்படங்கள், வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அ.திர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அவனிடம் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு பிரசித்த பெற்ற கோவில்களில் தரிசனம் செய்ய அரசு தடை விதித்திருக்கிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், எட்றபள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த் ஆகாஷ் என்ற இளைஞர் உட்பட நான்கு நபர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கிரேன் வாகனத்தில் தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு 40 அடி உயரத்தில் முருகன் கோவிலை நோக்கி அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்வலமாக வந்தார்கள்.
அப்போது மேட்டுப்பாளையம் பகுதியை அவர்கள் கடந்து சென்ற போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி ஆகாஷ் மட்டும் கீழே விழுந்தார். தான் கீழே விழப்போகிறோம் என்று உணர்ந்த அவர் உடனே, சுதாரித்துக்கொண்டு, தண்ணீரில் விழுவது போல தரையில் குதித்தார்.
இதனால், அவருக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனே, கிரேனிலிருந்து மற்ற 3 பேர் கீழே இறக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் நடந்து முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் வயிற்றுக்குள் கற்கள் நிரப்பிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் கும்பளங்கி பகுதியில் சகோதரரை காணவில்லை என்ற புகாருடன் பொலிசாரை ஒருவர் நாடியுள்ளார். இந்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட பொலிசார், சந்தேக நபரின் குடியிருப்பு அருகாமையில் இருந்து புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் மாயமான ஆன்றனி லாசர் என்பது தெரிய வந்தது. ஆன்றனியும் அவரது சகோதரரும் சேர்ந்து தம்மை துன்புறுத்தி கை உடைத்ததால் ஏற்பட்ட பகையே, கொலைக்கு காரணம் என கைதான பிஜு என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், கொலைக்கு பின்னர் ஆன்றனியின் வயிற்றுக்குள் கற்கள் நிரப்பிய பின்னர் புதைக்க வேண்டும் என்பது தமது யோசனை என கைதான பிஜுவின் மனைவி ராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மட்டுமின்றி, ஆன்ரனியின் வயிறு பிளந்த பின்னர் உள்ளுறுப்புகளை பைக்குள் நிரப்பி அதை குளத்துக்குள் வீசியதும் ராகி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சனைகள் பேசி முடிக்கலாம் என ஆன்றனி என்பவரை கடந்த மாதம் 9ம் திகதி தமது குடியிருப்புக்கு அழைத்துள்ளார் பிஜு.
தொடர்ந்து ஒன்றாக ம.து அ.ருந்திய நிலையில் பிஜுவும் அவரது இரு நண்பர்களும் சேர்ந்து ஆன்றனியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் பிஜுவின் குடியிருப்பு வெளியே, வயக்காட்டில் புதைத்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் என நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அத்துடன் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் கடந்த சில நாட்களாக அதிகரிப்பு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.