இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் நாட்டில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திய பின் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பாடசாலைகள் திறக்கப்படும்.
80 சதவீதமான ஆசிரியர்களுக்கு தற்போது முலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் அதிகரித்து வருவதினால் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் தெரிவித்தார்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் நாட்டின் பல பாகங்கள் உட்பட வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணமேயுள்ளது.
எமது வைத்தியசாலையில் சாதாரண நோயாளர்கள் மாத்திரம் பயன்படுத்திய ஒட்சிசன் தற்போது கொரோனா தொற்றாளர்களுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்த வண்ணமேயுள்ளது. எனினும் எமது வைத்தியசாலையில் தற்போது தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் காணப்படுகின்றன.
இருப்பினும் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது சுகாதார நடைமுறைகளை இடைவிடாது பின்பற்றுவதன் மூலம் தங்களையும் தமது மாவட்டத்தையும் பாதுகாப்பானதாக வைத்திருக்க இன்றியமையாததாகும் என தெரிவித்தார்.
வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாகவுள்ள வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகேயுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்றை இன்று (04.08.2021) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த வீதியில் அதிகாலையில் பயணித்த பொதுமகன் ஒருவர் குறித்த சடலத்தினை பார்வையிட்டதுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
35 – 45 வயதுக்குட்பட்ட நபரே இவ்வாறு சடலமாக காணப்பட்டதுடன் அவரின் மரணம் மற்றும் விபரங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
டெல்டா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதனை இலங்கையில் கட்டுப்படுத்தி பரவல் ஏற்படாது உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் இருவேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை கோரியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டு குறித்த இரு கண்டுபிடிப்பின் நோக்கம் குறித்து தனது கருத்துக்களை இவ்வாறு குறிப்பிட்டார்.
அதாவது எனது பெயர் அப்துல் அமீர் முஹம்மது அதீப். தந்தையின் பெயர் முஹம்மது ஹனீபா அப்துல் அமீர். தாயின் பெயர் -பதுர்த்தீன் முர்சிதா எனக்கு 4 சகோதரர்களும் சகோதரியும் இருக்கின்றனர்.
நான் அல் ஹிலால் பாடசாலையின் பழைய மாணவன்.அத்துடன் தற்போது கல்முனை சாஹிரா பாடசாலையிலும் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறேன். நான் கோவிட் வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக மருந்து ஒன்றினை கண்டு பிடித்துள்ளேன்.
அது மாத்திரமன்றி நாட்டில் கோவிட் வீரியமடைந்து டெல்டா பரவி வருவதன் காரணத்தால் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கும் மற்றும் கோவிட் 19 நோயாளிகளும் பாவிப்பதற்காகவும் அவர்களை அந்த கொடிய நோயில் இருந்து தப்புவதற்காகவும் மாஸ்க் ஒன்றை கண்டுபிடுத்துள்ளேன்.
இதை ஹெல்மெட்(தலைக்கவசம் ) போன்று அணிய வேண்டும். இதை அணிந்தவுடன் மாஸ்க்(முகக்கவசம்) அணிய தேவை இல்லை. இதை அணியும் வைத்தியார்க ளோ அல்லது நோயாளிகளோ கட்டாயம் கோவிட் பாதுகாப்பு ஆடை அணிய வேண்டும்.
இரண்டு பொருட்களையும் கண்டுபிடிப்பதற்கு எனது பெற்றோரும் எனது சகோதர் அஃதீர் மற்றும் எனது தாய் மாமன்கள் ஆசிக், சபீர் மாமி டாக்டர் எம்.வை. ஆர். பானு, ஆசிரியர் மசுனா உள்ளிட்ட குடும்பத்தினர் சாஹிரா பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபீர் ஆசிரியர் பாடசாலையின் மூத்த கண்டு பிடிப்பாளர் சவ்பாத் அவர்களும் எனக்கு மிகவும் உதவி செய்தனர்.
அவர்கள் அனைவருக்கும் இவ்விடத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். மேலும் இவ்விரு கண்டுபிடிப்புகளை அங்கீகரித்து எமது நாட்டில் எதிர்காலத்தில் டெல்டா மற்றும் திரிவுபடுத்திய கோவிட் வைரஸ் நோயில் இருந்து அனைவரையும் காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கணவர் கு.டி.த்து வந்து ச.ண்டையிட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் கணவரை அ.டி.த்து கொ.லை செ.ய்துள்ள ச.ம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் மணிகண்டன் (35). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னாரம்பட்டி பகுதியை சேர்ந்த அ.ரசு பள்ளி ஆசிரியரான இளமதியை (30) பெற்றோர் எ.திர்ப்பையும் மீறி கா.த.லித்து தி.ருமணம் செ.ய்.து கொண்டனர்.
இவர்களுக்கு தக்சிந்த்(10) என்ற மகனும், அக்சிதா (6) என்ற மகளும் உள்ளனர். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் கொரோனா காரணமாக வேலைக்கு செல்லாமல் கு.டி.ப.ழக்கத்திற்கு அ.டி.மையானர்.
இதனால், கணவன், ம.னை.விக்கு இடையே அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு கு.டி.போ.தையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மீண்டும் ம.னை.வி இளமதியிடம் த.க.ரா.றில் ஈடுபட்டுள்ளதுடன், அ.டி.த்து து.ன்.பு.றுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
ச.ம்.ப.வத்தன்று அ.டி.த்து கொ.டு.மை படுத்திய கணவரை வ.லி தாங்க முடியாமல் து.டி.த்த இளமதி, அருகில் கிடந்த உ.ருட்டு க.ட்டையால் ச.ரமாரியாக கணவனை தா.க்.கியுள்ளார்.
இதில் கணவர் ர.த்.த வெள்ளத்தில் ச.ம்.பவ இடத்திலேயே உ.யி.ரிழந்த நிலையில், தகவறிந்து வந்த பொ.லிசார் இளமதியை கை.து செ.ய்.ததோடு, இறந்த மணிகண்டனின் உ.டலை பிரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் தான் காதலித்த அதே பெண்ணை காதலித்ததால், ஆ.த்திரத்தில் ந.ண்பனை வெ.ட்டிக் கொ.ன்.ற 17 வயது சி.றுவனை பொலிஸார் கை.து செ.ய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் பொய்யாமொழி மகன் மதன்குமார் (21). பெயின்டர் வேலை பார்க்கும் இவர், கடந்த 30-ஆம் திகதி மந்தித்தோப்பு காட்டு பகுதியில் த.லை து.ண்டித்த நி.லையில் கொ.லை செ.ய்யப்பட்டு கி.டந்தார்.
கொ.லையாளிகளை பி.டிக்க எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி உதயசூரியன் மேற்பார்வையில் மேற்கு இன்ஸ்பெக்டர் சபாபதி, நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, எஸ்ஐக்கள் குருசந்திரவடிவேல், துரைச்சாமி மற்றும் பொலிஸார் அடங்கிய த.னிப்படையினர் கொ.லையாளியை தே.டிவந்தனர்.
இந்நிலையில் இந்த கொ.லை தொ.டர்பாக த.னிப்படை பொலிஸார் வி.சாரணை ந.டத்தி, கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டடியை சேர்ந்த 17 வயது சி.றுவனை கை.து செ.ய்தனர்.
மேலும் காதல் போட்டியில் அவர் மதன்குமாரை கொ.லை செ.ய்தது தெரியவந்தது. அச் சி.றுவனிடம் இருந்து அ.ரிவாள் மற்றும் பைக் ஆகியவற்றை ப.றிமுதல் செ.ய்தனர். அதனைத் தொடர்ந்து, பொலிஸிடம் அச் சி.றுவன் தான் கொ.லை செ.ய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நானும், மதன்குமாரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே பெயின்டர் வேலைக்கு செல்வோம். நான் ஒரு இளம் பெண்ணை காதலித்தேன். அதே பெண்ணை அவனும் காதலித்து வந்துள்ளான்.
இந்த விவரம் எனக்கு தெரியாது. சில தினங்களுக்கு முன் நான் அவனது செல்போனை வாங்கி பார்த்தபோது அந்த இளம் பெண்ணுடன் அவன் சாட்டிங் செய்திருப்பது தெரியவந்தது.
இதனால் நான், மதன்குமாரை க.ண்டித்தேன். ஆனாலும் அவன் கேட்கவில்லை. நான் காதலிக்கும் பெண்ணை, மதன் குமாரும் காதலித்ததால் அவனை அவனை தீ.ர்த்துக் கட்ட முடிவு செய்தேன்.
அதன்படி சம்பவத்தன்று மந்தித் தோப்பு காட்டுப்பகுதிக்கு முன் கூட்டியே சென்று அங்குள்ள முட்செடியில் அ.ரிவாளை ம.றைத்து வைத்தேன். அதன் பிறகு பைக்கில் கோவில்பட்டி வந்து ம.து கு.டிக்க செல்வோம் என்று கூறி மதன் குமாரை பைக்கில் மந்ததித்தோப்பு காட்டு பகுதிக்கு அழைத்து வந்தேன். அங்கு வைத்து இருவரும் ம.து அ.ருந்தினோம்.
அதன்பிறகு நான், சிறுநீர் கழித்து வருவதாக மதன்குமாரிடம் கூறிச் சென்றேன். பின்னர் நான், ஏற்கனவே ம.றைத்து வை.த்திருந்த அ.ரிவாளை எடுத்து வந்தேன். அப்போது அவன் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்னால் வந்த நான், மதன்குமாரின் க.ழுத்தில் ஓ.ங்கி அ.ரிவாளால் வெ.ட்டினேன். இதில் அவன், த.லை து.ண்டாகி சம்பவ இடத்திலேயே இ.றந்தான். அதன் பிறகு அ.ரிவாளை அங்குள்ள க.ண்மாயில் வீ.சி வி.ட்டு த.ப்பிச் செ.ன்று வி.ட்டேன்.
நான், கதிரேசன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள புலிக்குகை பகுதியில் ப.துங்கியிருந்த போது பொலிஸார் என்னை கை.து செ.ய்து விட்டனர். இவ்வாறு அவர், வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
சென்னை பனையூரைச் சேர்ந்தவர் பிரமோத்(25). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்னேகா(19). இவர்களுக்குத் திருமணமாகி 8 மாதங்களாகின்றன.
திருமணத்தின் போது பிரமோத்துக்கு 15 சவரன் நகைகள் மற்றும் ரூ 2 லட்சம் வரதட்சணையாக தரப்பட்டது. இந்த நிலையில் ம.துவுக்கு அடிமையான பிரமோத், மனைவியை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கணவனின் சுயரூபத்தை திருமணமான சில மாதத்தில் அறிந்து அதிர்ச்சியடைந்து அவரிடம் கோபித்துக் கொண்டு, சேலையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஸ்னேகா வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரமோத் தொலைபேசி மூலம் ஸ்னேகாவைத் தொடர்பு கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டராம். மன உளைச்சலில் இருந்த ஸ்னேகா, தனது அறைக்குள் சென்று பூட்டி கொண்டார்.
காலை வெகுநேரம் ஆகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பொலிசார் உதவியுடன் கதவை உடைத்து போது ஸ்னேகா தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார்.
இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் பொலிசார் அவரது சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வரதட்சணைக் கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்னேகாவின் தந்தை ரவி பொலிசில் புகார் செய்தார்.
இதையடுத்து, பிரமோத்திடம் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி இம்மாதம் இறுதியில் வழங்கப்பட்டு பின்னர் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களில் 83 சதவீதமானோருக்கு கோவிட் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட தடுப்பூசி இம்மாதம் இறுதி வாரத்தில் வழங்கப்படும்.இதன் பின்னர் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க எதிர்பார்த்துள்ளோம்.
ஆகவே அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை வெளிக்கள சேவையாளர்கள் பாடசாலைகளை திறப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்கும், பாடசாலை வெளிக்கள சேவையாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள சேவையாளர்களில் 83 சதவீதமானவர்களுக்கு கோவிட் முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.இம்மாதத்தின் இறுதி வாரத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அரச சேவையாளர்கள் அனைவரும் இன்று முதல் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் மாதம் முதல் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுத்தப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக கொவிட் தடுப்பூசி அட்டையை தம்முடன் வைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் கட்டாயமாக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொவிட் தடுப்பூசிகளை நிராகரிக்கும் மக்கள் எதிர்வரும் நாட்களில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நிகழ்வுகளுக்கு செல்லும் போது கொவிட் தடுப்பூசி கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கொவிட் தடுப்பூசிகளை நிராகரிக்கும் மக்கள் தொடர்பில் உரிய சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதன்போது இதன் முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்தி தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கரையோரத்தில் வாழ்கின்ற மக்களும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கு அண்மித்த அந்தமான் தீவுப் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்துக்கு முன்பாக 6.5 றிக்ரர் அளவில் 95 கிலோமீற்றர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்மித்தும் வாழ்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பில் வெளியிடப்படும் அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகிறோம். மேலும் இது தொடர்பிலான புதிய தகவல்கள் கிடைத்தவுடன் ஊடகங்களின் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் 10 சிறைச்சாலை கைதிகள் உட்பட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (02.08) இரவு வெளியாகின.
அதில் நேரியகுளம் பகுதியில் பதினைந்து பேருக்கும், சலனிகம பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், விநாயகபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் மூவருக்கும்,
புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சாம்பல் தோட்டம் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், புதிய கற்பகபுரம் பகுதியில் ஒருவருக்கும், மருதமடு பகுதியில் ஒருவருக்கும்,
மாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும், வைத்தியசாலை விடுதியில் ஒருவருக்கும், உடையார்கட்டு தெற்கு பகுதியில் இருவருக்கும், பட்டக்காடு பகுதியில் மூன்று பேருக்கும்,
சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஒமேக்கா ஆடைத் தொழிற்சாலையில் இருவருக்கும், மாகா நிறுவனத்தைச் சேர்ந்த இருவருக்கும் என 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 10 பேர் வவுனியா சிறைச்சாலை கைதிகளாக உள்ளனர். அத்துடன் தமக்கான நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தாமாக முன்வந்து பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டில் நேற்று (01) கோவிட் தொற்றால் 63 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4, 571 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 313,029 ஆக அதிகரித்துள்ளதுடன்,தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 280,868 ஆக அதிகரித்துள்ளது.
பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் வாங்கிய செல்போன் திடீரென தொலைந்து போனதால் இளைஞர் ஒருவர் த.ற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெற்குவெளி வீதி முத்துகருப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(31). இவர் சமீபத்தில் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி விலையுயர்ந்த புது செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் பார்த்திபன் வேலை தேடி திருவனந்தபுரம் சென்றபோது அவரது செல்போன் காணாமல் போயுள்ளது. இதனால் மனவே.தனை அடைந்த பார்த்திபன், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
செல்போன் காணாமல் போன விரக்தியில் இருந்த அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் வி.ஷம் குடித்து த.ற்கொலை செ.ய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்ததாக கருத்தப்பட்ட நபர் 45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளது, குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜ்ஜத் டங்கல். இவர் தன்னுடைய 25 வயதில், கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நடிகை ராணி சந்திரா குழுவுடன் கடந்த 1976-ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சென்றுள்ளார்.
அதன் பின் அங்கிருந்து விமானம் மூலம் திரும்பிய போது, மும்பையில் ஏற்பட்ட விமான விபத்தில் நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் உயிரிழந்தனர். இதில் சஜ்ஜத் டங்கலும் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் எண்ணியுள்ளனர்.
ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அந்த விமானத்தில் பயணிக்காமல் மும்பையிலே இருந்துள்ளார். இந்த விபத்தை கேள்விப்பட்ட அவர், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதால், மும்பையிலே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
சஜ்ஜத்தின் உண்மை நிலையை சமீபத்தில் அறிந்த ஒரு தொண்டு நிறுவனம் அவரை குடும்பத்தினருடன் நேற்று முன் தினம் சேர்த்து வைத்தது.
அப்போது தன் மகன் இறந்துவிட்டதாக எண்ணியிருந்த சஜ்ஜத் டங்கலின் தாய் பாத்திமா பீவி(91), மகன் உயிரோடு வருவதைக் கண்டு, இன்ப அதிர்ச்சியில் கண்கலங்கி அவரை கட்டியணைத்தார்.
இதே போன்று குடும்பத்தினரும் அவரை கண்கலங்கிய நிலையில் வரவேற்றனர், அவரது 91 வயது தாய் பாத்திமா பீவி இறந்ததாக கருதப்பட்ட தன் மகன் 45 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்தபோது கண்ணீர் மல்க வரவேற்றார்.