பிறந்தநாளுக்கு காதலி வாழ்த்து கூறாததால் காதலன் த.ற்கொலை செ.ய்துகொண்ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பை சேர்ந்தவர் யாதவ ராஜ்.
இவரது மகன் வாமன் ராஜ் (21). பி.காம் படித்துள்ள இவரைக் கா.ணாமல் பெற்றோர்கள் பல இடங்களில் தே.டியுள்ளனர். அப்போது, அப்பகுதி சுடுகாடு ஒன்றின் அருகே,
வி.ஷம் அ.ருந்திவிட்டு ம.யங்கி கி.டந்ததை அவதானித்த உறவினர்கள் அவரை மீ.ட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்திய நிலையில், இ.றந்துபோன வாமன்ராஜ் சமூக வலைதளம் மூலம் இளம் பெண் ஒருவருடன் நட்பாக பழகி பின்பு காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வாமன்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், அவருக்கு அந்த பெண் வாழ்த்து கூறவில்லையாம்.
இதனால் மனமுடைந்த வாமன்ராஜ் த.ற்கொலை செ.ய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தந்தையும் சடலமாக மீட்கப்படட சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
கரிப்பூர் விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பீதாம்பரன் என்பவரும் அவரது 31 வயது மகள் ஷாரிகா என்பவருமே தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
மதியம் உணவருந்திய பின்னர் பீதாம்பரத்தின் மனைவி பிரபாவதி என்பவரே மகள் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.
குறித்த தகவலை கணவரிடம் கூற விரைந்த பிரபாவதி படுக்கை அறையில் கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு உறைந்து போயுள்ளார்.
அறைக் கதவு மூடப்படட நிலையில் இருக்க அக்கம் பக்கத்தினரே கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஷாரிகா சில ஆண்டுகளாக உளவியல் சிகிசையில் இருந்து வருவது தெரிய வந்துள்ளது.
இதனிடையே ஷாரிகாவின் தற்கொலை குறிப்பு பொலிஸாரால் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியின் திரியாய் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (02.08.2021) காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணிக்கு செல்வதற்கான பேருந்தை தவறவிட்டதால் அந்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற நிலையிலேயே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மஹதிவுல்வெவ – மயிலகுடாவ பகுதியை சேர்ந்த கயானி மதுசானி (21 வயது) என்ற யுவதியே உயிரிழந்துள்ளதுடன், அவரது நண்பி படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த யுவதியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நயினாமடு பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்றைய தினம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திம்புளை பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியிலிருந்து நேற்று மாலை மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை திம்பளை பத்தனை பொலிஸார் இன்று காலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான வீ.மலர்விழி (வயது 53) என தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல்போன குறித்த பெண் தொடர்பில் திம்புளை பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் குடை, பாதணிகள் மற்றும் கைப்பை என்பவற்றை மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை நீர்வீழ்ச்சியில் சுமார் 200 அடி பள்ளத்தில் நீரில் மிதந்த நிலையில் இப்பெண்ணின் சடலம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே நீர்வீழ்ச்சியினை பார்வையிட கடந்த மாதம் 18ஆம் திகதி சென்ற 4 சிறுமிகளில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லென்தோமஸ் தோட்ட சிறுமியான மணி பவித்ரா கால் இடறி விழுந்து காணாமல் போயிருந்தார்.
அவரை தேடும் பணியில் படையினர் ஈடுப்பட்ட போதிலும் இதுவரை சிறுமி மீட்கப்படாமல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
படல்கும்பர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரயியன் அருவியில் தவறி வீழ்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 வயதுடைய சகோதரன், 23 வயதுடைய சகோதரி ஆகிய இருவரும் பரிதாபமான உயிரிழந்துள்ளனர்.
ஒக்காம்பிடிய பகுதியிலிருந்து படல்கும்பர பகுதிக்கு வருகை தந்து குறித்த அருவியில் நீராடும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர் வீழ்ச்சியினை பார்வையிட்டுக்கொண்டிருந்த வேளை சகோதரி கால் இடறி நீர் வீழ்ச்சியினுள் விழுந்துள்ளார்.
உடனே அவரை காப்பாற்றும் நோக்குடன் யுவதியின் அண்ணன் நீரில் பாய்ந்துள்ள நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக படல்கும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞனுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் , உயிரிழந்த யுவதி எதிர்வரும் 15ஆம் திகதி தாதியர் பயிற்சிக்காக பதுளை தாதியர் பயிற்சி கல்லூரியில் இணையவிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
படல்கும்பர பொலிஸ் பிரிவிற்குட்பட்டபரயியன் அருவியில் தவறி வீழ்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 வயதுடைய சகோதரன், 23 வயதுடைய சகோதரி ஆகிய இருவரும் பரிதாபமான உயிரிழந்துள்ளனர். ஒக்காம்பிடிய பகுதியிலிருந்து படல்கும்பர பகுதிக்கு வருகை தந்து குறித்த அருவியில் நீராடும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர் வீழ்ச்சியினை பார்வையிட்டுக்கொண்டிருந்த வேளை சகோதரி கால் இடறி நீர் வீழ்ச்சியினுள் விழுந்துள்ளார். உடனே அவரை காப்பாற்றும் நோக்குடன் யுவதியின் அண்ணன் நீரில் பாய்ந்துள்ள நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக படல்கும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இளைஞனுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் , உயிரிழந்த யுவதி எதிர்வரும் 15ஆம் திகதி தாதியர் பயிற்சிக்காக பதுளை தாதியர் பயிற்சி கல்லூரியில் இணையவிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று (01.8.2021 மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார் எனவும் வவுனியா பாவற்குளம் பகுதியை சேர்ந்த 70வயதான குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் குளியாபிட்டி − போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து ஆலயமொன்றின் குருக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காதல் தொடர்பை முறிப்பதற்காக, போஹிங்கமுவ பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது 15 வயதான மகளுடன் கடந்த 26ம் திகதி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, ஆலயத்தின் குருக்களினால் சிறுமி, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரான குருக்கள், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், கடந்த சில தினங்களாக ஆலயமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை பற்றி சமுக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றுள்ள நிமாலி நியனாராச்சி என்ற வீராங்கனை தொடர்பிலேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறித்த வீராங்கனை தனது போட்டி இலக்கத்தை சட்டைப் பின் ஒன்றின் மூலம் கட்டி தொங்கவிட்டு காட்சிப்படுத்தியுள்ளமையே இவ்வாறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. அதேபோல ஒலிம்பிக் ஏற்பாட்டு குழு பற்றியும் விமர்சனம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் 6 இடங்களில் 7200 பேருக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், காமினி மகா வித்தியாலயம், நொச்சிமோட்டை கனிஷ்ர மகா வித்தியாலயம், சிதம்பரபுரம் நகராஜா வித்தியாலயம், ஒமந்தை பகுதி என வவுனியா மாவட்டத்தில் 6 இடங்களில் இன்று (02.08.2021) தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான பணியில் வைத்தியர்களான பிரசன்னா, அரங்கன், பிரதீபன், துஸ்யந்தன், அருள்மூழி, யூட் பீரிஸ் ஆகியவர்கள் கடமையில் ஈடுபடவுள்ளமையுடன் 30 வயது தொடக்கம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 15 சேவை நிலையங்கள் ஊடாக 41,000க்கு அதிகமான மக்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்திற்கு 75,000 தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு கடந்த புதன்கிழமை (28.07.2021) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டது.
28,29,30,31 ஆகிய நான்கு நாட்களில் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 15 தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு 41,000 க்கு அதிகமான மக்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டுள்ளதுடன் என்னும் 34,000 மக்களுக்குறிய தடுப்பூசிகள் காணப்படுவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த தடுப்பூசிகள் நிறைவடையும் தருவாயில் மேலும் தடுப்பூசிகளை பெற்று மக்களுக்கு வழங்குவதற்குறிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா வீரபுரத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை சாரதி உட்பட இருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்து விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
வவுனியா வீரபுரம் உள்ளக வீதியில் நேற்று (01.08.2021) மாலை நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி – இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை வான் என மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானமை தொடர்பில்,
செய்தி சேகரிக்க சென்ற இளம் ஊடகவியலாளரான ராஜேந்திரன் சஜீவன் மீது விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி மற்றும் வானில் பயணித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன் ஊடகவியலாளரின் புகைப்பட கமராவையும் பறித்து வீசியதுடன் அவரின் மோட்டார் சைக்கிளையும் தள்ளி வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளாகிய ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.
ஊடகவியலாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய நேற்றிரவு (01.08.2021) ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை வான் சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்து,
விசாரணைக்காக செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன் அவர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டு நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக விடுவிக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் இன்று(02.08.2021) காலை 8.30 மணிக்கு செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கணவனின் தன்னை ஏமாற்றி இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டது குறித்து, முதல் மனைவி புகார் அளித்துள்ளார். கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வாழைக்கொம்பு , பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம்.
இவருக்கு ஜோதி முருகேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஜோதிமுருகேஸ்வரி கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், தனக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் வெங்கமேடு VVG நகரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாலசுப்பரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து நான் கர்ப்பமானதால், பிரசவத்திற்காக நான் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டேன். அதன் படி கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது,
இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் தாய் வீட்டில் இருந்துவிட்டு நான் திரும்பிய போது, கணவர் பாலசுப்பரமணி, நித்யா என்ற பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் கேட்டபோது அவன் அப்படித்தான இருப்பான் என்று சொல்லி துன்புறுத்தினர். இதனால் மிகுந்த வேதனையுடன் நான் என் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
நித்யாவை எனக்கு தெரியாமலும் , என்னிடம் இருந்து விவாகரத்து பெறாமலும் எனது கணவர் பாலசுப்பரமணி அவரின் பெற்றோர் மற்றும் சகோதரிகளின் உதவியுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்பு நித்யாவுக்கு தெரியாமல் சுதா என்ற பெண்ணை கடந்த 2020-ஆம் ஆண்டு மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 29-ஆம் திகதி பால்சுப்ரமணியை கைது செய்த பொலிசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில், பாலசுபர்மணி பெண்களை கவர்வதில் கில்லாடியாக இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
முதல் மனைவியான ஜோதிமுருகேஸ்வரியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை வைத்து ஜாலியாக இருந்த அவர், அதன் பின் அவரிடம் இதற்கு மேல் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்பு, தான் பணி புரியும் தனியார் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது,
அதே வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக இருந்த நித்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, அந்தப் பெண் கொடுத்த நகை மற்றும் வரதட்சணையை வைத்து சொகுசு வாழ்க்கை வந்துள்ளார்.
அவரிடமும் எல்லாம் காலியாக, மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருந்து வந்துள்ளார். இதற்கு அவருடைய பெற்றோருடம் உடந்தையாக இருந்து வந்துள்ளனர். இதனால் பொலிசார் தற்போது பாலசுப்ரமணியனின் பெற்றோரை தேடி வருகின்றனர்.
இந்தியாவில் 30 வயது இளைஞரை கடத்திச் சென்று 50 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை ஊழியராக பணியாற்றி வருபவர் ரிங்கேஷ் கேஷர்வானி. 30 வயது மதிக்கத்தக்க இவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தனது அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக 50 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நீண்ட நாட்களாக நிர்பந்தித்து வந்தார்.
ஆனால், நான் அதற்கு ஒத்து போகவில்லை. இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் 15-ஆம் திகதி குறித்த பெண் தனது நண்பர்களுடன் என்னை தாக்க வந்தார். அதுமட்டுமின்றி, சில பொலிசாருடன் சேர்ந்து கூட்டுச் சேர்ந்து என்னை பொய் வழக்கில் சிக்க வைக்கவும் முயன்றார்.
இதையடுத்து, ஜாபல்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்றே புகார் தெரிவித்திருந்தேன் எனினும், அது பயனளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஜூன் 16ம் தேதியன்று, அந்த பெண் அவரது நண்பர்களின் உதவியுடன் கோஹல்பூர் காவல் நிலையத்திற்கு முன்னால் கத்தி முனையில் என்னை கடத்திச் சென்று அவரது உறவினர் வீட்டில் அடைத்து வைத்தார்.
மறுநாள் 17-ஆம் திகதி, என்னை கத்தி முனையில், கோவில் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து, மயக்க நிலையிலே என்னை வலுக்கட்டாயமாக தாலி கட்ட வைத்தனர்.
அதன் பின் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி வந்த நான் அன்றைய தினமே, ஜபல்பூர் ரேஞ்ச் ஐஜி, எஸ்பி மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன்,
ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை இதனை நிரூபிக்கும் பொருட்டு கோஹல்பூர் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளையும் அவர் கோரியுள்ளார். தொடர்ந்து, அவரது புகார் மீது பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், நீதிமன்றத்தை நாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா வீரபுரம் உள்ளக வீதியில் இன்று (01.08.2021) மாலை நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி – இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை வான் என மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அவ்விடத்தில் மக்கள் ஒன்று கூடி பதற்றமான நிலை காணப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இளம் ஊடகவியலாளரான ராஜேந்திரன் சஜீவன் மீது விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி மற்றும் வானில் பயணித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன் ஊடகவியலாளரின் புகைப்பட கமராவையும் பறித்து வீசியதுடன் அவரின் மோட்டார் சைக்கிளையும் தள்ளி வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளாகிய ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் விபத்து இடம்பெற்ற இடத்தில் பொதுமக்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொண்டுள்ளனர்.
NP – ABO 6809 என்ற முச்சக்கரவண்டியில் பயணித்தவரும் இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை வானின் பயணித்தவருமே இவ்வாறு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.