வவுனியாவில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (29.07) காலை வெளியாகின.

அதில் மணியர்குளம் பகுதியில் ஒருவருக்கும், மாமயிலங்குளம் பகுதியில் ஒருவருக்கும், காத்தார் சின்னக்குளம் பகுதியில் இருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் இருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவருக்கும்,

நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், கற்பகபுரம் பகுதியில் ஐந்து பேருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், ஓமந்தைப் பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் ஒருவருக்கும்,

தேக்கவத்தைப் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் ஒருவருக்கும், ஈரட்டைப் பகுதியில் ஒருவருக்கும் என 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்புடுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை!!

இரத்தினக்கல்..

இலங்கையில் மீட்கப்பட்ட உலகின் மிக பெரிய இரத்தினக்கல்லின் பெறுமதி தொடர்பில் புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் கிடைத்த,

குறித்த இரத்தினக்கலின் பெறுமதி தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் அளவிற்கு பெறுமதி வாய்ந்தது கிடையாது என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயத்தை இரத்தினக்கல் துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த இரத்தினக்கல்லின் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் என நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இரத்தினக்கல் அதிகார சபையின் தலைவர் திலக்க வீரசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் அளவிற்கு குறித்த இரத்தினக்கல் பெறுமதி அற்றது என அந்த துறை சார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

-தமிழ்வின்-

யாழில் புறா சண்டை எதிரொலி : இளைஞர்களுக்கு மிளகாய் தூள் அடித்த பெண்கள் : இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

யாழில்..

நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் புறா வளர்க்கும் இளைஞர்களிற்கிடையிலான உரசல், பெரியவர்களின் முட்டாள்த்தனமான நடவடிக்கையால் விபரீதத்தில் முடிந்துள்ளது. பெண்கள் என்ற பெயரில் பேயாட்டம் ஆடியவர்களால் ஒரு உயிர் பறிபோயுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் 20 வயதான புவனேந்திரராசா சுகந்தன் என்ற இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

பேயாட்டம் ஆடி பெண்கள், அந்த இளைஞனை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூள் தூவி, பச்சை மிளகாய் தடவி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தமையினாலேயே இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்களால் குற்றம்சாட்டப்படுகிறது.

பேயாட்டம் ஆடிய பெண்கள் மீது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. நாவாற்துறை, கண்ணாபுரம் பகுதியில் அண்மித்த வீடுகளில் உள்ள இரண்டு இளைஞர்கள் புறா வளர்க்கிறார்கள். ஒருவரின் புறாவை, மற்றவரின் புறா தனது பகுதியில் இறக்கி விட்டது.

புறா வளர்ப்பாளர்களிற்குள் நிலவும் நடைமுறைப்படி,அடித்து இறக்கப்படும் புறா, அடித்து இறக்கும் புறாவின் சொந்தக்காரருக்கே உரியது. எனினும், தான் ஆசையாக வளர்க்கும் புறாவை ஒப்படைக்கும்படி, புறா உரிமையாளர் கோரினர். புறாவை இறக்கியவர் மறுத்தார். இதனால் தர்க்கம் ஏற்பட்டது.

சர்ச்சையின் உச்சத்தில், புறாவை ஒப்படைக்கக் கோரியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலிற்கு உள்ளானவர் தனது நண்பர்களை அழைத்து விடயத்தை தெரியப்படுத்தினார். இதையடுத்து 4 பேர் தாக்கிய புறா உரிமையாளரை தாக்கினார்கள். இந்த நான்கு பேரில் சுந்தனும் ஒருவர்.

மிளகாய்த்தூள் தாக்குதல் : இதையடுத்து தாக்கப்பட்டவர்கள் தரப்பினர், தாக்கியவர்கள் தரப்பினரிடம், “சின்ன வயதிலேயே இதென்ன குழு மோதல். ஊருக்குள் ஒன்றாக இருந்தபடி குழு மோதலில் ஈடுபட்டு பொலிஸ் நிலையம் செல்வது நல்லதல்ல.

தாக்குதல் நடத்திய 4 பேரையும் சென்று, தாக்குதலிற்குள்ளானவரிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். அங்கு செல்லும் போது அவர்களை யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்“ என கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருமே 20, 21 வயதிற்குட்பட்டவர்கள்.

“ஊருக்குள் பிரச்சனை வரக்கூடாது என்ற நோக்கத்துடன், அவர்களின் வார்த்தையை நம்பி எமது பிள்ளைகளை மன்னிப்பு கேட்க அழைத்துச் சென்றோம்“ என, அந்த 4 பேரின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அந்த 4 பேரையும் அழைத்தது, மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிக்க அல்ல, மேலும் பிரச்சனையை வளர்க்கவே என்பது அங்கு சென்ற பின்னர்தான் தெரிந்தது.

4 இளைஞர்களும் வந்ததும், அந்த பகுதியிலுள்ளவர்கள் அவர்களை வளைத்துப் பிடித்து வீட்டுக்குள் இழுத்து சென்றதுடன், அவர்களுடன் வந்தவர்களை வீட்டிற்கு வெளியே விட்டு, வாயில் கதவை மூடிவிட்டனர்.

4 இளைஞர்களையும் உள்ளே இழுத்து சென்று, கடுமையாக தாக்கினார்கள். குறிப்பாக பெண்களே இதில் முன்னிலை வகித்தனர். இளைஞர்களை தாக்கி, அவர்களின் முகங்களை வீடியோ படம் பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூள் வீசி, பச்சை மிளகாய் பூசி காட்டேறியாட்டம் ஆடினர்.

பிறந்தநாளில் நடந்த துயரம் : அத்துடன், அந்த வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றினர். அது ஊருக்குள் வைரல் ஆனது. இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது 15 நாட்களின் முன்னர்.

இந்த சர்ச்சையையடுத்து, சுகந்தனின் தந்தை, கிளிநொச்சியிலுள்ள தனது சகோதரனின் வீட்டில் அவரை சில நாட்கள் தங்க வைத்துள்ளார். இந்த நாட்களில், வீடியோ வெளியானது குறித்து நண்பர்களிடம் மனம் வெதும்பி சுகந்தன் பேசி வந்ததாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 25ஆம் திகதி சுகந்தனின் 20வது பிறந்தநாள். மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தாய், அவரை வீட்டுக்கு வந்துவிட்டு செல்லும்படி கேட்டிருக்கிறார். அன்று சுகந்தன் வீடு திரும்பினார்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தன. இதில், கலந்து கொண்ட சிலர் பகிடியாக சுகந்தனை கலாய்த்துள்ளனர். “என்னடா, பொம்பிளையளிட்ட அடி வாங்கியிருக்கிறியள் போல. வீடியோ எல்லாம் தாறுமாறாக இருக்கிறது.

பொம்பிளையளிட்ட அடி வாங்கிப் போட்டு கேக் வெட்டிறியளோ“ என பகிடிவிட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த சுகந்தனிற்கு இது மேலும் விரக்தியை ஏற்படுத்தியதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிறு இரவு அனைவரும் உறக்கத்திற்கு சென்றனர். திங்கள் கிழமை தாயார் காலையில் கண்வழித்த போது, வீட்டு ஹோலில் படுத்திருந்த சுகந்தனை காணவில்லை.

அவரை தேடிய போது, அறை உட்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. இதையடுத்து அறையை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த போது சுமந்தன் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

வைத்தியசாலையில் சடலத்திற்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. நேற்று மாலை சுகந்தன் தாக்கப்பட்டு, வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இளைஞர்களிற்கிடையிலான மோதல் குழு மோதலாக மாறுவதால் ஏற்படும் விபரீதத்தை இளைய சந்ததிக்கு ஒரு பாடமாக இந்த சம்பவம் சுட்டிக்காட்டுவதுடன், பெண்களின் அத்துமீறிய நடவடிக்கையும் விபரீதத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.

பரபரப்பான போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை அணி அபார வெற்றி..

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் ஷிக்கர் தவான் 40 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 29 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

133 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் குல்திப் யாதவ் 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவு செய்யப்பட்டதுடன், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!!

சதீஷ்குமார்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடியில் வசிப்பவர் சதீஷ்குமார் ( வயது 26). பொள்ளாச்சி சாலையில் உள்ள காபி பார் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த முனீஸ்வரி (வயது 19) என்பவருக்கும் கடந்த 2 மாதம் முன்பு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் சதீஷின் பெற்றோர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.

நேற்று பிற்பகல் வீட்டில் தனி அறையில் இருந்துள்ளார் சதீஷ். நீண்ட நேரமாக வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சதீஷ்குமாரின் தற்கொலைக்கு குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் புது மணமகன் தற்கொலை செய்து கொண்டதால் தாராபுரம் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

காதலித்து திருமணம் செய்த கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்!!

கோவையில்..

கோவையில் காதல் கணவரை காதலனுடன் இணைந்து க.ழு.த்.தறுத்து கொ.லை செ.ய்.ய முயற்சி செ.ய்த இ.ள.ம்பெண் உட்பட 6 பேரை சிங்காநல்லூர் காவல் துறையினர் கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்தனர்.

கோவை ஓண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சேதுராஜாராம் சிங். இவர் சவுந்தர்யா என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செ.ய்.து கொ.ண்.டார். இவர்களுக்கு இரு கு.ழ.ந்தைகள் இருக்கும் நிலையில், கணவன் ம.னை.வி இடையே அ.டி.க்கடி பி.ர.ச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இ.எஸ்.ஐ ம.ரு.த்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த சவுந்தர்யாவிற்கு , அங்கு பணிபுரியும் ஆம்புலன்ஸ் டிரைவர் குணசேகர் என்பவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாகவும் க.ண.வன் ம.னை.வி இடையே அ.டி.க்கடி வீட்டில் பி.ர.ச்சினை ஏற்பட்டு வந்த நிலையியல் கா.த.ல் கணவர் சேதுராஜாராம் சிங்கினை காதலன் குணசேகர் மற்றும் தனது தம்பி ஆகியோர் மூலம் கொ.லை செ.ய்.ய சவுந்தர்யா திட்டம் தீட்டினார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டின் வாசலில் சேதுராஜாராம் சிங் மற்றும் சஙுந்தர்யா ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த குணசேகரன் மற்றும் சவுந்தர்யாவின் 17 வயது சகோதரன் மற்றும் அவரது நண்பர்கள் சேதுராஜாராம் சிங்கினை,

க.ழு.த்.த.று.த்து கொ.ல்.ல முயன்றனர். க.ழு.த்.தில் காயம் ஏற்பட்ட சேதுராஜாராம் க.த.றவே ப.ய.ந்து போன இ.ளை.ஞர்கள் தப்பி ஓடினர். சேதுராஜாராம் சிங்கின் அ.ல.றல் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள், அவரை ப.டு.கா.யமுடன் கோவை அரசு ம.ரு.த்.துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து போ.லீசார் வி.சாரணை மேற்கொண்ட போது சவுந்தர்யா தனது க.ள்.ள.கா.தலன் குணசேகர் மற்றும் தம்பி ஆகியோர் உதவியுடன் கணவரை க.ழு.த்தை அ.று.த்து கொ.லை செ.ய்.ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து சவுந்தர்யா மற்றும் குணசேகரனை கைது செ.ய்.த போ.லீ.சார், சவுந்தர்யாவின் 17 வயது தம்பி மற்றும் அவரது 3 நண்பர்களையும் கைது செ.ய்.தனர்.

இந்நிலையில் 4 சிறுவர்களையும் சிறுவர் சீ.ர்.திருத்த பள்ளியில் அடைத்த போ.லீ.சார் , சவுந்தர்யாவையும், குணசேகரனையும் கோவை சிறையில் அடைத்தனர். ம.னை.வியே தனது க.ண.வரை கா.த.லன், தம்பி உதவியுடன் கொ.லை செ.ய்.ய மு.ய.ன்ற ச.ம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோர விபத்தில் பேருந்துக்கு அடியில் சிக்கி 18 பேர் மரணம் : நெஞ்சை பதபதைக்க வைக்கும் காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் பேருந்து மீது லொறி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்திலே இந்த கோர விபத்து நடந்துள்ளது.

ஹரியானாவிலிருந்து பீகார் நோக்கி பயணித்த ஏசி பராபங்கியில் கோளாறாகி நின்றுள்ளது. கோளாறை சரிபார்க்க ஓட்டுநர் மெக்கானிக்கை தேடி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், சில பயணிகள் பேருந்திலேயே இருந்த நிலையில், சிலர் பேருந்திற்கு முன் சாலையில் படுத்து தூங்கியுள்ளனர். இதன்போது சாலை ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த பேருந்து பின்னால் லொறி பயங்கரமாக மோதியுள்ளது.

லொறி மோதி பேருந்து ஓடியதில் அதற்கு முன் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் சக்கரத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். சுமார் 18 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

30 உயிருக்கு ஆபத்தான நிலையில் பராபங்கி மருத்துவமனயைில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

65 பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில் 140 பயணிகள் பயணித்ததே, பேருந்து கோளாறாகி நின்றதற்கு காரணம் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இறந்தவர்களிள் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

9 லட்சம் பணத்துடன் பேருந்தின் மேலே 7 மணி நேரம் இருந்த நபர் : பெருவெள்ளத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்!!

மராட்டிய மாநிலத்தில்..

பேய் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்ட இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில், ஒரு பஸ் டிப்போ மேலாளரின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.

சுமார் 9 லட்சம் பணம் மழையில் நனைந்து, பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க 7 மணி நேரம் உயிரை பணயம் வைத்து பஸ் டிப்போ மேலாளர் ஒருவர் செய்யும் தொழில் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.

மராட்டிய மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பஸ் டிப்போ மேலாளராக பணியாற்றி வருகிறார் ரஞ்சித் ராஜெ ஷிர்தெ. பெருவெள்ளத்தில் டிப்போ கட்டிடமும் அங்கிருந்த பேருந்துகளும் மூழ்க தொடங்கியது.

அங்கிருந்து தப்ப முடியாமல் ஷிர்தெ மட்டும் சிக்கிக்கொள்ள, பணத்துடன் பேருந்து ஒன்றின் மேலே ஏற அவர் முடிவு செய்துள்ளார். பேருந்து மூழ்கும் அளவுக்கு வெள்ளம் பெருகிய நிலையிலும் 7 மணி நேரம் ஷிர்தெ காத்திருந்துள்ளார்.

பணத்தை அலுவலகத்தில் பாதுகாத்திருந்தால் கண்டிப்பாக வெள்ளத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால் அவ்வாறு நேர்ந்தால் அதற்கான பொறுப்பு தன்மீது சுமத்தப்படும் என்பதை அறிந்து, இக்கட்டான வேளையில் அரசுக்கான பணத்தை பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பு என உணர்ந்ததாக ஷிர்தெ கூறியுள்ளார்.

நீண்ட 7 மணி நேரம் காத்திருந்த நிலையில், மீட்புக்குழுவினரின் உதவியுடன் காப்பாற்றப்பட்டதாக ஷிர்தெ தெரிவித்துள்ளார்.

மனைவிக்காக வெளிநாட்டில் போய் உழைத்த கணவன் : ஊர் திரும்பிய கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

தமிழகத்தில்..

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று மனைவி மகிழ்ச்சியாக இருப்பதற்காக உழைத்த கணவன் ஊருக்கு திரும்பியதும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ச்சி விடயம் நடந்ததால் வேதனையில் ஆழ்ந்துள்ளார்.

தமிழகத்தின் நாகை மாவட்டம் அச்சக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி. பெற்றோர் இல்லாத ஆதரவற்ற நிலையில் இருந்த கலைமணி, மனோகர் என்பவரது மகளான நிரோஜாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

சொந்த கிராமத்தில் போதுமான வேலை இல்லாமல் போனதால் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்து, மனைவியிடம் கூறியிருக்கிறார். மனைவி நிரோஜாவும், பத்திரமா போய்வாங்க, என்னை பற்றி கவலைப்படாதீங்க,

உங்கள் நினைவோடு நீங்கள் வரும்வரை இருப்பேன் எனக் கூறி அனுப்பியிருக்கிறார். வேலை முடிந்து சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய கலைமணி, தனது மனைவியோடு வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க எழுந்த கலைமணி அதிர்ச்சியில் உறைந்துபோனார். பக்கத்தில் படுத்திருந்த மனைவி நிரோஜாவை காணவில்லை. எங்கே சென்றிருப்பார் என வீட்டில் உள்ள எல்லா இடத்திலும் தேடியுள்ளார். ஆனால், மனைவியைக் காணவில்லை.

பின்னர் பொலிசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், 5 பவுன் நகை, 3 லட்சம் பணத்தோடு எனது மனைவி நிரோஜா காணவில்லை. அவரை எனக்கு கண்டுபிடித்துத் தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

பொலிசார் விசாரணையில், நிரோஜா பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரோடு சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. தாயோ, தந்தையோ, மற்ற உறவுகளோ இல்லாத கலைமணி மனைவியை எல்லா உறவுகளுமாக நினைத்து சம்பாதித்தார்.

ஆனால் அவர் நம்பிய மனைவியோ, அவர் தலையில் இடியை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்ள வெளிநாட்டில் அரைவயிறும், கால்வயிறும் சாப்பிட்டு மிச்சப்படுத்தி பணமும் நகையுமா அனுப்பிவச்சேன்.

எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு என்ன ஏமாத்தி நடைபிணமாக்கிட்டுப் போயிட்டாளே என மனைவியை நினைத்து கலங்கி போய் நிற்கிறார் கலைமணி.

தன்னை கடித்த கொடிய விஷமுள்ள பாம்புடன் சிகிச்சைக்கு வந்த 7 வயது சிறுவன் : அதிர்ந்து போன மருத்துவர்கள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தன்னை கடித்த பாம்பை கண்டு அஞ்சாமல் அதை கையில் ஏந்தி கொண்டு மருத்துவமனைக்கு வந்த 7 வயது சிறுவனை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் தர்ஷித் (7). கடந்த 16ம் திகதி, வெள்ளைகேட் கிராமத்தில் தனது பாட்டி வீட்டிற்கு சென்று, வயலில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது, தன்னை ஏதோ ஒன்று கடித்ததை உணர்ந்த சிறுவன் தர்ஷித், அதை பிடிக்க விரட்டிச் சென்றான். பிடித்த பிறகுதான், அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு, பெற்றோரின் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு சென்றான். பாம்பு மற்றும் சிறுவனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வீட்டுக்கு அனுப்பினர்.

சிறுவனுக்கு பாம்பு கடித்த பிறகு ஏற்படும் எந்த மாற்றமும் உடலில் தெரியவில்லை என உறுதியான பின்னரே வீட்டுக்கு அனுப்பப்பட்டான். மறுநாள், சிறுவனின் கால் வீக்கமடைந்து, உடல் நலம் மோசமடைய தொடங்கியது.

இதனால் மீண்டும் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவனை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் குழு தர்ஷித்துக்கு சிகிச்சை அளித்தது. தொடர்ந்து ஒரு வார காலம் கொடிய பாம்பு விஷம் முறிக்கும் சிகிச்சைக்கு பிறகு, தற்போது சிறுவன் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளான்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுவனிடம் நாங்கள், பாம்பை எதற்கு கையில் கொண்டு வந்தாய் என கேட்டோம். அதற்கு, நான் பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே, என்னை எது கடித்தது என்று உங்களுக்கு தெரியும் என்று பதில் அளித்து எங்களை வியக்க வைத்தான் என கூறியுள்ளனர்.

லண்டனில் யாழ் இளைஞனின் மோ.சமான செயல் : வெள்ளவத்தை பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

வெள்ளவத்தை..

பிரித்தானியாவிலுள்ள இளைஞன் ஒருவர், வெள்ளவத்தையிலுள்ள பெண்ணொருவரிடம் பெருந்தொகை பணம் பெற முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் லண்டனில் வசித்து வரும் நிலையில், குறித்த பெண்ணிடம் காதல் என்ற பெயரில் ஏ.மா.ற்.று ந.டவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பி.ரிவு ஏற்பட்ட நிலையில், குறித்த பெண்ணின் அ.ந்.த.ர.ங்.க பு.கைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மி.ர.ட்.டி 17 இலட்சம் ரூபாய் பணம் கே.ட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் பணம் பெற மு.யற்சித்த இருவர் கொழும்பு கொம்பனிதெரு யூனியன் பிளேஸ் பிரதேசத்தில் க.ப்பமாக பணம் பெற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் இளைஞனுக்கும் வெள்ளவத்தை பெண்ணுக்கும் தொ.டர்பு இருந்த காலப்பகுதியில் எடுத்துக் கொண்ட அ.ந்.த.ர.ங்.க பு.கைப்படங்களை இணையத்தில் வெளியிடவுள்ளதாக எ.ச்.ச.ரித்துள்ளார்.

இ.தனையடுத்து பா.திக்கப்பட்ட பெ.ண் ச.ம்பவம் தொ.டர்பில் கொ.ழும்பிலுள்ள சி.றுவர் ம.ற்றும் பெ.ண்கள் ப.ணியகத்தில் மு.றைப்பாடு செ.ய்துள்ளார். அ.த்துடன் மு.தற்கட்டமாக 7 ல.ட்சம் ரூ.பாய் வ.ழங்குவதற்கு இ.ந்த பெ.ண் இ.ணக்கம் வெ.ளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள சந்தேக நபரின் பிரதிநிதிகள் இருவர் பணத்தை பெற வந்த போது கை.து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச ஏலத்திற்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்!!

மிகப்பெரிய இரத்தினக்கல்..

இலங்கையில் கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த இரத்தினக்கல்லுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முன், அதன் பெறுமதியை கணிப்பிட வேண்டும்.

சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை அந்த ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரத்தினக்கல் விற்பனை செய்யப்படும் தொகையில், 10 வீதம் அரசாங்கத்திற்கு உரித்தாகும். நாட்டில் நிதி தொடர்பிலான பிரச்சினை காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான கல் ஒன்று கிடைக்கின்றமை அதிஷ்டமானது. இந்த கல்லை இயலுமான வரை விரைவில் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் தாதியர்கள் ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்..

வவுனியாவில் தாதிய உத்தியோகத்தர்களால் ஒரு மணிநேர கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அரசாங்க தாதியர் சங்கத்தினால் நாடு பூராகவும் ஒரு மணிநேர தொழிற்சங்க போராட்டம் இன்று (28.07) முன்னெடுக்கப்பட்டது.

அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினால் வவுனியா வைத்தியசாலை முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘தாதிய உத்தியோகத்தரின் உயிராபத்தை தடுக்க என்95 மாஸ்க் வழங்கு, கொரோனா விடுதிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்ட வசதிகளை வழங்கு, வர்த்தமானி பத்திரிகையை உடனே வெளியிடு, தாதிய சேவை பதவி நிலை சேவை என சுற்று நிருபம் வெளியிடு’ ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

தாதியர் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என கோரிய அவர்கள் தமது நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்படாதவிடத்து மேலும் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தீப்பற்றி எரிந்த சொகுசுக் கார்!!

சொகுசுக் கார்..

கொழும்பு – வெள்ளவத்தை மாயா மாவத்தையில் சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

காரின் உரிமையாளர் காரிலிருந்து புகை வருவதைக் கண்டுள்ளார். இதனையடுத்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதிலும் அது பலனளிக்கவில்லை.

ஒன்பது தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு, தீயணைப்பு படையின் மூன்று தீயணைப்பு இயந்திரங்களை கொண்டு காரில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காரின் உரிமையாளர் கொழும்பு 8 பகுதியை சேர்ந்தவர் எனவும், இந்த தீ விபத்தில் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். காரில் மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!!

தடுப்பூசிகள்..

வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி என்பவற்றில் இன்று (28.07) வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட நகர கோட்ட பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

சுகாதாரப் பிரினரின் ஏற்பாட்டில் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்கு இதன்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் உத்தியோகபூர்வமாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிபாளர் எம்.மகேந்திரன்,

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சு.அன்னமலர், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் ஆ.லோகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமையை இதன்போது அவதானிக்க முடிந்தது.

வவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை!!

விலைமதிப்பற்ற சிலை..

புதையலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய செயற்பட்ட வவுனியா பொலிஸார் இந்த நபர்களை கைது செய்துள்ளனர்.

வவுனியா நெளும்குளம் பிரதேசத்தில் புதையலில் எடுக்கப்பட்ட இந்த சிலைகளை விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்காக முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சிலைகளின் பெறுமதி தெரியாமல் 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் அந்த சிலைகள் விலைமதிப்பற்றதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-