இலங்கையில் மேலுமொரு நீலக்கல் தொகுதி மீ.ட்பு : சீன ஏலத்திற்கு செல்வதாக தகவல்!!

இரத்தினபுரி..

இலங்கையின் இரத்தினபுரி பகுதியிலிருந்து மற்றுமொரு நீலக்கல் தொகுதி மீ.ட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்திலிருந்தே 80 கிலோ கிராம் நிறையுடைய குறித்த நீலக்கல் தொகுதி க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நீலக்கல் தொகுதி இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனை சீனாவில் எதிர்வரும் நவம்பரில் இடம்பெறவுள்ள ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில் உலகிலேயே மிகப்பெரிய நீலக்கல்  அண்மையில் க.ண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வித்தியாசமாக தென்பட்ட சூரியன் : பார்வையிட படையெடுத்த மக்கள்!!

சூரியன்..

தென்னிலங்கையில் சில பகுதிகளில் சூரியனை சுற்றி வளையம் ஒன்று தோன்றியமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக பாரிய அளவிலான மக்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நிலைமைக்கு நாங்கள் சூரிய மண்டலம் என்றே பெயரிட்டுள்ளோம்.

நீராவி மேல்நோக்கிச் செல்லும்போது, ​​அது பனி படிகங்களாக மாறும். இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக உயர் வளிமண்டலத்தில் மிகக்குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இதனால் அங்குள்ள நீர் சிறிய பனித்துகளா மாறி, சூரிய ஒளியை இவ்வாறு திரிபடைய செய்து வெளிப்படுத்துகிறது. அவை சூரியனை சுற்றி வெள்ளை வட்டத்தை ஏற்படுவதனை அவதானிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நீதிமன்றம் அதிரடி..

இலங்கையில் செயற்படும் அனைத்து பாலியல் ரீதியான இணையத்தளங்களையும் தடை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோகன அபேவிக்ரம இன்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

அத்துடன் பாலியல் இணையத்தளங்கள், அத்தகைய இணையத்தளங்களில் பெயர்களை பதிவு செய்தல், பணம் செலுத்துதல் மற்றும் சேவைகளை வழங்குவது தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இணையம் மூலம் சிறுமி ஒருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பாலியல் இணையத்தளங்கள் காரணமாக தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த நீதித்துறை தலையிட வேண்டும் என்பதால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 124 இன் அதிகார வரம்பைப் பயன்படுத்தி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி மேலும் கூறினார்.

கல்கிசை பகுதியில் 15 வயது சிறுமி இணையம் மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது இந்த இணையதளங்கள் தொடர்பான உண்மைகள் முன்வைக்கப்பட்டன.

விசாரணையின் கடைசி நாளில் நீதிபதி பிறப்பித்த உத்தரவின் படி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் சட்ட அதிகாரி நீதிமன்றத்தில் முன்னிலையானார். இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இந்த வழக்கில் 31 வது சந்தேக நபராக பெயரிடப்பட்டார்.

 

மீண்டும் இலங்கையில் கடும் கட்டுப்பாடுகள் : இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

இராணுவத் தளபதி எச்சரிக்கை..

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நாளாந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் 1,900 ஐத் தாண்டியுள்ளது. இதேவேளை, நேற்று 2,300 இற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் புத்தாண்டு கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும். கோவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்” என்றார்.

-தமிழ்வின்-

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவர நடவடிக்கை!!

தடுப்பூசி..

இலங்கையில் கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதை சட்டமாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று இடம்பெறும் கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

கொவிட் தடுப்பு செயலணியின் தலைவர் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோகர் லலித் வீரதுங்க நேற்று இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதனை கட்டாயமாக்கும் சட்ட கட்டமைப்பு இல்லை என்ற போதிலும் அது மிகவும் சிந்தித்து எடுக்க வேண்டிய தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளால் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளன. தடுப்பூசிகள் குறித்த பல்வேறு தவறான எண்ணங்கள் சமூகமயமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி கொவிட் கட்டுப்பாட்டிற்கு சிறந்த தீர்வு என்று பரிந்துரைத்துள்ளது.

எவ்வாறாயினும், தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்களை கிராம சேவகர் மூலம் பெற ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தகவலை பெற்ற பிறகு, தடுப்பூசி போடப்படாதவர்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்களுக்கு..

கொவிட் வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் அடுத்த திங்கட்கிழமை முதல் வழமையை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். இதற்கான சுற்றரிக்கை இன்றைய தினம் வெளியிடப்படும் என எதி்ர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் கட்டுப்பாடுகள் நீடித்தாலும் அனைத்து அதிகாரிகளும் கட்டாயம் அன்றைய தினம் முதல் பணிக்கு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலயில், அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் வழமையை போன்று மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக அரச நிறுவனங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரம் ஊழியர்களை அழைக்கும் அதிகாரம் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்கான சுற்றரிக்கை கடந்த மே மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

இலங்கையின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள போட்டித்தடை!!

கிரிக்கட் வீரர்கள்..

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, பிரித்தானிய கட்டுப்பாடுகளை மீறிய இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு 2 வருடகால போட்டித்தடையும், நிரோசன் திக்வெல்லவுக்கு 18 மாதகால போட்டித்தடையும் விதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஒழுக்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், குறித்த மூவருக்கும் 25,000 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட வேண்டும் எனவும் 5 பேர் அடங்கிய விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கட்டாய உயிர்குமிழி நடைமுறையை மீறிச் செயற்பட்டமைக்காக அவர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களை நேற்று அவர்கள் மூவரும் கடிதங்கள் மூலம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஒழுக்காற்று குழுவிற்கு அறியப்படுத்தி இருந்தனர்.

இதனையடுத்து, இன்று அவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கு அமைய குறித்த மூன்று பேரும் ஒழுக்காற்றுக் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்திய அணியை வீழ்த்தி 2-1 என தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!!

இலங்கை அணி..

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடந்த மூன்று போட்டிகளை கொண்ட் இருபதுக்கு இருபது தொடரில், இலங்கை அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் இந்திய அணி பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் குல்திப் யாதவ் 23 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 16 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 82 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ராகுல் சஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி இலங்கை அணி 2 -1 என்ற அடிப்படையில் இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. இந்தியாவிற்கு எதிராக இருபதுக்கு இருபது தொடரை வென்ற முதலாவது சந்தர்ப்பமாக இலங்கைக்கு இது அமைந்துள்ளது.

இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர், மரணங்களின் எண்ணிக்கை!!

கொரோனா..

கோவிட் தொற்று உறுதியான மேலும் 479 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,329 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 304,161 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,641 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 273,496 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,324 ஆக அதிகரித்துள்ளது.

தன்னை விட 22 வயது குறைவான பெண்ணை மறுமணம் செய்த நபருக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தாலி கட்டிய கணவனை மனைவியே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்.

53 வயதான இவர், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். தாரா என்பவருக்கும் அன்பழகனுக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு மாதவன் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் தாராவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கணவனை பிரிந்து மணவாளன் நகரில் மகனுடன் வசித்து வருகிறார். முதல் மனைவியின் அனுமதியுடன் சிவபுரம் பகுதியை சேரந்த ஷோபனாவை (31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அன்பழகன் திருமணம் செய்தார்.

அன்பழகன், ஆவடியை அடுத்த கோணாம்பேடு பகுதியில் வீடு கட்டி மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அன்பழகனோட தாய் முனியம்மாள் இறந்தார்.

அதன் பிறகு சிவபுரத்துக்கு வந்து தாயின் இறுதி கடமைகளை அன்பழகன் செய்தார். அப்போது கொரோனா லாக் டவுன் நடைமுறைக்கு வந்ததால் சிவபுரத்தில் மனைவி குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் தர்மராஜூவுக்கும் ஷோபனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது அன்பழகனுக்கு தெரியவந்து மனைவியை கண்டித்தார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தர்மராஜுவை வீட்டுக்கு வரக்கூடாது என்று அன்பழகன் கூறியுள்ளார். இதனால் தர்மராஜும் ஷோபனாவும் அன்பழகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

கடந்த 22ம் திகதி இரவு வழக்கம்போல் வீட்டுக்கு வெளியே அன்பழகன் கட்டிலில் படித்திருந்த போது தர்மராஜ் அன்பழகனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறம் கூவம் ஆற்றுப்படுகையில் புதைத்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22ம் திகதி முதல் அன்பழகனை காணவில்லை என நாடகமாடிய மனைவி ஷோபனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் 10 நாள்களுக்குப் பிறகு குழந்தைகளுடன் ஷோபனாவும் மாயமானார். இதையடுத்து அன்பழகன் உறவினர்கள் அவரை கண்டுபிடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொலிசார் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையில், அரக்கோணத்தில் உள்ள லாட்ஜில் ஷோபனா தங்கியிருப்பது தெரியவந்தது. லாட்ஜுக்கு பொலிசார் சென்றபோது ஷோபனா தர்மராஜுடன் தங்கியிருந்தார்.

இரண்டு பேரையும் விசாரிக்கும்போது தான் மேலே கூறப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஷோபனா, தர்மராஜ், கொலைக்கு உதவிய தர்மராஜின் நண்பன் விக்னேஷ் (23) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

13 மாதங்களில் 3 முறை கொரோனா தாக்கம் : இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!!

ஸ்ருஷ்டி ஹலாரி..

இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் ஒருவருக்கு 13 மாதங்களில் 3 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சியில் உள்ள வீர் சாவர்க்கர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பிரிவில் 26 வயதாகும் மருத்துவர் ஸ்ருஷ்டி ஹலாரி (Shrusthi Halari) பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த ஆண்டு ஜூன் 17-ஆம் திகதி முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் பெரிய அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

ஸ்ருஷ்டி தனது மூன்று மாத வேலையை முடித்துவிட்டு, தனது எம்.டி மற்றும் அமெரிக்காவில் உயர் மருத்துவ படிப்பிற்கான தயாரிப்புகளைத் தொடங்க தனது வீட்டிற்குத் திரும்பினார்.

தொடர்ந்து ஸ்ருஷ்டி கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டின் முதல் டோஸை இந்த ஆண்டு மார்ச் 8-ஆம் திகதியும், இரண்டாவது டோஸை ஏப்ரல் 29-ஆம் தேதியும் போட்டுக்கொண்டார்.

இருப்பினும், தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு மாதம் கழித்து மே 29-ஆம் திகதி மருத்துவர் ஸ்ருஷ்டி இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த முறை லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதன் பின் மீண்டும் ஜூலை 11-ஆம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை அவரின் குடும்பத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து ஸ்ருஷ்டி கூறும் போது, மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் நான் அதிகம் கஷ்டப்பட்டேன். நானும் என் குடும்பமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட்டது.இப்போது, நான்காவது முறையாக கொரோனா இல்லை என்பதை உறுதி செய்வோம் என கூறினார்.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்பதில்லை. இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்.

ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோயின் தாக்கம் குறைவாகவோ, மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய அவசியம் இல்லாத வகையிலோ இருக்கும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்படும்போது, அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்காது என கூறினர்.

அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுத பவானி தேவி : அம்மா சொன்ன உருகவைக்கும் தகவல்கள்!!

பவானி தேவி..

டோக்கியோவில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானிதேவி தோல்வியடைந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனையான பவானி வாள்வீச்சு விளையாட்டில் கலந்து கொண்டார்.

முதலாவது சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகினார். ஆனால் எதிர்பாராதவிதமாக இரண்டாவது சுற்றில் தோல்வியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு போட்டியை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து பவானிதேவியின் தாய் கூறுகையில், முதல் சுற்றில் வெற்றி பெற்ற பின்னர் பவானி தேவி தைரியமாக தான் இருந்தாள்.

ஆனால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்ததும், மேடையில் இருந்து இறங்கி நேராக ரூமிற்கு சென்ற அழத் தொடங்கினாள்.

சில மணிநேரத்துக்கு பின்னர் இந்த தோல்வியை பற்றி யாரும் நினைவூட்ட வேண்டாம். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு நான் தயாராக வேண்டும். அதற்கு நிறைய பயிற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

மனைவியை கொன்று உடலை புதரில் வைத்து எரித்த கணவன் : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மெக்சிகோ பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (48). இவரது மனைவி செசில்லா அகஸ்டா (36). தம்பதிக்கு அடில்லா என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

மன்சூர் 2011 ஜூலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அங்கு குழந்தையுடன் தனியாக வசித்தார்.

செசில்லா அகஸ்டா கேரளா திருச்சூர் கலா மண்டலத்தில் மோகினி ஆட்டம் கற்றார். அங்கு தங்கி இருந்தவர், குழந்தையை பார்க்க அடிக்கடி வந்தார். 2012ல் குழந்தையுடன் வெளிநாடு செல்வதாக மன்சூரிடம் தெரிவித்தார்.

அந்த ஆண்டு ஏப்ரல் 9ல் குழந்தை பள்ளிக்கு சென்ற பின், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட மன்சூர் தாக்கியதில், செசில்லா இறந்தார். உடலை காரில் கொண்டுவந்து மதுரையில் உள்ள ஒரு இடத்தின் புதரில் வைத்து எரித்தார்.

இந்த சம்பவம் அப்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ் வழக்கில் மன்சூருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் 2020 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.

பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட மன்சூர் எனக்கு எதிராக போதிய ஆவணம், சாட்சிகள் இல்லை. சம்பவம் தொடர் கோர்வையாக நடந்தது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

செசில்லா அகஸ்டா உடலில் காயங்கள் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இதை சரியாக பரிசீலிக்காமல் கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் மனுதாரருக்கு தற்காலிகமாக சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, ஜாமின் அனுமதிக்கப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீரழித்த பெண்ணையே திருமணம் செய்த இளைஞன் : அடுத்த 6 மாதத்தில் நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் துஷ்பிரயோகம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொண்ட நபர் திருமணமான 6 மாதத்தில் மனைவியை கொலை செய்துள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக பபிதா என்ற பெண் பொலிசில் கடந்தாண்டு புகார் கொடுத்தார். இதையடுத்து ராஜேஷை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

பின்னர் பிரமாண பத்திரத்தில் பபிதாவை திருமணம் செய்து கொள்வதாக ராஜேஷ் தெரிவித்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கடந்தாண்டு இறுதியில் ராஜேஷ் – பபிதா திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 15ம் திகதி பபிதாவை காணவில்லை என அவர் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர். புகாரையடுத்து பொலிசார் பபிதா கடைசியாக யாருடன் போனில் பேசினார் என பார்த்த போது ராஜேஷுடன் பேசியது தெரியவந்தது.

பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது தனக்கு பபிதா காணாமல் போனது பற்றி தெரியாது என கூறிய அவர் ஒருகட்டத்தில் மனைவியை கொலை செய்தததை ஒப்பு கொண்டார்.

பொலிசார் ராஜேஷ் கூறிய இடத்துக்கு அவருடன் சென்று சடலத்தை கைப்பற்றினர். ராஜேஷ் அளித்த வாக்குமூலத்தில், என் மனைவியும் மாமியாரும் என்னை துன்புறுத்தி வந்தனர். இதனால் பபிதாவை கொல்ல முடிவு செய்தேன்.

அவளுக்கு போன் செய்து ஒரு இடத்துக்கு வரவழைத்து அவருடன் ஒன்றாக இருக்க வேண்டும் என கூறினேன். இதன் பின்னர் ஒரு குகைக்குள் சென்று இருவரும் தனிமையில் இருந்தோம்.

அதற்கு பிறகு அவளை கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என கூறினார். வாக்குமூலத்தை தொடர்ந்து ராஜேஷை பொலிசார் கைது அவர் மீது கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.

வவுனியாவில் 2000 ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலங்களை எல்லையிட்டு விடுவிக்க நடவடிக்கை : திலீபன் எம்.பி!!

2000 ஏக்கர்..

2000 ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலங்களை எல்லையிட்டு விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட அவிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்தார்.

வன வள திணைக்களத்தினர் வசமுள்ள பொதுமக்களுக்கான காணிகள் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இதன்போது ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்கப்படவேண்டிய மேலதிக அரச காடுகளின் பட்டியல் ஒன்று வனவளத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதுடன்,

2000 ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் தொடர்பாக கமநலசேவை திணைக்களமும், வன வள திணைக்களத்தினரும் இணைந்து எல்லைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையினை உடன் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வெடிவைத்தகல்லு கிராமத்தின் காணிகள் இரண்டு வாரத்திற்குள் வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படும். ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் குடியேற்றம் செய்வதற்குரிய இடத்தினை விடுவிப்பதாகவும் வன வள திணைக்களத்தினர் உறுதியளித்தனர்.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், செட்டிகுளம் பிரதேச செயலாளர் பாபயோன், கமநலசேவை உதவி ஆணையாளர் விஸ்ணுகாந், வன வள திணைக்கள மாவட்ட அதிகாரி,

மற்றும் வனவள உத்தியோகத்தர்கள், தென்னை பயிர்ச்செய்கை முகாமையாளர், பிரதேச செயலகங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து வெளியேறிய 14 வயதான சிறுவனை காணவில்லை : பொலிஸார் தீவிர விசாரணை!!

லக்ஷான்..

இரத்தினபுரி, ஹிதெல்லன பிரதேசத்தைச் சேர்ந்த லக்ஷான் என்ற 14 வயதான சிறுவன் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சகோதரிகள் மற்றும் தாயுடன் வசித்துவந்த லக்ஷான் கடந்த 24 ஆம் திகதி அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

லக்ஷான் வீட்டிலிருந்து காணாமல்போன தினத்தன்று அவர் வீட்டிலிருந்து வெளியேறும் காட்சி அருகிலிருந்த சிசிரீவி கமராவில் பதிவாகியுள்ளது. சிறுவன் பையொன்றுடன், தனது கைபேசியை பார்த்தவாறு செல்வதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

காணாமல்போன சிறுவனைத் தேடி 4 ஆவது நாளாகவும் காவல்துறையினர் இன்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சிறுவன் லக்ஷானின் தந்தை மட்டக்களப்பு காவல்நிலையத்தில், கடமையாற்றி வருவதுடன், தனது மகன் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு எந்தவொரு காரணமும் இருக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரத்தினபுரி காவல்துறையினர், இது ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக முன்னெடுக்கப்படும் குற்றச்செயலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், காணாமல்போயுள்ள சிறுவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், சிறுவன் பற்றிய தகவல் தெரிந்தால் இரத்தினபுரி காவல்நிலையத்துக்கு அறிவிக்குமாறு, காவல்துறையினர் கோரியுள்ளனர்.