வவுனியா பண்டாரிகுளம் கிராம அலுவலர் பிரிவில் 12 மணியாலத்தில் ஆயிரத்து 626 தடுப்பூசிகள்!!

தடுப்பூசிகள்..

வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் 12 மணித்தியாலயத்தில் ஆயிரத்து 626 கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவின் பல்வேறு கிராம அலுவலர் பிரிவுகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சீனாவின் சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் மற்றும் உக்குளாங்குளம் கிராமங்களை உள்ளடக்கிய பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கு விபுலானந்தா கல்லூரியில் வைத்து,

மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அரங்கன், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம், பண்டாரிக்குளம் பொது சுகாதார பரிசோதகர் வாகீசன் ஆகியோரது தலைமையில் கிராம அலுவலர் ராகுல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்,

நேற்று (30.07) காலை முதல் 7 மணித்தியாலயத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 584 பேருக்கும், 30- 60 வயதிற்குட்பட்ட 476 பேருக்கும் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இன்று (31.07) காலை முதல் 5 மணித்தியாலயத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 78 பேருக்கும், 30 – 60 வயதிற்கு இடைப்பட்ட 488 பேருக்கும் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதன்படி 12 மணித்தியாலயத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 662 பேருக்கும், 30 – 60 வயதிற்கு இடைப்பட்ட 964 பேருக்கும் என ஆயிரத்து 626 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

குறித்த கிராம அலுவலர் பிரிவில் கோவிட் தடுப்பூசியை தவறவிட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு குழுவினர், கோவிட் 19 தடுப்பு குழுவினர், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பங்களிப்பின் மூலமே அதிகளவிலான மக்கள் விழிப்புணர்வுடன் தாமாகவே முன்வந்து கோவிட் தடுப்பூசிகளை பெற்று, ஏனைய கிராமங்களுக்கு முன் மாதிரியாக செயற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரப் பிரிவினர்,

குறித்த செயற்பாட்டை முன்னெடுக்க உதவிய பாடசாலை சமூகத்தினர், மாவட்ட செயலகத்தினர், பிரதேச செயலகத்தினர், பட்டதாரி பயிலுனர்கள், இராணுவத்தினர், அப் பகுதி பொது அமைப்புக்கள் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

பூஜையின் போது கண் திறந்து பார்த்த அம்மன் : காண அலைமோதும் மக்கள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில், கரூர் மாவட்டம் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள காந்தி நகரில் எல்லை வாங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு, சுமார் 60 ஆண்டுகள் பழமையான கோயிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகக் குறிப்பிட்ட கோயிலுக்குப் பலரும் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையில், கோயிலின் பரம்பரை பூசாரி சரவணனின் மகன் சக்திவேல் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாரதனை காட்டியுள்ளார். பின்புதான் வைத்திருந்த செல்போனில் அம்மனை போட்டோ எடுத்துள்ளார்.

அந்த போட்டோவை பார்த்த போது அம்மனின் கண்ணில் திருநீர் பூத்திருந்தது போல் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகிலிருந்த தனது தந்தையிடம் கொண்டு போய் காட்டியதும் அவரும் மகிழ்ந்துள்ளார்.

சாமி கண் திறந்து விட்டது என இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனையடுத்து, 2 சக்கர வாகனம், 4 சக்கர வாகனத்தில் கூட்டம், கூட்டமாக வந்து பொதுமக்கள் அதிசயமாகப் பார்த்துச் செல்கின்றனர்.

அங்கு வந்தவர்கள் தங்கள் செல்போனில் அம்மனை செல்பி எடுத்து முண்டியடித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்கின்றனர்.

மேலும், தகவலறிந்து அங்கு வந்த போலீசார் கூட்டத்தைக் கட்டுப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

அப்போது அங்கு வந்த பூசாரி சரவணன் அம்மனின் கண்ணிலிருந்த திருநீரை துடைத்து விட்டுச் சென்றார். அதன் பின்னரும், பொதுமக்கள் சாமியை வந்து பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.

அம்மன் கண் திறந்து விட்டதாகப் பரவிய தகவலால் பொதுமக்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வவுனியாவில் 6 வயதுச் சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!!

ஆலங்குளம் பகுதியில்..

வவுனியா வடக்கு ஆலங்குளம் பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் கிணற்றுள் வீழ்ந்து பரிதாப மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (31.07.2021) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, கனகராயன்குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்தில் தாய், தந்தை ஆகிய இருவரும் பாட்டியுடன் பிள்ளைகளை தங்க வைத்து விட்டு வேலைக்குச் சென்ற நிலையில்,

பாட்டி கோவிட் தடுப்பூசி ஏற்றுவதற்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது நீர் நிறைந்த கிணற்றுள் தண்ணீர் அள்ளச்சென்ற சிறுமி கிணற்றுள் தவறி வீழ்ந்த நிலையில்,

அயலவர்களால் அரைமணி நேரத்துக்குள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலங்குளம் முருகானந்தா வித்தியாலயத்தில் தரம் 1 இல் கல்வி பயிலும் செல்வராஜ் அனுசியா (வயது 06) என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்தவராவார். மரணம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் கட்டயமாகும் கொவிட் தடுப்பூசி சான்றிதழ் : அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

தடுப்பூசி சான்றிதழ்..

இலங்கையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் போது வழங்கப்பட்ட சுகாதார அட்டையை தம்முடன் வைத்துக் கொள்வதனை கட்டாயமாக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலணியின் அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய அரச நிறுவனங்கள் போன்று சுப்பர் மார்க்கெட்களில் நுழைவதற்கு இந்த அட்டையை தம்முடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம் என சுகாதார பிரிவு பிரதானிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் நேற்று கொவிட் தடுப்பு பிரிவு கூட்டத்தில் கலந்துரையாடப்படுகின்றது. கொவிட் தடுப்பிற்காக எதிர்வரும் நாட்களில் சட்டங்களை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாக ஜனாதிபதி பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கோர விபத்தில் இருவர் பலத்த காயம்!!

விபத்து..

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் இன்று (31.07.2021) மாலை 4.30 மணியளவில் கனரக லொறி மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில்,

காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் ஒருவர் மாத்திரம் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் – நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் பத்தனை பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லொறி ஒன்றுமே கொட்டகலை சுரங்க பாதை பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்துடன் தொடர்புடைய லொறி, முச்சக்கரவண்டி ஆகியன பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படட்டுள்ளதுடன் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!

பஸ் மற்றும் ரயில் சேவைகள்..

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் இரண்டு மாதங்களாக தடைப்பட்டிருந்த பொது போக்குவரத்து சேவைகள் வழமை போன்று நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிக்க முடியும். அதற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை கண்காணிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பர்.

இதேவேளை, முன்னதாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான ரயில் மற்றும் பஸ் சேவைகள், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த 14 ஆம்திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், கொவிட் பரவல் நிலைமைய கருத்திற்கொண்டு கடந்த 17 ஆம்திகதி முதல் நாளை (1) வரை குறித்த சேவைகளை இடைநிறுத்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிவரும் இரண்டாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

– தமிழ்வின்-

வவுனியாவில் சிறுமி ஹிசாலினிக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப் பெண்ணாக பணிபுரிந்து மரணமடைந்த சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் வவுனியா மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (31.07) காலை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பாலியல் துஸ்பிரயோகம் என நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமற்ற தண்டனை வழங்க வேண்டும், சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும்,

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை உடனடியாக தடை செய்யுங்கள், சிறுமியின் மரணம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த சிறுமியின் மரணத்திற்கு ஜனாதிபதியும், அரசாங்கமும் விரைவாக நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உ.யிரிழப்பு!!

நடிகை ஹயசின்த் விஜேரத்ன..

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரத்திற்கு அருகாமையில் இன்று (31.07.2021) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இலங்கையின் பிரபல நடிகை ஒருவர் உ.யிரிழந்துள்ளார்.

இவ்வாறு உ.யிரிழந்த நடிகையான பிரென்சிஸ்கு ஹட்டிகே தெரஸ் ஹயசிந்த விஜயரத்ன வயது (75) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு வருகை தந்துள்ள குறித்த நடிகை இன்று அதிகாலை நுவரெலியா – அட்டன் பிரதான வழியாக கொழும்புக்கு தனது வேனில் பயணித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் பயணித்த வேன் லிந்துலை நகரத்திற்கு அருகில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து வி.பத்து சம்பவித்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வேனை செலுத்தி சென்ற சாரதிக்கு ஏற்பட்ட தூ.க்க க.லக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் வி.சாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் வேன் சாரதி லிந்துலை பொலிஸாரால் கை.து செய்யப்பட்டு, நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸாரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உ.யிரிழந்த நடிகையின் ச.டலம் மீ.ட்க்கப்பட்டு, பி.ரேத ப.ரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு ஓராண்டு கால போட்டித் தடை!!

கிரிக்கட் வீரர்கள்..

ஒழுக்க விதிகளை மீறிய இலங்கை அணியின் கிரிக்கட் வீரர்களுக்கு ஓராண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. குசால் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மூன்று வீரர்கள் கோவிட் உயிர்குமிழி விதிகளை மீறி வீதியில் உலவியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பிலான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த வீரர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்த வீரர்களிடம் ஒழுக்காற்று குழுவினால் விசாரணை நடாத்தப்பட்டு வீரர்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகால தடையும் ஒருவருக்கு ஒன்றரை ஆண்டு கால தடையும் விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

எனினும், ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் மூன்று வீரர்களுக்கும் ஓராண்டு கால தடையை விதிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா பத்து மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான கிரிக்கட்டிலிருந்தும் ஓராண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியான அனைத்து விதமான கிரிக்கட்டிலிருந்து ஓராண்டு காலமும், உள்ளுர் போட்டிகளிலிருந்து ஆறு மாத காலமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் மேலும் ஓராண்டு காலம் சர்வதேச போட்டித் தடை விதிக்கப்படுவதாகவும் அது ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

மேலும், இந்த வீரர்கள் கட்டாயமாக மருத்துவ ஆலோசனைகளுக்கு உட்படுத்தபடுவார்கள் எனவும் அது தொடர்பான பரிந்துரைகளை ஸ்ரீலங்கா கிரிக்கட் வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் 56 கொரோனா மரணங்கள், 2,455 தொற்றாளர்கள் பதிவு!!

கொரோனா..

நாட்டில் மேலும் 56 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (29.07.2021) இந்த கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 30 முதல் 59 வயது வரையிலான 15 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 41 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதில் 38 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட் நோய்த்தொற்று காரணமாக பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 4380 ஆகும்.

கோவிட் தொற்று உறுதியான மேலும் 820 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,455 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 306,657 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4, 380 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

4 வயது மகனின் க.ழுத்தை இ.றுக்கிக் கொ.ன்.ற தா.ய் : வி.சாரணையில் வெளியான அ.திர்ச்சித் தகவல்கள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பெற்ற மகனை கொ.லை செ.ய்த தாய் மற்றும் கள்ளக் காதலன் கை.து செய்யப்பட்டுள்ளனர். நாகையை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த்(வயது 31). இவருக்கும், தாமரைகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த அபர்ணா(22) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கவிதிரன் என்ற மகன் இருக்கிறார், திருமணமான ஒரு ஆண்டிலேயே இருவரும் பிரிந்துவிட, உறவினர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் கார்த்திக் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார், கு.ழந்தையுடன் தனியாக வசித்து வந்த அபர்ணாவுக்கும், ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கணவன்- மனைவி போல இருவரும் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்துள்ளனர், இந்நிலையில் அவசர போலீசை தொடர்பு கொண்ட கார்த்திக், தன்னுடைய மனைவி மகனை கொ.லை செ.ய்ததாக கூறியுள்ளார்.

அதன்பேரில் விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட வி.சாரணையில், சம்பவம் நடந்த தினத்தன்று அபர்ணா- சூர்யா இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.

அப்போது கவிதிரன் தொடர்ந்து அ.ழுது கொ.ண்டே இருந்துள்ளார், இதனால் ஆ.த்திரத்தில் சூர்யாக கவிதிரனை த.ள்ளிவிட்டுள்ளார். அபர்ணாவோ சு.டிதார் து.ப்பட்டாவால் ம.கனின் க.ழுத்தை நெ.ரித்துள்ளார், இதில் சி.றுவன் து.டிதுடித்து இ.றந்துள்ளான்.

கொ.லையை ம.றைப்பதற்கான தன் மகன் எதிர்பாராத.விதமாக இ.றந்தவிட்டதாக கூறி புதைத்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சென்னையில் வசித்து வந்த கார்த்திக்-க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அபர்ணாவையும், அவருடைய கள்ளக் காதலன் சுரேசையும் நேற்று கை.து செய்தனர். சிறுவனின் உ.டலை கை.ப்பற்றிய போலீசார் பி.ரேத ப.ரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம் : பெண் வீட்டார் திட்டமிட்டு செய்த செயல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கா.தலித்த பெ.ண்ணை தி.ருமணம் செ.ய்ய மு.யன்ற இ.ளைஞர் கு.த்.தி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்ட ச.ம்பவம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா சங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் அனுமேஷ் போவி ( 22). இவரும் அதே கிராமத்தில் வசித்து வரும் 20 வயது மதிக்கத்தக்க இ.ளம் பெ.ண்ணும் கடந்த 3 ஆ.ண்டுகளாக கா.தலித்து வ.ந்துள்ளனர்.

ஆ.னால் இ.வர்களின் கா.தலுக்கு இ.ளம் பெ.ண்ணின் கு.டும்பத்தினர் எ.தி.ர்.ப்.பு தெ.ரிவித்ததுடன், இ.ளம் பெ.ண்ணுக்கு வே.று இ.டத்தில் மா.ப்பிள்ளை பா.ர்த்து தி.ருமணம் செ.ய்து வை.க்க மு.டிவு செ.ய்துள்ளனர்.

இது குறித்து காதலனிடம் கூறிய போது, அவர் வீட்டை விட்டு வெளியே வா நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் ஒப்புக் கொள்ள வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த போது, இந்த விஷயம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இ.தனால் அ.வர்கள் இ.ளம் பெ.ண்ணுக்கு அ.வசரம், அ.வசரமாக தி.ருமணம் செ.ய்து வை.க்க ஏ.ற்பாடுகள் செ.ய்து வ.ந்தனர். இ.ந்த நி.லையில் நே.ற்று மு.ன்தினம் இ.ரவு அ.னுமேஷ் போ.வி வெ.ளியே செ.ன்று வி.ட்டு வீ.டு தி.ரும்பிய போ.து, ம.ர்.ம கு.ம்.ப.ல் கொ.லை செ.ய்.த.து.

இ.து கு.றித்த த.கவல் பொ.லிசாருக்கு தெ.ரிவிக்கப்பட்டதால், வி.ரைந்து வ.ந்த பொ.லிசார் உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அ.னுப்பி வை.த்து, வி.சாரணை மே.ற்கொண்டனர்.

அ.தில், கா.தலியை தி.ருமணம் செ.ய்ய மு.யன்று அ.தற்கான ஏ.ற்பாடுகளை செ.ய்து வ.ந்த அ.னுமேஷ் போவியை, இ.ளம் பெ.ண்ணின் கு.டும்பத்தினர் சி.லர் கொ.லை செ.ய்.த.து தெ.ரியவந்தது.

இ.ந்த கொ.லை ச.ம்பவம் கு.றித்து பொ.லிசார் வ.ழக்கு ப.திவு செ.ய்து த.லை.ம.றை.வா.க உ.ள்ள இ.ளம் பெ.ண்ணின் கு.டும்பத்தினரை தே.டி வ.ருகின்றனர்.

வவுனியாவில் வெள்ளை வானில் பெண் ஒருவரை கடத்தி நகை பறிப்பு : சந்தேக நபர் கைது!!

கோவில்குளம்..

வவுனியாவில் ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீடு நோக்கி நடந்து சென்ற பெண்மணி ஒருவரை கடந்த  19.07.2021 அன்று வெள்ளைவானில் கடத்திச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைத்திருடிவிட்டு பெண்மணியை இறக்கிவிட்டு தப்பிச் சென்றமை குறித்து பொலிஸ் நியைத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது .

இந்நிலையில் நேற்று (29.07) குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அண்மையில் வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஆலயத்திலிருந்து நடந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்மணி ஒருவரை வெள்ளைவானில் வந்த இனந்தெரியதாவர்கள் கடத்திச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையை திருடிவிட்டு அப்பெண்மணியை வானிலிருந்து இறக்கிவிட்டு தப்பிச் சென்றிருந்தார்கள்.

இச்சம்பவம் குறித்து பெண்மணியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின்போது குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட 28 வயதுடைய,

பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பிற்பகல் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து திருட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய வெள்ளை நிற டொல்பின் ரக வான் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த சந்தேக நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி : வவுனியாவில் வானில் வந்தவர்களால் பெண் ஒருவர் கடத்தப்பட்டு விடுதலை!!

வவுனியாவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (19.07) காலை வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டுவிட்டு வீடு நோக்கிய திரும்பிய முதிய பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் ஆலயம் முன்பாக வந்த நபர்கள் அழைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த பெண் வான் அருகில் சென்ற போது அவர்கள் குறித்த பெண்ணை வானில் பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர். குறித்த பெண்ணை சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக வானில் கொண்டு சென்ற குறித்த நபர்கள் மதியமளவில் பெண் அணிந்திருந்த 3 பவுண் தங்க காப்பை கழற்றி விட்டு பெண்ணை மடுகந்தை பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து, தமக்கு நடந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று, தாம் கடத்தப்பட்டமை தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடத்தப்பட்ட போது குறித்த பெண் சங்கிலி, காப்பு, மோதிரம், தோடு உட்பட 9 பவுண் நகைகளை அணிந்திருந்த போதும் வானில் கடத்தியவர்கள் 3 பவுண் காப்பினை மட்டுமே கழற்றி விட்டு பெண்ணை இறக்கி விட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

21 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தம்பதியை சேர்த்து வைத்த உச்சநீதிமன்றம் : சுவாரஸ்ய சம்பவம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் குடும்ப பிரச்னையால் பிரிந்த தம்பதியை 21 ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றம் சேர்த்து வைத்தது. இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், குண்டூர் மாவட்டத்தில் 1998-ல் திருமணம் நடந்த தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.

இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் 2000-ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். வரதட்சணை கேட்டு தன்னை கணவனும் மாமியாரும் துன்புறுத்துவதாக கூறி 2001-ஆம் ஆண்டு பொலிஸில் பெண் புகார் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கணவனுக்கு ஒரு ஆண்டு சிறையும் அபராதமும் விதித்தது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கணவன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கணவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது. இதற்கிடையே விவாகரத்து கோரி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் வழக்கு தொடர்ந்தார்.

கணவனுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனைவியும் மனு தாக்கல் செய்தார். வழக்கு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், 21 ஆண்டுகள் கழித்து, இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக நடந்தது. அப்போது மனு தாக்கல் செய்த பெண் நீதிபதிகள் முன் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதிகள் கூறியதாவது, உங்கள் கணவரை சிறையில் அடைப்பதால் உங்களுக்கு என்ன லாபம். சிறையில் அடைக்கப்பட்டால் கணவரின் வேலை பறிபோய்விடும். அதன்பின் அவரால் உங்களுக்கு ஜீவனாம்ச தொகை கூட வழங்க முடியாது.

இதற்குப் பதில் கணவரை மன்னித்து சேர்ந்து வாழுங்கள். உங்கள் குழந்தையையும் நன்றாக வளர்க்க முடியும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதை கேட்ட பெண் மனம் மாறி கணவருக்கு சிறை தண்டனை வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக கூறினார்.

விசாரணையின் போது ஆஜரான கணவனும் மனைவியை விவாகரத்து செய்ய தொடர்ந்த வழக்கை திரும்ப பெற சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 21 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் மீண்டும் இணைந்தனர்.

வவுனியா நுழைவாயிலில் மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

தென்பகுதியில் இருந்து வடக்கிற்குள் நுழைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்பகுதியில் இரவு வேளைகளில் வடக்கிற்கு வருபர்களை வவுனியா ஏ9 வீதி நுழைவாயிலான மூன்றுமுறிப்பு பகுதியில் வழிமறித்த சுகாதாரப் பிரிவினர் கடந்த திங்கள் கிழமை நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 வரை 300 இற்கு மேற்பட்டவர்களிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.

அதன் முடிவுகள் இன்று (30.07) வெளியாகிய நிலையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேக்கவத்தைப் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் இருவருக்கும்,

திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், யாழ் அரியாலை பகுதியில் இருவருக்கும், களுத்துறை பகுதியிசைச் சேர்ந்த ஒவருக்கும், யாழ் வேலணை 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,

யாழ் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவருக்கும், கிளிநொச்சி பளையைச் சேர்ந்த ஒருவருக்கும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,

திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கும், கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மிகிந்தலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,

வவுனியா நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 22 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்மூலம், தென்பகுதியில் இருந்து வடக்கிற்கு பிரவேசிப்பவர்கள் ஊடாக கொரோனா பரவல் அடைந்து பவருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

4 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலனுக்காக மனைவி கு.ழந்தையை து.டி து.டிக்க கொ.லை செ.ய்த சம்பவம் வி.சாரணையில் தெரியவந்துள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் மேலவாஞ்சூரைச் சேர்ந்தவர் கார்த்திக்.

தற்போது 31 வயதாகும் இவருக்கும், 22 வயதாகும் அபர்ணா என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 4 வயதில் அழகான ஆண் கு.ழந்தை உள்ளது.

இந்நிலையில், இந்த தம்பதியினருக்கிடையே கு.ழந்தை பிறந்த சில மாதங்களுக்கு பின்னர் அடிக்கடி பி.ரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் க.ருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து, கார்த்திக் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அபர்ணா கு.ழந்தையுடன் நாகையில் இருந்து வந்தார். இதற்கிடையில், ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (24) என்பவரின் பழக்கம் கிடைக்க, இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

இது போன்ற நிலையில், கடந்த திங்கட் கிழமை, நாகை பொலிசாருக்கு கார்த்திக், தனது கு.ழந்தையை ம.னைவி கொ.லை செ.ய்துவிட்டதாக க.தறியுள்ளார். இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அபர்ணாவை பி.டித்து வி.சாரித்துள்ளனர்,

அப்போது காதலனைப் பற்றியும் தெரியவர, இருவரிடமும் பொலிசார் கி.டுக்குப்பிடி வி.சாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், சம்பவ தினத்தன்று இருவரும் ஒன்றாக இருந்த போது கு.ழந்தை அ.ழுதுகொண்டே இருந்துள்ளது.

இதன் காரணமாக கோ.பமடைந்த சுரேஷ் கு.ழந்தையை அ.டிக்க, கு.ழந்தை தொ.டர்ந்து அ.ழுதுள்ளது. உடனே, அபர்ணா கு.ழந்தையின் க.ழுத்தை சே.லையால் இ.றுக்கி கொ.லை செ.ய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் கு.ழந்தையின் உ.டலை அ.டக்கம் செய்ய முயற்சித்துள்ளனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கார்த்திக்கு போன் செய்து தெரிவித்துள்ளனர். அவர் நாகை காவல்துறைக்கு தகவல் கூறியுள்ளார். தொடர்ந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிசார் அபர்ணாவையும், சுரேஷையும் கைது செய்து சி.றையில் அ.டைத்தனர்.