விவாகரத்து செய்த மனைவியை பார்க்க வந்த முன்னாள் கணவர் : பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

பெண்ணின் முன்னாள் கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் ரேகா ரத்தோர்(35) என்ற பெண் தன்னுடைய கணவர் சுனில் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

தற்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த பெண், கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் தனியே வசித்து வந்ததோடு,

அப்பகுதியில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தியும் வந்துள்ளார். இந்நிலையில் அவரின் கணவர் வேறொரு பெண்ணோடு வாழ்ந்து வந்துள்ளார். சுனில் தன்னுடைய மனைவியை டைவர்ஸ் செய்துள்ள நிலையில்,

அடிக்கடி சென்று தகராறு செய்தும் வந்துள்ளார். சம்பவத்தன்று ரேகாவிற்கும் அவரது கணவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், மனைவி ரேகா மற்றும் மூன்று குழந்தைளுடன் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த அக்கம் பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கூறிய பின்பு, சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பிறகு இந்த கொலை பற்றி துப்பு துலக்கியபோது,

அவரின் முன்னாள் கணவர் குடும்ப தகராறில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுள்ளதாக சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்: நிறுத்த வந்த காதலிக்கு அரங்கேறிய கொடூரம்!!

டெல்லி..

காதலனின் திருமணத்தினை நிறுத்த கூறிய காதலியை அடித்து உதைத்து சாலையில் வீசியுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மகிபல்பூர் பகுதியில் வசிக்கும் 22 வயது பெண்ணொருவர் கடை ஒன்றி வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில், திடீரென காதலனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால் காதலன் தனது காதலிக்கு போன் செய்து தனக்கு வேறொரு பெண்ணோடு கல்யாண ஏற்பாடு நடப்பதாக கூறியதையடுத்து, காதலன் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் திருமண நிகழ்ச்சியில் சென்று அந்த கல்யாணத்தை நிறுத்துமாறு கூச்சல் போட்டுள்ளார். உடனே அந்த காதலனின் உறவினர்கள் அந்த பெண்ணை அடித்து உதைத்து தெருவில் இழுத்து சென்றனர்.

பின்னர் அவரின் உடைகளை கிழித்து சாலையில் வீசியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் காதலன் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாமனார் முன் நிர்வாணமாக நிற்க வைத்து கொடுமை : மருமகள் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்..

ராஜஸ்தானின் பாகூரை சேர்ந்தவர் பைருலால், இவரது மகள் பிரியா(வயது 18). இவருக்கும், முகேஷ் சான்ஸி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த 20 நாட்களில் வரதட்சணை கேட்டு முகேஷின் தாய்- தந்தை பிரியாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்ற பிரியாவை, முகேஷ் சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார்.

எனினும் சில நாட்களிலேயே மீண்டும் பிரியாவை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர். கடந்த ஜூலை 20ம் தேதி வழக்கம் போல் அடித்து துன்புறுத்த, 22ம் தேதி பிரியா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு முன்பாக அவர் பதிவு செய்திருந்த வீடியோவில், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், மாமனார் முன்பு நிர்வாணமாக நிக்க வைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரியாவின் மாமனார், மாமியார் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நடந்தால் நான் செத்துடுவேன்: கதறிய பெண் : இறுதியில் நடந்தது என்ன?

சென்னை..

தனக்கு கட்டாய திருமணம் நடக்க இருப்பதாக இளம்பெண் வாட்ஸ்அப்பில் பதிவிட்ட வீடியோ வைரலானதையடுத்து கடைசி நேரத்தில் அவரது திருமணத்தை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மகள் ஜன்னதுல் பிர்தௌஸ் (22). இவரை, முறை மாமனுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

ஆனால், இந்த திருமணத்திற்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் திருமண வேலைகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

நேற்று காலை இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணப்பெண், இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. எனது முறை மாமனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.

ஆனாலும், எனது பெற்றோர் கட்டாயப்படுத்தி, என் விருப்பம் இல்லாமல் அவருடன் எனக்கு திருமணம் நடத்த உள்ளனர். இந்த திருமணம் நடைபெற்றால் பிறகு நான் உயிருடன் இருக்கப் போவதில்லை,

என தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதை வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு பகிர்ந்தார். இந்த வீடியோவா வைரலானது. இதை பார்த்த புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று காலை திருமணம் நடக்க இருந்த வீட்டிற்கு சென்று,

அந்த இளம்பெண்ணின் திருமணமத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இளம்பெண்ணின் வீடியோ வைரலானதை அடுத்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கணவன் இ.றந்த பின் பெற்றோர் வீட்டில் வசித்த 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவனை இழந்த மகள் வீட்டில் இ.ர.த்.த.ம் கொ.ட்டிய நிலையில் கி.டந்ததை கண்ட அவர் பெற்றோர் அ.திர்ச்சியடைந்தனர். திருச்சி மாவட்டம் பச்சமலை புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவரது மனைவி நிஷா (21). கார்த்திக் கடந்த ஆண்டு 26-ந் திகதி தீ வி.பத்தில் இ.றந்துவிட்டார்.

இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது 1½ வயது கு.ழந்தை இளவேனில் நிலவனுடன் வசித்து வந்தார். கணவரது நினைவு தினத்தையொட்டி நிஷா சோ.கமாக இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தனது ம.க.னை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.று.வி.ட்.டு தனது இ.டது கை ம.ணிக்கட்டு ப.குதியை நிஷா க.த்.தி.யா.ல் அ.றுத்துக்கொண்டு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றார்.

அவரது கை.யில் இ.ருந்து ர.த்.த.ம் கொ.ட்டியது. அந்த சமயத்தில் வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பினர். மகளின் நிலையை கண்டும் பேரனின் ச.டலத்தை க.ண்டும் அ.திர்ச்சியும், ப.தற்றமும் அ.டைந்த அவர்கள் நிஷாவை மீ.ட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீ.விர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று கு.ழந்தையின் உ.டலை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உஷா மீது கொ.லை ம.ற்றும் த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சி செ.ய்ததாக வ.ழக்குப்பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகிறார்.

இளம் பெண்ணை அ.டித்து கொ.ன்று பாலத்தில் தொ.ங்கவிட்ட குடும்பத்தினர் : நடந்தது என்ன?

இந்தியாவில்..

இந்தியாவில் 17 வயது இளம் பெண் குடும்பத்தினரால் அ.டித்து கொ.ல்லப்பட்ட ச.ம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அ.திர வைத்துள்ளது. உத்தர பிரதேசத்தின் Deoria மாவட்டத்தில் உள்ள Savreji Kharf கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான நேஹா பாஸ்வான் என்ற இளம் பெண்ணே கொ.ல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கொ.ல்லப்பட்ட நேஹாவின் தாய் சகுந்தலா தேவி பாஸ்வான் கூறியதாவது, சம்பவத்தன்று நாள் முழுவதும் விரதம் இருந்த நேஹா, மாலையில் ஜீன்ஸ், டாப் அணிந்து பூஜை செய்தார்.

இதன் போது ஜீன்ஸ் அணிந்ததற்கு அவரது தாத்தா, பாட்டி எ.திர்ப்பு தெரிவித்தனர், ஆனால், ஜீன்ஸ் அணிவதற்கு தான் தயாரிக்கப்பட்டது, நான் போடுவேன் என கூறினார்.

வா.க்குவாதம் முற்றி வ.ன்முறை ஏற்பட்டது, தாத்தா, பாட்டி உட்பட குடும்பத்தினர் நேஹாவை க.ட்டையால் ச.ரமாரியாக தா.க்கினர். அதில் அவர் ம.யங்கி கீ.ழே ச.ரிந்தார், பின் நேஹாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவதாக அவர்கள் ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

என்னை வீட்டிலேயே விட்டுச் சென்றனர், உடனே நான் எனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பினேன், ஆனால், நேஹா மருத்துவமனையில் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த நாள் காலை, பாலத்தில் ஒரு பெண் ச.டலம் தொ.ங்குவதாக தெரியவந்தது, சம்பவயிடத்திற்கு சென்ற விசாரித்த போது அது நேஹாவின் ச.டலம் என தெரியவந்தது என சகுந்தலா தேவி கூறினார்.

நேஹாவின் தாத்தா, பாட்டி, மாமாக்கள், அத்தைகள், உறவினர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் உட்பட 10 பேர் மீது கொ.லை மற்றும் ஆ.தாரங்களை அ.ழித்ததாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாத்தா, பாட்டி, மாமா மற்றும் ஆட்டோ டிரைவர் என நான்கு பேரை கை.து செய்து வி.சாரணை நடத்தி வருவதாகவும், மற்ற கு.ற்றவாளிகளை தே.டி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனாவை அடுத்து இலங்கையை ஆக்கிரமிக்கும் மற்றுமொரு ஆபத்து!!

டெங்கு..

நாட்டில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், 10 மாவட்டங்கள் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் 16,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக நிபுணர் டொக்டர் ஹிமாலி ஹேரத் தெரிவித்தார்.

பதிவான ஒவ்வொரு 10 டெங்கு நோயாளிகளில் 7 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஆண்டு இதுவரை 7 பேர் டெங்கு நோயால் இறந்துள்ளனர் என்று நிபுணர் தெரிவித்தார்.

கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், கம்பாஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கோலை ஆகிய 10 மாவட்டங்கள் டெங்கு நோய்க்கான அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் டெங்கு நுளம்புகள் செயற்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கிணற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் அதிசயம்!!

நீல இரத்தினகல்..

உலகின் மிகப்பெரிய நீல இரத்தினகல் ஒன்று இலங்கையில் கண்டுபிடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இரத்தினகற்களுக்கு புகழ்பெற்ற இரத்தினரிபுரியில் நபர் ஒருவர் தனது வீட்டின் கிணற்றை தோண்டிக் கொண்டிருந்த போது இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரத்தின கல் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கல் சுமார் 510 கிலோகிராம் எடையைக் கொண்டுள்ளது. இது 2.5 மில்லியன் கரட் பெறுமதியானதெனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த கல்லிற்கு செரண்டிபிட்டி சபையர் என்று பெயரிடப்பட்டுள்ளதென கூறப்படுகின்றது.

கிணற்றை தோண்டிக் கொண்டிருந்த சிலர் அரிய வகை கற்கள் தொடர்பில் தன்னிடம் தெளிவுப்படுத்தியதாக கல்லின் உரிமையாளரான கமகே என்பவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக தனது முழு பெயரையோ அல்லது இடத்தையோ வெளியிட கமகே விரும்பவில்லை. மூன்றாம் தலைமுறை இரத்தினகல் வர்த்தகரான கமகே, இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் கல்லில் இருந்த மண்ணை அகற்றி, அதனை பகுப்பாய்வு செய்து சான்றிதழ் வழங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடங்களாகியுள்ளது.

இவ்வளவு பெரிய கல்லை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இது சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என புகழ்பெற்ற இரத்தினகல் ஆய்வாளர் காமினி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இந்த கல் சர்வதேச நிபுணர்களையும் ஈர்க்கும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சிறப்பு நட்சத்திர இரத்தினகல் என கூறப்படுகின்றது.

உலகிலேயே மிகப்பெரிய கல்லாக இது காணப்படுகின்றது. அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்வதற்கே அதிகம் ஆர்வம் காட்டப்படும் என தாங்கள் நம்புதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!!

அரசாங்க ஊழியர்களுக்கு..

அடுத்த மாதம் முதல் அரசாங்க ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்தளவான பணியாளர்களுடன் நிறுவன நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அமைச்சின் செயலாளர்கள் பலர் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து அரச ஊழியர்களையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களின் ஊழியர்கள், தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் பலி!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெல்பன் Dandenong பிரதேச வீடொன்றில் இந்த சம்பவம் நேற்று 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் ரித்திஷ் கிருஷ்ணநீதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டின் Gas heater மூலம் ஏற்பட்ட தீ, பற்றி எரிந்து வேகமாக வீட்டின் ஏனைய இடங்களுக்கும் பரவியிருக்கிறது. ரித்திஷ் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் போகமுடியாதளவுக்கு வீட்டினை தீ சூழ்ந்து எரிந்திருக்கிறது.

ரித்திஷின் தாயார் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மகனை காப்பாற்றுவதற்கு முயற்சிசெய்துள்ளார். அவரது கைகளில் படுகாயமேற்பட்டபோதும் மகனைக்காப்பாற்ற முடியவில்லை.

இந்த சமயத்தில், அவர்களது அயலவர் ஒருவரும், அந்த வீட்டில் தங்கியிருந்த குடும்ப நண்பரும் இணைந்துஅறையை உடைத்துக்கொண்டு உள்ளே போய் ரித்திஷை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்கள்.

ஆனால், அதற்கிடையில் ரித்திஷ் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்றபோது ரித்திஷின் தகப்பனார் வீட்டிலிருந்து பத்துநிமிட தூரத்தில் வந்துகொண்டிருந்திருக்கிறார். ஆனால், அவர் வருவதற்குள் மகன் இறந்துவிட்டார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினரும் அயலவர்களும் சேர்ந்து பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை ஒருவாறு அணைத்து முடித்தார்கள். ரித்திஷின் சகோதரனும் சகோதரியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

ரித்திஷ் குடும்பம் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. Gas heater-இலிருந்து ஏற்பட்ட தீ விபத்து இது என்று தெரிவித்துள்ள பொலீஸார், இதற்கு சந்தேகத்துக்கிடமான வேறு காரணங்கள் எதுவும் கிடையாது என்று கூறியுள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளி தலைமறைவான நிலையில் பொலிஸாரால் மீட்பு!!

கொரோனா..

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த விலைமாது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதியில் நின்றிருந்த பாலியல் தொழிலாளி ஒருவரிடமும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆயினும் குறித்த பெண் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிசாரின் உதவியுடன் இன்று கண்டுபிடிக்கப்பட்டு பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

வவுனியாவில் இரட்டைக் கொலையுடன் தொடர்புடையவர் 11 வருடங்களின் பின்னர் கைது!!

பன்றிக்கெய்தகுளம் பகுதியில்..

இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் 11 வருடங்களின் பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுளார்.
வவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கணவன் மனைவி ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் அந்தக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் குறித்த இருவரும் நீதிமன்ற வழக்கு தவணைகளில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தனர். அவர்களில் ஒருவர் ஓமந்தை பொலிசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் இன்று (27) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். 11 வருடங்களின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

இலங்கையை முழுமையாக திறப்பது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!!

ஜனாதிபதி வெளியிட்ட தகவல்..

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்றைய தினம் இந்த விடயத்தை அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஜுலை மற்றும் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் மேலும் 10.5 மில்லியன் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை 80 வீதம் வரையில் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக செப்டெம்பர் மாதத்தில் நாடு முழுமையாக திறக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்கூடு : நீதிமன்றில் வழக்கு தாக்கல்!!

மின் கடத்திக்கூடு..

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்கூடு காணப்பட்டமை தொடர்பில் சுகாதார பரிசோதகர் ஊடாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று பகல் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவு பொதியொன்றை நுகர்வோர் பெற்றுச்சென்றுள்ளனர். குறித்த உணவுப் பொதியில் மின்கடத்திக்கூடு ஒன்று காணப்பட்டமை தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினர் மற்றம் சுகாதார பரிசோதகருக்கு நுகர்வோரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உணவுப்பொதியில் மின்கடத்திக்கூடு காணப்படுவது தொடர்பில் உணவக உரிமையாளரிடம் வினவியபோது, அண்மையில் இலத்திரனியல் உபகரணம் ஒன்று திருத்தப்பட்டுள்ளதாகவும், அதில் காணப்பட்ட மின்கடத்திக்கூடு தவறுதலாக விழுத்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்தள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கடை உரிமையாளரிடம் வினவியபொழுது,தான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாகவும், இவ்விடயம் தொடர்பில் உணவக ஊழியர்களிடம் வினவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த உணவு பொதியை பெற்றுக்கொண்ட நுகர்வோரின் பாதுகாப்பு தொடர்பில் அவரிடம் நுகர்வோர் வினவியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையை மெற்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் மற்றம் கரைச்சி பிரதேச சபையினரின் கவனத்திற்கு நுகர்வோரால் கொண்டு செல்லப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மெற்கொண்டதுடன், குறித்த விடம் தொடர்பில் முறைப்பாட்டினையும் நுகர்வோரிடம் பெற்றுக்கொண்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் பெற்றுக்கொண்ட சுகாதார பரிசோதகர் உணவகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும் பார்வையிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை அல்லது பிரிதொரு தினத்தில்கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் உணவக ஊழியர்களிடம் குறிப்பிடடிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மரணத்திற்கும் சில நிமிடங்கள் முன்பு பதிவிட்ட புகைப்படம் : நிலச்சரிவில் சிக்கிய இளம் மருத்துவர்!!

இமாச்சல பிரதேசத்தில்..

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் மரணமடைந்ததுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், குறித்த விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ள இளம் மருத்துவர் தொடர்பில் உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் இந்தியாவின் கடைசி புள்ளியில் உள்ளேன் என்று குறிப்பிட்டு மருத்துவர் தீபா ஷர்மா மரணத்திற்கும் சில நிமிடங்கள் முன்பு பதிவு செய்த புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.

அவரது சமூக ஊடக பக்கம் முழுமையும் இமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்த புகைப்படங்களால் நிரம்பியுள்ளது. இதனிடையே, இமாச்சல பிரதேசத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்குவதாக கூறி உள்ளார்.

தனது தோட்டத்தில் ம.து அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

இருதயராஜ்…

தனது தோட்டத்தில் ம.து அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் கு.த்.தி கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ள ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே அண்ணாமலை நகரில் இருதயராஜ் என்பவரது தோட்டத்தில் ம.து அ.ருந்தி கொண்டு இருந்த 10 பேர் கொண்ட கும்பலை தோட்டகாரர்கள் கண்டித்துள்ளனர்.

அதற்கு அவர்கள் செவி சாய்க்காமல் தொடர்ந்து அங்கேயே ம.து அருந்தி வந்துள்ளனர். இதையடுத்து, தோட்டத்தில் ஒரு கு.ம்.பல் மது அ.ருந்தி வருவதாக ஆடு மேய்பவர்கள் தோட்டத்தின் உரிமையாளர் இருதயராஜூக்கு தகவல் தந்துள்ளனர்.

இருதயராஜூக்கு ஜோசப்சேவியர் (25) கிரிஸ்டோபர் (22) ஆகிய மகன்கள் உள்ளனர். இதையடுத்து, இருதயராஜ் மகன்கள் இருவரையும் அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்று கு.ம்.பலிடம் தட்டி கேட்டுள்ளார்.

அப்போது எற்பட்ட த.க.ரா.றில் க.த்.தி.யால் கு.த்.தி.யதில் கிரிஸ்டோபர் (22) சம்பவ இடத்திலே ப.லி.யா.னார். தொடர்ந்து, அண்ணன் ஜோசப் சேவியருக்கும் க.த்.தி.குத்து விழுந்துள்ளது, தந்தை இருதயராஜூம் முகத்தில் கா.ய.த்துடன் தப்பியுள்ளார்.

இந்த ச.ம்.பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போ.லீ.சார் கா.ய.ம் அ.டைந்தவர்களை சி.கி.ச்சைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிவகங்கை நகர் காவல் துறையினர் மற்றும் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் தலைமையில் ச.ம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

தப்பி ஓ.டி.ய கு.ம்.ப.லை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றர். ச.ம்.பவம் கு.டி.போ.தை.யில் நடந்ததா?கூ.லி.ப்.படையால் நடந்ததா? அல்லது இ.ட.த்.த.கராறு காரணமா? முன்பகையா? என பல்வேறு கோணங்களில் போ.லி.சார் விசாரித்து வருகின்றனர்.

இருதயராஜின் இரண்டு மகன்களும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ம.ரு.த்துவபடிப்பு படித்து வருகின்றனர். முதல் மகன் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இ.ற.ந்த கிறிஸ்டோபர் முதாலம் ஆண்டு படித்து வந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக இருவரும் தற்போது ஊரில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளனர்.