வவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக திரேஸ்குமார் நியமனம்!!

தி.திரேஸ்குமார்..

வவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடக்கின் பிரதம செயலாளராக பதவியேற்றுள்ள நிலையில்,

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அரச அதிபர் வெற்றிடத்திற்கு மேலதிக அரசாங்க அதிபராக செயற்பட்ட தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக உள்நாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்கு தெரிவான திரேஸ்குமார் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய வேளை 10.02.2016 அன்று முதல் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மனைவியின் சகோதரியான மச்சினியை சீ.ரழித்து கொ.லை செய்த கணவன் : அ.திர்ச்சிப் பின்னணி!!

இந்தியாவில்..

இந்தியாவில் தனது மனைவியின் சகோதரியான மச்சினியை சீ.ரழித்து கொ.லை செ.ய்.த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆலப்புழாவை சேர்ந்தவர் ரத்தீஷ் என்கிற உன்னி (40).

இவர் மனைவி நீத்து. நீத்து மற்றும் அவர் சகோதரி ஹரிகிருஷ்ணா (25) ஆகிய இருவரும் வெவ்வேறு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் ரத்தீஷுக்கும், ஹரிகிருஷ்ணாவுக்கும் தொ.டர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் வேறு ஒரு நபரை காதலித்த ஹரிகிருஷ்ணா அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இந்த விடயம் ரத்தீஷுக்கு ஆ.த்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று நீத்து இரவு பணியில் இருந்த நிலையில் ஹரிகிருஷ்ணாவை தனது வீட்டுக்கு ரத்தீஷ் அழைத்து வந்தார். அங்கு இருவருக்கும் இது தொடர்பாக ச.ண்டை ஏற்பட்டது.

அப்போது ஹரிகிருஷ்ணாவை சீரழித்த ரத்தீஷ் பின்னர் அவரை கொ.லை செ.ய்துவிட்டு த.ப்.பி.யோடிவிட்டார். பின்னர் இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரிகிருஷ்ணாவின் ச.டலத்தை கை.ப்.ப.ற்றினார்கள்.

பி.ரேத ப.ரிசோதனையில் அவர் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.யப்பட்டு கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.து தெரியவந்தது. இதனிடையில் த.லைமறைவாக இருந்த ரத்தீஷை பொலிசார் கை.து செய்துள்ளனர்.

திருமணம் முடிந்த 3 மாதத்திற்குள் இளம் பெண் எடுத்த வி.பரீத முடிவு : பெற்றோரிடம் சொன்ன வார்த்தை!!

இந்தியாவில்…

இந்தியாவில் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குள் இளம் பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொ.ல்லம் மாவட்டம் Sasthamkotta பகுதியைச் சேர்ந்தவர் தன்யா தாஸ். இவருக்கும் ராஜேஸ் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

ராஜேஸ் லொரி ஓட்டுனராக உள்ளது. இந்நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களிலே கணவர் தன்னை து.ன்.பு.று.த்.து.வ.தா.க, தன்யா தாஸ் தன் பெற்றோரிடம் கூறி அ.ழுதுள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று ராஜேஸ் வேலைக்கு சென்று திரும்பிய போது, மனைவி தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி கி.ட.ப்.ப.தை.க் க.ண்டு அ.தி.ர்.ந்.து.ள்.ளா.ர். அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ந.டத்தப்பட்ட வி.சாரணையில், பெண் வீட்டார் மாப்பிள்ளை மீது ச.ந்தேகப்படுவதால், பி.ரேத ப.ரிசோதனை முடிவுக்கு பின்னரே எதையும் சொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.

ஏனெனில் கடந்த வெள்ளிக் கிழமை இந்த தம்பதிக்கிடையே க.டுமையான வா.க்குவாதம் நடந்துள்ளது, அதன் பின்னரே இந்த சம்பவம் நடந்துள்ளதால், இது நிச்சயமாக கொ.லை தா.ன், ஆனால் அவன் நா.டகமாடுவதாக உறவினர்கள் கூறிவருவதாக, அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கணவன், மனைவி சேர்ந்து செய்த கேவலமான செயல் : விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஆள் இல்லாத வீட்டிற்குள் ஜோடியாக புகுந்த கணவன், மனைவியை, அக்கம் பக்கத்தினர் பிடித்து அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரபுகுமார் (40). இவருக்கு விமலா(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதால், வழக்கம் நேற்று இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது, இவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஆணும், பெண்ணும் புகுந்து வீட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த பொருட்களை எல்லாம் திருட துவங்கியுள்ளனர்.

ஆள், இல்லாத வீட்டிற்குள் சத்தம் கேட்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக ஓடி வந்து அவர்களை பிடிக்க முற்பட்ட போது, தப்பி ஓடியுள்ளனர்.

அதன் பின், இருவரையும் சுற்றி வளைத்த அப்பகுதியினர், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதையடுத்து, விமலாவிற்கு இது தகவல் தெரிவிக்க, அவர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, பொலிசார் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.

அங்கு சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் திருவள்ளூர் அருகே கடம்பத்தூர், கசவா நல்லாத்தூர் கிராமத்தைச் சார்ந்த கருணாபிரபு (36), அவரது மனைவி சௌமியா (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த பொலிசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

விபத்து..

மட்டக்களப்பு நகரில் இரண்டு கார்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகரின் மணிகூண்டு கோபுர சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு கார்கள் மோதிக்கொண்ட நிலையில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிய நிலையில், தடம்புரண்டதனால் அதில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த பகுதிக்குச் சென்ற மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

பாடசாலைகளை திறப்பது தொடர்பில்..

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியும் என்று கல்வி அமைச்சகம் நம்புவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவை வழங்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் படி மற்றும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் கீழ் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும். எனவே, செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் முழு ஆதரவை தாம் கோருவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இவ்வாண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை நடத்தப்படும் திகதி வெளியானது!!

க.பொ.த சாதாரணதர பரீட்சை..

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, பரீட்சையை பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் மார்ச் 03ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மகா வித்தியாலய 1998ம் வருட பழைய மாணவர்களினால் இரண்டு திறன் வகுப்பறைகள் நிர்மாணிப்பு!!

திறன் வகுப்பறைகள்..

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய மாணவர்களினால் (Vtamm Bulls) இரண்டு வகுப்பறைகள் திருத்தம் மேற்கொண்டதுடன் அதனை புதுப்பித்து திறன் வகுப்பறைகளாக மாற்றியுள்ளனர்.

பாடசாலையில் கற்றலை முடித்து சில வருடங்களின் அவர்களின் வாழ்க்கை வியாபாரம் என செல்கின்ற இந்த சமூகத்திற்கு முன்மாதிரியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய மாணவர்கள் (Vtamm Bulls) ஒன்றிணைந்து,

1.55 மில்லியன் ரூபாய் நிதியில் 75 அகலம் உடைய இரு ஸ்மாட் திரைகளை கொள்வனவு செய்ததுடன் பராமரிப்பு அற்ற நிலையில் காணப்பட்ட இரண்டு வகுப்பறைகளை திருத்தம் மேற்கொண்டு அதனை திறன் வகுப்பறைகளாக மாற்றியுள்ளனர்.

Vtamm Bulls என்ற நாமத்தில் செயற்படும் 1998 ஆம் வருட பழைய மாணவர்கள் கொரோனா பயணத்தடை காலத்திலும் பல மக்களுக்கு நிவாரணப்பொருட்களையும் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணிகளைத் துப்பரவு செய்த ஊடகவியலாளர்கள் பொலிசாரால் விசாரணை!!

ஊடகவியலாளர்கள்..

வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதற்கென அடையாளம் காட்டப்பட்டிருந்த காணிகளில் காணப்பட்ட பாதீனியம் மற்றும் முட்செடிகளை அகற்றி சுத்தம் செய்த ஊடகவியலாளரிடம் ஓமந்தை பொலிசார் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, வேப்பங்குளம் அரச வீட்டுத்திட்டத்திற்கு அருகாமையில் வவுனியா பிராந்திய தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் வழங்குவதற்காக 2018 ஆம் ஆண்டு அப்போதைய பிரதேச செயலாளரால் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த காணியை ஊடகவியலாளருக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வீட்டு திட்டம் வழங்க வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கும், ஊடகவியலாளருக்கும் பிரதேச செயலாளரால் கடிதம் வழங்கப்பட்டது.

வனவளத் திணைக்களத்திடம் இருந்து குறித்த காணியை ஊடகவியலாளர்களின் வீட்டுதிட்டத்திற்காக விடுவிக்குமாறும் பிரதேச செயலாளரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி குறித்த காணியை வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா ஊடகவியலாளர் சங்கத்தினர் ஜனாதிபதி செயலகம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, வனவள பாதுகாப்பு அமைச்சு, வனவள ஆணையாளர் நாயகம் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியிருந்தனர்.

அதற்கமைவாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றில் இருந்து காணிகளை விடுவித்து ஊடகவியலாளருக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக வனவளத் திணைக்களத்தின் அனுமதியுடன் ஊடகவியலாளர்கள் குறித்த பகுதியில் இருந்த காடுகளை 2018 ஆம் ஆண்டு துப்பரவு செய்து அதன் பின் தமது காணிகளுக்கான கம்பி கட்டைகளை இட்டு சுத்தம் செய்து பராமரித்தனர்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டம் வழங்குவதற்காக அப்போதைய அமைச்சரால் அடிக்கல் நாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக வீட்டுதிட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் வவுனியா பிரதேச செயலாளர் மாற்றம் பெற்று புதிய பிரதேச செயலாளராக நா.கமலதாசன் அவர்கள் பதவியேற்ற பின்னர் குறித்த காணிகளை ஊடகவியலாளருக்கு வழங்க முடியாது என தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றார்.

ஆனால் ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரும் பெருமளவு பணத்தை செலவு செய்து காணிகளை சுத்தம் செய்து வேலிகள் இட்டபின் பிரதேச செயலாளர் இவ்வாறு நடந்து கொள்வது தவறு எனவும் தமது காணிகளை விடுவிக்குமாறும் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கோரியிருந்தனர்.

இதன்போது அங்குள்ள அதிகாரிகள் சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த காணியை ஊடகவியலாளருக்கு வழங்கலாம் என கூறிய போதும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் பேசப்பட்ட பல விடயங்களை தவிர்ந்து காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் கருத்துக்களை முதன்மைப்படுத்தி கூட்ட அறிக்கைகள் எழுதப்பட்டு குறித்த காணியை வழங்குவதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றது.

குறித்த காணியினை விடுவிக்குமாறு பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களிம் ஊடகவியலாளர்கள் எழுத்து மூலம் கோரியபோதும், இதுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையிலேயே ஊடகவியலாளர்கள் தாம் பணம் கொடுத்து துப்பரவு செய்த காணிகளுக்குள் வளர்ந்துள்ள பாதீனியம் மற்றும் பற்றைகளை அகற்றி சுத்தம் செய்த போது அங்கு வந்த அப் பகுதி கிராம அலுவலர் வேலைகளை செய்ய வேண்டாம் எனக் கூறியதுடன், பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் ஓமந்தை பொலிசில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த காணிக்கு வருகை தந்த பொலிசார் ஊடகவியலாளர்களை பொலிஸ் நிலையம் அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன், பிரதேச செயலாளரை எதிர்வரும் செவ்வாய்கிழமை சந்தித்து விட்டு காணி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி ஊடகவியலாளரை அனுப்பியிருந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தமக்கு வழங்குப்பட்ட காணியை மீள கையகப்படுத்த பிரதேச செயலாளர் எடுக்கும் முயற்சி தொடர்பில் ஊடகவியலாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு தெரிந்தும் மௌனம் காப்பது குறித்தும் ஊடகவியலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் 25 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாறும் வியாபார நிலைய ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று (26.07.2021)கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் அங்கு பணியாற்றும் 25 ஊழியர்களிற்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு இன்றையதினம் சென்ற சுகாதாரப் பிரிவினர் ஐந்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களை தனிமைப்படுத்தியுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை இனம்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

வவுனியாவில் ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்..

சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (26.07) காலை குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் மரணித்த சிறுமி ஹிசாலியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், அரசியல் யாப்பில் 18 வயதிற்கு உட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என கூறப்பட்டுள்ள போதும் அவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை,

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் இடைத்தரகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்,

அத்துடன் சட்டமியற்றும் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளை அதிகரிப்பதன் மூலமே இந்த நாட்டில் பெண்களுக்கு சார்பான சட்ட ஏற்பாடுகளை கொண்டு வந்து முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது ‘அரசே ஹிசாலினியை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை வழங்கு, பெண்களை நாட்டின் கண்களாக நினைத்து தீண்டாதிருப்போம்,

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாது அவர்களது உரிமைகளை வழங்குவோம், சிறுவர்களுக்கான பாதுகாப்பை கட்டியெழுப்போம்’ என எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தில் வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் பெண் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பிரபல நடிகை பொலிசாரால் கைது!!

உபெக்ஷா சுவர்ணமாலி..

இலங்கையின் பிரபல நடிகையான உபெக்ஷா சுவர்ணமாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் விபத்து தொடர்பான எந்தவொரு தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.

இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உபெக்ஷா சுவர்ணமாலி என்ற நடிகை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உறுப்பினராகும்.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன பூசை வழிபாடு!!

சமன் பந்துலசேன..

வவுனியா மாவட்டத்தின் அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடக்கின் பிரமத செயலாளராக ஜனாதிபதியால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன யாழ்ப்பாணத்தில் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் காலை பூசை வழிபாட்டில் ஈடுபட்டார்.

இவ் வழிபாட்டு நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா உட்பட 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

எச்சரிக்கை..

இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை நிலவுவதால் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா, திருகோணமலை, அனுராதபுரம் , புத்தளம், குருநாகல், கேகாலை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு , வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி!!

சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி..

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்திற்கு லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் ஊடாக சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி கையளிக்கப்பட்டது.

வவுனியா கோவிற்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையில் அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பன இயங்கி வருகின்றன.

சிவன் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் ஊடாக சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

வவுனியாவில் சந்தை உள்வட்ட வீதியைச் சேர்ந்த 11 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த 11 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று இரவு (25.07) வெளியாகியுள்ளன.

அதில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பை பேணிய மேலும் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வவுனியாவில மேலும் 14 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.