கடந்த 14 நாட்களுக்குள் கொவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ள அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவிட் பரவலைக் குறிக்கும் அண்மைய வரைபடம், MOH என்ற மருத்துவ அதிகாரிகள் பகுதிகளை வகைப்படுத்தி வெளியிடப்பட்டது.
இதன்படி, முசலி, பலுகஸ்வெவ, சேருவில, செங்கலடி, தெற்கு காரைதீவு, மற்றும் லகுகல மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் குறைந்த கோவிட் தொற்றுக்கள் உள்ள பகுதிகளாகக் குறிக்கப்பட்டன.
அதேநேரம் மாந்தை கிழக்கு மற்றும் வெலிஓய பகுதிகள் ஒரு தொற்றுக்கூட பதிவு செய்யப்படாத பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன. கடந்த 14 நாட்களுக்குள் கொவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ள அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
வவுனியா- கூமாங்குளத்தில் 7 பேர் உட்பட 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (18.06) வெளியாகின.
அதில், கூமாங்குளம் பகுதியில் ஏழு பேருக்கும், தோணிக்கல் பொதுக்கிணறு வீதியில் ஒருவருக்கும், தேக்கவத்தைப் பகுதியில் இருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், கற்பகபுரம் பகுதியில் நான்கு பேருக்கும்,
திருநாவற்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், தாலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சமயபுரம் பகுதியில் மூன்று பேருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒருவருக்கும், கற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிதம்பரபுரம் பகுதியில் ஒருவருக்கும்,
தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், பாலமைக்கல் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், சாளம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மரக்காரம்பளை பகுதியில் ஒருவருக்கும் என 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த தொற்றாளர்களில் வவுனியாவில் உள்ள இரு ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 7 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினத்தில் (17.06.2021) மாத்திரம் நாட்டில் 55 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்ததகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,480 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு உ.யிரிழந்தவர்களில் 23 பெண்களும் 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, இன்றைய தினத்தில் இதுவரை 1,825 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 234,624 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மொத்த கோவிட் தொற்றாளர்களில் 197,259 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாயார் இறந்ததை அறியாவயதில் தாயின் அஸ்தியுடன் தாயகம் திரும்பிய குழந்தை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலவன். இவரது மனைவி பாரதி இந்த தம்பதியருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்த நிலையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட மூத்த மகனை கவனித்துக் கொள்வதற்கே வேலவனுக்கு நேரம் சரியாக இருந்தது.
மகனின் சிகிச்சைக்கு அதிக தொகை செலவிட்ட நிலையில் மகன் உயிரிழந்ததால், ஒரு கட்டத்தில் குடும்பம் வறுமையின் பிடியில் சி.க்கியது. வேலனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரது மனைவி பாரதி கடந்த இரு ஆண்டுகள் துபாயில் பணிப்பெண்ணாக வேலைக்கு சென்றதால் ஓரளவு சிக்கலின்றி வாழ்க்கை ஒடியது.
இந்த நிலையில் கொரோனா காரணமாக பாரதி இந்தியா திரும்பினார். கடந்த மார்ச் மாதம் மீண்டும் தனது 7 மாத கைக்குழந்தையான தேவேசுடன் துபாய்க்கு வீட்டு வேலைக்கு சென்ற பாரதி அங்குள்ள வீடு ஒன்றில் பணிபுரிந்து வந்த போது எதிர்பாராவிதமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.
இதையடுத்து அங்குள்ள ரஷீத் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாரதி சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவரது குழந்தையை அவருடன் பணிபுரிந்த பெண்கள் பா.துகாப்புடன் பராமரித்து வந்தனர்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் பாரதி கடந்த 29ஆம் தேதி பாரதி உ.யிரிழந்தார். இதுகுறித்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மனைவியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு பணமில்லாத வேலவன் அங்கேயே இறுதி சடங்குகளை செய்து விடுமாறு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தார். அவரது அனுமதியின் பேரில் உடல் அங்கேயே எரியூட்டப்பட்டது.
பெற்ற தாயை இழந்து தந்தையின் முகம் காணாது தவித்த கைக்குழந்தையின் நிலை கண்டு கண் க.லங்கிய அவரது தோழிகள் இதுகுறித்து துபாய் நகர திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதன் பிறகு அடுத்தடுத்த காரியங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
கள்ளக்குறிச்சி எம்பி கௌதம சிகாமணி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு குழந்தை படும் துயர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூதரகத்துடனும் அங்குள்ள திமுக நிர்வாகிகளுடனும் பேசி அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன் பின்னர் இ.றந்த தாய் பாரதியின் அஸ்தியுடன் 11 மாதக் குழந்தை தேவேசை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இண்டிகோ விமானம் மூலம் துபாயிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்து, தந்தை வேலவனிடம் ஒப்படைத்தார்.
தாயில்லாமல் தவித்த 11 மாத குழந்தையான தனது மகனை பத்திரமாக தமிழகம் அழைத்து வர உதவி புரிந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்ட வேலவன், கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி தனது குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் ஏற்றுக்கொண்டு, பொருளாதார ரீதியாக உதவி புரிவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தாயை இழந்து தவித்த குழந்தையை கண்ணை இமை காப்பது போல் தாயுள்ளத்தோடு காத்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சுமார் இரண்டு மாத காலம் வளர்த்தெடுத்த பாரதியின் தோழிகள் மனித நேயம் இன்னும் மரித்து விடவில்லை என்பதற்கு மற்றும் ஒரு சான்று.
இந்திய மாநிலம் கேரளாவில் வீடு புகுந்து இளம் பெண் தா.க்.க.ப்.ப.ட்.டு ம.ர.ண.ம.டை.ந்.த சம்பவத்தில் சட்டக்கலூரி மாணவர் சி.க்.கியுள்ளார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பாலசந்திரன் என்பவரது மூத்த மகள் 21 வயதான திரிஷ்யா.
இவரை அவருடன் படித்த பள்ளி நண்பர் வினீஷ் வினோத் ( 21) ஒருதலையாக காதலித்து வந்தார். திரிஷ்யா எங்கு சென்றாலும் அவரை வினோத் பின் தொடர்வது வாடிக்கையாக நடந்தது.
இது குறித்து திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பாலசந்திரன் பொலிசாரை நாடி பு.கா.ர் அளித்தார். இதனால் ஆ.த்திரம் அ.டைந்த வினோத் கடந்த 16ம் திகதி பாலசந்திரனின் கடைக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கடைக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் அறிந்து பாலச்சந்திரம் குடியிருப்பில் இருந்து வெளியேறிய நிலையில் வினோத் திரிஷ்யாவின் வீட்டுக்கு சென்று, மேல் மாடியில் இருந்த திரிஷ்யாவை ம.றைத்து வைத்து இருந்த க.த்.தி.யா.ல் ச.ர.மா.ரியாக கு.த்.தி.னா.ர்.
அதை தடுக்க வந்த திரிஷ்யாவின் சகோதரி தேவஸ்ரீக்கும் க.த்.தி.க் கு.த்.து வி.ழுந்தது. திரிஷ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ப.லி.யா.னா.ர். திரிஷ்யாவின் உ.ட.ல் முழுவதும் 22 க.த்.தி.க்.கு.த்.து கா.ய.ங்.க.ள் இ.ருந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
தேவஸ்ரீ உ.யி.ரு.க்.கு ஆ.பத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, த.ப்பிக்க முயன்ற வினோத்தை ஆட்டோ ஓட்டுனர் ஜவகர் என்பவர் சாமர்த்தியமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வினோத் சட்டக்கல்வி படித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர், சிறுமிகளிடம் ஆ.பா.ச.மா.க பேசி வீடியோவாக பதிவிட்ட யூ-டியூபர் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ளார். பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன். இவர் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் கி.ரை.ம் பொலிசில் பலர் பு.கா.ர் அளித்துள்ளனர்.
அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சி.றுவர் சி.றுமிகளுடன் ஆ.பா.ச.மா.க பேசி லட்சக்கணக்கில் பணம் ப.றி.த்.து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கிரைம் பிரிவு பொலிசார் வி.சாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் தற்போது த.லை.ம.றை.வா.க இருப்பது பொலிஸ் வி.சாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, த.னிப்படை பொலிசார் அவரை தீ.விரமாக தே.டி வந்தனர். இந்த நிலையில், த.லை.ம.றை.வா.க இருந்த பப்ஜி மதன் தருமபுரியில் உறவினர் வீட்டில் ப.து.ங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலைக்குள் பப்ஜி மதன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யூடியூப் சேனல்கள் மூலம் பப்ஜி மதன் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி இருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதனின் யூடியூப் சேனலுக்கு 8 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். பப்ஜி மதன் கேர்ள் பேன், ரிச்சி கேமிங் ஆகிய யூடியூப் சேனல்களில் பெண்களுடன் மதன் நீண்ட நேரம் ஆ.பா.ச.மா.க உரையாடி இருக்கிறார். இதற்கான ஆதாரங்களையும் பொலிசார் திரட்டி உள்ளனர்.
ஏற்கனவே, இந்த வழக்கில் பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தின் நிர்வாகியாக செயல்பட்ட அவரது மனைவி கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளார். இதனிடையில், பப்ஜி மதனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயில் வீடு ஒன்றில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 78 பேரில் 24 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ஏனைய 54 பேர் நேற்றில் இருந்து மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
15 பேர் மாத்திரம் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட திருமணத்தில் சுமார் 100 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.
பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் திருமணம் நடந்த வீட்டை சுற்றிவளைத்து அதில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 24 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனால் ஏனையவர்களின் தனிமைப்படுத்தல் நாட்களை மேலும் 14 நாட்களாக நீடிப்பதற்கு நேற்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றானது தற்போது உலகின் பல நாடுகளை முடக்கி வைத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்த விடயமே.
இந்த நிலையில் இலங்கையிலும் கோவிட் தொற்று அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பயணத்தடையால் பலரின் அன்றாட வேலைகள் ஸ்தம்பித்துள்ளன.
அத்துடன் மாணவர்களின் கல்வி நிலையும் கேள்விக்குறியாகவே உள்ளது. பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் இணைய வழியாக கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் சில மாணவர்கள் நன்மையடைந்துள்ள போதும் பல மாணவர்கள் அதிலும் குறிப்பாக வறுமையான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இணையவழி கற்கைக்கு தேவையான ஸ்மார்ட் தொலைபேசி, கணனி அல்லது மடிக்கணனி போன்றவை இல்லாமலும் அப்படியே அவை இருந்தாலும் கூட வகுப்பினை மேற்கொள்வதற்கான Data Packgeஐ போடுவதற்கான பணம் இன்றி அவதிப்படும் நிலை நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
பயணத்தடை காரணமாக உழைப்பின்றி கால் வயிறு கஞ்சிக்கே அல்லல்படும் நிலையிலுள்ள குடும்பங்களுக்கு இணைய வழியான கல்வியானது எட்டாக்கனியாகவே உள்ளது.
அன்றாட கூலிக்கு வேலை செய்து வருபவர்களுக்கு இந்த பயணத்தடை பெரிய அடி எனும் நிலையில், அவர்கள் குடும்பத்திற்கு இணைய வழி கல்வி என்பது பேரிடியாகவே காணப்படுகிறது.
இந்த நிலைமை தான் இவ்வாறு இருக்கிறது என்றால் மலையகம் உள்ளிட்ட கிராம புற மாணவர்கள் சரியான Coverage இன்றி பெரிதும் அல்லல்படுகின்றார்கள்.
தற்போது சீரற்ற காலநிலை நிலவும் இந்த சந்தர்ப்பத்திலும் கூட Coverage கிடைக்கக்கூடிய இடங்களை தேடி மழையில் நனைந்தவாறு கல்வி கற்கும் அதேவேளை, கூரை மற்றும் மரங்கள் என அனைத்து உயரமான இடங்களுக்கும் Coverage தேடி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க மற்ற புறத்தில் பகுதி நேர வகுப்பாசிரியர்களும் இணைய வழியாக கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கை வகுப்புக்கள் நடந்ததும் அவர்களுக்கு வகுப்பிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமையிலும் சில மாணவர்கள் சிக்கி தவித்து தான் வருகின்றனர்.
கோவிட் அச்சம் ஒரு பக்கம் எனில், பட்டினி மறு பக்கம் இதையெல்லாம் கடந்து மாணவர்கள் படும் துயரம் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை.
எனவே திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட முன்னர் அது அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி பயனளிக்குமா என்பதை அறிந்து செயற்படுத்த வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.
வவுனியா பம்பைமடு ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணி தாய்மார்களிற்கு சிகிச்சை வழங்குவதற்காக இவ் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதுடன், 80 படுக்கை வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் சிகிச்சை நிலையம் நேற்றையதினம் சுகாதார பிரிவினரிடம் பாவனைக்கு ஏற்ற வகையில் சிகிச்சை வழங்க கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தாக்கத்தால் மரணிப்பவர்களின் உடலை தகனம் செய்ய பூந்தோட்டம் மின் மயானத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (18.06) மேலும் தெரிவித்ததாவது,
கொரோனா தொற்று காரணமாக வடக்கிலும் உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. அதில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல் வவுனியா நகரசபைக்கு சொந்தமான பூந்தோட்டம் இலத்திரனியல் மயானத்தில் சுகாதாரப் பிரிவினரால் தகனம் செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த மின் மயானத்தில் தகனம் செய்வதற்கு நகரசபையால் உடலம் ஒன்றுக்கு 7000 ரூபாய் வீதம் அறவிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போதை பயணத்தடை மற்றும் கோவிட் தாக்கம் என்பவற்றால் பல குடும்பங்கள் வருமானம் இழந்து தவிப்பதுடன்,
உடலத்தை தகனம் செய்வதற்குரிய பணத்தை செலுத்த முடியாத நிலையிலும் இருக்கின்றனர். இதனால் கோவிட் தொற்றால் இடம்பெறுகின்ற இறப்புக்களுக்குரிய உடல்களை, தமது குடும்ப நிலை தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலுடன் வருபவர்களுக்கு இலவசமாக மின் மயானத்தில் தகனம் செய்ய அனுமதி வழங்க தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் கோவிட் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் 1500 பேருக்கு பிசீஆர் பரிசோதனை எடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பண்டாரிக்குளம் பகுதியில் பயணத்தடைக் காலத்தில் வீதியில் பயணித்தோர் மற்றும் வீடுகளில் இருந்தோர் என 50 பேருக்கு இவ்வாறு பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகளையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 21ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு,
எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 23ம் திகதி இரவு 10 மணி முதல் 25ம் திகதி அதிகாலை வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
இந்த காலப் பகுதியில் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் 9 வயது சிறுமியொருவர் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார்.
குறித்த சிறுமி நேற்று மதியம் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது கழுத்தில் ஊஞ்சல் கயிறு சிக்கி இறுகியதில் அவர் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அங்கிருந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா நகரசபை புதிய உறுப்பினராக சக்திதாஸ் தனுஸ்காந் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா நகரசபையில் கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தை பெற்றிருந்தது.
இவ் ஆசனமானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் நகரசபை உறுப்பினர் ஜானுஜன் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து அவ்விடத்துக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் சக்திதாஸ் தனுஸ்காந் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும், கணணியியல் பட்டதாரியும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனின் பிரத்தியேக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்படும் பயண தடைகள் தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 பணிக்குழு நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து தற்போதைய நிலைமையை மறு ஆய்வு செய்யும் போது இது தொடர்பான முடிவெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள், திங்கள்கிழமை (21) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்பட உள்ளன.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவ தொடங்கிய நிலையில், தற்போது இரண்டாவது அலை இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
மேலும் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிட்சீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
பொதுவாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற பயம் மக்களிடையே இருந்து வரும் நிலையில், கோவிட் -19 தடுப்பூசி செலுத்து கொண்ட பலர் உடலில் ஒரு காந்த சக்தி வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர்.
சமீபத்தில் பனஸ்கந்தாவை சேர்ந்தவர், குஜராத்தின் உப்லெட்டாவைச் சேர்ந்த ஒருவரும், நாணயங்கள், பாத்திரங்களை தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டவாறு ஷேர் செய்த புகைப்படங்கள் இப்போது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், தற்போது வரை தடுப்பூசி போட்டு கொள்ளாத சூரத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி மற்றும் அவரது பேரன் ஒரு காந்த சக்தியை பெற்றதாக கூறப்படுகிறது.
இதேபோல பனஸ்கந்தாவை தலைமையிடமாகக் கொண்ட பழன்பூரில் உள்ள நவ்ஜிவன் (ஜீவன்ஜியோட்) சொசைட்டியில் வசிக்கும் நவீன்பாய் ராவல், நான்கு நாட்களுக்கு முன்பு தூங்கும்போது,
திடீரென நாணயங்கள் அவரது உடலில் ஒட்டியதை உணர்ந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், நாணயங்களை அகற்றும்போது, அவர் தோலில் ஒரு காந்த சக்தியை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் எடுத்து பார்க்கலாம் என முடிவு செய்த நிலையில், காந்த உணர்வால் ஸ்கேன் செய்ய அனுமதிக்குமா? என்ற கேள்வி அவருக்குள் எழுந்துள்ளது. இதேபோன்ற சம்பவம் சூரத்திலும் நடந்துள்ளது.
சூரத்தில் பர்பத் பாட்டியா பகுதியில் உள்ள சுபாஷ்நகர் சொசைட்டியில் வசிக்கும் இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு காந்த உணர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தாங்கள் நம்பவில்லை, எனினும் சில உலோக பொருட்கள் உடம்பில் ஈர்க்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், உண்மை என்னவென்றால், கோவிட் -19 தடுப்பூசி உடலில் அத்தகைய நிலையை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதனால், அதற்கும் உடலில் இரும்புப் பொருட்கள் ஒட்டிக்கொள்வதற்கும் சம்பந்தமில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால் இதுபோன்ற எதுவும் நடக்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இதுகுறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.