வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 28 பேர் உட்பட 51 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா, மூன்றுமுறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 28 பேர் உட்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (19.06) வெளியாகின.

அதில் மறவன்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், சமனங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், கற்குளம் பகுதியைச் சேர்ந்த சிறைச்சாலை கைதி ஒருவருக்கும்,

பனிக்கர் புளியங்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் மூவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் மூவருக்கும், கொரவப்பொத்தானை பகுதியில் ஒருவருக்கும், நந்திமித்திரிகம பகுதியில் இருவருக்கும்,

கல்மடு பகுதியில் இருவருக்கும், தரணிக்குளம் பகுதியில் மூவருக்கும், பறநாட்டாங்கல் பகுதியில் ஒருவருக்கும், பாலமோட்டை பகுதியில் ஒருவருக்கும், சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

நொச்சிமோட்டை பகுதியில் ஒருவருக்கும், மதுராநகர் பகுதியில் ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் ஒருவருக்கும், கிரிமத்தியவெவ பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

கெப்பற்றிகொலவ பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், கந்தசாமி நகர் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

உக்குளாங்குளம் பகுதியில் நால்வருக்கும், ஊர்மிளா கோட்டம் பகுதியில் நால்வருக்கும், நெளுக்குளம் பகுதியில் மூவருக்கும் என 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களின் எண்ணக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடுகளுடன் நாளை திறக்கப்படும் இலங்கை!!

பயணக்கட்டுப்பாடு..

நாளை தினம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மக்கள் செயற்பட வேண்டும்.

அலுவலக பணிக்காக குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களே பணிக்கு அழைக்கப்பட வேண்டும். வீட்டில் இருந்து பணி செய்ய கூடியவர்கள் அவ்வாறே பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.

பொது போக்குவரத்து சேவையில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகள் பயணிக்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும். தனிமைப்படுத்தல் சட்டத்திற்கான ஏனைய சட்டங்களை அதே முறையில் பின்பற்ற வேண்டும்.

மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில் இருக்கும். அதற்கமைய விசேட காரணங்களுக்கமைய மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க வேண்டும்.

சுற்றுலா பயணங்கள், மத சம்பந்தமான யாத்திரைகள் போன்றவற்றிற்கு செல்ல அனுமதி வழங்கப்படாது. பொது இடங்களில் மக்கள் ஒன்றுக்கூட கூடாது.

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். அதனை தொடர்ந்து எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை மருந்து தபால் மூலம்!!

மருந்து தபால் மூலம்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்துப் பொருட்கள் தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் க.ராகுலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கிளினிக் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள் தற்போது நாட்டில் நிலவும் அதிகரித்த கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

எனவே வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துப் பொருட்களை 074 010 4936 மற்றும் 076 100 1936 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தபால் மூலம் வீடுகளில் இருந்தவாறு தமக்குரிய மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இரு இளைஞர்கள் கைது!!

செட்டிகுளம்…

செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் கேரள க.ஞ்.சா.வை உடமையில் வைத்திருந்த கு.ற்றச்சாட்டில் இரு இளைஞர்களை செட்டிகுளம் பொலிசார் கை.து செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோ.தனை நடவடிக்கையின் போது 100 கிராம் கேரள க.ஞ்.சா.வி.னை தம்வசம் வைத்திருந்தனர் என்ற கு.ற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அதே பகுதியினை சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்ளே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞர்களை நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குழந்தைக்காக மாந்தீரிகவாதியை அழைத்து வந்த கணவன் : அதன் பின் நடந்த துயரம்!!

இந்தியாவில்…

இந்தியாவில் கணவன் ஒருவர் மாந்திரகவாதியை அழைத்து மனைவியை அவருக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் மீரூட் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியினருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன போதும் குழந்தை இல்லாத காரணத்தினால், இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில், கணவர், தன்னுடைய நண்பரும், மாந்தீரிகவாதியுமான இஸ்மாயில் என்பவரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.

உடனே இஸ்மாயில் தான் இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பத்தாக கூறியுள்ளார். அதன் படி சில தினங்களுக்கு முன்பு, இஸ்மாயில் தம்பதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இஸ்மாயில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது, கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நேரத்தில், இஸ்மாயில் தனியாக இருந்த பெ.ண்ணை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்.ளா.ர். அவர் கூ.ச்சலிட்ட போதும், வெளியில் இருந்த கணவன் கதவை திறக்கவேயில்லை.

இது குறித்து அவரது மனைவி, தன்னுடைய உறவினர்களிடம் கூற, அவர்கள் காவல்நிலையத்தில் பு.கா.ர் கொடுத்துள்ளனர். இதையடுத்து இஸ்மாயில் மற்றும் கணவர் இருவரையும் கைது செய்தனர்.

பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி.சாரணையில், பெண்ணின் கணவர் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய அனுமதி அளித்ததாகவும், இதனால் குழந்தை பெற முடியும் என்பதால்,

அவர் இப்படி செய்ததாக இஸ்மாயில் கூறியுள்ளார். அதன் பின் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருமணத்துக்கு முன்னரே வீட்டை விட்டு ஓடிவந்த மதனின் மனைவி : விசாரணையில் வெளியான தகவல்கள்!!

பப்ஜி மதன்…

ஆ.பா.ச பேச்சுக்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பப்ஜி மதனை போலீசார் கைது செய்துள்ளனர். இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா என்பவரையும் போலீசார் கைது செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

முடிந்தால் என்னை பிடியுங்கள் என சவால்விட்ட மதன், கைது செய்யப்பட்ட போது போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் யார் இந்த மதன்? இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தது எப்படி? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது. மதனின் சொந்த ஊர் சேலம் டவுன்.

டிப்ளோமா சிவில் இன்ஜினீயரிங் முடித்த மதன், வேலை தேடி சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்திருக்கிறார். இங்கு அம்பத்தூர் பகுதியில் ஹொட்டல் ஒன்றை தொடங்கிய மதனுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் அந்த தொழிலை கைவிட்டுவிட்டு, ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்தார். பப்ஜி விளையாட்டு பிரியரான மதனுக்கு, அதன் நுணுக்கங்கள் தெரிந்துள்ளது, இதனை வீடியோவாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன்மூலம் தான் கிருத்திகா என்பவர் அறிமுகமாகி இருக்கிறார், நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. திருமணத்துக்கு முன்னரே கிருத்திகா கர்ப்பமானார்.

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது.

பப்ஜி தடை செய்யப்பட்டாலும் விபிஎன் மூலம் டௌன்லோடு செய்து பப்ஜி கேம்மை மதன் விளையாடி வந்திருக்கிறார். அப்போதுதான் அவரைப் பின்தொடரும் பிரியர்களிடம், ஆ.பா.ச.மா.க பேசியுள்ளார்.

முதலில் கிருத்திகா இதற்கு எ.திர்ப்பு தெரிவித்தாலும் பணம் அதிகம் சம்பாதிக்க முடிந்ததால் அவரும் மதனுக்கு துணை போயுள்ளார். மதன் தன்னுடைய தோழிகளுக்கு மட்டும் 5 லட்சம் வரை சம்பளம் வழங்கியதாக தெரிகிறது.

மேலும் கிருத்திகாவின் வங்கி கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் வரை பணம் இருந்துள்ளது, இதன் மூலம் இருவரும் சொகுசுவாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

தற்போது இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஆடி கார், டேப்லட் போன்றவைகளை ப.றிமுதல் செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அத்தை மகள்கள் 2 பேரை காதலித்து ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இளைஞர் ஒருவர் அத்தை மகள் இரண்டு பேரை காதலித்து ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

தெலுங்கானாவில் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை தேடி வருபவர் தான் அர்ஜுன். எங்கு தேடியும் வேலை கிடைக்காத காரணத்தினால் வீட்டில் இருந்த இவர், தன்னுடைய அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணி இருவரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவர, ஆரம்பத்தில் ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அத்தை மகள்கள் இரண்டு பேருமே அர்ஜுனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதால், வேறு வழியின்றி இரண்டு பேரையும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

ஆதிவாசிகளான இவர்களது பாரம்பரியமான வாழ்க்கை முறையை மாற்றி முதல் முறையாக இரு பெண்களையும் ஒரே மணமகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த திருமணத்தில், இரண்டு பேருக்கும் தாலி கட்டிய அர்ஜுன், இப்போது மகிழ்ச்சியாக அவர்களுடன் வாழ்ந்து வருகிறார். அவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பயணத்தடையினை மீறியவர்களுக்கு இராணுவத்தினர் வழங்கிய தண்டனை!!

பயணத்தடையினை மீறியவர்களுக்கு…

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பகுதியில் பயணத்தடையினை மீறியவர்களுக்கு இராணுவத்தினர் வழங்கிய தண்டனை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இன்று காலை மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் பகுதிகளில் பயணத்தடையினை மீறி செயற்பட்டோர் படையினரால் தண்டிக்கப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதிலும் அதனைமீறும் வகையில் செயற்பட்டோருக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏறாவூர் பகுதியிலும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 1,871 பேரின் உயிர்களைப் பறித்த கொரோனா தொற்றின் மூன்றாம் அலை!!

மூன்றாவது அலை..

இலங்கையில் கோவிட் வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 1,871 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கோவிட் பரவல் தடுப்புச் செயற்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

முதலாவது அலையில் 13 மரணங்களும், இரண்டாவது அலையில் 596 மரணங்களும் பதிவாகின. இதன்படி கோவிட் தொற்றின் மூன்றாவது அலையில் இதுவரை 1,871 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.

பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது பேராபத்து : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!!

பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது…

நாட்டை முடக்கி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ள சூழலில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது பேராபத்தானது என சுகாதார நிபுணர்கள் கொரோனாத் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, வைரஸ் தொற்று வேகமாக பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் மிக மோசமான தொற்றாகக் கருதப்படுகின்ற பி.1.617.2 என அடையாளப்படுத்தப்படும் இந்தியாவில் பரவும் ‘டெல்டா’ வைரஸ் பரவல் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்த விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதார, வைத்திய நிபுணர்கள் நேற்றுக் கூடிய கொரோனாத் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

“பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும் என்பதற்கு அரசிடம் இருக்கும் ஒரே சாட்டு நாட்டின் பொருளாதார நெருக்கடி என்ற காரணி மட்டுமே. அதனை நாம் நிராகரிக்கவில்லை.

ஆனால், மக்களின் உயிர் பாதுகாப்பு என்பது நாட்டின் பொருளாதார நெருக்கடியை விடவும் முக்கியமானது. இப்போது பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதால், கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவ இரண்டு நாட்கள் போதுமானதாக இருக்கும்.

எனவே, நிலைமைகளைப் புரிந்துகொண்டு எமது கருத்துக்குச் செவிமடுக்க வேண்டும்” எனவும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

-தமிழ்வின்-

இலங்கையில் ஒரே நேரத்தில் ஒன்றாக உயிரிழந்த கணவன் – மனைவி!!

கணவன் – மனைவி..

தெற்கு களுத்துறை பழைய வீதியில் வசித்த வயோதிப தம்பதி ஒரே நேரத்தில் ஒன்றாக உயிரிழந்துள்ளனர். இயற்கையான முறையில் மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக களுத்துறை மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் நிர்வாக அதிகாரியாக ஜனசிங்க என்ற 73 வயதுடைய கணவரும் 74 வயதுடைய விப்புலாவத்தி ஜயசிங்க என்ற அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் மகளின் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 16ஆம் அதிகாலை உயிரிழந்துள்ளனர். பிரேத பரிசோதனையின் பின்னர் இந்த இரண்டு மரணங்களும் இயற்கையான முறையில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கலாம்!!

கோழி இறைச்சி..

கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோழி இறைச்சி உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக தற்போதைய விலையில் கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியாது என உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். 50 ரூபா விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சோளம் தற்போது, 90 முதல் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் காரணமாக 430 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 550 ரூபாவுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் செல்ல முற்பட்ட முல்லைத்தீவு யுவதி விமான நிலையத்தில் கைது!!!

விமான நிலையத்தில்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் இருந்து போலியான தகவல்களை சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யுவதி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை கட்டார் நோக்கி புறப்பட இருந்த விமானத்தில் பயணித்து கட்டாரில் இருந்து பிரான்ஸ் நோக்கி செல்லவுள்ள மாங்குளத்தினை சேர்ந்த 25 அகவையுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது போலியான பி.சி.ஆர்.அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு சென்ற யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

விஞ்ஞானிகள் எச்சரிக்கை…

இலங்கையில் சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய கொவிட் மாறுபாடு எனப்படும் டெல்டா பாரதூரமான திரிபு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பரவியுள்ள கொவிட் மரபணுவை விடவும் இரண்டு மடங்கு வேகமாக இந்த வைரஸ் பரவ கூடும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனிதர்களின் சுவாச கட்டமைப்பினுள் டெல்டா மாறுபாடு நீண்ட நேரம் இருக்க கூடும் எனவும், இதன் காரணமாக நோய் தொற்று தீவிரமடைய கூடும் எனவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டெல்மா மாறுபாடு எனப்படுவது திரிபடைந்த கொவிட் மரபணுவாகும். அது உலகில் 80 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தளர்த்தப்படவிருந்த முடக்க நிலை கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர, “தெமட்டகொட பிரதேசத்தில் 8 பேரின் மாதிரிகள் மாத்திரமே பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

அதில் 5 பேருக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட ஏனைய நோயாளிகளின் மாதிரிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவற்றினை பரிசோதனை செய்வதற்காக விசேட பரிசோதனை கிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் எந்த மாறுபாடினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசிகளை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் ஆபத்தை தவிர்த்து விடலாம் என எங்களால் கூற முடியாது.

எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் வைரஸ் வெற்றி பெறவே முயற்சிக்கும். இதனால் மக்கள் அவதானமாக செயற்பட்டால் மாத்திரமே ஏற்படும் ஆபத்துக்களை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கைக்கு அச்சுறுத்தலாகியுள்ள வைரஸ் : அவசர நடவடிக்கைகளுக்கு உத்தரவு!!

புதிய வைரஸ்..

இலங்கையில் ஆபத்தான டெல்டா மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாறுபாட்டு புதிய வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட தெமட்டகொட பகுதியில் உள்ள இடங்களை தனிமைப்படுத்தவும், மேலும் சோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் சோதனைகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. டெல்டா மாறுபாட்டிற்காக நாட்டின் பிற பகுதிகளிலும் சோதனைகளை நடத்த சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு முதன்முதலில் கண்டறியப்பட்ட கொழும்பில் பி.சி.ஆர் சோதனைகள் இன்று நடத்தப்பட்டன. இதன்படி, தெமட்டகொட அரமயா வீதியில் உள்ள 200வது தோட்டத்தில் இன்று 150க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட கொழும்பில் உள்ள பகுதி பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா மாறுபாடு மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பயணக்கட்டுப்பாடு…

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் சில கட்டுப்பாட்டுகளுடன் தளர்த்துவதற்கு கோவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

அதேவேளை பயணக்கட்டுப்பாடு 21ஆம் திகதி தளர்த்தப்பட்ட போதும் கூட மீண்டும் ஜுன் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் ஜுன் 25 ஆம் திகதி அதிகாலை வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த டெல்டா வகை கோவிட் வைரஸால் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடையும் அச்சுறுத்தல் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-