நாட்டின் பல இடங்களில் நகை அடகு கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!!

நகை அடகு கடைகளில்..

நாடு முழுவதும் நேற்றைய தினம் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நகை அடகுபிடிக்கும் நிலையங்களுக்கு வெளியே மக்களின் நீண்ட வரிசைகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குப் பிறகு நேற்று நகை அடகுபிடிக்கும் நிலையங்கள் திறக்கப்பட்டன, இதன் போது பலர் தங்கள் உடமைகளை அடகு வைக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கோவிட் தொற்றுநோயின் விளைவாக அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அன்றாட வருமானத்தை ஈட்ட முடியாததால் மக்கள் தங்கள் நகைகளை அடகு வைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொழும்பில் உள்ள நகை அடகுபிடிக்கும் நிலையங்களுக்கு வெளியே வரிசையில் நிற்கும் மக்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம் பொது மக்களின் அவல நிலையை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா எடுத்துரைத்தார்.

தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய நேற்றைய தினம் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1764 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. வார இறுதியில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1876.87 டொலர்களாக பதிவாகியிருந்தது.

எனினும், உலகளாவிய ரீதியில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால் அடுத்த சில மாதங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் பணவீக்கம் 13 ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதால் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வவுனியா செட்டிகுளத்தில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது!!

செட்டிகுளத்தில்..

வவுனியா, செட்டிகுளத்தில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் நேற்று (21.06) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து,

செட்டிகுளம் பொலிஸ் நிலைய ம.து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எல்.எ.ஜி.கேவிஜயசிறி தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான வசந்த (13813), டி.ஜி.சுகத் (39167), ஜயக்கொடி (48497), சுந்தர்ராஜா (55633) தலைமையிலான பொலிசார் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது சின்னத்தம்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் மூன்று கோடா பெரல்கள் மற்றும் வயர்கள் மீட்கப்பட்டதுடன், இச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ள செட்டிகுளம் பொலிசார், குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றால் இரு பெண்கள் மரணம்!!

கொரோனா..

கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் இரு பெண்கள் இன்று (21.06) மரணமடைந்துள்ளனர். வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர், குருதி சுத்திகரிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

அத்துடன் வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவர்களது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஏழு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே குறித்த ஏழு பேரில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இவ்வகையில் மரணமடைந்த இருவரும் வயது முதிர்ந்த பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்தின் பின்னர் முழுமையாக திறக்கப்பட்ட இலங்கை : மக்களுக்கு எச்சரிக்கை!!

மக்களுக்கு எச்சரிக்கை…

நாடாளவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (21) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதுடன், 23ம் திகதி இரவு 10 மணி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. 23ம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதிலும், நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாயம் தொடர்ந்து காணப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த காலப் பகுதியில் மிகுந்த அவதானத்துடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதேவேளை, இந்தியாவில் வேகமாக பரவிவரும் அபாயகரமான டெல்டா வைரஸ் சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்ட பின்னணியிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகெ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, வேறு எந்தவொரு நடவடிக்கைகளுக்காகவும் வெளியில் செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் சில வாரங்களில் நாட்டை முழுமையாக திறக்க வேண்டும் என்றால், இந்த காலப் பகுதியில் பொறுப்புடன் நடந்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-

பெ.ற்றோர் உட்பட கு.டும்பத்தில் நா.ல்வரை கொ.லை செ.ய்.து பு.தை.த்.த இ.ளைஞர்!!

இந்தியாவில்..

பெற்றோர் உட்பட குடும்பத்தில் நால்வரை கொ.ன்.று பு.தைத்ததாக கூறி 19 வயதேயான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தின் மால்டா பகுதியை சேர்ந்த ஆசிப் முஹம்மது என்பவரையே 21 வயதான சகோதரர் ஆரிப் முஹம்மது என்பவரது பு.காரின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெற்றோர், சகோதரி மற்றும் பாட்டியையும் ஆசிப் கொ.லை செ.ய்.து குடியிருப்பினருகே அமைந்துள்ள கி.டங்கு ஒன்றில் பு.தைத்துள்ளதாக பு.காரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் சகோதரர்கள் இருவரையும் விசாரித்து வருகின்றனர். மட்டுமின்றி, ச.டலங்கள் பு.தை.க்கப்பட்டதாக கூறப்படும் கிடங்கிலும் ஆய்வு மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆசிப் தம்மை கொ.லை செ.ய்.ய மு.யன்ற நிலையிலேயே, தாம் முன்னர் நடந்த சம்பவங்களை பொலிசாரிடம் புகாராக தெரிவித்ததாக ஆரிப் தெரிவித்துள்ளார்.

பயம் காரணமாக நடந்தவற்றை தாம் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லை எனவும் ஆரிப் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 28ம் திகதி பெற்றோர் உள்ளிட்ட நால்வரை வெ.ள்ளத்தில் மூ.ழ்கடித்து கொ.லை செ.ய்.து.ள்.ள.தா.க புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உடல்களை குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கி.டங்கில் பு.தைத்துள்ளார். கொ.ல்.ல.ப்.ப.ட்.ட நால்வரையும் கடந்த சில மாதங்களாக தாங்களும் அப்பகுதியில் கண்டதில்லை என அக்கம் பக்கத்தினரும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆசிப் தனக்காக மடிக்கணினி ஒன்றை வாங்கித் தரக் கேட்டு பி.ரச்சனை செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் வீட்டை விட்டும் வெளியேறியுள்ளார். ஆனால் ஆசிப் கேட்டிருந்த அதே மடிக்கணினியை பெற்றோர் வாங்கி அளித்துள்ளனர்.

இருப்பினும், பணத் தேவைகளுக்கான நிலம் உட்பட விற்க முயன்ற நிலையில் பெற்றோருக்கும் அவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் இதுவரை உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

அண்ணனாக பழகியவரின் மோ.சமான செயல் : பதறிப் போன பள்ளி மாணவி : தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் சிறுமி ஒருவர் இளைஞரிடம் அண்ணன் போன்று நினைத்து பழகி வந்த நிலையில், அவர் செய்த செயல் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சூரன்குடி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் 25 வயது மகன், பாலமுருகன் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மா.ணவி, பழனிச்சாமியிடம் அண்ணன் என்ற முறையில் பழகி வந்துள்ளார்.

ஆனால், திடீரென்று ஒருநாள் பழனிச்சாமி, அந்த மா.ணவியிடம் நான் உன்னை காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு சி.றுமி மறுத்துள்ளார். இருப்பினும் பழனிச்சாமி தொடர்ந்து சி.றுமியிடம் தன் காதலை கூறி வ.ற்.புறுத்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், சி.றுமி தொடர்ந்து மறுத்து வந்ததால், நீ கு.ளிக்கும் போது நான் ர.கசியமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், நீ என்னை காதலிக்கவில்லை என்றால், நான் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.

இதனால் அந்த சி.றுமி உடனடியாக தன்னுடைய பெற்றோரிடம் கூற, அவர்கள் பாலமுருகன் வீட்டிற்கு வந்து இது குறித்து கேட்ட போது, அவர்கள் சி.றுமியின் த.ந்தையை தா.க்.கி.யு.ள்.ள.ன.ர்.

இதையடுத்து சி.றுமியின் பெற்றோர் இது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் பு.கா.ர் தெரிவிக்க, பொலிசார் பாலமுருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கை.து செ.ய்து, அவரை சி.றையில் அ.டைத்தனர்.

கொட்டும் மழையில் மகளுக்காக குடை பிடித்தபடி நின்ற தந்தை : நெகிழ்ச்சிக் காரணம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மகள் ஆன்லைனில் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக தந்தை குடைபிடித்து நின்ற காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவின் 2வது அலை இந்தியாவில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தாலும், மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைனில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆன்லைனில் பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் வசிப்பது கிராமப்புறம் என்பதால், சாலைக்கு வந்து கல்வி கற்பது வழக்கம். நேற்று பயங்கர மழை பெய்தாலும், பாடத்தை கவனிக்க வேண்டும் என்பதற்காக கொட்டும் மழையில் அமர்ந்திருக்கிறார்.

அவருக்கு துணையாக தந்தை மகளுக்காக குடை பிடித்து நிற்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. Mahesh Puchchappady என்ற பத்திரிக்கையாளர் எடுத்த இந்த புகைப்படம் வைரலாக, கிராமப்புறங்களில் இணைய சேவை சீர் செய்யப்படும் என BSNL நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனாவிற்கு பலியான அப்பா, அம்மா : 2 மாத குழந்தைக்கு தாயாக மாறிய 7 வயது அக்கா!!

இந்தியா..

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 45 நாள் பச்சிளம் குழந்தைக்கு தாயாகி மாறியுள்ளார் அவனுடைய 7 வயதேயான அக்கா. ஒடிசாவின் Nimatpur கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் Kamalesh Panda- Smita Panda, Kamalesh ரயில்வேயிலும், Smita பகுதிநேர செவிலியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களுக்கு கிருஷ்ணா என்ற 7 வயது பெண் குழந்தை உள்ள நிலையில், 2வதாக கர்ப்பம் தரித்திருக்கிறார் Smita. 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, செவிலியராக பணியை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் Smitaக்கு கொரோனா பாசிடிவ் என வர, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு, அழகாக ஆண் குழந்தையை பெற்றெடுத்த போதும், ஏழு நாட்களில் சிகிச்சைபலனின்றி Smita காலமானார்.

தொடர்ந்து Smita-ன் கணவருக்கும் கொரோனா தொற்று காரணமாக அவரும் ம.ரணடைந்துள்ளார். தாய், தந்தை இருவரும் உ.யிரிழக்க, பச்சிளம் குழந்தையுடன் அனாதையானார் கிருஷ்ணா.

இவர்களை Smita-ன் கொழுந்தனார் அழைத்து சென்று பத்திரமாக பாதுகாத்து வருகிறார். தன்னுடைய தம்பிக்கு உணவு வழங்குவதும், பாட்டு பாடி தூங்க வைப்பது என தம்பிக்கு தாயாக மாறிவிட்டார் கிருஷ்ணா.

இந்நிலையில் தினக்கூலியான தனக்கு குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலை இருப்பதாகவும், அரசாங்கம் அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் கிருஷ்ணாவின் சித்தப்பா கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பவர்கள் காப்பாற்ற தமிழன் கண்டுபிடித்த அலாரம்!!

முகமத் சாகுல் அமீது…

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் முதியவர்களை காப்பாற்ற தமிழக இளைஞன் ஒருவர் அலாரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தமிழகத்தின், விழுப்புரத்தைச் சேர்ந்தவர் முகமத் சாகுல் அமீது. 24 வயதான இவர் வேலையின்றி வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த கொரோனா காலகட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமானோர் உ.யிரிழப்பதைக் கண்ட இவர், இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஆக்சிஜன் அலர்ட் சேப்டி டிவைஸ் ஒன்றை ஸ்மார்ட் வாட்ச் வடிவில் கண்டுபிடித்துள்ளார்.

குறித்த சாதனத்தில் சிம்கார்டு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. கையில் வாட்ச் கட்டுவதைப்போல, இந்த சாதனத்தை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொள்பவருக்கு, அவருடைய உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் தெரிய வரும்.

அதாவது, ஆக்சிஜன் அலர்ட் சேப்டி டிவைஸில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டில், அவசர அழைப்புக்கு யாருடைய எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த எண்களுக்கு முதலில் மெசேஜ் போகும்.

அடுத்து கால் போகும். அதன்பிறகு அவர்களுடைய செல் வைப்ரேட் ஆகும். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரிந்து, அவரை உடனடியாக காப்பாற்ற முடியும்.

கொரோனா காரணமாக தனியாக இருக்கும் முதியவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும் போது அவர்களால் உதவிக்கு எவரையும் அழைக்க முடியாத நிலையில் இ.றந்துவிடுகிறார்கள்.

இதனை தடுக்கும் வகையிலும் வயதானவர்களின் உ.யிரை பா.துகாக்கும் நோக்கத்திலும் இந்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதாக சாகுல் அமீது கூறியுள்ளார்.

இந்த சாதனத்திற்கு 2 ஆயிரம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ள முஹமத் சாகுல் அமீத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். இணையவாசிகள் பலரும் அவரை வாழ்த்தியும், தங்கள் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

திருமணமான 4 நாளில் இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

முத்துமாரி…

திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உறுப்புக்களை பெற்றோர்கள் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர்பெருங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் சங்கர்ராஜ் (27). இவர் சென்னையில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், திருச்சுழி அருகே உள்ள சுத்தமடம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மகள் முத்துமாரிக்கும் (24) கடந்த 13ம் தேதி திருமணம் நடைபெற்றது.

பின்னர் பந்தல்குடியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு சங்கர்ராஜீம், முத்துமாரியும் விருந்துக்கு சென்ற நிலையில், மோட்டர் சைக்கிள் நிலை தடுமாறி முத்துமாரி கீழே விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலமாக அடிபட்ட அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் முத்துமாரி நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்துள்ளார்.

பின்பு துக்கத்திற்கு மத்தியில் அவரது கணவரும் அவரது பெற்றோரும் முத்துமாரியின் உடல் உறுப்புகளான சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றினை தானம் செய்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விரைவில் 3.5 கோடி ரூபாய் பெறுமதியான பி.சீ.ஆர் இயந்திரம்!!

பி.சீ.ஆர் இயந்திரம்…

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார பிரிவினர் மக்களிடம் பி.சீ.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் ஆய்வு கூடத்தில் மாத்திரமே பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு செய்யும் இயந்திரம் உள்ளமையினால் பரிசோதனை முடிவுகளில் தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பி.சி.ஆர் முடிவுகளை விரைவாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பி.சீ.ஆர் இயந்திரம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 3.5 கோடி ரூபாய் பெறுமதியில் பி.சீ.ஆர் இயந்திரம் உட்பட பரிசோதனை வசதிகளை ஏற்படுத்தி வழங்க சுகாதார அமைச்சு முன்வந்துள்ளது.

அந்த வகையில் இதனை அமைப்பதற்குறிய வசதிகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படுகின்றதா என்பதை ஆராயும் நோக்கில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (ஆய்வுகூட சேவைகள்) வைத்தியகலாநிதி சுதத் தர்மரட்ண இன்று (20.06.2021) காலை 8 மணியளவில் வைத்தியசாலையினை பார்வையிட்டார்.

வைத்தியசாலையின் இடங்கள், வசதிகள் என்பவற்றினை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் காண்பித்ததுடன் பி.சீ.ஆர் இயந்திரம் இன்மையினால் சுகாதார பிரிவினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

வெ.ட்டுக் கா.யங்களுடன் மீ.ட்கப்பட்ட 6 மாத கு.ழந்தை உ.யிரிழப்பு!!

திருகோணமலை..

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெ.ட்.டு.க் கா.யங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத கு.ழந்தை நேற்றிரவு உ.யிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத் த.கராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வா.ளா.ல் வெ.ட்.டி.ய.வ.ரி.ன் 6 மாத கு.ழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெ.ட்.டி.ய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை து.ண்.டிக்கப்பட்ட நிலையில் சீனக்குடா பொலிஸார் து.ண்.டிக்கப்பட்ட கையை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

எனினும், 43 வயதுடைய பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் து.ண்.டிக்கப்பட்ட கையை பொருத்த முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது. இருந்தபோதிலும் 47 வயதுடைய நபருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத கு.ழந்தை வெ.ட்.டு.க் கா.ய.ங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

இச்நிலையில் சிகிச்சை பலனின்றி கு.ழந்தை உ.யி.ரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆறு மாத கு.ழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தே.டி வருவதாகவும் தீவிர வி.சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவராக தமிழர் நியமனம்!!

அமெரிக்காவில் உள்ள மிகப் பழமையான இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக ராஜகோபால் ஈச்சம்பாடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையானதும் உலகப் புகழ்பெற்றதுமான இந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி என்பதால் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் மட்டுமின்றி இந்திய துணை கண்டத்துக்கே உலகளாவிய பெருமையை அவர் பெற்றுத் தந்துள்ளார்.

தற்போது 53 வயதாகும் ராஜகோபால், திருவாரூரில் பிறந்தவர். சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பையும் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியான கிண்டிபொறியியல் கல்லூரியில் மேற்படிப்பையும் பயின்றவர்.

ஆகஸ்ட் 16ம் திகதி இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ராஜகோபால், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்திருப்பது பிறந்த மண் மீது அவர் கொண்டுள்ள பற்றுதலைக் காட்டுகிறது.

தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்துக்கு சான்றாக விளங்கும் ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துகளை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறியுள்ளரார்.

தமிழர் பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் முஸ்லிம் பெண்கள் : நெகிழ்ச்சியான பதிவு!!

முஸ்லிம் பெண்கள்..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பலரும் அன்றாட உணவுத் தேவைக்கே அல்லல்படும் நிலைக்கு உருவாகியிருக்கின்றது.

இந்த சமயத்தில் பல மனிதாபிமானிகள் முன்வந்து உலருணவுப் பொருட்களை வழங்கியும் ஏனைய உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மட்டக்களப்பில் இந்து ஆலயம் ஒன்றில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில்,

அதனைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் பெண்களின் நெகிழ்ச்சியான பதிவு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு வந்த பெண்கள் தங்களது உணர்வுபூர்வமான நன்றியைத் தெரிவித்ததோடு சில விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

முடக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாடு : திறப்பதற்கு கடும் எதிர்ப்பு!!

பயணக்கட்டுப்பாடு..

இந்தியாவில் பரவும் அச்சுறுத்தலான ‘டெல்டா’ கோவிட் இலங்கையில் பரவ ஆம்பித்துள்ளது இதனை சாதாரண விடயமாக கருத வேண்டாம். நாட்டை முடக்கி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ள சூழலில் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது ஆபத்தானது,

என வைத்திய சுகாதார நிபுணர்கள் கோவிட் செயலணிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். வைரஸ் தொற்று வேகமாக பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதெனவும் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிட் வைரஸின் மிக மோசமான தொற்றாக கருதப்படுகின்ற பி.1.617.2 என அடையாளப்படுத்தப்படும் இந்தியாவில் பரவும் ‘டெல்டா’ வைரஸ் பரவல் இலங்கையில் கண்டறியப்பட்ட நிலையில் இது குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார, வைத்திய நிபுணர்கள் நேற்றுமுன்தினம் காலையில் கூடிய செயலணிக்கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் தெமட்டகொடை பகுதியில் ஒரு சிலருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டாலும், வைரஸ் தொற்று வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளதா என்பதை ஒரே நாளில் கண்டறிந்து உறுதிப்படுத்த முடியாது.

இலங்கையில் இதுவரை காணப்பட்ட பி.117 என்ற வைரஸ் தொற்றை விடவும் ஐம்பது வீதம் அதிக வேகத்தில் டெல்டா வைரஸ் பரவும் என்பதை விஷேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர செயலணிக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-