வவுனியாவில் கொரோனா தொற்றால் ம.ரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் ச.டலம் ஓட்டமாவடிக்கு அனுப்பி வைப்பு!!

கொரோனா…

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ம.ரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உ.டல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்காக மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு இன்று (22.06) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர், குருதி சுத்திகரிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (21.06) ம.ரணமடைந்தார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் உ.டலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சுகாதார பிரிவினரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனையடுத்து சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்காக குறித்த பெண்ணின் உ.டல் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து இன்று (22.06) இ.ரா.ணு.வ பா.துகாப்புடன் சுகாதாரப் பிரிவினரால் மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மீண்டும் 70 ஐ தாண்டிய கொரோனா மரணங்கள் : மலையென உயரும் எண்ணிக்கை!!

கொரோனா…

நேற்றைய தினம் (21) நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

38 பெண்களும் மற்றும் 33 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,704 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று இதுவரை 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 243,140 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 209,296 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனாவை விட ஆபத்தான வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு!!

நிபா வைரஸ்..

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் கோவிட்-19 தொற்றை பரப்பும் கொரோனா வைரஸை விட மிக ஆபத்தான நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மகாராஷ்டிராவில் இரண்டு வகையான வெளவால்களில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் வெளவால்களில் கண்ட நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். பூனேவில் உள்ள என்.ஐ.வி தேசிய வைராலஜி நிறுவனத்தின் வல்லுநர்கள் இந்த தகவலை வழங்கியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள வௌவ்வால் இனங்கள் எதுவும் முன்னர் நிபா வைரஸ் வெளிப்பாட்டைக் காட்டியது இல்லை என்று என்.ஐ.வி ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பிரக்யா யாதவ் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா 4 முறை நிபா வெடிப்பை சந்தித்துள்ளது. முதல் முறையாக 2001-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் காணப்பட்டது.

அதன் பிறகு 2007-ஆம் ஆண்டு மீண்டும் மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் காணப்பட்டது. அதன் பிறகு 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் கேரளாவில் இரண்டு முறை இந்த வைரஸ் பரவியது.

நீபா வைரசுக்கு எந்த சிகிச்சையம் கிடையாது. அதற்கான தடுப்பூசியும் இன்னும் தயாரிக்கப்படவில்லை. இந்த வைரஸால் யாராவது பாதிக்கப்பட்டால், 65 சதவீத பேர் இறந்துவிடுவார்கள். அதனால்தான் இந்த வைரஸ் மிகவும் கொடியதாக கருதப்படுகிறது.

நண்பரின் வீட்டில் கைவரிசையை காட்டிய பிரபல நடிகைகள் கைது!!

மகாராஷ்டிரா..

கொரோனா ஊரடங்கால் பணக்கஷ்டம் ஏற்பட, நண்பரின் வீட்டில் திருட முயன்று 2 நடிகைகள் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பை கோரேகான் கிழக்கு அரே போலீசாரே இரண்டு நடிகைகளை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பிரபல நடிகைகளான சுராபி சுரேந்திர லால் ஸ்ரீவஸ்தவா (25) மற்றும் மொசினா முக்தர் ஷேக் (19) ஆகியோர் தங்களுடைய நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கே சில நாட்கள் தங்கியிருந்து, கடந்த மாதம் 18ம் தேதி நண்பரின் வீட்டிலிருந்து 3 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர். பின்னர் எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பணம் திருடு போனது தெரிந்ததும் குறித்த நபர் போலீசிடம் புகார் அளித்தார். இதன்பின்னர் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, நடிகைகள் இருவரும் பணத்தை ஒரு பையில் வைத்து எடுத்து சென்றது தெரியவந்தது.

தற்போது இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 60,000 ரூபாயை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய வி.சாரணையில், ஊரடங்கால் கடும் கஷ்டத்தை சந்தித்ததால் நண்பரின் வீட்டில் திருடியதாக தெரிவித்துள்ளனர்.

வாயில் இரத்தம் வழிந்தபடி கழிவறையிலிருந்து போன் செய்தாள் : உ.யிரிழந்த பெண்ணின் தாய் கண்ணீர்!!

கேரளாவில்…

கேரளாவில் இளம் மருத்துவ மாணவியான விஸ்மியா நாயர் ச.டலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அவரது கணவரான கிரண்குமார் கை.து செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் கிரண்குமார். இவருக்கும் விஸ்மியா நாயர் (24) என்ற ஆயுர்வேத பெண் மருத்துவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் விஸ்மியா நேற்று கணவர் வீட்டில் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.ய நிலையில் க.ண்டெடுக்கப்பட்டார். ம.ர்ம ம.ரணமாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவரது கணவரை கைது செய்துள்ளனர்.

வி.சாரணையில், விஸ்மியாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி.ய.து தெரியவந்துள்ளது. திருமணத்தின் போது, 100 சவரன் தங்கமும், 1 ஏக்கர் நிலமும் கொடுத்துள்ளனர்.

அது போதாது என கிரண்குமார், விஸ்மியாவை தொடர்ந்து து.ன்.பு.று.த்.தி வந்துள்ளார், கணவரின் தொந்தரவு தாங்காமல் விஸ்மியா பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

எனினும் அவளின் கல்லூரிக்கு சென்று, விஸ்மியாவை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார் கிரண்குமார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், விஸ்மியாவை மிக கொ.டு.மை.யா.க அ.டி.த்.து.ள்.ளா.ர் கிரண்குமார்.

தான் கா.ய.ம்.ப.ட்.ட புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு அனுப்பிய விஸ்மியா க.த.றி அ.ழுதுள்ளார். ஒருகட்டத்தில் வாயில் ர.த்.த.ம் வழிந்தபடி, கழிவறையிலிருந்து விஸ்மியா, அவரது அம்மாவுக்கு போன் செய்துள்ளார்.

உடனே, இங்கு வா என அம்மா கூற, நான் கணவரை பிரிந்து வந்துவிட்டால் இந்த சமூகம் என்ன சொல்லும் என கூறியிருக்கிறார் விஸ்மியா.

மேலும் தன்னுடைய கல்லூ பரீட்சைக்கு பணம் கேட்ட போது, கிரண்குமார் க.டு.மை.யா.க நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது கிரண்குமாரை கைது செய்த போலீசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

உணவு பொதியிடும் அனைத்து பொலித்தீன்களுக்கும் இலங்கையில் தடை!!

பொலித்தீன்..

நாட்டில் உணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தீன்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் அமைச்சர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தாலும், இந்த முடிவு முறையாக செயல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வகையான பொலித்தீன்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மண்ணில் சிதைந்தாலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீட்டுத் திண்ணையில் இ.றந்து கிடந்த நபர் : தகவல் தெரிவிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

கேரளாவில்..

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட நிலையில் ச.டலமாக மீ.ட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் நந்தன்கோடு பகுதியில், தனது வீட்டுத் திண்ணையில் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார் 45 வயதான மனோஜ் குமார். இதை காண நேர்ந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் சேர்ப்பித்த சில நிமிடங்களிலேயே அவர் உ.யிர் பி.ரிந்துள்ளது. இதனையடுத்து, மனோஜ் குமார் இ.றந்த தகவலை அறிவிக்க, அவரது வீட்டுக்கு திரும்பிய அப்பகுதி மக்களுக்கு அ.திர்ச்சி காத்திருந்தது.

குடியிருப்பின் உள்ளே மனோஜ் குமாரின் மனைவி ரஞ்சு(38) மகள் அம்ருதா(16) ஆகியோர் ம.ரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த இந்த குடும்பம் நந்தன்கோடு பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளது. கொரோனா ஊரடங்கால், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இலக்காகியுள்ளார் மனோஜ்.

மட்டுமின்றி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வைத்து ஏற்பட்ட வி.பத்தில் ப.டு.கா.யமடைந்திருந்தார். அதற்கான காப்பீடு தொகையும் தாமதமாகியுள்ளது. மேலும் தொடர்ந்து ஊரடங்கு காரணமாக தனது கடையும் திறக்க முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையிலேயே மூவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்ள முடிவெடுத்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

திருமணமான ஓர் ஆண்டில் ம.ர்மமாக இ.றந்த 24 வயது பெண் மருத்துவர் : அம்பலமான கணவனின் கொ.டூ.ர முகம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான ஒரு வருடத்தில் பெண் மருத்துவர் ம.ர்மமான முறையில் உ.யிரிழந்த நிலையில் அவர் தந்தை சில அ.திர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் கிரண்குமார். இவருக்கும் விஸ்மியா நாயர் (24) என்ற ஆயுர்வேத பெண் மருத்துவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் விஸ்மியா நேற்று கணவர் வீட்டில் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.ய நிலையில் க.ண்டெடுக்கப்பட்டார். அவரின் ம.ரணத்தை இயற்கைக்கு மாறான ம.ரணம் என பதிவு செய்துள்ள மாநில பெண்கள் ஆணையம் பொலிசாரிடமும் அந்த அறிக்கையை கொடுத்துள்ளனர்.

இதனிடையில் கிரண்குமாரின் கோ.ர முகம் குறித்து விஸ்மியாவின் தந்தையும் குடும்பத்தாரும் பேசியுள்ளனர். விஸ்மியா தந்தை கூறுகையில்,

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கிரண்குமார் தன்னை எப்படியெல்லாம் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி.னா.ர் என என்னிடம் போனில் அவள் சொன்னாள்.

இதோடு உ.ட.லி.ல் கா.ய.ங்.க.ளு.ட.ன் இருக்கும் புகைப்படங்களையும் அனுப்பினாள். திருமணத்தின் போது நாங்கள் 100 சவரன் தங்கம், 1.20 ஏக்கர் நிலம் கொடுத்தோம்.

ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு கிரண்குமார் விஸ்மியாவை கொ.டு.மை.ப்ப.டு.த்.தி வந்தார். ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றையும் பரிசாக அவருக்கு அளித்தேன்.

ஆனால் அந்த கார் தனது கவுரவம் மற்றும் அந்தஸ்துக்கு ஏற்றார் போல இல்லை என கூறி என் மகளை து.ன்.பு.று.த்.தி.யி.ரு.க்.கி.றா.ன். இதோடு அந்த காரை விற்று பணத்தை எடுத்து கொள்ளவும் விரும்பியிருக்கிறான் என கூறியுள்ளார்.

இதனிடையில் தொடர் து.ன்.பு.று.த்.த.ல் காரணமாக சில காலம் விஸ்மியா தனது பெற்றோர் வீட்டில் சென்று இருந்திருக்கிறார். அங்கு சென்ற கிரண்குமார் அவரை வ.லுக்கட்டாயமாக சமீபத்தில் தனது வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையிலேயே விஸ்மியா தற்போது உ.யிரிழந்துள்ளார்.

வவுனியாவில் பயணத்தடை விதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து வெளியேறிச் சென்ற குடும்பத்தின் வீடு தனிமைப்படுத்தல்!!

தனிமைப்படுத்தல்…

வவுனியாவில் பயணத் தடை விதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து வெளியேறிச் சென்ற குடும்பம் ஒன்றின் வீடு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராச சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தாக்கம் அதிகரிப்பு காரணமாக வவுனியா, சகாயமாதாபுரம் மற்றும் அதனையண்டிய சூசைப்பிள்ளையார்குளத்தின் ஒரு பகுதி என்பன இராணுவத்தினரதும், பொலிசாரினதும் பாதுகாப்பு போடப்பட்டு முழுமையாக கிராமத்தில் இருந்து எவரும் வெளியேறிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூசைப்பிள்ளையார்குளம் வைரவகோவிலடிப் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்று சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிசார் ஆகியோரின் அனுமதியைப் பெறாது பயணத்தடை விதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து வெளியேறி வெளியிடத்திற்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கும், பொலிசாருக்கும் கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த வீடு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா சடலத்தை பார்த்து ஓட்டம் பிடித்த மக்கள் : தகனம் செய்யும் இடத்தில் குழப்பநிலை!!

தென்னிலங்கையில்…

தென்னிலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர் ஒருவர் சடலம் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

களுத்துறை வஸ்கடுவயில் உள்ள தகன நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட கே.டீ.ஜயசேன என்ற 85 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் பிற்பகல் 12 மணி நேரம் ஒதுக்கிக் கொள்ளப்பட்டது. அதற்காக 11.30 மணியளவில் தகனம் செய்யும் இடத்தை வந்தடைந்துள்ளனர். எனினும் சுகாதார பரிசோதகர் உட்பட சுகாதார பரிவு ஊழியர்களின் தாமதம் காரணமாக சடலம் பிற்பகல் 2 மணிக்கே கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மற்றுமொரு சடலத்தை தகனம் செய்ய ஒதுக்கப்பட்டிருந்தது. 1.50 மணியளவில் குறித்த சடலத்துடன் கிட்டத்தட்ட 40 பேர் வரையில் தகனம் செய்யும் இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

கொவிட் சடலத்தை கொண்டு வந்த அம்பியுலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கே இந்த சடலமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அம்பியுலன்ஸில் கொவிட் சடலம் இருப்பதனை அறிந்து கொண்ட அந்த மக்கள் அங்கிருந்து ஒட்டம்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவ்விடத்தில் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

இறுதியில் சுகாதார அதிகாரியின் ஆலோசனைக்கமைய கொவிட் தொற்றாத சடலம் முதலில் தகனம் செய்யப்பட்டுள்ளது. மாலை வேலையில் கொவிட் சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் எழுமாறாக 55 பேருக்கு பிசீஆர் பரிசோதனை!!

பிசீஆர் பரிசோதனை…

கொரோனா தீவிரமடைந்துள்ளதையடுத்து வவுனியா – சூசைப்பிள்ளையார்குளம் மற்றும் சகாயமாதாபுரம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் இன்று (22.06.2021) காலை தொடக்கம் மதியம் வரை எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தாக்கம் காரணமாக மரணமடைந்துள்ளதுடன் 07 பேர் தொற்றாளர்களாக அப் பகுதியில் நேற்று (21.06) இனங்காணப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அப் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக சூசைப்பிள்ளையார்குளம் மற்றும் சகாயமாதாபுரம் பகுதியில் வைத்தியர் பிரசன்னா தலமையிலான சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா தாக்கம் காரணமாக சகாயமாதாபுரம் மற்றும் வைரவகோவிலடிப் பகுதிகளில் முற்றாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வீதியில் நின்றோர் மற்றும் வீடுகளில் இருந்தோர் என 55 பேருக்கு இவ்வாறு பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் வாகன நெரிசல் : மாற்று பாதையூடாக பயணிக்கும் வாகனங்கள்!!

வாகன நெரிசல்..

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று (22.06.2021) மதியம் பாரவூர்தியொன்று பழுதடைந்து வீதியில் நின்றமையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் மாற்று பாதையூடாக வாகனங்கள் பயணித்தன.

புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் பாரவூர்தியொன்று மணிக்கூட்டு கோபுர சந்தியில் பழுதடைந்து நின்றது. இதன் காரணமாக புகையிரத நிலைய வீதி – வவுனியா நகர் வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.

இதன் போது வாகனத்தினை திருத்தும் பணிகள் பல மணிநேரமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை பயணிக்கவில்லை அதனையடுத்து புகையிரத நிலைய வீதியூடாக நகர் நோக்கி பயணிக்கும் வாகனங்களை நகரசபை வீதியுடான மாற்றுப்பாதையுடாக சென்றன.

வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவிற்கு எதிர்வரும் மாதம் பிசீஆர் இயந்திரம் கிடைக்கும் : திலீபன் எம்.பி!!

வவுனியா மாவட்டத்திற்கு எதிர்வரும் யூலை மாதம் பிசீஆர் இயந்திரம் கிடைக்கும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

இன்று (22.06) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சியை சந்தித்து கலந்துரையாடினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சரை எனது கட்சி தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து சந்தித்து கலந்துரையாடினோம்.

இதன்போது வவுனியா மாவட்டத்திற்கு பிசீஆர் இயந்திரத்தின் அவசர தேவை குறித்து மீண்டும் வலியுறுத்தினோம்.

இதனையடுத்து அதிகாரிகளை தொடர்பு கொண்ட சுகாதார அமைச்சர் உடனடியாக வவுனியாவிற்கு பிசீஆர் இயந்திரத்தை வழங்குமாறு பணிப்புரை விடுத்தார்.

அந்தவகையில் வரும் யூலை மாதத்திற்குள் பிசீஆர் இயந்திரம் வழங்கப்படும் என எம்மிடம் உறுதியளித்துள்ளார்.

ஏற்கனவே, எமது கோரிக்கையை ஏற்று வவுனியா வைத்தியசாலைக்கு அதிகாரிகளை அனுப்பி அங்குள்ள நிலமைகளை பார்வையிட்டுள்ளதாகவும், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் பிசீஆர் இயந்திரம் பெற்றுக் கொள்வதன் மூலம் சுகாதாரப் பிரிவினர் எதிர்நோக்கிய பாரிய பிரச்சனை ஒன்று முடிவுக்கு வருவதுடன்,

மக்களுக்கும் பிசீஆர் முடிவுகள் உடனுக்குடன் கிடைப்பதற்கும் வழிவகுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு வழிசமைத்த அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 25 பேர் உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா மூன்றுமுறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 25 பேர் உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு (21.06) வெளியாகின.

அதில் சூடுவெந்தபுலவு பகுதியில் எட்டு பேருக்கும், சூசைப்பிள்ளையார்குளம் வைரவர் கோவிலடி பகுதியில் எட்டு பேருக்கும், மறவன்குளம் பகுதியில் ஒருவருக்கும், சமனங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், நெங்கேணி பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் நான்கு பேருக்கும், மாமடு பகுதியில் ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் இருவருக்கும்,

கல்மடு பகுதியில் இருவருக்கும், செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் இருவருக்கும், பூனாவ பகுதியில் ஒருவருக்கும், முருகனூர் பகுதியில் ஒருவருக்கும், போகஸ்தலாவ பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஆசிக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

வவுனியா தெற்கு குருந்துபிட்டிய பகுதியில் இருவருக்கும், பட்டாணிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், யாழ் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த வவுனியாவில் உள்ள ஒருவருக்கும் என 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட சூடுவெந்தபுலவு மற்றும் சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளதுடன், 25 தொற்றாளர்கள் வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்கள் ஆவார்.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, வவுனியாவில் இரு ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களின் எண்ணக்கை 100 கடந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த சில நாட்களில் மீண்டும் நாட்டை முடக்கும் தீர்மானம் எடுக்கப்படுமா?

டெல்டா வைரஸ் தொற்று..

டெல்டா வைரஸ் தொற்று சமூகத்தில் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டை திறந்திருப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் எடுக்கும் சூழ்நிலையை அடுத்து வரும் சில நாட்கள் உருவாக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு வார காலம் நாடு முடக்கப்பட்டு அடுத்த வாரத்தில் இருந்து பயணத்தடையை தளர்த்த நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னமும் ஆரோக்கியமான நிலையொன்றில் நாடு இருந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சமூகத்தில் ஒரு சில பகுதிகளில் டெல்டா வைரஸ் தொற்று பரவுள்ள நிலையில் மீண்டும் தீர்மானம் எடுக்கும் சூழ்நிலையை அடுத்து வரும் சில நாட்கள் உருவாக்கும் என்றே நாம் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நாட்டை திறப்பதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-

மேலும் சில மாதங்கள் இலங்கையை முழுமையாக முடக்கும் நிலை : பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!!

பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை…

நாட்டை மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் செய்ய முடியாமல் போன அனைத்து விடயங்களையும் ஏனைய நாட்டைகளை போன்று செய்துக் கொள்ள முயற்சித்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த வருட கடைசி வரை சிறியளவில் வேலை செய்துக் கொண்டிருப்பதா அல்லது இரண்டு வாரங்களில் மீண்டும் நாட்டை மூடி வைப்பதாக என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை கடிதம் அனுப்பி அத்தியாவசிய சேவையற்ற பலரை பணிக்கு அழைக்க நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இம்முறை அவ்வாறான நிலைமைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-