கங்கை நதியில் மிதந்து வந்த அழகிய மரப் பெட்டி : திறந்து பார்த்த படகோட்டிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

கங்கை நதியில்…

கங்கை நதியில் குழந்தை ஒன்று அழகான மரபெட்டிக்குள் இருந்த படி மிதந்து வந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாவட்டம் காசிப்பூர் பகுதியில் இருக்கும் ஆற்றங்கரையோரம் மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ளூர் படகோட்டி குல்லு சவுதாரி என்பவர் இந்த மரப்பெட்டியை பார்த்துள்ளார்.

அப்போது அந்த பெட்டியின் உள்ளே குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்கவே, உடனே அந்த மரப்பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த பெட்டியின் உள்ளே சிவப்பு நிற பட்டுத் துணியில் குழந்தை சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

காளிதேவியின் புகைப்படம் அந்த மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த மரப்பெட்டியில் குழந்தையின் பிறப்பு சான்றிதழும் இருந்துள்ளது. இதையடுத்து, அந்தப்படகுக்காரர் குழந்தையை தானே வளர்க்க விரும்பி குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து உள்ளூர் மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, குழந்தையை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பொலிசார் காப்பகத்தில் குழந்தையை சேர்த்தனர்.

குழந்தையின் பெயர் கங்கா என பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தை தண்ணீரில் தவறி விழுந்ததாக தெரியவில்லை. முழுவதுமாக தயார் நிலையில் வைத்து அனுப்பியுள்ளனர்.

அந்த மரப்பெட்டியை புதிதாக வாங்கியுள்ளனர். குழந்தையின் உடல்நலனை பரிசோதித்து பார்த்ததில், ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும், குழந்தை மிதந்து வந்த மரப்பெட்டிக்குள் குழந்தை பிறந்த குறிப்புகள், ஜாதகம், காளி தேவியின் படம் மற்றும் அக்குழந்தை கங்கைமகள் என்று குறிக்கும் வாசகமும் இடம் பெற்றுள்ளது.

கங்கையின் மகளை வளர்ப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் உத்தரப்பிரதேச மாநில அரசு செய்யும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதுடன், படகோட்டியின் மனிதாபிமான செயலையும் பாராட்டியுள்ளார்.

ஒரு மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் : மா மரத்துக்கு காவலாக 4 ஆட்கள், 6 நாய்கள் : அப்படி என்ன சிறப்பு அந்த மாம்பழத்தில்?

இந்தியாவில்..

இந்தியாவில் மாம்பழங்கள் விளையும் தங்கள் தோட்டத்தில் பாதுகாப்புக்கு 4 ஆட்கள் மற்றும் 6 நாய்களை தம்பதி வேலைக்கு வைத்துள்ள நிலையில் அதன் ஆச்சரிய பின்னணி வெளியாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் சங்கல்ப் – ராணி தம்பதிக்கு பழத்தோட்டம் உள்ளது. இங்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த போது அது எல்லா மரமும் போல சாதாரணமாக வளரும் என நினைத்தனர்.

அங்கு அவர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த மரக்கன்றுகள் அசாதாரண ரூபி நிற மாம்பழங்களாக வளர்ந்தன. பின்னர் தான் அது அரியவகை ஜப்பான் Miyazaki வகை மாம்பழங்கள் என தம்பதிக்கு தெரியவந்தது.

அந்த மாம்பழத்தில் அப்படி என்ன சிறப்பு என கேட்கிறீர்களா? இது உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழ வகைகளில் ஒன்றாகும். இதன் ஒரு கிலோகிராமின் விலை ரூ 2 லட்சம் 70 ஆயிரம் ஆகும்.

சங்கல்ப் – ராணி தம்பதி பேசுகையில், கடந்தாண்டு எங்கள் தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் மாம்பழங்களை தி.ருடி சென்றுவிட்டனர். இதன்பின்னர் தான் 4 காவலாளிகள் மற்றும் 6 நாய்களை காவலுக்கு போட்டுள்ளோம்.

இந்தியாவில் இந்த வகை மாம்பழங்கள் விளைவது அரிதிலும் அரிது மிக அரிது. சென்னைக்கு நாங்கள் முன்னர் மரக்கன்றுகள் வாங்க சென்ற போது நபர் ஒருவரை இரயிலில் பார்த்தோம்.

அவர் தான் இந்த மரக்கன்றுகளை முதலில் எங்களுக்கு கொடுத்தார். அதை குழந்தை போல பாதுகாத்து வளர்க்குமாறு கூறினார், அது தான் பின்னாளில் Miyazaki வகை மாம்பழ மரமாக வளர்ந்தது.

ஒரு பழத்தை ரூ 21000 கொடுத்து விலைக்கு வாங்க பல பணக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை விற்கவில்லை, ஏனெனில் அதிக செடிகளை வளர்க்க பழங்களை பயன்படுத்துவோம் என கூறியுள்ளனர்.

மத்தியப் பிரதேச தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஆர்.எஸ் கடாரா கூறுகையில், பழத்தோட்டத்தை ஆய்வு செய்துள்ளேன், இந்த பழம் இந்தியாவில் அரிதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளேன். இது விலை உயர்ந்தது, ஏனெனில் அதன் உற்பத்தி மிகக் குறைவு, அதன் சுவை மிகவும் இனிமையானது என கூறியுள்ளார்.

மாமியாருக்கு பயந்து கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறிய மருமகள் : பின்னர் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கர்ப்பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரிடம் பொய்யாக கூறி நம்பவைத்த இளம்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.

சென்னை மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், கனிமொழி தம்பதிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லை.

இது தொடர்பாக கனிமொழியை அவர் மாமியார் திட்டி தீர்த்து வந்துள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த கனிமொழி தான் கர்ப்பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரை நம்பவைத்துள்ளார்.

ஆனால் ரஞ்சித்குமாருக்கு ச.ந்தேகம் வந்ததால் மனைவிக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது அவர் கர்ப்பமாக இல்லை என தெரியவந்தது. இதனால் அவரும் குடும்பத்தாரும் அ.திர்ச்சியடைந்தனர்.

குடும்பத்தாருக்கு உண்மை தெரிந்துவிட்டதே என்ற பயத்தில் இருந்த கனிமொழி வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பம் குறித்து பொலிசார் வி.சாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்தடுத்து உயரவுள்ள பொருட்களின் விலை : இலங்கை மக்களுக்கு ஏற்படப்போகும் சுமை!!

பால்மாக்களின் விலை…

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சந்தைகளில் பால்மாக்களின் விலைகள் மற்றும் கப்பல் கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 350 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலையை 140 ரூபாவாலும் அதிகரிக்க அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களின் நலனை கருத்திற் கொண்டு பால்மா விலைகளை அதிகரிக்க போவதில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் இளம் தமிழ் தம்பதியை நெகிழ வைத்த சிங்கள மக்கள்!!

தமிழ் தம்பதி..

தென்னிலங்கையில் வெள்ளத்திற்கு மத்தியில் கர்ப்பிணி மனைவியை 22 கிலோ மீற்றர் தூரம் வைத்தியசாலைக்கு தூக்கி சென்ற கணவரை மக்கள் நெகிழ வைத்துள்ளனர்.

நேற்று அந்த தம்பதி தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்ற மக்கள், தம்பதியினால் தோட்ட அலுவலகத்திற்கு செலுத்தவிருந்த 65 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் வீட்டிற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொடுப்பதற்கும் மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் தங்குவதற்கு வீடு ஒன்றை வழங்குவதற்கும் நபர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மனைவி 22 கிலோ மீற்றர் தூக்கிச் சென்ற சுரேஷ் குமார், காலி ஹினிதும பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அவர் வாழும் கொடிகந்த கிராமம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது.

இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான சுரேஷ் குமாரின் மனைவி திடீரென சுகயீனமடைந்துள்ளார். வயிற்றிலுள்ள குழந்தையின் எவ்வித அசைவுகளும் இல்லை என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்ட போது 5 மணித்தியாலங்களுக்குள் மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர். முழு பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதுடன், பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மனைவியை வைத்தியசாலைக்கு தூக்கி செல்ல சுரேஷ் தீர்மானித்தார்.

அதற்கமைய வைத்தியசாலைக்கு மனைவியை தூக்கி சென்று அனுமதித்துள்ளார். மனைவியும் குழந்தையும் ஆபத்தின்றி உயிர் தப்பியதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை தொலைக்காட்சி செய்திகளில் பார்த்த மக்க

எதிர்வரும் சனிக்கிழமை தீர்மானமிக்க நாள் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!!

பயணக்கட்டுபாடு..

எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுபாடு நீக்கப்படுவது தொடர்பில் இதுவரையில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் வீதிகளில் வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதே அதற்கு காரணமாகியுள்ளது.

இந்த நிலையில் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்குவதற்கு முன்னர் கொவிட் சமூக பரவல் தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் வீதிகளில் செல்லும் மக்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் முழுவதும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நோய் எந்த அளவு சமூகத்திற்கு பரவியுள்ளது என்பது தொடர்பில் சனிக்கிழமை வரை உறுதி செய்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீசீஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு அவர் கூறியுள்ளார். அத்துடன் சனிக்கிழமை தீர்மானமிக்க ஒரு நாள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டினை மக்கள் மீறி செயற்படுவதனை அவதானிக்க முடிகின்றதென சுகாதார அமைச்சர் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதே முறையில் தொடர்ந்து பயணக்கட்டுப்பாடு மீறப்பட்டால் இன்னும் இரண்டு வாரங்கள் பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க நேரிடும். எப்படியிருப்பினும் முன்பு அடையாளம் காணப்படும் நோயாளிகளை விடவும் தற்போது குறைவடைந்துள்ளது. எனினும் எண்ணிக்கையை மாத்திரம் பார்த்து இறுதி முடிவிற்கு வர முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா…

வவுனியாவில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு வெளியாகின.

அதில் சகாயமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு பேருக்கும், எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் ஒருவருக்கும், உக்குளாங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், அரசடிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சூடுவெந்தபுலவு பகுதியில் ஒருவருக்கும் என 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பணத்திற்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்து வந்த மோசமான செயல்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் அழகிய இளம் ஜோடி குறுக்கு வழியில் சம்பாதிக்க செய்த செயலால், தற்போது சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டம் காந்தி மாநகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். 21 வயதான இவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்,

வினோதினி கோயமுத்தூரில் நர்சிங்க படிக்க கல்லூரி வந்த போது, சூர்ய பிரகாஷின் நட்பு கிடைக்க அது நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் மாணவி படிப்பு முடிந்ததும் விருதுநகருக்கு செல்லாமல் காதலருடன் சுற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் காந்தி மாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது.

இதனால் சிறு, சிறு வேலைகளுக்குச் சென்ற நிலையில் அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் எளிதில் பணம் சேர்த்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என இருவரும் தீர்மானித்தனர்.

அப்போது தான் க.ஞ்.சா.வை வாங்கி விற்கலாம் என இருவரும் முடிவு செய்தனர். அதன் மூலம் நல்ல பணம் கிடைக்கும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என முடிவு செய்து க.ஞ்.சா.வை வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

மேலும் பிரகாஷ் கல்லூரியில் படிக்கும் போது அவரது நண்பர்கள் அவரை சூர்யா என்றே அழைத்து வந்துள்ளனர். க.ஞ்.சா விற்க ஆரம்பித்ததும், சூரிய பிரகாஷ் தனது பெயரை சூர்யா என்றே எல்லோரிடமும் கூறி வந்துள்ளார்.

இதே போன்று தனது காதலி பெயரையும் தமன்னா என்று மாற்றி கூறியுள்ளார். அதன் படி இருவரும் கோயமுத்தூரில், சூர்யா-தமன்னா என்ற பெயரிலே க.ஞ்.சா விற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கோவை கிழக்கு பொலிசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது, இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். பொலிசார் மற்ற வாகனத்தை சோ.தனையிடும் போது, இவர்களின் நடவடிக்கையில் ச.ந்தேகமடைந்து, அவர்களின் இரு சக்கர வாகனத்தை சோ.தனை செய்த போது,

உள்ளே 2 கிலோவிற்கு மேல் க.ஞ்.சா இருப்பதை க.ண்டுபிடித்து ப.றிமுதல் செய்தனர். அதன் பின் இவர்களை கைது செய்துள்ள பொலிசார், தொடர்ந்து வி.சாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் அ.ழுகிய ச.டலமாக மீ.ட்பு : நடந்த விபரீதம்!!

சென்னை..

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் 3வது மாடியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் 8வது மாடியில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்ட வழக்கில் அ.திரடி திருப்பமாக கொ.லை.யா.ளி.யா.ன பெ.ண் சி.க்.கி.யு.ள்.ளா.ர்.

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மவுலி என்பவரது மனைவி சுனிதா, கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 22-ஆம் திகதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து மனைவியை கா.ணவில்லை என அவரது கணவர் பு.காரளித்த நிலையில், மருத்துவமனையின் 8-வது மாடியில் கடந்த 8ஆம் திகதி அ.ழு.கி.ய நிலையில் ச.டலமாக அந்த பெ.ண் மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர்.

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 70ஆக மட்டுமே இருந்ததால், ஆக்சிஜன் படுக்கையில் முடியாமல் இருந்த சுனிதா, எப்படி தனியாக 3ஆவது தளத்தில் இருந்து 8-வது தளத்திற்கு சென்றிருக்க முடியும்?

அதுவும் அங்குள்ள ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் மின் பராமரிப்பு அறையில் பி.ணமாக கி.டந்ததும் ச.ந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர், சுனிதாவின் ச.டலத்தை ஏழு மருத்துவர் கொண்ட மருத்துவ குழுவினர் பி.ரேத ப.ரிசோதனை செய்தனர்.

உ.ட.ல் அ.ழு.கி.வி.ட்டதால் பிரேத ப.ரிசோதனையின் உடனடியாக எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதற்க்கிடையே பி.ரேத ப.ரிசோதனையின் இறுதிகட்ட அறிக்கையில் சுனிதாவின் க.ழு.த்.தி.ல் க.யி.ற்.றா.ல் இ.று.க்.கி.ய த.ட.ம் இருப்பது க.ண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து உறுதியானது.

இதையடுத்து மீண்டும் வி.சாரணையை தொடங்கிய பொலிசார் அந்த கொரோனா வார்டில் அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் வி.சாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கடந்த 22-ம் திகதி இரவு ஒப்பந்த தூய்மை பணியாளரான ரதிதேவி, சக்கர நாற்காலில் சுனிதாவை அழைத்துச் சென்றதாக ஒரு ஊழியர் பொலிசாரிடம் கூற, ரதிதேவியிடம் வி.சாரித்தபோது,

அ.வ.ர் சுனிதாவை கொ.லை செ.ய்.த.தை ஒ.ப்.பு.க் கொ.ண்டுள்ளார். ச.ம்பவம் ந.டந்த அ.ன்.று சுனிதாவிடம் க.ட்டாக இ.ருந்த ப.ணத்தை க.வனித்த ரதிதேவி, அ.தை கொ.ள்.ளை.ய.டி.க்.க மு.டி.வு செ.ய்துள்ளார்.

அன்றைய தினம் இரவு 12.30 மணி அளவில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி சுனிதாவை சக்கர நாற்காலியில் வைத்து, ஊழியர்கள் பொருட்களை கொண்டு செல்லும் லிப்டிற்கு தள்ளிச்சென்றுள்ளார்.

லிப்ட் மூலம் 8ஆவது தளத்திற்கு கொண்டு சென்ற அவர், அங்குவைத்து ஏற்கனவே மூ.ச்.சு தி.ணறலால் அவதிப்பட்டு வந்த சுனிதாவின் மூக்கில் இருந்த ஆக்ஸிஜன் டியூப்பை எடுத்து க.ழு.த்.தி.ல் போ.ட்.டு இ.று.க்.கி.க் கொ.லை செ.ய்.து ,

அவரது ச.ட.ல.த்.தை அ.ங்கேயே போ.ட்டு வி.ட்டு, அவரிடம் இருந்த செல்போனையும், 9,500 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு செ.ன்றுவிட்டார்.

கட்டடத்தின் 8-வது தளத்திற்கு ஊழியர்கள் யாரும் தினமும் செல்ல மாட்டார்கள் என்பதால், அ.ழு.கு.ம் நி.லை வ.ரை உ.ட.லை யா.ரு.ம் க.வனிக்காமல் இருந்துள்ளனர். ரதிதேவி கடந்த மூன்று வருடமாக அங்கு பணிபுரிந்து வந்துள்ளார்.

க.ணவர் இ.ற.ந்.து.வி.ட இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் திருவொற்றியூரில் வசித்து வருவதாகவும் பணத் தேவை இருந்ததால், தீ.வி.ர தொ.ற்று ஏற்பட்டிருந்த சுனிதா எப்படியும் இ.ற.ந்.து வி.டுவார் எ.ன நி.னைத்து,

அ.வ.ரை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு ப.ணத்தை தி.ரு.டி.ய.தா.க த.ன.து வா.க்குமூலத்தில் தெ.ரிவித்துள்ளார். இ.தை தொ.டர்ந்து அ.வ.ரை பொ.லிசார் கை.து செ.ய்துள்ளனர்.

மாடியில் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

செல்வ அஜிதா..

தமிழகத்தில் மாடியில் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற இளம்பெண் கால் தவறி கீழே விழுந்து உ.யிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகிலுள்ள விஜயநகரியைச் சேர்ந்தவர் அம்மாபழம் (56).

இவரது கணவர் தங்கதுரை. இவர் சில வருடங்களுக்கு முன்பு இ.றந்துவிட்டார். இவர்களுக்கு செல்வ சரண் (34) என்ற மகனும், செல்வ அஜிதா என்ற மகளும் (31) உள்ளனர்.

செல்வ அஜிதாவிற்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு மின்சார வாரியத்தில் வேலை செய்யும் ராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

செல்வ அஜிதா கருங்குளத்தான் விளையிலுள்ள தன்னுடைய கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அம்மாபழம் தன்னுடைய மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக மருமகன் வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில், செல்வ அஜிதா முருங்கைக்காய் பறிப்பதற்காக வீட்டு மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி 15 அடி உயர மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

படுகாயம் அடைந்த அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர் சிகிச்சைக்கு அழைத்து சென்று, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகத்தை மூடுகின்ற கவசத்தை மாத்திரம் அணியலாமா?

முகக் கவசம்..

கோவிட் தொற்றுக்கு எதிராக முகம் முழுவதையும் மூடும் கவசங்கள் பாதுகாப்பு வழங்காமையினால் முகக்கவசத்துக்கு பதிலாக முகம் முழுவதும் மூடுகின்ற கவசம் மாத்திரம் அணிவது பரிந்துரைக்கப்படவில்லை மற்றும் பொருத்தமானது அல்லவென சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ஒருவர் இன்னொருவருடன் நேருக்கு நேர் உரையாடும் போதும் உமிழ்நீர்த்துளிகள் நேரடியாக முகத்தில் படுவதை தடுக்கவும் முகம் முழுவதையும் மூடும் கவசங்கள் அணிவது பொருத்தமானது என கூறப்படுகின்றது.

மேலும், தும்மல் மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பையும் வழங்குகின்றது. இருப்பினும் அவை மற்றவர்களின் சுவாசத்துளிகள் அல்லது தெறிப்புக்களில் இருந்து அவர்களை பாதுகாக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் முகக்கவசங்களுக்கு பதிலாக முகம் முழுவதையும் மூடும் கவசங்களை பயன்படுத்த முடியாது. முழு பாதுகாப்பையும் பெறுவதற்கு முகக்கவசத்துடன் முகம் முழுவதையும் மூடும் கவசங்களையும் அணிவது பொருத்தமானதாகும்.

முகக்கவசங்கள் மற்றும் முகம் முழுவதையும் மூடும் கவசங்கள் அணிவது மாத்திரம் மக்களை கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்காது எனவும் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் என்பனவும் மிக முக்கியமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களில் திருமணம் : 19 வயது இளம் பெண்ணுக்கு நடுவீதியில் நடந்த விபரீதம்!!

உத்தர பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 5 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த இளம் பெண், சாலையில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.டந்த சம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், மொராதாபாத்தில் உள்ள சூரஜ்நகரில் வசிபவர் மீனாட்சி சிங் எனும் டீனா (19). இவருக்கும் இவருடைய காதலன் ஜிதின் என்பவருக்கும் வரும் ஜூன் 20-ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டீனாவின் தந்தை கடந்த திங்கட்கிழமை மதியம் தனது மகளின் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அவர் வந்த சாலையில் எதையோ பார்த்தபடி மக்கள் கூட்டம் திரண்டிருந்த நிலையில், அவர் தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கி பார்த்துள்ளார்.

அங்கு அவர் கண்ட காட்சி அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. அவரது மகள் டீனா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.டந்ததைக் கண்டு தரையில் பு.ரண்டு அ.ழுதுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தினர். அப்போது தான் தி.டு.க்.கி.டு.ம் உண்மை வெளிவந்தது. டீனாவை திருமணம் செய்துகொள்ளவிருந்த ஜிதின் தான் இந்த கொ.லை.யை செ.ய்.து.ள்.ளா.ர்.

வி.சாரணையில், ஜிதின் டீனாவை காதலித்துள்ளார், ஆனால் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. சூழ்நிலை காரணமாக அவரை திருமணம் செய்துகொள்ளும் கட்டாயத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் தனக்கு சாதகமான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஜிதின், திங்கட்கிழமை டீனாவின் தந்தை வீட்டிலிருந்து சென்றதும், தீணாவை யாருக்கும் தெரியாமல் ஷாப்பிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, டீனாவை ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, க.ழு.த்.தை நெ.ரி.த்.து.க் கொ.ன்.ற.தா.க கூ.றப்படுகிறது.

பிறகு அவரது உ.ட.லை மொராதாபாத்தின் தாகூத்வாரா பகுதியில் சாலையில் போட்டுவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவும் ஆபத்து!!

டெல்டா வைரஸ்..

இலங்கையில் பரவும் பிரித்தானிய திரிபு கோவிட் வைரஸினால் பாதிக்கப்படும் நபர்கள் 10 நாட்களின் பின்னரும் உ.யிரிழப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையில் கோவிட் வைரஸ் பரவல் அபாய மிக்க நிலைமை இன்னமும் நீங்கவில்லை என இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர், விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள கூடிய வகையில் தற்போது நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எனினும் மக்கள் சமூகத்திற்குள் நடமாடுவதனை பார்க்கும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே குழப்பமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அர்ப்பணிப்பு செய்யவில்லை என்றால் பயண கட்டுப்பாட்டினை நீடிக்க கூடும். நாட்டினுள் கொவிட் மாறுபாடு பரவுவதனை தடுப்பதற்கு எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மீனவர்கள் மூலம் இந்தியாவில் பரவும் அபாயமிக்க டெல்டா கொவிட் மாறுபாடு இலங்கையில் பரவும் அவதானம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

பிரான்ஸில் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ் மாணவன்!!

பிரான்ஸில்..

இம்மாதம் 20ம் மற்றும் 27ம் ஆகிய திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் மாவட்ட, பிராந்திய சபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் SEINE – SAINT-DENIS மாவட்டத்திற்கான வேட்பாளராக LA COURNEUVE, DUGNY மற்றும் LE BOURGET நகரங்கள் இணைந்த தொகுதியில் முதல் முறையாக செல்வன் அற்புதராஜா ஜெரோன் LFI , PCF ஆகிய கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

2018ம் ஆண்டு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்களினால் தொழிளாளர்களுக்கு எதிரான மசோதாச்சட்டம், கல்வி முறையில் மாற்றம், சமூக நலத்திட்டங்கள் போன்றவற்றுக்கான ஜனநாயக ரீதியான பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஜெரோன் கலந்து கொண்டு அவர் ஆற்றிய பங்களிப்பு பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தான் வாழும் LA COURNEUVE நகராட்சி மன்றத்தினால் நடாத்தபடும் பத்திரிகைக்கு இவர் வழங்கிய செவ்வியில் கோவிட் 19 தெற்றின் பிற்பாடு ஆசிரியர்கள், மாணவர்களின் சுகாதாரப்பாதுகாப்பு, உதவித்திட்டங்கள் பற்றிய இவரது கருத்து சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கிகரிக்கப்பட்டது.

ஜெரோன் தலைமையில் மாணவர் அமைப்புக்களோடு சேர்ந்து உயர்தர வகுப்பு இறுதியாண்டு பரீட்சை விடயமாக BOBIGNYஇல் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் மற்றும் ஆர்பாட்டம் பற்றிய செய்தி தொகுப்பு பிரான்ஸில் மிகவும் பிரசித்தமான LE PARISIEN பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய 15வது வயதிலே அரசியலில் இணைந்து கொண்ட ஜெரோன் பல அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார், இவருடைய சமூக அரசியல் செயல்பாடுகள் மாணவர்கள் , பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதினால் இவர் சார்ந்த அரசியல் கட்சி இவரை மாவட்ட சபை வேட்பாளராக நிறுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் எரிபொருள் விலையால் ஏற்படவுள்ள மற்றுமொரு நெருக்கடி!!

எரிபொருள் விலையால்…

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டள்ளமையினால் மற்றுமொரு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களும் விலை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரித்தமையினால் சரக்கு கொள்கலன்களின் போக்குவரத்து கட்டணத்தை நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அந்த கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்க்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ரொஷான் மெனிக்வடுகே தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

பாடசாலைகளை திறப்பது தொடர்பில்…

நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் பாடசாலைகளை திறக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் சுகாதார பிரிவின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் மீண்டும் பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பு முறைக்கமையவே மீண்டும் திறக்க வேண்டும். பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முறை தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.