இலங்கையில் இணையத்தில் ம.துபானம் விற்பனை செய்ய அனுமதி!!

இணையத்தில்..

இணையத்தில் ம.து.பா.ன வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பல்பொருள் அங்காடிகளில் இணையத்தில் ம.து.பா.ன வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இவ்வாறு இணைய வழியாக ம.து.பா.னங்களை விற்பனை செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நிதி அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ம.து.வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், நிதி அமைச்சினால் இணையத்தில் ம.து.பா.ன.ம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கோவிட் ஒழிப்பு விசேட செயலணி ம.து.பா.ன வகைகளை இணையத்தில் விற்பனை செய்ய இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என ம.து.வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பயணத்தடை காலத்தில் இவ்வாறு இணையத்தில் ம.து.பா.ன வகைகளை விற்பனை செய்யக் கூடாது என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் : பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை!!

பயணக்கட்டுப்பாடு..

4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை செயற்படுத்த நேரிடும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

பயண கட்டுப்பாடுகளை பொதுமக்கள் புறக்கணித்து செயற்பட்டால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தால், அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம் என அவர் கூறியுள்ளார்.

தொற்றினை கட்டுப்படுத்துவதென்றால் என்றால் அனைவரும் பயணக்கட்டுப்பாடினை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பாதிப்பை குறைத்து, சீரான முறையில் வைரஸைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், பாரிய அளவிலான மக்கள் கட்டுப்பாடுகளை புறக்கணித்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையால் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு இருந்த காலப்பகுதியை அதிகரித்துள்ளது. வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றம் சென்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது.

மக்களே சரியான முறையில் செயற்பட வேண்டும். எதிர்வரும் காலங்களில் நிலைமை தொடர்ந்தால் கடுமையான சட்டத்தின் கீழ் இதனை கட்டுப்படுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா பொலிசாருக்கு எதிராக பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

இ.கௌதமன்..

வவுனியா பொலிசாருக்கு எதிராக பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வவுனியா நகரசபை தலைவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பாக இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எந்தவித முன்னறிவித்தலுமின்றி நகரசபைத் தலைவரான என்னை பொலிஸ் நிலையம் அழைத்து கைது செய்தனர்.

பொலிசாருடைய செயற்பாடு பக்கச்சார்பான செயற்பாடாகவே இருந்தது. அதிகார பலமும் அரசியல், பணபலமும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நிலைமையை நேற்று அறியமுடிந்தது.

எனவே சாதாரண மக்களுக்கான நீதி இந்த பொலிஸ் நிலையங்களில் எப்படி கிடைக்கும் என்பது கேள்வியாகவுள்ளது. அத்துடன் எமது உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பொலிசாரின் அசமந்தப்போக்கே.

தனிப்பட்ட நபர்களிற்காக அரச உத்தியோகத்தர்களை கைது செய்வதும், அச்சுறுத்துவதும் எந்தவகையில் நியாயமான செயற்பாடாக இருக்கமுடியும். இப்படியான பொலிசாரால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கே அவமானம் ஏற்பட்டுள்ளது.

ஒரு நீதிபதியை போல வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரி எனக்கு பதிலளித்தார். பொலிஸ் நிலையம் நீதிமன்றம் போலவே இயங்குகின்றது. எனவே பொலிசாரின் அசமந்தப்போக்கு மற்றும் அரசியல் பின்னணியில் பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் பொலிஸ் சேவை ஆணைக்குழுவிற்கு இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளோம். வடமாகாண ஆளுனர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டினை பதிவுசெய்யவுள்ளோம்.

அத்துடன் குறித்த விடுதியினூடாக நகரசபைக்கு சேரவேண்டிய மிகுதி பணத்தினை நீதிமன்றமூடாக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். வாடிவீடு என்பது நகரசபையின் சொத்து அதனை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கான தீர்மானங்களையும் எடுத்துள்ளோம்.

குறித்த விடுதிக்கு அருகில் பிரபலபாடசாலை, மற்றும் இந்து இளைஞர் சங்கம்,சாய்பாபா மடம்,மற்றும் நீதிபதியின் வதிவிடம் ஆகியன அமைந்துள்ளன.

எனவே குறித்த இடத்தில் ம.து.பா.ன.சா.லை ஒன்று தேவையில்லை என்று நாம் கருதுகின்றோம். எனவே வேறு பொது விடயங்களிற்காக அந்த இடத்தினை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

காலப்போக்கில் அது சரிவரும். அத்துடன் ம.து.பா.ன.த்.தை விற்று கு.டி.யை கெடுக்கும் செயலை நகரசபை செய்யாது எனத் தெரிவித்துள்ளார்

வவுனியா கற்குழியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

கற்குழியில்..

வவுனியா கற்குழி பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபர் இன்று (16.06.2021) காலை பொதுக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் உட்பட அவரின் உறவினர்கள் சுகாதார பிரிவினரினால் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தபட்டனர்.

இந்நிலையில் நேற்று (15.06) இரவு வீட்டிலிருந்து கணேசன் இளங்குமரன் (வயது 51) என்ற நபர் வெளியே சென்றுள்ள நிலையில் அவரை உறவினர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று (16.06) காலை கற்குழி பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை வீதியிலுள்ள பொதுக் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸார் தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தனிமைப்படுத்தல் மன அழுத்தம் காரணமாக குறித்த நபர் த.ற்.கொ.லை மு.யற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் அவரின் மரணம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் இன்றும் 55 பேர் கொரோனா தொற்றால் ப.லி!!

கொரோனா..

நாட்டில் கோவிட் ம.ர.ணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் மேலும் 55 ம.ர.ணங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி நாட்டின் மொத்த கோவிட் ம.ர.ணங்களின் எண்ணிக்கை 2315 ஆக உயர்வடைந்துள்ளது. உ.யி.ரி.ழந்தவர்களில் 33 ஆண்களும், 22 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேவதாசி ஆக்கிவிடுவோம் என மகளை மி.ரட்டிய பெற்றோர் : வீட்டை விட்டு ஓடிய இளம் பெண்!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில், திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தேவதாசி ஆக்கி கோவிலில் விட்டு விடுவதாக பெற்றோர் மி.ர.ட்.டி.ய.தா.ல் இளம்பெண் வீட்டை விட்டு ஓ.டிய சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சோடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதாகும் பெண்ணை அவரது பெற்றோர், மூத்த மகளின் கணவரையே திருமணம் செய்துக்கொள்ளுமாறு க.ட்டாயப்படுத்தியுள்ளனர்.

பெற்றோரின் இந்த முடிவு இளம்பெண்ணுக்கு பிடிக்கவில்லை. எனவே திருமணம் வேண்டாமென மறுத்துள்ளார். ஆனால், திருமணம் செய்யாவிட்டால் தேவதாசியாக்கி கோவிலில் விட்டு விடுவதாக அவரது பெற்றோர் மி.ர.ட்டியுள்ளனர். பீ.தி.யடைந்த இளம்பெண் வீட்டை விட்டு ஓ.டிவிட்டார்.

அங்கிருந்து யாத்கிர் மாவட்டத்தில் சுர்பூரில் உள்ள தன் உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தார். இதை தெரிந்து கொண்ட பெற்றோர், அங்கு வந்து மக்களை அழைத்துச்செல்ல முயற்சித்தனர். அனால் அவர் செல்ல மறுத்தார்.

இந்த நிலையில், தகவலறிந்து அங்கு வந்த மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலக வக்கீல், இளம்பெண்ணின் பெற்றோரை எ.ச்சரித்து, ஆதிஜாம்பவா கல்விச் சங்கம் நடத்தும் மகளிர் மறுவாழ்வு மையத்தில் இளம்பெண்ணை ஒப்படைத்தார்.

பின்பு, அப்பெண் தனது பெற்றோர் மீது பொலிஸில் பு.கா.ர் செய்தார். அவர் மீது பெற்றோரும் பதில் புகார் அளித்தனர். புகாரில், தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில், பணத்தை தி.ருடிக்கொண்டு வீட்டை விட்ட வெளியேறியதாகவும் பெற்றோர் குறிப்பிட்டிருந்தனர்.

பிறகு, இளம்பெண்ணையும் அவரது பெற்றோரையும் பொலிஸார் வரவழைத்து விசாரித்தனர். மகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி பெற்றோர் கோரினர். ஆனால் மகள் சம்மதிக்காததுடன், பா.துகாப்பும் கேட்டதால், ராய்ச்சூரில் இருக்கும் Mahila Santwana Kendra எனும் மகளிர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டார்.

”அவருக்கு கவுன்சலிங் அளிக்கப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால், சுய தொழில் துவங்க நிதியுதவி வழங்கப்படும். மேலும் அவருக்கு விருப்பமானவருடன் திருமணம் செய்து வைக்கப்படும்” என்று ராய்ச்சூர் துணை ஆணையர் ஆர்.வெங்கடேஷ் குமார் கூறினார்.

தேவதாசி முறை, சட்டத்தால் த.டைசெய்யப்பட்ட போதிலும், இந்தியாவில் சில பகுதிகளில் இன்னும் ஒரு சில இடங்களில் இருந்துவருகிறது என்பதை இச்சம்பவம் நினைவூட்டுகிறது.

முதலில் தந்தை பின்னர் மகள், மனைவி : கொரோனா நோயாளிகளுக்கு உதவிய குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்!!

கேரளாவில்…

இந்திய மாநிலம் கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு உதவிய ஆட்டோ சாரதியின் குடும்பம் அடுத்தடுத்து ம.ரணங்களால் ஸ்தம்பித்துள்ளது.

கேரளாவில் ஆட்டோ சாரதியான 57 வயது அசோகன் கொரோனா நோய் பாதிப்பால் கடந்த மாதம் 30ம் திகதி ம.ரணமடைந்தார். ஆட்டோ சாரதியான அசோகன் அப்பகுதி மக்களில் பெரும்பாலானோரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் முன்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்தவர்.

கடைசியில் கொரோனா பாதித்து அசோகன் ம.ரணமடைந்தார். இந்த நிலையில், நேற்று அசோகனின் மனைவி 50 வயதான லில்லிக்குட்டி என்பவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இவர்களது மகள் 28 வயதான விஜி கொரோனாவால் ம.ரணமடைந்திருந்தார். பிறந்து 18 நாட்கள் மட்டுமேயான விஜியின் பிஞ்சு கு.ழந்தை தற்போது தந்தை அபிஷேகின் பா.துகாப்பில் உள்ளது.

விஜியும் தாயார் லில்லிக்குட்டியும் தந்தை அசோகனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சந்திக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே, பிறந்து 18 நாட்களேயான பிஞ்சு குழந்தை அனன்யாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,

குழந்தைகளுக்கான மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். மேலும், அசோகனின் மனைவி லில்லிக்குட்டியின் சகோதரருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

கொரோனா நோயாளிகள் என அறிந்தும் அப்பகுதி மக்களை தமது ஆட்டோவில் மருத்துவமனையில் சேர்ப்பித்த அசோகன் இறுதியில் கொரோனாவுக்கு ப.லியானது அப்பகுதி மக்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

தந்தையும் தாயாரும் சகோதரியும் கொரோனாவுக்கு பலியான நிலையில், அசோகனின் மகன் விபின் மொத்த குடும்பத்தையும் இழந்த நிலையில் உள்ளார். மட்டுமின்றி, வீடு அடமானத்தில் இருப்பதால், பெரும் நிதிச்சுமையும் விபின் மீது உள்ளது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மி.ரட்டிய தம்பதி : பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.த நிலையில் அதற்கு காரணமான ஆண் மற்றும் பெண் கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீபா (26). இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபா தண்ணீர் பிடிப்பதற்கு வீட்டின் அருகே செல்லும்பொழுது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரிடம் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

இதில் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த பாமா,பிரபுதாஸ் ஆகிய இருவரும் உன்னைப்பற்றி திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் த.வறாக கூறி விடுவோம், உன்னை பற்றி த.வறாக மாப்பிள்ளைக்கு தெரிந்தால் என்ன ஆகும் என நினைத்து பார் என மி.ர.ட்.டி.ய.தா.க கூறப்படுகிறது.

இதன் காரணமாக ம.னமுடைந்த தீபா வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் தாய் கலாவதி காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் தீபா உ.ட.லை கை.ப்.ப.ற்றினார்கள்.

மேலும் த.ற்கொ.லை.க்.கு தூ.ண்டியதாக வழக்குப்பதிவு செய்து பாமா மற்றும் பிரபுதாஸ் உள்ளிட்ட இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர வி.சாரணை நடைபெற்று வருகிறது.

மழை நேரத்தில் வந்த விபரீத ஆசையால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவ மாணவி!!

இந்தியாவில்..

இந்தியாவில் செல்பி ஆசையால் மருத்துவ மாணவி உ.யிரிழந்துள்ள சம்பவம் அவர் குடும்பத்தாரை அ.திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நேஹா அர்சி.

சிலிக்கான் சிட்டி பகுதியில் வசிந்த வந்த இவர் சாகர் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். நேஹா தினமும் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வார்.

நேற்று நேஹா மற்றும் அவரது சகோதரர் இருவரும் நடைப்பயிற்சி சென்றுள்ளனர். அப்போது லேசான மழை பெய்துள்ளது. நேஹாவின் சகோதரர் அருகில் இருக்கும் கடைக்கு சென்று சிப்ஸ் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.

மழையின் காரணமாக காலநிலை நன்றாக இருந்ததால் தன்னுடைய மொபைல் போனில் நேஹா புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார். பாலத்தின் மீதிருந்த சுவரில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

இதில் அவருக்கு கடுமையான கா.யங்கள் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நேஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்தார்.

நேஹாவின் ம.ரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஒரே ஒரு கடிதத்தால் சி.தைந்து போன குடும்பம் : கல்லூரி காதலிக்காக கணவன் செய்த துணிகர செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் க.ல்லூரி கா.தலிக்காக, க.ணவன் ம.னைவியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு நா.ட.க.மா.டி.ய ச.ம்பவம், பொ.லி.ஸ் வி.சாரணையில் அ.ம்.ப.லமாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். வங்கி ஊழியரான இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த தாரணி தேவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயதில், கவின் பிரசன்னா என்ற ஆண் மகன் உள்ளார். கணவனின் நடவடிக்கை பி.டிக்காத காரணத்தினால் தாரணி தேவி ஆத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுகடந்த ஆறு மாத காலமாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மனைவியின் தாய் வீட்டிற்கு சென்ற அவர், மனைவியை ச.மரசம் செய்து தன்னுடைய வீட்டிற்கு காரில் அழைத்து வந்துள்ளார்.

அப்போது, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கோட்டைமேடு பகுதி மேம்பாலத்தில் வந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ம.ர்ம ந.பர்கள் சிலர் திடீரென்று காரை வ.ழிமறித்து த.ன்னையும் த.ன.து ம.னைவியும் தா.க்.கி ம.னை.வி.யி.ன் க.ழு.த்.தி.ல் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை ப.றி.த்.து செ.ன்.று.வி.ட்டதாகவும்,

அதன் ப.டு.கா.ய.ம.டை.ந்.த ம.னைவியை மருத்துவமனையில் அனுமதித்த போதும், அவர் உ.யி.ரி.ழ.ந்.துவிட்டதாக காவல்நிலையத்தில் பு.கா.ர் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தீ.வி.ர வி.சாரணை மேற்கொள்ளும் படி 4 த.னி.ப்.ப.டை.க.ள் அ.மைக்கப்பட்டு வி.சாரணை நடைபெற்று வந்தது. ஆனால், சபரிநாதன் சொன்னது போல் அங்கு எந்த ஒரு ச.ங்கிலி ப.றி.ப்.பி.ற்.கா.ன அறிகுறிகள் எதுவும் இல்லாததால், பொலிசாருக்கு சபரிநாதம் மீது ச.ந்.தே.க.ம் வ.லுத்துள்ளது.

இதனால், பொலிசார் சபரிநாதன் வீட்டை சோ.த.னை மே.ற்கொண்ட போது, அவருடைய கல்லூரி காதலியின் கடிதம் சி.க்.கி.யு.ள்.ள.து. அதாவது, சபரிநாதன் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த, ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

அதன் பின், வீட்டிற்கு தெரியாமல் இருவரும் தி.ரு.ட்டுத்தனமாக நண்பர்கள் உதவியுடன், பண்ணாரி அம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

சபரிநாதன், ரேவதியுடன் கோபியில் தனி வீட்டில் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்தநிலையில், சபரிநாதனுக்கு, அவரது பெற்றோர் தரணி தேவியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இவருக்கு கவின் பிரசன்னா என்ற மகன் பிறந்தான். சபரிநாதனின் கல்லூரி காதலி ரேவதி, கடிதம் ஒன்றை எழுதி மனைவி தாரணி தேவிக்கு அனுப்பியுள்ளார்.

அதில், சபரிநாதனுக்கு முதல் மனைவி நான் தான், தன்னால் மட்டுமே சபரினாதனை சந்தோஷமாக் வைத்திருக்க முடியும், அதனால் நீ என் வாழ்க்கையை விட்டு விலகி விடு என்று கூறி தாங்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இணைத்து அனுப்பியுள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்குள் க.ருத்து வே.றுபாடு ஏற்படவே, கணவனை பிரிந்து மனைவி தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 6 மாதமாக காதலி வீட்டில் இருந்த சபரிநாதனிடம், ஊரரிய திருமணம் செய்த தாரணி தேவியை எல்லோரும் மனைவி என்று அழைக்கும் நிலையில்,

அதற்கு முன்னதாக கல்லூரி படிக்கும் போதே கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்திவரும், தன்னை எல்லோரும் கீப் என்றே அழைப்பதாகவும் வேதனை தெரிவித்த ரேவதி அ.ழுத்தம் கொ.டுத்துள்ளார்.

இதன் காரணமாக க.டுமையான ம.னக் கு.ழப்பத்தில் இருந்த சபரிநாதன் தாரணி தேவியை கொ.லை செ.ய்.ய மு.டிவு செய்துள்ளார். ரேவதி அனுப்பிய கடித விவரம் தாரணி தேவியின் குடும்பத்திற்கு தெரியாது என நினைத்த சபரி நாதன்,

மனைவியின் வீட்டிற்கு சென்று தனி குடித்தனம் அழைத்துச்செல்வதாக கூறி 20 ஆயிரத்திற்கும் மேல் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் பாத்திரங்களுடன் தனது மாமனாருடைய காரில் மனைவி தாரணியை அழைத்துக் கொண்டு புறப்பட்டுள்ளார்.

வழியில் சங்ககிரி அருகே ஒரு ஹோட்டலில் உணவருந்திவிட்டு கிளம்பிய போது சபரிநாதன் மற்றும் தாரணி இடையே ரேவதி தொடர்பான பேச்சு எழுந்து, வா.க்.கு.வா.த.ம் மு.ற்றியது.

அப்போது ஆ.த்.தி.ர.ம் அ.டைந்த சபரிநாதன், மனைவி தாரணி தேவியின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். அதன் பின், கார் டிக்கியில் வைத்திருந்த அ.ரி.வா.ள் ம.னையை எடுத்து காரின் பின்பக்க க.ண்ணாடியை உ.டை.த்.து சே.த.ப்.ப.டு.த்.தி.ய.தோ.டு, வீட்டிற்காக வாங்கிய க.த்.தி.யை எ.டுத்து சாலையில் போ.ட்டுள்ளார்.

அதன் பின்,, தாரணி தேவியின் 7 பவுன் தங்க சங்கிலியை க.ழட்டி கைக்குட்டையில் சுற்றி அருகிலிருந்த ஆசிரியர் காலனி பகுதியில் வீசிவிட்டு வ.ழி.ப்.ப.றி கொ.ள்.ளை.ய.ர்.க.ளா.ல் கொ.லை ந.டந்தது போன்று நா.டகமாடி சி.க்.கி.யு.ள்.ளா.ர்.

இதைத் தொடர்ந்து கை.து செய்யப்பட்ட சபரினாதன் , குமாரபாளையம் கு.ற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் காவலில் ராசிபுரம் கிளைச் சி.றை.யி.ல் அ.டை.க்.கப்பட்டான்.

இதற்கிடையே இந்த கொ.லை ச.ம்.ப.வ.த்.து.க்.கு மூ.ல கா.ரணமான சபரிநாதனின் கல்லூரி காதலி ரேவதியையும், முதல் திருமணத்தை மறைத்த சபரினாதனின் பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தாரணி தேவியின் பெற்றோர் முன்வைத்துள்ளனர்.

ஒரு மணி நேரத்தில் 73 ஆயிரம் கோடியை இழந்த உலகின் மிகப் பெரும் பணக்காரர் கவுதம் அதானி : எப்படி தெரியுமா?

கவுதம் அதானி..

இந்தியாவில் மிகப் பெரும் பணக்காரரான கவுதம் அதானி ஒரு மணி நேரத்தில் 73,250 கோடி இழப்பு ஏற்பட்டதால் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை இழக்கும் நிலையில் உள்ளார்.

ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 2-வது இடத்தில் உள்ளார். இவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு 5.64 லட்சம் கோடியாகவும், அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் 9.5 லட்சம் கோடியாகவும் உள்ளது.

இந்நிலையில், அதானியின் கிரீன் எனர்ஜி, டிரான்ஸ்மிஷன், எரிவாயு உள்ளிட்ட அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட், ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் 43,500 கோடி மதிப்பிலான கணக்குகளை தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் முடக்கியது.

இதனால் தேசிய பங்கு சந்தையில் முந்தைய நாள் வர்த்தக முடிவில் 1601.60 ஆக இருந்த, இந்த பங்கின் விலை நேற்று 91 குறைந்து, 1,510.35-ஆக சரிந்தது. இதன் மூலம், அதானி சொத்து மதிப்பில் 73,250 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், ஆசியாவின் 2வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

180 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் : 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு!!

இந்தியாவில்..

இந்தியாவில் 180 ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் 8 மணி நேர போ.ராட்டத்துக்கு பிறகு உ.யிருடன் மீ.ட்கப்பட்டுள்ளான்.

பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை சரியான முறையில் மூடப்படாததால் பல குழந்தைகளின் உயிர்கள் பறிபோய் உள்ளன.

இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனாலும், பலர் ஆழ்குழாய் கிணறு விஷயத்தில் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர்.

இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அமைத்திருந்த ஆழ்குழாய் கிணறு சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது.

நேற்று அந்த நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் சிவா ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். தகவலறிந்து பொலிசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன், குளுகோஸ் ஆகியவற்றை வழங்கினர். இந்நிலையில், 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிவா மாலையில் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

சிறுவன் சோர்வாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவனை உயிருடன் மீட்ட பேரிடர் மீட்புக் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

யாழில் குப்பைக்கு மூட்டிய தீக்குள் விழுந்து குடும்பப் பெண் பரிதாப மரணம்!!

யாழி..

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் குப்பைக்கு மூட்டிய தீக்குள் விழுந்து உ.யிரிழந்துள்ளார். குப்பிளான் தெற்கு பகுதியை சேர்ந்த சுதாக்கினி அன்னலிங்கம் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த குடும்பப் பெண், சம்பவ தினத்தன்று அதிகாலை வேளை வீட்டில் உள்ளோர் நித்திரையால் எழும்ப முன்னர் தான் நித்திரையால் எழுந்து வீட்டுக் காணியைக் கூட்டி குப்பைகளுக்குத் தீ வைத்துள்ளார்.

அந்தத் தீயில் முக குப்புற விழுந்து கடும் தீக்காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காலை கணவன் எழுந்து மனைவியைத் தேடியபோதே எரிந்த குப்பைகளுடன் மனைவியின் சடலம் காணப்பட்டதை அவதானித்து சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்த்துடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

குறித்த பெண் நோய்வாய்ப்பட்டு இருந்தார் எனவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும், காலை குப்பை மூட்டிய பின்னர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக எரிந்துகொண்டிருந்த குப்பைக்கு மேல் விழுந்திருக்கலாம் எனவும் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கோதுமை மாவின் விலை 3.50 ரூபாவால் அதிகரிப்பு!!

கோதுமை மா..

பிரிமா நிறுவனம் உற்பத்தி செய்யும் கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 3 ரூபாய் 50 காசுகளால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தமது முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

பிரிமா நிறுவனத்தின் 50 கிலோ கிராம் எடை கொண்ட மில்க் பிரேன்ட் கோதுமை மா பொதி 4 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய விலையேற்றத்தின்படி இன்று முதல் அதன் விலை 4 ஆயிரத்து 175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிமா நிறுவனம் ரொட்டிக்காக பயன்படுத்தும் கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலைகளை அண்மையில் 4 ரூபாவால்  அதிகரித்தது.

இந்த நிலையில் பாண் உட்பட வெதுப்பக உணவு உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அந்த உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியா நகரசபைத் தலைவர் பொலிசாரால் கைது!!

நகரசபைத் தலைவர்..

வவுனியா நகரசபைத் தலைவர் இராசலிங்கம் கௌதமன் பொலிசாரால் இன்று மதியம் (15.06) கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள வவுனியா வாடி வீட்டினை நடாத்தி வந்த மா.கதிர்காமராஜா அண்மையில் மரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரின் பராமரிப்பின் கீழ் வாடி வீடு தற்போது உள்ளது.

இந்நிலையில் மூன்று மாத குத்தகைப் பணம் தரவில்லை எனத் தெரிவித்து வாடி வீட்டு வளாகத்திற்குள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவரால் நேற்று (14.06) நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதன்போது குறித்த வாடி வீட்டில் காவல் கடமையில் நின்றவர்களுக்கும், நகரசபைத் தவிசாளருக்கும் இடையில் முரண்பாடும் ஏற்பட்டிருந்தது.

அத்துடன் அங்கு இருந்த உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டதாக காவல் கடமையில் இருந்தவர்கள் தெரிவித்ததுடன், அச் சம்பவம் தொடர்பில் வாடி வீட்டு பாதுகாவலர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நகரசபை குறித்த வாடி வீட்டு நிர்வாகத்தில் தலையிட முடியாது எனவும் அவர்களது நடவடிக்கைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறும், வாடி வீட்டில் நின்றவர்கள் மீது அத்து மீறி நுழைந்து தா.க்.கு.த.ல் மேற்கொண்டதாகவும், உடமைகளை சேதப்படுத்தியதாகவும் அதனை குத்தகைக்கு நடாத்தி வருபவர்களால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் இன்று (15.06) வவுனியா நகரசபைத் தலைவர் இராசலிங்கம் கௌதமன் மற்றும் வாடி வீட்டு குத்தகைகாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்ட வவுனியா பொலிசார் நகரசபைத் தலைவர் இ.கௌதமனை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா வாடி வீடு வளவுக்குள் நுழைவதற்கு நகரசபையால் தடை விதிப்பு : பொலிஸில் முறைப்பாடு!!

வாடி வீடு..

வவுனியா வாடி வீடு வளவுக்குள் நுழைவதற்கு நகரசபையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை நடத்தி வருபவர்களால் நகரசபைக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள வவுனியா வாடி வீட்டினை நடாத்தி வந்த கதிர்காமராஜா அண்மையில் மரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரின் பராமரிப்பின கீழ் வாடி வீடு உள்ளது. இந்நிலையில் வாடி வீட்டு வளாகத்திற்குள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகரசபையால் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

நகரசபை குறித்த வாடி வீட்டு நிர்வாகத்தில் தலையிட முடியாது எனவும் அவர்களது நடவடிக்கைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறும் அதனை நடாத்தி வருபவர்களால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வவுனியா வாடி வீடானது நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ளது. இதனை பல ஆண்டுகளாக நாமே நடத்தி வருகின்றோம்.

தற்போது எந்தவித முன்னறிவித்தலும் இன்றி வவுனியா நகரசபையின் உள்நுழைய தடை என ஒட்டியுள்ளனர். இது தொடர்பில் வவுனியா பொலிசில் நகரசபைத் தலைவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.