21ம் திகதி பயணத்தடை தளர்த்தப்படுமா? அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ள விடயம்!!

பயணத்தடை..

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை தளர்த்தப்படுவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்தப்படுமா என்பது தொடர்பில் 19 அல்லது 20ஆம் திகதியளவிலேயே முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 21ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு. ஆனால் அது பற்றி தற்போதே முடிவெடுக்க முடியாது.

அனைத்து காரணிகள் பற்றியும் ஆராய வேண்டும். அந்தவகையில் 19 அல்லது 20ஆம் திகதியளவில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (14.06) வெளியாகின.

அதில் தோணிக்கல் பகுதியில் ஐந்து பேருக்கும், கற்பகபுரம் பகுதியில் நான்கு பேருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒருவருக்கும், மதியாமடு பகுதியில் ஒருவருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் இருவருக்கும், உளுக்குளம் பகுதியில் மூவருக்கும், கற்குழி பகுதியில் இருவருக்கும், வேப்பங்குளம் பகுதியில் இருவருக்கும், பனிக்கர் புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் ஒருவருக்கும், நீலியாமோட்டை பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியில் ஒருவருக்கும்,

கற்குளம் பகுதியில் ஒருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் ஒருவருக்கும், மடுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மடு வீதியில் இருவருக்கும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த தொற்று இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுடன் தொடர்பை பேணிய குடும்பநல உத்தியோகத்தரான பூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், வேப்பங்குளம், பனிக்கர் புளியங்குளம், நெளுக்குளம், பூந்தோட்டம், நீலியாமோட்டை, சுந்தரபுரம், போகஸ்வேவ, கற்குளம், கனகராயன்குளம், மடுக்குளம், மடு வீதி, கற்குழி ஆகிய பகுதியில் இனங்காணப்பட்ட 15 தொற்றாளர்களும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களாவர்.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய்!!

5000 ரூபாய்..

சமூர்த்தி உதவிக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரிசி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் காமினி லோகுகே, எரிபொருள் விலை அதிகரித்த போதிலும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்!!

இந்தியாவில்..

38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் சியோனா சனா மரணமடைந்துள்ளார். தனது 76வது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அவர் வசித்த மிசோரமின் மாநிலத்திலுள்ள பக்தாங் தலாங்னுவம் கிராமம் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. சியோனா சனா 1945 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி பிறந்துள்ளார்.

அவர் தனது 17 ஆவது வயதில் தன்னைவிட மூன்று வயது மூத்தவரான ஜாதியாங்கியை முதல் மனைவியாக திருமணம் செய்தார். உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தக்காரரான அவர் சமீபகாலமாக நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சியோனா மறைவுக்கு மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில், 38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகளுடன், உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு தலைமை தாங்குவதாக நம்பப்படும் திரு. சியோன் நம்மிடம் இருந்து விடைபெற்றார்.

அவரது கிராமம் பக்தாங் தலாங்னுவம் அவரின் குடும்பம் காரணமாக மாநிலத்தில் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது. உங்கள் ஆத்மா அமைதி கொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.

கொரோனா பாதித்து வீட்டில் இருந்த கணவன் : கதவை உ.டைத்து படுக்கையறையில் நுழைந்த மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கொ.ரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கணவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை அ.டி.த்.து உ.தை.த்.து கு.ழந்தைகளை அழைத்து சென்ற மனைவியின் செயல் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். அன்சாரியின் பெற்றோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அன்சாரி வீட்டுக்கு சமீபத்தில் அவரின் மனைவி 6 பேரை அழைத்து கொண்டு வந்தார். பின்னர் வீட்டு கதவை உ.டை.த்.து கொண்டு உள்ளே சென்று அன்சாரி படுக்கையறைக்குள் நுழைந்தார்.

இதன்பிறகு நடந்தது தான் கொ.டூ.ர.ம். தனது கணவர் ஒரு கொரோனா நோயாளி என்பதை கூட நினைக்காமல் அவரை மனைவி சரமாரியாக தா.க்.கி.னா.ர்.

இதில் அன்சாரியின் தலை மற்றும் கைகளில் ப.லத்த கா.ய.ம் ஏற்பட்டது. கொரோனா தொற்றின் வீரியத்தை உணராமல் அன்சாரி மனைவி அப்படி நடந்து கொண்டது அக்கம்பக்கத்தினரை அ.தி.ர்.ச்.சி.யி.ல் ஆழ்த்தியது.

இதை தொடர்ந்து தனது இரண்டு கு.ழந்தைகளை அங்கிருந்து அவர் அழைத்து சென்றிருக்கிறார். பெருந்தொற்று பீதி காரணமாக யாரும் அங்கு உதவிக்கு வராத நிலையில் நபர் ஒருவர் நடந்ததை எல்லாம் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துள்ளார்.

தற்போது அன்சாரி கா.யங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், என் மனைவி மீது நான் கொடுத்த பு.கா.ரை பொலிசார் முதலில் எடுத்து கொள்ளவில்லை.

சில நாட்களுக்கு பின்னர் பு.கா.ரை எடுத்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை சமர்பித்த போதிலும் க.ட.த்.த.ல் பிரிவுகளை எஃப்.ஐ.ஆரில் சேர்க்கவில்லை. இப்போது என் கு.ழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

கர்ப்பிணி மனைவியை 22 கிலோ மீற்றர் தூக்கிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்த கணவன்!!

காலி..

மனைவியை கைகளில் சுமந்து கொண்டு 22 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று வைத்தியசாலையில் சேர்ந்த கணவர் ஒருவர் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலி மாவட்டம் ஹினிதும பிரதேசத்தின் கொடிகந்த பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பற்றியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் நாடு முழுவதிலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் எஸ்.குமார என்ற இளைஞர் தனது மனைவியை 22 கிலோ மீற்றர் தூரம் சுமந்து சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் இருக்கும் சிசு இரண்டு நாட்களாக சலனமற்றிருந்த காரணத்தினால் ஐந்து மணித்தியாலத்திற்குள் வைத்தியசாலயில் அனுமதிக்குமாறு குடும்ப நல உத்தியோகத்தர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பிரதேசம் முழுவதிலும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் எந்தவிதமான போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தினால் குமார தனது மனைவியை இவ்வாறு சுமந்து கொண்டு நடந்தே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

ஏழு மாத கர்ப்பிணியான சாந்தனி தற்பொழுது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையில் இருந்தாலும் தனது மனைவியையும் பிள்ளையையும் காப்பாற்றுவதற்காக 22 கிலோ மீற்றர்கள் சீரற்ற காலநிலையில் அவர்களை சுமந்து சென்று வைத்தியசாலையில் சேர்த்த நெகிழ்ச்சியான சம்பவத்தினால் குமாரவிற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளது.

நள்ளிரவில் சொகுசுக் காரில் சென்று கணவன்-மனைவி செய்த செயல் : காட்டிக் கொடுத்த சிசிடிவி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சொகுசு காரில் சென்று தி.ருட்டு செயல் செய்து வந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. சென்னை பாடி ஜெகதாம்பிகை நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பூபாலன் (37).

இறைச்சி கடை நடத்தி வரும் இவரது கடையில் கடந்த மாதம் 29-ஆம் திகதி கடைக்கு வெளியே கூண்டில் வைக்கப்பட்டிருந்த 15 நாட்டுக்கோழிகள் திருடு போயுள்ளது.

இதைத் தொடர்ந்து, கொரட்டூர், போத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இந்திரா (56), என்பவரின் வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த 2 ஆடுகள், கடந்த மாதம் 2-ஆம் திகதி இரவு காணமல் போயுள்ளது. இது குறித்து இந்திரா காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவே, பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அப்போது, அப்பகுதி வழியே வந்த சொகுசு காரில் இருந்து கைக் குழந்தையுடன் இறங்கிய ஆண் மற்றும் பெண், குறித்த ஆடு மற்றும் கோழிகளை தி.ருடிச் சென்றுள்ளது அம்பலமானது.

ஆனால், அவர்கள் யார் என்பது தெளிவாக தெரியாத காரணத்தினால், பொலிசார் வண்டி எண்ணை வைத்து வி.சாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொரட்டூர் 200 அடி சாலையில் பொலிசார் நேற்று வாகன சோ.தனையில் ஈடுபட்ட போது, பொலிசார் தே.டப்பட்ட கார் அவ்வழியாக வந்துள்ளது.

அதை நிறுத்தி சோ.தனையிட்டபோது, காரில் ஒரு ஆணும், பெண்ணும் கைக் கு.ழந்தையுடன் இருந்தனர். வி.சாரணையில், அவர்கள் ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அஷ்ரப் (38), அவரது மனைவி லட்சுமி (36) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் நள்ளிரவில் காரில் வந்து, பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டு சாலையோரம் உள்ள கோழி, ஆடுகளை திருடி அதை மறுநாள் விற்றுவிடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்த பொலிசார், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

உடல்நலக்குறைவால் புதுப்பெண் இறந்ததாக கூறிய கணவன் : சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் ம.ர்மமான முறையில் உ.யிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கும் ராஜீவ் என்பவருக்கும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ராஜீவ் மற்றும் குடும்பத்தார், பூஜா வீட்டுக்கு போன் செய்து உங்கள் மகள் உடல் நலக்குறைவால் இ.றந்துவிட்டார் என கூறினர்.

இதை கேட்டு அ.திர்ந்து போன அவர்கள் ப.தறியபடி ராஜீவ் வீட்டுக்கு வந்தனர். அங்கு பூஜாவின் ச.டலம் இல்லாததை கண்டு கு.ழம்பிப் போனார்கள்.

பின்னர் ராஜீவ் மற்றும் குடும்பத்தார் அவர்களிடம் கூறுகையில், பூஜாவின் ச.டலத்துக்கு இறுதிச்சடங்கு செய்து தகனம் செய்துவிட்டோம் என கூற அனைவரும் அ.திர்ச்சியில் உறைந்தார்கள். இது குறித்து பொலிசில் பு.கா.ர் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாங்கள் வருவதற்குள் ஏன் அவசர அவசரமாக உ.டலை தகனம் செய்யவேண்டும்.

பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜீவ் குடும்பத்தார் கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி வந்தனர். அவர்கள் தான் அவளை கொ.லை செ.ய்.து விட்டனர்.

எங்கள் மகள் கையில் வைத்திருந்த மருதாணி கூட முழுவதுமாக அ.ழியவில்லை. அதற்குள் இப்படி ஆக்விட்டது என வே.தனை தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தங்கள் வி.சாரணையை தொடங்கியுள்ளனர்.

2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 4 பேரை திருமணம் செய்து 18 லட்சம் பறித்த இளம்பெண்!!

ஆந்திராவில்..

ஆந்திராவில் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து, மூன்றாவதாக ஒரு இளைஞரை திருமணம் செய்து 6 லட்சம் ரூபாய் பணம் ப.றித்து த.லைமறைவான பெண்ணை பொலிஸார் தே.டி வருகின்றனர்.

இந்திய மாநிலம் ஆந்திராவில், சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்தவர் சுனில் குமார் (29). இவருக்கு திருப்பதி ஏ.டி.பி. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறி சுகாசினி என்பவர் அறிமுகமானர்.

சுனில்குமாருடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்ட சுகாசினி அவரை காதல்வலையில் வீழ்த்தியுள்ளார். மேலும், தன்னை ஆதரவற்றவர் என்று கூறி, சுனிலை கடந்த டிசம்பர் மாதம் திருமணமும் செய்து கொண்டார்.

திருமணத்தின்போது, சுனில் குமாரின் குடும்பத்தினர் சுகாசினிக்கு 3 சவரனில் தங்க நகைகளை கொடுத்தனர். மேலும், சில மாதங்களுக்கு முன்பு சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி 6 லட்சம் ரூபாய் வரை சுனிலிடம் பணம் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 7-ஆம் திகதி சுனிலிடமிருந்து தங்களுக்கு தெரியாமல் பணம் பெற்றதை அறிந்த அவரது பெற்றோர்கள் சுகாசினியிடம் பணத்தை என்ன செய்தாய் என்று கேட்டுள்ளனர். இதையையடுத்து சுஹாசினி மா.யமானதாக கூறப்படுகின்றது.

சுகாசினி எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில், ஆதார் அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் சுகாசினியை தேடிய போது சுனில்குமாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சுகாசினி, நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் செய்து ஒரு மகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

இதற்கிடையில், சுனில் குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட சுகாசினி, தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தை தருவதாகவும், பொலிஸாரை நாடினால் வீணாக பிரச்சினை வரும் என்று மி.ரட்டியதாக கூறப்படுகின்றது.

மேலும், வெங்கடேஷை திருமணம் செய்து கொள்வதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்ததாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் செல்போனிற்கு அனுப்பி அ.திர்ச்சியூட்டியுள்ளார் சுகாசினி.

இந்த புகைப்படங்களை பார்த்த சுனில்குமார் உடனடியாக திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை வைத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வி.சாரணையில், சுகாசினி 3 போரையும் வெவ்வேறு பெயர்களில் ஏ.மாற்றி திருமணம் செய்து நகை பணத்துடன் கம்பி நீட்டியது தெரியவந்தது. முதல் இரு கணவர்களுக்கும் ஆளுக்கொரு பெண் கு.ழந்தைகளை பெற்றுக் கொடுத்துவிட்டு த.ப்பியுள்ளளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதே போல வேறு யாராவது சுகாசினியின் காதல் வலையில் சி.க்கி வாழ்க்கை இழந்துள்ளார்களா என்பது குறித்தும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இன்று முதல் பாண் விலை அதிகரிப்பு : வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்!

பாண் விலை அதிகரிப்பு..

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இன்று முதல் பாண், பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பெரும் பிரச்சினைகள் இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்தது.

அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகள் காரணமாக சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். அரசாங்கம் பாம் ஒயிலை தடை செய்தது. அதன் விலையும் அதிகரித்தது. ஒரு வருடத்திற்கு முன்னர் 20 லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 4800 ரூபா.

தற்போது அதன் விலை 13500 ரூபா. வெதுப்பக உணவுகளில் 30 வீதமான உணவுகள் சூன் பாண் முச்சக்கரவண்டிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

பெட்ரோல் விலை அதிகரிப்பை எப்படி தாங்கி கொள்வது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், வெதுப்பக உரிமையாளர்கள் தமது உணவுகளை தாம் விரும்பிய விலைக்கு அதிகரிப்பார்கள்.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உணவுகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும். உப்பு கல் முதல் அனைத்து பொருட்களும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை வெதுப்பக உரிமையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனா தொற்றினால் மரணம்!!

கொரோனா..

பியகம, கோனவல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். வீட்டு தலைவர் உட்பட மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பியகம சுகாதார வைத்திய அதிகாரி சமப் பெரேரா தெரிவித்துள்ளார்.

கோனவல பிரதேசத்தில் வீடு ஒன்றின் தலைவரான 51 வயதுடைய தந்தை கடந்த முதலாம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் 71 வயதுடைய தந்தை கடந்த 4ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது தாயாரான 69 வயதுடைய பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டில் மேலும் 4 பேர் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தலில்!!

யாழில்…

யாழ். குருநகர் பகுதியில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குருநகர் பகுதியில் யாழ். பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வொன்றில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்கள் அனைவரையும் தனிப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சர்வதேச ரீதியிலான கௌரவத்தை பெற்றுள்ள இலங்கையின் இரண்டாவது கிரிக்கெட் பிரபலம்!!

குமார் சங்ககார…

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) Hall of Fame (புகழரங்கம்) கௌரவத்திற்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை சிறப்பிக்கும் வகையிலும், முதன் முதலாக இடம்பெறவுள்ள (ஜூன் 18 – 22) டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியுடன் இணைந்தவாறு, குமார் சங்ககார உள்ளிட்ட 10 பேருக்கு இக்கௌரவம் வழங்கப்படுவதாக ICC அறிவித்துள்ளது.

அதற்கமைய, 1996 -2015 காலப் பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்களிப்புச் செய்த இரு வீரர்களில் ஒருவராக குமார் சங்ககாரவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப் பகுதிக்கான பெயர் பட்டியலில் சிம்பாப்வே அணி வீரர் அண்டி பிளவரின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடும்படியான பங்களிப்பை வழங்கியவர்களாக இவர்கள் 10 பேரினதும் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த வகையில் இக்கௌரவத்தை பெறுபவர்களின் எண்ணிக்கை 103ஆக அதிகரிக்கிறது.

மேலும், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பின்னர், இந்த கெளரவத்தை பெறும் இலங்கையின் இரண்டாவது கிரிக்கெட் பிரபலம் இவர் எனவும் தெரியவருகிறது.

திருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழக்தில்..

தாராபுரம் அருகே 10-மாதத்திற்கு முன்பு திருமணமான இ.ள.ம்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதில் ம.ர்மம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர்கள் மூலனூர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள காதக் கோட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் நவீன் குமார் ( வயது 29). 9-ம் வகுப்பு வரை படித்த இவர் கட்டிட தொழிலாளி ஆவார்.

இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியை சேர்ந்த திருமன் என்பவரது மகள் நித்யா (வயது 21). இவர் பி.சி.ஏ பட்டதாரியான இவருக்கும் நவீன் குமாருக்கும் திருமணம் நடைபெற்றது.

நவீன்குமார் குடும்பத்தில் புதுமண தம்பதிகள் இருவரும் உட்பட அவரது தாய், தந்தை மற்றும் சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சுமார் 6-மாத குடும்ப வாழ்க்கைக்கு பின் குடும்பத்தில் ஏற்பட்ட ச.ல.ச.லப்பின் காரணமாக நவீன் குமார் நித்தியா ஆகிய இருவரும் அருகே ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் பெயர்ந்தனர் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நித்யாவிற்கு கடந்த 15- நாட்களுக்கு முன்பாக உ.ட.ல்.ந.லக்குறைவு ஏற்பட்டதால் மார்க்கம்பட்டி யிலுள்ள தனது தாயார் வீட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை த.ங்.கியுள்ளார். இவருடன் இவரது கணவர் நவீன்குமார் உடன் இருந்துள்ளார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் காதக்கோட்டையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். நேற்று காலை 6-மணிக்கு நவீன் குமார் வழக்கம்போல கட்டிடப் பணிக்கு சென்றுவிட்டார்.

நித்யா காலையில் தனது வீட்டில் குழாயில் கு.டிநீர் எடுத்து வந்ததாகவும் துணிகள் துவைத்து வைத்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து காலை சுமார் 10 மணி அளவில் நவீன் குமார் தனது வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார்.

அப்பொழுது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்தது. நவீன் குமார் கதவை தட்டியுள்ளார். பலமுறை தட்டியும் எந்த பதிலும் இல்லாத காரணத்தால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நித்யா வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூ.க்.கு மா.ட்.டி தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அ.தி.ர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் அக்கம்பக்கத்தினர் மற்றும் அருகே உள்ள தனது தாய் தந்தையர் அனைவரையும் அழைத்துள்ளார். அவர்கள் வந்து தூ.க்.கி.ல் தொங்கிய நித்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது நித்யா ஏற்கனவே இ.ற.ந்.துவிட்டார் என்று கூறவே அ.தி.ர்.ச்சி அடைந்த நவீன்குமார் நித்யாவின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார். ம.ரு.த்.து.வமனைக்கு வந்த நித்யாவின் பெற்றவர் நவீன் குமார் உடன் வா.க்.கு.வாதத்தில் ஈடுபட்ட தோடு மூலனூர் காவல் நிலையத்தில் எனது மகளின் இ.ற.ப்.பில் ச.ந்.தேகம் இருப்பதாக கூறி பு.கா.ர் அளித்தனர்.

புகாரை பதிவு செ.ய்.த மூலனூர் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் மற்றும் சப்.இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வித்தியாவின் த.ற்.கொ.லை கு.றித்து வி.சா.ர.ணை ந.டத்தி வருகின்றனர்.

தகவலறிந்த தாராபுரம் டிஎஸ்பி எட்வின் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செ.ய்தார். இந்த ச.ம்பவம் காதக்கோட்டையில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைப் பிரியர்களுக்கு சோகமான செய்தி : மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை…

உலக சந்தையில் எதிர்வரும் மாதங்களில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில் தங்கத்தின் விலையிலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார இறுதி வரையில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸின் தங்கத்தின் விலை 1876.87 டொலராக பதிவாகியுள்ளது. எனினும் அது வாரம் முழுவதும் காணப்பட்ட விலையை விட சிறியளவு விலை குறைவடைந்துள்ளதாகவே கூறப்படுகின்றது.

எப்படியிருப்பினும், அமெரிக்காவில் வருடாந்த பணவீக்கம் 13 ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தை குறிப்பதால் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய வெகு விரைவில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1950 – 1975 டொலர் வரை அதிகரிக்க கூடும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயணத்தடை எதிர்வரும் 2ஆம் திகதி வரை நீடிக்கப்படுகின்றதா?

பயணத்தடை..

கொரோனா வைரஸின் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால், சனத்தொகையில் 90 சதவீதமானோரை தத்தமது வீடுகளிலேயே முடக்கி வைக்க வெண்டுமென கோரிக்கையொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்லையென்றால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை 2ஆம் திகதிவரை நீடிக்குமாறு சுகாதாரத்துறையின் உயர்மட்ட நிபுணர்கள் அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

தற்போதுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் குறித்த பரிந்துரையை அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது.

-தமிழ்வின்-