இலங்கையில் நேரவிருந்த விபரீதம் : பலரின் உயிரை காப்பாற்றிய தனி நபர்!!

மொரட்டுவை, மோதர பகுதியில் இன்று (05) காலை ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று (05) காலை கரையோர ரயில் மார்க்கத்தில் மொரட்டுவை, மோதர பிரதேசத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது.

சேதமடைந்த ரயில் பாதையைக் கண்டதும், சமந்த பெர்னாண்டோ என்ற நபர் விரைந்து செயற்பட்டு, அந்நேரத்தில் வந்து கொண்டிருந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான ரயிலில் ஏற்படவிருந்த பெரிய விபத்தையும், பல பேரின் உயிர்களையும் குறித்த நபர் காப்பாற்றியுள்ளார். குறித்த நபரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் காரணமாக பாணந்துறையிலிருந்து மொரட்டுவை வரையிலான கடற்கரைப் பாதை இன்று காலை மூடப்பட வேண்டியிருந்தது, மேலும் ரயில் சேவையில் தாமதமும் ஏற்பட்டது.

பின்னர் ரயில்வே ஊழியர்களால் ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், தற்போது ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்குவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரிகளின் மோசமான செயல் : பல கோடி ரூபா மோசடி!!

பாணந்துறை – கெசல்வத்தயில் உள்ள அரச வங்கியில் குறைந்த மதிப்புள்ள தங்கப் பொருட்களை அடகு வைத்து கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் 3 பெண் அதிகாரிகளை குற்றப் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு உதவி அதிகாரி மற்றும் இரண்டு இடைநிலை நிர்வாக அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். குறைந்த மதிப்புள்ள தங்கப் பொருட்களை வங்கியில் அடமானம் வைத்த பின்னர் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர் அடமான பத்திரங்களில் போலி கையொப்பங்களைப் பயன்படுத்தி மூவரும் 99,370,100 ரூபாவை மோசடி செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உதவி பணியாளர் அதிகாரியாக பணியாற்றிய 36 வயது பெண், பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் 37 வயது இளைய நிர்வாக அதிகாரி ஒருவர் தலதாவத்த வீதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

36 வயதான மற்றுமொரு அதிகாரி பாணந்துறை, விஹார வீதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்கள் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும், குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.

கொழும்பில் கோர சம்பவம் : தமிழ் தம்பதி பரிதாபமாக பலி!!

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை ரயில் பாதையில் நேற்றையதினம் பயணித்த தம்பதியினர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் இந்த தம்பதி மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பதுளை, பதுளுபிட்டியவைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் என தெரியவந்துள்ளது. சடலங்கள் களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தற்செயலான விபத்தாக அல்லது உயிரை மாய்க்கும் செயற்பாடா என்பது குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய் : தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை!!

நாட்டில் இந்த ஆண்டு (2025) இதுவரை 24,180 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெங்கு பரவலில் விரைவான அதிகரிப்பு காணப்படவில்லை என்றாலும், இடைவிடாத மழையுடன் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களில் அதிகரிப்பு காரணமாக பதிவான நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜூலையில் பெரிய சுனாமி : ஜப்பானின் பாபா வங்கா கணிப்பால் ரத்தாகும் பயணங்கள்!!

ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைய தொடங்கினார்.

அவர் 1980 முதல் தெளிவான கனவுகளை வரைய தொடங்கிய நிலையில் இது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்ததாக கூறப்படுகிறது.

1991-ம் ஆண்டு பிரெட்டி மெர்குரியின் மரணம், 1995-ம் ஆண்டு கோபே நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி, 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகளை அவர் முன்கூட்டியே துல்லியமாக வரைந்திருந்ததாக கூறுகிறார்கள்.

அதன்பிறகே அவர் முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக அங்கீகரிக்கப்பட்டதோடு அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் வரைந்த மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு இந்த ஆண்டு (2025)-ம் ஜூலை மாதத்தில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிக பயங்கரமான சுனாமி ஏற்படும் என ரியோ டட்சுகி கணித்துள்ளார்.

இந்த சுனாமி 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும் ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார்.

இதனால் மீண்டும் சுனாமி ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரியோ டட்சுகியின் கணிப்பு தொடர்பாக ஜப்பான் அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதே நேரம் ஜப்பானில் உள்ள சீன தூதரகம் இயற்கை பேரழிவு குறித்து தங்கள் நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுத்தியுள்ளது.

ரியோ டட்சுகியின் இந்த கணிப்பு காரணமாக ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல இருந்த பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால் ஜப்பானுக்கான விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கழிப்பறை பயன்படுத்த சென்ற தொழிலதிபர் சிங்கம் தாக்கி உயிரிழப்பு!!

இரவில், கழிப்பறை பயன்படுத்த சென்ற தொழிலதிபர் சிங்கம் தாக்கி உயிரிழந்துள்ளார். நமீபியாவை சேர்ந்த 59 வயது தொழிலதிபரான பெர்ன்ட் கெபல், நமீபியாவில் உள்ள பாலைவன சிங்கங்களை ஆதரிப்பதற்காக பெருமளவிலான பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மே 30ஆம் திகதி, விடுமுறையைக் கழிப்பதற்காக, செஸ்ஃபோன்டைன் (Sesfontein) பகுதியில் உள்ள ஹோனிப் ஸ்கெலிட்டன் கோஸ்ட் கேம்ப் பகுதியில், தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் ஒரு காரின் மேல் சிறிய கூடாரம் அமைத்து கெப்பல் தங்கியியுள்ளார்.

இரவில், கழிப்பறை செல்வதற்காக அவர் கூடாரத்தில் இருந்து கீழே இறங்கிய போது, சிங்கம் ஒன்று அவரை தாக்கியுள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் சிங்கத்தை முயன்றனர். ஆனால் அதற்குள் கெபல் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நமீபியா காவல்துறை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு அந்த பகுதியில் 60க்கும் மேற்பட்ட சிங்கங்கள் இருந்துள்ளது. தற்போது மனித மோதல்கள் காரணமாக அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கல்லூரி மாணவியை கொலை செய்து காதலன் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவியை கொலை செய்து, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் ஒரு வீட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 19 வயதுடைய இளம் ஜோடி ஒன்று தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி, ரூ.4,000க்கு வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிவரை அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாததால், இது குறித்து சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

அப்போது வீட்டில் இளைஞர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஐசிஎப் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு இளைஞர் தூக்கில் தொங்கியவாறும், அவருடன் இருந்த இளம்பெண் படுத்த நிலையில் வாய் மற்றும் கண்ணில் ரத்தம் வடிந்தவாறும் சடலமாக கிடந்தனர். இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தொடர் விசாரணையில், ஒரே வீட்டில் இறந்து கிடந்த இருவரும் கல்லூரி மாணவ-மாணவி என்பதும், அவர்களது பெயர் ஆகாஷ் மற்றும் அபிநயா என்பதும், இருவரும் விழுப்புரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

காதலர்களான இவர்கள் இருவரும், கல்லூரி புராஜெக்ட் தொடர்பாக சென்னை செல்வதாக தங்களது வீடுகளில் கூறிவிட்டு, விழுப்புரத்தில் இருந்து தனித்தனியாக சென்னை வந்து, பெரம்பூரில் பெற்றோருக்கு தெரியாமல் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது காதலி அபிநயாவை ஆகாஷ் தாக்கியுள்ளார். இதில் அபிநயா இறந்துள்ளார். இதனால் பயந்துபோன ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுற இருக்க இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை முடிந்து நேற்று அவர்களது சொந்த ஊரான விழுப்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவம் சென்னையில் மட்டும் அல்லாமல் விழுப்புரத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனிலவுக்காக சென்ற புதுமணத்தம்பதி மாயம் : வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமாகினர்.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.

மே மாதம் 23ஆம் திகதி தம்பதியர் திடீரென மாயமானார்கள். பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, திங்கட்கிழமை ராஜாவின் உயிரற்ற உடல் Weisawdong நீர்வீழ்ச்சியின் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், ராஜாவின் மனைவியான சோனம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லாததால் தம்பதியரின் குடும்பம் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளது.

இதற்கிடையில், சோனம் விரதம் இருந்துவந்திருக்கிறார். தம்பதியர் காணாமல் போன அன்று சோனம் தன் மாமியாருக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதில், தாங்கள் நீர்வீழ்ச்சி ஒன்றை நோக்கி ட்ரெக்கிங் செய்துகொண்டிருப்பதாகவும், ஆனாலும், தான் தனது விரதத்தை விடப்போவதில்லை என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.

அந்த செய்தி இடையில் துண்டிக்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகு சோனமிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிற்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்!!

இலங்கை தேசிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவிற்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சசித்ர சேனாநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றில் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் போது சசித்ர ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள முயன்றபோது பதிலளிக்க மறுத்ததால் கொலை செய்யப்பட்ட யுவதி!!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், 17 வயது சமூக ஊடக செல்வாக்கு மிக்க சனா யூசப்பைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இலட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த யூசப், கடந்த திங்களன்று அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

சனா யூசப்பின் டிக்டொக் கணக்கில் 1.1 மில்லியன் பின்தொடர்வாளர்கள் உள்ளனர். அவரது கணக்கில் வெளியிடப்பட்ட கடைசி காணொளி, அவர் தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கொண்டாடும் ஒரு தொகுப்பாகும்.

இந்த நிலையில், கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 22 வயதான இளைஞர், தாம் சனாவை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோதும், அவர் பதிலளிக்க மறுத்ததால், அவரை கொலையைச் செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொழும்பில் வீதியில் சென்ற இளம் ஆசிரியைக்கு நேர்ந்த கதி : நகைகள் அணியும் பெண்களுக்கு எச்சரிக்கை!!

கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடயில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் முன்பாக பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகை திருப்பட்டுள்ளது.

திருட்டில் ஈடுபட்ட இரண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை கைது செய்ய கிரிபத்கொட பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணையை முன்னெடுத்துளள்னர்.

நேற்று முன்தினம் காலை இந்தக் கொள்ளை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இளம் பெண் வீதியில் பயணித்த போது நீல நிற மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் கொள்ளையில் ஈடுபட்டமை அருகிலிருந்த பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் நம்பர் பிளேட் இல்லை என்று அந்தப் பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தங்க நகையை திருடிய சந்தேக நபர் நீலம் மற்றும் வெள்ளை கோடுகள் கொண்ட டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் ஒரு கையில் பச்சை குத்தியிருந்ததாகவும் முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் தங்க நகையை திருடி வத்தளை நோக்கி தப்பிச் சென்றனர். சந்தேக நபர்கள் தொடர்பான புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071-8591606 என்ற எண்ணை அழைக்குமாறு கிரிபத்கொட பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையில் முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், குறிப்பிட்டார்.

முகக்கவசம்

இருப்பினும், இது ஒரு தொற்றுநோய் நிலைமை அல்ல என்று அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்களுக்கு வைரஸ் சுவாச நோய் இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவித்தலால் சிக்கல் நிலைமை உருவாகலாம்.

நாம் ஏதாவது ஒன்றைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமெனில், நாங்கள் தயங்க மாட்டோம். முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை அணியவேண்டும் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.

ஆனால், இந்த நேரத்தில் அது அவசியமில்லை என்பது தெளிவாகிறது. இது சாதாரணமாகிவிட்டது. எனவே, பெரிய அளவிலான சிக்கல்கள் மற்றும் இறப்புகள் ஏற்படும் சூழ்நிலை இனி இல்லை.

கற்குகையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!!

மொனராகலையில் தொம்பகஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள கற்குகையிலிருந்து நேற்று (04) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொம்பகஹவெல, நுககஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன பெண்ணின் சடலம் வனப்பகுதியில் அமைந்துள்ள கற்குகையிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலமானது சியம்பலான்டுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை : வைரலாகும் விளம்பரம்!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை என வெளியான விளப்ரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

அவ்வாரும் தம் பிள்ளைகளுக்கு வரன்களை தேடி அலையும் பெற்றோர்களின் சுமையை குறைக்க இன்றைய காலக்கட்டத்தில் மேட்ரிமோனிகள், திருமண தகவல் மையம், பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தும் நடைமுறை உள்ளது.

தடுப்பூசி போடாத மணமகள் தேவை

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற விளம்பரம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த விளம்பரத்தில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விளாம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியையின் உடல் ஒப்படைப்பு!!

வவுனியா நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியில் கணவனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை சுவர்ணலதாவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் முன்னெடுக்கப்படுள்ளது.

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெர்ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. புளியங்குளம், நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

நயினாமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார். தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருந்ததாக விசரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியை கர்ப்பமாக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் தொடர்பில் கணவனை கைது செய்த புளியங்குளம் பொலிஸ், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்..

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவர் : விசாரணையில் அதிர்ச்சி!! 
வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன் : நடந்தது என்ன?
வவுனியாவில் கர்ப்பிணி மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்!!

 

புதிய ஏர் பஸ்ஸை காண காலி முகத்திடலில் கூடிய மக்கள்!!

இந்த விமானம் இன்று (04.06.2025) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330-200 ஜூன் 4 ஆம் தேதி காலை 8:15 மணி முதல் 9:30 மணி வரை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து பாணந்துறை வரை வானத்தில் தாழ்வாகப் பறந்தது,

இதேவேளை, இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.