ஏழு இளம் பெண்கள் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி : பீதியை ஏற்படுத்திய எட்டாவதாக தெரிந்த முகம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் ஏழு தோழிகள் இணைந்து செல்பி ஒன்று எடுத்துக்கொண்டார்கள். Coventry என்ற இடத்தில், ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாழும் Rebecca Glassbrow (30) என்ற இளம்பெண், தனது ஆறு தோழிகளுடன் இணைந்து தனது கீழ் வீட்டில் வசிக்கும் தோழியின் வீட்டில் செல்பி ஒன்று எடுத்துக்கொண்டுள்ளார்.

ஆனால் அந்த புகைப்படத்தை பின்னர் பார்க்கும்போது Rebeccaவுக்கு திகில் ஏற்பட்டது. அந்த புகைப்படத்தில், எட்டாவதாக ஒரு இளம்பெண், நீண்ட கருமை நிற கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு நிற்பதைக் கண்ட Rebeccaவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்துப்போனது.

ஏற்கனவே அந்த குடியிருப்பிலுள்ள குளியலறைத் தொட்டி ஒன்றில் ஒருவர் இறந்துபோனதாக அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்த நிலையில், இப்படி ஒரு பெண்ணின் முகத்தைப் புகைப்படத்தில் கண்டதிலிருந்து Rebeccaவுக்கு தூக்கமே வரவில்லையாம். அந்த வீட்டில் நிச்சயம் பேய் இருப்பதாக நம்புகிறார் Rebecca.

இதற்கு முன்பு அந்த வீட்டில் அவ்வப்போது ஏதாவது சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், அது அடுக்கு மாடிக் குடியிருப்பு என்பதால், அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் எழுப்பும் சத்தம் என்று அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், இப்போது உண்மையாகவே அந்த சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் எழுப்பும் சத்தம்தானா என்பதே சந்தேகமாகிவிட்டது என்கிறார் Rebecca.

அடுத்தடுத்து தாயும் மகளும் உயிரிழந்த சோகம் : பரிதவிக்கும் குடும்பம்!!

வேலூரில்..

வேலூரில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் செவிலியர் கொரோனாவால் ப.லி.யா.கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே அரும்பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களின் இழப்பு செய்திகள் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மற்றுமொரு பெண் செவிலியரை மருத்துவத்துறை இழந்துள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(47) என்பவரது மனைவி எழிலரசி (40).

இவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சில நாட்கள் முன்பு கடுமையான காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் கொரோனா சோதனை எடுத்துக்கொண்டார். அதில் எழிலரசிக்கு தொற்று உறுதியானது.

அதனை தொடர்ந்து எழிலரசி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோ.ச.மானதால் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த எழிலரசி இன்று உயிரிழந்தார். இதேபோல, திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திகா என்ற 8 மாத கர்ப்பிணியான பெண் மருத்துவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அவரது தாயார் பாப்பம்மாளும் (60) கொரோனா தொற்று காரணமாக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த பாப்பம்மாளும் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இ.றந்து விட்டார். மகளும், தாயாரும் அடுத்தடுத்து கொரோனாவிற்கு ப.லியான சம்பவம் அப்பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

க.ணவனை தி.ட்டமிட்டு கொ.லை செ.ய்.த ம.னை.வி : கூ.டா ந.ட்பால் நே.ர்ந்த வி.பரீதம்!!

இந்தியாவில்..

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் ந.ஞ்சப்பநகரை சேர்ந்தவர் சீனிவாசன். கோபி பேருந்து நிலையம் எதிரே சலூன் கடை நடத்தி வந்த இவருக்கு பிரபா என்ற ம.னைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

ஊரடங்கால் கடைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி அவரது மனைவி பிரபா, இரு தினங்களுக்கு முன்பு தனியார் ம.ரு.த்.துவமனை ஒன்றில் அனுமதிக்க கூறியுள்ளார்.

சீனிவாசனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ.யிரிழந்து விட்டதாக கூறினர். இரண்டு நாட்களாக சீனிவாசன் இருமல் சளி காய்ச்சலால் அவதிப்பட்டதாக மருத்துவர்களிடம் பிரபா அழுதபடியே கூறியுள்ளார்.

இதற்கிடையே சீனிவாசன் திடீரென இ.ற.ந்த தகவல் அறிந்த அவரது உறவினர் மாரிமுத்து என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். சீனிவாசனின் உடலில் க.ழு.த்து பக்கத்தில் காயம் இருந்ததை கண்டு அ.தி.ர்.ச்சி அடைந்த அவர்,

சீனிவாசன் உ.யி.ரி.ழப்பில் ம.ர்.மம் உள்ளதாகவும் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.பட்டிருக்கலாம் எனவும் கோபிச்செட்டிபாளையம் கா.வ.ல்.நிலையத்தில் பு.கா.ர் அளித்தார்.

காவல்துறையினர் நடத்திய வி.சா.ர.ணையில் செல்போன் பேச்சால் உண்டான கூடா நட்பால் நிகழ்ந்த வி.ப.ரீத கொ.லை ச.ம்.ப.வம் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டில் எப்போதும் செல்போனும் கையுமாக சமூக வலைதளங்களில் மூ.ழ்.கி கிடந்த பிரபா ஆண் நண்பர்கள் சிலருடன் பேசி வந்ததாக கூறப்படுகின்றது.

ஊரடங்கில் வீட்டில் இருந்த சீனிவாசன், ம.னை.வி பிரபாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அ.டி.க்.கடி தகாத வார்தையால் பேசி கண்டித்ததாக கூறப்படுகின்றது. இதனால் நிம்மதி இ.ழந்த பிரபா, ஆண் நண்பர்களுடன் பேசி பழக இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது கணவர் சீனிவாசனை கொ.லை செ.ய்.ய தி.ட்.டமிட்ட பிரபா அதற்காக தனக்கு தெரிந்த குமாரபாளையத்தை சேர்ந்த சலூன் கடை வெள்ளியங்கிரி மற்றும் புரோட்டா மாஸ்டர் சரவணகுமார் ஆகிய இருவரிடமும் யோசனை கேட்டுள்ளார்.

சரவணக்குமாருக்கு ஏற்கனவே பிரபா மீது காதல் இருந்ததால் , கணவருக்கு பா.லி.ல் தூ.க்.க.மாத்திரை கலந்து கொடுத்து கொ.லை செ.ய்.யலாம் என்று பழைய சினிமா பாணியிலான ஐடியாவை தி.ட்டம் போட்டு கொடுத்துள்ளான்.

அதே போல சம்பவத்தன்று அதிக தூக்கமாத்திரை கலக்கப்பட்ட பாலை கு.டி.த்து விட்டு சீனிவாசன் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது வீட்டுக்குள் வந்த பரோட்டோ மாஸ்டர் சரவணகுமார் மற்றும் வெள்ளியங்கிரி ஆகிய இருவரும் சேர்ந்து சீனிவாசனின் க.ழு.த்.தை க.யி.ற்றால் இ.று.க்.கி.யுள்ளனர்.

அப்போது சீனிவாசன் தூக்கம் தெளிந்து வ.லி.யால் கால்களை உதைத்து உ.யி.ர்.பிழைக்க போ.ரா.டிய போது அவரது மனைவி பிரபா இரண்டு கால்களையும் இ.று.க்க பிடித்துக் கொண்டு கணவனை கொ.லை செ.ய்.ய உதவியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கணவனின் கொ.லை.யை. மறைக்க , அவர் இருமல் காய்ச்சலால் மூச்சுத்திணறி உ.யி.ரி.ழ.ந்.ததாக பிரபா ம.ரு.த்.து.வமனையில் நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தேவையில்லாத செல்போன் பேச்சு மற்றும் உபயோகமில்லாத சமூகவலைதள நட்பால் உருவான த.வறான தொடர்பால் பிரபா ,வெள்ளியங்கிரி, சரவணகுமார் ஆகிய மூவரும் கொ.லை.கா.ர ஜோடிகளாக கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் வீடு புகுந்து வா.ள்வெட்டு : ஒருவர் கைது!!

ஆச்சிபுரம் பகுதியில்…

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வீடு பு.குந்து வா.ள்.வெ.ட்டில் ஈடுபட்டமை தொடர்பில் இளைஞர் ஒருவர் வவுனியா கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று (26.05) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (25.05) இரவு 11 மணியளவில் புகுந்த கு.ழுவொன்று அங்கிருந்த பெண்கள் உட்பட வீட்டில் இருந்தவர்கள் மீது வா.ள்.வெட்டுத் தா.க்.கு.த.லி.ல் ஈ.டுபட்டது.

இதனால 3 பெண்கள் உட்பட 6 பேர் கா.யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக,

வி.சாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை குறித்த வா.ள்.வெட்டு சம்பவம் தொடர்பில் கை.து செ.ய்துள்ளனர்.

அவரிடம் மேலதிக வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வி.சாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலும் சிலரையும் தே.டி வருகின்றனர்.

தாய் இறந்த தகவலை அறிந்தும் சோகத்தை அடக்கிக் கொண்டு பலரின் உயிரை காப்பாற்றிய மகன்!!

இந்தியாவில்…

இந்தியாவில் தாய் உ.யிரிழந்த செய்தியை அறிந்தும் 15 கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கடமையில் தவறாமல் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் மதுராவில் கடந்த 9 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருப்பவர் பிரபத் யாதவ். இவருக்கு சமீபத்தில் குடும்பத்தாரிடம் இருந்து வந்த போன் அழைப்பில், தாயார் இ.றந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த துக்கமான செய்தியை கேட்டபின்னரும் தயாராக இருந்த 15 கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸில் பாதுகாப்பாக யாதவ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

பின்னர் அதே நாளில் தனது சொந்த கிராமமான மயின்புரிக்கு 200 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு மீண்டும் உடனடியாக பணிக்கு திரும்பியிருக்கிறார்.

ஏற்கனவே கடந்தாண்டு ஜூலை மாதம் யாதவ் தந்தை கொரோனாவால் இ.றந்த நிலையில் அவருக்கு இறுதிச்சடங்கு நடத்திவிட்டு உடனடியாக தனது பணிக்கு யாதவ் திரும்பியதும் தெரியவந்துள்ளது.

யாதவ் கூறுகையில், என் தாயார் இ.றந்த தகவல் கிடைத்ததும் என் உடல் நடுங்கியது, ஆனால் அதை பொறுத்து கொண்டேன். பின்னர் என்னை நம்பி கொடுத்த பணி தான் முக்கியம் என முடிவெடுத்து நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.

என் தாயார் போய்விட்டார் என்னால் சிலரின் உ.யிரை கா.ப்பாற்ற முடிந்தால் அதை நினைத்து அவர் பெருமைப்படுவார் என கூறியுள்ளார்.

வி.ஷப் பா.ம்பை ஏவி இ.ளம் ம.னைவியை கொ.லை செ.ய்த க.ணவன் : வழக்கில் புதிய திருப்பம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கொ.டி.ய வி.ஷப் பா.ம்பை ஏ.வி ம.னைவியை க.ணவன் கொ.லை செ.ய்.த வ.ழக்கில் புதிய திருப்பமாக அவரது குடும்பத்தில் உள்ள முக்கிய உறுப்பினர்களின் பெயர்களும் தற்போது இரண்டாவது கு.ற்.ற.ப். பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). கடந்தாண்டு பிப்ரவரியில் கணவர் வீட்டில் உத்ராவை பா.ம்பு க.டி.த்.த.து.

இதற்கு சி.கிச்சை பெற்ற பின்னர் தாய் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது 2020 மே 6ல் மீண்டும் உத்ராவை கொ.டி.ய வி.ஷ.ப் பா.ம்பு க.டி.த்.த.தி.ல் இ.ற.ந்.தா.ர்.

அறையில் இருந்த பா.ம்பை உ.றவினர்கள் அ.டி.த்.து கொ.ன்.ற.ன.ர். முதலில் சாதாரண பா.ம்.பு க.டி எ.ன்று கருதப்பட்ட இச் சம்பவம் பின்னர் கொ.லை வ.ழக்காக மாறியது.

உத்ரா சற்று ம.னநிலை பா.திக்கப்பட்டவர். சூரஜ் பெற்றோரிடம் இதை சொல்லி மூன்றை ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, கார், 10 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். நகை பணத்தை செலவு செய்த சூரஜ் மேலும் பணம் கேட்டு உத்ராவை கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.னா.ர்.

உத்ராவை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பா.ம்பை வாடகைக்கு வாங்கி க.டி.க்.க வை.த்தார். முதல் முயற்சி தோல்வி அடைந்து. இரண்டாவது மு.யற்சியில் உத்ரா இ.ற.ந்.த.து தெரியவந்தது.

இதை தொடர்ந்து சூரஜ் கை.து செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் அ.தி.ர்.வ.லை.யை.யு.ம், ப.ர.ப.ர.ப்.பை.யு.ம் ஏ.ற்படுத்தியது. இந்த நிலையில் இவ்வழக்கில் இரண்டாவது கு.ற்.ற.ப் பத்திரிகையை கொ.ல்லம் கு.ற்.ற.ப். பிரிவு டி.எஸ்.பி அசோகன் நேற்று முன் தினம் தா.க்.க.ல் செ.ய்துள்ளார்.

அதில் சூரஜ்ஜின் தந்தை சுரேந்திரன், தாய் ரேணுகா, சகோதரி சூரியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 200 பக்கமுள்ள இந்த கு.ற்.ற.ப் பத்திரிகையில் வீட்டு கொ.டு.மை, ந.ம்பிக்கை து.ரோகம், த.டயங்ளை அ.ழி.த்.த.ல் போன்ற கு.ற்.ற.ங்.க.ள் சு.மத்தப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.

வவுனியாவில் வீடு புகுந்து தா.க்.கு.த.ல் : 6 பேர் படுகாயம்!!

ஆச்சிபுரம் பகுதியில்..

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கு.ம்பல் ஒன்று வீடு புகுந்து தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கா.யமடைந்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் க.த்.தி.களுடன் புகுந்த கு.ழுவினர் அங்கிருந்தவர்கள் மீது க.ண்மூடித்தனமாக தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டுள்ளனர்.

இத் தா.க்.கு.த.ல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட அறுவர் கா.யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தா.க்.கு.த.ல் மேற்கொண்ட கும்பல் த.ப்பி சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் ட்ரோன் கமராவின் உதவியுடன் பயணத் தடையை மீறுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!!

ட்ரோன் கமரா..

வவுனியாவில் ட்ரோன் கமராவின் உதவியுடன் பயணத் தடையை மீறுபவர்களுக்கு எதிராக விமானப்படையினரும், பொலிசாரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பயணத்தைடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறி வீதிகளில் நடமாடுவோர், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் ஆகியோருக்கு எதிராக ட்ரோன் கமராவின் உதவியுடன் நாடு பூராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், வவுனியாவில் இன்று (26.05) ட்ரோன் கமராவின் உதவியுடன் வைரவபுளியங்குளம், வவுனியா நகரம், கற்குழி, தேக்கவத்தை ஆகிய பகுதிகளில் விமானப்படையினரும், பொலிசாரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது தேக்கவத்தை பகுதியில் பயணத் தடையை மீறி ஒன்றுகூடி வீதிகளில் கலந்துரையாடியவர்கள் மற்றும் வீதிகளில் நடமாடியவர்கள் ஆகியோர் ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரும், விமானப்படையினரும் பலருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்ந்தும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் ட்ரோன் கமராவின் உதவியுடன் விமானப் படையினரும், பொலிசாரும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதும் இணைய சேவை வேகத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை!!

இணைய சேவை..

இலங்கையில் சமகாலத்தில் இணைய சேவை வேகத்தில் மந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இணையம் ஊடாக தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நபர் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இணைய பாவனையாளர்கள் அனைவருக்கும் இணைய சேவை வழங்குவதற்கு தொலைதொடர்பு உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் இதற்கு முன்னர் பல முறை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அவதானம் செலுத்தப்படாமை குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இணைய வேகத்தை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம், தகவல் தொழில்நுட்ப சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

-தமிழ்வின்-

மேலும் தீவிரமடையும் யாஸ் சூறாவளி : இன்று கரையை கடக்கின்றது!!

யாஸ் சூறாவளி..

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘யாஸ்’ சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

‘யாஸ்’ சூறாவளி இன்று வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள கரையை கடக்குமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வவுனியாவில் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் வெசாக் வாரம் அனுஸ்டிப்பு!!

வெசாக் வாரம்..

வெசாக் வாரம் வவுனியாவில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. மே மாதம் பௌர்ணமி தினம் புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணம் என்பவற்றை நினைவுபடுத்தி வெசாக் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இம்முறை கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக அமைதியான முறையில் சுகாதார முறைகளையும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி வவுனியாவில் வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.

அந்த வகையில் வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் வவுனியா பிரதேச செயலகம் ஆகியவற்றிக்கு முன்னால் சிறிய வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டும் பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டும் அமைதியாக பயணத்தடை நேரத்திலும் வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (25.05) இரவு வெளியாகின.

அதில் நெளுக்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும், நவகமுக பகுதியில் ஒருவருக்கும், எருகலங்கல் பகுதியில் ஒருவருக்கும், கந்தபுரம் பகுதியில் ஒருவருக்கும், தவசியாகுளம் பகுதியில் ஒருவருக்கும், கிடாச்சூரி பகுதியில் ஒருவருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அம்பியுலன்ஸில் பிறந்த குழந்தை!!

கொழும்பில்..

கொழும்பில் சுவசெரிய அம்பியுலன்ஸிற்குள் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. பிரசவிக்கப்பட்ட குழந்தையும் தாயும் களுபோவில வைத்தியசாலையில் மிகவும் ஆரோக்கியமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் களுபோவில வைத்தியசாலை தாதி ஒருவர் பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். இன்று (நேற்று) காலை 1990 சுவசெரிய சேவையில் பயணியாற்றும் ரவிந்து அம்பியுலன்ஸிற்கு வெளியே வரும் போது கையில் குழந்தையுடன் வந்தார். குழந்தை குறித்து அவரிடம் வினவிய போது,

“மிஸ் நாங்கள் தற்போது இந்த குழந்தையை பிரசவித்தோம். பிரசவித்த குழந்தையே இது. குழந்தையின் தாய் உள்ளே உள்ளார். எங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்தது.

தனக்கு பிரச வலி வந்துவிட்டதாக பெண் ஒருவர் கூறினார். உடனடியாக சென்று பார்க்கும் போது குழந்தை பிரசவிக்கும் நிலையில் இருந்தார். அம்பிபுலன்ஸில் ஏறியதும் குழந்தை பிறந்துவிட்டது. நான் தான் குழந்தையை வெளியே எடுத்தேன் என ரவிந்து குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் வைரஸ் பரவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து சிந்திக்காமல் குழந்தை பிரசவித்த இந்த சேவையை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

அத்துடன் இந்த காலப்பகுதியில் சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையில் பணியாற்றும் ஊழியர்களின் பணியை பாராட்ட வேண்டியது கடமை” என தாதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மடிந்த மனிதநேயம் : மகளின் சடலத்தை கட்டி காரிலேயே எடுத்துச்சென்ற தந்தை : நெஞ்சை உலுக்கும் காட்சி!!

இந்தியாவில்…

இந்தியாவில் தந்தை ஒருவர் இ.றந்த மகளின் ச.டலத்தை கட்டி காரிலேயே எடுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலேயே இக் கொ.டூ.ர சம்பவம் நடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் கோட்டாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய சீ்மா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகளின் ச.டலத்தை Jhalawar-ல் உள்ள வீட்டிற்கு எடுத்துச்செல்ல சீமாவின் தந்தை ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார்.

கோட்டாவிலிருந்து 88 கி.மீ தொலைவில் உள்ள Jhalawar-க்கு சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் நிறுவனம் 35,000 கேட்டு மகளை இழந்து துடித்துக்கொண்டிருந்த தந்தையிடம் பேரம் பேசியுள்ளது.

35,000 இல்லாத தந்தை, சீமாவின் உடலை கட்டி தனது காரில் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் படுக்க வைத்து Jhalawar-ரில் உள்ள வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார். மனசாட்சி மனிதநேயம் இல்லாமல் 88 கி.மீ-ருக்கு 35,000 கேட்ட ஆம்புலன்ஸ் நிறுவனத்தை பலர் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

சிதைந்து போன அழகிய குடும்பம் : அடுத்தடுத்து உயிரிழந்த கணவன், மாமியார், மாமனார் : அதிர்ச்சியில் இளம் மனைவி!!

இந்தியாவின்…

இந்தியாவின் கேரளாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த குடும்பம் கொரோனா பெருந்தொற்றால் நிலைகுலைந்து போயுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியை சேர்ந்த சினி ஐசக் என்ற பெண்ணின் குடும்பம் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை பெரும் மகிழ்ச்சியோடு இருந்தது.

ஆனால் அந்த குடும்பத்தில் தற்போது மகிழ்ச்சி இல்லை, காரணம் கொரோனா என்ற கொடிய வைரஸ். சினி ஐசக் 8 நாட்கள் இடைவெளியில் தனது கணவர் மற்றும் மாமியார், மாமியாரை கொரோனாவுக்கு இழந்துள்ளார்.

இதில் சோகம் என்னவென்றால் அவர்களுக்கு சினி ஐசக் மூலம் கொரோனா பரவியது என்பது தான். தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக சினி ஐசக் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி சேர்ந்தார்.

அங்கு அவருக்கு கடந்த 25ஆம் திகதி கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பின்னர் மே 5ஆம் திகதி கொரோனாவில் இருந்து மீண்டார். ஆனால் அதற்குள் சினி ஐசக் மூலம் அவர் கணவர் உல்லாஸ் ஜாய் (36), மாமனார் ஜாய் (73) மற்றும் மாமியார் சிலிசி (63) ஆகியோருக்கும் கொரோனா பரவியது.

இதில் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கடந்த 12 மற்றும் 18ஆம் திகதி உ.யிரிழந்தனர். உல்லாஸ் கடந்த 20ஆம் திகதி உ.யிரிழந்தார். இந்த அ.திர்ச்சியில் இருந்து சினி ஐசக் இன்னும் வெளிவராமல் க.தறி வருகிறார்.

இதனிடையில் வெறும் 16 நாட்கள் மருத்துவமனையில் பணிபுரிந்த சினி ஐசக் தனக்கு கொரோனா வார்டில் பணி வேண்டாம் என கூறியும் அவருக்கு அங்கு பணி கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் அவருக்கு கொரோனா ஊசி போடவில்லை எனவும் தெரிகிறது. இது குறித்து விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம், சினி ஐசக் கொரோனா பணி வேண்டாம் என கூறவில்லை,

அந்த பணிக்காக அவரை வேலைக்கு எடுத்தோம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எந்தவொரு புகாரும் இன்னும் கொடுக்கவில்லை என உல்லாஸின் சகோதரர் கூறியுள்ளார்.

வவுனியாவில் முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா நகரப் பகுதியில் முககவசம் அணியாத நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இன்று (25.05) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா நகரம், பசார் வீதி, வைரவபுளியங்குளம், குருமன்காடு, ஹொரவப்பொத்தானை வீதி, சந்தை உள்வட்ட வீதி, மன்னார் வீதி என்பவற்றில் திடீர் சோதனை,

நடவடிக்கையை மேற்கொண்ட சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் வர்த்தக நிலையங்களில் முககவசம் அணியாது பணியாற்றியோர் மற்றும் சீராக முககவசம் அணியாதோர் ஆகியோரை இன்று கைது செய்து கொண்டு சென்றதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டது.

இவ்வாறு 50 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 16 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து சென்றவருக்கு கொவிட தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்குடம் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.