செவிலியர் வேலையை உதறிவிட்டு கணவருடன் சேர்ந்து இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யும் பெண்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தனது செவிலியர் வேலையை உதறிதள்ளிவிட்டு கணவருடன் சேர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்து வரும் பெண்ணின் செயல் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்மிதா (37). இவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் 2011ல் இருந்து 2019ஆம் ஆண்டு வரை செவிலியராக பணியாற்றினார்.

இதன்பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்த ஸ்மிதா தனது கணவர் பிரதீப்பின் மனிதநேய பணிக்கு உதவியாக இருக்க முடிவு செய்து அவருடன் ஒடிசாவுக்கு வந்தார். பிரதீப் த.ற்.கொ.லை செ.ய்.தவர்கள், விபத்தில் இ.றந்தவர்களின் ச.டலங்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து கணவருடன் சேர்ந்து மது ஸ்மிதாவும் அந்த பணியை செய்து வருகிறார். முக்கியமாக கொரோனாவால் இறப்பவர்கள் பலரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய அவர்களின் உறவினர்கள் முன் வருவதில்லை.

அவர்களின் சடலங்களுக்கும் இந்த தம்பதி இறுதிச்சடங்கு செய்கிறார்கள். இது குறித்து பிரதீப் கூறுகையில், என் தாய் ரயிலில் அ.டிப்பட்டு தண்டவாளத்தில் இ.றந்து கி.டந்தார்.

அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய யாரும் எனக்கு உதவவில்லை, என்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதால் தான் இந்த விடயத்தை நான் செய்து வருகிறேன் என கூறினார். ஸ்மிதா கூறுகையில், கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை கொரோனாவால் இறந்த 300 பேருக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளோம்.

வேறு காரணங்களால் இறந்தவர்கள் உடலுக்கு என மொத்தமாக 500 பேருக்கு இறுதிச்சடங்கு நடத்தியுள்ளோம். இந்த சமூகம் எங்களை விமர்சித்தது, ஆனால் ஒரு போதும் எங்கள் வேலையை நாங்கள் நிறுத்தவில்லை என கூறியுள்ளார்.

வவுனியாவில் சிக்கிய அக்கரைப்பற்று நகரசபை உப தவிசாளரின் வாகனம்? : நடந்தது என்ன?

நகரசபை உப தவிசாளரின் வாகனம்..

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நேரத்தில் அக்கரைப்பற்று நகரசபை உப தவிசாளரின் வாகனம் உப தவிசாளரின்றி வவுனியா, குருமன்காடு பகுதியில் இன்று (25.04) நிறுத்தப்பட்டிருந்தது.

வவுனியா சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் இணைந்து குருமன்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வீதியோரத்தில் இருவர் முககவசம் சீராக அணியாத நிலையில் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அவர்கள் தாம் பயணித்த வாகனம் எனக் கூறி அக்கரைப்பற்று நகரசபை உப தவிசாளரின் பெயர்ப் பலகை காட்சிப்படுத்தப்பட்ட சொகுசு காரினை எடுத்து வீதியோரமாக நிறுத்தி விட்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கடந்த பல நாட்களுக்கு முன்னரே தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று உப தவிசாளருடைய சொகுசுக் கார் வவுனியாவிற்குள் எவ்வாறு நுழைந்தது எனவும்,

அதனை அவர் இல்லாத நிலையில் அரச இலட்சனையுடன் கூடிய அவரது பதவிப் பலகையுடன் பிற நபர்கள் பயன்படுத்தியது எவ்வாறு எனவும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த வாகனத்தில் பயணித்த இருவரும் முககவசத்தினை சீராக அணியாமையால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பிசீஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் குறித்த அரச இலட்சனையுடன் கூடிய பதவி நிலை பொறித்த வாகனத்தை உப தவிசாளர் இன்றி மாகாணம் விட்டு பிற மாகாணத்தில் அவரது பதவிப் பலகையுடன் பயன்படுத்தியமை தொடர்பில் பொலிசார் கவனம் செலுத்தியுள்ளனர்.

வவுனியா நெடுங்கேணியில் கடும் காற்றில் சிக்கி அழிவடைந்த பப்பாசி செய்கை : விரக்தியில் விவசாயிகள்!!

பப்பாசி செய்கை…

வவுனியா நெடுங்கேணி, ஒலுமடு பகுதியில் இன்று (25.05) பிற்பகல் தொடக்கம் மாலை வரை வீசிய கடும் காற்றினால் பப்பாசி செய்கை முற்றாக அழிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

நெடுங்கேணி, ஒலுமடு பகுதியில் பிற்பகல் தொடக்கம் மாலை வரை கடும் காற்று வீசியது. குறித்த காற்றின் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் இருந்த ஆயிரம் பப்பாசி மரங்களில் 600 பப்பாசி மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

அத்துடன் அருகில் இருந்த தோட்டங்களில் வாழைகளும் முறிந்து வீழ்ந்துள்ளன. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயி கருத்து தெரிவித்த போது,

நான் ஒரு வருடத்திற்கு முன்பு 1000 பப்பாசி மரங்களை நட்டு அவை தற்போது காய்த்து வருகின்றன. மாதத்தில் மூன்று தடவை பப்பாசி பழங்களை விற்கக் கூடியதாகவிருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் முடக்கம் காரணமாக பப்பாசி பழங்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஒரு மாதமாக பப்பாசி பழங்களை நாம் பெரியளவில் மரத்தில் பறிக்கவில்லை. இதன் காரணமாக மரத்தில் ஏற்பட்டிருந்த பாரம் மற்றும் வீசிய கடும்காற்று என்பன காரணமாக பப்பாசி மரங்கள் முழுமையாக முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் எனக்கு 30 இலட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.

வருமானத்தை பெற்று குடும்ப சீவியத்தை போக்க முடியும் என விவசாயத்தை மேற்கொள்ளும் போது இவ்வாறு ஏற்படும் பாதிப்புக்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்ற மனவலிமையை கூட பாதித்துள்ளது.

இவ்வாறான அழிவுகளுக்கு அரசாங்கம் உரிய இழப்பீடுகளை வழங்குவதன் மூலமே எம்மை போன்ற விவசாயிகளை பாதுகாக்க முடியும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்தார்.

திருமணமான சில மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : வீட்டு சுவற்றில் இரத்தத்தில் எழுதப்பட்டிருந்த 3 வார்த்தைகள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான இளம்பெண் வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட நிலையில் கணவர் குடும்பத்தார் செய்த கொ.டு.மை.யே இதற்கு காரணம் என கு.ற்.றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் தர்பங்காவை சேர்ந்தவர் விஷாகா. இவருக்கும் ரிதேஷ் என்பவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன் தினம் விஷாகா வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவருக்கு தாயார் போன் செய்தார்.

ஆனால் வெகுநேரமாக அவர் போனை எடுக்காததால் ச.ந்தேகமடைந்த அவர் தெரிந்த நபரை அங்கு அனுப்பினார். அங்கு அந்த நபர் வந்து கதவை தட்டிய போது விஷாகா கதவை திறக்கவில்லை.

இதையடுத்து பொலிசார் உதவியுடன் வீட்டு கதவை உ.டைத்து உள்ளே சென்று பார்த்த போது விஷாகா தூ.க்.கி.ல் ச.டலமாக தொ.ங்.கி.யபடி இருந்தார்.

மேலும் வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த பேப்பரில் ஆண் ஒருவரின் உருவம் வரையப்பட்டிருந்தது. இதோடு சுவற்றில் ஐ லவ் யூ என ஆங்கிலத்தில் இரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது.

அந்த புகைப்படத்தில் உள்ள வரைந்த உருவம் ரிதேஷுடையது என உறவினர்கள் கூறியுள்ளனர். இதனிடையில் வரதட்சணை கொ.டு.மை தான் விஷாகா ம.ரணத்துக்கு காரணம் என குடும்பத்தார் கு.ற்.றஞ்சாட்டியுள்ளனர்.

திருமணத்தின் போது 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நகைகள் மற்றும் பரிசு பொருட்களை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தார் விஷாகாவை கொ.டு.மைப்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த பு.கா.ர் குறித்து பொலிசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியா – மன்னார் வீதியில் தனியார் கல்லூரி சுகாதார பரிசோதகர்களால் பூட்டு : மறு அறிவித்தல் வரை திறக்கத் தடை!!

தனியார் கல்லூரி..

வவுனியா, மன்னார் வீதியில் கலைமகள் விளையாட்டு மைதானம் முன்பாக உள்ள தனியார் கல்லூரி ஒன்று இன்று (25.05) சுகாதார பரிசோதகர்களால் பூட்டப்பட்டதுடன், மறு அறிவித்தல் வரை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தனியார் கல்லூரிகள் மற்றும் கணணி நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றை பூட்டுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வவுனியா, மன்னார் வீதியில் கலைமகள் விளையாட்டு மைதானம் முன்பாகவுள்ள தனியார் கல்லூரி ஒன்று திறந்து இருந்ததுடன், அதனுள் 5 பேர் இருந்துள்ளனர். அத்துடன் இருவர் முககவசம் அணியாதும் இருந்துள்ளனர்.

அங்கு சென்ற சுகாதார பரிசோதகர்கள் அனுமதியின்றி குறித்த தனியார் கல்லூரி திறந்திருந்தமை மற்றும் அங்கு முககவசம் அணியாது சிலர் நின்றமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் குறித்த கல்வி நிலையத்தை மறு அறிவித்தல் வரை பூட்டுமாறும் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து குறித்த கல்லூரி பூட்டப்பட்டுள்ளதுடன், சுகாதார பரிசோதகர்களின் அனுமதி பெற்றே திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை புதிய பணிப்பாளராக வைத்தியர் கலைநாதன் ராகுலன் நியமனம்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கலைநாதன் இராகுலன் தனது கடமைகளை இன்று (25.05.2021) காலை 8.30 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின்பழைய மாணவர்களில் ஒருவரான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிர்வாக மாணி பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

முன்னர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமைகளை ஏற்று பல்வேறு தேவைப்பாடுகளோடு காணப்பட்ட வைத்தியசாலையை பல்வேறு தரப்பினருடனும் உரிய அதிகாரிகளோடும்,

நன்கொடையாளர்களோடும் கலந்துரையாடி தேவைகளை நிறைவு செய்து மாவட்ட மக்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்கும் வைத்தியசாலையாக மாற்றுவதில் பெரும்பங்காற்றினார்.

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தீர்க்கமானதும் உறுதியானதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன் நோயாளர் மற்றும் ஊழியர்களது பாதுகாப்பில் அதிக கரிசனை கொண்டிருந்தார்.

தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு மேலதிகமாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கொரோனா தடுப்பு இணைப்பாளராகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

யாழில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தின் பெண்கள் படையணி!!

பெண்கள் படையணி…

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இராணுவத்தின் பெண்கள் படையணி களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமான பயணத் தடை அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் மக்கள் பொருட் கொள்வனவு செய்வதற்காக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ். நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவும் இராணுவத்தின் பெண்கள் மோட்டார்சைக்கிள் பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினரும் கண்காணிப்பு மற்றும் ரோத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கையானது யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் யாழ். நகரப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பசார் வீதி இலங்கை வங்கி சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது சேவையில் : சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை!!

பசார் வீதி இலங்கை வங்கி..

வவுனியாவில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது வாடிக்கையாளர் சேவையினை வழங்கிய பசார் வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வவுனியாவில் இன்று காலை 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதன்போது வவுனியா புகையிரத நிலைய வீதி மற்றும் இலுப்பையடிப் பகுதியில் உள்ள வங்கிகளில் அதிகமான மக்கள் கூட்டம் இருந்த போதும் அங்கு கடமையில் இருந்த வங்கி உத்தியோகத்தர்களும்,

பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சமூக இடைவெளிகளை பின்பற்றுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவறுத்தல்களை வழங்கி சுகாதார நடைமுறைகளை கவனித்தனர். ஆனால், பசார் வீதியில் அமைந்துள்ள அரச வங்கியான இலங்கை வங்கியில் மக்கள் சமூக இடைவெளியைப் பேணாது நெருக்கமாக நின்றனர்.

இதனையடுத்து அங்கு சென்ற சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் இணைந்து வங்கி உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அழைத்து அறிவுறுத்தல் வழங்கியதுடன், சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றா விடின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

வவுனியாவில் வீதிகளில் தேவையின்றி நடமாடியவர்களை திருப்பி அனுப்பிய பொலிசார்!!

வீதிகளில்..

பயணத்தடை சில கட்டுப்பாடுகளுடன் தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் வீதிகளில் அத்தியாவசிய தேவையின்றி பிராயணங்களை மேற்கொண்டவர்கள் வவுனியா பொலிசாரால் திருப்பி அனுப்பபட்டனர்.

அருகில் உள்ள வியாபார நிலையங்களுக்கு நடந்து சென்று அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட் கொள்வனவை மேற்கொள்வதற்கு இன்று (25.05) காலை 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாகனங்கள் மற்றும் மோட்டர் சைக்கிளில் அத்தியாவசிய தேவையின்றி நகரை நோக்கி அதிகளவிலான மக்கள் வந்தமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும்,

விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார், அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களை எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர்.

வவுனியாவில் முகக்கவசம் சீராக அணியாதோருக்கு எதிராக வழக்கு தாக்கல் மற்றும் பிசீஆர் பரிசோதனை!!

முகக்கவசம் சீராக அணியாதோருக்கு..

பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் வவுனியா வர்த்தக நிலையங்களில் சீரான முறையில் முககவசம் அணியாது நின்றவர்களுக்கு எதிராக சுகாதார பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுபாடுகள் அத்தியாவசிய தேவைகளுக்காக இன்று காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியா நகரப் பகுதியில் பொருட் கொள்வனவுக்காக அதிளவிலான மக்கள் வருகை தந்த நிலையில் சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது வர்த்தக நிலையங்களில் முககவசம் அணியாது கடமையாற்றியவர்கள் மற்றும் முகக்கவசம் சீராக அணியாமல் கடமையாற்றியவர்கள் ஆகியோரை சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து கைது செய்து அழைத்துச் சென்றதுடன், அவர்களுக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பிசீஆர் பரிசோதனையும் முன்னெடுக்ப்பட்டது.

இவ்வாறு வவுனியா நகரம், ஹொரவப்பொத்தானை வீதி, புகையிரத வீதி, குருமன்காடு, மன்னார் வீதி, பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள் வட்ட வீதி, இலுப்பையடி ஆகிய பகுதிகளில்,

வர்த்தக நிலையங்களில் நின்ற சுமார் 50 பேர் வரையில் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுகததார வழிமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கும், வங்கிகளுக்கும் கடுமையான எச்சரிக்கைளும் இதன்போது விடுவிக்கப்பட்டன.

உலகில் அதிக கொரோனா தொற்றாளர் பட்டியலில் 25ஆவது நாடாக இலங்கை!!

கொரோனா தொற்றாளர்..

உலகளாவிய ரீதியில் கோவிட் தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 25ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடுத்து இலங்கை 25வது இடத்தை பிடித்துள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் எண்ணிக்கைக்கமைய இலங்கை 13வது இடத்தை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் worldometers இணைத்தளத்தின் தரவுக்கு அமைய இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் வீதியோர வியாபாரத்திற்கு தடை : பறிமுதல் செய்யப்பட்ட மரக்கறிகள்!!

வீதியோர வியாபாரத்திற்கு தடை..

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு வவுனியா நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தாக்கத்தை கருத்திற்கொண்டு வவுனியா நகரசபையினரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் நகரசபையின் தடையுத்தரவினை மீறி வீதியோர நடவடிக்கையி்ல் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நகரசபையினர் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது வீதியோரத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர்களின் மரக்கறிகள் நகரசபையினர் ஏற்றிச்சென்றதுடன் அவர்களுக்கு தண்டப்பணமும் விதித்தனர்.

வீதியோரத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடவர்களின் மரக்கறிகள் பல பாவனைக்கு ஒவ்வாத வகையில் அழுகிய நிலையிலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா உட்பட பல மாவட்டங்களில் 70 கி.மீ வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!!

யாஸ் சூறாவளி..

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

யாஸ் சூறாவளி நாளை 26 ஆம் திகதி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள கரையை கடக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் மேல் மாகாணம், சப்பிரகமுவா, மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் இன்று சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்பிரகமுவா, மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 150 மி.மீ க்கும் அதிகமான கனமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.

சில நேரங்களில் நாட்டின் கரையோர பகுதிகளில் காற்று 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மத்திய மலைநாடு, வட-மத்தி மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களி்ல் காற்றின் வேகம் 70 கி.மீ வேகம் வரை அதிகரிக்கலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் ஏற்படும் வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

குதிரையின் இறுதிச்சடங்கில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் : கொரோனா ஊரடங்கில் அதிர்ச்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் குதிரை ஒன்றின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பல ஊர்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகளவில் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் குதிரை ஒன்றின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றது தொற்று பரவும் அச்சத்துக்கு வழிவகுத்துள்ளது.

பெலகாவி மாவட்டம் மரடிமத் (Maradimath)கிராமத்தில் மத அமைப்பை சேர்ந்த குதிரை ஒன்று நேற்று காலை உயிரிழந்தது.

இதனையறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், குதிரையின் இறுதி ஊர்வலத்தில் சாரை சாரையாக பங்கேற்றனர்.

ஊரடங்கை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மரடிமத் கிராமத்திற்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அந்த கிராமத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடுவானில் திருமணம் செய்து சிக்கலில் மாட்டிய தம்பதி : விமான ஊழியர்கள் அனைவரும் பணி நீக்கம்!!

நடுவானில் திருமணம்…

எல்லாத்துக்கும் காரணம் அந்த தாத்தாதான்.. நடுவானத்திலே புதுமாதிரியாக பேரனுக்கு கல்யாணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். அதன்படியே விமானத்தில் 161 பேர் பயணித்தபடியே திருமணமும் நடந்துள்ளது. இப்போது, உல்லாச பயணத்திற்கு ஏற்பாடு செய்த ஏஜெண்ட் உட்பட, விமானத்தின் ஊழியர்கள் மொத்த பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த அலை வீரியமிக்கது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று சொல்லியும் பலர் அலட்சியமாக இருக்கிறார்கள்.

லாக்டவுன் அமலில் உள்ளதால், திருமண நிகழ்ச்சிகளுக்கு நிறைய கெடுபிடிகளும் உள்ளன. அந்த வகையில், மதுரையை சேர்ந்த ராகேஷ் – தக்ஷிணா தம்பதிகள். மணமகன் ராகேஷ் ஒரு டாக்டர்.. மணமகள் தக்‌ஷினா ஒரு மனநல ஆலோசகர். தட்ஷனாவின் அத்தை மகன்தான் ராகேஷ்.

2 நாளைக்கு முன்புதான், இவர்களின் திருமணம் எளிய முறையில் வீட்டிலேயே நடந்து முடிந்துள்ளது.. தாத்தா ஆனாலும்கூட, இந்த திருமணத்தை வித்தியாசமாகவும், புதுமுறையிலும் செய்ய வேண்டும் என்று மணமக்களின் தாத்தா ஆசைப்பட்டுள்ளார்.

அதனால், ஓடும் விமானத்தில், நடுவானில் பறக்கும்போது, பெண்ணுக்கு தாலி கட்டுவது என முடிவானது. அதன்படி, 161 உறவினர்கள் விமானத்தில் செல்ல முடிவெடுத்தனர்.. இதற்காக பெங்களூரு டூ மதுரை செல்லும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ஒரு பிளைட்டையும் வாடகைக்கு எடுத்தனர்.

2 மணி நேரத்துக்கு வாடகை பேசியுள்ளனர். மணப்பெண் குடும்பத்தை சேர்ந்த 130 நபர்கள் கொரோனா டெஸ்ட் செய்து கொண்டு ‘நெகட்டிவ்’ சர்டிபிகேட்டும் வாங்கி கொண்டு பிளைட் ஏறினர்.

சரியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை விமானம் கடக்கும் போது, 161 உறவினர்கள் முன்னிலையில் மணமகன், மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார். இந்த திருமணம் இணையத்தில் படுவேகமாக வைரலானது.

பலரும் இதை ஆச்சரியத்துடன் வாயை பிளந்து பார்த்தனர்.. அப்போதுதான் ஒரு விஷயம் தென்பட்டது.. மாஸ்க் கல்யாணத்தில் பங்கேற்க அதிகபட்சம் 50 பேருக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கும் மேலான எண்ணிக்கையில் சொந்தக்காரர்கள் பயணித்து தெரியவந்தது.

மேலும் பலரும் மாஸ்க் போடாமல் இருந்துள்ளனர்.. இதையடுத்து இந்த திருமணம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகத்தின் கவனத்துக்கு வந்தது. தற்போது ஆந்த விமானத்தின் ஊழியர்கள் மொத்த பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்த விளக்கத்தில்,”திருமணத்திற்கு பின்பு, உல்லாச பயணத்திற்காக மதுரையை சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர் விமானத்தை புக் செய்துள்ளார்.

அரசின் தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், பயணிகள் அதனை பின்பற்றவில்லை என்பதால் விதிகளுக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை : நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கிராமம் : எப்படி சாத்தியமானது தெரியுமா?

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அங்கிருக்கும் கிராமம் ஒன்றில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இந்தியாவின் நிலையைக் கண்டு உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.

முதல் அலையின் போது, இந்தியா தப்பித்துவிட்டதால், அதை சாதரணமாக கையாண்டதன் விளைவே இப்போது இந்தியா அனுபவித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில், ஒரிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சாரா கிராமம், கொரோனாவை எதிர்கொள்ளத் திணறிக் கொண்டிருக்கும் நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது.

இந்த கிராமத்தில் 261 வீடுகளும், சுமார் 1,234 மக்களும் வசித்து வருகின்றனர். கொரோனா முதல் அலையின் போதும் சரி, தற்போதும் சரி இங்கு ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

இதுவரை கிராமத்தில் உள்ள யாருக்கும் கொரோனா அறிகுறிகள் பதிவாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் 32 கிராமவாசிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனையை செய்யப்பட்டது. அப்போது அனைவருக்கும் கொரோனா நெகடிவ் என்றே முடிவுகளே வந்தன.

இதனால், மாநில அரசின் கொள்கையின்படி, தற்போது இந்த கிராமத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

இங்கு கொரோனா பரவல் இல்லாததற்கு முக்கிய காரணம், கொரோனா பற்றிய விழிப்புணர்வு தான், இந்த கிராமத்தில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஆஷா சுகாதார ஊழியர்களின் பங்கு முக்கியமானது.

இக்கிராமத்தில் கொரோனா பரிசோதனை, விழிப்புணர்வு ஆகியவற்றை ஆஷா சுகாதார ஊழியர்களே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஏற்படுத்தி விழிப்புணர்வு பணிகள் காரணமாகவே கொரோனாவை இந்த கிரமம் எளிதில் வென்றுள்ளது.

இந்த கிராமத்தை கஞ்சம் மாவட்ட கலெக்டர் விஜய் குலங்கே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆய்வு செய்தார். அதன் பின் அவர் கூறுகையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கிராமவாசிகள் மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது முறையாக மாஸ்க்குகளை அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றுகிறார்கள்.

இங்குள்ள கிராமவாசிகள் முடிந்த வரை வீடுகளிலேயே இருக்கின்றனர். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மும்பையில் வேலை செய்கின்றனர்.

கடந்த ஆண்டு ஊரடங்கின்போதும், கிராமத்திற்குத் திரும்பிய இளைஞர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக 2020 முதலே கொரோனா வைரசை இந்த சின்னஞ்சிறிய கிரமம் தள்ளியே வைத்துள்ளதாக கூறியுள்ளார்.