வவுனியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பாகங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று (25.05.2021) அதிகாலை 4.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணிவரையிலான காலப்பகுதியில் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்காக வழங்கப்பட்ட பயணத்தடை தளர்வில் வவுனியா மாவட்டத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.
குறிப்பாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்த போதிலும், நகரப்பகுதியில் அதிகளவில் மக்கள் வருகை தந்து பொருட் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக வவுனியா நகரப் பகுதியில் மருந்தகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், பழக் கடைகள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், வங்கிகள், புத்தகக் கடைகள், தொலைபேசி கடைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்பன,
திறக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
மேலும் பயணத்தடையிலான இவ் காலப்பகுதியில் பயணிகள் போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் மூன்று முறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர் உட்பட மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (24.05) இரவு வெளியாகின.
அதில், திருநாவற்குளம் பகுதியில் தண்ணீர் கடை நடத்தும் பட்டக்காட்டை சேர்ந்த ஒருவருக்கும், பெரியகோமரசங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள அரலிய ஹோட்டலில் நான்கு பேருக்கும்,
மதவாச்சி பகுதியை சேர்ந்த இருவருக்கும், நெடுங்கேணி பெரிமடுபகுதியை சேர்ந்த ஒருவருக்கும், அவுசலப் பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மூன்று முறிப்பு பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் எரிக்கலம்கள் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 4 வயது கு.ழந்தைக்கு தாய் வி.ஷ.ம் கொடுத்துவிட்டு, தானும் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கு ராஜன் என்ற 35 வயது மகன் உள்ளார். கொத்தனாரான இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகள் முத்துலட்சுமி (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இந்த தம்பதிக்கு நித்திலேஷ் என்ற 4 வயது மகன் உள்ளான். இந்நிலையில் ராஜனுக்கு ராமநத்தத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இதை அறிந்த முத்துலட்சுமி கணவரிடம் இந்த பழக்கத்தை விட்டுவிடும் படி கூறியுள்ளார். ஆனால், ராஜன் கேட்காமல், தொடர்ந்து அந்த பெண்ணுடன் பேசுவதும், பழகுவதுமாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக இருவருக்குமே கடந்த 7 மாதங்களாக அடிக்கடி பி.ரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. அதன் படி கடந்த 21-ஆம் திகதி இரவு இவர்களுக்கிடையே மீண்டும் இந்த பி.ரச்சனை உருவெடுக்க, முத்துலட்சுமி மிகுந்த மனவேதனையடைந்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் வி.ஷ.ம் கு.டித்த அவர், அதன் பின்னர் அதை தனது 4 வயது கு.ழந்தைக்கும் கொடுத்துள்ளார். தாய் கொடுத்தது விஷம் என்று அறியாத அந்த குழந்தையும் அதை குடித்துள்ளது.
பின்னர் முத்துலட்சுமி, தனது தம்பி சண்முகத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் நடந்த பிரச்சினை குறித்தும், கு.ழந்தைக்கு வி.ஷ.ம் கொடுத்து விட்டு தானும் வி.ஷ.த்தை கு.டித்து விட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டு க.தறி அ.ழுதுள்ளார்.
இதைக் கேட்டு அ.தி.ர்ச்சியடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து, அவர்களை மீ.ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், இருவரும் பரிதாபமாக உ.யிரிழந்தனர்.
இது குறித்து முத்துலட்சுமியின் தந்தை முருகேசன் காவல்நிலையத்தில் பு.கா.ர் கொடுக்க, அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, ராஜனை கைது செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
2020- 2021 ஆம் கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை சான்றிதழ்கள் இன்றி சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பயணக்கட்டுப்பாடு காரணமாக இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற இணைய ஊடகச் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2020- 2021 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் இணைந்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை 2021 மே 21 ஆம் திகதி முதல் 2021 ஜூன் 11 வரையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்கலாம்.
இதன்போது பாடசாலை அதிபரின் சான்றிதழ் மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரண நிலை சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது, மாணவர்கள் தேவையான சான்றிதழ்களை பெற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கலாம் என்று ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை மிகவும் தீ.விரமான பா.திப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது.
இருப்பினும் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எ ச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.
இதன் ஒருகட்டமாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பொது மு.டக்கம் நடைமுறையில் உள்ளது.
குறிப்பாக கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்து பதிவானது. இதனால் அங்கு பொது மு.டக்கம் க.டுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றிய இளைஞர் ஒருவருக்குப் போலீசார் நூதன த.ண்டனை வழங்கியுள்ளனர். அதன்படி அவருக்கு மாலை மரியாதை செய்து, ஆரத்தி எடுத்துள்ளனர்.
போலீசாரின் இந்த செயலை வீடியோ எடுத்த ஒருவர் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அது வை.ரலாகிவருகிறது.
காதலியை ஆ.ண.வ கொ.லை.யில் இருந்து தடுக்க காதலி வீட்டு முன்பு இ.ளைஞர் தீ.க்.கு.ளித்த ச.ம்பம் க.டு.ம் அ.தி.ர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள தருமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் விஜய் (25). இவர் காரைக்குடி அமராவதி புதூர் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. படித்துள்ளார்.
அதே கல்லூரியில் காரைக்குடி அருகே உள்ள மீனாவயல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவரின் மகள் அபர்ணா ஸ்ரீயும் படித்து வந்துள்ளர்.
ஒரே வகுப்பில் படிக்கும் போது விஜய் மீது அபர்ணாஸ்ரீக்கு காதல் இருந்துள்ளது. இதையடுத்து, தனது காதலை விஜய்யிடம் அபர்ணா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில், அபர்ணாவின் காதலை ஏற்க விஜய் மறுப்பு தெரிவித்தள்ளர். பின்னர் தொடர்ந்து அபர்ணாஸ்ரீ காதல் தொல்லை கொடுக்க, ஒரு கட்டத்தில் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இருவரும் இரு சக்கரவாகனத்தில் சுற்றி திரிவதும், தனிமையில் அ.டி.க்.கடி சந்தித்து பேசுவதுமாக தங்கள் காதலை மேலும் வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு முடித்து விஜய் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனிடையே, அபர்ணாஸ்ரீ வீட்டிற்கு இவர்களின் காதல் விவகாரம் தெரிய வர பெற்றோர் கண்டித்து அபர்ணாவின் செல்போனை பி.டி.ங்கி வைத்துக் கொண்டனர்.
தனது, நிலைமையை அபர்ணாஸ்ரீ காதலன் விஜய்யிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அபர்ணா ஸ்ரீயை, விஜய் திருமணம் செ.ய்.து கொ.ள்.ள மு.டி.வு செ.ய்.து காதலியின் பெற்றோர், உறவினர்களிடமும் சென்று தனக்கு அபர்ணாஸ்ரீயை திருமணம் செ.ய்.து வைக்குமாறு மன்றாடி கேட்டுள்ளார்.
ஆனால் காதலி வீட்டில் பெண் கொடுக்க முடியாது என பி.டி.வாதமாக தெரிவித்துள்ளனர். மேலும், என் பிள்ளையை கொ.லை செ.ய்.தா.லும் செய்வேனே தவிர உனக்கு கட்டி வைக்க முடியாது என ம.று.ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆ.த்.தி.ர.மடைந்த விஜய், காதலியின் பெற்றோரிடம் அடுத்த வாரம் வருவேன் பெண் தர வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் தரப்பில் காரைக்குடி அனைத்து மகளிர் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை காதலி அபர்ணா ஸ்ரீ வீட்டிற்கு வந்த விஜய் மீண்டும் தன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அப்போது காதலியின் பெற்றோர் அபர்ணாஸ்ரீயை பார்த்து நீ செ.த்தால் எல்லாம் சரியாகிடும் என க.டு.மை.யாக தி.ட்.டி.யதால் ம.ன வே.த.னை.ய.டைந்த விஜய், உங்கள் மகள் மீது நான் கொண்ட காதல் உண்மையானது.
காதலுக்காக உங்கள் மகளை நீங்கள் கொ.லை செ.ய்.ய வேண்டாம். அவள் உ.யி.ரோ.டு இருக்க வேண்டும், நானே என் உ.யி.ரை மா.ய்.த்துக் கொள்கிறோன் என்று காதலி வீட்டின் முன் தன் மீது ம.ண்.ணெ.ண்.ணையை ஊ.ற்.றி விஜய் தீ வைத்துக் கொண்டுள்ளார்.
தீ மளமளவென அவர் மீது பற்றி எ.ரி.ந்.தது. இதில் விஜய் அ.ல.றி து.டி.த்.துள்ளார். அவரது அ.ல.றல் ச.த்.த.த்தில் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீயை அனைத்து ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகி.ச்.சை ப.ல.னி.ன்றி விஜய் ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழந்தார்.
இதுதொடர்பாக காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவம் இடம் வந்த போ.லீ.சார் விஜயின் உ.ட.லை மீட்டு தேவகோட்டை அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு உ.ட.ற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துமேல் வி.சா.ர.ணை செ.ய்.து வருகின்றனர்.
தான் காதலித்த பெ.ண்.ணை ஆ.ண.வ கொ.லை செ.ய்.து விட வேண்டாம் என கூறி பொறியியல் பட்டதாரி இளைஞர் கா.தலி வீட்டு முன்பு தீ.க்.கு.ளி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் உ.யிரிழந்த தந்தையின் ச.டலத்தை தர வேண்டும் என்றால், மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய கட்டணத்தை கட்டி விட்டு எடுத்து செல்லும் படி, மருத்துவமனை நிர்வாகம் கூறியதால், மகள் தந்தையின் ச.டலத்தை தர வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே குன்னம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் ரமசாமி. 69 வயதான இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், இருவரும் மார்த்தாண்டத்தில் இருக்கும் பி பி கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரே அறையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மனைவி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ராமசாமிக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. அவருக்கு தொடர்ந்து 12 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ராமசாமி உ.யிரிழந்தார்.
இதனால் அவரது உ.டலை வாங்குவதற்காக உறவினர்கள் வந்த போது, மருத்துவமனை கட்டணமாக தற்போது வரை ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தபட்ட நிலையில் மேலும் 3 லட்சம் ரூபாய் கட்டினால் தான் ச.டலத்தை தருவோம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதைக் கேட்டு அ.திர்ச்சியடைந்த ராமசாமியின் மகள் ஜாஸ்மின் சுபதா, அவ்வளவு பணம் இல்லையென்றும், தந்தையின் ச.டலத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இது குறித்து ஜாஸ்மின் சுபதா கூறுகையில், தனது தாயாருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சிகிச்சைக் கட்டணம் செலுத்திய நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அதே போல் தந்தை ராமசாமிக்கு சிகிச்சை கட்டணம் மற்றும் மருந்து கட்டணம் என,
ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் தற்போது தந்தை உ.யிரிழந்த நிலையில், சிகிச்சை உள்ளிட்ட செலவுகள் குறித்து தங்களிடம் தரப்பட்ட ரசீதில் தேவையற்ற பல செலவுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
மேலும் ஒரே அறையில் தனது தந்தையையும் தாயையும் தங்கியிருக்க வைத்து சிகிச்சை அளித்து விட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தலா இரண்டாயிரம் ரூபாய் தினசரி அரை வாடகையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,
மொத்தம் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும் என தங்கள் மீது அதிக கட்டணத்தை திணித்ததால், அந்த தொகையை செலுத்த முடியாது எனவும், அதுவரை தனது ச.டலத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் மருத்துவமனை நிர்வாகம், அவரின் ச.டலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது. அதுமட்டுமின்றி இது போன்று மருத்துவமனைகள் பல மக்களிடம் இப்படி பணத்தை ஏமாற்றி வாங்குவதால், இது ஒரு சரியான வழி என்று இணையாவாசிகள் கூறி வருகின்றனர்.
நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் ம.ரணத்தில் அதிரடி திருப்பமாக சினிமா பாணியில் வெளிநாட்டில் இருந்தபடியே மனைவியை கணவன் கொ.லை செ.ய்.துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருவாரூரை சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண் சரக்கு வாகனம் மோதி சமீபத்தில் உ.யிரிழந்தார். இதை பொலிசார் விபத்தாக கருதிய நிலையில் ஜெயபாரதி திட்டமிட்டு கொ.லை செ.ய்.யப்பட்டதாக உறவினர்கள் பு.கா.ர் அளித்தனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானத்தில் உறவினர் தான் ஜெயபாரதி. இதை தொடர்ந்து சந்தானத்தின் உதவியால் மாவட்ட காவல் கண்காணிப்பளர் கவனத்துக்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் வி.சாரணையில் அ.திரடி திருப்பமாக ஜெயபாரதி தி.ட்டமிட்டு கொ.லை செ.ய்.ய.ப்பட்டதும், அமெரிக்காவில் இருந்துகொண்டே அவர் கணவர் விஷ்ணுபிரசாத் இந்த வேலையை செய்ததும் தெரியவந்துள்ளது.
கொ.ல்.ல.ப்.ப.ட்.ட ஜெயபாரதி , தன்னை பிரிந்து அமெரிக்காவில் வசிக்கின்ற தனது கணவர் விஷ்ணுபிரகாஷுக்கு அனுப்பிய நோட்டீசால் அவர் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு தலைவலியாக மாறிப்போன ஜெயபாரதியை தீ.ர்த்துக்கட்ட தனது உறவினர்களான ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி சரக்குவாகனம் மோதி உ.யிரிழந்தால் இதை விபத்து போல காட்டிவிடலாம் என கணக்கு போட்டு உறவினர்கள் மூலம் ஜெயபாரதி மீது வாகனத்தை ஏற்றி கொ.லை செ.ய்.ய வைத்துள்ளார் விஷ்ணுபிரகாஷ்.
இந்த கொ.லை.க்.கா.க சில லட்சங்களை முன்பணமாக அமெரிக்காவில் இருந்து அவர் அனுப்பியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் மீதும் கொ.லை வழக்கு பதிவு செய்து அவர்களை பொலிசார் தே.டிவருகின்றனர்.
விஷ்ணு பிரகாஷின் கொ.லை திட்டம் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவித்து அவரை தமிழகம் வரவழைத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான தரவுகள் எமக்கு கிடைக்கப்பெறவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியா எமக்கு மிகவும் அயல் நாடு என்பதால் இலங்கையில் பரவக்கூடிய வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே காணப்படுவதாகவும், இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பரவிக் கொண்டிருக்கும் பிளக் பங்கசு நோயால் பாதிக்கப்பட்ட நபரொருவர் இலங்கையின் அம்பாறையில் இனங்காணப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பிளக் பங்கஸ் நோயானது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இலகுவாக தாக்கக்கூடியதாகும். இது ஒருவரிலிருந்து பிரிதொரு பரவும் தன்மை கொண்டது.
எமக்கு அயல் நாடான இந்தியாவில் இந்த நோயும் தீவிரமாகப் பரவி வருகிறது. இலங்கையில் இந்நோயால் பாதிப்பு தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான தரவுகள் எமக்கு கிடைக்கப் பெறவில்லை.
ஆனால் இந்தியா எமக்கு மிகவும் அயல் நாடு என்பதால் இலங்கையில் பரவக் கூடிய வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே காணப்படுகிறது. கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகிறது.
அதனால் தான் இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிளக் பங்கஸ் நோய் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
இருந்த போதிலும் இந்த பங்கஸானது கொவிட் தொற்றின் காரணமாகப் பரவுகிறதா அல்லது வேறு காரணிகள் இதில் தாக்கம் செலுத்துகின்றதா என்பதில் இந்தியா குழப்பமடைந்துள்ளது.
‘மிகோ மைகோஸிஸ்’ எனப்படும் பங்கசினால் இந்த நோய் பரவுகிறது. கோவிட் தொற்றுக்கு மத்தியில் ஏனைய நோய்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய வாய்ப்புக்களுள்ளது. எனவே இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்த நோயின் அறிகுறிகளாக கண்கள் வீங்குதல், கண் மடல்கள் வீங்குதல், முகத்தில் பழுக்கள் ஏற்படல், வாயில் தொற்று ஏற்படல் என்பனவாகவுள்ளன.
இவ்வாறான நோய்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். இனி வரும் காலங்கள் மிகவும் தீர்க்கமானவை என சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவில் 6- 11 வரையான தமது பாடசாலை மாணவர்களிடம் தனியார் கல்வி நிலையம் என்னும் பெயரில் 1000 ரூபாய் பணம் வசூலித்து சூம் வகுப்புக்கள் நடைபெறுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக நாம் எமது மாணவர்களை தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுப்பும் போது அங்கு தரம் 6 – 11 வரை பாடம் ஒன்றுக்கு 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலேயே கட்டணம் அறவிடப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது கொரோனா நெருக்கடி நேரத்தில் அரச சம்பளத்தைப் பெறும் அரச பாடசாலை ஆசிரியர்கள் சிலர் தமது பாடசாலை மாணவர்களையும், தமது தனியார் கல்வி நிலையங்களின் பெயரில் சூம் வகுப்புக்களில் உள்ளீர்த்து வகுப்புக்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் மாதம் ஒன்றுக்கு ஒரு மாணவரிடம் ஒரு பாடத்திற்கு 1000 ரூபாய் கட்டணத்தை அறவிடுகின்றனர். குறிப்பாக தரம் 6 மாணவர்கள் தமது வகுப்புக்கான எல்லா பாடங்களையும் கற்பதற்கு 9000 ரூபாய் பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது.
தமது பாடசாலை மாணவர்களுக்கு சூம் வகுப்புக்களை நடத்தாது தாம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனியார் கல்வி நிலையத்தின் பெயரில் இத்தகைய சூம் வகுப்புக்களை நடத்தி தமது பாடசாலை மாணவர்களிடமே 1000 ரூபாய் அறவிடுவது எந்த வகையில் நியாயம் என பெற்றோர் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாடசாலை மாணர்களுக்கு சூம் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களை பயன்படுத்தி இலவசமாக பாடசாலை ஆசிரியர்கள் வகுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
பாடசாலை நேரங்களில் பணம் பெறும் நோக்கில் சூம் வகுப்புக்களை நடத்தக் கூடாது எனவும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ள போதும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதாகவும் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியாவில் சில ஆசிரியர்கள் சூம் வகுப்புக்களை பிரபல இணையதளங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து விளம்பரப்படுத்தி வருவதுடன் சமூக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் ஒரே நேரத்தில் பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு சூம் மூலம் கல்வி கற்பிப்பதுடன் மாணவர் ஒருவரிடம் மாதாந்தம் 1000 ரூபாய் வரை வசூலித்து மாதாந்தம் பல லட்சம் ரூபாயை கல்வியின் பெயரில் கபளீகரம் செய்கின்றனர்.
இவர்களின் இச் செயற்பாடுகளின் மூலம் கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதேவேளை வவுனியாவில் சில ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கு இலவசமாக சூம் வகுப்புகளை நடாத்தி வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை, நாளை அதிகாலை தளர்த்தப்பட்டாலும், இந்த பயணத் தடை எதிர்வரும் 7ம் திகதி வரை அமலில் இருக்கும் என அரசாங்கம் சற்று முன்னர் அறிவித்தது.
மீண்டும் நாளைய தினம் (25.05.2021) இரவு 11 மணி முதல் அமல்படுத்தப்படுகின்ற பயணத் தடை எதிர்வரும் 31ம் திகதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதேபோன்று, 31ம் திகதி இரவு 11 மணிக்கு அமல்படுத்தப்படும் பயணத் தடை எதிர்வரும் மாதம் 4ம் திகதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4ம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் பயணத் தடை விதிக்கப்பட்டு, எதிர்வரும் 7ம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது நாட்டில் அமலில் உள்ள பயணத் தடை நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டாலும், எதிர்வரும் 7ம் திகதி வரை இந்த பயணத் தடை தொடரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 25, 30 மற்றும் 04ம் திகதிகளில் மாத்திரமே பயணத் தடை தளர்த்தப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். இதே வேளை நாளைய தினம் வாகனங்களில் பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வீடுகளில் நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவை தோல்வியடைந்தமை, சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கத் தவறியமையே கோவிட் வைரஸ் தொற்றினால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்பட காரணம் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாக கோவிட் நிமோனியா நிலைமை அதிகரித்து நோயாளிகள் வீடுகள், வீதிகள், வைத்தியசாலைகளில் அனுமதித்தவுடன் உயிரிழப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டியமை, அறிகுறிகள் உள்ள நோயாளிகளை தவற விட்டமை உட்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
இதனால் வேலைத்திட்டம் ஒன்றை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது சங்கத்தின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதியினால் முறையான வேலைத்திட்டம் தயாரிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்து 14 நாட்களாகிய போதிலும் ஜனாதிபதியின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
நோயாளிகள் வீதிகளில் உயிரிழக்கும் நிலையில் சுகாதார அமைச்சு கண்டுக்கொள்ளாமல் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் மூலம் தெரியப்படுத்தி ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்படும் கொரோனா தொற்று பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்க நடவடிக்கை எடுப்பேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட கொரோனா நிலமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. வவுனியா மாவட்டத்திலும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மாவட்டமட்ட கூட்டத்தில் பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. இருந்தாலும் சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பாக பொலிசாரோ அல்லது ஏனைய அரச உத்தியோகத்தர்களோ துணை போவது குறைவாக இருக்கிறது. எனவே அனைவரும் இணைந்தால் தான் கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியும்.
ஆடைத் தொழிற்சாலைகளை மூடுவதற்கு நிறைய சட்டதிட்டங்கள் உள்ளது. குறைந்தபட்சம் அங்கு வேலை செய்பவர்கள் அதிக இடைவெளிகளை பேண வேண்டும். ஆனாலும் நீங்கள் சொல்வதை என்ன கேட்பது என்ற நிலையில் தான் அவர்களது செயற்பாடும் உள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் மூலம தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்க உள்ளேன். அத்துடன் சுகாதாரப் பணிமனைக்கு நிறைய தேவைகள் உள்ளன. அதனைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தார்.
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் ஒருவர் நேற்று (23.05) இரவு மரணமடைந்துள்ளார். குறித்த நபர் வசிக்கும் பகுதியில் ஒருவர் அண்மையில் கொரோனா தொற்று காரணமாக மரணடைந்ததுடன், சிலர் கொரோனா தொற்றாளர்களாகவும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அத்துடன் குறித்த நபர் கடந்த முதலாம் திகதியில் இருந்து 21 ஆம் திகதி வரை வவுனியா வைத்தியசாலையின் 4 ஆம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். குறித்த விடுதியில் பணியாற்றிய வைத்தியர், தாதியர்கள் உட்பட சிலர் அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியும் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென மரணமடைந்த குறித்த நபர் மீது பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளாது உடலை தகனம் செய்வதற்கும், உடலை இன்போம் செய்து குளிரூட்டியில் வைக்க அவசர அவசரமாக சுகாதாரப் பிரிவினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிளிநொச்சியில் விசம் அருந்தி மரணமடைந்த 15 வயது சிறுமியின் உடல் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவ்வாறான நடைமுறைகளை சுகாதாரப் பிரிவினர் பின்பற்றும் போது, குறித்த மரணத்தில் மட்டும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளாது அவசர அவசரமாக குளிருட்டுவதற்கும், தகனம் செய்வதற்கும் அனுமதி வழங்கியது ஏன் என அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன்,
மரணச் சடங்கில் கலந்து கொள்பவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை சுகாதாரப் பிரிவினர் வழங்குவார்களா எனவும் அச்சம் வெளியிட்டுள்னனர்.
இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரும் கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுத்து மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தி அச்சம் இன்றி உடலை தகனம் செய்யவும்,
மரணச் சடங்கை நடத்தவும் அனுமதிப்பதுடன் கிராம மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா நெடுங்கேணி பகுதியை சேர்ந்த குறித்த நபர் நேற்றயதினம் (23.05.2021) காலை சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் மரணமடைந்திருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.