வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (23.05) இரவு வெளியாகின.
அதில் நெடுங்கேணி பிரதேச சபை தவிசாளருக்கும், சிறைச்சாலை உத்தியோகத்தர் இருவருக்கும், பூனாவ நவகம பகுதியை சேர்ந்த வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும், சிறைச்சாலை கைதி ஒருவருக்கும்,
வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் ஒருவருக்கும், எருக்களங்கல் பகுதியில் ஒருவருக்கும், இராசேந்திரகுளம் ஆடைத்தொழிச்சாலையில் ஒருவருக்கும் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரான்ஸில் நடைபெறவுள்ள தேர்தலில் இளம் தமிழ் பெண் ஒருவர் போட்டியிடுகின்றார். எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் மாவட்டத் தேர்தல் மற்றும் பிராந்தியத் தேர்தல் பிரான்ஸில் நடைபெறவுள்ளது.
இம்முறை தேர்தலில் பிரான்ஸ் நாட்டில் Seine-Saint-Denis மாவட்டத்துக்கான வேட்பாளர்களாக bondy மற்றும் Pavillons-sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் முதன் முறையாக செல்வி பிறேமி பிரபாகரன் என்ற இளம் தமிழ்ப் பெண்ணொருவர் இணை வேட்பளராக போட்டியிடுகிறார்.
பிறேமி பிரபாகரன் அவர்கள் 2020 நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பொண்டி bondy நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று bondy நகசபை உறுப்பினராக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் இம்முறை UDI ,Les Républicains, Libres ஆகிய கட்சிகளின் சார்பில் bondy மற்றும் pavillon -sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் இணை வேட்பளராகப் போட்டியிடுகின்றார்.
கொரோனா விழிப்புணர்வு இன்றி உறவினர்களின் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றுவந்த புதுமணப்பெண்கள் இருவர் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் ப.லியான சம்பவம் அந்த கிராமத்தினரிடையே சோகத்தை உண்டாக்கி உள்ளது.
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி என்ற 19 வயது இளம் பெண்ணுக்கும் தண்டூர் கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமையன்று சமூக இடைவெளியின்றி உறவினர்கள் புடை சூழ திருமணம் நடந்தது.
இந்நிலையில் உறவினர் வீடுகளுக்கு எல்லாம் விருந்துக்கு சென்றுவந்த புதுமண தம்பதி கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அங்குள்ள கோவில் ஒன்றுக்கு சென்று அபிஷேகம் செய்து விட்டு இருவரும் ஜோடியாக வீடு திரும்பியிருக்கின்றனர்.
இதன் பின்னர் இருவரும் வீடு திரும்பிய நிலையில் புதுமணப்பெண் ஸ்ரீவானி திடீரென ம.யக்கம் அடைந்து தரையில் சா.ய்ந்தார். அவர் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஸ்ரீவாணி பரிதாபமாக உ.யிரிழந்தார். திருமணப் பந்தலைக் கழற்றும் முன்பாகவே அதே பந்தலை இளம்பெண்ணின் இறுதி சடங்கிற்கும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதால், குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையே உ.யிரிழந்த ஸ்ரீவானிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இருப்பினும் ஸ்ரீவானிக்கு திருமணத்திற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததாகவும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம் பார்த்தசாரதி புரத்தைச் சேர்ந்த விஜயாவிற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணா என்பவருக்கும் கடந்த மாத இறுதியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு வழக்கம் போல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றுவந்தனர்.
இந்நிலையில் விஜயாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்.
இருப்பினும் புதுப்பெண் விஜயாவின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால் திருமணம் முடிந்தது இருபது நாட்கள் கூட ஆகாத நிலையில் புதுப் பெண் விஜயா சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்தார்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரக் கூடிய நிலையில், திருமணம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அரசு பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடித்து திருமண விழாவில் குறைந்த அளவு நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென தெரிவித்தாலும், அரசின் நிபந்தனைகளை மீறி அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி,
கொரோனா விழிப்புணர்வின்றி உறவினர்கள் நண்பர்கள் கூட்டத்துடன் திருமணம் செய்து கொள்வதே இதுபோன்ற வி.பரீத உ.யிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.
புது மணப்பெண்கள் இருவர் திருமணமான ஓரிரு வாரங்களிலேயே ம.ரணமடைந்த சம்பவத்தால் , மாப்பிளை வீட்டாருக்கு மட்டுமல்ல மணமக்களுக்கு விருந்து வைத்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைபேட்டையை சேர்ந்தவர் முத்துவேல் மகன் வெற்றிவேல் (30). பி.இ. பட்டதாரியான இவருக்கும் அறந்தாங்கியை சேர்ந்த நாகநாதன் மகள் சூர்யா (24) வுக்கும் கடந்த 17 ம் தேதி புதுவயலில் உள்ள கோயிலில் பெரியோர்கள் முன்னிலையில் கொரோனா ஊரடங்கு எளிமையாக திருமணம் நடந்தது.
இதையடுத்து, அன்று இரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், புது மண தம்பதி இருவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியறைக்கு சென்றனர். இருவரும் தங்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்துள்ளனர்.
அப்போது புதுமாப்பிள்ளையான வெற்றிவேல் திரைப்படத்தில் கதாநாயகன் கூறுவது போல மனைவி சூரியாவிடம் ‘‘திருமணத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அதில் தோல்வியடைந்ததாகவும்,
பெற்றோர்கள் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்துள்ளேன். கடைசி வரை உன்னை நல்ல முறையில் காப்பாற்றுவேன்’’ என கடந்த கால பல நினைவுகளை மனம் விட்டு உண்மையாக பேசி உள்ளார்.
இந்நிலையில் புதுப்பெண் சூரியா கணவரை தனியாக உறங்க சொல்லி விட்டு அவரும் அந்த அறையில் தூங்கியுள்ளார். அதி காலை கண்விழித்த வெற்றிவேல் அவரது அப்பாவை எழுப்பி, தன் அறையில் சூர்யா ம.யங்கி கி.டப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர்கள் சூர்யாவை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து சூர்யாவின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் சூர்யா ‘‘தன் கணவர் சைகோ போல நடந்து கொள்வதாகவும், மேலும் தன்னிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு து.ன்.பு.றுத்தி மு.டி.யை வெ.ட்.டி, ம.யக்க மாத்திரை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், பெற்றோருடன் சூர்யா காரைக்குடி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் பு.கா.ர் அளித்தார். இதைத்தொடர்ந்து, இன்று புது மண தம்பதி இருவரையும் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து வி.சாரணை செய்யும் போது பெற்றோர்கள் இரு தரப்பும் வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர், காரைக்குடி டி.எஸ்.பி. அருண் புது மண தம்பதி இருவரிடரும் வி.சாரணை மேற்கொண்டார். வி.சாரணையில் மணப்பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் பிடிக்காத திருமணம் காரணமாக, கணவனை ப.ழிவாங்க திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியதும், மணமகன் நிரபராதி என்பது வி.சாரணையில் தெரிய வந்தது. புதுப்பெண் நட.த்திய நாடகத்தால் இருதரப்பு பெற்றோரும் என்ன செய்வது என்று புலம்பித் தவித்தனர்.
கிணற்றில் விழுந்த தனது 4 வயது கு.ழந்தையை கா.ப்பாற்றுவதற்கு முயன்ற தந்தை, கு.ழந்தையுடன் உ.யிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேவுள்ள கைலயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை தனது மகள் சாய்பிரநித்தாவை (4) அழைத்துக் கொண்டு இயற்கை உபாதை கழிக்க வயல்வெளி பக்கம் சென்றுள்ள நிலையில், அவரது மகள் திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட முருகேசன் அவரும் கிணற்றிற்குள் குதித்துள்ளார். இவரது சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வந்ததும் முதலில் குழந்தையின் உடலைக் கண்டறிந்து, பின்பு 1 மணிநேரம் தேடுதலுக்குப் பின்பு முருகேசனின் உடலை மீட்டுள்ளனர். இருவரது உடலையும் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா மற்றும் கிளிநொச்சியில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த மூன்று பேரின் உடல்கள் வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள மின்சார மயானத்தில் இன்று காலை (23.05) தகனம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (22.05) இரவு மரணமடைந்த வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரினதும், வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரினதும் உடல்கள் இன்று (23.05) காலை தகனம் செய்யப்பட்டன.
அவர்கள் இருவரதும் உடல்கள் வவுனியா சுகாதாரப் பிரிவினரால் எடுத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள நகரசபையின் மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.
அத்துடன், கிளிநொச்சி, புளியம்பொக்கனைப் பகுதியில் நஞ்சருந்திய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த 15 வயது சிறுமியின் பிசீஆர் பரிசோதனையில்,
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த சிறுமியின் சடலமும் கிளிநொச்சி சுகாதார பிரிவினரால் எடுத்து வரப்பட்டு பூந்தோட்டம் மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.
இந்தியாவில் பிரபல நடிகை சம்பவனா சேத்தின் தந்தை கொரோனாவால் உ.யிரிழந்த நிலையில் மருத்துவமனையின் அ.லட்சித்தியதால் அவர் உ.யிரிழந்தார் என நடிகை கு.ற்றஞ்சாட்டியுள்ளார்.
போஜ்புரி நடிகையான சம்பவனாவின் தந்தை எஸ்.கே சேத்துக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்தார். மருத்துவமனை தான் தனது தந்தையை கொ.ன்.று.வி.ட்.ட.து என ப.ர.ப.ர.ப்.பு கு.ற்.றச்சாட்டை சம்பவனா முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு தனது தந்தை உ.யி.ரு.க்.கு போ.ரா.டு.ம் கடைசி நொடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், எல்லா மருத்துவர்களும் கடவுளுக்கு ஈடானவர்கள் கிடையாது. வெள்ளை கோட் அணிந்து நம் அன்புக்குரியவர்களைக் கொ.ன்.று கு.விக்கும் சில தீ.யவர்களும் உள்ளனர். இந்த வீடியோவை எடுத்த அடுத்த 2 மணி நேரத்தில் என் தந்தை இ.ற.ந்துவிட்டார்.
அவர் மருத்துவ ரீதியாக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டா.ர் என்று நான் சொல்ல வேண்டும். இப்போது நான் அ.ச்.ச.மி.ன்.றி என் தந்தை வாழ்நாள் முழுவதும் கற்பித்த சத்தியத்திற்காக போ.ரா.ட.ப் போ.கிறேன்.
இது போல அ.ல.ட்சியங்களை உங்களில் பலரும் மருத்துவமனைகளில் சந்தித்திருப்பீர்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் சம்பவனாவிடம் மோ.ச.மா.ன முறையில் பேசிய செவிலியரின் பெயரை அவர் கேட்கிறார்.
தந்தையின் ஆக்சிஜன் அளவு 55 என்ற அளவுக்கு குறைந்த போதும் அது நார்மல் என செவிலியர் கூறுகிறார். இதோடு மூச்சுவிட சி.ரமப்படும் தந்தையின் காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் உலுக்கி வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை வைரஸ் காரணமாக சுமார் 1000 கொரோனா நோயாளிகளின் கண்கள் அகற்றப்பட்டுள்ளதாக அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் நாள் தோறும் சுமார் 2 ஆயிரம் போர் வரை உயிரிழந்து வருகின்றனர்,
லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவை தொடர்ந்து, இந்தியாவை கருப்பு பூஞ்சை வைரஸ் மிரட்டி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், சுமார் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளின் கண்கள் அகற்றப்பட்டுள்ளது,மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சதவீத நோயாளிகள் ஒன்று அல்லது இரண்டு கண்களை அகற்றியுள்ளனர். அரிதினும், அரிதான இந்த ஆபத்தான நோயை mucormycosis கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படுகிறது.
இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான கொண்ட மக்களையே அதிகம் தாக்கும், இந்த நோயின் அறிகுறிகளாக, மூக்கின் மீது கருப்புமாக நிறமாற்றம், கண்பார்வை குறைபாடு, மார்பு வலி, சுவாச சிரமங்கள் மற்றும் இருமல் போன்றவை ஆகும்.
ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் மருத்துவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், இந்த கருப்பு பூஞ்சை வைரஸால், அவர்கள் மேலும் கடும் அழுத்ததிற்குள்ளாகியுள்ளனர்.
மேற்கு மாநிலமான குஜராத்தில், இந்த நோய் பாதிப்பு அதிகம் உள்ளதால், இதற்காக சிறப்பு வார்டுகளை உருவாக்கியுள்ளது. வடமேற்கு மாநிலமான ராஜஸ்தான் இதை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது.
இந்த நோயை முதலில் ஆண்டுக்கு, மருத்துவர்கள் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு வழக்குகளைப் பார்ப்பார்கள். இப்போது, அவர்கள் ஒரு நாளைக்கு ஆறு நோயாளிகளை பார்த்து வருகின்றனர்.
இந்த நோய்க்கு amphotericin B என்ற மருந்து சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. நோயின் தீவிரத்தை பொறுத்து, இந்த நோய் ஒரு நோயாளிக்கு 60 முதல் 100 ஊசி வரை தேவைப்படும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஏழை நபருக்கு லொட்டரியில் ஒரு கோடி பரிசு விழுந்த நிலையில் கோடீஸ்வரராக மாறும் தருணத்தில் அதை அனுபவிக்காமல் கொரோனாவால் உ.யிரிழந்துள்ளார்.
மலபள்ளிபுரத்தை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் சிறிதாக முடி திருத்தகம் ஒன்றை நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடையை மூடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கொண்ட காதர் வறுமையிலும் அந்த பழக்கத்தை தொடர்ந்து வந்தார். ஏனெனில் என்றாவது நமக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிக்காதா என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.
இந்த நிலையில் அவர் வாங்கிய லொட்டரியில் ஒரு கோடி பரிசு விழுந்தது. இதன் மூலம் கோடீஸ்வரராக மாறலாம் என நினைத்த காதர் கனவில் கொரோனா இடியாக வந்து விழுந்தது.
அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காதர் உயிரிழந்துள்ளார். கோடீஸ்வரனாக வாழலாம் என்ற அவரின் கனவு கனவாகவே முடிந்துள்ளது. உயிரிழந்த காதரின் சடலம் சமீபத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு சபியா என்ற மனைவியும், அஸ்கர் என்ற மகனும் உள்ளனர்.
இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து த.ப்பி வந்து கணவன் சிதையில் தீவைத்து மனைவி இறுதிச்சடங்கு நடத்தியுள்ளார். பீகாரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விகாஸ் மண்டல் (28) என்ற நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மனைவி காஞ்சன் தேவி அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி விகாஸ் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்தார். இதன்பின்னர் கணவர் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் உதவியை தேவி நாடிய நிலையில் யாருமே உதவ முன்வரவில்லை.
பின்னர் தேவியின் தாயார் மட்டும் அவருடன் வந்தார். இருவரும் சேர்ந்து மேலும் சிலரிடம் உதவி கேட்டும் யாரும் உதவவில்லை. இதனிடையில் தேவியின் உறவினர்கள் சிலர் அவருக்கு உதவுவதற்கு பதிலாக இது குறித்து சுகாதார அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.
புகாரையடுத்து அதிகாரிகள் தேவியை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அடைத்தனர். அங்கிருந்து தப்பி ஓடிய தேவி நேராக விகாஸ் சடலம் வைக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று கெஞ்சி சடலத்தை வாங்கினார். பின்னர் சிலரின் உதவியுடன் ஆம்புலன்ஸில் சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தனி ஆளாக தகனம் செய்துள்ளார்.
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது சுவிஸ் கிராமம் திரைய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த நாகநாதன் நளாயினி எனும் 21 வயதான யுவதியே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி குறித்த யுவதி தனது வீட்டிலிருந்து உறவினர் ஒருவருடன் ஆடைத்தொழிச்சாலை வேலைக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது வீதியை குறுக்கிட்ட மற்றுமோர் மோட்டார் சைக்கிளை கண்டு அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது பின்னிருந்த யுவதி தவறுதலாக வீதியில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
இந்நிலையில்,யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பச்சிலைப்பள்ளி பளை தம்பலகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் இன்று (23.05.2021) அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் இவ்விடத்தில் காணாமல் போன 44 வயதுடைய பெண்ணினுடையது எனத் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை நேற்றைய தினம் காணாமல் உறவினர்கள் தேடி அலைந்த நிலையில், இன்று தம்பலகாமம் குளிர் பகுதியில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், தீவிர விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் நீதிபதி ஆகியோர் விசாரணைகள் நிறைவடைந்த பின் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிட் ஆபத்து குறித்து அவதானமின்றி மக்கள் செயற்பட்டால் இந்தியா முகம் கொடுக்கும் நிலைமை இலங்கைக்கு ஏற்படுவதனை தவிர்க்க முடியாமல் போகும் என சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.
எப்படியிருப்பினும் இந்தியா முகம் கொடுத்துள்ள நிலைமை, இலங்கைக்கு ஏற்படுவதனை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பானர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாடு அபாய நிலைமையில் உள்ளதென்ற வார்த்தையை பிரயோகிக்க முடியாது. எனினும் தீவிர நிலைமையில் உள்ளதென கூறுலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய் அறிகுறிகளற்ற நோயாளிகளை சில நாட்கள் வீட்டில் வைக்க நேரிடும். எனினும் நோயாளிகளுக்கு ஆபத்தான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 25ஆம் திகதி சில மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்படும் என இராணுவ தளபதி சவேசந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்போது அருகிலுள்ள கடைகளுக்கு மட்டுமே சென்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து விட்டு உடனே வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியாதவர்களுக்கே இப் பயணத்தடை நீக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 25ம் திகதி அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் வாகனம் மோதி உ.யிரிழந்த நிலையில் அமெரிக்க மாப்பிள்ளை மீது அ.திர்ச்சி பு.கார் எழுந்துள்ளது.
திருவாரூரை சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் ஆவார். இவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த அமெரிக்க மாப்பிள்ளை விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015ல் திருமணம் நடைபெற்றது.
அமெரிக்காவின் வெர்ஜினியாவில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன் மனைவி ஜெயபாரதியை குழந்தையுடன், விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் இருந்து திருவாரூரில் உள்ள தாய் வீட்டுக்கு திருப்பி அனுப்பியதாக கூறபடுகின்றது.
தாய் வீட்டில் வசித்து வந்த ஜெயபாரதிக்கு அஞ்சல் துறையில் தற்காலிக கிளார்க் வேலை கிடைத்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று பணிக்கு சென்று விட்டு தனது மொப்பட்டில் வீடு திரும்பிய ஜெயபாரதி மீது ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப செல்லும் வாகனம் மோ.தியதில் உ.டல் ந.சுங்கி உ.யிரிழந்தார்.
இது தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் ஜெயபாரதியின் சகோதரரிடம் தெரிவித்த தகவல்கள் அ.திர்ச்சி அளிப்பதாக இருந்தது. விபத்தை ஏற்படுத்தியவர்கள் ஜெயபாரதியின் மீது திட்டமிட்டு மோ.தியது போல இருந்ததாகவும், மோ.திய வேகத்தில் அவரது உ.டல் ம.ரத்துடன் வைத்து ந.சுக்கி கொ.ல்.ல.ப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சந்தானம் தனது அரசியல் செல்வாக்குள்ள நண்பர் மூலம் காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விபத்தாக பதிவு செய்த வழக்கை மீண்டும் மறு வி.சாரணை நடத்த த.னிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயபாரதி அண்மையில் அமெரிக்காவில் உள்ள தனது கணவருக்கும் அவர் பணிபுரிகின்ற அலுவலகத்திற்கும், பு.கார்களுடன் கூடிய விவாகரத்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பிவைத்ததாக கூறப்படுகின்றது.
இந்த நோட்டீசால் அவர் பார்த்து வரும் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நோட்டீஸை வாபஸ் பெறுமாறு கணவர் விஷ்ணுபிரகாஷ் குடும்பத்தினர் ஜெயபாரதியை க.டுமையாக மி.ர.ட்.டி.ய.தா.க.வு.ம்,
ஆனால் ஜெயபாரதி நோட்டீஸை வாபஸ் பெற மறுத்து விட்டதால் உண்டான ஆ.த்திரத்தில் கூ.லிப்படையை ஏவி ஜெயபாரதியை கார் ஏற்றி கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் என்று அவரது உறவினர்கள் கு.ற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வி.சாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையை 14 நாட்களுக்கு முழுவதுமாக மூடுமாறு கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ். முனசிங்க 14 நாள் மூடுவது குறித்து முடிவு செய்ய ஒரு சிறப்பு கூட்டம் உள்ளது என்று கூறினார்.
முழுமையாக 14 நாட்கள் மூடுவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தற்போது முன்னர் அறிவிக்கப்பட்டவை மட்டுமே தற்போது என்னால் கூற முடியும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச மருத்துவ சங்கங்கமும் 14 நாட்கள் முழுமையான பூட்டுதல் அல்லது ஊரடங்கு உத்தரவு விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.