இலங்கையில் கோவிட் தொற்றில் உயிரிழந்த 22 வயது யுவதி தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. உதாரி விஷ்மிகா யுவதி, காலி, அம்பலங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராகும்.
அவரது தாய் மற்றும் தந்தை வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர். அம்பலங்கொடையில் உள்ள சிற்றி லெப்பில் பணியாற்றி வருகின்றார். குறித்த யுவதி பணியாற்றிக் கொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்துள்ளார்.
வேறு நோய் என நினைத்தே முதலில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கோவிட் தொற்று தீவிரமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவரது நிலைமை மோசமடைந்தமையினால் கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவர் மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். எனினும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார். ஆய்வகத்தில் மிகவும் அவதானமாக பணியாற்றிய போதிலும் அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
வவுனியா மாவட்டம் இரண்டாவது நாளாகவும் முடங்கியுள்ள நிலையில், அரசாங்கத்தின் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்படுவர்கள் மீது பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மருத்தகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது நாளாகவும் வவுனியா மாவட்டம் முழுமையாக மக்கள் நடமாட்டம் இன்றி முடங்கிக் காணப்படுவதுடன், மருந்தகங்கள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கான தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தின் முழுமையான பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பலரும் மருந்தகங்களுக்கு செல்வதாகவும்,
அரச உத்தியோகத்தர்கள் பலர் தமது உத்தியோக அடையாள அட்டையை காண்பித்தும் வீதிகளில் சென்று வரும் நிலையில் பொலிசார் அவர்களை மறித்து தேவையின்றி வீதிகளில் செல்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
வவுனியா நரம் மற்றும் அண்மித்த பகுதிகளில் பொலிசார் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் வீதிகளில் செல்வோர் வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த 40 வயது நபரின் உடல் வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள மின்சார மயானத்தில் இன்று காலை (23.05) தகனம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த வவுனியா, கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (22.05) இரவு மரணமடைந்தார்.
அவரது உடல் வவுனியா சுகாதாரப் பிரிவினரால் எடுத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள நகரசபையின் மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் இன்று (23.05.2021) தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
பழைய பேரூந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், நகர வர்த்தக நிலைய முன்றல், நடைபாதைகள் ஆகியன தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன் ஊடகவியலாளர்களின் மோட்டார் சைக்கிள்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
கிளிநொச்சியில் த.வறான முடிவெடுத்து உ.யி.ரை மா.ய்த்த சி.றுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த,
15 வயது சி.றுமி நேற்று வெள்ளிக்கிழமை த.வறான மு.டிவெடுத்து உ.யி.ரை மா.ய்க்க மு.யன்றுள்ளார். அவரைப் பெற்றோர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சை பயனின்றி உ.யிரிழந்துள்ளார்.
அதையடுத்து உ.யிரிழந்த சி.றுமியின் பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குப் பி.சி.ஆர். பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
பரிசோதனையின் போது சி.றுமிக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் சி.றுமியின் ச.டலத்தைக் கோவிட் சுகாதார விதிமுறைகளின்படி இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் மின் தகனம் செய்யப்படவுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் முழுமையான பயணத்தடை நேற்று முன்தினம் (21.05.2021) இரவு முதல் அமுலாகியுள்ள நிலையில் இன்றையதினம் (23.05) இரண்டாவது நாளாகவும் வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச் சோடிக் காணப்படுகின்றது.
வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மருந்தகங்கள் , சுகாதார துறையினர், ஆடைத் தொழிச்சாலையினர், விவசாயிகள் தமது தேவை நிமிர்ந்தம் சென்று வருவதுடன் பொது மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தொற்றாளர்களில் இருவர் மரணத்தின் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை பகல் நடைபெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதவேளை நேற்று சனிக்கிழமை இரவு வெளியாகிய யாழ். போதனா வைத்தியசாலையின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 75 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 03 பேருக்கும், மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும்,
பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் இருவருக்கும், பூவசரங்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 46 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1178 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புக்கள் மே மாதம் 16ம் திகதி முதல் 22ம் திகதி வரை பதிவாகியவை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2906ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 161,242 ஆக உயர்வடைந்துள்ளது. இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,635 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126,995 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றானது மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், குறித்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த நபர் அம்பாறை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் பிரசாத் கொலம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கிருமி அதிகரிக்குமாக இருந்தால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி, மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். இந்த கிருமி, கொவிட் வைரஸ் தொற்றுடன் எவ்வாறு இணைந்தது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகின்றார். இந்த நோய் அம்பாறை பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக 40 வயதுடைய மேலும் ஒருவர் இன்று (22.05) இரவு மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வவுனியா, கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். இதன்மூலம் வவுனியாவில் கொரோனா காரணமாக இன்று இரண்டாவது நபர் மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற ஐந்தாவது மரணம் இது என்பதும், வவுனியா வைத்தியசாலையில் இடம்பெறும் நான்காவது கொரோனா மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம்!!
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் இன்று (22.05) மாலை மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா,
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இதேவேளை கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற நான்காவது மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய செய்தி : வவுனியாவை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை : 654 பேருக்கு தொற்று, 3 பேர் மரணம்!!
கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலையில் வவுனியா மாவட்டத்தில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் தற்போதைய கொரோனா தாக்கத்தின் நிலமைகள் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இன்று (21.05) இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், அதனை கட்டுப்படுத்த முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் நடைமுறையில் வரும் பயணத்தடையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தற்போது நோய் பரவும் வேகம் கூடுதலாக உள்ளது. மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளனர்.
எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன், பிரதி சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மு.மகேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம்,
வன்னிப் படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டார, சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் திஸால் லாடி சில்வா, சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் கணவர் நிவராண உதவி கேட்டு அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவி மீனாவுக்கு கடந்த 12ம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
வீடு திரும்பிய 6 நாட்களில் மீனாவுக்கு இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (21). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். இந் நிலையில் இவர் நேற்று மதியம் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை,
எதிரே உள்ள பர்ணபி சாலைக்குச் செல்ல சாலையை கடந்தபோது ஈ.வே.ரா பெரியார் சாலை வழியாக வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் யமுனா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த யமுனாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்ட நிலையில் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிற்காமல் வேகமாக அருகில் உள்ள கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாக செல்ல முற்பட்டபோது, பொதுமக்கள் காரை மடக்கி பிடித்தனர்.
அளவுக்கு அதிகமான ம.து.போ.தை.யில் காரை ஓட்டி வந்த அப்துல் கவுஹீம் என்பவரை அடித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில்,
அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துல் கவுஹீமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய அப்துல் கவுஹீம் சங்கம் திரையரங்கத்தின் மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் பரவலைக்கட்டுக்குள் கொண்டு வரும் முகமாக நேற்று இரவு முதல் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்த முடிவு வெள்ளிக்கிழமைக்குள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் கோவிட் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல வல்லுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
அந்த வல்லுநர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையிலேயே பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதாக சவேந்திர சில்வா தெரிவித்தார்.
25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என செய்திகள் வெளியாகிய போதிலும் இரானுவ தளபதி அதனை மறுத்துள்ளார்
எனினும் 25 ஆம் திகதி வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய வீட்டுக்கு வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து ம.து.பா.ன சாலைகளும் 28ம் திகதி வரை முடப்படும் இதேவேளை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாட்டினை மீறும் நபர்களை கைது செய்வதற்காக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொ.ற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொ.டர்புடையவர்களை த.னிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் ந.டவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் இன்று (22.05) மாலை மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா,
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இதேவேளை கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற நான்காவது மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய செய்தி : வவுனியாவை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை : 654 பேருக்கு தொற்று, 3 பேர் மரணம்!!
கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலையில் வவுனியா மாவட்டத்தில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் தற்போதைய கொரோனா தாக்கத்தின் நிலமைகள் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இன்று (21.05) இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், அதனை கட்டுப்படுத்த முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் நடைமுறையில் வரும் பயணத்தடையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தற்போது நோய் பரவும் வேகம் கூடுதலாக உள்ளது. மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளனர்.
எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன், பிரதி சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மு.மகேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம்,
வன்னிப் படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டார, சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் திஸால் லாடி சில்வா, சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.