முகக்கவசம் அணிந்தது போல் Prank செய்த இரண்டு பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

பாலித் தீவு…

இந்தோனேஷியாவின் பாலித் தீவுக்கு சுற்றுலா சென்ற இரண்டு பெண்கள், முகக் கவசம் அணிந்ததுபோல் பெயிண்ட் அடித்துக்கொண்டு Prank செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. முதல் அலையில் குறைவான பாதிப்பை மட்டுமே எதிர்கொண்ட இந்தியா 2வது அலையில் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்தோனேஷியாவின் பாலித் தீவுக்கு சுற்றுலா சென்ற இரண்டு பெண்கள், முகக் கவசம் அணிந்ததுபோல் பெயிண்ட் அடித்துக்கொண்டு Prank செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினர்.

இணையத்தில் வைரலான அந்த வீடியோ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளான அந்த பெண்களின் பாஸ்போர்ட்டை பாலித் தீவில் உள்ள அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜோஸ் பலேர் லின் (Josh Paler Lin), லியா சே (Leia Se) இருவரும் பாலித்தீவுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு முகக்கவசம் அணியாமல் சென்ற அவர்களை, பாதுகாவலர் திருப்பி அனுப்புகிறார்.

காருக்கு வரும் அவர்கள் இருவரும் முகக் கவசம் அணிந்ததுபோல் பெயிண்ட் அடித்துக்கொண்டு மீண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகின்றனர். அவர்கள் பேசாதவரை, இருவரும் முகக்கவசம் அணிந்திருப்பது போல் தெரிகிறது.

பாதுகாவலரை ஏமாற்றி சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையும் அவர்கள், நடந்த அனைத்து விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினர்.

இரு பெண்களின் வீடியோ இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் ஜோஸ் பலேர் லின் (Josh Paler Lin), லியா சே (Leia Se) ஆகியோரின் பாஸ்போர்ட்டை பாலி அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து மற்றொரு வீடியோவில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ள அவர்கள், தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளனர். இணையத்தில் பிரபலமாக இருப்பதால், தங்களை பின்தொடர்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த இதுபோன்று தவறான செயலில் ஈடுபட்டுவிட்டதாகவும்,

இதனை மன்னிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழலில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக சுற்றுலாப் பெண்கள் இருவருக்கும் இந்தோனேஷிய ரூபாயில் 1 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கொரோனா விதிமுறைகளை மீறிய சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கனவே அபராதம் வசூலிக்கப்பட்டது. டெல்லியிலும் கொரோனா ஊரடங்கை மதிக்காமல் காரில் சுற்றித்திரிந்த தம்பதியினருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

அடுத்தடுத்து 4 திருமணங்கள் செய்த பெண் காவலர் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

இந்தியாவில்..

வசதியான இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி அடுத்தடுத்து 4 திருமணங்கள் செய்து கொண்ட தெலங்கானா காவல்துறை, பெண் தலைமைக் காவலர் போலீசில் சி.க்கியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆ.யு.த.ப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றுபவர் 30 வயதான சந்தியா ராணி. இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2வது திருமணம் செய்து கொண்டார்.

2வது கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். அவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3வதாக வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். சில மாதங்களில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு சந்தியாராணி ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த சரண்தேஜ் என்பவரை காதல் வலையில் விழவைத்தார். சந்தியாராணியுடன் சில மாதங்கள் பழகியதில், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பதும், பல ஆண்களை திருமணம் செய்து ஏ.மாற்றியதும் சரண்தேஜிற்கு தெரியவந்தது.

இதனால் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். ஆனால் திருமணம் செய்ய மறுத்தால் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமுகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று சந்தியாராணி மி.ர.ட்டியுள்ளார். இதனால் பயந்து போன சரண்தேஜ் சந்தியாராணியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிய சந்தியாராணி, நீ வேலையை விட்டு விட வேண்டும் என்றும், என்னுடைய மதமான கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்றும் வ.ற்புறுத்தியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சரண்தேஜை பூட்டிய அறைக்குள் வைத்து அ.டி.த்.து சி.த்.ர.வ.தை செ.ய்துள்ளார் சந்தியாராணி. இது குறித்து சரண்தேஜ், ஹைதராபாத் காவல்துறை ஆணையருக்கும், செம்ஷாபாத் காவல்நிலைய வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியாராணியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று வி.சாரித்தனர். வி.சாரணையில் சந்தியாராணி வசதியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி அடுத்தடுத்து 4 திருமணங்களை செய்து கொண்டது தெரியவந்தது.

முதல் 2 கணவர்கள் விட்டால் போதும் என விவகாரத்து பெற்றுக் கொண்டு ஓடிவிட்டனர். 3வது கணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட நிலையில். நான்காவதாக வலையில் வீழ்ந்த சரண்தேஜ் உதவிக்கு போலீசார் துணையை நாடியுள்ளார்.

சந்தியாராணியிடம் இருந்து விடுதலை பெறுவது தனக்கு முக்கியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள சரண்தேஜ், அவரைப் போன்ற மோ.சடிக்காரர்கள் நாட்டில் நடமாடக் கூடாது என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பற்றி உண்மை உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே தான் போலீசில் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையில் பணியாற்றும் பெண் அடுத்தடுத்து நான்கு திருமணங்களை செய்து கணவர்களை கொ.டு.மை.ப்படுத்தி கைதாகியிருப்பது தெலங்கானாவில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா கனகராயன்குளம் சோ.த.னை.ச் சா.வடியில் ஒருவர் கைது!!

கனகராயன்குளம்..

அனுமதிப்பத்திரமின்றி ஆ.டுகளைக் கொண்டு சென்ற நபர் ஒருவரை கனகராயன்குளம் பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (22.05.2021) இடம்பெற்றுள்ளதாக பொ.லிஸார் தெரிவித்துள்ளனர்.

கனகராயன்குளம் பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வாகனத்தினை கனகராயன்குளம் பகுதியில் க.டமையிலிருந்த இ.ரா.ணு.வ.த்.தி.ன.ர் வ.ழி.ம.றி.த்.து சோ.த.னை.க.ளை மே.ற்கொண்டுள்ளனர்.

இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றி 24 ஆ.டுகளைக் க.ட.த்.தி.ச் செ.ன்றுள்ளமை தெ.ரியவந்துள்ளது. குறித்த வா.கனத்தின் சா.ரதியைக் கை.து செ.ய்த இ.ரா.ணுவத்தினர் அவரை கனகராயன்குளம் பொ.லிஸாரிடம் ஒ.ப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் வி.சாரணைகளை மு.ன்னெடுத்து வ.ருகின்றனர்.

உரப்பைக்குள் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞன்!!

உரப்பைக்குள்..

உரப்பைக்குள் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞர் ஒருவர் இன்று காலை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இளைஞர் தம்புள்ளை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிரில் உரப்பை ஒன்றுக்குள் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உரப்பைக்குள் நபர் ஒருவர் இருப்பதை அருகிலிருந்தவர்கள் கண்டு, அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து நகர வாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன் குருணாகல் மாவத்தகமை பிரதேசத்தைச் சேர்ந்த காமினி திஸாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் எதற்காக தம்புள்ளை நகருக்குச் சென்றார், ஏதேனும் பிரச்சினையில் சிக்கியுள்ளாரா என்ற எந்த தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை.

இறுக்கமடையும் பயணக்கட்டுப்பாடு : மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை!!

பயணக்கட்டுப்பாடு…

பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாட்டினை மீறும் நபர்களை கைது செய்வதற்காக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணத் தடை, 19 மணித்தியாலங்களின் பின்னர் அன்றிரவு 11 மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதற்கிணங்க அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வரும் நாடளாவிய ரீதியிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 28ஆம் திகதி காலை 4 மணி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் 65 பேரும் மாத்தளையில் 98 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 11,743 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை வரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும்.

வீதித்தடைகள், நடமாடும் பொலிஸ் சுற்றிவளைப்பு, மோட்டார் சைக்கிள்களினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

வவுனியா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையத்திற்கு வர்த்தக சங்கத்தினரினால் உதவிகள் வழங்கல்!!

கொரோனா சிகிச்சை மையத்திற்கு..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களை கண்காணிக்கும் முகமாக சிசிரிவி கருவியும் அவர்களுடன் தொடர்பாடலை மேம்படுத்த இரு வழி கலந்துரையாடல் ஸ்பீக்கர், மைக் வசதிகள் தேவையென வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினால் வவுனியா வர்த்தக சங்கத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் சிசிரிவி கருவி மற்றும் ஸ்பீக்கர், மைக் வசதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பொருட்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் ஜெறல்டின் நிலக்சனிடம் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் உள்ளிட்ட குழுவினர் வழங்கி வைத்தனர்.

வவுனியாவில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு : 32 வயதுப் பெண்ணும் கணவரும் கைது!!

நெளுக்குளம் பகுதியில்…

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப் பொ.ருளினை விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்றைய தினம் (22.05) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் ஹெ.ரோ.யி.ன் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுதது குறித்த பகுதியில் சோ.தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது விற்பனைக்காக சிறு சிறு பொதிகளாக பொதி செய்து வைக்கப்பட்ட க.ஞ்.சா கை.ப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய குடும்ப பெண்ணும், அவரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ருளினை குறித்த பெண் விற்பனை செய்ய முயன்ற வேளை,

குறித்த பெண்ணின் கணவன் அங்கு இருக்காத காரணத்தால் கணவனை பொலிஸார் விடுதலை செய்துள்ளனர். வி.சாரணைகளின் பின்னர் சந்தேகநபரான பெண்ணை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பரிதாபமாக பலி!!

விபத்து..

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் 99ஆம் கட்டை பகுதியில் வான் மற்றும் லொறியொன்று நேருக்கு நேர் மோதியதில் வானில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (22.05) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் வானில் பயணித்த திருகோணமலை, கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தம்பலகாமம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழமுக்கம் : எதிர்வரும் 24ஆம் திகதி புயல் சின்னமாக மாறும்!!

தாழமுக்கம்..

தென் மேற்கு வங்க கடலுக்கு அருகில் வளிமண்டலத்தில் காணப்படும் காற்றழுத்த தாழமுக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதி புயல் சின்னமாக மாற்றமடையலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த தாழமுக்கமானது இன்றைய தினம் குறைந்த காற்றழுத்த தாழமுக்கமான மாறும்.

அத்துடன் இந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் எதிர்வரும் 24ஆம் திகதி புயல் சின்னமாக மாறும் என்றே வளிமண்டலவியலாளர்கள் கூறுகின்றனர். இலங்கைக்கு இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாது.

இந்தியாவுக்கே நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புயல் சின்னம் எதிர்வரும் 26 ஆம் திகதி இந்தியாவின் கரையை கடக்கலாம். இந்த நிலைமை காரணமாக இலங்கையில் அவ்வப்போது மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.

இதனால், குறித்த கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களை கேட்டுக்கொள்கிறோம். இந்த நிலைமையால் இலங்கையின் தென்மேற்கு பகுதிகிளல் 24, 25, 26ஆம் திகதிகளில் மழை அதிகரிக்கலாம்.

ஒரு நாள் தொடர்ந்தும் மழை பெய்தால், வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படலாம். குறிப்பாக காலி, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் இந்த நிலைமை ஏற்படக் கூடும் எனவும் அத்துல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் சிறைச்சாலை உத்தியோத்தர்கள் இருவர் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் சிறைச்சாலை உத்தியோகத்தர் இருவர் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (21.05) இரவு வெளியாகின.

அதில் தாதியர் விடுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி கற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறைச்சாலை உத்தியோகத்தர் இருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் இருவருக்கும், அண்ணாநகர் பகுதியில் ஒருவருக்கும்,

தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாகச்சகொடி பகுதியில் ஒருவருக்கும் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முழுமையாக முடங்கியுள்ளது!!

பயணத்தடை..

நாடு முழுவதும் மீண்டும் முழுமையான பயணத்தடை நேற்று (21.05.2021) இரவு முதல் அமுலாகியுள்ள நிலையில் இன்றையதினம் (21.05) வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மருந்தகங்கள், சுகாதார துறையினர், ஆடைத் தொழிச்சாலையினர், விவசாயிகள் தமது தேவை நிமிர்ந்தம் சென்று வருவதுடன் பொது மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் 44 கொரோனா மரணங்கள் : 3538 தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொடர்பான 44 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1132 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் ஒரே நாளில் கோவிட் தொற்றினால் ஏற்பட்ட அதிகூடிய மரணங்கள் இதுவாகும்.

71 வயதுக்கு மேற்பட்டவர்கள் 23 பேரும், 61 – 70 வயதுக்கு உட்பட்ட 11 பேரும், 51 – 60 வயதுக்கு உட்பட்ட 7 பேரும், 31 – 40 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரும், 21 – 30 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 30 ஆண்களும், 14 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3538 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 158,324 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அனைத்து விமான சேவைகளும் இரத்து!!

விமான சேவை..

இன்று நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வறிவித்தலை சிவில் விமானச் சேவைகள் அதிகார சபை வெளியிட்டுள்ளது.

கோவிட் தொற்றைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கையிலிருந்து பயணிக்க இருக்கும் பயணிகளுக்கு எந்தவித தடையுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சரக்கு விமானிகளுக்கு அனுமதியுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் விபத்து : பெண் காயம்!!

விபத்து..

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று (21.05.2021) மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியா நகரில் இருந்து யாழ் வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், அதே வீதியில் வந்த முச்சக்கர வண்டியும் மாவட்ட செயலகம் முன்னால் முந்திச் செல்ல முற்பட்ட போது மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மனைவி கண்முன்னே உயிரிழந்த கணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஆக்சிஜன் சிகிச்சையை அகற்றியதால் தனது கணவர் உ.யிரிழந்தார் என மனைவி குற்றஞ்சாட்டிய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இ.றப்புக்கான காரணம் குறித்து வேறு விளக்கத்தை கொடுத்துள்ளது.

கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ராஜா என்பவர் கொரோனா தொற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு ராஜாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆக்சிஜனை மருத்துவர்கள் எடுத்ததால் அவர் மூச்சு விடமுடியாமல் து.டி.த்.து.டி.த்.து உ.யிரிழந்தார் என கூறப்படுகிறது.

மனைவி கண்முன்னே ராஜா இ.றந்ததால் அவர் க.தறி அழுதார். இது குறித்து அவர் கூறுகையில், மூ.ச்சுத்திணறல் ஏற்பட்ட போது என் கணவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை, அதனால் தான் அவர் உ.யிரிழந்தார்.

வேறு யாருக்கோ அவசரமாக தேவைப்படுகிறது என வெண்டிலேட்டரை எடுத்து சென்றுவிட்டார்கள் என கூறினார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில்,

வெண்டிலேட்டரை எடுத்த போது ராஜா திட உணவாக இடியாப்பம் சாப்பிட்டதால் தான் அவருக்கு மூ.ச்சுத்திணறல் ஏற்பட்டது. வெண்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகள் திட உணவு சாப்பிடக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் வெண்டிலேட்டர், முக கவசத்தை அவிழ்த்து வைத்ததால் அவருக்கு முககவசம் தேவையில்லை என எடுத்து சென்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கிராமத்துக்கு சென்று மனைவியின் அஸ்தியை கரைத்த கணவன் : பின்னர் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மனைவி உ.யிரிழந்த நிலையில் அந்த வே.தனையில் கணவனும், மகனும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன்(58). இவர் தனது மனைவி மீனா (45), மகன் மனோஜ் குமார் (26) ஆகியோருடன் ஓசூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீனாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மீனா கடந்த மாதம் 16-ந் திகதி சிகிச்சை பலனின்றி இ.றந்தார்.

இதனைத் தொடர்ந்து மீனாவின் இறுதிச் சடங்குகள் அங்கேயே நடந்தது. இந்நிலையில் தன் மனைவியின் அஸ்தியை அவரது சொந்த ஊரில் கரைக்க முடிவு செய்தார் கனகராஜ்.

இதன் காரணமாக மனைவி மீனாவின் அஸ்தியை எடுத்துக்கொண்டு மகனுடன் தனது மாமனார் வீடான தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டு கிராமத்துக்கு விரைந்தார்.

மனோஜ்குமாருடன் நரங்கிப்பட்டு கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் மீனாவின் அஸ்தி கரைக்கப்பட்டது. பின்னர் மீனா இறந்த வேதனை கனகராஜனையும், மனோஜ்குமாரையும் வாட்டி எடுத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனகராஜன் அவரது மகன் மனோஜ் குமார் ஆகிய இருவரும் வீட்டில் உள்ள தனி அறையில் ச.ட.ல.மா.க கி.டந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் ச.டலமாக கிடந்த இருவரது உ.டல்களையும் மீ.ட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட கனகராஜன் தங்கி இருந்து அறையில் ஒரு கடிதம் இருந்ததை பொலிசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை.

மீனா சென்ற இடத்திற்கே நாங்களும் செல்கிறோம் என்று கனகராஜன் கைப்பட எழுதி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.