மணமேடையில் புரோகிதர் செய்த கீழ்த்தரமான செயல் : திருமண வீடியோவை பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

புரோகிதர்..

இந்தியாவில் திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்கக்கூடிய தங்கமணி குண்டுகளை தி.ருடிச் சென்றது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் கடந்த 16ம் திகதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு புரோகிதர் ஒருவர் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்தார்.

அப்போது பெண்ணின் தாலி மற்றும் தாலி செயினில் கோர்க்கக் கூடிய தங்கமணி குண்டுகள் என அனைத்தையும் மண மேடையில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்த புரோகிதர் தங்கமணி குண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் ஆகும். தாலியில் தங்கமணிக் குண்டுகள் இல்லாததைக் கண்டு திருமண வீட்டார் அ.திர்ச்சி அடைந்தனர்.

திருமண வீடியோவில் புரோகிதர் தங்கமணி குண்டுகளை தனது பாக்கெட்டில் போடுவது தெளிவாக பதிவாகி இருந்ததை பார்த்த குடும்பத்தார் அ.திர்ச்சியடைந்து அவர் மீது பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து த.லைமறைவாக உள்ள புரோகிதரை பொலிசார் வலைவீசி தே.டி வருகின்றனர்.

திருமணம் முடிந்த 5 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

இந்தியாவில்…

இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண் உ.யிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கடும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் திருமணமாகி 5 நாட்களில் இளம்பெண் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு தண்டூர் எனும் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று (மே 14) திருமணம் நடைபெற்றது.

குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டதால் மிகவும் சந்தோஷத்துடன் அன்றைய தினம் இரவு அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இரவு உணவை சாப்பிட்டனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அங்குள்ள கோவில் ஒன்றுக்கு சென்று அபிஷேகம் செய்துவிட்ட புதுமண ஜோடி இருவரும் வீடு திரும்பியிருக்கின்றனர்.

தொடர்ந்து ஸ்ரீவானிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது, அடிக்கடி வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆ.பத்தான நிலையில் இருப்பதாக கூறியதும் குடும்பத்தினர் அ.திர்ச்சி அடைந்தனர், சிறிது நேரத்திலேயே உ.யிரிழந்துவிட்டார்.

அவரது ம.ரணத்திற்கு கொரோனா காரணமாக இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் கூறினாலும், திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்ததாக உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்கிடையே தங்களின் மகள் தூக்கமின்மை காரணமாக ரத்தக்கொதிப்பில் உ.யிரிழந்ததாக அவருடைய பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

3 அல்லது 4 வாரங்களில் நாடு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளும் : வெளிவந்த எச்சரிக்கை!!

உருமாறிய வைரஸ்…

தற்போதைய சூழ்நிலையில், 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறு வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய கோவிட் தொற்று நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், மிகவும் அபாயம் மிக்கவை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 4 உருமாறிய வைரஸ்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பிரித்தானியா, தென் ஆபிரிக்கா, பிரேஸில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பரவும் வைரஸ்களே இவ்வாறு அபாயம் மிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் நிமோனியாவினால் பீடிக்கப்பட்ட 1000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை!!

நிமோனியாவினால்..

இலங்கையில் கோவிட் வைரஸினால் நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது வரையில் மிகவும் அவதானமிக்க மற்றும் தீர்மானமிக்க நிலையில் உள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் மூன்று அல்லது நான்கு வாரத்தில் மிகவும் மோசமான நிலைமை ஏற்பட கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் நிமோனியா ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் வேறு நோய்கள் இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் ஆபத்துக்கள் அதிகம் என அவர் கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும். மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்குள் மூன்று மடங்கு கொரோனா தொற்றாளர்கள்? அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

கொரோனா தொற்றாளர்கள்..

இலங்கையில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களை விடவும், மூன்று மடங்கு கொரோனாதொற்றாளர்கள் சமூகத்திற்குள் இருக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சமூகத்திற்குள் காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களின் ஊடாக, மேலும் வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் 3500ற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சமூகத்திற்குள் அதைவிடவும் மூன்று மடங்கு தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என அவர் கூறுகின்றார்.

இவ்வாறானவர்களின் ஊடாக, சமூகத்திற்குள் கோவிட் தொற்று மேலும் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் அச்சம் வெளியிடுகின்றார். புதிய மரபணு ஊடாக இதுவரையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஒன்றை காண முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் பரவலை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்கள் இரண்டு வாரங்களாவது வீட்டினுள் இருந்து செயற்பட வேண்டும். தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் ஒன்றை இரட்டை இலக்கங்களில் வீட்டை விட்டு செல்லுமாறு கூறினாலும் மக்கள் அதிகமாக வெளியே செல்கின்றனர்.

வீதிகள் வெறுமையாக வேண்டும். தொற்றினை குறைக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே இருக்க வேண்டும் அத்தியாவசிய விடயங்ககைள தவிர்த்து வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

-தமிழ்வின்-

க.பொ.த சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளை மீளவும் ஒத்திவைப்பது குறித்து கவனம்!!

பரீட்சைகளை..

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளை மீளவும் ஒத்திவைப்பது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கும் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரண தரப்பரீட்சையை ஜனவரி மாதம் நடத்துவதற்கும் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.

கோவிட் பெருந்தொற்று காரணமாக பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிக்க்பபட்டுள்ளதால் இந்த திகதிகளில் மீளவும் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இணைய வழி கற்கை நெறிகளின் மூலம் எல்லா பிரதேசங்களுக்கும் நிறைவானதும், சம அளவிலானதும் வளங்கள் இன்மையினால், உரிய தினத்தில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் காண்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து நிச்சயமான திகதிகளை அறிவிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனால் பரீட்சைகளை எப்போது நடத்த முடியும் என்பது குறித்து திடமான அறிவிப்புக்களை தற்போதைக்கு மேற்கொள்ள முடியாது எனவும் கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெற்கு ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கை மக்களுக்கு…

இலங்கையில் அமுலாகும் பயண தடை குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்கு நீக்கப்படும் போது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே 25 ஆம் திகதி பயண தடை நீக்கப்படும் போது கடைகளுக்கு விரைந்து சென்று ஒன்றுகூட வேண்டாம் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே 21 ஆம் திகதி இரவு 11:00 மணி முதல் மே 25 ஆம் திகதி காலை 4:00 மணி வரை நடைமுறைக்கு வரும் பயணக் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மீள பயணக் கட்டுப்பாடுகள் மே 25 ஆம் திகதி இரவு 11:00 மணி முதல் மே 28 ஆம் திகதி காலை 04:00 மணி முதல் வரை நடைமுறைக்கு வரும் என்றார்.

வவுனியா பூந்தோட்டத்தில் தகனம் செய்யப்பட்ட மன்னாரில் கொரோனாவால் மரணமடைந்தவரின் உடல்!!

கொரோனாவால் மரணமடைந்தவரின் உடல்..

மன்னாரில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த 64 வயது நபரின் உடல் வவுனியா, பூந்தோட்டத்தில் இன்று மதியம் (20.05.2021) தகனம் செய்யப்பட்டது.

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று (19.05) மன்னாரில் மரணமடைந்தார்.

அவரது உடல் மன்னார் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள நகரசபையின் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது மரணித்தவரின் உறவினர்கள் சிலரும் தகனம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு…

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளை அடுத்த சில நாட்களுக்கு வீடுகளில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் என நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் ஒருவாரகால பயணவரம்பு விதிக்கப்படும். எனவே வீடுகளில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் தேவையின்றி வீதிகளில் இருந்து யாரும் பயணிக்க கூடாது. வெளியில் இருந்து வருபவர்களை வீடுகளில் வைத்துக் கொள்ளக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

இப் பயணக் கட்டுப்பாடானது கோவிட் தொற்றுப் பரவுவதை தடுப்பதற்கு உதவும் என சுகாதார துறையினர் வலியுறுத்தியிருப்பதாகவும் இதனடிப்படையில் ஐனாதிபதியின் பரிந்துறையின் பேரில் இப் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணம்!!

கொரோனா தொற்றால்…

வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று (20.05.2021) மரணமடைந்துள்ளார்.

திருநாவற்குளத்தை சேர்ந்த குறித்த 68 வயது பெண் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.

சென்ற வாரம் வயதான பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக பலியாகி இருந்த நிலையில் இரண்டாவது கொரோனா நோயாளி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கிராமங்களில் வசிக்கும் 12 பெண்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியாவில் கிராமங்களில் வசிக்கும் 12 பெண்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (19.04) இரவு வெளியாகின.

அதில், மாமடு பகுதியில் மூன்று பேருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், காத்தார் சின்னக்குளம் பகுதியில் இருவருக்கும், ஓமந்தை நவ்வி பகுதியில் நான்கு பேருக்கும், சூடுவெந்தபுலவு பகுதியில் ஒருவருக்கும்,

மூன்றுமுறிப்பு பகுதியில் ஒருவருக்கும், கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், கல்மடு முள்ளிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

பூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் இருவருக்கும் என கிராமங்களைச் சேர்ந்த 12 பெண்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் கிராமங்களில் வசிக்கும் 12 பெண்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் கிராமங்களில் வசிக்கும் 12 பெண்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (19.04) இரவு வெளியாகின.

அதில், மாமடு பகுதியில் மூன்று பேருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், காத்தார் சின்னக்குளம் பகுதியில் இருவருக்கும், ஓமந்தை நவ்வி பகுதியில் நான்கு பேருக்கும், சூடுவெந்தபுலவு பகுதியில் ஒருவருக்கும்,

மூன்றுமுறிப்பு பகுதியில் ஒருவருக்கும், கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், கல்மடு முள்ளிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

பூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் இருவருக்கும் என கிராமங்களைச் சேர்ந்த 12 பெண்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிள்ளைகளின் மோசமான செயல் : தொற்றுக்குள்ளான பெற்றோரை வீதியில் விட்டு சென்ற அவலம்!!

வெல்லம்பிட்டிய சந்தியில்..

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெல்லம்பிட்டிய சந்தியில் வயோதிப பெற்றோரை நடுவீதியில் விட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் இருவரையும் பிள்ளைகள் அவ்விடத்தில் விட்டு செல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடை ஒன்றில் முன்னால் விழுந்து கிடந்த இந்த இருவரையும் சுகாதார அதிகாரிகள் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றியமையினாலேயே பிள்ளைகள் வீதிகளில் விட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அவர்கள் இருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரையும் ஐடிஎச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கொத்தட்டுவ சுகாதார வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தம்பதிக்கு கடந்த நாட்களாக அருகில் இருந்தவர்களே உணவு வழங்கி அவர்களை சுத்தப்படுத்தியுள்ளனர். சுத்தப்படுத்தியவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பிள்ளைகளின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் அந்த பெற்றோர் பிள்ளைகள் தொடர்பான தகவல்களை வெளியிட விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஒரே நாளில் 36 பேர் கொரோனா தொற்றுக்கு பலி : மலையென உயரும் மரணங்கள்!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 36 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1051 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்கள் இதுவாகும்.

இதேவேளை நேற்றைய தினம் 3,623 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 151,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,222 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய தொற்றிலிருற்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியா நகரசபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை?

தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு கட்சியின் செயலாளரும், மாவட்ட தலைவருமான ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 5 வட்டாரங்களையும், புளொட் இரண்டு வட்டாரங்களையும் வெற்றி பெற்றதுடன் போனஸ் ஆசனத்தை ரெலோ தனதாக்கியது.

இந்நிலையில், வவுனியா நகரசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 5 பேரில் இறம்பைக்குளம் வட்டார உறுப்பினர் செந்தில்ரூபன் கட்சி தாவிய நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு கிறிஸ்தோபர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஏனைய வட்டார உறுப்பினர்கள் 4 பேரும் தொடர்ந்தும் செயற்பட்டு வந்த நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிட்ட ஏனைய உறுப்பினர்களும் குறுகிய கால வாய்ப்பை வழங்கும் முகமாக வட்டார ரீதியாக வெற்றிபெற்ற 4 உறுப்பினர்களையும்,

பதவி விலகுமாறு கட்சியின் செயலாளரும், வவுனியா மாவட்ட தலைவருமான முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரியுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகர வட்டார உறுப்பினர் ரி.கே.இராலிங்கம், பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சுமந்திரன், குடியிருப்பு வட்டார உறுப்பினர் பரதலிங்கம், வைரவபுளியங்குளம் வட்டார உறுப்பினர் நா.சேனாதிராஜா,

ஆகியோரையே இவ்வாறு பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளது. அவர்களது இடத்திற்கு கட்சிக்காக செயற்பட்ட புதிய உறுப்பினர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாம் வட்டார ரீதியில் போட்டியிட்டு வெற்ற பெற்றவர்கள் என்ற அடிப்படையில் சில உறுப்பினர்கள் பதவி விலக விருபமில்லாது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் : உடல் அடக்கத்துக்கு பின் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவித்த பிறகு இறந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை என குறுச்செய்தி வந்தது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (35). இவருடைய மனைவி உமா (33). இந்நிலையில், உமாவிற்கு லேசான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் உமா கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

பின்னர் சென்னை மாகராட்சி பணியாளர்கள் உமாவின் வீட்டிற்கு வந்து கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக கூறி அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 16ஆம் திகதி உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் சென்னை மாநகராட்சி சார்பில் உமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உமாவின் செல்போனுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியால் தங்களுடைய மாதிரியை கோவிட் 19 பரிசோதனை செய்ததில் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக குறுச்செய்தி வந்தை கண்ட கணவர் பரமேஷ்வரன் அ.திர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து பரமேஷ்வரன் சென்னை மாநகராட்சி உதவி எண்ணை தொடர்பு கொண்டபோது தவறுதலாக குறுஞ்செய்தி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழப்பமடைந்த அவர் தன் மனைவி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தான் இ.றந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இதற்கு சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துமனை இரண்டும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட இளம் தம்பதியின் சடலங்கள் : அனாதையான சில நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை!!

இந்தியாவில் ..

இந்தியாவில் தந்தையை கொரோனாவுக்கு இழந்த இரு வாரத்தில் தாயையும் இழந்து கை குழந்தை ஒன்று அனாதையாக மாறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. நஞ்சுண்டி கவுடா (45) என்பவருக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் குழந்தை பிறக்கவில்லை.

அவர் மனைவி இ.றந்துவிட்ட பின்னர் மம்தா (31) என்ற பெண்ணை 9 ஆண்டுகளுக்கு முன்னர் கவுடா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

கவுடா – மம்தா தம்பதிக்கும் குழந்தை பிறக்காமல் இருந்த சூழலில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு பின்னர் மம்தா கர்ப்பமானார். இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கவுடா கொரோனா பாதிப்பால் உ.யிரிழந்தார்.

இதனிடையில் சமீபத்தில் மம்தாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சைக்கும் பிரசவத்திற்கும் சேர்த்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கொரோனா பாதிப்பால் மம்தா நேற்று உயிரிழந்தார். இதையடுத்து கணவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே மம்தாவின் உடலும் தகனம் செய்யப்பட்டது.

பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் குழந்தை அனாதையாகியுள்ளது. இதனிடையில் மம்தாவின் சகோதரர் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.