தமிழகத்தில் திருமணமான 7 மாதத்தில் இளைஞன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (21). விவசாயியான இவரது மனைவி அபிதா (20).
இவர்கள், 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அபிதா கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பி.ரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விக்னேஷ் ம.னவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் ம.னமுடைந்த விக்னேஷ், வீட்டின் அருகில் உள்ள ம.ரத்தில் வே.ட்டியால் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து, விக்னேஷ் உ.டலை மீ.ட்.டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவனின் குடும்பத்தார் பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் கல்பனா. 38 வயதான இவர் தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் 10 வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக கல்பனா தனியார் விடுதியில் தங்கி, தஞ்சாவூரில் உள்ள ஒரு வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது பேஸ்புக் மூலம்,ஆவடி அண்ணா நகரைச் சேர்ந்த 35 வயதான பிரசன்ன வெங்கடேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. பிரசன்ன வெங்கடேஷ் தனியார் கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
ஆரம்பத்தில் நண்பர்களாக பேசி வந்த இவர்கள், அதன் பின் அது காதலாக மாற, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன் படி இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையில் உள்ள,
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களில் பிரசன்ன வெங்கடேஷ் தன்னுடைய தாய், தந்தையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென்று ஒருநாள் பிரசன்ன வெங்கடேஷின் பெற்றோர் மற்றும் அவருடைய தங்கை ஆகியோர் கல்பனாவிடம், வேறொரு ஆண் வீட்டிற்கு வருவார் என்றும் அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அ.திர்ச்சியடைந்த அவர், உடனடியாக கணவர் வந்தவுடன் கூற, அவரும் மனைவியை பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு மறுத்தால், நாம் இருவரும் தனிமையில் இருக்கும் போது ரகசியமாக எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மி.ர.ட்டியுள்ளார்.
கல்பனா இதற்கு மறுத்ததால், அவரை அ.டி.த்.து உ.தை.த்ததுடன், அவரிடம் இருந்த 5 பவுன் நகை மற்றும் வங்கிக்கணக்கில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை ப.றி.த்.து மி.ர.ட்.டி வந்துள்ளனர்.
ஒரு வழியாக அவர்களிடம் இருந்து த.ப்.பி.ய கல்பனா, வெங்கடேஷ் வேலை செய்யும் தனியார் கம்பெனிக்கு சென்று விசாரித்தபோது அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதும், அந்த பெண்ணும் அதே நிறுவனத்தில் பகுதிநேரகமாக வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனால் மேலும் அ.திர்ச்சியடைந்த கல்பனா, அவரைப் பற்றி தொடர்ந்து விசாரித்த போது, அவர் இது போன்று பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
உடனடியாக கல்பனா இது குறித்து, ஆவடி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பிரசன்ன வெங்கடேசனின் தந்தை ரங்கசாமி, அம்மா விஜயா, சகோதரி புவனேஸ்வரி உட்பட 4 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.
அதன் பின் அவர்களை பெண் வ.ன்.கொ.டு.மை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.றையில் அடைத்தனர்.
இலங்கையில் வைத்தியசாலைகளில் தற்போது காணப்படும் நிலைமை குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளால் தங்களால் முடிந்தளவிற்கு நோயாளிகளை உள்வாங்கிவிட்டன என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வைத்தியசாலை கட்டில்களின் எண்ணிக்கையில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகள் சிகிச்சை வழங்ககூடிய எல்லையை கடந்துவிட்டதால் இந்தியாவின் நிலை உருவாகலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக தெளிவான திட்டங்களை நாங்கள் முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவிட் வைரசிற்கான ஆரம்பகட்ட அறிகுறிகளை கொண்டுள்ளவர்களிற்கு வீடுகளில் சிகிச்சை வழங்கலாம் என்பது குறித்து அறிவூட்டும் நிகழ்ச்சி திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீவிர கிசிச்சை பிரிவுகளின் கட்டில்களின் எண்ணிக்கை 100 கடந்து விட்டன. நிலைமை ஒரு எல்லைக்கு அப்பால் சென்றால் சுகாதார துறை கையாள முடியாத நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் நபர்களுக்கு எழுமாற்றாக மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவருடன் தொடர்புடைய 31 ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் எழுமாற்றாக ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று நேற்றையதினம் (19.05) உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து இன்றையதினம் (19.05.2021) அங்கு பணியாற்றும் சில ஊழியர்களுக்கு எழுமாற்றாக அண்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட சமயத்தில் மேலும் 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்கள் உடனடியாக கொரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
கடந்த சில நாட்களிக்குள் மாத்திரம் இராசேந்திரகுளம் ஆடைத்தொழிச்சாலையில் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தாண்டிக்குளம் – புதுக்குளம் பிரதான வீதியில் பிக்கப் வாகனமொன்று மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் இன்று (19.05.2021) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுக்குளம் ஊடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனம் சாஸ்திரிகூழாங்குளம் நாற்சந்தியடியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் வாகனத்தின் ஓர் பகுதி சேதடைந்துள்ளது.
விபத்துச்சம்பவம் தொடர்பில் அவ்விடத்திலிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்ட சமயத்தில் சில மக்கள் மாட்டுடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகவும் மற்றும் சில மக்கள் மோட்டார் சைக்கிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் செருப்பு , தொப்பி , மோட்டார் சைக்கிலின் சிறிய பகுதிகள் என்பன வீதியில் காணப்பட்ட சமயத்தில் அதனை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த சமயத்தில் அப்பகுதி இளைஞர் ஒருவர் அவற்றை எடுத்து பற்றைக்குள் வீசியதுடன் மாட்டுடன் மோதுண்டு தான் இவ்விபத்து இடம்பெற்றது என ஊடகவியலாளரை அச்சுறுத்தும் தொனியிலும் தெரிவித்தார்.
மர்மமான இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரை தொடர்பு கொண்டு வினவிய போதிலும் விபத்து தொடர்பான எவ்வித தகவல்களும் தமக்கு இது வரையில் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் முதன்முறையாக ஒரு நாளில் பெருமளவான கோவிட் தொற்றாளர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாலை ஆறு மணி வரையில் 3,051 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150,771 ஆக அதிகரிக்கின்றது. இலங்கையில் அண்மைக்காலமாக நாளாந்தம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மூவாயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இறுதியாக நேற்று மேலும் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் நேற்றுவரை இலங்கையில் 1015 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவதற்காக பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய கோவிட் நிலைமையை கருத்திற்கொண்டு மே 21ஆம் திகதி இரவு 11.59 மணி தொடக்கம் மே 31 இரவு 11.59 மணிவரையான காலப்பகுதியில் இந்த தடை அமுலில் இருக்கும். எனினும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் சரக்கு விமானங்களின் சேவை தொடரும் என்பதோடு, சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா, எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கிராமத்தில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று (19.05) முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா சுகாதாரப் பிரிவினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையும் இணைந்து இச் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர். வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் மரணமடைந்திருந்தார்.
அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் எல்லப்பர்மருதங்குளத்தைச் சேர்ந்த மூவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிராமத்தில் கொரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் முகமாக கிராமத்தின் கிராம அலுவலர் அலுவலகம், பொதுநோக்கு மண்டபம்,
தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களின் வீடுகள், மக்கள் கூடும் இடங்கள், வியாபார நிலையங்கள என்பவற்றுக்கு தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன், குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய வீடுகளும் இதன்போது தனிமைப்படுத்தப்பட்டதுடன், கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வவுனியா தெற்கு பிரதேச சபையால் கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
வவுனியாவில் பெண்ணின் தாலிக் கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் இருவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (19.05) காலை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மாடசாமி கோவிலடி குளக்கட்டு வீதியில் நேற்று (18.05) மாலை 3.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 58 வயதுடைய பெண் ஒருவரை பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு பிறிதொரு நபரின் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு வழிகாட்டலில்,
குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான (37348) திஸாநாயக்க, (61461) திலீப, (36099) விக்கிரமசூரிய, (60521) சதுரங்க, பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான (91792) தயாளன், (93786) தம்மிக்க, (47388) பிரியங்கர ஆகியோர் இணைந்த பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரையும், தோணிக்கல் பகுதியயைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன்,
அவர்களிடம் இருந்து இரண்டரைப் பவுண் தாலிக்கொடியும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காலியில் தந்தை உயிரிழந்து 9 நாட்களின் பின்னர் அவரது மகள் உயிரிழந்த சோகமான சம்பவம் பதிவாகி உள்ளது. நியுமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காலி மரண பரிசோதகர் வைத்தியர் பீ.ஜீ.என்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண் காலி தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்தவராகும். இந்த பெண்ணின் மரணத்திற்கு கோவிட் வைரஸ் நியுமோனியாவே காரணம் என தெரியவந்துள்ளதாக மரண பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இளம் பெண் எவ்வித நோயினால் பாதிக்கப்பட்டவர் அல்ல என தெரியவந்துள்ளது. அவர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். தந்தை கோவிட் தொற்றில் உயிரிழந்து 9 நாட்களில் அவரது மகளான குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 937 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 137 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 31 பேரும் ,வவுனியா மாவட்டத்தில் 7 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும் என 137 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 2 பேரும், ஒட்டுச்சுட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேரும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 31 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர். சிலர் வீதி சீரமைப்பு பணியில் ஈடுபடுபவர்கள். ஏனையோர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.
வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேரும், மாவட்ட பொது வைத்தியசாலையில் 2 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 8 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் குருநகரைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் இருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 36 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லியடி வெதுப்பகம் ஒன்றில் 33 பேரும் நெல்லியடி வர்த்தகர்கள் மூவரும் அடங்குகின்றனர்.
தெல்லிப்பழை அந்தோனிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்ட 17 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 15 பேருக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இறுதியாக மேலும் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் இதுவரை இலங்கையில் 1015 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றையதினம் 34 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இதுவே இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொவிட் மரண எண்ணிக்கையாகும்.
இதேவேளை, நேற்றையதினம் 2,478 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 147,680 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (18.04) இரவு வெளியாகின.
அதில் தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் மூவருக்கும் ஒமேக்கா ஆடைத்தொழிச்சாலையில் பணிபுரியும் சூடுவெந்தபுலவு சாந்தசோலை, கற்பகபுரம் பகுதிகளைச் சேர்ந்த மூவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மாமடு பகுதியில் ஒருவருக்கும்,
ஓயார்சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும் என 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து அங்கு பணியாற்றும் 31 ஊழியர்கள் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டதுடன் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் எழுமாற்றாக ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு நேற்றையதினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்றுள்ளான நபர்களை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருவதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு, புதுமணத் தம்பதியினர் அமைச்சரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த சம்பவம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜி. இவருக்கு ஹரிபாஸ்கர் என்ற மகன் இருக்கிறார். ஹரிபாஸ்கர் நகைகள் செய்யும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும், மணலூர்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சாருமதிக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
அதன் படி இவர்களின் திருமணம் மே 17-ஆம் திகதி முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் முழு முடக்கம் போடப்பட்டது.
இதன் காரணமாக சுபநிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், இவர்களின் திருமணம் இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது.
இதையடுத்து, திருமணம் முடிந்த கையோடு, இந்த தம்பதியினர் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தில் 51,000 ரூபாயை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர்.
அதன் படி, உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் வீட்டுக்குச் சென்று அவரிடம், இத்தம்பதியினர் அந்த பணத்தை வழங்கினர். இந்த நிதியை பெற்றுக்கொண்ட அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி அனுப்பிவைத்தனர்.
இந்தியாவில் கொரோனாவால் உ.யிரிழந்த கணவரின் சடலத்தை தனி ஆளாக சுடுகாட்டில் வைத்து மனைவி தகனம் செய்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது.
பீகாரை சேர்ந்தவர் ஹரிகாண்ட் ராய் (45). இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழன் அன்று உ.யிரிழந்தார். இதன் பின்னர் அவர் சடலம் மருத்துவமனையில் பிணவறையில் 18 மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராய்க்கு இறுதிச்சடங்கு நடத்த உடன் வந்து உதவுமாறு அவர் மனைவி தேவி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்டார். ஆனால் கொரோனா அ.ச்சத்தால் யாரும் உதவ முன் வரவில்லை.
பிறகு சமூக செயற்பாட்டாளர் கபீர் சிவா என்பவர் தேவியின் நிலையை அறிந்து உதவ முன் வந்தார். பின்னர் ராயின் சடலம் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு கொரோனா பாதிக்காதவாறு உடுத்தி கொள்ளும் பிபிடி உடையை தேவி உடுத்தி கொண்டார். இதன் பின்னர் உறவுகள் யாரும் இன்றி தனி ஆளாக கணவருக்கு இறுதிச்சடங்கு செய்து சிதைக்கு எரியூட்டி தகனம் செய்தார்.
சிதை எ.ரிந்து கொண்டிருந்ததை தொடர்ந்து க.த.றி அழுதபடி தேவி இருந்தார். உ.யிரிழந்த ராய்க்கு இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர் என தெரியவந்துள்ளது.