அக்கா கெஞ்சியதால் அவருடன் சேர்த்து 16 வயது தங்கையையும் திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் அக்கா மற்றும் தங்கையை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் லலிதா (16).

இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்க முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இந்த நிலையில் லலிதாவின் அக்கா சுப்ரியாவுக்கும் (21) உமாபதி என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் சுப்ரியா உமாபதியிடம் சென்று என் சகோதரி லலிதாவையும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கெஞ்சினார்.

ஏனெனில் லலிதா மாற்றுத்திறனாளி என்பதால் அவரை யாருமே மணக்க மாட்டார்கள் என சுப்ரியா பயந்தார். இதையடுத்து 7ஆம் திகதி உமாபதி, இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்.

இந்த சம்பவம் வெளியில் தெரியவந்த நிலையில் நேற்று முன் தினம் உமாபதி, அவர் பெற்றோர் மற்றும் மாமியார், மாமனாரை பொலிசாரை கைது செய்தனர்.

அதாவது 18 வயதுக்கு குறைவான பெண்ணை மணந்தது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து குழந்தை நல அதிகாரி ரமேஷ் கூறுகையில்,

மைனர் பெண்ணான லலிதா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இதன் பின்னர் அவர் விருப்பப்பட்டால் பெற்றோருடன் செல்லலாம், அப்படி இல்லையென்றால் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார் என கூறியுள்ளார்.

12 வருட திருமண வாழ்க்கை…சந்தேக புத்தியால் மனைவியை வேவு பார்த்த கணவன் : இறுதியில் நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவியின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.த கணவன் சம்பவத்தில் பல தி.டுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். 42 வயதான இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க உமா என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் ரமேஷ் கடை நடத்தி வரும் நிலையில் டெய்லரிங் படித்த உமா வீட்டிலேயே இருந்து தெரிந்த நபர்களுக்கு துணி தைத்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் உமாவின் வீட்டிற்கு அடிக்கடி வெளிநபர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். இதனால் ரமேஷ், தனது மனைவி மீது ச.ந்தேகம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக இருவருக்கும் அடிக்கடி பி.ரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் உமாவின் பெற்றோர் பி.ரச்சனைக்கு தீர்வு காண தங்களது கிராமமான ஈத்தங்காட்டில் ரமேஷ் பெயரில் இடம் வாங்கி வீடு ஒன்றை கட்டி குடியமர்த்தியுள்ளனர்.

அங்கு வந்தும், உமா தன்னுடைய டெய்லரிங் வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். தன்னிடம் துணி தைக்க வருபவர்களிடம் செல்போனில் பேசுவதும்,

வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விதவிதமான மாடல்களில் யு-டியூப் பில் பார்த்து அந்த மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைப்பதுமாக உமா இருந்துள்ளார்.

இதன் காரணமாக உமாவின் போன் அடிக்கடி பிசியாக இருந்துள்ளது. ரமேஷ் போன் செய்யும் போது எல்லாம், நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் வேறு நபரிடம் தொடர்பில் உள்ளார் என்று கூற, இதை வைத்து ரமேஷ் அடிக்கடி தன் மனைவியிடம் ச.ண்.டை போ.ட்டு வந்துள்ளார்.

இதனால் ஒரு கட்டத்தில் வீட்டிலேயே காவலாளியாக முடங்கிய ரமேஷ் மனைவியை வேவு பார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு பால் கொண்டு வருபவர்கள் உட்பட அனைவர் மீதும் சந்தேகமடைந்த ரமேஷ்,

தனது வீட்டை சுற்றி வீட்டை மறைக்கும் அளவிற்கு காம்பவுண்ட் சுவர் கட்டியதோடு மனைவியையும் வெளியே அனுப்பாமல் வீட்டு சிறையிலேயே வைத்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த உமா கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கணவனுக்கு தெரியாமல் தனது கு.ழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு சென்ற ரமேஷ் நல்லவர் போல் பேசி சமாளித்து மனைவியை அழைத்து வந்துள்ளார். ஆனால், வீட்டிற்கு வந்த பின், நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மனைவி தூங்கிய பின், தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல், ரமேஷ் உமாவை து.டி து.டி.க்.க க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.ள்ளார்.

தாயின் ச.த்ததைக் கேட்டு கு.ழந்தைகள் கண் விழிக்கவே உடனே, அவர் அங்கிருக்கும் இரு சக்கர வாகனத்தில் த.ப்.பி ஓ.டியுள்ளார். பொலிசார் இந்த சம்பவம் குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்கால் நினைவேந்தல்!!

முள்ளிவாய்கால் நினைவேந்தல்..

முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தோணிக்கல் பகுதியில் உணர்வு பூர்வமாக இன்று மாலை 6.30 இற்கு அனுஸ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்காலில் மரணித்த தனது உறவுகளுக்காவும், தமிழ் மக்களுக்காகவும் வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் செ.அரவிந்தன் என்ற முன்னாள் அரசியல் கைதியால் குறித்த நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்தவர்கள் நினைவாக பிரதான சுடர் ஏற்றப்பட்டு பின்னர் தீபச் சிட்டிகள், தீப்பந்தங்கள் ஏற்பட்டப்பட்டு மௌன வணக்கத்துடன் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த வீட்டின் முன் நேற்றில் (17.05) இருந்தே பொலிசார் கடமையில் நிறுத்தப்பட்டிருந்ததுடன், பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் மத்தியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பலரின் Whatsapp கணக்குகள் நீக்கப்படலாம் என அறிவிப்பு!!

Whatsapp..

Whatsapp சமூக வலைத்தள பயன்பாட்டின் தனியுரிமை கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத பயனார்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனாளர்கள் எதிர்வரும் வாரங்களில் தங்கள் கணக்குகளை இழக்க நேரிடும் என்று Whatsapp அறிவித்துள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் Whatsapp நிறுவனம் தமது நிபந்தனைகளை பயனாளர்களுக்கு முன்வைத்திருந்து. அந்த நிபந்தனைகளுக்கு இணங்காத இலங்கை பயனாளர்களின் கணக்குகளில் சில தடைகளை விதிப்பதற்கு எதிர்வரும் வாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என Whatsapp நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகில் 5 பில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்கள் Whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். Whatsapp நிறுவனத்தின் கொள்கைகளை ஏற்காதவர்கள் தங்கள் கணக்குகளுக்கு நுழைய முடியாத நிலைமை,

மற்றும் அழைப்புகளை ஏற்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் ஒரு சில நாட்களின் பின்னர் கணக்கு முழுமையாக செயலிழந்து விடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரானாவில் இருந்து மீண்ட இரட்டையர்கள் அடுத்தடுத்து மரணம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

உத்தரபிரதேச மாநிலத்தில்…

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இரட்டைச் சகோதரர்கள் உ.யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாள்தோறும் நிகழும் ஆயிரக்கணக்கான மரணங்கள் சக நோயாளிகளையும், பொதுமக்களையும் மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இரட்டை சகோதரர்களான ஜோஃப்ரெட் மற்றும் ரால்பிரட் கிரிகோரி கொரோனோ தொற்று காரணமாக சில மணி நேரங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1997ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்த இருவரும் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் பிடெக் முடித்தனர். பின்னர் ஜோஃப்ரெட் அக்ஸென்ச்சரிலும் மற்றும் ரால்பிரட் கிரிகோரி ஹூண்டாய் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தங்கள் 24வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா உறுதியாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மே 1 ஆம் தேதி மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு சகோதரர்கள் இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் என பரிசோதனை முடிவு வந்தது. ஆனால் அடுத்த மூன்று தினங்களில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததில் முதலில் ஜோஃப்ரெட் உ.யிரிழக்க அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரால்பிரட் தனது சகோதரர் குறித்து பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவசர சிகிச்சைக்காக ஜோஃப்ரெட் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ரால்பிரட் “நீங்கள் பொய் சொல்கிறீர்கள்” என கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் ரால்பிரட்டும் உ.யிரிழக்க குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

இரட்டைச் சகோதரர்கள் இருவரும் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரையும் கொரோனா அழைத்துச் சென்றது காலத்தின் கொ.டூரம் என அவர்களது தந்தை ரபேல் சோகத்துடன் தெரிவித்தார்.

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் : இருவர் பலத்த காயம்!!

விபத்து..

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை சூரியகந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து இன்று (18.05.2021) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்குச் சென்ற கார் ஒன்று நுவரெலியா – வலப்பனை பிரதான வீதியிலிருந்து வீதியை விட்டு விலகி,

குறித்த கார் சுமார் 100 பள்ளத்தில் உள்ள நுவரெலியா இராகலை பிரதான வீதிக்குப் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி காரில் இரண்டு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் இருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக இராகலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா : 31 பேர் தனிமைப்படுத்தலில்!!

கொரோனா..

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அங்கு பணியாற்றும் 31 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதனையடுத்து குறித்த நபருடன் தொடர்புடைய 31 ஊழியர்களை சுகாதார பிரிவினர் அவர்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதுடன் அவர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் தனியார் நிதி நிறுவனத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று : மூடப்பட்ட நிறுவனம்!!

கொரோனா..

வவுனியா முதலாம் குருக்குத்தெருவில் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து குறித்த நிறுவனம் சுகாதார பிரிவினரினரினால் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தபட்டுள்ளது.

இந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஒர் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதினையடுத்து ஏனைய ஊழியர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன்,

குறித்த தனியார் நிதி நிறுவனம் 14 நாட்கள் சுகாதார பிரிவினரினரினால் தனிமைப்படுத்தப்பட்டது. மற்றும் அங்கு பணியாற்றிய ஏனைய ஊழியர்களும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நிதிநிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் சுயதனிமைப்படுத்தலை மீறி இன்றையதினம் (18.05) கடமைக்கு சென்றமையடுத்து சுகாதாரப் பிரிவினர் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் அவரை உடனடியான வீட்டில் சுயதனிமைப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இலங்கையில் எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் அரச விடுமுறை!!

அரச விடுமுறை..

அரச விடுமுறை நாட்களாக இரண்டு நாட்களை அறிவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : தீவிர கண்காணிப்பில் பொலிசார்!!

தீவிர கண்காணிப்பில் பொலிசார்..

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போ.ரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இ.ன.ப்.ப.டு.கொ.லை.யி.ன் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (18.05.2021) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இறுதிக்கட்ட போ.ரின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொ.ல்.ல.ப்.ப.ட்.டி.ரு.ந்.த நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பா.துகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வவுனியாவில் சுழற்சி முறையில் போ.ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா.ணாமல் ஆ.க்கப்பட்டோரின் உறவுகளின் போ.ராட்ட இடம் , நகரசபை பொங்கு தமிழ் நினைவுத் தூபி , குருமன்காட்டு சந்தி,

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டிய பகுதிகள் என பரவலாக பொலிசாரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதுடன் அப் பகுதிகளுக்கு வந்து செல்வோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் உலர் உணவுப் பொதிகள்!!

உலர் உணவுப் பொதிகள்…

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 15 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியாக உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

அரசாங்கத்தால் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான இரண்டு பொதிகள் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட பொதிகளை பிரதேச செயலகத்தின் சிறுவர் பெண்கள் பிரிவைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைத்தனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெளிக்குளம், தச்சங்குளம், மரக்காரம்பளை, நெளுக்குளம், கந்தபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கே அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய குறித்த பொதிகள் வழங்கப்பட்டிருந்தன.

வவுனியாவில் அடையாள அட்டை சோதனையில் பொலிஸார் : மீறியவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!!

அடையாள அட்டை பரிசோதனை..

நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டு வேலைக்குச் செல்வோர் தவிர , மற்றவர்கள் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியுமென அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடுவ வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய தேசிய அடையாள அட்டை நடைமுறையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா நகரினுள் உள்நுழையும் பகுதிகளான புதிய பேரூந்து நிலையம் முன்பாக, குருமன்காடு சந்தி போன்ற வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு அடையாள அட்டை பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டை நடைமுறையின் படி பயணிக்க கூடியவர்கள் மட்டும் பொலிஸாரால் தொடர்ந்து பயணிக்க அனுமதி வழங்கி வருவதுடன் ஏனையோர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.

வவுனியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (17.05) இரவு வெளியாகின.

அதில், வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், காக்கையன்குளம் பகுதியில் ஒருவருக்கும், சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், நித்தியநகர் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் இருவருக்கும் என மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியாவில் உள்ள அரச வங்கி ஒன்றின் பிராந்திய முகாமையாளருக்கும் பருத்துறையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அடுத்து வரும் 3 வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை : இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

அடுத்து வரும் 3 வாரங்கள்…

இலங்கையில் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என்று கோவிட்த் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனவே, நாட்டு மக்கள் இந்தக் காலப்பகுதியில் தேவைப்பட்டால் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நாட்டில் புதிய கோவிட் வைரஸ் தொற்று வீரியமாகப் பரவி வரும் நிலையில் சுகாதாரப் பிரிவினர் மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகள் இல்லாத சந்தர்ப்பங்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

பயணக் கட்டுப்பாட்டு நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறைக்கு அமைய குறைந்தபட்ச ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும்.

நாட்டில் கோவிட்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்” – என்றார்.

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

பாடசாலைகள்..

பாடசாலைகள் விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது, மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களு்ககு தற்போது கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாகாணங்களிலுள்ள ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இலங்கையில் நாளாந்தம் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் சிலையில்,எதிர்வரும் வாரம் நாடளாவிய ரீதியில் இரண்டு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 மணி முதல் மே 28 வௌ்ளி அதிகாலை 4 மணி வரை மற்றுமொரு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் பொலிசார் முரண்பாடு!!

ஊடகவியலாளர்களுடன் பொலிசார் முரண்பாடு..

வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்ப்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த தமிழ் மக்களிற்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற்றது.

அதனை செய்தியாக்கச் சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் முரண்பட்டிருந்தனர்.

இதன்போது அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை பொலிசாருக்கு காண்பித்த நிலையில் அதனை தவிர்த்துவிட்டு தேசிய அடையாள அட்டையை காண்பிக்குமாறு தெரிவித்தனர்.

பின்னர் தேசிய அடையாள அட்டையின் பிரகாரமே வெளியில் வரமுடியும்என்றும் அனைவருக்கும் ஒரு நடுமுறையே என்றும் தெரிவித்தனர்.

எனினும் இலங்கை பொலிஸ் திணைக்களம், மற்றும் தகவல்திணைக்களம் ஆகியன ஊடகவியாலளர்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நேரங்களிலும் செயதியினை சேகரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.