வவுனியாவில் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் பொலிசார் முரண்பாடு!!

ஊடகவியலாளர்களுடன் பொலிசார் முரண்பாடு..

வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்ப்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த தமிழ் மக்களிற்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற்றது.

அதனை செய்தியாக்கச் சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் முரண்பட்டிருந்தனர்.

இதன்போது அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை பொலிசாருக்கு காண்பித்த நிலையில் அதனை தவிர்த்துவிட்டு தேசிய அடையாள அட்டையை காண்பிக்குமாறு தெரிவித்தனர்.

பின்னர் தேசிய அடையாள அட்டையின் பிரகாரமே வெளியில் வரமுடியும்என்றும் அனைவருக்கும் ஒரு நடுமுறையே என்றும் தெரிவித்தனர்.

எனினும் இலங்கை பொலிஸ் திணைக்களம், மற்றும் தகவல்திணைக்களம் ஆகியன ஊடகவியாலளர்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நேரங்களிலும் செயதியினை சேகரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வு!!

ஆத்மசாந்தி பிரார்த்தனை..

வவுனியாவில் முள்ளிவாய்காலில் மரணித்த மக்களின் நினைவாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது. வவுனியா, குட்செட் கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் தலைமையில் விசேட ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் இன்று (18.05) காலை இடம்பெற்றன.

தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இவ் வழிபாடுகளில் சமூக ஆர்வலர்கள், உறவுகளை இழந்தவர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்தித்தனர்.

இதேவேளை, பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றபோது ஆலயத்தின் வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 322 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் 322 உட்பட வட மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 976 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 117 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 66 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேரும், வவுனியா மாவட்டத்தில் 6 பேரும், மன்னார் மாவட்டத்தில் 5 பேரும் என 117 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 61 பேரும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் 2 பேரும், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 3 பேரும் என 66 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 5 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரம் வைத்தியசாலையில் 2 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் 5 பேருக்கும், செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 7 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் மூவருக்கும், சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 பேருக்கும், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய், நல்லூர் மற்றும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் 960 பேரிடம் நேற்று முன்னெடுக்கப்பட்ட உடனடி அன்டிஜன் பரிசோதனையில் 261 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!!

நாட்டு மக்களுக்கு..

தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அன்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெசாக் பண்டிகை முடியும் வரை பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பொதுமக்களின் ஆதரவு கோவிட் பரவல் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்த்துக்கொள்ள உதவியாக அமையும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் பொதுமக்கள் வீட்டிலிருந்து ஒத்துழைத்ததைப் போன்று, அடுத்த 10 நாட்களும் பயணங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று 19 கொரோனா மரணங்கள் : 2,456 பேர் தொற்றாளர்களாக அடையாளம்!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 19 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நேற்று மொத்தமாக 2,456 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 145, 202 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, 119,629 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 24,611 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 1,315,257 பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 269,512 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வட மாகாணத்தில் 378 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா…

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை (மே 17) கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை இதுவேயாகும்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 976 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 117 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 66 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேரும் வவுனியா மாவட்டத்தில் 6 பேரும் மன்னார் மாவட்டத்தில் 5 பேரும் என 117 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 61 பேரும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் 2 பேரும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 3 பேரும் என 66 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 5 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தரும்புரம் வைத்தியசாலையில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் 5 பேருக்கும் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் மூவருக்கும் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 பேருக்கும், சாவாகச்சரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய், நல்லூர் மற்றும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 960 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட உடனடி அன்டிஜன் பரிசோதனையில் 261 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

-வீரகேசரி-

இலங்கையில் முழுவதும் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள்!!

பயணக் கட்டுப்பாடுகள்…

இலங்கையில் நாடாளவிய ரீதியில் இரண்டு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 மணி முதல் மே 28 வௌ்ளி அதிகாலை 4 மணி வரை மற்றுமொரு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

எனினும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்திற்கு எவ்வித தடையும் இல்லை என இராணுவத் தளபதி குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (17.05) பிற்பகல் வெளியாகின.

அதில் தாலிக்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சகாயமாதாபுரம் பகுதியைவச் சேர்ந்த ஒருவருக்கும், எல்லப்பர் மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ப்ளீஸ்… என்னையும், அக்காவையும் சேர்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க : மாப்பிள்ளையிடம் கெஞ்சிய தங்கை!!

இந்தியாவில்..

இந்தியாவில் இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், அதன் பின்னணி காரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இவருக்கு லலிதா என்ற தங்கை உள்ளார்.

இந்நிலையில், சுப்ரியா மாற்றுத்திறனாளி என்பதால், அவரை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இது போன்ற சூழ்நிலையில், லலிதாவுக்கும், உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டது.

இதையடுத்து இவர்களின் திருமணம் நேற்று நடக்க இருந்தது. அப்போது லலிதா, எனது அக்கா மாற்று திறனாளி என்பதால் யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை.

இதனால் நீங்களே என்னையும், எனது அக்காவையும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால் இதற்கு உமாபதி மறுத்தார். ஆனால் எனது அக்காவையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டால் தான் உங்களை திருமணம் செய்வேன் என்று,

உமாபதியிடம், லலிதா திட்டவட்டமாக கூறியதால், லலிதா மீது கொண்ட காதலால், இதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி, தனது குடும்பத்தினரிடமும் பேசி சுப்ரியா, லலிதாவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தார்.

அதன் பின் நேற்று ஒரே மேடையில் உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதாவுக்கு திருமணம் நடந்தது. இவர்களின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

திருமணமான 2 மாதத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த கதி : கண்ணீரில் குடும்பம்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் மனைவி உ.யிரிழந்த துக்கம் தாங்காமல் கணவரும் தனது உ.யிரை மா.ய்த்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் அடுத்த சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(28).

இவருக்கும் நந்தினி (23) என்ற பெண்ணிற்கும் கடந்த மார்ச் மாதம் 23ம் திகதி அன்று திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 11ம் திகதி அன்று நந்தினிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் முத்து கிருஷ்ணன்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார், இதையடுத்து இறுதிச்சடங்கு முடியும் வரை மனைவியை உற்று பார்த்து அழுதபடி இருந்தார் முத்து கிருஷ்ணன்.

பின்னர் நந்தினி இ.றந்த துக்கத்தில் யாரிடமும் பேசாமல், சரிவர சாப்பிடாமல் இருந்த முத்துகிருஷ்ணன், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூ.ச்சி ம.ருந்தை கு.டித்துவிட்டு ம.யங்கி கி.டந்தார்.

வீட்டினர் வந்து பார்த்துவிட்டு, ம.யங்கி கி.டந்த முத்துகிருஷ்ணனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனக்கு தூக்கிச்சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மாலை முத்துகிருஷ்ணன் உ.யிரிழந்தார்.

திருமணமாகி 2 மாதத்திலேயே புதுமணத்தம்பதிகள் அடுத்தடுத்து உ.யிரிழந்தது அவர்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களை சோ.கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் இந்தியப் பெண்!!

அரோரா அகங்க்ஷா..

ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான அரோரா அகங்க்ஷா போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஐ.நா-வின் பொதுச்செயலாளராக இருக்கும் அன்டோனியோ குட்டெர்ஸ், அரோராவுக்கு எதிராக மீண்டும் போட்டியிடுகின்றார்.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பிறந்த அரோரா 6 வயதில் தன் அம்மாவின் வேலை காரணமாக சவுதி சென்றுள்ளார். பின் இந்தியா திரும்பி பள்ளிப் படிப்பை இங்கு முடித்தவர், பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து கனடாவில் வேலை செய்துவந்தவர் 2016-ம் ஆண்டு முதல் ஐ.நா-வில் பணிபுரிகின்றார். பல நாடுகளில் வாழ்ந்துள்ள அரோரா தன்னையும் ஓர் அகதியாகவே கருதுகிறார்.

அகதிகளுக்கான சேவையை ஐ.நா சரிவர செய்யவில்லை எனக் கூறும் அரோரா, தான் வெற்றிபெற்றால் அகதிகளின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கியதாகவும்,அந்த விபத்தில் தான் உயிரிழந்திருந்தால் தன் வாழ்க்கை ஏதும் அற்றதாய் இருந்திருக்கும் என உணர்ந்தமையினால், தான் வாழந்ததற்காக உலகில் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவெடுத்ததாகவும் அரோரா அகங்க்ஷா கூறியுள்ளார்.

மேலும், ஐ.நா-வின் செயல்பாடுகள் மோசமானதாக உள்ளதாக விமர்சித்த அரோரா, ஐ.நா-வின் வருமானம் 56 பில்லியன் டாலர்கள் எனில், ஒரு டாலரில் 29 சென்ட் மட்டுமே சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் தீவிரம் அடையும் கொரோனா : சுகாதார ஊழியர்கள் களைப்படைந்துள்ளதால் சிக்கல்!!

கொரோனா..

கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைத்தியசாலை கட்டமைப்புகள் அதன் திறனை கடந்துள்ளமையினால் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகள் மற்றும் கட்டில்களை அதிகரிப்பதனால் மாத்திரம் நெருக்கடிக்கு தீர்வு கிடைத்து விடாதென அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார திறன் என்பது கட்டில்கள் மாத்திரம் அல்ல என்பதனை தெளிவுபடுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுக்கு கோவிட் தொற்றாளர்களுக்காக ஒரு லட்சம் கட்டில்கள் இருந்தாலும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் போதுமான அளவு இல்லை என்றால் அதில் பயனில்லை.

தற்போது வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். உறக்கமின்றி பணியாற்றுகின்றார்கள். அவர்கள் சோர்வடைந்துள்ளனர். பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கொரோனா தொற்றால் மனைவி இருந்த மூன்று நாட்களில் இறந்து போன கணவர்!!

கொரோனா…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மனைவி இறந்து மூன்று நாட்களின் பின்னர் நேற்றிரவு கணவனும் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர் கதிர்வேல் ஜே. கணேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான நோய் அறிகுறிகளுடன் கடந்த 13 ஆம் திகதி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். பொகவந்தலாவ சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான பார்வதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்த பெண்ணின் உடல் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவருக்கு கோவிட் தொற்றி இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் இரவே 76 வயதான எஸ்.வடிவேல் என்ற குறித்த பெண்ணின் கணவரும் உயிரிழந்துள்ளார்.

இவருக்கும் பீ.சீ.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் டிக்கோயா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இளம் மனைவியை அ.டித்து கொ.லை செ.ய்த கணவன்!!

கொழும்பில்..

கொழும்பு, மஹரகம பிரதேசத்தில் கணவர் ஒருவர் ம.னைவியை அ.டி.த்.து கொ.லை செ.ய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப பி.ரச்சினை நீண்ட தூரம் சென்றமையினால் இ.ரு.ம்.பு க.ம்.பி.யா.ல் கணவன், மனைவியை அ.டி.த்.து கொ.லை செ.ய்.து.ள்ளார்.

மஹரகம , பமுனுவ வீதி பிரதேசத்தில் நேற்று இந்த கொ.லை ச.ம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொ.லை செ.ய்.யப்பட்டவர் 33 வயதுடைய பெண் ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ச.ந்தேகநபரான கணவர் பொலிஸாரால் கை.து செய்யப்பட்டுள்ளார். உ.யிரிழந்த பெண்ணின் ச.டலம் தற்போது வரையில் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் பலி!!

அருண்ராஜா காமராஜ்…

பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் மையப்படுத்தி வெளியான இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இப்படத்தின் இயக்குநர் அருண்ராஜா ராஜா ராணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அத்துதான் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் நெருப்புடா பாடலையும் எழுதி பாடியுள்ளார்.

தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்ட்டிகிள் 15 என்ற பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். இந்நிலையில் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு உ.யிரிழந்துள்ளார். சிந்துஜாவின் மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று முதல் 31ஆம் திகதி வரையில நடைமுறையில் இருக்கும் புதிய விதிமுறைகள்!!

புதிய விதிமுறைகள்..

நாட்டில் அமுலில் இருந்த அதிகாரபூர்வமற்ற ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்மாதம் 31ஆம் திகதி வரையில் புதிய பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருக்குமென,

பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள்காட்டி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பயணத்தடை கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் அத்தியாவசியக் காரணமின்றி எவரும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாது என்றும்,

அத்தியாவசியக் காரணத்திற்காக வெளியே செல்வதாயினும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரமே வெளியே செல்ல முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.