வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறிய இருவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

சாந்தசோலைப் பகுதியில்…

வவுனியா சாந்தசோலைப் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறிய இருவருக்கு எதிராக பொலிசாரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, சாந்தசோலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சனிக்கிழமை (15.05) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இதன்போது தொற்றுக்குள்ளான நபருடன் விருந்துபாசரத்தில் கலந்து கொண்டதாக சாந்தசோலை பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அவ் வீட்டில் இருந்து வெளியில் நடமாடியுள்ளனர்.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று (17.05) காலை வவுனியா நகரப்பகுதிக்கும், ஆண் ஒருவர் தனது விவசாய நிலப் பகுதிக்கும் சென்றுள்ளனர். இதனை அவதானித்த சிலர் வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற இருவரையும் மீள வீட்டுக்கு வரவழைத்தவுடன், கொவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன்,

சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காணாமல்போயுள்ள 15 வயது சிறுமி : மக்களிடம் உதவி கோரும் உறவினர்கள்!!

கிறிஸ்துராசா மிதுசிகா…

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது. கிறிஸ்துராசா மிதுசிகா என்ற சிறுமியையே கடந்த 35 நாட்களாக காணவில்லை என முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முள்ளியவளை பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் விபரம் தெரிந்தவர்கள் 0766758057 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு உறவினர்கள் மக்களிடம் கோரியுள்ளனர்.

வவுனியாவில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா..

வவுனியாவில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,

மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (16.05) இரவு வெளியாகின.

அதில் மாமடு பகுதியைச் சேர்ந்த 7 பேருக்கும், யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா, பம்பைமடுவில் உள்ள வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் உள்ள 2 பேருக்கும்,

கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் கொரோனா பரவல் உச்சமடையலாம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொரோனா..

எதிர்வரும் ஜூன் மாதத்தில் கோவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவல் நிலைமை அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகபேறு மற்றும் பெண்ணோவியல் துறையின் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொற்று நோயின் தீர்மானகரமான சந்தர்ப்பத்தை நாடு என்ற வகையில் எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது தொற்று நோயின் தீர்மானகரமான சந்தர்ப்பத்திற்கு நாடு வந்துள்ளது. நாளுக்கு நாள் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இலங்கையில் தற்போது காணப்படுவது தொற்று நோய் பரவலின் உச்ச நிலையல்ல. ஜூன் மாதமளவில் தொற்று நோய் பரவல் உச்சமடையலாம் என நாங்கள் நினைக்கின்றோம். தற்போது எமது பாதுகாப்பை அதிகரித்து கொள்ள வேண்டும் எனவும் ஹேமந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

11 வயதான மகளின் சடலத்தை தோளில் தூக்கிக் கொண்டு மயானத்திற்கு ஓடிய தந்தை!!

இந்தியாவில்..

இந்தியாவில் உ.யிரிழந்த 11 வயது மகளின் ச.டலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற வீடியோ வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜலந்தரில் 11 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக ஜலந்தரில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிறகு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் அவரை அம்ரிஸ்டரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிறுமிக்கு அங்குள்ள அறுவைசிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் சி.றுமியின் உ.டல் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் சி.றுமியின் உ.டல் முழுவதும் பி.ரேத ப.ரிசோதனை செய்யப்பட்டு மூடி இருந்த நிலையில் உறவினர்கள், மக்கள் சி.றுமிக்கு தொற்றுநோய் பாதிக்கப்பட்டு இ.றந்ததாக எண்ணி ப.யத்தில் யாரும் இறுதி சடங்கிற்கு கூட வரவில்லை.

இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மனம் நொந்துபோன தந்தை இறுதியில் தன்னுடைய 11 வயது மகளை தன்னுடைய தோளில் சுமந்தபடியே இடுகாட்டிற்கு வரை தூக்கிச் சென்று தன்னுடைய மக்களுக்கான இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது தொடர்ந்து காவல்துறையினர் வி.சாரணை மேற்கொண்டனர். வி.சாரணையில் பதினொரு வயது சிறுமி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை என காவல் துணை ஆணையர் கன்ஷ்யம் தோரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஏற்படவுள்ள பேரழிவு : ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்!!

ஜனாதிபதிக்கு…

கோவிட்டை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் முடக்கலை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் சக்திவாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவு முழுவதும் மக்கள் நடமாட்டத்தை உடனடியாக கட்டுப்படுத்துவதன் மூலம் பின்னர் ஊரடங்கு உத்தரவுகளைத் தவிர்க்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வரவிருக்கும் பேரழிவு குறித்து கவலை வெளியிட்டுள்ள நான்கு முதன்மை மருத்துவக் குழுக்கள், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரவிருக்கும் பேரழிவால் தூண்டப்பட்டால் சுகாதாரப் பணியாளர்களின் சோர்வு கணிசமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருக்கும் என்று எச்சரித்துள்ளன.

கோவிட் இறப்புகள் அளவில்லாத அளவை எட்டக்கூடும் என்றும், ஒரு கடுமையான தேசிய பேரழிவு என்பது எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இந்த மருத்துவக்குழுக்கள் எச்சரித்துள்ளன.

இந்த கூட்டுக் கடிதத்தில் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர்கள் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். இதன் பிரதிகள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நெருக்கடியைச் சமாளிப்பது குறித்து இந்தக் கடிதத்தில் ஜனாதிபதிக்கு மருத்துவ சங்கங்கள் பரிந்துரைகளையும் செய்துள்ளன. அதிகாரிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முடக்கல்கள் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதும் இதில் ஒரு பரிந்துரையாகும்.

அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய சேவை துறைகள், பொருளாதார மையங்களால் வழங்கப்படும் சேவைகள், சேவைகளை பராமரித்தல் அறிகுறியற்ற நிகழ்வுகளின் வீட்டு நிர்வாகத்துடன் வீட்டில் குடும்பங்களை தனிமைப்படுத்துவதற்கான அங்கீகாரம்,

பி.சி.ஆர் சோதனை மூலம் கோவிட்டை இலங்கைதீவு முழுவதும் ஆய்வக சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் போதுமான அளவுகளில் பரவலாக தடுப்பூசி போடுவது என்பன ஏனைய பரிந்துரைகளாகும்.

இந்த மோசமான வைரஸைக் கட்டுப்படுத்துவதில் தமது ஒருங்கிணைந்த முயற்சிகள் எப்போதும் அர்ப்பணிக்கப்படுகின்றன என்பதை தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள், செயற்படாத போது அழிவுகளை தடுக்க ஊரடங்கு உட்பட்ட கடுமையபான சட்டங்களை அமுல்செய்ய அவசியம் ஏற்படும் விடும் என்றும் குறிப்பிட்டுள்ளன.

அரசாங்கம் இப்போது செயல்படவில்லை என்றால், அது எதிர்காலத்தில் பொது மக்களுக்கு இன்னும் கடுமையான மற்றும் நீடித்த கஷ்டங்களை ஏற்படுத்தும். கோவிட் நோயாளிகளின் அனைத்து சுகாதாரத்துறை படுக்கைகள் மற்றும் சுகாதார வசதிகளின் பயன்பாடு விரைவாக அதிகரித்துள்ளன.

அதே நேரத்தில் ஒக்ஸிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

குறைந்தது 60 சதவிகித மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் வரை அதிகமான மருத்துவமனைகளுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கோவிட்டிற்கான எதிரான செயற்பாடுகள், பொருளாதார தாக்கங்களையும் கொண்டுள்ளன.

மேலும் கோவிட்டை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாவிட்டால், மேலும் அதிக விலை கொடுக்க வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர்களின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

நாட்டை முடக்கினால் ஏற்படும் விபரீதம் : அமைச்சர் பந்துல குணவர்தன!!

நாட்டை முடக்கினால்..

நாட்டை முற்றாக முடக்குமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தாலும் சாதாரண மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை கவனத்தில் கொண்டு அரசாங்கம் அந்த தீர்மானத்திற்கு செல்லவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் நாட்டை முடக்கியதால் எந்தளவுக்கு கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை மக்களே செயற்பாட்டு ரீதியாக அனுபவிக்க நேர்ந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு நேற்று விஜயம் செய்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டை முற்றாக முடக்குமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டம் செய்து, அரசாங்கத்தின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன.

மூன்று நாட்கள் முடக்கியமை மற்றும் பகுதி பகுதிகளாக முடக்கப்படுவதன் மூலம் ஏற்படும் கஷ்டங்கள் தற்போது மக்களுக்கு தெளிவாகியுள்ளது. விவசாயிகள், சிறிய மற்றும் நடுதர தொழில் முனைவோர்கள் ஆகியோரை எடுத்துக்கொண்டாலும் நாட்டைமுடக்கும் போது சாதாரண மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகுவார்கள்.

அரசாங்கம் என்ற வகையில் மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாவதை தடுக்க அத்தியவசிய பொருட்களை நாடு முழுவதும் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

கொரோனா தொற்றால் 8 மாத கர்ப்பிணித் தாய் மரணம்!!

கர்ப்பிணித் தாய்..

திஸ்ஸமஹாராம யாயகொட பிரதேசத்தில் வசித்து வந்த கர்ப்பிணி தாய் ஒருவர் கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். 35 வயதான கர்ப்பிணி தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் இறக்கும் போது அவர் 8 மாத கர்ப்பிணி என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி மகரகமவில் நடைபெற்ற உறவினர் ஒருவர் நடத்திய விருந்தில் இந்த கர்ப்பணி பெண் உட்பட குடும்பத்தை சேர்ந்த 12 பேர் கலந்துக்கொண்டுள்ளனர். இதன் பின்னர் விருந்தில் கலந்துக்கொண்ட மகரகமவை சேர்ந்த 17 பேருக்கு கோவட் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 5 ஆம் திகதி குறித்த கர்ப்பிணி பெண்ணுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதுடன் அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த இந்த கர்ப்பிணி பெண் துரதிஷ்டவசமாக, வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

வைத்தியர்கள் எச்சரிக்கை..

மழையுடன் கூடிய காலநிலையுடன் கொரோனா வைரஸ் நோய் பரவல் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சாதாரணமாக சுவாச நோய்கள் அதிகரிக்கலாம் எனவும் இதனால், மக்கள் சன நடமாட்டம் உள்ள இடங்களுக்கு செல்லாது இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ள பெருக்கு காரணமாக வயிற்றோட்டம், டெங்கு உட்பட வேறு நோய்கள் பரவும் ஆபத்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சுத்தமான குடிநீரை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ள நிலைமை காரணமாக கோவிட்-19 வைரஸ் பரவலும் அதிகரிக்க கூடும். வெள்ளம் காரணமாக இடம்பெயரும் மக்களை ஒன்றுக் கூடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மழையுடன் கூடிய காலநிலையுடன் நோய்கள் பரவினால், சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைகளிலும் இடப்பற்றாக்குறை ஏற்படக் கூடும். இப்படியான நிலைமை ஏற்படாது இருப்பதை தவிர்க்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் நவீன் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வளாக மாணவர்கள் உட்பட மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா வளாக மாணவர்கள் உட்பட மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (16.05) மாலை வெளியாகின.

அதில், யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா பம்பைமடுவில் உள்ள வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் உள்ள 2 பேருக்கும், நெடுங்கேணியில் உள்ள ஒருவருக்கும் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா புளியங்குளம் – புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் 3வது நாளாகவும் உ.யிருக்கு போ.ராடும் யானை!!

துவிளாங்குளம் காட்டுப் பகுதியில்..

வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் மூன்றாவது நாளாகவும் யானை ஒன்று உ.யிருக்கு போ.ராடி வருகின்றது.

வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டு.க் கா.யங்களுடன் யானை ஒன்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் க.ண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் வனவிலங்கு துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற வனவிலங்கு துறையினர், கால்நடை வைத்திய அதிகாரிகள் யானைக்கு சிகிச்சையளித்தனர்.

பௌத்த பிக்குளால் யானை குணமடைய வேண்டி பிரித் ஓதுதலும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மூன்று நாட்கள் கடந்தும் யானை எழுந்து செல்ல முடியாது அப் பகுதியில்,

தொடர்ந்தும் உ.யிருக்குப் போ.ராடி வருகின்றது. தந்தங்களையுடைய குறித்த யானை சுமார் 12 வயது மதிக்கத்தக்கது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் ரா.க்கெட் தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன கேரளப் பெ ண் : விமானத்தில் பறந்துவந்த உ.ட.ல்!!

சவுமியா சந்தோஷ்..

இஸ்ரேல் மீதான ரா.க்.கெ.ட் தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன இந்திய பெ.ண் சவுமியாவின் உ.ட.ல் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்த நிலையில் இ.றுதிச் ச.டங்கு இன்று நடைபெறுகிறது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த சில நாட்களாக க.டு.ம் மோ.த.ல் ந.டைபெற்று வருகிறது.
இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் ப.லி.யா.கி உ.ள்ளனர்.

ஹாமாஸ் அமைப்பின் ரா.க்.கெ.ட் வீ.ச்.சு தா.க்.கு.த.லி.ல் இஸ்ரேல் ஜெருசலேம் பகுதியில் மூதாட்டி ஒருவரை பராமரித்து வந்த கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த நர்ஸ் சவுமியா சந்தோஷ் ப.லி.யா.னா.ர்.

அவரது உ.ட.ல் மருத்துவ ப.ரிசோதனைகளுக்கு பிறகு டெல்அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒ.ப்படைக்கப்பட்டது. இதையடுத்து தூதரகத்தின் உதவியால் நேற்று காலை அவர் உ.ட.ல் டெல்லி வந்தது.

மத்திய அமைச்சர், இஸ்ரேல் தூதர் ஆகியோர் அ.ஞ்சலிக்குப் பின் அவரது உ.ட.ல் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் இடுக்கியில் இன்று சவுமியாவின் இ றுதிச் ச.டங்குகள் நிறைவேற்றப்பட உள்ளன.

தொடர்ந்து வாந்தி எடுத்த திருமணமான இளம்பெண் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான இளம்தம்பதி ம.ர்மமான சூழ்நிலையில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஜலத்தரை சேர்ந்தவர் சாகர் (26). இவர் மனைவி ராதா (24).

தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் கணவர் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பி.ரச்சனையால் ராதா தனது பெற்றோர் வீட்டில் சில மாதங்களாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சாகரும் மாமியார் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென வீட்டில் ம.யங்கி வி.ழுந்த சாகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் நேற்று (சனிக்கிழமை) காலையில் வ.யிற்று வ.லியால் து.டித்த ராதா தொடர்ந்து வாந்தி எடுத்தார். இதனால் குடும்பத்தார் ப.தறிய நிலையில் பின்பு அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இருவருமே வி.ஷ.ம் கு.டித்திருந்தனர் என பின்பு தெரியவந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் இளம் தம்பதி சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்தனர், இதனால் இரு குடும்பத்தாரும் அ.திர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியின் ம.ரணம் த.ற்.கொ.லை தானா? மற்றும் அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

தொலைபேசியில் பெண்ணிடம் முத்தம் கேட்டு சில்மிஷம் செய்த நபருக்கு நேர்ந்த கதி!!

இந்தியாவில்..

இந்தியாவில் ராங் கால் மூலம் போன் செய்த பெண்ணை தொடர்ந்து தொ.ந்தரவு செய்து முத்தம் கேட்ட நபருக்கு நேர்ந்த கதியின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய தொலைப்பேசி எண்ணுக்கு சில தினங்களுக்கு பெண் செய்து பேசியுள்ளார்.

அப்போது அது ராங் கால் என்றவுடன் உடனே அப்பெண், தெரியாமல் பண்ணிவிட்டேன் என்று தொலைப்பேசியை வைத்துள்ளார். இருப்பினும், ரமேஷ் அந்த பெண்ணின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஆனால், அப்பெண்ணோ தொடர்ந்து போனை நிராகரித்த போதிலும், மகேஷ் உன்னுடைய குரல் அழகாக இருக்கிறது, நீ எப்படி இருக்கிறாய் என்பது போல் பல வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.

ஒரு கட்டத்தில், அந்த பெண்ணிடம் நீ ஒரே ஒரு முறை முத்தம் மட்டும் கொடு, நான் பின்னர் உன்னை தொ.ந்தரவு செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். உடனே அப்பென் சரி, நீங்கள் நான் சொல்லும் லாட்ஜுக்கு வரும் படி கூறியுள்ளார்.

இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் சென்ற மகேஷுக்கு அங்கு அ.திர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், பெண் வரச்சொன்ன குறிப்பிட்ட லாட்ஜில் அந்த பெண்ணின் அண்ணன், உள்ளூர் ரவுடிகள் 5 பேருடன் காத்திருக்க,

மகேஷை அதன் பின் அ.டி.த்.து துவைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வெளியானதால், அந்த ஐந்து பேரையும் பொலிசார் தீ.விரமாக தே.டி வருகின்றனர்.

இந்தியாவின் நிலை இலங்கையிலும் உருவாகலாம் : பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!!

கொரோனா..

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றாவிட்டால் இந்தியா போன்றதொரு நிலைமை உருவாகுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடுமுழுவதும் முடக்கல் நிலை காணப்படும் காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டுமென்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவிவரும் கொரோனா நெருக்கடி நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக போராடும் அனைத்து தரப்பினருக்கும் பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்கவேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் பாலசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் அறிவித்துள்ள போக்குவரத்துகட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும்,அடுத்த மூன்று நாட்களுக்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் நிலைமையின் பாரதூர தன்மையை உணர்ந்து கொள்வது முக்கியமானதென தெரிவித்துள்ள அவர் மருத்துவமனைகள் சவாலான நிலையை எதிர்கொள்கின்றன, மருத்துவனை கட்டில்கள் நிரப்பிவிட்டன, சுகாதார பணியாளர்கள் திணறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் போது தவறான விதத்தில் நடந்துகொள்வதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்ககுக்கு குடும்பத்தவர்கள் உறவினர்களை அழைத்து வருவதை தவிர்க்கவேண்டுமென தெரிவித்துள்ள அவர், ஒருவர் வசிக்கும் பகுதி போன்றவற்றை உறுதி செய்த பின்னரே தடுப்பூசி வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் இந்தியா போன்றதொரு நிலைமை உருவாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

ஆபத்தான நிலையை அடைந்து வரும் இலங்கை : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா தொற்றாளர்கள்…

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது தொடர்பில் இலங்கை மோசமான நிலையை அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியாசெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் காணப்படும் நிலைமை தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படுகின்ற நிலையில், அதற்கு மேலதிமாக நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் தேவைகள் உள்ள நாடுகள் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி போடுவதும் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதும் மாத்திரமே என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.