நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது பொறுப்பினை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். அதனை மீறுவோர் தொடர்பில் 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்குப் பொலிஸாருக்கு அறியத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை,நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுடன் சொந்த வாகனங்களில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2371ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கோவிட் வைரஸ் கட்டுமீறிப் போய்விட்டது. பொதுமக்களின் அசமந்தப்போக்கால்தான் ‘புத்தாண்டுக் கொத்தணி’ உருவாகி நாடு அபாயத்தைச் சந்தித்துள்ளது.
எனவே, இந்தக் கோவிட்க் கொத்தணியை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது என கோவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாட்டு விதிகளை மீறாத வகையில் மக்கள் செயற்பட வேண்டும். நிலைமை மோசமடைந்தால் கட்டுப்பாடுகளை நாம் மென்மேலும் இறுக்க வேண்டி வரும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் நேற்றும் 2 ஆயிரத்து 386 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி கோவிட்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கோவிட்த் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 220 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 22 ஆயிரத்து 310 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், 941 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து வெளி மாகாணங்கள் மற்றும் வேறு மாவட்டங்களுக்கு மரக்கறிகளை கொண்டு சென்று சந்தைப்படுத்துவதற்கு அனுமதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் நே.விஸ்ணுதாசன் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் போக்குவரத்து தொடர்பில் அரசாங்கத்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,
வவுனியாவில் மரக்கறிகள், பழங்கள், விவசாய உற்பத்திகளை மேற்கொள்வோர் அதனை வெளி மாகாணங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் சந்தைப் படுத்துவதற்கு விவசாயிகளின் அத்தியாவசிய தேவை கருத்தி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெளி மாகாணங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு மரக்கறிகள், பழங்கள், விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்த கொண்டு செல்லும் விவசாயிகள் தங்கள் பிரிவு கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலுடன்,
மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு வருகை தந்து அனுமதிப் பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் நகரின் பல்பேவறு பகுதிகளிலும் இராணுவத்தால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று (16.05.2021) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சுகாதாரப் பிரிவினரின் ஆதரவுடன் வவுனியா நகரில் மக்கள் அதிகமாக வந்து செல்கின்ற இடங்களை மையப்படுத்தி கொரோனா தொற்று நீக்கும் செயற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக வவுனியா பழைய பேரூந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம், பசார் வீதி, பள்ளிவாசல் பகுதி, வங்கிகள், காசு பெறும் தன்னியங்க இயந்திரங்கள் உள்ள பகுதி, பேரூந்து தரிப்பிடங்கள்,
அரச அலுவலகங்கள், நகரின் பிரதான வீதிகள், கடைத் தொகுதிகள், மரக்கறிச் சந்தை என்பன இராணுவத்தினரால் கிருமி தொற்று நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
இதில் இராணுவத்தினருடன் இணைந்து வவுனியா நகரசபையினர், சுகாதபரப் பரிசோதர்கள், பொலிசார் ஆகியோரும் தொற்று நீக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.
இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நாளை அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டது.
அதற்கமைய அத்தியாவசிய தேவையை தவிர்த்து வேறு நபர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நடைமுறை நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
நாளை அதிகாலை பயண கட்டுப்பாடு நீக்கப்படுகின்ற போதிலும் மே மாதம் 31ஆம் திகதி வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயண கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும்.
பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் அலுவலக அல்லது தொழில் நடவடிக்கையை தவிர்த்த வேறு விடயங்களுக்காக வீடு வெளியே செல்ல தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கமையயே செல்ல வேண்டும்.
அதற்கமைய நாளை தினம் அடையாள அட்டை முறைக்கமைய வீட்டிற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகள், ஆடைத்தொழிற்சாலை என்பனவற்றிக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸாருடன் இணைந்து பொது சுகாதார பரிசோதகர்களான வாகீசன் மற்றும் சிவரஞ்சன் ஆகியோர் மோட்டார் சைக்கில்களில் வவுனியா நகரில் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது அனுமதியின்றி வர்த்தக நிலையத்தினை திறந்திருந்தவர்கள், அனுமதிப்பத்திரமின்றி பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நடமாடியவர்கள்,
ஆடைத்தொழிச்சாலை அனுமதிப்பத்திரத்துடன் வேறு நபர்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் என்பன பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினரினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பியிருந்தனர்.
மேலும் அனுமதிப்பத்திரமின்றி தென்பகுதி மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு வருகை தந்துள்ளமையும் இதன் போது கண்டறிப்பட்டது.
வவுனியா மறவன்குளத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,
மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (15.05) இரவு வெளியாகின.
அதில் வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,
அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை வவுனியாவில் நேற்றறைய தினம் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றால் இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டியை தகனம் செய்ய முற்பட்டபோது எழுந்து உட்கார்ந்து அழுத சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட் (76). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் மூதாட்டின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் கடந்த 10ம் தேதி பரமதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையில் படுக்கைக் கிடைக்க நேரமானதால் மூதாட்டி சுயநினைவை இழந்தார். உடல் அசைவு இல்லாமல் கிடந்தார் மூதாட்டி. அதனையடுத்து, மூதாட்டி இறந்து விட்டதாக எண்ணி அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
மூதாட்டியை சவப்பெட்டிக்குள் வைத்து தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மூதாட்டி அழுது கொண்டே எழுந்து அமர்ந்துள்ளார்.
இதைக் கண்டதும், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணி தாயார் ஒருவர் தாம் இறப்பதற்கு முன்பு கொரோனா தொற்றை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள் என கெஞ்சிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநில நிர்வாகமும் தங்கள் மக்களை காக்க கடுமையாக போ.ராடி வருகிறது.
பல மாநில நிர்வாகங்கள் தரவுகளை மறைத்தும், மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை செய்து தராமலும் அலைக்கழித்தும் வருகிறது. இதனால் பொதுமக்களே தங்கள் உயிரை தாங்களே காப்பாற்றிக்கொள்ளும் இக்கட்டான சூழலில் உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றும் கோரம் தொடர்பில் பல் மருத்துவர் ஒருவரின் வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. புது டெல்லியை சேர்ந்த 34 வயது பல் மருத்துவர் டிம்பில் அரோரா சாவ்லா என்பவர் கொரோனாவால் ஏப்ரல் 26ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவர் இறப்பதற்கு முந்தைய நாள் 7 மாத கர்ப்பிணியான அவர் தமது குழந்தையை இழந்தார். இந்த நிலையில் மருத்துவர் சாவ்லாவின் கணவர் வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
மருத்துவர் சாவ்லா இறப்பதற்கும் 9 நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட காணொளி அது. அதில் அவர், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை துணிந்து துரிதமாக முன்னெடுக்க இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
மட்டுமின்றி, யாரும் கொரோனா தொற்றை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூச்சுவிட முடியாமலும், தொடர் இருமலால் அவதிப்பட்டும், கடுமையான தலைவலியால் தூங்க முடியாமல் போனதையும் மருத்துவர் சாவ்லா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். உங்களுக்காகவும், உங்கள் உறவினர்களுக்காகவும் நீங்கள் பத்திரமாக இருப்பது முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோ பதிவு செய்த 9 நாட்களுக்கு பின்னர் மருத்துவர் சாவ்லா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மட்டுமின்றி அவரது 7 மாத குழந்தையையும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
மருத்துவரிடம் பாடலை இசைக்கும்படி கேட்டு படுக்கையில் அமர்ந்தபடியே கால்களை மட்டும் அசைத்து அதை ரசித்தபடியிருந்தார். இதனை வீடியோவாக எடுத்த மருத்துவர் அதனை தன் ட்விட்டர் பக்கத்தில், ‘இவர் மிகவும் வலிமையான பெண், ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
டெல்லியை சேர்ந்த மருத்துவர் மோனிகா லங்கே, சில நாள்களுக்கு முன் தன் சமூகவலைதள பக்கத்தில் பாசிட்டிவிட்டியின் உதாரணமாகப் பதிவிட்டிருந்த, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண், நேற்று உயிரிழந்த செய்தி, தற்போது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சில நாள்களுக்கு முன்னர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்திருந்த நிலையில் மருத்துவரிடம் பாடலை இசைக்கச் சொல்லி தன்னுடைய படுக்கையில் உட்கார்ந்த நிலையில் இசையை ரசித்த காணொளியை மருத்துவர் வெளியிட்டிருந்தார்.
டெல்லியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
கொரோனா பாதிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த பாதிப்பிலிருந்து மீண்டு விடுவோம் என்ற உறுதியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும், தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை கிடைக்கவில்லை. இதனால் கொரோனா நோயாளிகளுக்கான சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கையாக ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் பிளாஸ்மா தெரபியும், ரெம்டெசிவிர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.
அந்நிலையில்தான் மருத்துவரிடம் பாடலை இசைக்கும்படி கேட்டு படுக்கையில் அமர்ந்தபடியே கால்களை மட்டும் அசைத்தபடி பாட்டை ரசித்துக்கொண்டிருந்தார். இதனை வீடியோவாக எடுத்த மருத்துவர் அதனை தன் ட்விட்டர் பக்கத்தில், `இவர் மிகவும் வலிமையான பெண், ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
பதிவிட்ட இரண்டு நாள்களில் அந்தப் பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் இடம் கிடைத்ததையும் அந்த மருத்துவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வேண்டுகோளும் விடுத்திருந்தார்.
அந்தப் பெண்ணிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை கிடைத்துவிட்டது. ஆனால் அவரின் உடல்நிலை சீராக இல்லை. அந்த தைரியமான பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாமே இறைவன் கைகளில்தான் உள்ளது.
ஒரு சின்னஞ்சிறிய குழந்தை அவருக்காக வீட்டில் காத்திருக்கிறது. தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்” என உருக்கமாக மருத்துவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அப்பெண் நேற்று இரவு இறந்துவிட்டதாக மருத்துவர் மோனிகா லங்கே மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டார். “நான் மிகவும் துக்கத்தில் உள்ளேன். மிகவும் தைரியமான ஓர் ஆன்மாவை நாம் இழந்துவிடோம்.
அவரின் குடும்பத்துக்கும் குழந்தைக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பலரையும் இந்தப் பதிவு கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
She got the ICU bed but the condition is not stable. Please pray for brave girl. Sometimes I feel so helpless. It’s all in the hands of almighty what we plan what we think is not in our hands. A little kid is waiting for her at home. Please pray. https://t.co/zfpWEt5dYm
— Dr.Monika Langeh🇮🇳 (@drmonika_langeh) May 9, 2021
இலங்கையில் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் செயலியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒரு மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகமும் பொதுமக்கள் தங்கள் வாட்ஸ் அப் கணக்கைப் பாதுகாக்க இரண்டு காரணி அங்கீகாரத்தை (Enable 2 factor Authentication to Secure WhatsApp Account ) செயல்படுத்துமாறு கோரியுள்ளது.
உங்களுக்கு 6 இலக்கக் குறியீடு தவறுதலாக அனுப்பப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு ஒரு வாட்ஸ் அப் செய்தியைப் பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம். அறியப்பட்ட தொடர்பிலிருந்து செய்திகள் வந்தால், அவர்களின் கணக்கும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
அத்துடன் வாட்ஸ் அப் கணக்கைப் பாதுகாக்க 2 காரணி அங்கீகாரத்தை இயக்குமாறு என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணையகம் பயனர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் உ.யிரிழந்த தாயின் உ.டலை மகனே தோளில் சுமந்து சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. கான்கிரா மாவட்டத்தின் ரானிடால் பகுதியை சேர்ந்தவர் வீர் சிங். கடந்த 12ம் தேதி இவரது தாய்க்கு காய்ச்சல் ஏற்படவே, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
எந்தவொரு மருத்துவமனையிலும் இடம் கிடைக்காத நிலையில், தாயை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார், இந்நிலையில் அடுத்த நாள் காலையே அவரது தாய் உயிரிழந்தார்.
கொரோனா அச்சம் காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் வீர சிங்குக்கு உதவி செய்ய வரவில்லை, என்ன செய்வதென்று தெரியாமல் 2 கவச உடைகளை வாங்கி வந்தார் வீர சிங்.
தான் ஒரு உடையையும், தாய்க்கு ஒரு உடையையும் அணிவித்து, தாயின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு மயானத்துக்கு சென்றார். அங்கே தனது தாயின் உடலை எரியூட்டிவிட்டு கண்ணீர் மல்க வீடு திரும்பிய வீர சிங் கூறுகையில்,
கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்ற பீதியால் யாரும் உதவிக்கு வராத நிலையில் நானும் எனது மனைவியும் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தோம்.
என்னுடைய மனைவியை மயானத்துக்கு அழைத்து செல்ல முடியாது என்பதால் நானே எனது தாயின் உடலை எரியூட்டிவிட்டு வந்தேன், மனிதம் முழுமையாக செத்து விட்டது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தருமபுரியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் பண்ணைக் குட்டையில் மூ.ழ்கி உ.யிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. தருமபுரியின் கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.
இவரது மனைவி இளையராணி, இவர்களுக்கு சாதிகா (வயது 5) மற்றும் தனுஸ்ரீ (3) ஆகிய 2 மகள்களும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் கொட்லு மாரம்பட்டியில் உள்ள சிறுமிகளின் பாட்டி சத்தியவாணி என்பவர் தனது வீட்டுக்கு 2 சிறுமிகளையும் சில நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றார்.
நேற்று சத்தியவாணி சிறுமிகள் மற்றும் சந்துரு (5) ஆகியோரை அழைத்து கொண்டு தன்னுடைய மல்லிகை தோட்டத்திற்கு சென்றார். பின்னர் மூதாட்டி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அங்கு பண்ணைக் குட்டையில் தண்ணீர் பாயச்சுவதற்காக 4 அடி ஆழத்துக்கு தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருந்தது, விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள், சிறுவன் தண்ணீர் குட்டையில் இறங்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் இருந்த தண்ணீரில் சிறுமிகள் இருவரும் மூ.ழ்கி விட்டனர். சிறுவன் சந்துரு குட்டையில் இருந்து மேலே ஏறி வந்து விட்டான்.
சிறுவனின் அ.ழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்ப்பதற்குள் சிறுமிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி ப.ரிதாபமாக உ.யிரிழந்தனர்.
இதையடுத்து சிறுமிகளின் உ.டல்களை அங்கிருந்தவர்கள் மீ.ட்டு வெளியில் கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் விரைந்து வ்ந்த போலீசார், சிறுமிகளின் உ.டலை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொழும்பு மாவட்டம் முழுவதும் பிலியந்தலை, மொரட்டுவ மற்றும் கல்கிசை உள்ளிட்ட பகுதிகளில் கோவிட் வைரஸால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 555 பேர் கோவிட் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 126 பேர் பிலியந்தலையைச் சேர்ந்தவர்கள். மொரட்டுவையில் 42 பேர், கல்கிசையில் 33 பேர், மகரகமவில் 35 பேர், பொரலெஸ்கமுவவில் 33 பேர், பம்பலப்பிட்டியில் 19 பேர், மிரிஹனவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த காலகட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் 236 பேரும், களுத்துறையில் 211 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 218 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட் வைரஸின் மூன்றாவது அலை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்று பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் இந்த வாரம் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயரும் மற்றும் இரண்டு வாரங்களில் அதன் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் பரிசோதிக்கப்படவில்லை அவர்கள் பரிசோதிக்கப்பட்டதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குருணாகலில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் உ.யிரிழந்துள்ளார். கொபெய்கனே பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது முதல் குழந்தையை பிரசவிக்க தயாராகியிருந்தார் என தெரியவந்துள்ளது. இந்த பெண் குழந்தையை பிரசவிக்க தயாராகிய நிலையில் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதால் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குருணாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் அவர் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
குழந்தை பெற அவர் தயாராகிய நிலையில் இருந்தமையினால் சத்திரசிகிச்சை ஊடாக குழந்தையை பிரசவிக்க வைத்தியர்கள் தயாராகியுள்ளனர்.
எனினும் கொரோனா தொற்று தீவிரமடைந்ததன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். எனினும் அவரது குழந்தையை வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர். இதுவரையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக குருணாகல் வைத்தியசாலையின் பிரதி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆறு வகையான கொரோனா திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆறு வகையிலான கோவிட் நுண்மித் தொற்று திரிபுகளினால் பாதிக்கப்பட்டோர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென் ஆபிரிக்க திரிபுடைய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இந்திய திரிபினால் பாதிக்கபபட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு, குருணாகல், களுத்துறை, கண்டி, பொலனறுவை, மன்னார் போன்ற நகரங்களில் இந்த புதிய திரிபுடைய தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் இந்திய திரிபுடைய கொவிட் தொற்றாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.