மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பருப்புக் கடந்தான் பகுதியில் கா.ட்டு யா.னை தா.க்.கி.ய நி.லையில் சி.று கா.யங்களுடன் இ.ளைஞர் ஒ.ருவர் உ.யி.ர் த.ப்.பி.யு.ள்.ளா.ர்.
குறித்த சம்பவம் இன்று (15.05.2021) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கா.ட்டு யா.னை.யி.ன் தா.க்.கு.த.லு.க்.கு உ.ள்ளாகி உள்ளார்.
குறித்த இ.ளைஞர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தைப் பார்வையிட்டு பின் மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த இளைஞர் பருப்புக்கடந்தான் கட்டுக்கரை குள வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது வீதியில் ம.றைந்திருந்த கா.ட்டு யா.னை அ.வ.ரை தா.க்.கி.யு.ள்.ள.து.
இந்த சந்தர்ப்பத்தில் இ.ளைஞர் மோட்டார் சைக்கிளில் இருந்து பா.ய்.ந்துள்ளார். அதனால் மோட்டார் சைக்கிளை யா.னை சே.த.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ள.து.
இதனை தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் கா.ய.ங்.க.ளு.க்.கு இ.லக்கான நிலையில் குறித்த இளைஞர் மீ.ட்.க.ப்.ப.ட்.டு பள்ளமடு வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் – உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (15.05.2021) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. எனினும் குறித்த முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவர் வாகனத்திலிருந்து பாய்ந்து ஆபத்தின்றி தப்பியுள்ளார்.
இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் – உப்புக்குளம் புதிய தெரு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே தனது முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.
இதன்போது தனது வீட்டிற்குச் செல்லும் போது முச்சக்கரவண்டியின் கீழ்ப்பகுதியில் இருந்து புகை வெளி வந்துள்ளதோடு முச்சக்கரவண்டி தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.
உடனடியாக குறித்த நபர் முச்சக்கரவண்டியிலிருந்து பாய்ந்துள்ளார். எனினும் முச்சக்கரவண்டி முழுமையாக தீ பிடித்து எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களை தங்க வைப்பதற்காக இரவு, பகலாக வவுனியா இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டு வருகின்றனர்.
நாட்டின் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்திலும் கொரோனா வைத்தியசாலைகளை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தேவையான கட்டில்களை இளைஞர்கள் முன்வந்து வடிவமைத்து வருகின்றனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அதனுடன் இணைந்து செயற்படும் இரைளஞர்கள், இரவு பகலாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
10 நாட்களில் 10 ஆயிரம் கட்டில்களை அமைக்கும் செயற்பாட்டை நாடு பூராகவும் இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்துள்ள நிலையில், வவுனியா மாவட்ட இனைளஞர் சேவைகள் மன்ற இளைஞர்கள் 40 கட்டில்களை வடிவமைத்து வருகின்றனர். இரும்பிலான கட்டில்களாக அதனை வடிவமைத்து வருகின்றனர்.
பல இளைஞர்கள் இன்று வழிதவறிப் போயுள்ள நிலையில் நாட்டின் தற்போதைய பிரச்சனையை கவனத்தில் கொண்டு இரவு பகவலாக கெரோனா நோயாளர்களுக்காக கட்டில்களை அமைத்து வரும் இந்த இளைஞர்களின் செயற்பாடானது சமூகத்தில் அனைவரதும் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
வவுனியாவில் சிறைச்சாலை கைதிகள் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன்,
தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (15.05) மதியம் வெளியாகின.
அதில், வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் வவுனியாவில் 13 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை தொடரக்கூடாது என பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிறப்பு சுற்றறிக்கை மூலம் தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நபர்களை தூக்கிச் செல்லும் போது பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இருந்தால் அவர் மூலம் தூக்கிச்செல்லும் அதிகாரிகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்களை ஒரே வாகனத்தில் கொண்டுசெல்வதால் பலருக்கும் பரவும் ஆபத்து உள்ளது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இனிமேல், முகக்கவசம் இல்லாத நபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றும் கைது செய்யப்பட்டவர்களை ஒரே வாகனத்தில் கூட்டக்கூடாது என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா தொற்று பரவலானது தற்போது தீவிரமடைந்து வருகின றமையினையடுத்து நாடு முழுவதும் 3 நாட்கள் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய சேவைகள், மருந்தகங்கள் என்பனவற்றிக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் முஸ்ஸிம் மக்களின் நோன்புப் பெருநாள் தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து முஸ்ஸிம் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் வவுனியா பட்டாணிச்சூர் கிராமத்தில் இன்று (15.05.2021) காலை 10 மணியளவில் சுகாதாரப் பிரிவினருடன் பொலிஸார் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த கிராமத்தில் அரசாங்கத்தின் பயணத்தடை, முகக்கவசமின்றி நடமாடுதல், விளையாட்டில் ஈடுபடல், மக்கள் ஒன்றுகூடல், வர்த்தக நிலையங்கள் திறப்பு என பல்வேறு செயற்பாடுகளில் அரச உத்தரவு மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டன.
மேலும் ஆசனத்திற்கு மேலதிகமாக மோட்டார் சைக்கில், முச்சக்கரவண்டியில் பயணம் செய்தவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடியிருந்தமை போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டவர்களும் எச்சரிக்கப்பட்டனர்.
குறித்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகளவிலான கொரோனா தொற்றார்கள் இனங்காணப்பட்டு அக் கிராமம் முற்றாக முடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய குறைந்த அழுத்தம் காரணமாக நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் நாளையிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில்75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாடு முழுவதும் பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் பொலிசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்க அறிவுறுத்தல்களை மீறி வீதியில் நடமாடுவோரை மறித்து சோதனை செய்யும் பொலிசார் அநாவசியமாக வெளியில் வருவோரை கடுமையாக எச்சரித்து அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதேவேளை, அரச பயக் கட்டுப்பாடுகளை மீறி நடப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
வவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும்,
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (14.05) இரவு வெளியாகின.
அதில், யாழ் பல்கலைக்கழகத்தின் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள், காவலாளிகள் உட்பட 8 பேரும், வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவருக்கும்,
நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சகலிகினிகம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் இனங்காணப்பட்ட தொற்றாளரான பெண் சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் மரமடைந்துளலளார்.
ஏனைய 12 தொற்றாளர்களையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய கோவிட் மரணங்கள் இதுவாகும்.
இதன்படி, இலங்கையில் 923 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, நேற்றைய தினம் 2263 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 138,065 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, 110108 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 27054 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.
மேலும், தற்போது வரையில் 1154795 பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன், 243957 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள்,
குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இன்று காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
புதிதாக 3,43,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 ஆக உயர்ந்தது. புதிதாக 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,44,776 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,00,79,599 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 37,04,893 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 83.50% ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 15.41% ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் இதுவரை 17,92,98,584 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்த தன் தாய்க்கு, வீடியோ கால் மூலமாக ஒரு பாடலை பாடி காண்போரை நெகிழ வைத்துள்ளார் மகன்.
இதை, அந்த அம்மாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தீப்ஷிகா கோஷ் எனும் டாக்டர், ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள அனுபவம் நெஞ்சை கணக்கவைக்கும் பதிவாக அமைந்துள்ளது.
டாக்டர் தீபிகா கோஷ், மே 12-ஆம் தேதி பணி முடிந்த பிறகு ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட இந்தப் பதிவில், மொத்தம் 3 குறும்பதிவுகள் உள்ளன. ஆனால், இவற்றை படித்து முடிக்கும்போது நம் நெஞ்சை உலுக்கிவிடுகின்றன.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரின் நிலை குறித்து அவரது உறவினர்களுக்கு தெரிவிப்பதாக முதல் குறும்பதிவு அமைந்துள்ளது.
அந்த நோயாளி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை தெரிவிக்கும் வகையிலான இந்தக் குறும்பதிவில், “இன்று, எனது ஷிப்டின் முடிவில், உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத நோயாளி ஒருவரின் குடும்பத்தினருடன் வீடியோ அழைப்பில் பேசினேன்.
பொதுவாக, அவர்கள் விரும்பினால் எங்கள் மருத்துவமனையில் இவ்வாறு செய்வது வழக்கம். நோயாளியின் மகன் என்னிடம், என் நேரத்தை கொஞ்சம் கேட்டார். அதன் பிறகு அவர் இறந்து கொண்டிருக்கும் அம்மாவுக்காக ஒரு பாடலை பாடினார்.”
அதையடுத்து அவரது இரண்டாவது ட்விட்டர் குறும்பதிவில்;
“அவர் ‘தேரா முஜ்சே ஹை பெஹலா கா நாட்டா கோய்’ எனும் பாடலை பாடினார். அவர் தன் அம்மாவை பார்த்தபடி பாடுவதை பார்த்துக்கொண்டே நான் போனை வைத்துக்கொண்டிருந்தேன்.
செவிலியர்கள் இடையே வந்து அமைதியாக நின்றுக்கொண்டிருந்தனர். அவர் இடையே உடைந்து அழுதாலும், பாடி முடித்தார். பின்னர் அம்மாவின் நிலையை கேட்டுவிட்டு, எனக்கு நன்றி கூறி போனை வைத்துவிட்டார்.”
கடைசியாக அவரது மூன்றாவது குறும்பதிவில், “நானும் செவிலியர்களும் அப்படியே நின்று கொண்டிருந்தோம். நாங்கள் தலையை அசைத்துக்கொண்டோம், கண்கள் ஈரமாக இருந்தன.
செவிலியர்கள் ஒவ்வொருவராக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நோயாளிகளை கவனிக்க அல்லது அவர்கள் வெண்டிலேட்டர் சாதனத்தின் கூக்குரலுக்கு பதில் சொல்ல சென்றனர்.
இந்த பாடல் எங்களுக்கு மாறிவிட்டது. குறைந்தபட்சம் எனக்கேனும் மாறிவிட்டது. இனி இது அவர்களுடைய பாடலாக இருக்கும்.”
கொரோனா நோயாளிகள் பலருக்கு குடும்பத்தினர் கடைசியாக விடை கொடுக்க கூட வழியில்லாத எண்ணற்ற கண்ணீர்க் கதைகளை மருத்துவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இத்தகைய கண்ணீர்க் கதைகளின் வரிசையில் இடம்பெறும் டாக்டர் தீப்ஷிகாவின் இந்த பகிர்வு, ஒரு நோயாளியின் கடைசி தருணத்தில் வீடியோ வழியே பாட்டுபாடி விடை கொடுத்த ஒரு பாசமிகு மகனுக்கு, அந்த வாய்ப்பை டாக்டர் உருவாக்கி தந்த நெகிழ்ச்சியான அனுபவத்தை விவரிக்கிறது.
சாகும் நொடிகளில் இருந்த தாய்க்கும் மகனுக்கும் இடையில் நடந்த பாசப்போராட்டத்தை விவரிக்கும் இந்தப் பதிவுக்கு ட்விட்டர் பயனாளிகள் சிலர் பகிர்ந்து கொண்டுள்ள பதில் கருத்துகளும் படிப்பவரை நெகிழவைக்கின்றன.
இந்தியாவில் திருமணம் முடிந்த 6 மணி நேரத்திற்குள் மணப் பெண் உ.யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக திருமணம் மற்றும் இ.றப்பு நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில், பீகார் மாநிலத்தில் கடந்த 8-ஆம் திகதி கொரோனா விதிமுறைகளுடன், ரமேஷ் மற்றும் நிஷா என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் மத சடங்குகளுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணம் முடிந்த சில மணி நேரத்திற்குள், மணப் பெண் நிஷா உடல் குறைவால் சோர்வாக இருந்தார். இதனால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் மிகவும் ஆ.பத்தான நிலையில் இருப்பதாகவும், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் கூறியுள்ளனர். அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது நிஷா உ.யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 9-ஆம் திகதி காலை அவரது உ.டலுக்கு சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. திருமணம் முடிந்து சரியாக 6 மணி நேரம் கூட ஆகவில்லையே என்று உறவினர்கள் அவர் இ.றந்த செய்தியை கேட்டு க.தறி அ.ழுதனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவரது மனைவி சாந்தி.
இவர்களது மகள் கார்த்திகா (29). இவருக்கும் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ம் திகதி பன்னீர்செல்வம் திடீரென உயிரிழந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தனது தந்தை இ.றந்ததால் கார்த்திகா ம.னமுடைந்து இருந்தார்.
இதனால் அவர் கழிப்பறைக்கு பயன்படுத்தும் திராவகத்தை கு.டித்து த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றார். இதனால் ம.யங்கி வி.ழுந்த அவரை கண்ட குடும்பத்தார் ப.தறிப் போனார்கள்.
பின்னர் கார்த்திகா திராவகத்தை குடித்தார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இ.றந்துபோனார்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையின் உடல் மீது தலையை சாய்த்து சீமான் கதறி அழுத வீடியோ வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று காலமானார்.
அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செந்தமிழன் உடல் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை பார்த்து தொடர்ந்து அழுதபடி சீமான் இருந்தார். ஒரு கட்டத்தில் தந்தையின் உடல் மீது தனது தலையை அப்படியே சாய்த்து சீமான் குலுங்கி குலுங்கி அழுதார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சீமானை தேற்றினார்கள்.
இந்தியாவில் மனைவி கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை அறைக்கு வாசலில் கணவன் 5 நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையுடன் காத்திருந்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் செக்கண்டிராபாத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணா – ஆஷா தம்பதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் காந்தி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே ஆஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஷா சிகிச்சை பெறும் அறைக்கு வெளியில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணா தனது குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறார்.
மனைவி விரைவில் குணமாகி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். குழந்தைக்கு தண்ணீர் மற்றும் பால் பவுடர் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிவதாக கிருஷ்ணா கூறுகிறார்.
இந்த நிலையில் சில தன்னார்வலர்கள் சேர்ந்து கிருஷ்ணாவை இன்று அவரின் கிராமத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.