எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 31ஆம் திகதி வரையான 2 வார காலப்பகுதியில் அடையாள அட்டை இலக்க முறைக்கமைய வீட்டில் இருந்து வெளியே செல்லும் நடைமுறை அமுலாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை திட்டமிடும் போது அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, அடையாள அட்டை இலக்கத்திற்கமைய ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படும்.
அதற்கு எதிராக செயற்படுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று நோய் பரவி வருவதில் மாற்றம் ஏற்படுவதை காணமுடியவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் காணப்படும் நிலைமையில் ஒரு மாதத்திற்கு சுமார் 600 நோயாளிகள் உயிரிழக்கலாம் என அந்த சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிரசாத் கொழம்பகே கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வைரஸ் பரவலை தடுக்க சுகாதார பிரிவின் தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்தளவுக்கு நம்பிக்கை வைக்க முடியாது.
சுகாதார கொள்ளவு என்பது கட்டில்கள் மாத்திரம் அல்ல. தற்போதைய சந்தர்ப்பத்தில் 10 ஆயிரம் கட்டில்கள் தயாரிப்பதில் பிரயோசனம் இல்லை. மருத்துவர்கள், தாதிகள், மருத்துவ உபகரணங்கள், தீவிர சிகிச்சை பிரிவுகள் என்பன அடங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தாக்கத்தால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணமடைந்த முதலாவது நபரின் உடல் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் இன்று (14.05.2021) தகனம் செய்யப்பட்டது.
வவுனியா சமனங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெற்கிழுப்பைகுளம் பகுதியில் வசிக்கும் 77 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (13.05) மதியம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
இதன் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (14.05) மதியம் மரணமடைந்தார். மரணமடைந்த நபரின் சடலம் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து செல்லப்பட்டு இரவு 7 மணியளவில் வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வயதான பெண் ஒருவர் கொரோனா நோயால் இன்று (14.05.2021) மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.
பணம் மற்றும் பரிசுகளை வென்றதாகக் கூறி மோசடி செய்திகளைப் பெறும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. கையடக்க தொலைபேசி பயனர்களால் பல மோசடி செய்திகள் பெறப்படுவது அவதானிக்கப்படுவதாக ஆணையகம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த போலி பணம் மற்றும் பரிசுகளை கோருவதற்கு எந்தவொரு கொடுப்பனவை செலுத்தவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதற்காக, இந்த மோசடி செய்திகளைப் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ள பிரத்யேக மின்னஞ்சல் முகவரி (scmalert@trc.gov.lk) திறக்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகை அல்லது பரிசுகளை வென்றிருக்கிறீர்கள் என்று கவர்ந்திழுக்கும் செய்திகளை நீங்கள் பெற்றால், கையடக்க சேவை வழங்குநர்களிடமிருந்தோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்திடமிருந்தோ கிடைப்பதை உறுதிச்செய்து கொள்ளுங்கள்.
அத்துடன் , தயவுசெய்து பணம் செலுத்துவதைத் தவிர்த்து, எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிர்வதைத் தவிர்க்குமாறும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணையகம் கேட்டுள்ளது.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி வழங்கப்பட்டது.
200 கட்டில்களுடனுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் 155 கொரோனா நோயாளர் தற்போது குறித்த சிகிச்சை பெற்று வருகின்றர்.
இந் நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் வர்த்தக சங்கத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின் நிதி பங்களிப்புடன் வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் ஒரு நாளைக்கு 600 லீட்டர் வரையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வன்னி இராணுவ கட்டளைத்தளபதி , வர்த்தக சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியாவில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்த நிலையில் முஸ்லிம் மக்கள் தமது வீடுகளில் அமைதியான முறையில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் முஸ்லிம் மக்கள் தமது வீட்டு வளாகத்திலும்,
வீட்டு மொட்டை மாடிகளிலும் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதுடன், அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நோன்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 892 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் (13.05.2021) 2249 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 135796 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்றிலிருந்து 108802 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 26,126 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுலாகியுள்ள நிலையில் வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச் சோடிக் காணப்படுகின்றது.
வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மருந்தகங்கள் , சுகாதார துறையினர், ஆடைத் தொழிச்சாலையினர், விவசாயிகள் தமது தேவை நிமிர்ந்தம் சென்று வருவதுடன் பொது மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (13.05.2021) இரவு வெளியாகின.
அதில், வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த தாதியர்கள் இருவருக்கும், மகா கச்சகொடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதராப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து இரண்டு பிள்ளைகள் தவிக்கும் சூழலில் அவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். இவர் மனைவி பிரதிமா. தம்பதிக்கு உத்தவ் பர்தேசி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
உத்தவ் புனேவில் தங்கி எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அவரின் இளைய சகோதரி எம்.சி.ஏ படித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கைலாஷ் மற்றும் பிரதிமா ஆகிய இருவரும் அடுத்தடுத்து உ.யிரிழந்துள்ளனர்.
இதனால் உத்தவ் மற்றும் அவர் சகோதரியின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. உத்தவ் கூறுகையில், நாங்கள் இப்போது நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இருக்கிறோம் என அவர் பேசும் போதே குரல் தழுதழுக்கிறது.
என் தந்தை பத்திரிக்கையில் வேலை செய்து வந்தார், அவர் வருமானத்தை நம்பி தான் எங்கள் குடும்பம் இருந்தது. எங்கள் இருவரின் படிப்பு செலவுக்காக மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் கடையையும் நடத்தி வந்தார்.
கடந்த மார்ச் 25ஆம் திகதி முதலில் என் தந்தை கொரோனாவால் உ.யிரிழந்தார், அடுத்தது ஏப்ரல் 27ஆம் திகதி என் தாயார் உ.யிரிழந்தார்.நான் இப்படி அனாதையாக ஆவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
இப்போது என்னை நான் கவனித்து கொள்வதோடு என் சகோதரியையும் கவனிக்க வேண்டும். எப்படியாவது படிப்பை முடிக்க வேண்டும் என நினைக்கிறேன், தற்போது வேலை தேடியும் எதுவும் கிடைக்கவில்லை.
நான் புனேவில் இருந்ததால் கடந்த இரண்டாடுகளாக என் பெற்றோரை பார்க்கவே இல்லை, என் தந்தையை காண வீட்டுக்கு வந்த போது அவர் ச.டலமாக ப.டுத்திருந்தார் என வேதனையுடன் கூறியுள்ளார். உத்தவ் பெற்றோர் மட்டுமில்லாமல் அவரின் மாமா, அத்தை, பாட்டி என குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொரோனாவால் உ.யிரிழந்துள்ளனர்.
இலங்கையில் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை காலை 10 மணியுடன் நிறைவடைய 24 மணித்தியாலத்திற்குள் நாட்டின் 10 மாவட்டங்களில் அடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் நாட்டின் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் மழை அதிகரிக்கும். சப்ரகமுவ, மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வெளியாகிய 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பெறுபேற்று சித்தி வீதத்தில் வவுனியா தெற்கு வலயத்தில் அல்- இக்பால் மகாவித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.
வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் சித்தி வீதம் தொடர்பில் வடமாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வவுனியா தெற்கு வலயத்தில் 27 பாடசாலைகளில் இருந்து ஆயிரத்து 608 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அதில் 936 மாணவர்களே முழுமையாக மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் பரீட்சைக்கு தோற்றிய 27 பாடசாலைகளில் தோற்றிய மாணவர்களின் சித்தி வீதத்தை அடிப்படையாக கொண்டு 93.33 சித்தி வீதத்தைப் பெற்றுள்ள சூடுவெந்தபுலவு அல்- இக்பால் மகாவித்தியாலயம் வவுனியா தெற்கு வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன்,
கந்தபுரம் வாணி வித்தியாலயம் 90 வீத சித்தியைப் பெற்று தெற்கு வலயத்தில் இரண்டாம் நிலையையும், பூவரசன்குளம் மகாவித்தியாலயம் 84.62 வீத சித்தியைப் பெற்று தெற்கு வலயத்தில் மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளன.
இதேவேளை, வவுனியா தெற்கு வலயத்தில் அல் இக்பால் மாகாவித்தியாலயம் மட்டுமே ஏ சித்தியுடன் வரலாறு பாடத்தில் 100 வீத சித்தியைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பீகாரில் கொரோனா பா.தித்த கணவரை மருத்துவமனையில் சேர்த்த மனைவியிடம் த.வறாக நடந்து கொண்டது ஊழியர் என கூறப்பட்ட நிலையில் மருத்துவர் ஒருவரே அவரிடம் மோ.சமாக நடந்து கொண்டாரா என வி.சாரணை நடந்து வருவது பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி வந்தவர் ரவுஷன் சந்திரா. இவர் தனது மனைவி ருச்சியுடன் கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரான பீகாருக்கு வந்தார்.
அங்கு ரவுஷனுக்கு கொரோனா பா.திப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மனைவி ருச்சி அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான சிகிச்சையை அளிக்காததால் ரவுஷன் உ.யிரிழந்தார்.
மேலும் சில மருத்துவ ஊழியர்கள் ருச்சியின் உ.டை.யை பி.டி.த்.து இ.ழு.த்.து.ம், அவர் இ.டு.ப்.பி.ல் கை வை.த்து பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டுத்ததாக அவர் கு.ற்றஞ்சாட்டினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அ.திர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஜோதி குமார் என்ற வார்ட் பாயை பொலிசார் கை.து செய்தனர். இந்த நிலையில் அதிகாரபூர்வமாக சில பேர் மீது ருச்சி நேற்று எப் ஐ ஆர் பதிவு செய்திருக்கிறார்.
அதில் முக்கியமாக ஐசியூவில் இரவு பணியில் இருந்த அகிலேஷ் என்பவர் தன் மீது கை வைத்து அ.நாகரீகமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அகிலேஷின் செயல்களை ப.ல்.லை க.டி.த்.து கொண்டு பொ.றுத்து கொண்டதாகவும்,
ஏனெனில் உ.யிருக்கு போ.ராடும் கணவருக்காக அப்படி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அகிலேஷ் மருத்துவரா என்ற சந்தேகம் பொலிசாருக்கு எழுந்துள்ள நிலையில் அது குறித்து வி.சாரணை நடந்து வருகிறது.
கீழ் நிலை ஊழியர்கள் மட்டுமே ருச்சியிடம் த.வறாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் மருத்துவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளிவருவது அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 12 நாட்களில் அடுத்தடுத்து கொரோனாவால் பெற்றோர், தாத்தா-பாட்டி என நான்கு பேர் பலியாகி தற்போது இரண்டு பெண் குழந்தைகள் அனாதையாக நிற்கும் சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கவைத்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் தாத்தா-பாட்டி, அம்மா, அப்பா என நான்கு பேருடன் 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் வாழ்ந்து வந்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் அக்குடும்பத்தில் தாத்தா துர்கேஷ் பிரசாத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருந்து உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில், குடும்பத்தில் உள்ள மற்ற 3 பெரியவர்கள் அதாவது குழந்தைகளின் பாட்டிக்கும், அப்பா அஸ்வினுக்கும், அம்மாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
ஏப்ரல் 27ம் திகதி உடல்நிலை மோசமானதால் தாத்தா துர்கேஷ் பிரசாத் உயிரிழந்துள்ளார். ஒரு வாரம் கழித்து அவருடைய மகன் அதவாது குழந்தைகளின் தந்தை அஸ்வின் இறந்துள்ளார்.
பின் சில நாட்கள் கழித்து பாட்டியும் பலியாகியுள்ளார். மே 7ம் திகதி குழந்தைகளின் அம்மாவும் உயிரிழக்க இரண்டு பெண் குழந்தைகளும் அனாதையாகியுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களை உலுக்கியுள்ளது. சரியான மருத்துவ வசதிகள் இல்லாதே நான்கு பேர் மரணத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது அனாதையான இரண்டு பெண் குழந்தைகளும் உத்தர பிரதேசத்தில் Bareilly-ல் உள்ள அத்தை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி மாதுபானசாலைகள் திறந்திருந்த நிலையில் பொலிசார் சென்று அனைத்து மதுபானசாலைகளையும் இன்று (13.05) மாலை பூட்டினர்.
இன்று இரவு முதல் எதிர்வரும் மூன்று தினங்கள் நாடுமுழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுபானசாலைகளை மாலை 6 மணியுடன் மூடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மூன்று தினங்கள் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதால் இன்று (13.05) மாலை மதுபானசாலைகளுக்கு முன்னால் அதிகளவிலான குடிமக்கள் கூடியிருந்தனர்.
இதனால் மதுபானசாலைகளுககு முன்னால் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், மாலை 6 மணிக்கு மதுபானசாலைகளை மூட முடியாத அளவிற்கு கூட்டம் காணப்பட்டது.
இதனையடுத்து, மதுபானசாலைகளுக்குள் களம் இறங்கிய வவுனியா பொலிசார் உடனடியாக மதுபானசாலைகளை மூடுமாறு பணித்ததுடன், மதுபானசாலை உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தனர்.
இதேவேளை, மதுபானசாலைகளின் முன்னால் சுகாதார நடைமுறைகளையும் மீறியே அதிகளவிலான கூட்டம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.