வவுனியாவில் தரம்பிரிக்காது குப்பைகளை அகற்றுவதற்கு நகரசபை அனுமதி!!

நகரசபை..

வவுனியா நகரில் உள்ள குப்பைகளை தரம் பிரிக்காது உடனடியாக அகற்றி நகரின் தூய்மையைப் பேண சபை அனுமதி வழங்கியுள்ளதாக நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபையின் கழிவகற்றல் முறையில் ஏற்பட்ட சிக்கல் நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

வவுனியாவில் தரம் பிரித்து குப்பைகளை அகற்றுவதற்கு நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் வர்த்தகர்கள், பொதுமக்கள் தரம் பிரித்து கழிவுகளை சரியான முறையில் வழங்காமையினால் அதனை அகற்றுவதில் இழுபறி நிலை காணப்பட்டது.

இதனால் வவுனியா நகரசபைக்குட்பட்ட பல பகுதிகளில் சில நாட்களாக குப்பைகள் அகற்றப்படாது காணப்பட்டது. இந்நிலையில் நகரசபையின் சுகாதாரக் குழுவின் கவனத்திற்கு இவ் விடயம் கொண்டு வரப்பட்டு இது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

இதன்போது நகரசபை சுகாதாரக் குழு தற்போதைக்கு தரம் பிரிக்காது நகரின் குப்பைகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்த வேண்டும் என நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி தெரிவித்தார்.

இதனடிப்படையில் நேற்று (12.05) இடம்பெற்ற சபை அமர்வில் குறித்த விடயத்தை நான் முன்வைத்து சபை உறுப்பினர்கள் மற்றும் நகரசபை செயலாளர் ஆகியோர் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

இதனையடுத்து வவுனியாவில் குப்பை அகற்றுவது தொடர்பில் காணப்பட்ட இழுபறி நிலைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உடனடியாக குப்பைகளை தரம் பிரிக்காது அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என நகரசபையினர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து வந்து யாழில் மறைந்திருக்கும் மக்கள்!!

யாழில்..

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்து யாழ்ப்பாணத்தில் பதுங்கியருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குருநகர் பிரதேசத்தில் தங்கியிருந்த பெண்கள் இருவரும் 9 மற்றும் 5 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருவருமே பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கை வரும் நபர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வந்த குறித்த குடும்பத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் வீட்டிலேயே உயிரிழந்த 4 பிள்ளைகளின் தாய்!!

கொரோனா..

காலி, அஹங்கம பிரதேசத்தில் வீட்டில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு கோவிட் வைரஸினால் ஏற்பட்ட நியுமோனியாவே காரணம் என காலி மரண பரிசோதகர் பீ.ஜீ.என்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் அஹங்கம பிரதேசத்தை சேர்ந்த 75 வது நான்கு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. அவர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களினால் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்ற ஒருவராகும்.

வீட்டில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு பொலிஸார் இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

முழுமையாக பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 3 நாட்களில் அடையாள அட்டை முறையை பயன்படுத்தி பயணிப்பதற்கு அனுமதி இல்லை என்ற பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் முழுமையான பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அந்த காலப்பகுதியில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த 3 நாட்களும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் அமுல்படுத்தப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்திய சிகிச்சை பெறுவதற்கு வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கும் மருந்து விநியோகத்திற்கும் முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (12.05) இரவு வெளியாகின.

அதில், சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், ஒமந்தை வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், வவுனியாவில் நேற்றைய தினம் (12.05) யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் 31 பேர், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் 5 பேர் உட்பட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரகசிய தகவலின் அடிப்படையில் பெண்ணொருவர் வீட்டில் வைத்து கைது!!

கைது..

ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப் பொ.ருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் நேற்றைய தினம் இரவு வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோ.தனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய பெண்ணொருவரே தேக்கவத்தை பகுதியிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து போ.தை.ப் பொ.ருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 2.7 கிராம் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப் பொ.ருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர்கள் : 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!!

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில்..

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிடாச்சூரி, கோதண்டர் நொச்சிக்குளம் ஆகிய இரு கிராமங்களில் 2 கொரோனா சமூகத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

அவர்களுடன் தொடர்பைப் பேணிய 19 குடும்பங்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் போதே இவ்விரு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அத்துடன், இவர்களில் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் 40 நாட்களாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியவராவார். குறித்த நபரை பார்வையிடுவதற்காக சென்ற நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்தை பார்வையிட்ட வடமாகாண ஆளுனர்!!

வடமாகாண ஆளுனர்..

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்தை பார்வையிட்ட வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களையும் கையளித்தார்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு நேற்று (12.05) மாலை விஜயம் செய்த வடமாகாண ஆளுனர்,

அதன் கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டதுடன், கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வரும் நோயாளருக்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களையும், வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன மற்றும் வவுனியா மாவட்ட கொவிட் செயலணியின் இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார ஆகியோரிடம் கையளித்தார்.

அத்துடன், சிகிச்சை நிலைய வசதிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் இரச அதிகாரிகள், சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார்.

வவுனியாவில் வெப்பத்தை தனிக்க நுங்கு விற்பனை அமோகம்!!

நுங்கு விற்பனை..

வவுனியா மாவட்டத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதுடன், நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை போக்க பழச்சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பது போல் நுங்குகளையும் பொதுமக்கள் விரும்பி வாங்கிக் குடிக்கின்றனர்.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஏராளமான பொதுமக்கள் நுங்கினை வாங்கி குடிப்பதுடன், வீடுகளுக்கும் ஆர்வத்துடன் வாங்கியும் செல்கின்றனர்.

நகர்ப்புறங்களில் 50 ரூபாய்க்கு 3 சுளை நுங்கு விற்கப்படுகிறது. உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்பதாலும் குறிப்பிட்ட கோடை காலத்தில் மட்டுமே பனை நுங்கு கிடைக்கும் என்பதாலும் விலையை பொருட்படுத்தாமல் பனை நுங்குகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து நுங்கு விற்பனையாளர்கள் கூறுகையில், நுங்கு வெட்டி விற்பனை செய்யும் தொழிலை கோடை காலங்களில் செய்து வருகிறோம்.

கோடை காலத்தில் உடலுக்கு தேவையான நார் சத்து, நீர் சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக பனை நுங்கு உள்ளது. இலாபம் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் நுங்கு விற்பனையை சேவை அடிப்படையில் தொடர்ந்து செய்ய விரும்புகிறோம்.

முன்பெல்லாம் கிராமங்களில் நிறைய பனைமரங்கள் தென்படும். தற்போது பனை மரங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. மரங்களை தேடி அலைந்து கண்டுபிடிக்க வேண்டிய சூழல் உள்ளது.

பெரும்பாலான மரங்கள் அழிந்துவிட்டன. இதனால் நுங்குகளுக்கு தட்டுப்பாடும் உள்ளது. மக்கள் நகரங்களில் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். பனை மரங்களை அதிகளவில் வளர்ப்பதற்கு அரசாங்கம் மற்றும் விவசாயிகள் முன்வர வேண்டும் என்றனர்.

வவுனியா கொரோனா சிகிச்சை மையத்தில் வவுனியாவை சேர்ந்தவர்கள் உட்பட 155 நோயாளர்கள் அனுமதி!!

கொரோனா சிகிச்சை மையத்தில்..

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையத்தில் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் உட்பட 155 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு நேற்று (12.05.2021) இரவு 11.00 மணி தொடக்கம் நோயாளர்கள் உள்வாங்கப்பட்டனர்.

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் 31 பேரும், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 நபர்களும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தினை சேர்ந்த 122 நபர்களும் என 155 (ஆண் நோயார்கள்) கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான மூன்று நேர உணவுகள், மற்றும் ஏனைய வசதிகளை வன்னி இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதுடன் அவர்களுடைய சுகாதாரம், மருத்துவம் போன்ற வசதிகளை வவுனியா சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தா.க்.குதலில் உ.யிர் த.ப்பிய சி.றுமியின் இன்றைய நிலை!!

எலிசா டெடி..

எட்டு வயதான எலிசா டெடி, 2019 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.லி.ல் இருந்து த.ப்பியவர்களில் ஒருவர், எனினும் அவர் தனது கண்பார்வை இழந்துள்ளார்.

அதிஷ்டமிக்க அந்த நாளில், எலிசா தனது பெற்றோருடன் காலை நேர பிரார்தனைகளுக்காக தேவாலயத்திற்கு விஜயம் செய்தார். இந்த தா.க்.கு.த.லி.ன் போது அவரது பெற்றோர் உ.யிரிழந்தனர்.

மட்டக்களப்பு செயின்ட் மேரி கல்லூரியின் மாணவியான எலிசா தற்போது அத்தை ஒருவரின் கண்காணிப்பில் இருக்கின்றார். இந்நிலையில், சியோன் தேவாலய பாதிரியார் மூலம், கொழும்பு ஊடகம் ஒன்று எலிசாவின் அத்தையை தொடர்புகொண்டது.

இதன்போது, ​​எலிசா தனது கண்பார்வையை மீண்டும் பெற இந்தியாவில் ஒரு மருத்துவமனையில் விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அத்தை தெரிவித்துள்ளார்.

“அறுவை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல எங்களுக்கு நிதி ஆதாரங்கள் இல்லை.” என்று அத்தை கூறினார். எலிசா தனது பெற்றோர் மற்றும் பார்வையை இழந்த அ.திர்ச்சிகரமான அனுபவத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது.

எனினும், பயப்படாமல், எலிசா தனது படிப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளார் என்று அவரது அத்தை கூறினார். எலிசாவின் தாய் சம்பவ இடத்திலேயே கொ.ல்.லப்பட்டார், அதே நேரத்தில் அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு வாரம் கழித்து உ.யிரிழந்துள்ளார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் கு.ண்.டு தா.க்.கு.த.லி.ல் 250க்கும் மேற்பட்டவர்கள் கொ.ல்.ல.ப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் ப.டுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

15 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு : தாயின் 2வது கணவன் கைது!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தாயின் 2வது கணவர் அ.டி.த்.து து.ன்.பு.று.த்தியதால் 10-ம் வகுப்பு மாணவி தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (36). சமையல் வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

2014-ம் ஆண்டு பிரபாகரன் (42) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு அரும்பாக்கத்தில் இருவரும் வசித்து வந்தனர். சரஸ்வதிக்கு முதல் கணவர் மூலமாக பிறந்த தீபிகா (15) என்ற மகள் இருந்தார். அவர், 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது மகள் தீபிகா, வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டிருப்பதை கண்டு அ.திர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய தீபிகா உ.டலை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வி.சாரணையில் தீபிகா வீட்டில் இருப்பதால்,

தனது மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று கருதிய பிரபாகரன், அடிக்கடி தீபிகாவை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி.ய.து.ட.ன், மோ.சமான வார்த்தைகளால் தி.ட்டி வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் வீட்டில் இருந்த தீபிகாவை அ.டி.த்.து உ.தை.த்.த பிரபாகரன் தனது இல்லற வாழ்க்கைக்கு இ.டையூறாக இருப்பதால் எங்காவது சென்று செ.த்.துவிடு என்று தி.ட்டியதாக தெரிகிறது.

இதனால் வி.ரக்தி அடைந்த தீபிகா தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்டியதாக பிரபாகரனை பொலிசார் கை.து செ.ய்துள்ளனர்.

கணவர் உயிரை காப்பாற்றுங்கள் : கெஞ்சிய மனைவியின் உடையை இழுத்து மோசமாக நடந்த ஊழியர்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மருத்துவமனையின் அலட்சியத்தால் கொரோனா பாதித்த தனது கணவனை இழந்த பெண்ணுக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் அவர் முறையாக பொலிசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவுள்ளார்.

நொய்டாவை சேர்ந்த ரவுஷன் சந்திரா – ருச்சி தம்பதி கடந்த மார்ச் மாதம் ஹோலி பண்டிகையை கொண்டாட பீகார் வந்தனர். இந்த நிலையில் ரவுஷனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மனைவி ருச்சி அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அந்த மருத்துவமனையில் தான் ருச்சி கனவிலும் நினைத்து பார்த்திராத மிக மோசமான விடயங்கள் நடந்தேறியது. ரவுஷனுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததோடு, ருச்சியின் உடையை இழுத்தும், அவர் இடுப்பில் கை வைத்தும் அங்குள்ள ஊழியர்கள் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்திருக்கின்றனர்.

கணவருக்கு சிகிச்சையளிக்குமாறு ருச்சி கெஞ்சிய போதே ஊழியர்கள் சிலர் இரக்கமின்றி இவ்வாறு மோசமாக நடந்து கொண்டனர். இந்த நிலையில் தான் ரவுஷன் உ.யிரிழந்தார்.

கொரோனா வைரஸால் தனது கணவர் இ.றக்கவில்லை, மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் இ.றந்தார் என ருச்சி நடந்த அனைத்தையும் செய்தியாளர்களுக்கு முன்னால் கூறி ப.ரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ருச்சியிடம் த.வறாக நடந்து கொண்டதாக மருத்துவமனை ஊழியர் ஜோதி குமார் என்பவரை பொலிசார் நேற்று கைது செய்தனர். ருச்சி கூறுகையில்,

என்னிடம் த.வறாக நடந்து கொண்ட அனைவர் மீதும் பொலிசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவுள்ளேன். இதோடு பொலிஸ் உயர் அதிகாரிகள் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

நிச்சயம் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். இதனிடையில் சிறப்பு அணிகளை அமைத்து ருச்சி விடயம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக வி.சாரணை நடத்த மாநில முதல்வர் நிதீஷ்குமார் உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

என்னால் பேச முடியவில்லை..என் உடல் என்னை கைவிடுகிறது… உயிரிழப்பதற்கு முன் 7 மாத கர்ப்பிணி பெண் பேசிய எச்சரிக்கை வீடியோ!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணும் அவர் வயிற்றில் இருந்த கு.ழந்தையும் கொரோனாவுக்கு ப.லியான நிலையில் இ.றப்பதற்கு முன்னர் அவர் பேசிய வீடியோவை கணவர் வெளியிட்டுள்ளர்.

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை உ.லுக்கி வருகிறது. பெருந்தொற்று காரணமாக உ.யிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ரவீஸ் சாவ்லா என்ற நபரின் மனைவி டிம்பிள் ஏழு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் உ.யிரிழந்துள்ளார்.

அவர் வயிற்றில் இருந்த கு.ழந்தை உ.யிரிழந்த அடுத்த நாள் டிம்பிளின் உ.யிரும் பி.ரிந்துள்ளது. இறப்பதற்கு முன்னர் அவர் மற்றவர்களுக்கு எ.ச்சரிக்கை அளிக்கும் விதத்தில் பேசிய வீடியோவை ரவீஸ் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசுகையில், கொரோனாவை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்…! மோசமான அறிகுறிகள் எனக்கு.. என்னால் பேச முடியவில்லை.

உங்கள் அருகிலுள்ள அன்பானவர்களின் பா.துகாப்பிற்காக மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது மாஸ்க் அணியுங்கள். தயவுசெய்து பொறுப்பற்றவர்களாக இருக்காதீர்கள், ஏனென்றால் உங்கள் வீட்டில் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இருக்கலாம்.

நான் எப்போதும் வேலை செய்ய விரும்புகிறேன். நான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன், ஆனால் என் உடல் இப்போது என்னை கைவிடுகிறது என உருக்கமாக பேசியுள்ளார்.

மனைவி இறந்த பிறகு பேசிய ரவீஸ், எங்களின் மூன்றரை வயது மகன் அம்மா எங்கே என கேட்கிறான். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, கர்ப்பமாக இருக்கும் போது எனக்கு கொரோனா வரக்கூடாது என அவள் கூறுவாள். ஆனால் அந்த வைரஸ் தா.க்.கி.யே எ.ன்னை விட்டு சென்றுவிட்டாள் என வேதனையுடன் பேசியுள்ளார்.

பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

விபத்து..

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று ((12.05.2021) மாலை பெரியகல்லாறிலிருந்து மட்டக்களப்புக்கு வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த பேருந்து மோதி தள்ளியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், அதில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான அழகப்பர் மதிராஜ்(49வயது) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா பம்பைமடுவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா தொற்று..

வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 31 மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடைய மாணவர்களிடம் இன்று (12.05) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையில் 31 மாணவர்களுக்கு மேலும் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.