மொறட்டுவை புதிய காலி வீதியில் நடைபாதையில் 50 வயது மதிக்கதக்க ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மொறட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடைபாதையில் ஒருவர் விழுந்து கிடப்பதை கண்ட பிரதேசவாசிகள் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து அதன் ஊழியர்கள் விழுந்து கிடந்த நபரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவரவில்லை. இந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இறந்த நபர் கோவிட் தொற்றாளியா என்பதை கண்டறிய பீ.சீ. ஆர் பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பா.திக்கப்பட்ட கணவனுக்கு சரியான சிகிச்சையளிக்காததோடு மருத்துவமனை ஊழியர்கள் தன்னிடம் த.வறாக நடந்து கொண்டனர் என மனைவி கூறியுள்ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பா.திக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் நொய்டாவில் இருந்து ஹோலி பண்டிகையை கொண்டாட பீகாருக்கு நானும் கணவரும் வந்தோம்.
கடந்த மாதம் 11ஆம் திகதி என் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இரு முறை எடுத்த கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்தது. ஆனால் வேறு மருத்துவர் கூறியபடி ஸ்கேன் எடுத்ததில் அவர் நுரையீரலில் பாதிப்பு இருப்பது தெரிந்தது.
அந்த சமயத்தில் என் தாய்க்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் இருவரையும் ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம், அங்கு அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
அந்த மருத்துவமனையில் மிக மோ.சமான விடயங்கள் நடந்தது. என் கணவர் குடிக்க தண்ணீர் வேண்டும் என கெஞ்சியும் யாரும் கொடுக்கவில்லை, அந்த சமயத்தில் ஊழியர் ஒருவர் என் உ.டையை பி.டித்து இ.ழுத்து மோ.சமாக து.ன்.பு.றுத்தினார்.
இதை பார்த்து அ.திர்ச்சியடைந்த என் தாயார் க.த்தினார், பின்பு என் இடுப்பில் அவன் கை வைத்தான். ஆனால் இந்த கொ.டு.மைகளை பற்றி நான் வெளியில் சொல்லவில்லை, ஏனென்றால் என் கணவர் மற்றும் தாயாரை எதாவது செய்துவிடுவார்கள் என ப.யந்தேன். இதன்பிறகு ஆக்சிஜன் கொடுக்காமல் அலைக்கழித்தனர்.
மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜனை அதிக விலைக்கு வெளியில் விற்கிறார்கள். அதன்படி தலா 50,000 ரூ என 2 ஆக்சிஜனை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இதன்பின்னர் என் கணவர் உடல் நிலை மிக மோசமானதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
அங்கிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லும் வழியில் என் கணவர் உ.யிரிழந்துவிட்டார். கொரோனா வைரஸால் அவர் இ.றக்கவில்லை, மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் இ.றந்தார்.
மருத்துவமனைகளை நம்பாமல், தங்களின் அன்புக்குரியவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என க.ண்ணீர் மல்க கூறியுள்ளார்.
नीतीश जी
इस बहन को न्याय दो, इनके पति कोरोना से दम तोड़ रहे थे, वासना के वहशी दरिंदे इनके साथ छेड़खानी कर रहे थे।
भागलपुर के ग्लोकल हॉस्पिटल का कंपाउंडर ज्योति कुमार और राजेश्वर हॉस्पिटल के डॉ अखिलेश को गिरफ्तार कर स्पीडी ट्रायल चला फांसी दो। मैं तो इन दोनों को सजा दिलाऊंगा! pic.twitter.com/Y2xLsklU0G
தமிழகத்தில் மன்மதனாக வலம் வந்த கணவனின் லீலைகளை புகைப்படங்களுடன் மனைவி அம்பலப்படுத்திய சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சைமனின் மேஸ்ட்ரோ இன்னிசைக்குழுவில் பாடகியாக இருந்த கோபிகா அதே குழுவின் முக்கிய இசைக்கலைஞரான மைக் ஸ்டீபனும் சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவர் மைக் ஸ்டீபன் மன்மதன் போல வலம் வருவதாகவும், வயது வித்தியாசமின்றி கையில் சி.க்குகின்ற பெண்களை எல்லாம் ம.யக்கி காதல் வலையில் சி.க்கவைத்து அவர்களது வாழ்க்கையை சீ.ரழித்து வருவதாக தி.டுக்கிடும் பு.கார் ஒன்றை கோபிகா தெரிவித்துள்ளார்.
மேடை கச்சேரிக்கு செல்லும் இடங்களில் பெண்களின் செல் நம்பரைப் பெற்று அவர்களுக்கு காதல் வலை விரிப்பதில் கில்லாடியான மைக் ஸ்டீபன், அந்த பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மி.ர.ட்.டி பணம் ப.றித்து வருவதாகவும் கு.ற்றஞ்சாட்டுகிறார்.
இந்த உண்மையை வெளியே சொன்னால் கொ.லை செ.ய்.துவிடுவதாக தன்னை அவர் மி.ர.ட்.டி வை.த்திருந்ததாகவும், பல பெண்களின் வாழ்க்கையை கா.ப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கோபிகா தெரிவித்தார்.
பு.காருடன் ஆதாரமாக மைக் ஸ்டீபன் மன்மதனாக மற்ற பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தங்கள் வி.சாரணையை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை நடத்தி வந்தவர் சரவணன்.
இவரது மனைவி ஸ்ரீநிதி. இவர்களுக்கு மகாலட்சுமி (10), அபிராமி (5) என்ற இரு மகள்களும், அமுதன் (5) என்ற ஒரு மகனும் இருந்தனர். கடந்த 20 வருடங்களாக நகைப்பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன்.
கடன் பி.ரச்சினை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக குடும்பத்தில் பல்வேறு பி.ரச்சனைகள் இருந்து வந்துள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலையில் சரவணன், ஸ்ரீநிதி இருவரும் தங்கள் மூன்று கு.ழந்தைகளுக்கும் வி.ஷ.ம் கொ.டுத்துவிட்டு, தாங்களும் வி.ஷ.ம் அ.ருந்தி உ.யிரிழந்துள்ளனர்.
இறப்பதற்கு முன்பு சரவணன் – ஸ்ரீநிதி எழுதி வைத்திருக்கும் கடிதத்தில், கடன் பி.ரச்சனை காரணமாக நாங்கள் த.ற்.கொ.லை செ.ய்.துகொள்கிறோம் என்று எழுதி வைத்துள்ளனர்.
இந்த கடிதத்தினை கை.ப்.பற்றிய பொலிசார் கடன் நெ.ருக்கடி ஏன் ஏற்பட்டது? யார் நெருக்கடி கொடுத்தது என்பது குறித்து தீ.விர வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்பு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது கரோனா.
இந்நிலையில் குஜராத்தில் மாட்டு சாணத்தில் குளிக்கும் மூட நம்பிக்கை பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலரும் மாட்டுச்சாணம் குளியல் எடுத்து வருகின்றனர்.
இப்படி செய்வதால் வேறுவிதமான சுகாதார தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு மாட்டு கொட்டகைக்கு வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சிலர் கூட்டமாக வருகிறார்கள்.
மாட்டுச் சாணத்தை கரைத்து உடல் முழுவதும் பூசிக் கொள்ளும் இவர்கள் மாட்டுப் பாலை மேலே ஊற்றி குளியல் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் கரோனா வைரஸ் தங்களை தாக்காது என்று இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இப்படி மாட்டுச்சாண குளியல் எடுத்துக் கொள்பவர்களில் சிலர் மருந்து நிறுவனங்களில் வேலை செய்பவர்களாகவும், சிலர் மருத்துவர்களாகவும் உள்ளனர் என்பதுதான் பெரும் அதிர்ச்சியே.
ஆனால் இதுபோன்று மாட்டுச் சாணத்தால் குளிப்பதால் கரோனாவை விரட்டலாம் என்பதுபோன்ற எந்த அறிவியல் பூர்வமான நிரூபணமும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் வேறுவிதமான தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். சோதனைகள், கண்காணிப்புகள் இடம்பெறும்.
முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம்.
சுற்றுலா, உறவினர்களை சந்தித்தல், ஹோட்டல்களில் தங்குதல் உட்பட தனிப்பட்ட விடயங்களுக்காக மாகாணங்களில் இருந்து வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாகாண எல்லையை கடப்பதற்கு குறுக்கு வழிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவியல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாகாண எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குங்கள். நீங்கள் வழங்கும் தகவல்கள் திருப்தியில்லையெனில் அவர்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.
கூட்டம், கருத்தரங்கு, கண்காட்சி, சமய நிகழ்வுகள், விருந்துபச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும், அனுமதி வழங்கியவர்களும் கைது செய்யப்படுவார்கள். மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதி பத்திரம் எதுவும் வழங்கப்படாது.
இலங்கையில் கோவிட் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிக்குமாறு நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பணிப்புரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார சட்டங்களை பின்பற்றாமல் நடத்திய திருமண வைபவத்தில் பங்கேற்ற மணமகன் மற்றும் மணமகள் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து புத்தளம் கொஸ்வத்தை மெதகிரிமிட்டியான கிராம சேவகர் பிரிவு இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தங்கொட்டுவை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மெதகிரிமிட்டியான பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் கடந்த 9 ஆம் திகதி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அதில் சுகாதார சட்டங்களை மீறி 140 பேர் கலந்துக்கொண்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அதில் கலந்துக்கொண்டவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகளின் படி 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பொலிசார் மற்றும் சுகாதார துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று (11.05) முன்னெடுக்கப்பட்டது.
இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில், வவுனியா பொலிசார் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்தவர்களுக்கான இரண்டாவது டோஸ் கொவிட் 19 தடுப்பு ஊசிகள் ஏற்றும் நடவடிக்கை வவுனியா பொது வைத்தியசாலையில் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்திற்கு 1500 தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் 1010 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை முன்னரே ஏற்றியிருந்தனர். இரண்டாம் கட்டமாக பொலிசார் மற்றும் சுகாதார துறையினருக்கு இத் தடுப்பூசிகள் ஏற்பட்டன.
அட்சய திருதியை முன்னிட்டு நகைக் கடைகளுக்குள் மக்களை கூட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொவிட் தாக்கத்தின் மூன்றாவது அலையின் தாக்கமானது வவுனியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த அரசாங்கமும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்துடன் எதிர்வரும் 14 ஆம் திகதி அட்சய திருதியாகும். அன்றைய தினம் நகைகளை கொள்வனவு செய்யும் வகையில் வாடிகையாளரை கவர்வதற்காக விளம்பரங்களை செய்து மக்களை நகைக்கடைகளுக்குள் அதிகமாக வரச் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வதுடன்,
மக்களை கடைகளுக்குள் அதிகமாக திரட்டினால் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் நகைக்கடைகளின் இட வசதி மற்றும் ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 25 வீதமானவர்களுக்கு மட்டுமே கடைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதுடன், இறுக்கமான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
அதனை விடுத்து, அட்சய திருதியை வியாபாரத்திற்காக நகைக்கடைகளில் மக்கள் கூடினால் குறித்த கடைகளுக்கு எதிராகவும், சுகாதார அறிவுறுத்தல்களை மீறி ஒன்று கூடியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றினால் 3 மாத குழந்தை உட்பட 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
காலி, ஹெட்டிபொல, பல்லேவெல, கண்டி, மத்துகம, பாதுக்கை, மீகஹகொடை, அக்குரஸ்ஸ, மொரான்துடுவை, அநுராதபுரம், கொழும்பு – 6, கலுஹக்கல, மொரட்டுவை, மல்வானை, கொழும்பு – 15,
பொரளை, கந்தானை, மாஸ்வெல, வத்தேகம, மாலபே ஆகிய பகுதிகளிலும் யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும் நேபடை ஆகிய பிரதேசங்களில் தலா இரண்டு கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
14 ஆண்களும் 11 பெண்களும், 3 மாத குழந்தையொன்றும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரவலாக எழுமாறான பிசீஆர் பரிசோதனைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இதன் முடிவுகள் சில இன்று மதியம் (11.05.2021) வெளியாகின. அதில் வவுனியா ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், கல்மடு பகுதியில் ஒருவருக்கும் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மூன்று பேரும் புதிதாக சமூக மட்டத்தில் இருந்து இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களை கொரோனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாகும். நான்கு வாரங்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்துகொள்ளவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் இருந்து வெளியேறும்போது இரண்டு முகக்கவசங்களை அணிந்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கோவிட் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டில் கோவிட் தொற்றாளர்கள் கடந்த இரண்டு தினங்களில் 1500 முதல் 2500க்கும் அதிகமானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையிலும் இதனை கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
அதனால் பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணிவந்தால் இதனை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எங்களுக்கு இருக்கின்றது. அத்துடன் எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாகும்.
அதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்வதாக இருந்தால் ஒருவர் மாத்திரம் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று இரண்டு முகக்கவசங்களை அணிந்துகொண்டு வெளியில் செல்லுமாறே நாங்கள் கேட்கின்றோம். இதுதான் புதிய சுகாதார வழிகாட்டலாகும். சனக்கூட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை முடியுமானவரை தவிர்த்து கொள்ளவேண்டும்.
அதேபோன்று பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொண்டவர்கள் அதன் பெறுபேறு கிடைக்கும்வரை யாரும் வெளியில் செல்லாமல் தனிமையிலேயே இருக்கவேண்டும். அவ்வாறு யாராவது பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டுள்ள ஒருவருடன் நெருங்கிப்பழகி இருந்தால், அவர் உடனடியாக தனது பொது சுகாதார அதிகாரிகளிடம் அதுதொடர்பில் முறையிட்டு, சுயதனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை, பி.சீ.ஆர். பரிசோதனைகள், ஒட்சிசன் போன்றவற்றை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்று.
அதனால் பொது மக்கள் இதுதொடர்பாக சிந்திக்காமல் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தால் எங்களுக்கு இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் போவதில்லை.
தற்போது நாட்டில் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருவது மேல்மாகாணத்தில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கண்டி, குருணாகல். மாத்தளை மாவட்டங்களாகும். தொற்றாளர்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படும் கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா நகரில் முகக்கவசம் அணியாது பயணித்தவர்களுக்கு எதிராக இராணுவத்தினரும், பொலிசாரும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது 28 பேருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்யப்பட்டன.
வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (11.05) பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் முககவசம் அணியாது பயணித்தவர்கள், முககவசத்தை சீராக அணியாது பயணித்தவர்கள் ஆகியோரை வழிமறித்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகனைளயும் பதிவு செய்தனர்.
அத்துடன், பழைய பேரூந்து நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பேரூந்துகளையும் வழிமறித்து சோதனை மேற்கொண்டதுடன், பேரூந்துகளில் முகவசத்தை சீராக அணியாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், முககவசத்தை அணியாமை மற்றும் முககவசத்தை சீராக அணியாமை என்பவை தொடர்பில் 28 பேருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர்.
தேவை ஏற்பட்டால் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அது நிராகரிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் மே 30 வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா முன்னர் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளின் செயற்பாடுகளை பாதிக்காது என்று அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் அச்சம் காரணமாகவே இவ்வாறான நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தடை பொருந்தாது.
மேலும் கோவிட் நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கைக்கு அமைய சில வேளைகளில் மாகாணங்களுக்கு உள்ளேயும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று காலை இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடும் போது இந்தத் தகவைல வெளியிட்டார்.
இலங்கையில் நேற்றைய தினம் 26 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நேற்று 2, 573 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 128, 479 ஆக அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 128,479 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 801 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.