இன்றுமுதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு : ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!

பயணக் கட்டுப்பாடு..

கொவிட் 19 தொற்றுநோயை ஒழிக்க அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடல்களின் விளைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை, அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல்,

மக்கள் ஒன்றுகூடும் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்தல், வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசித்தல், தங்கியிருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், நோய்த்தொற்றாளர்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளை தனிமைப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”கொவிட் 19 தொற்றுநோய் நிலைமைகளுடன் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த தொற்றுநோயிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக அவர் அனைத்து தரப்பினருடனும் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறுகளை உங்களுக்கு முன்வைக்க நான் தயாராக இருக்கிறேன்.

500,000 அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக கிடைக்கப் பெற்றதுடன், மேலும் 500,000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்தது.

மேலும் 265,000 தடுப்பூசிகள் எமக்குக் கிடைக்கப் பெற்றன. அதன்படி, இலங்கைக்கு 12 இலட்சத்து 65,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன. முதல் தடுப்பூசி ஏற்றலின் போது, 9,25,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலைமை காரணமாக, இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப் பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டது.

இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு சுமார் 600,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தேவை என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனைப் பெறுவதற்காக அரசாங்கம் தற்போது பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகிறது.

இதற்கிடையில், இலங்கைக்கு சீனாவிடமிருந்து 600,000 சைனோபார்ம் தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றன. இதனைப் பயன்படுத்த உலக சுகாதார தாபனத்தின் ஒப்புதல் கிடைத்திருக்கவில்லை.

எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக உலக சுகாதார தாபனத்துடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின் விளைவாக, அன்று மாலையிலேயே உலக சுகாதார தாபனம் “சைனோபார்ம்” தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, மறுநாள் சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 25,000 தடுப்பூசிகள் வீதம் முதலில் மேல் மாகாணத்தில் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவிடமிருந்து 03 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுவதற்காக சீன அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன. அத்தடுப்பூசிகள் கிடைத்தவுடன் ஏனைய மாகாணங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியையும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டத்தில், இலங்கைக்கு 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஸ்புட்னிக் தடுப்பூசி முறையானது பயன்படுத்தப்படும் ஏனைய தடுப்பூசிகளிலிருந்து சற்று வித்தியாசமாக இருப்பதால், எமது சுகாதாரத் துறை புதிய முறைமைகளை பின்பற்றி கொத்தட்டுவ பகுதியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது. இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், 85,000 தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கவுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளதைப் போன்று எங்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மூலம் தற்போதைய நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும்

என்பதுடன், இலங்கையின் வலுவான சுகாதார அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார பணிக்குழாமினர் தொடர்பில் ஜனாதிபதி பூரண நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

உலக சுகாதார தாபனம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் வலுவான சுகாதார சேவை முறையை பாராட்டியுள்ளது. இருப்பினும், இந்த எல்லா சூழ்நிலைகளுடனும், கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மக்களின் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டுகிறார்.

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இணங்க சுகாதாரத் துறை வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி சமூக இடைவெளியை பேணுதல், மற்றும் தேவையற்ற கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற சமூகப் பொறுப்புகளில் அனைத்து பிரஜைகளும் கவனம் செலுத்துவது ஒரு ஆரோக்கியமான தேசத்திற்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி நம்புகிறார்.

கொவிட் 19 தொற்றுநோயை ஒழிக்க அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடல்களின் விளைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை, அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள் ஒன்றுகூடும் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்தல்,

வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசித்தல், தங்கியிருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், நோய்த் தொற்றாளர்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளை தனிமைப்படுத்துதல், போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகளை விதிக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் நாட்டின் அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக பேணப்படும் வகையிலும் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்திட்டங்களுக்கு ஏற்ப நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள் என்று ஜனாதிபதி நம்பிக்கை கொண்டுள்ளார்.

கிணற்றில் விழுந்த 70 வயது மூதாட்டிக்கு நடந்த கதி!!

மூதாட்டி…

கிணற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டியை போலீசார் உயிருடன் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரேணிகுண்டாவை சேர்ந்தவர் சுப்பம்மா (வயது 70). இன்று அதிகாலை தன்னுடைய வயலுக்கு சென்ற அவர் கால் தவறி விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

கிணற்றில் விழுந்த சுப்பம்மா தண்ணீர் இறைப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பைப்பை பிடித்து கொண்டு உதவி கேட்டு சப்தம் போட்டு கொண்டிருந்தார்.

மதியம் 3 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் சுப்பம்மாவின் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது சுப்பம்மா கிணற்றில் விழுந்து உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதை பார்த்த அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு சென்ற போலீசார் கட்டில் ஒன்றை கயிறு மூலம் கட்டி கிணற்றுக்குள் இறக்கி அதன் மூலம் மூதாட்டியை மீட்டனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பாட்டிக்கு ஆயுசு கெட்டி என நெட்டிசன்கள் விமர்சித்தும் வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

வெளிநாட்டு அரசின் பாராட்டை பெற்ற தமிழன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

சிங்கப்பூரில்…

சிங்கப்பூரில் பார்வையற்ற முதியவர் சாலையை கடக்க உதவிய தமிழருக்கு அந்த நாட்டு அரசு பாராட்டி அன்பளிப்புகளை வழங்கியுள்ளது. தமிழகத்தின் சிவகங்கை பகுதியை சேர்ந்த குணசேகரன் மணிகண்டன் (26), சிங்கப்பூரில் நில ஆய்வு உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சிங்கப்பூரின் அங் மோ கியோ அவென்யூ பகுதியில் பார்வையற்ற முதியவர் சாலையை கடக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தார்.

இதை பார்த்த குணசேகரன் மணிகண்டன், அந்த முதியவரை கைப்பிடித்து அழைத்து சென்று பாதுகாப்பாக சாலையை கடக்க செய்தார். மேலும் அவரது விருப்பப்படி மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டார்.

இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதுவரை 2.8 லட்சம் பேர் வீடியோவை பார்த்துள்ளனர்.

சிங்கப்பூர் அரசின் மனித சக்தி துறையின் கீழ் இயங்கும் ‘ஏஸ்’ அமைப்பின் அதிகாரிகள், சமூகவலைதள வீடியோவை ஆதாரமாகக் கொண்டு குணசேகரன் மணிகண்டனை கண்டுபிடித்தனர். சிங்கப்பூர் அரசு சார்பில் அவரை கவுரவித்து அன்பளிப்பையும் வழங்கினர்.

இதுகுறித்து குணசேகரன்மணிகண்டன் கூறும்போது, “முடிந்தவரை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனது பெற்றோர் எனக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

அந்த அறிவுரையை இப்போதும் கடைபிடித்து வருகிறேன். அரசு சார்பில் அளிக்கப்பட்ட அன்பளிப்புகளை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டேன். எனது வீடியோவை அம்மா, அப்பா, சகோதரர், உறவினர்கள் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்” என்றார்.

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் : நான்கு வாகனங்கள் சேதம்!!

விபத்து..

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (10.05.2021) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் தரித்து நின்ற வாகனத்துடன் காரொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை குறித்த விபத்து சம்பவத்தில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

அப்பகுதியில் சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனங்களை அவதானிக்காது தென்பகுதி நோக்கி பயணித்த கார் தரித்து நின்ற வானுடன் மோதியுள்ளது.

விபத்துக்குள்ளான வான், அதன் முன்னால் தரித்த நின்ற மோட்டார் சைக்கிளுடன் சென்று எதிரே நின்ற ரிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்ணியிடம் இப்படி நடந்து கொண்டீர்கள்? : கணவனின் தம்பிக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் அண்ணியை கேலி, கிண்டல் செய்தவர்களை தட்டிக் கேட்ட கொழுந்தன் கொ.லை செ.ய்.யப்பட்டுள்ள சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பிரியா (24). நேற்று முன்தினம் இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது வரும் வழியில் நின்று கொண்டிருந்த 6 பேர், பிரியாவை ஆ.பா.ச வா.ர்த்தையால் திட்டி கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த பிரியா இதுபற்றி தனது கணவர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்தார். இதையடுத்து ரவிச்சந்திரன், தனது மனைவியை கிண்டல் செய்தவர்களிடம் த.ட்டிக்கேட்டுள்ளார்.

இதில் ரவிச்சந்திரனை அவர்கள் தா.க்.கி.ன.ர். இதுபற்றி அறிந்ததும் ரவிச்சந்திரனின் தம்பி வையாபுரியும் (36) அங்கு சென்று, அவர்களை கண்டித்து ஏன் என் அண்ணியிடம் இப்படி நடந்து கொண்டீர்கள் மற்றும் அண்ணனை ஏன் தா.க்.கி.னீ.ர்.க.ள் என நியாயம் கேட்டார்.

இதில் கோபமடைந்த அவர்கள் 6 பேரும் சேர்ந்து வையாபுரியை க.ல்.லா.ல் தா.க்.கி.வி.ட்.டு த.ப்.பி ஓ.டினர். ப.லத்த கா.யமடைந்த வையாபுரியை அக்கம்பக்கத்தினர் மீ.ட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வையாபுரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ.றந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த பு.காரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தினர்.

விசாரணையில் வையாபுரியை கொ.லை செ.ய்.தது அதே பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் ராமலிங்கம்(27), தன்வேல் மகன்கள் இளவரசன் (38), ரமேஷ்(35), வையாபுரி மகன் செந்தாமரை(25), சங்கர் மகன் ராகுல்(20), அண்ணாமலை மகன் அஜித்குமார்(20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமலிங்கம் உள்பட 6 பேரையும் பொலிசார் கை.து செ.ய்து, தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக மகளின் உடலை 35 கி.மீ. தோளில் தூக்கிச் சென்ற தந்தை : பரிதாப காட்சி!!

மத்திய பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கி.மீ. தூக்கிக் கொண்டு தந்தை நடந்து சென்ற பரிதாப சம்பவம் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்ரவுலி மாவட்டத்தை ஒட்டி கடாய் கிராமத்தை சேர்ந்தவர் திரபதி சிங் கோண்ட். இவரது 16 வயது மகள் கடந்த 5-ஆம் திகதி வீட்டில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

த.ற்.கொ.லை ச.ம்பவத்தை விசாரிக்க வந்த பொலிஸார், பிரேத பரிசோதனை நடத்த சடலத்தை சிங்ரவுலி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரக் கூறினர்.

ஏழ்மையான நிலையில் உள்ள திரபதியால், மகளின் ச.டலத்தை கொண்டு செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டிலில் வைத்து தூக்கி செல்ல முடிவு செய்தார்.

அதன்படி வீட்டில் இருந்த கயிற்று கட்டிலில் மகளின் ச.டலத்தை வைத்து 35 கி.மீ. தூரம் தூக்கிச் சென்றுள்ளார். சுமார் 7 மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் ச.டலத்தை ஒப்படைத்தனர்.

இந்த பரிதாப காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தந்தை திரபதி சிங் கோண்ட் கூறுகையில், ‘‘காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு மருத்துவமனையை அடைந்தோம்.

எங்கள் கிராமத்திலிருந்து ஒரு கிமீ தூரத்தில் சாலை ஆரம்பிக்கிறது. அங்கிருந்தாவது வாகன வசதியை உள்ளாட்சி நிர்வாகம் செய்திருக்கலாம்.

நாங்கள் தோளில் சுமந்து சென்றதால், எங்கள் உடல்நிலை மோ.சமடைந்துள்ளது. இது மிகப்பெரிய பி.ரச்சினை, ஆனால் எங்களுக்கு ஒருவரும் தீர்வு அளிக்கவில்லை” என கூறினார்.

பொலிஸார் தரப்பில் கூறுகையில், ‘‘ச.டலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு வருவதற்கெல்லாம் டிபார்ட்மென்ட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை, அதனால் வாகன உதவி எல்லாம் எங்களால் செய்து தர முடியாது’’ என்றனர்.

தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரிக்கலாம் : மக்களே அவதானம்!!

கொரோனா..

அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கையில் தினமும் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என நம்புவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு அமையவே தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அடையாளம் காணப்படாது சமூகத்திற்குள் இருக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையானது இதனை இரண்டு மடங்காக இருக்கலாம் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். சில சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் போது 20 முதல் 25 வீதமான தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.

எதிர்காலத்தில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க தேவையில்லை எனினும் அவர்களில் 17 வீதமானவர்களுக்கு ஒக்சிஜன் தேவைப்படும்.

17 வீதம் என்பது பெரிய எண்ணிக்கை என்பதால், வைத்தியசாலைகளின் நோயாளிகளின் கொள்ளவு அதிகரிக்கும். இது சம்பந்தமாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோயாளிகள் அதிகரிக்காமல் இருப்பதை தடுக்க வேண்டியது சமூகத்தில் உள்ள அனைவரதும் பொறுப்பு. நாட்டை மூடுவதை மூக்கு மற்றும் வாய்களை மூடிக்கொள்வது இலகுவானது. வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முககவசத்தை பயன்படுத்துவது போதுமானது எனவும் உபுல் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் ஒரே வாரத்தில் 105 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் மரண எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 801 ஆக அதிகரித்துள்ளதுடன் கடந்த வாரத்தில் மாத்திரம் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி வரை இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 700 ஆக இருந்ததுடன் கடந்த வாரத்தில் தினமும் 13, 11, 14, 11, 19, 22, 15 என மரணங்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கை முதலாவது கோவிட் தொற்றாளி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டதுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை 100 மரணங்கள் சம்பவித்திருந்தன.

முதலாவது மரணத்தின் பின்னர் கடந்த 8 மாதங்களில் 200 வது மரணம் ஏற்பட்டது. இதனையடுத்து 300, 400 என ஒரு மாத காலத்திற்குள் மரணங்கள் ஏற்பட்டன.

300 வது மரணத்தில் இருந்து 400 வது மரணம் ஏற்பட 18 நாட்கள் சென்றன. 400 வது மரணத்தில் இருந்து 500 வது மரணம் ஏற்பட 21 நாட்கள் சென்றன. 500வது மரணம் ஏற்பட்டு ஒரு மாதமும் ஒரு வாரமும் கடந்த நிலையில் 600 வது மரணம் ஏற்பட்டது. அதன் பின்னர் 20 நாட்களுக்கு 700 வது மரணம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையம் நாளை முதல் இயங்கும்!!

கொரோனா சிகிச்சை நிலையம்..

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையம் நாளை (11.05) முதல் இயங்கும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தின் இறுதிக் கட்ட வேலைகளை இன்று (10.05) பார்வையிட்ட பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்கள் போடப்பட்டுள்ளதுடன், 200 கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இன்றைய தினம் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு, பாக்கியம் அறக்கட்டளை, அபிராமி உபாசகி, ராம் பவுண்டேசன் என்பன இணைந்து 30 மின் விசிறிகளை குறித்த சிகிச்சை நிலையத்திற்காக வழங்கியுள்ளனர். அதனை நாம் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது பயன்படுத்த முடியும்.

இந்தநிலையில், வவுனியா பொருளாதார நிலையம் கொரோனா நோயாளர்களை உள்வாங்குவதற்கு தயாரான நிலையில் தற்போது சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளதுடன், நாளை(11.05) முதல் நோயாளர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

குறித்த கொரோனா சிகிச்சை நிலையத்தை அரச அதிபர், இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் பார்வையிட்டதுடன், அன்பளிப்பாக சிகிச்சை நிலையத்திற்கு வழங்கப்பட்ட மின் விசிறிகளையும் பெற்றுக் கொண்டனர்.

ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம் : ஊழியர்களுக்கான அவசர அறிவித்தல்!!

அவசர அறிவித்தல்..

நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் சேவையாற்றும் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

உணவு மற்றும் பானங்களை அருந்தும் போது முககவசத்தை கழற்ற வேண்டும் என்பதால், பலர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதால், கோவிட் 19 வைரஸ் பரவலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது அலுவலகங்களில் பணிப்புரிவோர் தமது பணியிடங்களில் முககவசம் அணிதல், இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இதனை தவிர பணியிடங்களில் இருப்போரின் உடல் உஷ்ணத்தை பரிசோதிக்க தேவையான வசதிகளை நிறுவனங்களின் பிரதானிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை!!

கொரோனா..

கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் கோவிட் நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துச் செல்லும் நிலையில் அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அதிகாரிகள் இன்றைய தினம் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுடன், ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளேயும் பங்கேற்றிருந்தார்.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கோவிட்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட உள்ளது. பீ.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவும் பரிசோதனை முடிவுகளை துரித கதியில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவிட் சிகிச்சை நிலையங்களுக்கு போதியளவு ஒட்சிசனை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தேவை ஏற்பட்டால் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் வரும் : இராணுவத் தளபதி தகவல்!!

போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்..

ரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரமழான் விடுமுறை மற்றும் அடுத்த நாட்களில் வார இறுதி விடுமுறை என்பதால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர், நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்காமல் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் பிரதேசங்களை மாத்திரம் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய இதுவரையில் (நேற்று மாலை வரை) 6 பொலிஸ் பிரிவுகளும் , 114 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விரைவில்?

போக்குவரத்து கட்டுப்பாடுகள்..

கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கோரிக்கை விடுக்கப்பட்டால் மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

கோவிட் பரவல் நிலை நாள்தோறும் மாற்றமடைந்து வருகிறது. எனவே அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நாள்தோறும் மாறிவரும் நிலைமைகளை கருத்திற் கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளதாது என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

பல்கலைக்கழக மாணவியிடம் சேஷ்டைவிட்ட மாணவன் கைது!!

மாணவியிடம்..

கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை து.ஷ்.பி.ரயோகம் செய்த மாணவனை நேற்று கை.து செ.ய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்று வரும் மா.ணவியே இவ்வாறு பா.திக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக மா.ணவனை கை.து செ.ய்ததுடன், பா.திக்கப்பட்ட மா.ணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட மா.ணவன் விடுதியில் தங்கியிருந்து வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வரும் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது கொ.லை செ.ய்யப்பட்ட பெண்ணின் ச.டலம்!!

வெளிநாட்டிலிருந்து..

குவைட்டில் கொ.லை செ.ய்.யப்பட்ட வீட்டுப் பணிப் பெண்ணின் ச.டலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பெண் கடந்த 2019ஆம் ஆண்டு குவைட்டுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி இந்தப் பெண் க.த்.தி கு.த்.து.க்.கு இ.லக்காகி உ.யிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரின் க.த்.தி கு.த்.து.க்.கு இ.லக்காகியே இந்தப் பெண் உ.யிரிழந்துள்ளார் என வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் ச.டலம் நேற்றைய தினம் கட்டார் விமான சேவை நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ம.ரணம் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாகவும் நேற்றைய தினம் நீதிமன்ற வி.சாரணை நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க பொலிஸார் சம்பவம் தொடர்பிலான வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் மோசமான நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கோவிட் வைரஸ்..

கோவிட் வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் எவ்வித கருத்து அல்லது தரவுகளை முன்வைத்தாலும் இலங்கை மிகவும் மோசமான மட்டத்தில் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை சாதாரமாக அல்லது இலகுவாக எண்ண வேண்டாம் என மீண்டும் அரசாங்கத்திற்கும் சுகாதார பிரிவுகளுக்கும் தெரிவித்துக் கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது முதலாவது கோவிட் அலை போன்று சாதாரணமான ஒன்று அல்ல எனவும் மிகவும் பயங்கரமான அலை எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் நாட்களில் பாரிய ஆபத்தான அளவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுப்பததற்கான உடனடி வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளிகள் அதிகரிப்பதனால் அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாகவும் அந்த தாமத்தை உடனடியாக தீர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-