வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான..

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2021 ஆம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ Level 5) கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்காக கீழ்வரும் பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1) கணனி டிப்ளேமா
2) ஆங்கில டிப்ளோமா
3) கணக்கியல் டிப்ளோமா
4) குடிசார் எந்திரவியல் டிப்ளமோ

தகைமைகள் : கணனி டிப்ளேமா (NVQ 5)

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ICT பாடத்தில் திறமைச்சித்தி (C) அல்லது சாதாரண சித்தி (S) உள்ளடங்கலாக 3 பாடங்களில் சித்தி அல்லது கணனி தொடர்பான பாடநெறியில் NVQ 3 / NVQ 4 சான்றிதழ் பெற்றிருத்தல். காலம் : 1 1/2 வருடங்கள் – முழுநேரம், ஊடக மொழி : ஆங்கிலம், வயதெல்லை : 17-29.

தகைமைகள் : ஆங்கில டிப்ளோமா(NVQ 5)

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 படங்களில் சித்தியுடன் General English யில் S தர சித்தி அல்லது NCE/NCPE/ACS என்பவற்றில் ஏதாவது ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். காலம் : 1 1/2 வருடங்கள் – முழுநேரம், ஊடக மொழி : ஆங்கிலம், வயதெல்லை :17-29.

தகைமைகள் : தேசிய கணக்கியல் டிப்ளேமா (NVQ 5 & NVQ 6 Combined)

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தகத் துறையில் 3 பாடங்களில் சித்தியுடன் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆங்கிலத்தில் சித்தி அல்லது NCAT – NVQ 4 சித்தியடைந்திருத்தல் வேண்டும். காலம் : 2 வருடங்கள் – முழுநேரம், ஊடக மொழி : ஆங்கிலம், வயதெல்லை :17-29.

தகைமைகள் : குடிசார் எந்திரவியல் டிப்ளமோ (Civil Engineering) (NVQ 5)

உரிய துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. க.பொ.த சாதாரணதர பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் போதனா மொழி, கணிதம், விஞ்ஞானம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். மற்றும் உரிய துறையில் NVQ 4 சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும். காலம் : 3 வருடங்கள் – பகுதிநேர, ஊடக மொழி : ஆங்கிலம், வயதெல்லை : 18+.

விண்ணப்ப படிவங்களை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிக தொடர்புகளுக்கு

அதிபர்
தொழில்நுட்பக்கல்லூரி
மன்னார் வீதி
நெளுக்குளம்
வவுனியா

024 2223664
024 2226720
024 2050177

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பில் புதிய அறிவிப்பு!!

புதிய அறிவிப்பு..

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன், அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல அந்நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, கர்ப்பிணிகளாகவுள்ள ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் நாளை வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் சில இன்று (09.05) இரவு வெளியாகின.

அதில், பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், நெடுங்கேணியில் உள்ள இராணுவத்தினர் இருவருக்கும், வீதி திருத்த பணியில் ஈடுபடும் மாமடுவைச் சேர்ந்த ஒருவருக்கும் என 4 பேர் மேலும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான 4 பேரையும் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார பிரிவினர், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இலங்கையில் ஒரே நாளில் 2659 பேருக்கு கொரோனா தொற்று : மலையென உயரும் எண்ணிக்கை!!

கொரோனா..

இலங்கையில் இன்றைய தினம் ஒரே நாளில் இரண்டாயிரம் கோவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். நாள் ஒன்றில் இலங்கையில் கோவிட் தொற்றாளர்கள் அதி கூடுதலாக பதிவான நாளாக இது கருதப்படுகின்றது.

இன்றைய தினம் இறுதியாக 927 புதிய தொற்றுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி இன்றைய தினம் மொத்தமாக இதுவரையில் 2659 புதிய கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை,உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் உருமாறிய கோவிட் – 19 வைரஸின் திரிபுகள் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து வெளியாகியுள்ள தீர்மானம்!!

பாடசாலை…

நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் கல்வித்துறை நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது என்பது குறித்து கலந்தாலோசனை செய்யும் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகளை முடக்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும், முடிந்தளவு விரைவில் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக உறங்கும் 17 வயதுச் சிறுமி : முடிவு தெரியாமல் தவிக்கும் பெற்றோர்!!

இந்தோனேஷியாவில்..

இந்தோனேஷியாவில் சிறுமி ஒருவர் மிகவும் அரிதிலும், அரிதான நோயால் பா.திக்கப்பட்டு தொடர்ந்து பல நாட்கள் தூங்கி வருவது பெற்றோரிடையே மிகுந்த வே.தனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் Banjarmasin பகுதியைச் சேர்ந்த Siti Raisa Miranda என்ற 17 வயது சி.றுமி கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டில் தூ.ங்கிய போது, அதன் பின் 13 நாட்கள் தூங்கினார். இதனால் கடும் அ.திர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இது Kleine-Levin நோயின் அறிகுறி, இது ஒரு மில்லியன் மக்களில் ஒருவரை பாதிக்கும், மிகவும் அரிதிலும், அரிதான நோய் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும், எந்த ஒரு பலனும் இல்லை. இப்படி சிறுமி தொடர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவர் தூங்குகிறாரா? இல்லையா? என்பதை அறிய முடியாமல், பெற்றோர் அவரை உடனடியாக அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து, பத்து நாட்களுக்கு மேல் வைத்து மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

சிறுமியின் பெற்றோர், அவள் தூங்கும்போதெல்லாம் அவள் நன்றாக இருக்கிறாள் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியவில்லை, இதன் காரணமாகவே நாங்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறோம்.

அவர் இது போன்ற நிலையில் இருக்கும் போது, நாங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. இது போன்ற சமயங்களில் எங்களுக்கு மருத்துவமனையின் உதவி தேவை, மகளின் உடல்நிலை குறித்து பரிசோதித்து பார்த்தால், அவள் நன்றாக இருக்கிறாள் என்று வரும், ஆனால் அந்த தூக்கம் தான் என்று வேதனையுடன் கூறினர்.

Kleine-Levin-க்கு இதுவரை எந்த ஒரு சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சிறுமி தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதால், இவரைக் கண்ட இணையவாசிகள், விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும், நிஜ வாழ்க்கையில் ஒரு Sleeping Beauty என்று கூறி வருகின்றனர்.

தனது சொந்த வீட்டை தீயிட்டு கொளுத்திவிட்டு ரிலாக்சாக உட்கார்ந்து ரசித்த பெண் : காரணம் என்ன?

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் வீட்டை தீவைத்து கொளுத்திவிட்டு ரிலாக்சாக புல்வெளியில் உட்கார்ந்திருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீசில் கவுண்டியை சேர்ந்தவர் கெயில் மெட்வேலி (47). இவர் தான் வசித்த வீட்டை தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் வீட்டுக்கு வெளியில் இருக்கும் புல்வெளியில் வந்து உட்கார்ந்த மெட்வேலி ரிலாக்சாக வீடு தீப்பற்றி எரிவதை ரசித்து பார்த்துள்ளார்.

இதையெல்லாம் அக்கம்பக்கத்தினர் வீடியோ எடுத்த நிலையில் அது தற்போது வைரலாகியுள்ளது. இதனிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி மெட்வேலி வசித்த வீட்டில் அவருடன் சேர்த்து மொத்தமாக 4 பேர் வசித்தனர். வீடு தீப்பிடிக்கும் போது இருவர் வெளியில் சென்ற நிலையில் மெட்வேலியும் இன்னொரு நபரும் இருந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்தே அந்த நபரை வீட்டுக்குள் விட்டு வெளியில் வந்த மெட்வேலி வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளதாக தெரிகிறது.

பின்னர் வீட்டுக்குள் இருந்த நபர் தன்னை காப்பாற்றுமாறு அலறிய நிலையில் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைந்துள்ளனர். இந்த நிலையில் பொலிசார் மெட்வேலியை கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொ.லை முயற்சி வழக்கு, ஒருவரை தா.க்.கி.ய.து, பொறுப்பற்ற வகையில் ஆபத்தை விளைவிக்கும் செயலை செய்தது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

தினமும் 21 மணி நேர உறக்கம் : ஸ்தம்பித்துப் போன வயிறு : அவதிப்படும் இளம்பெண்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் சிறுநீரக கற்கள் காரணமாக இளம்பெண் ஒருவர் உடல் மெலிந்து, நாளுக்கும் 21 மணி தூங்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தென் யார்க்ஷயரின் டான்காஸ்டரைச் சேர்ந்த எம்மா டக் (Emma Tuck) என்பவரே மிக மோசமான இந்த நிலையில் உள்ளார். வெறும் 21 வயதேயான அவர் தற்போது சிறப்பு சிகிச்சையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இரண்டு பக்கத்திலும் சிறுநீரக கற்களால் பாதிப்புக்குள்ளான அவரால் தற்போது சரிவர சாப்பிட முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் நாளுக்கும் 21 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்தபடி உள்ளார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் வரையில் எம்மா சாதரண நிலையிலேயே இருந்துள்ளார். மட்டுமின்றி, லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் பட்டம் பயின்றும் வந்தார்.

திடீரென்று ஒருநாள் சிறுநீரக கற்களுக்கான சிகிச்சையை நாடிச்சென்ற எம்மாவுக்கு, அது சிறுநீர் தொற்றாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனவும், எம்மா இளவயது என்பதால் அவருக்கு சிறுநீரக கற்களுக்கான வாய்ப்புகள் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஸ்கேன் செய்து பார்த்ததில், எம்மாவுக்கு சிறுநீரக கற்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஒருபக்க சிறுநீரக கல் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னொன்று அவரது சிறுநீரகத்தில் சிக்கிக்கொண்டது.

இதனையடுத்து குழாய் மூலம் அந்த இன்னொரு கல்லையும் மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர். அந்த குழாயானது சிலவார காலம் அவருக்குள் இருந்துள்ளது.

ஆனால் அதன் பின்னரே எம்மா அவதிப்படத் தொடங்கினார். அவருக்கு அளித்த மருத்துவ சிகிச்சை காரணமாக அவரது வயிறு ஸ்தம்பித்தது. மட்டுமின்றி சாப்பிட முடியாமல் அவதிப்பட்டார்.

இதனால் உடல் எடை அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு 34 கிலோவாக குறைந்தது. இதனையடுத்து மீண்டும் சிகிச்சையில் இருந்து வந்தார் எம்மா. கடந்த மூன்றாண்டுகளாக அவதிப்பட்டுவரும் எம்மாவுக்கு gastric pacemaker கருவியை பொருத்தினால் பலன் கிடைக்கும் என மருத்துவர்கள் தரப்பு பரிந்துரைத்துள்ளது.

NHS-ல் இதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் தனியாக பொருத்திக் கொள்ள 30,000 பவுண்டுகள் வரை செலவாகும் என கூறப்படுகிறது. மட்டுமின்றி லண்டனுக்கு சென்றால் உரிய சிகிச்சைக்கு வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அவரால் படுக்கையை விட்டு எழுந்து நடமாடும் அளவுக்கு உடம்பில் தெம்பில்லை என்பதால் அதுவும் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது எம்மாவின் நண்பர்களும் அவரது உறவினர்களும் சிறப்பு சிகிச்சைக்கான பணம் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

52 முறை ஏலியனால் க.டத்தப்பட்டேன் : பீ.தியை கிளப்பும் பிரித்தானிய பெண்!!

பிரித்தானிய பெண்..

பிரித்தானியாவில் 50 வயதாகும் பெண் ஒருவர் தனது சிறு வயதிலிஇருந்து 50-க்கும் மேற்பட்ட முறை வேற்று கிரகத்துக்கு க.ட.த்.தி செ.ல்லப்பட்டுள்ளதாக ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் மேற்கு யார்க்ஷைர் மாகாணத்தில் உள்ள ப்ராட்ஃபோர்டு நகரத்தைச் சேர்ந்தவர் பவுலா ஸ்மித் (Paula Smith). இவர் போக்குவரத்து துறையில் வேலைபார்த்து வருகிறார். அவர் தனது வாழ்நாளில் 52 முறை வேற்றுகிரக வாசிகளால் க.டத்தப்பட்டு அவர்களது விண்கலத்தில் (UFO) பயணித்துள்ளதாகவும் கூறிவருகிறார்.

முதல் முறையாக தனது கு.ழந்தை பருவத்தில் க.ட.த்தப்பதாக கூறுகிறார். க.ட.த்.தப்பட்டபோது, வேற்றுகிரக வாசிகள் தன்னிடம் பூமியில் மனிதர்களிடம் இல்லாத ஒரு தொழிநுட்பத்தை காண்பித்ததாக கூறுகிறார்.

அவர்கள் (வேற்றுகிரக வாசிகள்) தன்னிடம் பூமியின் அ.ழிவைக் குறிக்கும் சில புகைப்பட தொகுப்பை காட்சிப்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும், அவர் பார்த்ததாக கூறப்படும் ‘வெள்ளி நிற ஏலியனை’ வரைந்து காட்டியுள்ளார்.

பவுலா முதல் முறையாக 1982-ஆம் ஆண்டு அவர்களின் பூமராங் போன்ற விண்வெளி கப்பலை பார்த்ததாகவும், அவர் சில முறை க.ட.த்தப்பட்டு மீண்டும் பூமிக்கு அனுப்பி வைக்கும்போது, தனது கைகளில் சில முத்திரைகள் கு.த்தப்பட்டதாகவும் கூறுகிறார்.

தனது அனுபவங்களை யாரிடமும் இதுவரை கூறியது இல்லை என கூறிய பவுலா, இதனை வெளியே சொன்னால் தன்னை பைத்தியம் என்று நினைப்பார்கள் என தெரியும் என்கிறார்.

மேலும், தன்னைப் போல் மில்லியன் கணக்கானவர்கள் இல்லை என்றாலும் குறைந்தது ஆயிரக் கணக்கானவர்கள் இதே அனுபவங்களை கொண்டிருப்பார்கள் எனவும் கூறுகிறார். இவர் கூறிவரும் விடயங்கள் தற்போது ப.ர.பரப்பை ஏற்படுத்திவருகின்றன.

கொரோனாவால் உயிரிழந்த 31 வயதான நிறைமாத கர்ப்பிணிப் பெண் : மக்களுக்காக உயிரை கொடுத்த சோகம்!!

கொரோனாவால்..

தமிழகத்தில் கொரோனா காலத்தில் மக்கள் நலனே முக்கியம் என பணியாற்றிய 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா (31).

இந்த நெருக்கடியான கொரோனா தொற்று காலத்திலும் கர்ப்பிணியாக இருந்தாலும் சண்முகப்பிரியா வழக்கம்போல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு பணிக்கு வந்து கொண்டிருந்தார்.

விடுமுறை காலத்திலும், பணிக்கு வந்து சிறப்பாக பணியாற்றினார். இந்நிலையில் அவருக்குக் கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு, மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 31 வயதான கர்ப்பிணி மருத்துவர், நோயாளிகளிடமும், உடன் பணியாற்றும் செவிலியர்களுடன் மிகவும் எளிமையாகவும், நட்புடன் இயல்பாகவும் பணிபுரிந்நு வந்ததாக கண்கலங்கி கூறுகின்றனர் உடன் பணிபுரிந்தவர்கள்.

மேலும் இதே போல், மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சிறப்பு காவல் படை எஸ்.ஐ. லட்சுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் 97ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து எஸ்.ஐ.யாக பதவி உயர்வு பெற்றவர். இவரது கணவர் சரவணக்குமார். மதுரை வணிகவரித் துறை அலுவலகத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மதுரை ஆத்திக் குளத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது உடல் இன்று காலை 9 மணி அளவில் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் தத்தனேரி மயானத்தில் அரசு வழிகாட்டு முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க ப.சு மா.ட்டு சி.றுநீரை கு.டிக்கும் பா.ஜ.க எம்எல்ஏ!!

சிறுநீரை குடிக்கும்..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க எம்எல்ஏ சுரேந்திர சிங், கொரோனா தொற்றில் இருந்து த.ப்பிக்க பசு மாட்டின் சி.றுநீரை கு.டித்து வருகிறார்.

உலகம் முழுவதும் கொரோன வைரஸ் தொற்றில் இருந்து பா.துகாக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதிது புதிதாக உருமாற்றம் அடைந்து லட்சக்கணக்கான உ.யிர்களை ப.லி வாங்கியுள்ள கொரோனா வைரஸைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் பீ.தியில் இருக்கின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநில பைரியா தொகுதி பா.ஜ.க எம்எல்ஏ சுரேந்திர சிங், ‘பசுவின் சிறுநீரை கு.டித்து வருவதால், நான் கொரோனா வைரஸ் பா.திக்கப்படாமல் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் பசுவின் சிறுநீரை எப்படி கு.டிப்பது என்பது குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், “தினமும் காலையில் பல் துலக்கிய பின்னர், வெறும் வயிற்றில் பசுவின் சிறுநீர் 5 மூடி அளவிற்கு குளிர்ந்த நீரில் கலந்து குடிக்கிறேன்.

வெறும் வயிற்றில் தான் சிறுநீர் கலவையை குடிக்க வேண்டும். கொரோனா நோயை மட்டுமின்றி, இதய நோய்களையும் குணப்படுத்த பசுவின் சிறுநீர் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

இவரது கருத்துக்கு பலரும் க.ண்டனம் தெரிவித்தும், ஆதாரமற்ற தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் வ.லியுறுத்தி வருகின்றனர்.

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்த மணப்பெண் சொன்ன வார்த்தை : பின்னர் நடந்த சோகம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தனக்கு கொரோனா இருப்பதாக கூறி இளம் பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும், குஷ்மாவிற்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏழை வீட்டு பெண்ணாக இருந்தாலும் அழகாக இருந்ததால் குஷ்மாவை மணப்பதற்காக ஹரிபிரசாத் வீட்டார் சில தவணையாக ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கமும் 13 சவரன் நகையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

திருமணத்துக்கு முந்தைய நாளன்று மஞ்சள் நலுங்கு செய்யப்பட்டது, மணமேடையில் மணமகனும், மணமகளும் முகமெல்லாம் மஞ்சள் பூசி அமர்ந்திருந்த நிலையில் மணமகனிடம் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாக கூற,

மணமகன் ஹரிபிரசாத்தோ பரவாயில்லை என்று கூற மணமேடையில் இருந்து எழுந்துசென்றுவிட்ட குஷ்மா, தனது தயாருடன் ஆட்டோவில் ஏறிசெல்ல முயன்றார்.

அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற மணப்பெண் தனக்கு, கொரோனா பாசிடிவ் என்று ரிசல்ட் வந்துள்ள நிலையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார் அளித்தார்.

அங்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்களிடம் நகை பணத்தை வாங்கிக் கொண்டு தாயும் மகளும் கொரோனா நாடகமாடுவதாக தெரிவித்தனர். மணப்பெண்ணிற்கு கொரொனா பாசிடிவ் என்ற தகவல் தெரிந்த நேரத்தில் இருந்தே பீதியுடன் காணப்பட்ட பொலிசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டுவதில் குறியாக இருந்தனர்.

தர்மபுரம் காவல் நிலையத்திற்கு சென்று நகை பணம் குறித்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்றும், மணப்பெண்ணுக்கு விருப்பமில்லா திருமணத்தை தங்களால் நடத்தி வைக்க முடியாது என்றும் கறாராக கூறி அனுப்பியுள்ளனர்.

15 வயது சிறுமியுடன் திருமணம் : 5 மாத கர்ப்பம் : தமிழகத்தில் இலங்கை தமிழ் இளைஞன் கைது!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட இலங்கை முகாமை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் வசந்த் என்கிற சூர்யா(19). இவர் 15 வயது சிறுமியை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

அச்சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாது காப்பு நல அலுவலர் சதீஷ்குமார், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,

போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்துள்ளனர். மேலும் சூர்யா மனைவியான 15 வயது சிறுமி அவரிடம் இருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அபாய நிலை : ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!!

ஜனாதிபதிக்கு அவசர கடிதம்…

நாட்டில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களை விட மும்மடங்கு சமூகத்தில் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேசமயம் எதிர்வரும் நாட்களில் மரணங்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டு மக்களின் நடமாட்டத்தை உடனடியாக கட்டுப்படுத்துங்கள் என சுகாதார அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

இலங்கையில் வேகமாக பரவும் திரிபடைந்த கொரோனா வைரஸ் : பயணங்களை தவிர்க்குமாறு கோரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் திரிபடைந்த வீரியமிக்க கோவிட் வைரஸ் பரவுவதனால் குறைந்தபட்சம் ஒரு மாத காலம் அத்தியாவசிய பயணங்களை தவிர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முடிந்தளவு வீட்டில் இருந்து நேரத்தை செலவிடுமாறு, கோவிட் வைரஸ் திரிபு தொடர்பில் ஆய்வு நடத்தும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீரியமிக்க கோவிட் வைரஸ் மரபணு தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் அது சமூக மட்டத்தில் பரவவில்லை என நினைக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் பிரித்தானிய வைரஸ் மிகவும் வேகமாக பரவும் மரபணுக்கள் எனவும், பிரித்தானிய மரபணுவில் ஆபத்துக்கள் அதிகம் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு வீரியமிக்க வைரஸ் பரவினால் அது உடலுக்குள் வரவிடாமல் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு மக்களுடையதென அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் தவறான முடிவால் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழில்..

தவறான முடிவெடுத்து கணவன் உயிரிழந்ததை அறிந்த மனைவியும் அதே வழியில் தனது உயிரைத் துறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக பட்டறையில் நேற்று மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது 34), அவரது துணைவி ரஜிதா (வயது 33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்துள்ளளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.