கொரோனா பரவலில் ஆசியாவில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கை!!

கொரோனா..

கடந்த ஒரு வார காலப்பகுதியில் இலங்கையில் கோவிட் பரவல் வேகம் 82 வீதமாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளன. தினமும் கோவிட் தொற்று குறித்து பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளும் பிரபல Worldometers இணையத்தளத்தின் புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நேபாளத்திலேயே அதிக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அதிகரிப்பு 105 வீதமாகும்.

அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இந்தியாவில் கோவிட் பரவலின் வேகம், அந்த நாட்டு மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 11 வீதமாகும். அது தெற்காசியாவில் குறைந்த நோயாளர்களின் வீதமாகும்.

அதற்கமைய இந்த பட்டியலில் முதலாது இடத்தை நேபாளமும், இரண்டாவது இடத்தில் இலங்கையும் மூன்றாவது இடத்தில் மாலைத்தீவும் பதிவாகியுள்ளது.

மூச்சுத் திணறிய கொரோனா நோயாளி : பைக்கிலேயே மருத்துவமனை கொண்டுசென்ற தன்னார்வலர்கள்!!

கேரள மாநிலத்தில்..

காத்திருந்தால் அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்ததால் அஸ்வினும் ரேகாவும் பைக்கில் அவரை அமரவைத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை நான்கு லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி தென்படாதவர்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அப்படித் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளைத் தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா பஞ்சாயத்தில் உள்ள டி.சி.டி சென்டரில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான உணவுகளை ஆலப்புழா பகவதிகால் யூனிட் டி.ஒய்.எஃப்.ஐ உறுப்பினர்களான அஸ்வின் குஞ்சுமோன் மற்றும் ரேகா பி.மோள் ஆகியோர் வழங்கி வந்தனர்.

நேற்று டி.சி.சி சென்டருக்கு உணவு வழங்க அஸ்வின், ரேகா ஆகியோர் சென்றனர். அப்போது மூன்றாவது மாடியில் கொரோனா நோயாளி ஒருவர் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார்.

இதைப் பார்த்த அஸ்வின், ரேகா ஆகியோர் அவரை உடனடியாகத் தரைத்தளத்துக்கு அழைத்து வந்தனர். அதைப் பார்த்த சென்டர் நிர்வாகிகள் உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வர 10 நிமிடங்கள் வரை ஆகும் எனக் கூறப்பட்டது.

அதுவரை காத்திருந்தால் அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்ததால் அஸ்வினும் ரேகாவும் பைக்கில் அவரை அமரவைத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

இது சமூக வலைதளங்களில் பரவியதால் அஸ்வின், ரேகா ஆகியோருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்து ரேகா பி.மோள் கூறுகையில், அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள ஆலப்புழா மகளிர் இன்ஜினீயரிங் கல்லூரிக்கு காலை 9 மணிக்கு உணவு வழங்கச் சென்றோம்.

அப்போது மூன்றாம் தளத்தில் ஒருவர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். நாங்கள் அவரை கொரோனா தொற்று பாதித்த பிற நோயாளிகள் உதவியுடன் தரைத்தளத்துக்கு அழைத்து வந்தோம்.

டி.சி.சி சென்டர் நிர்வாகிகள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கூறினர். ஆம்புலன்ஸ் வர 10 நிமிடங்கள் வரை ஆகும் என்றனர். அதுவரை அவர் உயிரை காப்பது கஷ்டம் எனத் தெரிந்தது. உடனே அவரை பைக்கில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தோம்.

அஸ்வின் பைக் ஓட்டினார். நோயாளியை நடுவில் உட்கார வைத்து நான் பின்னால் அமர்ந்துகொண்டேன். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

அங்கு முதலில் அட்மிட் செய்ய மறுத்தனர். பின்னர், நோயாளியின் நிலையைப் பார்த்து அவர்கள் அட்மிட் செய்து சிகிச்சை அளித்தனர். பின்னர், அவரை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றினர்” என்றார்.

மூச்சுத்திணறல் ஏற்பட்ட கொரோனா நோயாளியைக் காப்பாற்றிய அஸ்வினும் ரேகாவும் பாதுகாப்பாக முழுக்க பி.பி.இ கிட் அணிந்திருந்தனர். அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அஸ்வின் கூறுகையில், நாங்கள் பி.பி.இ கிட் அணிந்து பாதுகாப்பாக கொரோனா கேர் சென்டருக்குள் சென்று உணவு வழங்கி வந்தோம். அந்த சமயத்தில்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தோம்.

ஒருவேளை நாங்கள் பி.பி.இ கிட் அணியாமல் இருந்திருந்தாலும் அவரை பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்போம். அதனால் எங்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படலாம். ஆனால், ஓர் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம் அல்லவா?” என்றார்.

மின்னல் தா.க்.கி இளம் தாயொருவர் பரிதாபமாக ப லி!!

மின்னல்..

சிலாபம் – ஆனமடுவ, தோனிகல பகுதியில் மின்னல் தா.க்.கி இளம் பெண்ணொருவர் நேற்று உ.யிரிழந்துள்ளார். இதன்போது மற்றொரு பெண்ணும் மின்னல் தா.க்.கி ஆனமடுவ வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவத்தில் 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார். அதிக மழையுடனான காலநிலையின் போது குறித்த பெண் தேங்காய் உரிப்பதற்காக இரும்பு கம்பியொன்றை பயன்படுத்தியுள்ளார்.

இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அருகிலிருந்த பெண்ணும் மின்னல் தா.க்.க.த்.து.க்.கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக நாடு விரைவில் பேரழிவை எதிர்கொள்ளக்கூடும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

கொரோனா..

கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாசாரத்தில் நாடு விரைவில் பேரழிவை எதிர்கொள்ளக்கூடும். அத்துடன் யாருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் கட்டாயம் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கை மருத்துவ சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் உட்பட்ட அமைப்புகள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.

அதில் கோவிட் காரணமாக எதிர்பார்க்காத மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அது எதிர்காலத்தில் உண்மையான அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவிட் நோயாளிகளால் அனைத்து சுகாதாரத்துறை கட்டில்கள் மற்றும் சுகாதார வசதிகளின் பயன்பாடுகள் அதிகரித்து செல்கின்றன. தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனை கட்டில்களுக்காக நோயாளிகள் காத்திருக்கும்போது ஒக்சிசனின் தேவைப்பாடும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

சிகிச்சைக்காக வீட்டில் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், உண்மையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கைகள் மற்றும் அவர்களை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில், அடுத்த மூன்று வாரங்களில் இறப்புகளின் அதிகரிப்பை தவிர்க்க முடியாது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே மருத்துவமனைகளில் அதிக வசதிகளை ஏற்படுத்துவதும் நாட்டு மக்களில் குறைந்தது 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்துதும் அவசியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பின்னணியில் அவசரமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மருத்துவ நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

2020, அக்டோபர் இல் வெளியிடப்பட்ட கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட அரச வர்த்தமானி அறிவிப்பை மிகக் கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் மக்களின் இயக்கங்களுக்கு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும்.

வீடுகளில் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்படுவதை கண்காணிக்க உரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். கட்டில்கள், ஒக்சிசன் மற்றும் அதிதீவிர சிகிச்சை வசதிகளை வழங்குவதன் மூலம் நோய் தீர்க்கும் துறையை வலுப்படுத்தவேண்டும்.

பி.சி.ஆர் சோதனை மூலம் கோவிட் தொற்றை கண்டறிவதற்கும், நிலையான மற்றும் தடையற்ற விநியோகச் சங்கிலியை உறுதி செய்வதற்கும் நாடு முழுவதும் ஆய்வக சேவைகளை பலப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் இப்போது செயல்படவில்லை என்றால், அது எதிர்காலத்தில் பொது மக்களுக்கு இன்னும் கடுமையான மற்றும் நீடித்த கஷ்டங்களை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

-தமிழ்வின்-

இலங்கையில் வேகமாக பரவி வரும் ஐந்து புதிய வைரஸ் திரிபுகள் : ஆய்வில் கண்டுபிடிப்பு!!

புதிய வைரஸ் திரிபுகள்..

இலங்கையில் 5 வைரஸ் திரிபுகள் வேகமாக பரவி வருவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரித்தானியாவில் பரவிவரும் பி.1.1.7 என்ற வைரஸ் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபை பகுதி, ஹோமாகம, பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களிலும் இந்த வைரஸே பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் பொல்பித்திகம, குளியாபிட்டி, நிகவரெட்டிய, கனேவத்தை, அம்பலன்பொல, கிரிவுல்ல, பன்னல, வாரியபொல, மற்றும் பண்டுவஸ்நுவர ஆகிய பகுதிகளிலும் பிரித்தானியாவில் பரவிவரும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்திலும், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட மற்றும் மெதிரிகிரிய, பிரதேசங்களிலும் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மன்னார் நகர பகுதியில் தொற்று உறுதியானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போதும் பிரித்தானியாவின் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் பீ.1.428 என்ற வைரஸ் திரிபுடன் யாழ்ப்பாணத்திலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நல்லூரை மையமாக கொண்டு குறித்த வைரஸ் பரவி வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் சில பிரதேசங்களில் பி.1.411 என்ற இலங்கைக்கு சொந்தமான தனி திரிபுடன் வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமை பிரதேசத்திலும் பீ.1.525 என்ற நைஜீரியாவில் பரவும் வைரஸ் திரிபும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் அமைந்துள்ள தனியார் தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் பீ.1.351 என்ற தென்னாபிரிக்க வைரஸ் திரிபும் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

14 மாவட்டங்களுக்கு..

நாட்டின் 14 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சபரகமுவ மத்திய, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சுமார் 100 மி.மீ.மழை பெய்யும் .

இதன்படி, மன்னார், புத்தளம் , குருநாகல் , மாத்தளை , கண்டி, கம்பஹா,கேகாலை , நுவரெலியா, பதுளை , கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி , காலி, மாத்தறை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கே வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

மின்னல் காரணமாக ஏற்படும் சேதத்தை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கையில் தொடரும் கொரோனா அ.ச்சுறுத்தல் : ஒரே நாளில் 22 பேர் பலி!!

கொரோனா..

இலங்கையில் நேற்று 22 கோவிட் ம.ரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, நாட்டில் கோவிட் தொற்றினால் உ.யிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளன.

இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரே நாளில் நேற்றைய தினமே அதிகளவான ம.ரணங்கள் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 19 கோவிட் ம.ரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் சில இன்று (08.05) இரவு வெளியாகின.

அதில், செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த குருக்கள் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 5 பேருக்கும், பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் என என 7 பேர் மேலும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான 7 பேரையும் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார பிரிவினர், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இரு நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம்!!

கொரோனா..

பிரிட்டன், இந்தியாவைத் தவிர மேலும் 2 நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் பரவி வரும் பி.1.525 வைரஸானது பண்டாரகம மற்றும் கொழும்பு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட சிலரது இரத்த மாதிரிகளின் மரபணு வரிசை முறை ஊடாக அடையாளம் காண முடிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கொழும்பு தனியார் மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்குள்ளான நபரொருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தென்னாபிரிக்காவில் வியாபித்து வரும் பி.1.351 என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் மருத்துவர் சந்திம ஜீவந்தர மேலும் குறிப்பிட்டார்.

தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய்க்கும் 2 மாத குழந்தைக்கும் நேர்ந்த துயரம்!!

அர்ஜென்டினாவில்..

தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் தா.ய் இ.ற.ந்.து போனதால், கு.ழந்தையும் மூ.ச்.சு.த் தி.ண.றி இ.ற.ந்.த ச ம்பவம் பெ ரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த து.ய.ர சம்பவம் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் Corrientes மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்துள்ளது.

இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என 3 கு.ழந்தைகளுக்கு தா.யான Mariana Ojeda (30), சம்பவம் நடந்த அன்று தனது 3 வயது மகன் மற்றும் 2 மாத பெண் கு.ழந்தையுடன் வீட்டில் த.னியாக இருந்துள்ளார்.

அவர் தனது மூத்த மகளை தனது உறவினர் வீட்டில் விட்டிருந்தார். அவரை மாலை தன்னுடன் அழைத்துச்செல்வதாக மரியானா கூறியிருந்தார். இந்த நிலையில், மகளை அழைத்துச் செல்ல மரியானா மாலை வீட்டுக்கு வரவில்லை என்பதால், அவருக்கு உறவினர்கள் தொலைபேசியில் அழைத்துள்ளனர்.

ப.லமுறை மு.யற்சி செய்தும், அவர் அழைப்பை எ.டுக்காததால், உ.றவினர்கள் மரியானாவின் க.ணவர் கேப்ரியலுக்கு (47) த.கவல் கொ.டுத்துள்ளனர். அ.ப்போது, கேப்ரியல் த.ன.து ம.னைவிக்கு தொ.டர்ந்து போ.ன் செ.ய்துள்ளார். அ.ப்போது அ.வர்களது 3 வ.யது ம.க.ன் போ.னை எ.டுத்துள்ளார்.

அம்மா எங்கே என கேபிரியல் கேட்டபோது, அம்மா ரொம்ப நேரமாக தூ.ங்.கிக்கொண்டு இருக்கிறார் என கு.ழ.ந்.தை பதிலளித்துள்ளான். இதனால் ச.ந்.தே.கமடைந்த கேப்ரியல், உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது மரியானாவும் அவரது 2 மாத கு.ழ.ந்தையும் மெத்தையில் ம.ய.ங்.கி கி.டப்பதை பார்த்து ப.த.ற்.ற.ம் அ.டை.ந்துள்ளார். கு.ழந்தையின் உ.ட.ல் நீல நிறத்திலும், மரியானாவின் உ.ட.ல் கு.ளிர்ச்சியாக இருந்த நிலையில், அவர்கள் இருவரும் இ.ற.ந்.து கி.டந்துள்ளார்.

பின்னர் பொலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, உ.ட.ல்.க.ள் பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தா.க்.க.ப்.ப.ட்.ட.தா.க வீட்டில் எந்த அறிகுறியும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட வி.சாரணையின் படி, மரியானா உ.யர் இ.ரத்த அ.ழுத்தம் (Hypertension) காரணமாக அ.தி.ர்.ச்.சி நிலைக்கு சென்று ம.ர.ண.ம் அ.டைந்திருக்கலாம், பின்னர் அவர் இ.ற.ந்.த.தா.ல், அவரிடம் தாய்ப்பால் கு.டித்துக்கொண்டிருந்த கு.ழந்தையும் மூ.ச்.சு.த் தி.ண.ற.ல் காரணமாக இ.ற.ந்.து இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து வி.சாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கையில் 130 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று : இருவரின் நிலை கவலைக்கிடம்!!

கொரோனா தொற்று..

இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான 130 கர்ப்பிணிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றுக்குள்ளான அதிகமான கர்ப்பிணிகள் முல்லேரியா, நெவில் பெர்னாண்டோ மற்றும் ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இயலுமானவரை வீட்டில் இருந்து கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுமாறு கர்ப்பிணி தாய்மாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையில் சிகிச்சை நிலையங்களில் நிரம்பி வழியும் கொரோனா தொற்றாளர்கள் : 4000 பேர் வீடுகளில் தவிப்பு!!

கொரோனா..

வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்கள் கோவிட் தொற்றாளர்களால் நிரம்பி காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இடவசதி இல்லாமையினால் 4000க்கும் அதிகமான நோயாளிகளை நேற்று காலை வரை வீடுகளில் வைக்க சுகாதார பிரிவுகளுக்கு நேரிட்டுள்ளது.

இலங்கையில் கோவிட் பரவலின் நான்காவது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில் நாளுக்கு நாள் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கமைய நேற்று காலை வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்காத நோயாளிகளின் எண்ணிக்கை 4762ஆக அதிகரகித்தள்ளது.

தினமும் 1500க்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமையினால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டு வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது வரையில் நெருக்கடியான நிலைமை ஒன்று ஏற்பட்ள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

மு றையற்ற உ றவால் 31 வயது விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த ப ரிதாபம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் சா.க்கு மூ.ட்டையில் பெ.ண் ஒ.ருவரின் ச.ட.ல.ம் அ.ழு.கி.ய நி.லையில் மீ.ட்.க.ப்பட்ட நி.லையில், அவர் யார், இது எப்படி நடந்தது என்பது குறித்த முழு விபரம் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினி பட்டி பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன் அ.ழுகிய நிலையில் பெ.ண் ஒருவரின் ச.ட.ல.ம் பொலிசாரால் க.ண்.டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் அது குறித்து வி.சாரணை மேற்கொண்ட போது, இ.ற.ந்.து கி.டந்த பெ.ண் வாடிப்பட்டி அருகே உள்ள சி.புதூரை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் தமிழ் செல்வி(31) என்பதும் தெரியவந்தது.

இவரின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உ.யி.ரிழந்து போக, தமிழ் செல்வி வீட்டு கடனிற்காக 80 ஆயிரம் ரூபாய் வாடிப்பட்டியை சேர்ந்த மைக்செட் ஆபரேட்டராக பணிபுரியும் லட்சுமணன் என்பவரிடம் கடனாக வாங்கியுள்ளார்.

இவர்களுக்குள் இருந்த பழக்கம் நாளடைவில் நெ.ருங்கிப் பழகும், மு.றையற்ற உ.றவாக மாறியது. அதன் பின் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், லட்சுமணன் தான் கொடுத்த பணத்தை, அவரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், தமிழ் செல்வி தொடர்ந்து நாட்களை க.ட.த்.தி வ.ந்ததால்,

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த லட்சுமணன், அவரை தனியாக காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து,

சா.க்.கு மூ.ட்டையில் வீ.சிச் செ.ன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக லட்சுமணனை கை.து செ.ய்த வாடிப்பட்டி பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.றையில் அ.டைத்தனர்.

என் உ.யிர் அவளுக்கு மட்டும் தான் : கடிதம் எழுதிவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி இ.றந்த துக்கம் தாங்காமல் கணவனும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட சோ.க சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகேயுள்ள மருகால்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 37).

இவர் வீட்டிலேயே செல்போன் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷாப் நடத்திவந்தார். இவரது மனைவி சாரதா (வயது 35), இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி சாரதா நேற்று முன்தினம் உ.யிரிழந்தார், இதனால் ம.னமுடைந்த பரமசிவம், அன்றிரவே வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

இதனால் வே.தனையடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் பரமசிவத்தின் ச.டலத்தை கை.ப்.ப.ற்றியதுடன் வி.சாரணை நடத்தினர்.

அப்போது பரமசிவம் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சி.க்கியது. அந்தக் கடிதத்தில் “நான் பரமசிவன், என் மனைவி சாரதா. அவள் இல்லை. நானும் இனி உ.யிர் வாழ மாட்டேன்.

எங்களது கடைசி ஆசை, எங்கள் இருவரையும் இணைத்து புதைக்க வேண்டும், எ.ரிக்கக் கூடாது. எங்கள் இருவரையும் பிரிக்க வேண்டாம். என்றும் என் உ.யிர் அவளுக்கு மட்டும்தான். ஒரே இடத்தில் கைகோத்து பு.தைக்க வேண்டும்.

என் மனைவி தாலி அவள் க.ழுத்தில் இருக்க வேண்டும். அதை கழட்டக் கூடாது. என் சா.வுக்கு நான் மட்டுமே காரணம். இப்படிக்கு பரமசிவன் சாரதா” என அந்க்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

மேலும், ஒரு ஹார்ட் வரைந்து அதில் ‘சிவா சாரா லவ்’ என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மனைவி இ.றந்த துக்கம் தாளாமல் கணவன் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் சுசீந்திரம் பகுதியில் சோ.கத்தை ஏற்படுத்தியது.

வவுனியா கருமாரியம்மன் ஆலயத்தில் கொரோனாவிலிருந்து நாடு மீள வேண்டி விசேட ஹோம வழிபாடு!!

விசேட ஹோம வழிபாடு..

இலங்கையில் அதிகரித்து கொரோனா தொற்றிலிருந்து நாடு மீண்டெழுந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ நாடு முழுவதும் சகல ஆலயங்களிலும் மாலை 5.46மணிக்கு விசேட மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா இலங்கையை விட்டு நீங்க வேண்டும், முழு உலகத்தை விட்டும் நீங்க வேண்டும், கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் சுகமடைய வேண்டும். எல்லோரும் வளமான வாழ்க்கையை பெற வேண்டும்.

இந்த பிரார்த்தனை மூலம் நாங்கள் இந்த கோரோனாவிலிருந்து விடுபட வேண்டும் எல்லோரும் சுபீட்சமாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையாக இது அமைய வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை நாட்டிலுள்ள சகல மதத் தலங்களிலும் வழிபாட்டு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் பல ஆலயங்களில் மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை வழிபாடுகள் இன்று (08.05.2021) மாலை 5.46 மணிக்கு இடம்பெற்றன. அந்த வகையில் குட்செட்வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்திலும் இவ் மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இவ் விசேட வழிபாட்டில் கொரோனா தொற்று காரணமாக கலாச்சார உத்தியோகத்தர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என 10க்கு உட்பட்டவர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நகரில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

கொவிட் 19 இன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நரப் பகுதியில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (08.05) முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கமானது வவுனியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனைப் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து பல்வேறு தரப்பினரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் அதிகமாக மக்கள் வந்து செல்லும் இடங்களான வவுனியா பழைய பேருந்து நிலையம், மீன் சந்தை கட்டிடடத் தொகுதி, சந்தை கட்டிடத் தொகுதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கிருமி தொற்று நீக்கும் மருந்து விசிறப்பட்டு தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.