இந்தியாவில் பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிப்பு!!

கொரோனா வைரஸ்..

இந்தியாவில் பரவும் மிகவும் ஆபத்தான கோவிட் வைரஸ் இலங்கையிலும் ஒருவர் மீது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவருக்கு மேற்கொண்ட பரிசோதனை மாதிரிகளில் B1.617 என்ற வகை வைரஸ் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரின் பரிசோதனை மாதிரியிலேயே இவ்வாறு புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த ஒருவருக்கே முதன் முறையாக இந்த வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நீர்த்தேக்கத்தில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு

பம்பைமடு பகுதியில்…

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்றையதினம் (07.05.2021) வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் சென்றுள்ளனர்.

இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்துச்செல்லப்பட்டு மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீருனுள் இறங்கி தேடியுள்ளனர். எனினும் அவரை மீட்கமுடியவில்லை.

இந்நிலையில் இன்று காலை கடற்படையின் சுழியோடிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நபரின் சடலம் மீட்கப்பட்டது. சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!!

விபத்து..

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனமொன்றும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவத்தில் 36 வயதுடைய ஒருவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், காயமடைந்தவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹபரனையிலிருந்து கந்தளாய் பகுதிக்கு வேகமாக பயணித்த மோட்டார்சைக்கிள் திருகோணமலையிலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம் : நெருக்கடியில் இலங்கை!!

கொரோனா..

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் பிரித்தானிய வைரஸாக இருந்தாலும் கூட தற்போது மக்களின் ஒன்றுகூடலின் மூலமாக வைரஸ் மாறுபடும் தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அல்லது மூன்று வைரஸ் தொற்றுக்கள் ஒன்றிணைந்து மாறுபட்ட புதிய வைரஸாக உருவாகலாமென வைரஸ் தொற்றுக்கள் குறித்த விசேட வைத்தியர் ரேஹித மதுகம எச்சரித்துள்ளார்.

வைரஸின் வீரியம் அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் கொத்தணிகள் உருவாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வீரியம் கூடிய வைரஸ் ஒன்றினை இலகுவாக கட்டுப்படுத்த முடியாது, இலங்கையும் தற்போது அவ்வாறான நெருக்கடியில் உள்ளதென கருதுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம் : அரசாங்கம் நடவடிக்கை!!

போலி முகநூல்..

நாட்டின் மொத்த முகநூல் கணக்குகளில் உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடை நிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்

இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்த, அரச நிறுவனங்களினூடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழக்கத்திலுள்ள சட்டத்திற்கமைய வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியும் தானும் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உரிமையாளர்கள் இல்லாத முகநூல் கணக்குகளின் மூலம் பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இளம் சந்ததியினரை வழி கெடுக்கும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை தூண்டுவதற்கும் இது வழி வகுப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூக கட்டமைப்பையும் வழிநடத்தி செல்லும் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் முழு நாடும் முடக்கப்படும் : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே..

தேவை ஏற்பட்டால் நாட்டை முடக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தொற்று நோயியல் பிரிவே நாட்டை முடக்குவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டது. அரசியல்வாதிகள் இது குறித்து தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.

தற்போதைய தொற்று நிலைமையை விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி தீர்மானம் மேற்கொள்ளப்படும். தேவைக்கு ஏற்ப சில பிரதேசங்கள் தற்போது தனிமைப்படுத்தப்படுகின்றன.

கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் பிரதேசங்களைத் தனிமைப்படுத்துவதற்கான அதிகாரம் பிரதேச சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒன்றிணைந்து தீர்மானிக்க முடியும். இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் அறிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் இருப்போருக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்க வேண்டி ஏற்படும். இதற்கு தேவையான வழிகாட்டி ஆலோசனை தற்போது தயாரிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் ஆகக்குறைந்தது 2000 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை மத்திய நிலையம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மேலும் தெரிவித்தார்.

-தமிழ்வின்-

இலங்கையில் கொரோனா தொற்றுடன் பிறந்துள்ள குழந்தைகள் தொடர்பில் வெளியான தகவல்!!

கொரோனா..

கொரோனா தொற்றுக்குள்ளான 70 குழந்தைகள் சொயிஸா பெண்கள் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக புதிய குழந்தைகள் பிறப்பு தொடர்பான விசேட வைத்தியர் நலின் கமஎதிகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிறந்த அனைத்து குழந்தைகளையும் உரிய பாதுகாப்புக்கு மத்தியில் கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் காலத்தில் கொரோனா தொற்றுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் நான்கு பேர் பொலிஸாரால் அதிரடியாக கைது!!

நான்கு பேர்..

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் க.டத்தி செல்லபட்ட 20 மாடுகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற வாகனம் ஒன்றை கனகராயன்குளம் பகுதியில் வழிமறித்த பொலிஸார் நேற்று (07.05) சோ.தனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் போலியான அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி மாடுகள் க.டத்திச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. வாகனத்தில் இருந்தவர்களை கைது செய்த பொலிஸார் 16 மாடுகளையும், அவற்றை க.டத்திச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் மீ.ட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் உரிய நடைமுறைகளை பேணி கொண்டு செல்லப்படாத நான்கு மாடுகளையும் பொலிஸார் கை.ப்பற்றியுள்ளதுடன், இருவரை கைது செய்திருந்தனர். கைது செய்யபட்டவர்கள் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 19 கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்று 19 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கோவிட் மரண எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

இதற்கமைய,இலங்கையில் மேலும் 792 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று இதுவரையில் 1,889 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 121,313 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 878 பேர் இன்று (07) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 101,763 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 745 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சதொச ஊடாக அரசாங்கத்தின் நிவாரணப் பொதி வழங்கல்!!

சதொச ஊடாக..

சதொச ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரசாங்கத்தின் நிவாரணப் பொதி வவுனியாவிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

கொவிட் 19 தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் சாதொச விற்பனை நிலையம் ஊடாக நிவாரணம் பொதி வழங்குவதற்கு வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதனடிப்படையில் நாடு பூராகவும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதி கடந்த முதலாம் திகதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் மக்களின் இடர்களைப் போக்கும் வகையில் வவுனியா சதொச விற்பனை நிலையத்திலும் ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்பட்டு வருகின்றது.

குறித்த நிவாரணப் பொதியில் சம்பா ஒரு கிலோ, நாடு ஒரு கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ, பருப்பு ஒரு கிலோ, நெத்தலி 200 கிராம், சீனி உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

உன்னை சீ.ரழித்து கொ.லை செ.ய்.துவிடுவோம் : போலிசாரின் அலட்சியத்தால் நேர்ந்த ப.ரிதாபம்!!

பிரித்தானிய பெண்..

பிரித்தானிய பெ.ண் ஒ.ருவரை சீ.ர.ழி.த்.து கொ.லை செ.ய்.து.வி.டு.வ.தா.க இ.ரண்டு பே.ர் மி.ர.ட்..டி.யு.ம், அது தொடர்பான பு.கா.ரை பொ.லிசார் அ.லட்சியம் செ.ய்ததால் அந்த பெ.ண் ப.ரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.

லண்டனில் வாழும், சட்டத்தில் பட்டம் பெற்ற பிரித்தானிய  Mayra Zulfiquar (24), தன் உறவினர் ஒருவரின் தி.ருமணத்துக்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது, Zahir Jadoon என்னும் நபர் த.னக்கு கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டுத்ததாக பொலிசாரிடம் பு.கா.ர் அ.ளித்துள்ளார் Mayra.

மீ.ண்டும் மீ.ண்டும் பொ.லிசாருக்கு கோ.ரிக்கை வி.டுத்தும் பொ.லிசார் Mayraவின் கோ.ரிக்கையை அ.லட்சியம் செ.ய்ததாகக் கூ.றப்படுகிறது. அ.த்துடன், Saad Butt (28) என்பவர் தன்னை தி.ருமணம் செய்துகொள்ளுமாறு Mayraவிடம் கேட்டபோது அவர் ம.றுத்துள்ளார்.

எனவே, Mayraவை சீ.ரழி.க்.க மு.ய.ன்.று.ள்.ளா.ர் Butt. இன்னொரு பக்கம் Butt மற்றும் Zahir இருவருடனுமே Mayra ந.ண்பராக ப.ழகியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், Mayra, கடந்த திங்கட்கிழமை (மே 3) அன்று, தான் தங்கியிருந்த வீட்டில் கா.ய.ங்.க.ளு.ட.ன் இ.ற.ந்.து கி.ட.ந்.த.து க.ண்.டு.பி.டி.க்.க.ப்.ப.ட்.ட.து.

நா.ன்கு ஆ.ண்கள் Mayra த.ங்கியிருந்த வீ.ட்டிற்குள் நு.ழை.ந்.து அ.வ.ரை கொ.லை செ.ய்.த.தா.க க.ரு.த.ப்படுகிறது. Mayra த.ங்களை தி.ருமணம் செ.ய்ய ம.றுத்ததால், ச.ம்பந்தப்பட்டவர்களால் அ.வர் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.தா.க பொ லிசார் க ருதுகிறார்கள்.

தற்போது, இந்த ச.ம்பவம் தொடர்பாக ஒருவர் கை.து செ.ய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவரை தே.டி வ.ரு.வதாகவும் பொலிசார் தெ.ரிவித்துள்ளனர். ஆ.னால், கை.து செ.ய்யப்பட்டது யா.ர், தே.ட.ப்.ப.டு.வ.து யா.ர் என்ற விவரம் சரியாக தெரியவில்லை.

ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் இலங்கை : அடுத்த வாரம் இன்னும் நெருக்கடி அதிகரிக்கலாம்!!

கொரோனா..

மீண்டும் ஒருமுறை மேல் மாகாணத்தில் அதிக கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமேல், தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன தலைவர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாளாந்தம் 1900 என்ற அளவில் கோவிட் தொற்றாள்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அடுத்த வாரம் இன்னும் நெருக்கடி மிக்க வாரம் ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரையில் ஆபத்தான காலத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. எனவே சுகாதார அதிகாரிகள் கொரொனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பொலிஸாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நேற்று 187 இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

அவற்றில் 152 உடற்பயிற்சிகள் அகங்கள், தினப்பராமரிப்பு நிலையங்கள், பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் விருந்தகங்கள், உணவகங்கள் என்பன அடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் கருங்கல் அகழ்வதற்காக வெட்டப்பட்ட குழியில் மூழ்கிய நபர் மாயம்!!

பம்பைமடு பகுதியில்..

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள கருங்கல் அகழ்வதற்காக வெட்டப்பட்ட குழியில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இன்றைய தினம்(07.05.2021) வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள குறித்த நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர்.

இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்துச்செல்லப்பட்டு மூழ்க்கியுள்ளார். இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீருனுள் இறங்கி தேடியுள்ளனர்.

எனினும் அவரை மீட்கமுடியவில்லை. சம்பவம் தொடர்பாக கிராமமக்களுக்கும் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. நீருனுள் மூழ்கிய நபரை மாலை 3 மணியளவில் இருந்து 6மணிவரை கிராமத்து இளைஞர்கள் தேடியபோதும்,

அவரை மீட்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றிருந்தனர். சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே மாயமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண் : இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து போன உறவினர்கள்!!

மும்பையில்…

இருமனங்களை இணைக்கும் திருமணப் பந்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அவ்வாறு நடக்கும் சில திருமணங்களில் சில சம்பவங்கள் பேசு பொருளாக மாறி விடும்.

அந்த வகையில் மும்பையில் நடந்துள்ள இந்த திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தம்பதிகள் தான் தனுஜா பாட்டீல் மற்றும் ஷார்துல் கதம். இவர்கள் தங்கள் திருமணத்தைக் கடந்த ஆண்டே நடந்த திட்டமிட்ட நிலையில் கொரோனா முதல் அலை காரணமாக நடந்த முடியாமல் போனது.

இந்நிலையில் தற்போது அவர்களது திருமணம் நடந்த நிலையில், ஷார்துலுக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. காலம் காலமாகத் திருமண சடங்குகள் ஆணாதிக்கத்தைக் குறிக்கும் வகையிலே உள்ளது.

அதே ஏன் நான் பின்பற்ற வேண்டும். எனது திருமணத்தில் அப்படி நடக்க வேண்டாம் என அவர் முடிவு செய்தார். அந்த வகையில் திருமணம் நடைபெறும் போது ஒருவருக்கொருவர் கழுத்தில் தாலியைக் கட்டிக்கொள்வார்கள் என்று ஷார்துல் முன்மொழிந்தார்.

அதாவது நான் தனுஜாவிற்கு தாலி அணிவிப்பதைப் போல அவரும் எனக்குத் தாலி அணிவிப்பார் என ஷார்துல் தெரிவித்தார். இதனைக் கேட்ட அவரது பெற்றோர் ஆச்சரியப்பட்ட நிலையில், ஷார்துலின் உறவினர்கள் அவரது முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்த ஷார்துல், திருமணத்தில் தனது தனுஜா தங்கத்தால் ஆனால் தாலியை தனக்கு அணிவிக்க அதனை ஷார்துல் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.

4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், ”எல்லா சடங்குகளும் எப்போதுமே ஆணுக்கே ஏற்றதாக இருப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ள ஷார்துல், ஒருதலைபட்ச ஒரு சடங்கை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே திருமண நாளன்று மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் தனது கணவர் தாலியுடன் இருக்கப் போவதாகக் கூறியுள்ளது என நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தனுஜா கூறியுள்ளார். தற்போது இந்த தம்பதியரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

95 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு : திக் திக் நிமிடங்கள்!!

ராஜஸ்தானில்..

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 16 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

ராஜஸ்தானில் ஜலூர் மாவட்டத்தில் உள்ள லச்சாரி கிராமத்தில் வயல்வெளியில், அனில் என்ற 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அருகில் இருந்த புதிதாகக் கட்டப்பட்டு, மூடாமல் இருந்த 95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் அனில் தவறி விழுந்தான். அவன் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் உள்ளே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டது. சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மீட்புப் பணியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் மற்றும் சில உள்ளூர்வாசிகளின் கூட்டு முயற்சியால் அவர் மீட்கப்பட்டுள்ளார். குழந்தை அனில் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆழ்துளையில் சிக்கியிருந்த காலகட்டத்தில், குழந்தைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியுடன் ஒரு குழாய் வழியாக ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது, மேலும் நிலைமையைக் கண்காணிக்க கயிறின் உதவியுடன் ஒரு சி.சி.டி.வி கேமராவும் அமைக்கப்பட்டிருந்தது.

திடீரென்று கழன்று விழுந்த சக்கரம் : விமானி எடுத்து துணிச்சல் முடிவு!!

இந்தியாவில்..

இந்தியாவில் நோயாளியுடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் புறப்படும் போது, திடீரென்று அதில் இருந்த சக்கரம் கழுன்று விழுந்ததால், விமானி சமயோஜிதமாக செயல்பட்டு, யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தரையிரக்கிய சம்பவம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கு ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. இதில், இரண்டு விமானப் பணியாளர்கள், நோயாளி, அவரது உறவினர், மருத்துவர் என மொத்தம் ஐந்து பேர் குறித்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

இதையடுத்து விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது, திடீரென்று அந்த விமானத்தின் சக்கரம் ஓடுபாதையிலேயே கழன்று விழுந்தது. இதை உடனடியாக அறிந்த விமானி, விமானத்தை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

சக்கரங்கள் இல்லாத காரணத்தினால் பெல்லி-லேண்டிங் முறையில் விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது சக்கரங்கள் இன்றி விமானத்தில் உடல் பகுதியைக் கொண்டு தரையிறக்குவதே பெல்லி-லேண்டிங் என்று கூறப்படும்.

அப்படி விமானம் தரையிரங்கும் போது, விமானத்தில் தீ பிடிக்க வாய்ப்பு இருப்பதால், மும்பை விமான நிலை ஊழியர்கள் எச்சரிக்கையுடன், விமான ஓடுதளத்தில் நுரைகள் தெளிக்கப்பட்டிருந்தன.

விமானி திறமையாகத் தரையிறக்க, விமானத்தில் இருந்த ஐந்து பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமான நிலை ஊழியர்கள் விமானம் தரையிரங்கியவுடன், விமானம் மீது தண்ணீர் அடித்து, தீ விபத்து எதுவும் ஏற்படாமல் பார்த்து கொண்டனர்.