நாடு திரும்ப முடியாத நிலையில் மஹேல ஜயவர்தன!!

மஹேல ஜயவர்தன..

ஐ.பி.எல் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தனவிற்கு நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானப் பயணங்கள் முழுமையாக இடை நிறுத்தப்பட்டுள்ளமையினால் அவரால் நாடு திரும்ப முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் நோய்த் தொற்று பரவுகையினால் இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மஹேல ஜயவர்தன தற்பொழுது, மாலைதீவிற்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டு நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின்னர் மஹேல இலங்கை திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சைக்காக 200 கட்டில்களுடன் தயார் நிலையில்!!

பொருளாதார மத்திய நிலையம்..

கொரோனா சிகிச்சைக்காக 200 கட்டில்களைக் கொண்டதாக வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்கள் போடப்பட்டுள்ளதுடன்,

200 கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில், வவுனியா பொருளாதார நிலையம் கொரோனா நோயாளர்களை உள்வாங்குவதற்கு தயாரான நிலையில் தற்போது சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

வவுனியாவில் முகக்கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் வேலைசெய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

முகக்கவசம்..

முகக்கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் கடமையாற்றியவர்களுக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் இன்று (07.05) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா, நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்திய சுகாதார பரிசோதகர்கள் அங்கு கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுன்கிறார்களா என்பது குறித்து கவனம் செலுத்தினர்.

இதன்போது பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளாது வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர், முகக்கவசம் அணியாது கடமையாற்றியவர்கள், சீராக முகக்கவசம் அணியாமல் வர்த்தக நிலையங்களில் வேலைசெய்வோர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.

அத்துடன், அதிகரித்து வரும் கொவிட் தாக்கம் தொடர்பிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும் சுகாதார பரிசேதகர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.

வவுனியாவில் இளைஞர் ஒருவரை நி.ர்.வாணமாக்கி து.ன்.பு.று.த்.தி காணொளியை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய நபர் கைது!!

ஆச்சிபுரம் பகுதியில்..

வவுனியா சிதம்பரம் ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை து.ன்.பு.று.த்.தி நி.ர்.வா.ணமாக்கி அதனை தொலைபேசியில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமனங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை நி.ர்.வாணமாக்கியதுடன் து.ன்.பு.று.த்.தி அதனை தொலைபேசியில் காணொளியை பதிவுசெய்து மேற்கொண்டு சமூகவலைத்தளத்தில் குறித்த நபர் பதிவேற்றியிருந்தார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதனையடுத்து அவரை அ.வமானபடுத்தி சி.த்.தி.ர.வ.தை.க்குட்படுத்துவது த.ண்டனைக்குரிய கு.ற்றம் என்ற அடிப்படையில் குறித்த கு.ற்றச்செயல்களில் ஈடுபட்டமை,

காணொளியினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை என பல்வேறு கு.ற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆச்சிபுரம் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த காணொளியினை பதிவேற்றிய சமூக வலைத்தளங்களின் விபரங்களை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளதுடன் குறித்த இளைஞரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டக்கூடிய அபாயநிலை!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் நாளாந்த எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடக்கும் அபாய நிலைமை வரும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரச மருத்துவமனைகளில், நோயாளர்களுக்கான கட்டில்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதைத் தவிர்ப்பதற்காக, இலங்கை இராணுவத்தினரால் கோவிட் நோயாளர்களுக்காக தனியொரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகின்றது.

கம்பஹா மாவட்டம் – சீதுவ பிரதேசத்தில், தற்காலிக கோவிட் நோயாளர்களுக்கான மருத்துவமனை அமைக்கப்படுகின்றது.
இந்த வைத்தியசாலையில், முதற் கட்டமாக, 1200 நோயாளர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, 1200 நோயாளர் கட்டில்கள் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டில்களின் எண்ணிக்கையை, விரைவில் 10 ஆயிரமாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில், அரச வைத்தியசாலைகளில், கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையானது, எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் எனத் தெரிவித்துள்ள தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர, எதிர்வரும் நாட்களில், நாளாந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடக்கலாம் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளார். அதன் காரணமாக, மேலதிகமாக தொற்றாளர்களுக்காக சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகள் அவசியம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையின் நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை : நாட்டை முடக்காவிட்டால் ஏற்படவுள்ள ஆபத்து!!

கொரோனா வைரஸ்..

நாட்டில் கோவிட் – 19 வைரஸ் தொற்று பரவல் 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது. உடனடியாக நாட்டினை முடக்கி நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் மருந்து மற்றும் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பரவல் நிலைமை குறித்து பொதுச் சகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் கேட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாகவும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு நாட்டில் வைரஸ் தொற்று பரவியுள்ளதை மறுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

கொழும்பிலிருந்து பயணித்த கார் விபத்து : இருவர் பரிதாபமாக பலி!!

விபத்து..

மட்டக்களப்பு, வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியின் மியான்குளப் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (06.05.2021) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த 31 வயதுடைய பரமேஸ்வரன் தனுஜன் மற்றும் 31 வயதுடைய டினேகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ தினமான நேற்று இரவு கொழும்பிலிருந்து, உயிரிழந்த ஆண் அவரது உறவினரான பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி காரில் பயணித்துள்ளார்.

இந்த நிலையில் வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பட்டை மீறி கார் வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இதனையடுத்து, அந்த பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கு சென்று உயிரிழந்த நிலையில் இருவரையும் காரில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் பொலிஸார் விசேட நடவடிக்கை : ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது!!

கொழும்பில்..

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் நகரத்தில் சுற்றித் திரிந்தவர்களைக் கைது செய்ய கொழும்பில் நேற்று சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு டேம் வீதியில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போது சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

. இதன்படி, சுகாதார அறிவுறுத்தல்களின்படி முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் கைது செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில், நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், நேற்றைய தினம் கொழும்பில் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எல்லைமீறும் கொரோனா தொற்று : கட்டுப்படுத்த முடியாத நிலையில் சுகாதார பிரிவு!!

கொரோனா தொற்று..

இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மித்த அளவில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால் சுகாதார கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது அதிக அளவான தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் 17000க்கும் அதிகமான தொற்றாளர்கள் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர். எதிர்வரும் நாட்களிலும் 2000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் சுகாதார கட்டமைப்பிற்கு அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அனைத்து மக்களும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவிற்கு மாத்திரம் அனைத்தையும் மேற்கொள்ள முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் மேலும் இருவர் மரணம்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் இரண்டு வயோதிபர்கள் கோவிட் வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண். மற்றையவர் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்.

இதன்மூலம் கோவிட் தொற்றால் யாழ்ப்பாணத்தில் 21 பேரும், வடக்கு மாகாணத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

மறு அறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள் : சற்றுமுன் வெளியான செய்தி!!

பாடசாலைகள்..

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அறிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் உள்ள அனைத்து முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பனவற்றையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் – 19 பரவல் அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

தமிழக முதல்வராக பதவியேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!!

ஸ்டாலின்..

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் வைத்து பதவியேற்றுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைத்துள்ளார். ஸ்டாலினை தொடர்ந்து திமுக சார்பாக 33 அமைச்சர்கள் வரிசையாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெற்றிருந்தது. அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இதன் அடிப்படையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதுடன்,

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாப்பிள்ளைக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாத காரணத்தினால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மாப்பிள்ளைக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாத காரணத்தினால் மணப் பெண் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உறவினர்களிடையே பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, திருமண நாளில் மாப்பிள்ளை தனது உறவினர்களுடன் ஊர்வலமாக திருமண மண்டபத்துக்கு வந்தடைந்தார்.

அப்போது மணப்பெண், திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மாப்பிள்ளையின் கல்வித் தகுதியை சோதித்து பார்க்க முயன்றுள்ளார்.

இதன் காரணமாக, மாப்பிள்ளையிடம் 2-ஆம் வாய்ப்பாட்டை கூறுமாறு கேட்டார். ஆனால் மணப்பெண்ணின் கேள்விக்கு விடை அளிக்க முடியாமல் மாப்பிள்ளை வாய்ப்பாடு கூற தி.ணறியுள்ளார்.

இதனால் ஏ.மாற்றமடைந்த மணப்பெண், சாதாரண கணக்கு கூட தெரியாத ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திருமணத்தை நிறுத்தும்படி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

மணப்பெண்ணின் பெற்றோர் அவரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் படிப்பறிவு இல்லாத ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்பதில் அவர் உறுதியாக இருந்ததால், அவருடைய இந்த முடிவு சரியானதுதான் என்று மணப்பெண்னின் உறவினர்களும் தெரிவித்தனர்.

இதையடுத்து உறவினர்கள் மத்தியில் இருவீட்டாரும் வழங்கிய சீதனப் பொருட்களை சரிபார்த்து பிரித்து திருமணம் நின்று போனதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இது மணமகன் குடும்பத்தினருடன் வே.தனையையும், ஒரு வித அ.திர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. மேடம் உயிர காப்பாத்துங்க: சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த பதற வைக்கும் காட்சி!!

சென்னை…

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் நிலைமையை வெளிப்படுத்தும் வகையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் நோற்று மே 5ம் திகதி மட்டும் 23,286 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியானது, 167 பேர் உ.யிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 6291 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது, 58 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தீவிமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகள் கடும் நெ.ருக்கடிக்குள்ளாகியுள்ளது.

சமீபத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ்கள் வரிசையாக காத்துக்கிடந்த காட்சிகள் வெளியானது. அதே போல் ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஆம்புலன்ஸ்கள் காத்துக்கிடக்கும் காட்சிகள் வெளியானது.

இந்நிலையில், தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் உயிருக்கு போ.ராடும் நோ.யாளியின் உறவினர்கள் மருத்துவர்களின் உதவி கேட்டு க.தறும் வீடியோ வெளியாகி ப.தற வை.த்துள்ளது.

குறித்து வீடியோவில், ஆம்புலன்ஸில் நோயாளி உ.யிருக்கு போ.ராட, அருகில் இருக்கும் உறவினர் டாக்டர் ப்ளீஸ்..ஹெல்ப் மீ.. ப்ளீஸ்.. ப்ளீஸ் என க.தறுகிறார். ஆம்புலன்ஸ்க்கு அருகே இருக்கும் மற்றொரு நபர், மேடம் வாங்க மேடம்… ஒரே ஒரு செகண்ட் உ.யி.ரை கா.ப்பாத்துங்க மேடம் என க.தறுகின்றனர்.

அந்த 2 இளைஞர்கள் தான் இதற்கு காரணம்.. கடிதம் எழுதிவிட்டு 25 வயது பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் என் ம.ரணத்துக்கு 2 இளைஞர்கள் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்து விட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (33). இவருக்கும் ரேஷ்மா(25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 வயதில் பெண் கு.ழந்தையும், 10 மாதத்தில் ஆண் கு.ழந்தையும் உள்ளன. இந்தநிலையில் ரேஷ்மா வீட்டுக்கு, அதே ஊரை சேர்ந்த உறவினரான தென்னரசு (30) வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்தபோது அவர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் (20), முத்துக்குமார்(30) ஆகியோர் ரேஷ்மாவின் கணவர் விமல்ராஜிடம் கூறியுள்ளனர்.

இதனால் விமல்ராஜ், ரேஷ்மாவை க.ண்டித்துள்ளார். இதைதொடர்ந்து ரேஷ்மா, தன்னை பற்றி கணவரிடம் அ.வதூறாக ஏன் கூறினீர்கள்? என முத்துக்குமார், பாலமுருகன், ஆகியோரிடம் செல்போனில் பேசி திட்டியுள்ளார்.

அதற்கு அவர்கள் மோ.சமான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ம.னவருத்தம் அடைந்த ரேஷ்மா, வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரேஷ்மாவின் ச.ட.லத்தை மீ.ட்.டனர். அந்த வீட்டில் பொலிசார் சோ.தனையிட்ட போது, ரேஷ்மா எழுதிய க.டிதம் சி.க்கியது.

அந்த கடிதத்தில், எனது சா.வு.க்.கு பாலமுருகன், முத்துக்குமார் ஆகியோர் தான் காரணம் என எழுதப்பட்டு இருந்ததது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்டியதாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொரோனா பாதித்த தந்தைக்கு தண்ணீர் கொடுக்க போராடிய மகள் : பின்னர் நடந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் காட்சி!!

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திராவில் ஒரு சிறுமி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு சாகும் தருவாயில் குடிக்க தண்ணீர் கொடுக்க போ.ராடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிவருகிறது.

நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. விஜயவாடாவில் தங்கி வேலை பார்த்துவந்த 50 வயதான நபர், சமீபத்தில் சொந்த ஊரான ஸ்ரீகாகுளத்துக்கு திரும்பியுள்ளார்.

ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்த நிலையில், ஊர் மக்கள் அவரை ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு குடிசையில் தங்க வைத்துள்ளனர். அதனால் அவரை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் அவதிப்பட்டுவந்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு உடல் நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி, மகள் அவரைப் பார்க்கவந்தபோது, அவர் உயிருக்கு போ.ராடிய நிலையில் மண் தரையில் விழுந்து கிடந்துள்ளார்.

அதனைப் பார்த்து துடித்துப்போன அவரது மகள், தனது தந்தைக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அருகில் சென்றால் மகளுக்கும் கொரோனா வந்துவிடும் என பயந்து சிறுமியின் தாய் அவரை தடுத்துள்ளார்.

இந்த போ.ராட்டத்தில், ஒரு வழியாக சிறுமி தனது தந்தைக்கு தண்ணீர் கொடுக்கிறார். ஆனால், சில நொடிகளில் அவர் மகளின் கண்முண்ணே துடிதுடித்து இ.றந்து விடுகிறார்.

அவரது கையை தூக்கி பார்த்து அசைவில்லை என தெரிந்த மகள், மண்ணில் புரண்டு க.தறி அழும் காட்சிகள் பார்ப்பவரின் நெ.ஞ்சை உ.லுக்குகிறது.

இந்த காட்சிகளை தூரத்தில் இருந்தபடி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவிட்டுள்ளார். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.