எ.ரிந்து கொண்டிருந்த தந்தையின் ச.டலம் : தீ.யில் கு.தித்த திருமணமாகாத 33 வயது மகள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனாவால் உ.யிரிழந்த தந்தையின் சிதை மீது கு.தித்த மகளின் செயல் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் தான் இந்த ச.ம்பவம் நடந்துள்ளது.

தாஸ் மகேஷ்வரி (70) என்ற நபர் சமீபத்தில் கொரோனா தொற்றால் உ.யிரிழந்தார். இதையடுத்து அவரின் ச.டலம் எ.ரிக்கப்படுவதற்காக சு.டுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் கொரோனாவால் இ.றந்ததால் குடும்பத்தாரை அருகில் அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அங்கிருப்பவர்களிடம் ச.ண்.டை.யி.ட்.டு தாஸின் மூன்று மகள்களும அங்கு சென்றனர். தாஸுக்கு மகன் இல்லை என்பதால் மூன்று மகள்களும் இ.றுதிசடங்கு செய்தனர்.

பின்னர் அவர் ச.டலம் எ.ரி.க்கப்பட்டது. அப்போது தி.டீரென தாஸின் திருமணமாகாத மூன்றாவது மகள் சந்திரகலா (33) எ.ரிந்து கொண்டிருந்த சிதை மீது கு.தித்தார்.

இதை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்த அவர் சகோதரி சந்திரா, சந்திரகலாவை வெளியில் இ.ழு.த்.து போ.ட்டார். இதையடுத்து 70 சதவீத தீ.க்.கா.ய.த்.து.ட.ன் ஆ.ப.த்.தா.ன நிலையில் சந்திரகலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த சந்திரகலா அவரின் பிரிவை தாங்க முடியாமல் உ.ணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.

22 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடி வந்த 18 வயது பெண் : போலிசார் செய்த காரியம்!!

இந்தியாவில்…

இந்தியாவில் கணவனுடன் ஓடி வந்த காதல் ஜோடி பொலிசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம், அகர்தலா பகுதியை சேர்ந்தவர் ரோபல் ஹோசீன். 22 வயது மதிக்கத்தக்க இவர் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு சொந்த ஊரான அகர்தலாவுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த முக்தா ராணி (18) என்ற இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாற, இது குறித்து அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரியவர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்றுள்ளனர்.

இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, திர்புரா பொலிசார் உடனடியாக சென்னை விமானநிலைய பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் படி அங்கு தயாராக இருந்த சென்னை பொலிசார்,விமானத்தில் வந்த காதலர்களை பிடித்து வைத்துக்கொண்டு திரிபுரா பொலிசாருக்கு தகவல் கொடுக்க, உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்த பொலிசார், காதலர்கள் இருவரையும் திரிபுராவுக்கு விமானத்தில் அழைத்து சென்றனர்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாறுகின்றது!!

பொருளாதார மத்திய நிலையம்..

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் கொவிட் 19 மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 8000 நோயாளர்கள் சிகிச்சை பெறத்தக்க வகையில் கொரோனா சிகிச்சை மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொவிட் செயலணியின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 100 கட்டில்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள குறித்த சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ஏற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா சிகிச்சை நிலையத்தை அமைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (06.05) பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் இராணுவ அதிகாரிகள் மற்றும் மாவட்ட உயர் மட்ட அதிகாரிகள் ஆகியோரும் பங்குபற்றியிருந்ததுடன், கொரோனா சிகிச்சையளிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், நோயாளருக்கு தேவையான மேலதிக மலசலகூடங்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, குறித்த பொருளாதார நிலையம் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் பாவனைக்கு திறக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை ஒரு வார காலத்திற்கு முடக்க வேண்டும் : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!

ஒரு வார காலத்திற்கு..

ஒரு வார காலத்திற்கேனும் நாட்டை முடக்க வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் கூட்டங்கள் நடத்தப்படுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறு செய்யும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாடு மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளது. நாள் தோறும் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட தொற்றாளிகள் பதிவாகி வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறைக் கட்டமைப்பினால் இயலுமை பாதிக்கப்படும்.

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் கோவிட் நிலைமையை கட்டுப்படுத்த வேண்டுமாயின் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கேனும் நாட்டை முடக்குவது உசிதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா நகரில் வர்த்தக நிலையங்கள் மீது பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கை!!

சோதனை நடவடிக்கை..

வவுனியா நகர வீதி கடைகள் மற்றும் மரக்கறிகள், பழங்கள் விற்பனை நிலையங்கள் மீது பொலிசார் திடீர் சோதனை மேற்கொண்டதுடன், முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாட்டில் கொவிட் 19 மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வவுனியாவிலும் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிசார் வீதியோரங்களில் வியாபாரம் செய்வோர், வீதியோர வர்த்தக நிலையங்கள், மரக்கறிக் கடைகள், பழக்கடைகள் என்பவற்றைப் பார்வையிட்டதுடன்,

அங்கு சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், முககவசம் அணியாதோர், முககவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளர்.

இதன்போது அவர்களது பெயர் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு கடும் எச்சரிகையும் பொலிசாரால் வழங்கப்படுவதுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தீவிரம் : இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை!!

கொரோனா தீவிரம்..

இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக அங்கிருந்து வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவிட் வைரஸின் புதிய மாறுபாட்டின் பரவலைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுகாதார அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின் படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிடமிருந்து தப்ப 3 வழிகள் : நாட்டு மக்களுக்கு அறிவிப்பு!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் வைரஸின் புதிய திரிபு வேகமாக பரவி வருவதால், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவிட் வைரஸ் தொற்றாமல் தப்பித்து கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய 3 வழிமுறைகளை இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது.

1. அதற்கயை அதிக மக்கள் கூடும் இடங்களில் நிற்பதனை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். 2. ஒருவருக்கு ஒருவர் அருகில் இருந்து கதைத்தல், உணவு உட்கொள்ளுதல் போன்றவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும்.

3. நன்கு காற்றோட்டம் கிடைக்காத இடங்களில் நிற்பதனை தவிர்ப்பதன் ஊடாக கோவிட் பரவுவதனை நிறுத்த முடியும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று விகிதம் அதிகரிப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்..

இந்தியாவில் பதிவாகி வரும் கோவிட் வைரஸ் தொற்று விகிதத்தை விட இலங்கையின் வைரஸ் தொற்று விகிதம் அதிகமாக உள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சும்மேளனத்தின் செயலாளர் எம்.பாலசூரியா இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒரு நாளைக்கு 1900 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில்,இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 200,000 முதல் 300,000 வரை கோவிட் தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன.

எனினும் இரண்டு நாடுகளின் மக்கள் தொகையில் நாளொன்றுக்கு 10 லட்சம் மக்களை கருத்தில் கொள்ளும் போது இந்தியாவை விட கோவிட் தொற்று இலங்கையில் அதிகரித்து வருவதாக பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

நாள் தோறும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கண்டறியப்படுவதைக் கையாள மருத்துவமனைகளில் படுக்கை திறன் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே வைரஸ் மேலும் பரவுவதைக் குறைக்க சுகாதார அதிகாரிகள் இந்த விடயத்தை ஆராய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் தனியார் வைத்தியசாலைகள் மீது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை!!

சோதனை..

வவுனியாவில் தனியார் வைத்தியசாலைகள் மீது சுகாதார பரிசோதர்களால் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொவிட் 19 தாக்கமானது வவுனியாவில் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப் பிரிவினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் மூன்று பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருந்தனர்.
அந்தவகையில், வவுனியாவில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் சுகாதாரப் பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அங்கு உள்ள சுகாதார வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், சுகாதார நடைமுறைகள் பின்பற்றாமை, அங்கு கடமையாற்றுவோர் மற்றும் வந்து செல்வோர் முகக் கவசங்களை அணிந்துள்ளார்களா,

சமூக இடைவெளி பேணப்படுகின்றனவா போன்ற விடயங்கள் குறித்து பார்வையிட்டதுடன், கொவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன.

நடிகர் பாண்டு கொரோனாவால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

நடிகர் பாண்டு..

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. ‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இடிச்சபுளி செல்வராஜின் சகோதரரான இவர் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த சூழலில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் உள்ளார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.வி.ஆனந்த் கரோனா தொற்றால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது நடிகர் பாண்டுவும் உயிரிழந்திருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறிய ஆலய நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

ஆலய நிர்வாகத்தினர்..

வவுனியாவில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத ஆலயத்தினர் மூவர் சுகாதார பரிசோதகர்களால் சுய தனிமைப்படுத்தபட்டனர்.

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு ஞானவைரவர் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது சுமார் 50 மேற்பட்டவர்களுடன் செவ்வாய்கிழமை (04.05.2021) மாலை அட்டமி பூஜை நடைபெற்றது.

இதன்போது குறித்த ஆலயத்திற்கு விஜயம் செய்த சுகாதார பரிசோதர்கள் ஆலயத்தை பார்வையிட்டதுடன் ஆலய நிர்வாகத்தினர் மூவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக ஆலய குரு, உபயகாரர், ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் என மூவர் சுகாதார பரிசோதகர்களால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் உத்தியோக பூர்வமாக கடமையேற்றார்!!

திருமதி.சுரேந்திரன் அன்னமலர்..

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளராக நியமனம் பெற்ற திருமதி.சுரேந்திரன் அன்னமலர் உத்தியோக பூர்வமாக நேற்று (05.05.2021) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்று கையொப்பமிட்டார்.

வவுனியா தெற்கு வலயத்தின் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மு.இராதாகிருஸ்ணன் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், வவுனியா வடக்கு வலயத்தில் பணியாற்றி வந்த திருமதி.எஸ்.அன்னமலர் வவுனியா தெற்கு வலயத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு வலயத்தில் பணியாற்றும் அதிபர்கள் மற்றும் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் புதிய தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரை வரவேற்றிருந்தனர்.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து உயிரியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி கயலினி!!

மகேஸ்வரன் கயலினி…

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் முதல் நிலை பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார். கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் கயலினி என்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவியே இரண்டு ஏ, பி பெறுபேறுகளை பெற்று உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்.

குறித்த மாணவி பரீட்சை எழுதிவிட்டு தனது குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைக்க கிளிநொச்சி, அறிவியல் நகரில் இயங்கி வருகின்ற ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியுள்ளார்.

தந்தை கூலித் தொழில், தாய் வீட்டுப் பணி செய்பவர். எனவே தான் 2020 உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு குடும்ப பொருளாதாரத்தை தனியே சுமந்து நிற்கும் தந்தைக்கு தோள் கொடுக்க ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்றுள்ளதாக தனது அனுபவத்தினை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

யாழ்.நகர பகுதியில் முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் விரட்டிப் பிடிப்பு!!

யாழ்..

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(05.05.2021) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரப் பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலக காணிக் கிளையின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தல் : பிரதேச செயலாளர்!!

காணிக் கிளை..

வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக் கிளையின் சேவைகள் அனைத்தும் இன்றிலிருந்து எதிர்வரும் 19 ஆம் திகதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொவிட்-19 தொற்று பரவலடைந்துவரும் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகங்களால் விதிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கொவிட்-19 தொற்று பரவல்நிலை காரணமாக வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக்கிளையின் அனைத்து சேவைகளும் இன்றிலிருந்து எதிர்வரும் 19 ஆம் திகதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று : இன்று மட்டும் 11 பேருக்கு தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மட்டும் வவுனியாவில் 11 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் சில இன்று (05.05) இரவு வெளியாகின.

அதில், கோதண்டர் நொச்சிக் குளத்தைச் சேர்ந்த வவுனியா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி சாரதி, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர்,

கெப்பற்றிக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த பொலிசார் ஒருவர், குருக்கள் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் என 6 பேருக்கு மேலும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான 6 பேரையும் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார பிரிவினர், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியாவில் இன்று வவுனியாவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.