இ.றந்த ஆட்டை சமைப்பதற்காக வாங்கி வந்த தம்பி : கோ.பத்தில் தம்பியை கொ.லை செ.ய்த அண்ணன்!!

திருச்சி..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இ.றந்துபோன ஆட்டை ஏன் விலைக்கு வாங்கி வந்தாய் எனக் கேட்ட தம்பியை அண்ணன் க.த்.தியால் கு.த்.திக் கொ.ன்.ற சம்பவம் அ.ரங்கேறியுள்ளது.

அமராவதி சாலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், ராஜசேகரன், ரவிக்குமார் ஆகியோர் உடன் பிறந்தவர்கள். திங்கட்கிழமை அதே ஊரில் சந்திரா என்பவரது ஆடு ஒன்று இ.றந்துள்ளது.

அந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவக்குமார் விலை கொடுத்து வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இ.றந்துபோன ஆட்டை சாப்பிடக் கூடாது, அதை ஏன் வாங்கி வந்தாய் என அண்ணனை க.ண்டித்துள்ளார் தம்பி ரவிக்குமார். அப்போது ஏற்பட்ட வா.க்குவாதம் த.க.ரா.றா.க மாறி, சிவக்குமாரும், மூத்த அண்ணனான ராஜேந்திரனும் சேர்ந்து ரவிக்குமாரை தா.க்.கி.யு.ள்.ள.ன.ர்.

ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த க.த்.தி.யை எடுத்து, ரவிக்குமாரை சிவக்குமார் கு.த்.தி.ய.தி.ல் அவர் உ.யி.ரி.ழந்.தா.ர். சிவக்குமாரையும் ராஜேந்திரனையும் போ.லீ.சா.ர் கை.து செ.ய்தனர்.

நீரில் மூழ்கிய இளம்பெண் : காப்பாற்ற சென்ற 17 வயது மாணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

திருப்பூர்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரஃபி. இவரது மகன் நிஷாரஹீப். 17 வயது நிறைந்த இவர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நிஷாரஹீப் தனது நண்பர்களுடன் சீத்தகாடு பகுதியில் உள்ள அமராவதி தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது,

அங்கு ஆழமான பகுதியில் பெண் ஒருவர் நீரில் மூழ்கியபடி தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இந்த நிலையில் அவரை காப்பாற்ற எண்ணிய நிஷாரஹீப் விரைந்து சென்று அந்த பெண்ணை மேலே தூ.க்கிவிட்டு கா.ப்பாற்றியுள்ளார்.

ஆனால் அந்த நேரத்தில் அவரது கால்கள் சேற்றுப் பகுதியில் மாட்டிக்கொண்டது. இந்நிலையில் அவர் கால்களை எடுக்க முயற்சித்தபோது நீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.

இந்நிலையில் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,

சுமார் இரண்டு மணி நேர தே.டலுக்குப் பின் நிஷாரஹீப்பை ச.டலமாக மீ.ட்டுள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் பெரும் சோ.கத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் நகரசபை சுகாதார பரிசோதகர் உட்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் சில இன்று (05.05) இரவு வெளியாகின.

அதில், வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகர், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வவுனியா நகரைச் சேர்ந்த இருவர், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான 5 பேரையும் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார பிரிவினர், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வீட்டு குளியலறையில் கொ.ன்.று பு.தைக்கப்பட்ட கணவரை பிரிந்து வாழ்ந்த ஆசிரியை : நடந்தது என்ன?

தமிழகத்தில்..

தமிழகத்தில் யோகா ஆசிரியை ஒருவர் வழக்கறிஞர் வீட்டின் குளியலறைக்குள் கொ.ன்.று பு.தை.க்கப்பட்ட சம்பவத்தில் பல்வேறு அ.திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விவாகரத்து பெற்று 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

அவர் வசிக்கும் பகுதியில் இருந்த சித்ராதேவி என்ற யோகா ஆசிரியையும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஹரிகிருஷ்ணனின் மகளுக்கு யோகா கற்று தந்தார்.

தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் சென்று வந்தபோது சித்ரா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்திந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம்தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் மா.ய.மானார்.

இது குறித்து அவரின் தந்தை கண்ணையா பொலிசில் பு.கா.ர் அளித்துள்ளார். பு.கா.ரி.ன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேர்தலை காரணம் காட்டி வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.

மேலும் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது மகளை கொ.லை செ.ய்.து இ.ருக்கலாம் எனவும் கண்ணையா மனு அளித்தார். இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை காலை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் உ.ட.லை கை.ப்.ப.ற்றினர்.

வீட்டில் ஹரிகிருஷ்ணன் தனது கைகளால் எழுதிவைத்த கடிதமும் எடுக்கப்பட்டது.அந்த கடிதத்தில் சித்ராதேவியை தானே கொ.லை செ.ய்.து குளியலறையில் பு.தைத்து இருப்பதாகவும் இது அனைத்தும் தானே செய்ததாகவும்,

தனது சா.வு.க்.கு வேறு யாரும் காரணம் அல்ல எனவும் கொ.லை செ.ய்.த கு.ற்றத்தை பொறுக்க முடியாமல், தனக்குத்தானே த.ண்டனையை கொடுத்துக் கொண்டதாகவும் எழுதியிருந்தார்.

சித்ராதேவியை வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவர்களுக்குள் நடத்தை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கை.க.ல.ப்.பு நடந்துள்ளது. அந்த ஆ.த்.திரத்தில் ஹரி கிருஷ்ணன் அவரை அ.டி.த்.து கொ.லை செ.ய்.த.து தெரியவந்துள்ளது.

இதற்கிடையே காவல்துறையினரின் அலட்சியப் போ.க்கினால், தனது மகள் உ.யி.ர் ப.லி.யாகியுள்ளதாக சித்ரா தேவியின் தந்தை கு.ற்.றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் முதல் முறையாக கொரோனா தொற்றால் கர்ப்பிணிப் பெண் மரணம்!!

கொரோனா..

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 720 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தரவுகள் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், ராகம, பட்டுவத்தை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே உயிரிழந்துள்ளாார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை இந்த மரணம் பதிவாகியுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இந்திய கொரோனா வைரஸ் மரபணு பரவும் ஆபத்து!!

கொரோனா வைரஸ்..

இலங்கையில் புதிய கொரோனா மரபணு அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவில் பரவும் வைரஸ் மரபணு இலங்கையினுள் பரவுவதற்கு ஆபத்துக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மரபணு மாற்றமடைந்து வருவதனால் பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. ஒரு நபரால் அதிகமானோருக்கு கொரோனா தொற்ற கூடும் நிலைமை ஏறப்ட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸின் மற்றுமொரு மரபணு உள்ளது. அந்த வைரஸ் மரபணு இலங்கையில் பரவும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் மீன்பிடி படகு ஊடாக இலங்கைக்கு இந்த வைரஸ் பரவும் ஆபத்துக்கள் உள்ளது இலங்கை வருபவர்கள் ஊடாக இந்த வைரஸ் நாட்டிள் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களால் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி!!

கொரோனா..

நாட்டில் கோவிட் நோயாளிகளை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கு போதுமான அளவு வாகனங்கள் இல்லாமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரிகள், சுகாதார அமைச்சிற்கு தெரிவித்துள்ளது.

சுகாதா அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சுகாதார பணிப்பாளர், பிரதேச சுகாதார சேவை பணிப்பாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான வாகனங்களின் எண்ணிக்கையை விரைவில் சுகாதார பணிப்பாளரிடம் அறிவிக்குமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக்திற்காக வாடகை அடிப்படையில் வாகனம் பெற்றுக் கொள்ளப்படவுள்ள நிலையில் அதற்கான கொடுப்பனவு உலக வங்கியில் உள்ள அவசர பிரிவினால் வழங்கப்படுகின்றது.

முதல் கட்டத்தின் கீழ் கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டத்திற்காக தேவையான வாகனம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மன்னாரில் பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த மாணவிகள் இருவர் கலைப்பிரிவில் சாதனை!!

மன்னாரில்..

வெளியாகியுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சை பெறுபேறுகளில் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமாகக் காணப்படும் மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் கலைப்பிரிவில் மன்னார் மாவட்ட மட்டத்தில் 1 ஆம் மற்றும் 4ஆம் இடத்தை பெற்று மடுக்கரை கிராமத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவிகளான ஜெயரத்தினம் ஜெயப்பிரதா கலைப்பிரிவில் 3 எ சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தினையும், இராமநாதன் புஸ்பலீனா கலைப்பிரிவில் 2 A, B பெறுபேறுகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி உள்ளனர்.

குறித்த மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து, மிகவும் தூரப் பிரதேசமாக இருக்கும் தங்களுடைய கிராமத்திலிருந்து நானாட்டான் பிரதேசத்தில் உள்ள டிலாசால் கல்லூரிக்குச் சென்று கல்வி கற்றுள்ளனர்.

குடும்பத்தில் உள்ள வறுமை ஒரு தடை இல்லை என்று மாவட்ட மட்டத்தில் சிறந்த இடத்தை பெற்று தங்களுடைய கிராமத்திற்கும் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வீடொன்றில் உயிரிழந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

லபேயில்..

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் வீட்டிலிருந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலத்திற்கு மேற்கொண்ட பிரேத பரிசோதனைகளுக்கு அமைய, அவர்கள் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரே வீட்டில் வசித்து வந்த கணவன், மனைவியும் அயல்வீட்டு பெண்ணொருவரும் அடங்குவதாக மாலபேக்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் 84 – 91 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தம்பதியினரின் மகனும் அவரது மனைவியும் கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றைய பெண்ணின் மகளும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவி சரண்யா வர்த்தகப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம்!!

உயர்தரப் பரீட்சை..

நேற்று வெளிவந்துள்ள உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடத்தில் வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரி பெற்றுள்ளது.

அந்தவகையில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை 3A சித்திகளைப் பெற்று சரண்யா என்ற மாணவி பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி தனுசா 3A சித்திகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

வவுனியாவில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற தரண்யா சூரியகுமார் : மருத்துவராகி கிராம மக்களுக்கு இலவச சேவையினை வழங்வேன்!!

தரண்யா சூரியகுமார்..

மருத்துவராகி எனது பின்தங்கிய கிராமமான தச்சங்குளம் மக்களுக்கு இலவசமாக சேவையினை வழங்குவதே எனது இலச்சியமாகும் என வவுனியாவில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி தரண்யா சூரியகுமார் தெரிவித்தார்.

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி உயிரியல் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி தரண்யா சூரியகுமார் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 148வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எதிர்காலத்தில் ஒர் வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது இலட்சியமாகும் . நான் வசிக்கும் பின்தங்கிய கிராமமான தச்சங்குளம் கிராம மக்களுக்கு இலவசமாக சேவையினை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேலும் எனது கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்துச் செல்கின்றேன்.

கோவிட் -19 காரணமாக பாடசாலை, பிரத்தியோக வகுப்புக்கள் , கற்றல் நடவடிக்கைகள் இடையில் நிறுத்தப்பட்டன. இருந்த போதிலும் இணைய வசதியூடாகவும், முன்னர் கற்றவற்றினை மீள கற்றதும் தான் நான் இந்த பெறுபேற்றினை அடைய காரணம்.

எனவே எதிர்வரும் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களும் கோவிட்-19 காரணத்தினை முன்னுறுத்தி கற்றல் நடவடிக்கையினை முடிவுறுத்தாது மேலும் இணையம், கற்றவற்றினை மீட்டல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து சிறந்த பேறுபேற்றினை அடைவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

குறித்த திறமைச் சித்திகளை பெறுவதற்கு காரணமாகவிருந்த குடும்பத்தினர், அதிபர், ஆசிரியர்கள், உறவினர்கள், சக நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.

வவுனியா தெற்கு பிரதேசசபையின் தவிசாளராக யோகராசா போட்டியின்றி தெரிவு!!

தர்மலிங்கம் யோகராஜா..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் யோகராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சிகாலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்க கட்சிகளிற்கிடையில் புரிந்துணர்வு ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்கள் தமது பதவியினை ராஜினாமா செய்திருந்தனர்.

அந்தவகையில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வவுனியா தெற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தேர்தல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

குறித்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் த.யோகராஜாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. வேறு கட்சிகளை சார்ந்தவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை இந்நிலையில் யோகராஜா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபையில் மொத்தமாக 30 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் அதிகபட்சமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கணிதப் பிரிவில் முதலிடத்தினை பெற்ற மாணவன் அபிதன் : ஓட்டோமொபைல் துறையில் சாதனை படைப்பதே தனது இலச்சியம்!!

அசோக்குமார் அபிதன்..

கற்றல் நேரத்தில் கல்வியை செவிமடுத்து கற்றால் சிறந்த பெறுபேற்றினை பெறலாம் எனவும் வவுனியாவில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற அசோக்குமார் அபிதன் என்ற மாணவன், ஓட்டோமொபைல் துறையில் சாதனை படைப்பதே தனது இலச்சியம் என தெரிவித்துள்ளார்.

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கணிதப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் அசோக்குமார் அபிதன் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 326வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எனது இலட்சியம் சிறுவயது தொடக்கம் மாறிக்கொண்டே சென்று கொண்டிருந்தது. கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தின் போதே எனது இலட்சியம் ஆட்டோமொபைல் துறையின் மீது மாற்றம் அடைந்தது. இலட்சியத்தினை அடைய வேண்டுமென கற்றேன் தற்போது சாதனை படைத்துள்ளேன்.

கடந்த இரண்டு வருடங்களாக நான் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அதன் பின் கோவிட் -19 தொற்று காரணமாக எனது தனியார் கல்வி நடவடிக்கைகளையும் தொடர முடியாத நிலமை ஏற்பட்டிருந்தது. பொழுது போக்கில் எனக்கிருந்த நாட்டம் சலித்துப் போனதன் காரணமாக கல்வியில் சற்று ஆர்வம் காட்ட முயற்சித்தேன்.

உண்மையில் கல்வி எனக்கு உறுதுணையாக அமைந்தது மகிழ்ச்சியான விடயம். அத்துடன் கற்றல் நேரத்தில் கல்வியை செவிமடுத்து கற்றால் சிறந்த பெறுபேற்றினை பெறமுடியும். குறித்த திறமைச் சித்திகளை பெறுவதற்கு காரணமாகவிருந்த குடும்பத்தினர், அதிபர், ஆசிரியர்கள், உறவினர்கள், சக நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செ.கிஷாந்தினி வர்த்தகப் பிரிவில் 3A பெற்று சாதனை!!

செ.கிஷாந்தினி..

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி வர்த்தகப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வகுமார் கிஷாந்தினி 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும் தேசிய ரீதியில் 1767வது இடத்தையும் பிடித்து புதுக்குடியிருப்பு மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து செல்வகுமார் கிஷாந்தினி குடும்ப சூழ்நிலையின் மத்தியிலும் தனது கல்வி நடவடிக்கையினை முன்னெடுத்து இவ் பெருபேற்றினை பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெறுமையினை தேடித்தந்துள்ளார்.

கடினமாக பாடங்களை தெரிவு செய்துள்ள இவ் மாணவி மாவட்ட ரீதியில் முதல் 5 இடங்களுக்குள் வருவதினை இலட்சியமாக கொண்டிருந்த போதிலும் அயராத கற்றல் நடவடிக்கையினால் மாவட்ட ரீதியில் 6வது இடத்தினை பெற்றுள்ளார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று புதுக்குடியிருப்பு மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு எமது ஊடக நிறுவனம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.

வவுனியாவில் வறுமையிலும் கலைப் பிரிவில் 3A பெற்று சாதனை படைத்த ப.சுபிலக்ஷி!!

பரமசிவம் சுபிலக்ஷி..

வறுமையை காரணம் காட்டி கல்வியை விடாது கல்வியினை தொடந்து சாதனை நிலைநாட்டுங்கள் என தெரிவித்துள்ள வவுனியாவில் கலைப் பிரிவில் முதலிடம் பெற்ற பரமசிவம் சுபிலக்ஷி என்ற மாணவி, சட்டத்தரணியாகி தனது கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்ப்பதே தனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி பரமசிவம் சுபிலக்ஷி 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 351வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 2019ம் ஆண்டு பரிட்சையில் தொற்றவிருந்த நான் உடன் நிலமை சுகயீனம் காரணமாக 2020ம் ஆண்டு பரிட்சைற்கு தொற்ற வேண்டிய நிலமை ஏற்பட்டது.

எனினும் விடமுயற்சியினால் தற்போது கலைப்பிரிவில் 3A சித்திகளை பெற்றுள்ளேன். எனது எதிர்கால இலட்சியம் சட்டத்தரணியாக வேண்டும் என்பது. அதன் முதற்கட்டத்தினை தற்போது தாண்டியுள்ளேன் என்பதை நினைக்கும் சமயத்தில் மகிழ்ச்சியாகவுள்ளது.

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களும் இலட்சியத்தினை முன்னிறுத்தி கல்வியினை தொடர்ந்தால் சிறந்த பெறுபேற்றினை அடைய முடியும் . குறித்த திறமைச் சித்திகளை பெறுவதற்கு காரணமாகவிருந்த இறைவனுக்கு முதற்கண் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் குடும்பத்தினர், அதிபர், ஆசிரியர்கள், உறவினர்கள், சக நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது குடும்ப வறுமையின் மத்தியிலும் இந்த சாதனை நிலைநாட்டிய என்னை போல் எதிர்காலத்தில் பரிட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களும் வறுமையினை கருத்தில் கொள்ளாது வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென தெரிவித்தார்.

வவுனியா குருக்கள் புதுக்குளம் கிராமம் முடக்கப்படவில்லை : பிசீஆர் முடிவுகளைப் பொறுத்தே தீர்மானம்!!

குருக்கள் புதுக்குளம்..

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் புதுக்குளம் கிராமம் இன்று காலை 10 மணி வரை முடக்கப்படவில்லை. கிராம மக்களின் வழமையான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள குருக்கள் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 27 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அக் கிராமத்தில் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 10 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டதுடன், 100 பேருக்கு கடந்த திங்கள் கிழமை பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் வவுனியாவின் குருக்கள் புதுக்குளம் கிராமம் இன்று (05.05) அதிகாலை முதல் முடக்கப்படுவதாக கொவிட் செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த கிராமத்தில் மூன்று பேர் மாத்திரமே தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ள நிலையில், அங்கு 100 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் முடிவுகள் கிடைக்கப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாகவும், தற்போது கிராமம் முடக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தின் உள்ள பலர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக நிலையங்களில் வேலை செய்வதுடன், கூலி வேலைகளுக்கும் செல்பவர்களாகவும் உள்ளனர்.

அவர்கள் வழமை போன்று தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன், சிலர் தமது கிராமம் முடக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பது தெரியாது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

இருப்பினும், பிசீஆர் முவுகளைப் பொறுத்தே முடக்படுவதா இல்லையா என தெரிவிக்கப்படும் என பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.