எல்லைமீறிவிட்ட ஆபத்து : நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்!!

கோவிட் தொற்று..

கோவிட் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் உரிய நேரத்தில் முடக்கப்படாமையால் இன்று ஆபத்து எல்லைமீறிவிட்டதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். இதனால் நாட்டை முடக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-

கொழும்பு வாழ் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

கொழும்பு வாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்து ஏனைய பயணங்களை முற்றாக தவிர்க்குமாறு கொழும்பு நகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொழில் நிமித்தம், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் வெளியில் செல்லுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு நகர எல்லையில் அதிகமான கோவிட்தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதனால் நகர சபை எல்லையில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்தின் வீடுகள், மாடி வீடுகளில் வசிக்கும் மக்கள், முடிந்தளவு இரண்டு வாரங்களுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு செல்வதனையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதென்பதனால் மக்கள் அவற்றினை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளிளில் இருந்து வெளியே செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து இடைவெளிகளை பின்பற்றுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வாழ் மக்கள் எப்போது அருகில் இருப்பவர்கள் கோவிட் தொற்றாளர்கள் என எண்ணி உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பணிக்கு செல்பவர்கள் தங்கள் உணவை அடுத்தவர்களுடன் பகிராமல் தாங்கள் மாத்திரமே உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தளங்களில் பதிவிடப்படும் மருந்துகள் தொடர்பில் மக்களுக்கு அவசர எ.ச்சரிக்கை!!

இணையத்தளங்களில்..

இணையத்தளங்களை பயன்படுத்தும் இலங்கை மக்களுக்கு அவசர எ.ச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிட் – 19 வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மற்றும் சுதேச மருந்து வகைகள் தொடர்பில் இணையத்தளங்களில் பல பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குறித்த பதிவுகளை நம்பி அதில் குறிப்பிடப்படும் ஆயுர்வேத மற்றும் சுதேச மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுதல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எ.ச்சரிக்கையினை சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு வழங்கியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், உடல் நோய் எ.திர்ப்பு சக்திக்காக உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள வழிக்காட்டல்களுக்கு அமையவே தேசிய மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதனையே மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

இலங்கையில் இன்று முதல் திருமண நிகழ்வுகளுக்கு தடை!!

திருமண நிகழ்வுகளுக்கு தடை..

நாட்டில் பரவி வரும் கோவிட் வைரஸ் நிலைமையை கருத்திற் கொண்டு திருமண நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வு உட்பட, மக்கள் ஒன்றுக்கூடும் அனைத்து நிகழ்வுகளையும் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் கோவிட் தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று காரணமாக தடை செய்யப்பட்டுள்ள கூட்டங்கள், விருந்துகள், திருமணங்கள் ஆகியவைகளை வீடுகளில் அல்லது வேறு இடங்களில் நடத்த முடியாதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பல வீடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுளள்ளார்.

கிளிநொச்சியில் 8 லட்சம் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் எட்டு லட்சத்துப் பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள 1000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைத்த தகவலிற்கு அமைவாக இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் போலி நாணயத்தாள்களை சந்தேகத்திற்கிடமான வகையில் பையில் எடுத்துச் செல்லப்படுகின்றமை தொடர்பில் பொலிஸ் விசேட பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து பொலிஸ் விசேட பிரிவினரால் பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்துக் குறித்த சந்தேகநபரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பையில் சுமார் 5 லட்சத்திற்கு அதிக பெறுமதி கொண்ட போலி நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளது. அதனை மீட்ட பொலிஸார் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை எனவும், சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, குறித்த போலி நாணயத்தாள்களின் பெறுமதி தொடர்பில் கணக்கிடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வவுனியாவில் அறிவுறுத்தலை மீறி இடம்பெற்ற குழு வகுப்புக்கள் சுகாதார பரிசோதர்களால் முற்றுகை!!

வகுப்புக்கள்..

வவுனியாவில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற குழு வகுப்புக்கள் இரண்டு சுகாதார பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது. இன்று (04.05) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொவிட் பரவல் காரணமாக அரசாங்கத்தினால் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், மேலதிக வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அறிவுறுத்தல்களை மீறி வவுனியாவில் சில குழு வகுப்புக்கள் இடம்பெறுவதாக சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குழு வகுப்புக்கள் நடைபெற்ற இரண்டு நிலையங்கள் சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிடப்பட்டன.

அந்தவகையில், வவுனியா தோணிக்கல் பகுதியில் 6 மாணவர்களுடனும், குட்செட் வீதியில் 5 மாணவர்களுடனும் குழு வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற சுகாதார பரிசோதகர்கள் குறித்த இரு வகுப்புக்களையும் இடை நிறுத்தியதுடன், அங்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வி கற்ற மாணவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்ததுடன், கடும் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் சுகாதாரத் துறையினருக்கு பிசீஆர் பரிசோதனை!!

பிசீஆர் பரிசோதனை..

வவுனியாவில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவருடன் தொடர்பை பேணிய சுகாதார துறையினருக்கு பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (04.05) குறித்த பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட நோயாளர் காவு வண்டி சாரதி பணியாற்றிய அலுவலகத்தில் கடமையாற்றியோர், தொடர்பை பேணியோர் என சுகாதார துறையினரிடம் பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் உடன் பணியாற்றிய சாரதிகள், உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என 13 பேரிடம் பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று வெளியாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்..

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய நாளுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சைகளை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அமைச்சர் ஜிஎல் பீரிஸ் அமைச்சரவையில் கொண்டு வந்த இது தொடர்பான யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 10 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கான பாடத்திட்டத்தை ஒரு வருடம் 9 மாதங்களாக மீளமைக்கும் யோசனையையும் அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா தொடர்பான அரச சுற்றறிக்கையை மீறி நடைபெற்ற அரச நிகழ்வு!!

புதிய மணிபுரம் கிராமத்தில்..

கொரோனா தொடர்பான அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளை மீறி வவுனியாவில் அரச அதிகாரிகளால் மக்களைத் திரட்டி நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார பிரிவினராலும், அரசாங்கத்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த விசேட அறிக்கைகள், சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் வட மாகாண ஆளுனரும் வடக்கு மாகாணத்தில் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குறித்த சுற்றறிக்கைகளுக்கு அமைவாக பாடசாலைகள், பல்கலைக்கழங்கள், மேலதிக வகுப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அரச தனியார் நிறுவனங்கள் 25 வீத உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச நிகழ்வுகள், விழாக்கள், ஒன்றுகூடல்கள், திருமண வைபவங்கள், மக்கள் கலந்து கொள்ளும் விசேட நிகழ்வுகள், வீடுகளில் இடம்பெறும் விருந்துபசாரங்கள் என்பன மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் அரச அதிகாரிகள் சிலர் இதனை கண்டு கொள்ளாத நிலை காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்தவகையில் வவுனியா, புதிய மணிபுரம் கிராமத்தில் உள்ள பொது நோக்கு மண்டபத்தில் ‘மாதிரி கிராம அங்குரார்ப்பன’ நிகழ்வு இன்று (04.05) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதில் 75 பேர் வரையிலானவர்கள் கலந்து கொண்டதுடன், சிலர் முககவசங்களை அணியாமலும், சிலர் முக கவசங்களை சீராக அணியாமலும் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம அலுவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் முன்மாதிரியாக இருக்க வேண்டிய நிலையில் அரச சுற்றறிக்கைகளை மீறி நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தி, மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

வவுனியாவில் பேரூந்துகளை வழிமறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் விசேட சோதனை!!

விசேட சோதனை..

கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் போக்குவரத்து வாகனங்களை வழிமறித்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தாக்கம் வவுனியா மாவட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன், இன்று (04.05) காலை 6.30 மணி முதல் விசேட சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

இதன்போது வவுனியா – மன்னார் வீதியின் பட்டானிச்சூர், குருமன்காடு ஆகிய பகுதிகளில் வீதிகளுடாக பயணித்த பயணிகள் பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் என்பவற்றை வழிமறித்து சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடத்தினர்.

இதன்போது சமூக இடைவெளிகளைப் பேணாது அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்துகளுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன், முச்சக்கர வண்டிகளில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.

அத்துடன் மோட்டர் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றில் பயணிக்கும் போது முககவசம் அணியாது சென்றவர்களையும் வழிமறித்த சுகாதார பரிசோதர்கள் அவர்களுக்கு எதிராகவும் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

கர்ப்பிணி தாய்மார்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

கோவிட்-19 தொற்று உறுதியான 70 கர்ப்பிணி தாய்மார்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இதுவரையில் சுமார் 70 கர்ப்பிணி தாய்மாருக்கு கோவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கர்ப்பிண தாய்மார் இயன்றவரை தமது போக்குவரத்துக்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

பொது மக்கள் பெருமளவில் ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம். கர்பிணி தாய்மார் மாத்திரமின்றி பிறந்து ஒரு மாதமேயான குழந்தைகள் முதல் 3 , 5 , 7 மாத குழந்தைகளும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே குழந்தைகள் உள்ள வீடுகளில் ஏதேனுமொரு தொற்று அறிகுறி உள்ள நபர்கள் இருப்பார்களாயின் எக்காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளை அவர்கள் அருகில் விட வேண்டாம். அத்தோடு குழந்தைகள் சிறுவர்களை அநாவசியமாக வீட்டிலிருந்து வெளியிடங்களுக்கு அனுப்புவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளக் கூடிய வகையில் அவர்களுக்கான உணவுகள் வீடுகளிலேயே சமைத்து வழங்கப்பட வேண்டும். கடைகளில் தற்காலிகமாக தயாரிக்கப்படும் உணவுகளை வழங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

திடீரென மயங்கி விழுந்த இளம் பெண் மரணம்!!

இளம் பெண்..

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். எவ்வித நோய் அறிகுறியுமற்ற 26 வயதுடைய இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய மதுஷானி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இருமல், காய்ச்சல், தடுமன் போன்ற அறிகுறிகள் அற்ற பெண் இரவு தனது தாயாரிடம் நீர் ஒரு கோப்பை பெற்று குடித்தவுடன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவரது சடலத்தை ஒப்படைப்பதற்கு முன்னர் பீசீஆர் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் பலி : பலி எண்ணிக்கை 700ஐ கடந்தது!!

கொரோனா..

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் இன்று மேலும் 867 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,913 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட்கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து 98,209 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் 1913 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 867 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,913 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட்கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கோவிட் நோயாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து 98,209 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும், கோவிட் தொற்றுக்குள்ளாகிய 696 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலையில் வீட்டின் பின்பக்கம் சென்ற மருமகள் : மாமியாரின் நிலையை பார்த்து ஏற்பட்ட அ.திர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மருமகளுடன் ஏற்பட்ட ச.ண்டையில் மாமியார் உ.யி.ரை மா.ய்த்து கொ.ண்டுள்ளார். ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் மேரி (60). இவர் கணவரை பிரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தனது மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்தார்.

அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதி மாமியார் மேரியுடன் அ.டிக்கடி ச.ண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேரி ம.னமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர்.

நேற்று காலையில் மருமகள் புஷ்பரதி கோழி கூண்டை திறக்க வீட்டின் பின்பக்கம் சென்றார். அப்போது மேரி உ.ட.ல் க.ரு.கி.ய நிலையில் பி.ண.மா.க கிடப்பதை கண்டு அ.தி.ர்.ச்.சி அடைந்தார். அவர் உ.ட.லி.ல் ம.ண்எண்ணெய் ஊ.ற்றி தீ.க்.கு.ளி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.த.தா.க தெ.ரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று மேரியின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரேத ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்து கொண்ட திருமணமான இளம்பெண்!!

தமிழகத்தில்..

திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராகவுள்ள நிலையில் நேர்த்திக்கடனுக்காக பெண் ஒருவர் தனது நா.க்கை அ.றுத்து கொ.ண்டது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7-ம் திகதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் முதல்வராக உள்ளதால் பெண் ஒருவர் நா.க்கினை அ.றுத்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32). இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நா.க்கை அ.றுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நா.க்கினை க.த்தியால் அ.றுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நா.க்கை அ.றுத்துக் கொ.ண்டார்.

கோவில் திறக்காததால் நா.க்கினை வாசல் படியில் வைத்துவிட்டு ர.த்த வெ.ள்ளத்தில் கி.டந்தார். பின் பொதுமக்கள் மீ.ட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு வனிதாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.