கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அண்மையில் சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த இயந்திரம் குடை சாய்ந்து அதன் சாரதி ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (24.03.2021) காலை சுமார் 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பு பணிக்காக சென்று கொண்டிருக்கும் போது குறித்த மண் அகற்றும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடுப்பு கட்டை செயலிழந்துள்ளது.
அதனால் குறித்த இயந்திரம் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போது சாரதி பாய்ந்துள்ளதாகவும் அவர் பாய்ந்த பக்கத்திலேயே இயந்திரம் குடை சாய்ந்ததில் அதில் அகப்பட்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் பதுளை ஹாலிஎல உடுவர பகுதியை சேர்ந்த யாப்பா முதியன்ஸலாகே சந்தருவான் மதுசங்க யாப்பா (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் கித்துல்கல தெலிகம வைத்தியசாலையில் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
குறித்த விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட சமயத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து குறித்த நோயாளிக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரமே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமென வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவு நாளையதினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதுடன் குறித்த நோயாளி வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொரோனா காலப்பகுதியில் வவுனியா நெளுக்குளம் – வீரபுரம் பாதையில் உள்ள சூடுவெந்தபுலவு பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக இராணுவ சோதனைச்சாவடி நிரந்தரமாக மாற்றப்பட்டு இராணுவ சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
கடந்த வருடம் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதன்போது மக்களை கண்காணிக்கும் வகையில் வவுனியா மாவட்டத்தின் சூடுவெந்தபுலவு, ஓமந்தை, ஈரப்பெரியகுளம், கனகராயன்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தற்போது, ஓமந்தை சோதனைச் சாவடி நிரந்தரமாக்கப்பட்டுள்ள நிலையில் நெளுக்குளம் – வீரபுரம் வீதியில் உள்ள சூடுவெந்தபுலவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சோதனை சாவடி தற்போது நிரந்தர கட்டுமாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வீதி தடைகள் போடப்பட்டு நிரந்தர சோதனைச் சாவடியாக மாற்றப்பட்டுள்ளது.
குறித்த வீதியை அண்டிய கரையில் சீமந்திலான தளம் அமைக்கப்பட்டு அதன்மேல் நிரந்தர கொட்டகைகள் அமைக்கப்பட்டு, சிறிய வீதி கண்காணிப்பு காவலரணும், வீதி தடைகளும் போடப்பட்டு இராணுவத்தினரும், பொலிசாரும் இணைந்து கடமையில் ஈடுபடுவதுடன், அவ் வீதி வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
வவுனியா நகரில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு நகரின் முக்கிய சந்திகளில் CCTV கமராக்கள் பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரில் இடம்பெறும் கு.ற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையில் நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக CCTV கமராக்கள் பொருத்தும் நடவடிக்கை வவுனியா வர்த்தகர் சங்கத்தின் பங்களிப்பில் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் வவுனியா தலைமை பொலிஸாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில் குறித்த கமராக்கள் அனைத்தும் கண்காணிப்படுவதற்கும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
வர்த்தக நிலையங்கள் , நகருக்கு வரும் பயணிகளின் நன்மை கருதியும் நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்கவுமே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடனுக்கு வாங்கிய லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்த நிலையில் அதை அதிர்ஷ்டசாலியிடம் நேர்மையாக கொடுத்த ஏழை பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. கேரளாவில் ஸ்மிஜா மோகன் என்பவர் லொட்டரி சீட்டு விற்று வருகிறார்.
இவரின் மூத்த மகனுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறான். இரண்டு வயது இளையமகனுக்கு புற்றுநோய் பாதித்துள்ளது. இதற்கான , சிகிச்சைக்கு பல லட்ச ரூபாய் ஸ்மிதாவுக்கு தேவைப்படுகிறது.
இவரிடத்தில் சந்திரன் என்பவர் கடனுக்கு லொட்டரி டிக்கெட் வாங்குவது வாடிக்கையாக இருந்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு கேரள மாநில கோடை கால பம்பர் பரிசுக்கான லொட்டரி டிக்கெட்டை ஸ்மிஜாவிடத்தில் போன் வழியாக சந்திரன் புக் செய்துள்ளார்.
குறிப்பிட்ட எண்ணை போனிலேயே ஸ்மிஜா தெரிவிக்க எஸ்.டி 316142 என்ற எண்ணுடைய லொட்டரி டிக்கெட்டை சந்திரன் தேர்வு செய்துள்ளார். ஆனால், அந்த டிக்கெட் ஸ்மிஜா வசமே இருந்தது. இந்த நிலையில், ஸ்மிஜா சந்திரனுக்காக வாங்கி வைத்திருந்த டிக்கெட்டுக்கு கேரள கோடைகால லொட்டரியில் முதல் பரிசான ரூ. 6 கோடி விழுந்தது.
இதையடுத்து, உடனடியாக சந்திரனை நேரில் அழைத்த ஸ்மிஜா, தன் வசமிருந்த டிக்கெட்டை அவரிடத்தில் ஒப்படைத்தார். கடனுக்காக வாங்கிய டிக்கெட்டாக இருந்தாலும், துளி பணத்துக்கு கூட ஆசைப்படாமல் தன்னிடத்தில் டிக்கெட்டை கொடுத்த ஸ்மிஜாவுக்கு கண்ணீருடன் சந்திரன் நன்றி தெரிவித்தார்.
டிக்கெட் விலை 200 ரூபாயையும் உடனே கொடுத்தார். தன் வாழ்க்கையில் இவ்வளவு பணக்கஷ்டம் இருந்த போதிலும் ஸ்மிஜா நேர்மையாக நடந்து கொண்டுள்ளார்.
தனக்கு ஆ.பா.ச ப.டங்களை அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அவருக்கு தானே பொது இடத்தில் வைத்து கொ.டூ.ர.மா.ன த.ண்.ட.னை கொடுப்பேன் என கி.வீரலட்சுமி கூறியுள்ளார்.
தமிழர் முன்னேற்றபடை என்ற அமைப்பின் நிறுவனர் கி.வீரலட்சுமி. இராமநாதபுரத்தை சேர்ந்த இவர் சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ‘My India Party’ சார்பில் போட்டியிடுகிறார்.
வீரலட்சுமி பம்மல் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு புதிய எண்ணில் இருந்து ஆ.பா.ச வீ.டியோக்கள் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் இதுகுறித்து பொலிஸில் பு.கா.ர் அளித்ததையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீரலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனக்கு “ஆ.பா.ச வீ.டியோ அ.னுப்பிய நபரை 3 நாட்களில் போலீசார் கை.து செய்ய வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டவனை தூ.க்கிட்டு வந்து நி.ர்.வா.ண.மா.க பல்லாவரம் சந்தையில் க.ட்.டி வை.த்.து, பி.ற.ப்.பு.று.ப்.பை அ.று.த்.து, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்” என சபதம் எடுத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனக்கு ஆ.பா.ச ப.ட.ம் அனுப்பியவருக்கு பல்லாவரம் சந்தையில் வைத்து நானே தீர்ப்பெழுதுவேன் என்று கூறியுள்ளார். அவரது பதிவு பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நகை, பணத்துக்காக முதலாளியம்மாவை கொ.லை செ.ய்.த தம்பதி பொலிசில் சி.க்.கி.யு.ள்.ள நிலையில் சம்பவம் தொடர்பில் பல புதிய அ.தி.ர்.ச்.சி.த் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ரவி. இவர் மனைவி கலைவாணி.
ரவி தொழிலை கவனிக்கச் சென்று விட கலைவாணி பெரும்பாலும் வீட்டில் தனியாகவே இருப்பார். கழுத்தில் 15 சவரன் தாலி செயினும், கைகளில் தங்க வளையல்களும் என எப்போதும் அணிந்திருப்பது கலைவாணியின் வழக்கம்.
இந்த நிலையில் கலைவாணி வீட்டுக்கு ராகேஷ் என்பவர் பெயின்டிங் வேலைக்கு வந்துள்ளார். அப்போது, கலைவாணியிடம் தான் கொரோனா ஊரடங்கால் பெரிதும் பா.திக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு ஒரு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் ப ரிதாபமாக கேட்டுள்ளார்.
இதனால், அவரை வீட்டு காவலாளி வேலைக்கு வைத்துள்ளார். தொடர்ந்து, தன் மனைவி ரேவதியையும் அழைத்து வந்து கலைவாணி வீட்டில் பணிப்பெண் வேலைக்கு ராகேஷ் சேர்த்துள்ளார். கணவன், மனைவி இருவரும் கலைவாணி வீட்டிலேயே தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தொழிலுக்கு சென்ற ரவி போன் செய்தும் கலைவாணி எடுக்காததால் ச.ந்தேகமடைந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு க.தவை வெகுநேரமாக த.ட்டியும் திறக்கப்படவில்லை.
பின்னர் க.தவை உ.டை.த்.து உள்ளே சென்ற அவருக்கு அ.தி.ர்.ச்.சி கா.த்திருந்தது. படுக்கையறையில் கை, கா.ல்.க.ள், வா.ய் க.ட்.ட.ப்.ப.ட்.ட நி.லையில் ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கலைவாணி கி.ட.ந்.தி.ரு.க்கிறார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு கலைவாணியை தூ.க்கிச்சென்ற நிலையில் அவர் இ.றந்.து.வி.ட்.ட.து தெரியவந்தது. சம்பவம் குறித்த வி.சாரணையில் ராகேஷ் – ரேவதி தம்பதி முதலாளியம்மா கலைவாணியை கொ.லை செ.ய்.து நகைகள், பணத்தை கொ.ள்.ளை.ய.டி.த்.து கொ.ண்டு த.ப்.பி.ய.து தெ.ரியவந்தது.
மேலும் பெங்களூரில் ப.து.ங்.கி.யி.ரு.ந்.த இருவரையும் பொலிசார் கை.து செ.ய்தனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், கலைவாணியை அவர்கள் மி.ர.ட்.டி தங்க நகைகளை கொ.ள்.ளை.ய.டி.க்.க மு.யற்சி செ.ய்திருக்கின்றனர். கலைவாணி அவர்களுடன் போ.ரா.டி.யி.ரு.க்.கி.றா.ர்.
இதையடுத்து த.லையில் அ.வ.ரை ப.ல.மா.க தா.க்.கி.யு.ள்.ள.ன.ர். கலைவாணியைக் கொ.லை செ.ய்.த பி.றகு அவர் அணிந்திருந்த ஒவ்வொரு நகைகளையும் ராகேஷ் எடுத்திருக்கிறார். கலைவாணி அணிந்திருந்த மெட்டியைக் கூட விட்டுவைக்கவில்லை என கூறியுள்ளனர்.
தலவாக்கலை – சென்.கிளயார் – டெவோன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியின் தாய் காயமடைந்துள்ளார். மேலும், முச்சக்கரவண்டி சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த 25 வயதான கணேஷன் நித்யாவின் சடலம், கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, லொறியின் சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ளை−பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலியார்குளம் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலியார்குளம் சந்தியில் இன்று (23.03.2021) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செட்டிக்குளம் வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் முதலியார் குளம் சந்தியில் வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்” எனும் வாசகத்துடன் வவுனியாவின் பல பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகளை இன்று பசார் வீதி, நகரசபை வீதி, இறம்பைக்குளம், குருமன்காடு போன்ற நகர்ப் பகுதிகளில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கு நுண்கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றியம் உரிமை கோரியுள்ளது.
இதேவேளை இலங்கையில் சுமார் 24 இலட்சம் பேர் நுண்கடனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியும், இதற்கு தீர்வு வழங்குமாறு கோரியும் பொலன்னறுவையில் சுழற்சி முறையிலான போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டமானது 16ஆவது நாளாகவும் இன்று சுழற்சி முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட 16 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதிநிதிகள் பங்கேற்று வருவதாக தெரியவருகிறது.
ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடுவதனை தடுப்பதற்காக இந்த சேவை கடந்த காலங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தேசிய அடையாள அட்டையை பெறுவோர், பத்தரமுல்ல தலைமை அலுவலகம் அல்லது தென் மாகாண பிராந்திய அலுவலத்திற்கு நேரடியாக வருவதற்கு முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
அதற்காக தங்கள் பிரதேச செயலக அலுவலகத்தின் அடையாள அட்டை பிரிவின் 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும் பொது சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு எதிர்பார்க்கும் நபர்கள் தங்கள் கோரிக்கைளை கிராம சேவகர் மூலம் பிரதேச செயலக அடையாள அட்டை பிரிவிற்கு அனுப்ப முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த கோரிக்கை திணைக்களத்திற்கு கிடைத்த பின்னர் தேசிய அடையாள அட்டை அச்சிட்டு விண்ணப்பதாரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நிலத்தடி நீருக்குள் விவசாயத்துக்கும் மூலமான குளங்களை பாதுகாக்க எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறும் சத்தியாக்கிர போராட்டத்தில் இன மத பேதமின்றி கலந்துகொள்ளுமாறு வவுனியா குளத்தை பாதுகாக்கும் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.
இன்று குறித்த செயலணியால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா மாவட்டமானது தனிச் சிறப்பம்சமாக நூற்றுக்கணக்கான குளங்களைத் தன்னகத்தே கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும். இங்கு குடிநீர்த்தேவைக்கான நிலத்தடி நீருக்கும் விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன.
இந்த நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
பெயரில் மாத்திரமே பல குளங்கள் இருக்கின்ற நிலையில் வவுனியா எனப்பெயர்வரக் காரணமான வவுனியன் விளாங்குளம் (அ) வவுனியாக் குளம் பலவழிகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் செய்யப்படுவது பாரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது.
வவுனியாக் குளம் மண்கொட்டி அழிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் 20க்கும் மேற்பட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிணைவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘வவுனியாக் குளத்திற்கான மக்கள் செயலணி’ தோற்றம் பெற்றிருந்தது.
குளத்தின் 2000 சதுர மீட்டர் நீரேந்து பகுதி மண்கொட்டி நிரவப்பட்டு ‘சுற்றுலா மையம்’ என்ற பெயரிலான ஒரு வியாபார ஸ்தலமாக மாற்றப்படுவது தொடர்பில் பொது விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு சுவரொட்டி இயக்கத்தையும் துண்டுப்பிரசுர இயக்கத்தையும் நடாத்தியிருந்தோம்.
தற்போது சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் வியாபார நோக்கில் தொடர்ந்து விஸ்தரிக்கப்படுமாயின் குளத்தின் நீரேந்து பகுதி மென்மேலும் குறைவடைந்து செல்லும் அபாயமுள்ளதையும், சுற்றுலா மையத்தின் குத்தகைதாரர் நகரசபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிக் கட்டடங்களை அமைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியே வந்திருந்தோம்.
இதனால் குளத்தில் போடப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு குளத்தின் நீரேந்து பகுதி பழைய நிலைக்குக் கொண்டுவரப்படவேண்டுமென்பதையும் நீர்ப்பரப்பிற்குப் பாதிப்பின்றிய முறையில் மிதக்கக்கூடிய பொறிமுறைகளால் பூங்காவை அமைக்கலாம் என்றும் எமது கோரிக்கைகளில் வெளிப்படுத்தியிருந்தோம்.
நாங்கள் எதிர்வு கூறியது போன்றே துரதிஷ்டவசமாக மக்கள் எதிர்ப்பை மீறியும் பொழுதுபோக்கு என்ற போர்வையில் குள ஆக்கிரமிப்பு விஸ்தரிக்கப்பட்டுக்கொண்டே சென்றது.
நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் நகரசபையின் எதிர்ப்பையும் மீறி மற்றோர் 2000 சதுரமீட்டரிலும் அதிகமான நீரேந்து பகுதி மண்ணிட்டு நிரப்பப்பட்டு சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதுடன் அதை உடைக்குமாறு நகரசபையால் அனுப்பப்பட்ட உத்தரவும் தொடர்ந்து மீறப்பட்டே வந்துள்ளது.
எனவே இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு சுற்றுலாமையம் என்ற பெயரில் குளத்தில் கொட்டப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு நீரேந்து பகுதி பழையநிலைக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்பது எமது உடனடிக்கோரிக்கையாக உள்ளது.
எழுத்து மூலமும் நேரிலும் இக் கோரிக்கைகள் அரச அதிகாரிகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் பலமுறை வழங்கப்பட்டும் சரியான நடவடிக்கைகள் இன்மையால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றிற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இது தொடர்பாக 21.03.2021 அன்று பல பொது அமைப்புக்கள், இளைஞர்கள் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சமய நிறுவனங்கள், இலக்கிய அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோருடனும்,
குறித்த குளத்திற்குக் கீழான கமக்காரர் அமைப்பின் பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் முன்னிலையில் சந்தித்துக் கலந்துரையாடியதன் அடிப்படையில் 26.03.2021 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பண்டார வன்னியன் சிலை முன்றலில் அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் ஒன்றினைச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம்.
நிலத்தடி நீரையும் விவசாயத்திற்கான நீர்ப்பாசனத்தையும் பாதுகாத்து எமது அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பதன் முதற்படியாக இன்று அனைவரும் வவுனியாக் குளத்தினைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்.
அனைத்துப் பொது அமைப்புக்களும் மக்களும் இன மத கட்சி பேதமின்றிக் கலந்துகொண்டு எமது நீர் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வோம் எனவும் அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஒருவரின் மரணம் குறித்து இலங்கையும், ஜப்பானும் விவாதித்துள்ளன.
வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும், ஜப்பானிய தூதர் அகிரா சுகியாமாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது.
33 வயதான இலங்கை பெண்ணே ஜப்பானில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இந்த மாத ஆரம்பத்தில் மரணமானார். வீசா அனுமதியில் பிரச்சனை காரணமாகவே அவர் ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கடுமையான மன அழுத்தம் மற்றும் உடல்நலம் மோசமடைந்ததால் அவரால் சாப்பிடவும் நடக்கவும் முடியவில்லை.
இதனையடுத்தே அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் ஜப்பானிய காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திருமணம் ஆன ஒரு மாதத்திலே மனைவியை கணவன் க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. 35 வயதான இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார்.
அப்படி சென்னை ஆலந்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது, ஆலந்தூர் பகுதியை சேர்ந்த விவாகரத்து ஆன மகேஸ்வரி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் திகதி இருவரும், பெரியபாளையம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின், இருவரும் மேல்நல்லத்தூர் கிராமத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். திருமணம் முடிந்த சில தினங்களிலே கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பி.ரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதே போல் சம்பவ தினத்தன்று, கடந்த 20-ஆம் திகதி இருவருக்குமிடையே மோ.த.ல் ஏ.ற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். இருப்பினும் ஆ.த்திரம் அடங்காத கோபி மனைவியை கொ.லை செ.ய்.ய முடிவு செய்தார்.
அதன் படி, நள்ளிரவு 12 மணியளவில் எழுந்த கோபி தூங்கி கொண்டிருந்த மனைவி மகேஸ்வரியின் க.ழு.த்.தை க.த்.தி.யா.ல் அ.று.த்.து து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.தா.ர்.
இரவு முழுவதும் மனைவியின் உ.டலுடன் தனியாக இருந்த கோபி, அதிகாலை நேரத்தில், அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று ச.ர.ண் அ.டைந்துள்ளார். பொலிசார் கொ.லை.க்.கா.ன கா.ரணம் என்ன என்பது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா- ஓமந்தை, கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெறுகின்ற கிரவல் அகழ்வு தொடர்பில் கிராம மக்கள் மற்றும் கிராம அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து அப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழாமொன்று இன்று (22.03.2021) நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா- ஓமந்தை, கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெறுகின்ற கிரவல் அகழ்வு தொடர்பாக அபிவிருத்தி குழுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய கூட்டங்களில் பல தடவைகள் பொது அமைப்புகளால் குறித்த விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியும்,
எதுவித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் குறித்த விடயத்தை ஆராயும் முகமாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இன்று குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்த சூழல் பாதுகாப்பு தொடர்பாக எல்லா மாவட்டங்களிலும் நாளைய தினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற இருக்கின்றது.
சிங்கராஜாவனம் அழிக்கப்படுகின்றது எனக் கூறி ஒரு சிறுமி தென்னிலங்கையிலே பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருக்கின்றார்.
அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்ற பலர் இந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இங்கும் மிக மோசமாகச் சுற்றுச்சூழல் பாதிப்படைவதனை காணக்கூடியதாக இருக்கின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காடழிப்பு மற்றும் மண் அழிப்பு என்பன கொடுக்கப்படுகின்ற அனுமதிக்கு மேலதிகமாக அழிக்கப்படுகின்றது.
நாங்கள் இங்கு வருகின்ற போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் ஓடிவிட்டார்கள். இவ்வாறு தப்பி ஓடியதிலிருந்தே தெரிகிறது. சட்டவிரோதமாக மண் அகழ்கிறார்கள் என்று. இந்நிலைமை நாட்டில் இருக்கின்ற ஒரு மோசமான நிலையாக இருக்கின்றது.
இதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் தனியார் மற்றும் அரச காணிகளிலேயே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிரிந்து சென்ற மனைவி தன்னுடன் வந்து சேர்ந்து வாழ மறுத்ததால், அவருடன் நெ.ருக்கமாக இருந்த வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டுவிடுவேன் என்று கணவன் மி.ரட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்து இருக்கும் சானடோரியத்தில், பீகாரை பூர்வீகமாகக் கொண்ட பிரபல செல்வந்தரின் மகன் தான் சபீக் அகமது. இவரின் தந்தை 40 ஆண்டுகளுக்கு மேலாக தோல் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், சபீக் அகமதுவிற்கு ஏற்கனவே 2 திருமணம் ஆன நிலையில், மூன்றாவது திருமணம் கடந்த 2019-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்ற ஹைதராபாத் பெண்ணை பிரபல திருமண இணையதளம் மூலம் பார்த்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவரை திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணிற்கும் இது மூன்றாவது திருமணம். திருமணத்திற்கு பின்னர் சபீக் அகமது, தனது மனைவியுடன் ஒன்றாக இருக்கும் போது, அதை வீடியோவாக எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கணவர் என்பதால், அவரும் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு வீட்டில் இருந்து சபீக் அகமது வேலை செய்து வந்த காலத்தில், அவருடைய மனைவி கர்ப்பம் ஆகியுள்ளார்.
ஆனால், இது அவருக்கு பிடிக்காததால், மனைவியை அழைத்துச் சென்று கருவை கலைத்துள்ளார். கணவரின் தொடர் தொ.ல்.லை தாங்க முடியாமல், அந்த பெண் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று காவல்நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளது.
இதை அறிந்துஅ கொண்ட சபீக் அகமது, தன்னுடைய மனைவியை போனில் தொடர்பு கொண்டு, என்னுடன் வந்து சேர்ந்து நீ வாழவில்லை என்றால், நாம் இருவரும் ஒன்றாக இருந்த போது, எடுத்த வீடியோவை எல்லாம் இணையத்தில் பதிவிவேற்றிவிடுவே, வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துவிடுவேன் என்று மி.ர.ட்டியுள்ளார்,
ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதைக் கண்டு அ.திர்ச்சியடைந்த அவர், உடனடியாக சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதன் பின் சபீக் அகமதுவை கைது செய்த பொலிசார், அவர் வீட்டில் சோ.த.னை மே.ற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீடியோக்கள் மட்டுமின்றி, அவர் முதல் 2 மனைவிகளுடன் நெருக்கமாக இருந்த வீடியோவுக் இருப்பதைக் கண்டு அ.திர்ந்துள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட தொடர் வி.சாரணையில், முதல் மனைவி கான்பூரைச் சேர்ந்தவர், அவரையும் இவர் பிரபல இணையதளம் மூலம் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண்ணையும் இப்படி வீடியோ எடுத்து டார்ச்சர் செய்ததால், அவர் இவரை விட்டு விலகியுள்ளார். இவர் மீது, கான்பூர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார்.
இரண்டாவது மனைவி பெங்களூரை சேர்ந்தவர், இவரை தங்கள் வழக்கப் படி திருமணம் செய்து கொண்ட சபீக் அகமது, அவரிடம் இது போன்ற செயலில் ஈடுபட, அந்த பெண், காவல்நிலையத்தில் பு.கா.ர் கொடுத்து பிரிந்து சென்றுவிட்டார்.
தற்போது மூன்றாவது சி.க்கியுள்ள இவரை சென்னை பொலிசார் கைது செய்து சி.றையில் அ.டைத்துள்ளனர். மேலும் அவனிடம் தொடர்ந்து வி.சாரணை மேற்கொண்டால் பல விஷயங்கள் தெரியவரலாம் என்று நம்பப்படுகிறது.