கனடாவில் உள்ள மிருகக்காட்சிசாலை ஒன்றில் 44 ஆண்டுகளுக்கும் மேலாக “லூசி” என்ற இலங்கை யானை ஒன்று அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனை விடுவிக்கக் கோரி இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரிடம் ஒமல்பே சோபித்த தேரர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். JUSTICS FOR ANIMALS & NATURE எனப்படும் அமைப்பின் தலைவரான தேரர் அந்த யானையை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
1977ஆம் ஆண்டு 10 ரூபாய்க்கு குறித்த யானையை ஜேர்மன் நாட்டவர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார். பின்னர் அதனை கனடாவில் உள்ள மிருகக்காட்சிசாலை ஒன்றில் 9000 லொடருக்கு விற்பனை செய்துள்ளார்.
44 ஆண்டுகளாக குறித்த யானை துன்பம் அனுபவிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அதனை விடுக்குமாறு தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டிலுள்ள மத்தியதர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் புதிய குடியிருப்பு தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதாக கிராமப்புற வீடமைப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
100 குடியிருப்புகள் கொண்ட வீடுகளை கட்டுவதற்கான வீட்டுவசதி திட்டத்தை ஆரம்பிக்க அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் ஒரு வீட்டு திட்டம் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மாடி வீட்டு தொகுதியில் 2 அறைகள் கொண்ட 650 சதுர அடியிலான வீடு ஒன்று 6.9 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மதிப்பீட்டிற்கமைய 3அறைகள் கொண்ட வீடு ஒன்று 9 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
நூற்றுக்கு 24 வீதமான பணத்தை முதலில் செலுத்தி வீடு ஒன்றை ஒதுக்கிக் கொள்ள முடியும். மீதி பணத்தை மாதாந்த அடிப்படையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக நூற்றுக்கு 6.25 வட்டியின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதன்முறையாக, சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான மற்றும் அதிநவீன டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் ஒன்று திற்க்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, தியனஉயன பிரதேசத்தில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் தீர்மானத்திற்கமைய ‘m stop’ எனப்படும் இந்த பேருந்து நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
20 x 8 அடி அளவில் இலங்கையில் முதல் முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘m stop’ பேருந்து நிலையம் மக்கள் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் ஏடீஎம் இயந்திரம், ஆசணங்கள், Wi-Fi வசதி, குளிரூட்டப்பட்ட கட்டமைப்பு, CCTV கட்டமைப்பு, தானியங்கி கதவுகள், நகர வரைப்படம், விளம்பரங்களுக்காக டிஜிட்டல் LCD கட்டமைப்பு மற்றும் கையடக்க மீள்நிரப்பு வசதி மற்றும் சிறிய வர்த்தக நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவை உள்ளடக்கப்படுகின்றது.
நீர்கொழும்பில் பேஸ்புக் காதலால் 24 வயதுடைய பெண் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50 வயதுடைய பணக்காரரான ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 24 வயதுடைய பெண்ணை பேஸ்புக் ஊடாக காதலித்துள்ளார்.
நீர்கொழும்பை சேர்ந்த குறித்த பெண் ஹோட்டல் உரிமையாளருடன் நீண்ட காலமாக காதல் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் குறித்த பெண் தனது வீட்டில் திடீரென தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.
வி.சாரணையின் போது குறித்த பெண்ணால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தானும் ஹோட்டல் உரிமையாளரும் எடுத்துக் கொண்ட அ.ந்தரங்க பு.கைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அ.ச்.சு.று.த்.த.ல் விடுத்தமையினால் மன வருத்தமடைந்து இந்த முடிவை எடுத்ததாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை வி.சாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற கு.ழந்தையை பு.தைத்தார் என்ற கு.ற்றச்சாட்டில் தாய் கை.து செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாயான 36 வயதுப் பெண்ணே கடந்த திங்கட்கிழமை கு.ழந்தை ஒன்றை பெற்றுள்ளார். பின்னர் கு.ழந்தையை தான் வசிக்கும் கா.ணியில் பு.தைத்துள்ளார்.
குறித்த பெ.ண்ணின் ந.டவடிக்கைகளில் ச.ந்தேகம் கொண்ட ஒருவர், கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில், பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
தான் கு.ழந்தையைப் பிரசவிக்கவில்லை என தாய் தெரிவித்த நிலையில் அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து ப.ரிசோதித்தபோது அவரே கு.ழந்தையை பிரசவித்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் தாயாரை பொலிஸார் ச.ந்தேகத்தின் பேரில் கை.து செய்துள்ளனர்.
இந்தியாவில் தா.யை ம.க.ன் அ.டி.த்.து.க் கொ.ன்.ற வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. குறித்த வீடியோவை Saahil Murli Menghani என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்த ச.ம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. 76 வயது மதிக்கத்தக்க தாயிடம் மகன் தன் மனைவியுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தாயுடன் வா.க்குவாதம் மு.ற்றியதால், கோ.பமடைந்த அந்த நபர் தன்னுடைய கை.யா.ல் ப.ல.மா.க அ.வ.ரை தா.க்.கு.கி.றா.ர்.
இதில் நி.லைதடுமாறி கீழே வி.ழ, இதைக் கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த மருமகள், அவரை எ.ழுப்ப மு.யற்சிக்கிறார். இருப்பினும் அவர் எழும்பாத காரணத்தினால், அருகில் இருக்கும் ம.ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் உ.யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு அவர் த.ண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
👉She was taken to a nearby hospital which declared her brought dead pic.twitter.com/AajwTWuBq8
— Saahil Murli Menghani (@saahilmenghani) March 16, 2021
கனடாவில் கொரோனா காரணமாக பிரிந்திருந்த ஒரு காதல் ஜோடி, போட்டோஷூட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு மிராண்டா ஆண்டர்சன் (21) என்ற புகைப்படக்கலைஞரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
வான்கூவரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த போடோஷூட் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு, சவி நுகாலா என்ற அந்த காதலி, மிராண்டாவை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
தான் போட்டோஷூட் அன்று தன் காதலரான ஷரத் ரெட்டியிடம் புரபோஸ் செய்யப்போவதாகவும், அதை ரகசியமாக வைத்துக்கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். சும்மா ஒரு போட்டோஷூட்டுக்காக ஏற்பாடு செய்திருப்பதாக ஷரத்திடம் கூறுமாறு சவி மிராண்டாவிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அனைவரும் அந்த நாளுக்காக தயாரகிக்கொண்டிருக்க, சரியாக போட்டோஷூட்டுக்கு இரண்டு நாட்கள் முன்பு மிராண்டாவுக்கு ஷரத்திடமிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.
அவர் மிராண்டாவிடம், போட்டோஷூட் அன்று தான் சவியிடம் புரபோஸ் செய்யப்போவதாகவும், அதை ரகசியமாக வைத்துக்கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத மிராண்டாவுக்கோ ஒரே திகைப்பு, இருந்தும் வெளியில் எதையும் காட்டாமல், அப்படியே செய்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் தனித்தனியே இருவரையும் தொடர்பு கொண்ட மிரண்டா, புரபோஸ் செய்யும்போது ஒருவர் மற்றொருவருக்கு முதுகு காட்டி நின்றுகொண்டு, திடீரென திரும்பி மோதிரத்தை எடுத்து புரபோஸ் செய்யுமாறு ஆலோசனை கூறியிருக்கிறார்.
சரியாக போட்டோஷூட் அன்று மிராண்டா கமெராவுடன் தயாராக இருக்க, சவியும் ஷரத்தும் நடக்கப்போவது தெரியாமல் ஒருவருக்கொருவர் முதுகைக் காட்டியபடி நின்று திடீரென திரும்ப, ஷரத்துக்கு ஒரே அதிர்ச்சி, சவி கையில் மோதிரத்துடன் முழங்காலில் நிற்கிறார்.
சவிக்கு ஒரே அதிர்ச்சி, ஷரத்தும் கையில் ஒரு மோதிரத்தை வைத்துக்கொண்டு முழங்காலிடுகிறார். சர்ப்ரைஸ் தாங்காமல் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டு வாய் விட்டுச் சிரித்திருக்கிறார்கள் இருவரும்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த மிராண்டாவின் கண்களை ஆனந்தக் கண்ணீர் மறைக்க, அந்த அரிய தருணத்தை மிஸ் பண்ணிவிடக்கூடாது என மின்னல் வேகத்தில் போட்டோ எடுத்துத்தள்ளியிருக்கிறார் அவர். வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு திரைப்படம் போல, அந்த காதல் ஜோடி ஆச்சரியத்தில் திளைக்கும் காட்சியைக் காணலாம்.
கொழும்புக்கு கடந்த 09ம் திகதி கூலி வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ள திருகோணமலை , பூநகர் – ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த நபரை மீட்டுத்தருமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 13ஆம் திகதி மாலைக்குப் பின்னர் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார். இவ்வாறு காணாமல் போனவர் 1991.11.15 ஆம் திகதி பிறந்ததாகவும், 6 மற்றும் 1 1/2 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான துரைசிங்கம் சஹிந்தன் எனும் இளம் குடும்பஸ்தர் ஆவார்.
இவர் குடும்ப கஷ்ட நிலமை காரணமாக கொழும்புக்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் அங்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு- குருந்துவத்த பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தன்னிடம் தெரிவித்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்ட தனது கணவரை வைத்தியசாலையிலோ அல்லது, சேருநுவர பொலிஸிற்கோ , தனக்கோ அறிவிக்காமல் அவரை குருந்துவத்த பொலிஸார் திருப்பி அனுப்பியது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தனது கணவர் இதற்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல எனவும், 13ஆம் திகதி காலை தன்னிடம் நன்றாகவே பேசியதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
தனது இரண்டு பிள்ளைகளும் அப்பா எப்போது வருவார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.எப்படியாவது எனது கணவரை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடந்த ஒரு ஆண்டாக கருத்தரிக்க முயற்சித்து வந்த பெண், மருத்துவ சோதனைக்கு பின் உண்மை தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்தார். சீனாவை சேர்ந்த பிங்க்பிங் என்ற பெண், தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர்கள் அவரது கணுக்காலை எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது, அவருக்கு இளம் பருவம் முதலே எலும்புகள் சரியாக வளரவில்லை என்பது தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி, அவர் கடந்த ஒரு ஆண்டாக கருத்தரிக்க முயற்சித்து வருகிறார். ஆனால் அது முடியவே இல்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஒரு பெண் பெறும் சிற்றின்பத்தை அவர் பெறவேயில்லை.
இது குறித்து அவர் கூறுகையில், நான் சிறு வயதில் இருக்கும் போது, என் தாய் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மருத்துவர்கள், நான் மற்றவர்களை விட, மெதுவாக வளர்வதாக கூறினார்கள், நாளைடைவில் அந்த பிரச்சனை எனக்கு சரியாகிவிட்டதாக நினைத்தேன்.
ஆனால், நான் வளர்ந்த பிறகு இப்போது மீண்டும் நான் சில சங்கடங்களை உணர்ந்தாக வேதனையுடன் கூறியுள்ளார். பிங்க்பிங் உட்சுரப்பியல் நிபுணர்களிடம், நானும் எனது கணவரும் பல வருடங்களாக ஒரு குழந்தையை பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறோம். அதற்கும் இந்த எலும்பு பிரச்சனைக்கும் காரணம் உண்டா? என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து அவரை ஆய்வு செய்த போது, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தது காரணமாக அவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது பிறவி அட்ரீனல் ஹைப்பர் பிளாசியா எனப்படும் நோயின் அறிகுறி எனவும், அவருக்கு எடுக்கப்பட்ட மரபணு பரிசோதனையில் அவரது காரியோ டைப் 46, எக்ஸ்.ஒய் இருப்பது தெரிய வந்தது. இது ஆண்களில் இருக்கும் காரியோ டைப்களின் அளவு என உட்சுரப்பியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பிங்க்பிங் பிறப்பால் ஒரு ஆண். இதன் காரணமாக அவருக்கு கருப்பைகள் இல்லை. ஆனால் ஆண் உறுப்பிற்கு பதிலாக அவருக்கு பெண் உறுப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வடமாகாணத்திலேயே முதன்முறையாக இன்றைய தினம் எயார் பூப்பந்து அறிமுக நிகழ்வு வவுனியா நகரசபை மைதான வளாகத்தில் இன்று (17.03.2021) இடம்பெற்றது.
இதன் போது இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் றொஹான்டிசில்வா இந்நிகழ்வில் கலந்து கொண்டு இவ்விளையாட்டினை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.
வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் கே.முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் றொஹான்டி சில்வா, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துலசேன,
உதவி மாவட்டசெயலாளர் சபர்ஜா, விளையாட்டு உத்தியோகத்தர், பூப்பந்து பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பூப்பந்து வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவர்களில் மேலும் 10 பேருக்கு இன்று(17.03.2021) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆரைடத் தொழிற்சாலை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 24 பேர் கடந்த இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் 1800 பேரில் 800 பேருக்கு பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடமும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (16.03) வெளியாகிய நிலையில் ஆடைத்தொழிற்சாலையைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு தொகுதி முடிவுகள் இன்று (17.03) இரவு வெளியாகிய நிலையில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 36 பேர் தற்போது கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா – ஓமந்தை, மருதங்குளம் கிராம சேவகர் இடமாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் (17.03.2021) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மருதங்குளம் கிராமசேவகர் காரியாலயத்தின் முன்பாக காலை 9 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் வைத்து கருத்து தெரிவித்த பொதுமக்கள்,
கிராம சேவகர் நியமிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கூட பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்பாக மாற்றப்படுகின்றார். அவர் எமது கிராம சேவகர் பிரிவில் சிறப்பான முறையில் இரவு பகல் பாராது நேர்மையாக பணியாற்றியுள்ளார்.
எமது கிராமத்தில் கிரவல் அகழ்வு பணியில் ஈடுபடும் தனிப்பட்ட ஒருவரிற்காக சில அரசியல் கட்சிகளின் செல்வாக்கினை வைத்துக் கொண்டு அடாத்தான முறையில் இவர் மாற்றப்படுவதை ஏற்க முடியாது.
தனிப்பட்ட ஒருவர் மண் அகழ்வதற்கு கிராமசேவகர் அனுமதி வழங்காத காரணத்தாலேயே அவர் மாற்றப்படுவதாக நாம் சந்தேகிக்கின்றோம். ஒரு நபருக்காக கிராம சேவகர் மாற்றப்பட்டால் சாதாரண மக்களின் நிலையை பாருங்கள்.
எனவே அவரை மாற்றுவதற்கான உறுதியான காரணத்தை எமக்கு தெரிவிக்க வேண்டும். அவரை மீளவும் நியமிக்கும் வரை வேறு எந்த கிராம சேவகரையும் இங்கு கடமையாற்ற அனுமதிக்கமாட்டோம்.
ஊருக்குள் ஏற்கனவே கிரவல் அகழ்ந்து பல கிடங்குகள் உருவாகியுள்ளன. அவற்றை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் வீதிகளும் பாழடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்களுக்கு உபதேசம் உங்களுக்கு இல்லையா?, பிரதேச செயலகம் மக்களுக்காகவா அல்லது மக்கள் பிரதேச செயலகத்திற்காகவா?, எங்கள் கிராம உத்தியோகத்தர் எங்களுக்கு வேண்டும் போன்ற பல்வேறான வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
வவுனியாவில் கே.ரளா க.ஞ்.சா மற்றும் ஹெ.ரோ.யி.ன் உடைமையில் வைத்திருந்த இருவரை வவுனியா பொலிஸார் கை.து செய்துள்ளனர்.
நேற்றையதினம் பிற்பகல் வவுனியா – நெளுக்குளம் மற்றும் குகநகர் பகுதிகளில்,
வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோ.தனை நடவடிக்கைகளின் அடிப்படையில் சிறுசிறு பொதிகளாகக் க.ஞ்.சா மற்றும் ஹெ.ரோ.யி.ன் உடைமையில் வைத்திருந்த இரு இளைஞர்கள் கை.து செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போ.தை.ப் பொ.ரு.ட்.க.ளை உடைமையில் வைத்திருந்தனர் என்ற கு.ற்றச்சாட்டின் அடிப்படையில் 27,28 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கை.து செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக வி.சாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தேற்றாத்தீவு கிராமத்தில் வசித்துவரும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,
நேற்று தனது வீட்டில் வழமைபோல் விளையாடிக் கொண்டிருந்த உதயராஜ் ஹம்சவர்த்தினி என்ற சிறுமி வளவில் அமைந்திருந்துள்ள கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளது.
சிறுமியின் தந்தை கிணற்றிலிருந்து மீட்ட சிறுமியை களுவாஞ்சி குடிவைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதுடன், சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் க.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவாக, பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தைப் பார்வையிட்டதுடன்,
விசாரனைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குப்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவை ஏற்பட்டால் பயண கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த நத்தார் காலப்பகுதியின் பின்னர் நாட்டில் கொரோனா பரவல் நிலைமை அதிகரித்துள்ளது. அவ்வாறான காலப்பகுதியில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுவதில்லை என உறுதியாகியுள்ளதென இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இராணுவ தளபதி இதனை கூறியுள்ளார். டிசம்பர் நத்தார் மற்றும் அதன் பின்னர் இருந்த நீண்ட விடுமுறைகளை தொடர்ந்து ஜனவரி மாதத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
2020ஆம் ஆண்டிற்கு முன்னர் நாங்கள் பழகிய முறையில் பண்டிகை கொண்டாட நினைத்தால் மாற்றங்கள் செய்ய நேரிடும். அத்துடன் தனிமைப்படுத்தலுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றம் ஏற்பட கூடும். நாடு திறக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதார வழிக்காட்டல்கள் சில கட்டுப்பாடுகள் உள்ளதென இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் பகுதியில் நேற்று மதியம் தனியார் பேருந்தொன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உ.யிரிழந்த, தலைமன்னார் பியர் பகுதியை சேர்ந்த பாலசந்திரன் தருண் (வயது 14) என்ற மாணவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவனின் இல்லத்தில் இன்று காலை அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் குறிப்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச ஊழியர்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சிறுவனின் உடல் பொது மக்களின் அஞ்சலியின் பின்னர் இன்று மாலை தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை விபத்திற்கு உள்ளான தனியார் பேருந்தின் சாரதி மற்றும் குறித்த புகையிரத கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோர் நேற்று மாலை தலைமன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.