யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயது மாணவிக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயது மாணவி ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று நேற்று உறுதியாகியுள்ளது.

மன்னாரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பெண் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

கு.டி போ.தை.யி.ல் வாகனம் செலுத்திய சாரதியால் ஐந்து பிள்ளைகளின் தந்தை ப.லி!!

விபத்து..

அதுகிரிய பகுதியின் ஒருவல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ.யிரிழந்துள்ளார். கு.டி.போ.தை.யி.ல் பிழையான பக்கத்தில் வண்டியை செலுத்திய நிலையில், முன்னாள் வந்த லொரியுடன் மோதுவதை தடுக்க முயன்ற போதே சாலையோரம் சென்ற நபர் மீது மோதி இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த சம்பவம் அருகில் இருந்த சி.சி.டிவி யில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், விபத்து ஏற்பட்டவுடன் விபத்தை ஏற்படுத்திய சாரதியே விபத்துக்குள்ளான நபரை ஒருவல வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு த.ப்.பிச்சென்றுள்ளார்.

சம்பவத்தில் ப.லியானவர் 49 வயதான ஐந்து குழந்தைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், விபத்தை ஏற்படுத்திய சாரதி ம.து போ.தை.யி.ல் இ.ருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

119க்கு வரும் விநோத அழைப்புகள் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

விநோத அழைப்புகள்..

119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பல விநோதமான அழைப்புகளும் வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு நாளொன்றுக்கு 1800க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. இதில் பல விநோதமான அழைப்புகளும் வருகின்றன.

தமது கு.ழந்தைகளுக்குப் ப.ய.மு.று.த்.தி உணவை ஊட்டுவதற்காக 119 இலக்கத்துக்கு அழைப்புகள் வருவதாகவும், வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டதாக கூறி 119க்கு அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வாறான அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியுள்ள அவர், அவசரமான விடயங்களுக்கு மாத்திரம் 119ஐ அழைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குரங்கு கடித்த தேங்காயுடன் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு சென்ற பிரதேச சபை தவிசாளர்!!

தவிசாளர் அ.அமிர்தலிங்கம்..

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு குரங்கு கடித்த தேங்காயுடன் துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் அ.அமிர்தலிங்கம் வருகை தந்திருந்தார்.

வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம் சாள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன் போது துணுக்காய் பிரதேசத்தில் குரங்கள் தென்னந்தோட்டங்களில் உள்ள தேங்காயினை க.டித்து சே.தப்படுத்தி அழித்து வருவதாக துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

இதனால், குரங்கினை துரத்துவதற்கு து.ப்.பா.க்.கி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், து.ப்.பா.க்.கி.யி.னை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சி.ரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் சிபார்சு கடிதத்துடன் து.ப்.பா.க்.கி.யி.னை பெற்றக்கொள்ளலாம் என இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

யாழ் சாவகச்சேரியில் இளம்பெண் த.ற்.கொ.லை!!

மகாதேவன் சுபேதினி..

குடும்ப பி.ரச்சனை காரணமாக தவறான முடிவு எடுத்து 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். நேற்று (16.03) காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நுணாவில் – வைரவர் கோவிலடிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய மகாதேவன் சுபேதினி என்பவரே ம.ரணமடைந்தவராவார். அண்மைக் காலமாக யாழில் அதிகரித்துவரும் குடும்பத் த.க.ராறுகளும், த.ற்.கொ.லை.க.ளு.ம், வ.ன்.மு.றை.க.ளு.ம் இளம் சமுதாயத்தினரை சீ.ரழித்து வருகின்றன.

இதனாலேயே இவ்வாறான த.ற்.கொ.லை.க.ள் அடிக்கடி வடமாகாணங்களில் இடம்பெறுவதாக செய்திகளும் வெளிவருகின்றன. இவ் இளம் பெண்ணின் த.ற்.கொ.லை தொடர்பில் பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது கு.ழந்தை பரிதாபமாக உ.யிரிழப்பு!!

மீன் தொட்டியில்..

வீட்டில் இருந்த மீன் தொட்டியில் வி.ழுந்து கு.ழந்தையொன்று உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ளை – கல்கிரியாகம, கஹல்ல, ஆதியாகல பிரதேசத்தை சேர்ந்த ஒரு வயதுடைய கு.ழந்தையொன்றே இவ்வாறு உ.யிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(16.03.2021) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் அனைவரும் இருந்துள்ளதுடன்,

வீட்டாரின் கவனயீனத்தால் இந்த வி.பத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட வி.சாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கல்கிரியாகம பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் செயலால் திருமணமான 10 மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 10 மாதத்தில் க.ணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (32).

இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் வசித்து வந்தார். இவரது மனைவி அவ்வப்போது செல்போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இதனால் கோபமான சங்கர் மனைவியை க.ண்டித்து செல்போனில் அடிக்கடி பேசும் காரியத்தை செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.
ஆனால் அதனை கேட்காத மனைவி நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.

இதனால் வி.ரக்தியடைந்த சங்கர் வீ.ட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இதுகுறித்து பொலிசார் வ.ழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 10 மாதத்தில் சங்கர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அப்பகுதியில் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடு வீதியில் தாய் மற்றும் மகளுக்கு நடந்த வி பரீதம்!!

கடலூரில்..

கடலூரில் நடு வீதியில் தனது மனைவி, மாமியாரை மீனவர் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சலங்குக்கார தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 52).

இவரது மனைவி பூங்கொடி(48). இவர்களுடைய மகள் மீனா (26). இவருக்கும், சோனங்குப்பத்தை சேர்ந்த நம்புராஜ் (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரியா (3), ஜான்சி (1) என்ற 2 பெண் கு.ழந்தைகள் உள்ளனர்.

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான நம்புராஜ், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி இடையே குடும்ப பி.ரச்சினை காரணமாக அடிக்கடி த.க.ரா.று ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீனா, தனது கணவர் மற்றும் கு.ழந்தைகளுடன் சலங்குக்கார தெருவில் உள்ள பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் மீனாவுக்கும், நம்புராஜிக்கும் இடையே தொடர்ந்து த.க.ரா.று ஏ.ற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று கு.ழந்தை ஜான்சிக்கு திடீரென உ.டல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் மீனாவும், அவரது தாய் பூங்கொடியும் மருத்துவமனைக்கு செல்ல முடிவுசெய்தனர். அதன்படி இருவரும், நேற்று மாலை 6.30 மணி அளவில் கு.ழந்தையை தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்றனர்.

கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நம்புராஜ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல் பூங்கொடியின் க.ழு.த்.தி.ல் ச.ர.மா.ரி.யா.க கு.த்.தி.னா.ர்.

இதைப் பார்த்து அ.தி.ர்.ச்.சி அ.டைந்த மீனா அவரை த.டுக்க முயன்றார். உடனே நம்புராஜ், மீனாவின் க.ழு.த்.தி.லு.ம் கு.த்.தி.னா.ர். இதில் தாய்-மகள் இருவரும் நடுரோட்டிலேயே ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ச.ரி.ந்.து வி.ழு.ந்.த.ன.ர்.

இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அ.ல.றி.ய.டி.த்துக்கொண்டு ஓ.டி வந்தனர். உடனே நம்புராஜ், தனது கு.ழந்தையை மட்டும் ஏதும் செய்யாமல் அங்கிருந்து த.ப்.பி ஓ.டி விட்டார்.

இதையடுத்து சிறிது நேரத்திலேயே பூங்கொடியும், மீனாவும் சம்பவ இடத்திலேயே ப.ரிதாபமாக இ.றந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ப.லியான பூங்கொடி, மீனா ஆகியோரது உ.டல்களை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து த.ப்.பி ஓ.டி.ய நம்புராஜை தே.டி வ.ருகின்றனர்.

கணவன் வேலைக்கு சென்ற பின்னர் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

ஷிவானி..

தமிழகத்தில் திருமணமான ஒன்றரை ஆண்டில் ஷிவானி என்ற பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். நாகர்கோவிலை சேர்ந்தவர் நாகராஜன் (28). இவருக்கும் ஷிவானி (22) என்ற பெண்ணுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட உட்கார்ந்ததாகவும், அப்போது ஷிவானியின் சமையல் பிடிக்கவில்லை என்று மனைவியுடன் த.க.ரா.று செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நாகராஜன் பணிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
அதன்பிறகு ஷிவானி தன் அறைக்கு சென்று க.தவை பூ.ட்டி கொண்டதாகவும், வெகு நேரம் வெளியே வரவில்லை என்றும் தெரிகிறது.

அதைத்தொடர்ந்து நாகராஜன் குடும்பத்தினர் ஷிவானி குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து, க.தவை உ.டைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஷிவானி தூ.க்.கி.ல் தொ.ங்.கி.க் கொ.ண்டு இருந்தார்.

உடனே அவரை மீ.ட்.டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஷிவானி இ.றந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுபற்றி ஷிவானியின் தாயார் பொலிசில் கொடுத்த பு.காரில் திருமணத்தின் போது வ.ரதட்சணையாக 95 பவுன் நகை போட்டு, ரூ.5 லட்சம் ரொக்கம் கொடுத்தோம். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன் ஷிவானி கர்ப்பம் அடைந்தார். திடீரென்று கரு கலைந்து விட்டது.

அதற்கு என் மகள் தான் காரணம் என்று நாகராஜன் குடும்பத்தினர் கு.ற்றம்சாட்டி பேசி, கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி உ.ள்ளனர். இந்த நிலையில் தான் எங்கள் மகள் இ.றந்துள்ளார் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிசாரும், கோட்டாட்சியரும் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

200 ரூபாவை தாண்டியுள்ள டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி!!

ரூபாவின் பெறுமதி..

நாட்டின் வரலாற்றில் மூன்றாவது முறையாக ரூபாவின் பெறுமதியில் தேய்மானம் ஏற்பட்டு இன்று டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி 200 ரூபாவை தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தினசரி பரிமாற்ற அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் தற்போதைய கொள்முதல் விகிதம் இன்று 195.28 ரூபாவாக இருந்தது. விற்பனை விலை 200.06 ஆக இருந்தது.

இது, 2020 ஏப்ல் 9ஆம் திகதிக்கு பின்னர் முதல் ஒரு அமெரிக்க டொலருக்கு பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த விற்பனை விலையாகும். 2020 ஏப்ரல் 9ம் திகதியன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 200.47 ரூபாவாக இருந்தது.

மன்னாரில் ஏற்பட்ட கோர விபத்து : ஒருவர் பலி, 25 பேர் படுகாயம் : வைத்தியசாலையில் குருதிப் பற்றாக்குறை!!

மன்னாரில்..

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குருதி வழங்க விரும்புபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ளுமாறும் வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் பேருந்து ஒன்று மோதுண்டதில் பாடசாலை மாணவர் ஒருவர் பலியானதுடன் மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த அனைவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு குருதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும், விபத்துத் தொடர்பில் அறிந்த பிரதேசவாசிகள் மாவட்ட வைத்தியசாலையை சூழ்ந்துள்ளதாகவும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இலங்கையில் பெரும் அதிர்ஷ்டம் : 900 ஏக்கர் நிலப்பரப்பில் இரத்தினகல் சுரங்கம்!!

இரத்தினகல் சுரங்கம்..

மொனராகல, படல்கும்புர பிரதேசத்தில் உள்ள 900 ஏக்கர் இரத்தினகல் கிடங்கினை தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கும்புக்கன் ஓயா நீர்பாசன திட்டத்தை செயற்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள படல்கும்புர பிரதேச செயலகத்திற்கான காணியில் இந்த இரத்தினகல் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

900 ஏக்கர் நிலப்பரப்பில் 500 ஏக்கர் காணி அரசாங்கத்திற்கு சொந்தமான இடமாகும். மீதமுள்ள 400 ஏக்கர் காணி உரிமம் பெற்ற நிலங்கள் என இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த காணிகளில் உரிமம் பெற்ற நபர்கள் இரத்தினகல் அகழ்வு செய்வதற்கு தேவையான அனுமதி பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையை சேர்ந்த பெண் வெளிநாட்டில் பரிதாபமாக ம.ரணம் : நேர்ந்த கொ.டு.மை!!

ஜப்பான் நகோயா நகரத்தில்..

ஜப்பான் நகோயா நகரத்தில் அமைந்து தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் உ.யிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக வி.சாரணையை ஆரம்பிக்குமாறு ஜப்பான் நீதி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

33 வயதான விஷ்மா சந்தமாலி என்ற இந்த பெண் நகோயா நகரத்தில் உள்ள பிரதேசத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்தின் தடுப்பு நிலையத்தின் தனியான ஒரு அறையில் த.டுத்து வை.க்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆறாம் திகதி த.டுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணை பார்க்க அதிகாரிகள் சென்றிருந்த போது அவர் ம.யக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதன்போது அவர் உ.யிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த பெண்ணின் சுகாதார நிலைமை ப.லவீனமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தன்னை தற்காலிகமாக விடுவிக்குமாறும் தனக்கு தீவிரமான உணவு தேவை ஒன்று உள்ளதாகவும் உ.யிரிழந்த பெண் பதிவொன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவு ஜப்பான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

“எனக்கு உண்மையாகவே சாப்பிட வேண்டிய அவசியம் உள்ளது” என அவர் தடுப்பு நிலையத்தினுள் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்

எனினும் அவருக்கு உணவுக் குழாயுடன் தொடர்புடைய நோ.ய் ஒன்று உள்ளமையினால் அவரால் உரிய முறையில் சாப்பிட முடியாமல் போயுள்ளது. இதனால் அவர் நீண்ட நாட்களாக ஒழுங்கான முறையில் உணவருந்த முடியாமல் சி.ரமப்பட்டுள்ளார்.

இந்த பெண் த.டுத்து வைக்கப்பட்டிருந்த போது ம.ன அ.ழுத்தம் மற்றும் மோ.சமான உ.டல் நி.லை காரணமாக இந்த பெண் உணவு பெற முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த பெண் வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் 2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது விசா காலாவதியாகியமையினால் கடந்த வருடம் ஒக்ஸ்ட் மாதம் முதல் அங்கு த.டுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ம.ரணத்திற்கான உரிய காரணம் வெளியாகாமையினால் உடனடியாக வி.சாரணைகளை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் மோப்பநாய் சகிதம் கடும் சோ.தனை!!

மாவட்ட செயலகத்தில்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் விசேட கடும் சோ.தனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேட அ.திரடிப் ப.டையினரால் இந்த சோ.தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் மோப்ப நாயும் சோ.தனை நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது பொலிஸார் பா.துகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது. மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் பல விருந்தினர்கள் வருகைதந்திருந்தனர். இந்த நிலையிலேயே இவ்வாறான சோ.தனை நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதையை விட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளான கார்!!

விபத்து..

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அமைக்கப்பட்ட மதகுடன் மோதி பாதையை விட்டுத் தடம்புரண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காரினை செலுத்திச் சென்றவரும், காரில் பயணம் செய்த இரண்டு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தலைமன்னாரில் புகையிரதம் பேரூந்து மோதி கோர விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!!

தலைமன்னாரில்..

தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை காயமடைந்தவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தை தொடர்ந்து மன்னார் பொது வைத்தியாசாலையிலிருந்து ஐந்து நோயாளர் காவு வண்டிகள் தலைமன்னார் நோக்கிப் பயணித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.