கோவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் 10 பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் குறித்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, நாட்டில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.
1. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. வெள்ளவத்தை பிரதேச்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் கடந்த 16ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று, இரத்தம் விசமாகியமை மற்றும் நீரிழிவு நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் கடந்த 16ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று, இரத்தம் விசமாகியமை மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
5. பிபில பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் கடந்த 19ம் திகதி உயிரிழந்துள்ளார். மூளைக்கு இரத்தம் கசிந்தமை, கோவிட் நோய்த் தொற்று மற்றும் சுவாசப் பிரச்சினையினால் இவர் உயிரிழந்துள்ளார்.
6. குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர், முல்லேரியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா, இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
7. புறக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 19ம் திகதி உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கோவிட் நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
8. குடாகல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர் கருணாகல் போதானா வைத்தியசாலையில் கடந்த 14ம் திகதி உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய், இரத்தம் விசமாகியமை மற்றும் கோவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
9. ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதான ஆண் ஒருவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
10. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட்-19 நோய்த் தொற்று, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறைப்பாடுகள் இருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. பரீட்சை எழுதும் பரீட்சாத்திகளுக்காக விசேட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறைப்பாடுகள் அல்லது பிழைகள் உள்ளவர்கள் www.doenets.lk இணையத்தளத்திற்குள் சென்று திருத்திக்கொள்ள முடியும்.
எப்படியிருப்பினும் பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் மூலமும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஒரு வாரத்திற்குள் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சென்னையில் குடும்ப பி.ரச்சனை காரணமாக மருத்துவர் தனது மனைவியின் க.ழு.த்.தை ச.மையல் க.த்.தி.யா.ல் து.ண்.டா.க்.கி.ய ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த 40 வயதான மருத்துவர் கோகுல்குமார் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவமனையில் மனித வளத்துறையில் வேலை பார்த்து வரும் கீர்த்தனா(33) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்னர் கோகுல்குமார் திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு இதுவரை பிள்ளைகள் இல்லை. கொரோனா ஊரடங்கு தொடங்கிய பின்னர் கோகுல்குமார் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் மருத்துவர் கோகுல்குமாருக்கும் அ.டிக்கடி வா.க்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த தொ.ல்லை தாங்காமல், கீர்த்தனா கோகுலை பிரிந்து செல்ல முடிவு செய்தார். 6 மாதங்களுக்கு முன்னாடியே விவாகரத்து கேட்டு மனுவும் அளித்துவிட்டார். அத்துடன் தன்னுடைய அம்மா வீட்டுக்கும் கிளம்பி போய்விட்டார். இது கோகுலுக்கு மேலும் கோ.பத்தை உண்டாக்கியது.
வெள்ளிக்கிழமை மீண்டும் வா.க்குவாதம் ஏற்பட்டு அது ச.ண்.டை.யி.ல் முடியவே, ஆ.த்திரத்தில் சமையலறைக்கு சென்ற கோகுல் க.த்.தி.யு.ட.ன் வ.ந்து கீர்த்தனாவை வெட்டியுள்ளார்.
இதில் அ.வரது க.ழு.த்.து து.ண்.டா.ன.தா.க கூறப்படுகிறது. இருப்பினும் ஆ.த்.தி.ர.ம் அடங்காமல் கீர்த்தனாவின் மு.டியை பி.டித்து வெளியே இழுத்து வந்து பலமுறை காரையும் ஏற்றி கொ.ன்.று.ள்.ளா.ர்.
பின்னர் அங்கிருந்து காருடன் மா.யமாகியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், கீர்த்தனாவின் உ.ட.லை மீ.ட்.டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே, கோகுல்குமாரின் கார் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே விபத்தில் சி.க்கியதாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.. அதனால் அங்கு விரைந்து சென்ற பொலிசார் கோகுல்குமாரை கை.து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒஸ்திரியாவில் செல்லப் பிராணியாக வழங்கப்படும் பூனை ஒன்று கின்னஸ் சாதனை படைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியா நாட்டில் Anika Moritz (20) என்பவருக்குச் சொந்தமான Alexis என்ற பெண் பூனை ஒரு நிமிடத்தில் அதிக தந்திரங்களை (Tricks) நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தது .
அனிகாவின் தெளிவான வழிமுறைகளைப் பின்பற்றி, Alexis நம்பமுடியாத 26 தந்திரங்களை செய்துள்ளது.
Alexis 12 வார குட்டியாக இருந்த போதிலிருந்து அதற்கு அனிகா பயிற்சியளித்துவருகிறார். இப்போது Alexis-க்கு 8 வயதாகிறது.
ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் 26 கட்டளைகளுக்கு Alexis செயலை நிகழ்த்திக்காட்டியுள்ளது. இந்த கின்னஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்கு புதிதாக கு.டி.போ.ன இளம் தம்பதியர், அந்த வீட்டில் ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்ந்துள்ளனர்.
பிரித்தானியாவின் Merseyside என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டுக்கு குடிபோயிருக்கிறார்கள், Darren Pallister(27) மற்றும் Jessica Mason (27) என்ற தம்பதி.
அந்த வீட்டுக்கு போனதிலிருந்தே, அங்கே யாரோ இருப்பது போல் தோன்றுமாம். ஒரு இனிய மணம் வீசுமாம், அதை உணர்வதற்குள், அது மறைந்துபோய்விடுமாம்.
இப்படியிருக்கும்போது, ஒரு நாள் தங்கள் நாய்களைக் க.ண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டுள்ளார் Darren. அப்போது, ஜனவரி மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12.34க்கு வீடியோவில் பதிவான ஒரு காட்சி அவரது கண்ணில் பட்டுள்ளது.
அதில் வெண்ணிறத்தில் மணப்பெண்ணின் உடை அணிந்த ஒரு அழகான இளம்பெண் நடமாடுவதைக் கண்ட Darren அ.திர்ச்சியடைந்துள்ளார். பிறகு அவர் அதை Jessicaவுக்கும் காட்ட, இருவருமாக ஆவிகள் குறித்து ஆராயும் ஒருவருக்கு அந்த வீடியோவைக் காட்டியுள்ளார்கள்.
அவரோ அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, ’நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்’ என்று பாடாத குறையாக அந்த காட்சியை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அது என்ன என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக அந்த நிலத்தின் சொந்தக்காரரை அணுகினால், அவருக்கு அங்கு யாராவது உ.யிரிழந்துள்ளார்களா என்பது குறித்து சரியாக தெரியவில்லையாம்.
எனவே, Darren அந்த வீடியோவை உள்ளூர் வரலாற்றாளர் ஒருவரிடம் காட்டி, அதன் பின்னணியில் என்ன உள்ளது என்பதை அறிந்துகொள்ள இருக்கிறார்.
சார்ஜாவில் வசித்து வரும் 3 வயது தமிழ் சிறுமி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில், கே.பி.என். மகேஷ் கிருஷ்ணன் என்பவர் மனைவி திவ்யா சொர்ணம் மற்றும் மகள் காதம்பரியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியினர் சென்னையை சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில், 3 வயதே ஆன சுட்டிக்குழந்தை காதம்பரி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அசத்தி வருகிறார்.
மகளின் அறிவாற்றலை கண்டு வியப்படைந்துபோன மகேஷ் கிருஷ்ணன் கூறுகையில்,
தனது மகளை நர்சரி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றால் கொரோனா காரணமாக அதற்கான வாய்ப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டது. இதனால் வீட்டிலேயே தனது மகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டேன்.
மேலும் டி.வி.யாக இருந்தாலும், கம்ப்யூட்டர் ஆக இருந்தாலும் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் பார்க்க அனுமதிப்பதில்லை. ஏதாவது உடற்பயிற்சி, வெளியில் விளையாடுவது உள்ளிட்டவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தினேன்.
குறிப்பாக என் மகளுக்கு நாடுகளின் தலைநகர் தொடர்பாக ஆரம்பத்தில் 10 முதல் 20 வரை சொல்லிக் கொடுத்தேன். பின்னர் இந்த தலைநகரங்களை சொல்வதில் காதம்பரி அதிக ஆர்வம் காட்டினாள்.
இதனால் படிப்படியாக 196 நாடுகளின் தலைநகர்களை சொல்லக்கூடிய திறமையை பெற்றாள். எந்த ஒரு நாட்டின் தலைநகரத்தை கேட்டாலும் சட்டென பதில் சொல்லக்கூடிய அளவுக்கு திறமையை பெற்றுள்ளாள்.
இது குறித்து தனது நண்பர்கள் உள்ளிட்ட பலரும் அவரிடம் கேள்விகள் கேட்டு சோதனை செய்து ஆச்சரியமடைந்தனர். இதுமட்டுமல்லாமல் இறைவனது திருநாமங்களை சொல்லும் சுலோகங்கள், திருக்குறள் உள்ளிட்ட பலவற்றையும் கூறி வருகிறார்.
மேலும் அவருக்கு தமிழ் மொழியில் அதிக ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் நீதிகதைகளை எனது மனைவி சொல்லிக் கொடுத்து வருகிறார்.
அவரது இந்த சாதனையானது உலக அளவில் தெரிய வேண்டும். இதற்காக கின்னஸ் சாதனை உள்ளிட்ட சர்வதேச அளவிலான சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என கூறியுள்ளார்.
கனடாவில் இந்திய வம்சாவளியினர் ஒருவர் வே.றொரு பெ.ண்ணுடன் தொ.டர்பில் இருந்த நிலையில், அந்த பெ.ண்ணுடன் சே.ர்.ந்.து ம.னைவியை கொ.லை செ.ய்.த வ.ழக்கில் மு.க்.கி.ய ஆ.தாரம் சி.க்.கி.யு.ள்.ள.து.
Jagtar Gill (43) என்னும் அந்த பெ.ண்ணை கொ.லை செ.ய்.த கு.ற்.ற.த்.தி.ற்.கா.க Bhupinderpal Gill (40) மற்றும் அ.வருடன் தி.ருமணத்துக்கு வெளியே உ.ற.வு வை.த்திருந்த Gurpreet Ronald (37) ஆ.கிய இ.ருவருக்கும் ஆ.யு.ள் த.ண்.ட.னை வி.திக்கப்பட்டது.
ஆனால், அ.வர்கள் த.ங்கள் மீ.தான தீ.ர்ப்பை எ.திர்த்து மே.ல்முறையீடு செ.ய்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், முந்தைய தீர்ப்பில் நீதிபதிகள் த.வ.று செ.ய்திருப்பதாகக் கூறி, மீண்டும் வி.சாரணையை துவக்க வேண்டும் என மேல்முறையீட்டு நீ.திமன்றம் உ.த்தரவிட்டது..
ஒரு அழகிய பிரெஞ்சு இளம் பெண்ணுக்கு அடிக்கடி கொ.லை மி.ரட்டல்கள் வருகின்றனவாம், அதற்கு காரணம், சமூக ஊடகங்களில் அவர் வெளியிடும் படங்கள்.
Johanna Clermont (23)ஐ 300,000 பேர் சமூக ஊடகங்களில் பின்தொடர்கிறார்கள். அதே நேரத்தில் அவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களால் அவருக்கு கொ.லை மி.ரட்டல்களும் வருகின்றன.
காரணம்? Johanna ஒரு வேட்டைக்காரர்… வேட்டையாடிய விலங்குகளுடன் அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவர் பதிவேற்றம் செய்ய, வேட்டையை எ.திர்க்கும் பிரான்ஸ் நாட்டு அமைப்புகள் அவரை குறிவைத்துள்ளன.
ஆனால், மி.ரட்டல்கள் குறித்தெல்லாம் கவலைப்படாமல் தன் வேட்டையைத் தொடர்கிறார் Johanna. வேட்டையாடுவதால் தன்னைக் குறித்து விமர்சனங்கள் வந்தாலும், தான் வேடையாடும்போது, தன்னுடன் வேட்டையாடும் ஆண்கள் தன்னை ஒரு பெண் என அவமதிப்பதில்லை என்கிறார் Johanna.
சொல்லப்போனால், தங்கள் வேட்டைக் குழுவில் வேட்டையாடத் தெரிந்த ஒரு பெண் இருப்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சிதான் என்கிறார் அவர்.
அதே நேரத்தில், பெண் என்றால் அவள் தான் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் சரி, அது அலுவலக வேலையானாலும், வேட்டையானாலும் அவள் ஆண்களை விட சிறப்பாக செயல்பட்டேயாகவேண்டியுள்ளது என்கிறார் Johanna.
இந்தியாவின் கோவா மாநிலத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் இருதயம் மொத்தமாக உறைந்து கல்லாக மாறியதால் ம.ரணமடைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோவா மாநிலத்தின் பிரபலமான பூங்கா ஒன்றில் பிச்சை எடுத்து வந்த, 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர் திடீரென்று ம.ரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், உரிய அதிகாரிகள் ச.டலத்தை மீ.ட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
மருத்துவர்களின் முதற்கட்ட ஆய்வில், அந்த நபரின் ம.ரணத்திற்கு குறிப்பிடத்தக்க காரணம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து உடற்கூராய்வு மேற்கொள்ள மருத்துவர் பரத் ஸ்ரீகுமார் என்பவரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
இந்த நிலையிலேயே, அ.திரவைக்கும் அந்த சம்பவம் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது. ம.ரணமடைந்த அந்த நபரின் இருதயம் உறைந்து கல்லாக மாறியிருந்தது.
இதுபோன்ற ஒரு சம்பவம் அங்கிருந்த மருத்துவர்கள் எவரும் எதிர்கொண்டதில்லை என்றே கூறுகின்றனர். உடற்கூராய்வின் ஒரு பகுதியாக அவரின் இருதயத்தை வெளியே எடுத்த மருத்துவர்கள், அது பொதுவாக ஒரு ஆணின் இருதயத்திற்கு இருக்கும் எடையை விட அதிகமாக இருந்துள்ளதும், மிகவும் கனமாகவும் இருந்துள்ளது.
ஆனால் அவரது இருதயத்தின் மொத்த அமைப்பு அதிகமொன்றும் மாறவில்லை, அது மிகவும் சாதாரணமாக இருந்துள்ளது. மட்டுமின்றி, மருத்துவர்கள் பயன்படுத்தும் க.த்தியால், அதை இரண்டாக பிளக்கவோ வெட்டவோ முடியாமல் போயுள்ளது.
இறுதியில் மருத்துவர்கள் குழு போ.ராடி இருதயத்தின் ஒரு பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தியதில், சாதாரண திசுக்களை கடினமான இழைம திசுக்களாக மாற்றும் ஒருவகை விசித்திர நோய் அது என கண்டறிந்தனர்.
அந்த தெருவோர பிச்சைக்காரரின் இருதயம் கொஞ்சம் கொஞ்சமாக இழைம திசுக்களாக மாறியதாலையே அவர் ம.ரணமடைந்தார் எனவும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
கோவா மருத்துவக்கல்லூரி அந்த நபரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் எதையும் வெளியிடவில்லை, ஆனால் அந்த நபரின் இருதயம் இழைம திசுக்களாக மாறிய புகைப்படம் ஒன்றை மட்டும் வெளியிட்டுள்ளனர்.
உலகிலேயே அதிகமான பருமன் கொண்ட சிறுவனான இந்தோனேசிய சிறுவன் ஒருவன் உடல் இளைத்து ஆளே மாறிப்போய்விட்டான். வெறும் 11 வயதில் கிட்டத்தட்ட 190 கிலோ எடை இருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த Arya Permanaதான், உலகிலேயே அதிக பருமனான சிறுவன் ஆவான்.
ஆனால், இப்போது 14 வயதாகும் Arya, ஆள் ஏற்கனவே இருந்ததற்கு பாதிக்கும் அதிகமாக இளைத்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டான்.
Cipurwasari என்ற கிராமத்தில் வாழும் Arya, தனது உடல் சூட்டைக் குறைப்பதற்காக தண்ணீர் தொட்டி ஒன்றில் கிடத்தப்பட்டிருக்கும் புகைப்படங்களைக் கண்டு மருத்துவர்களே மலைத்துப்போனார்கள்.
நன்றாக நொறுக்குத்தீனி சாப்பிடுவதும், தண்ணீருக்குள் படுத்து உடல் சூட்டைத் தணித்துக்கொள்வதுமாக Aryaவின் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. உடல் பருமன் காரணமாக நடக்க முடியாததால் அவன் பள்ளிக்கும் போகமுடியவில்லை.
அவனது உடல் பருமனைக் கண்ட மருத்துவர்கள், அவனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்து அவனது இரைப்பையின் அளவைக் குறைத்தனர், அதனால் அவனுடைய உணவு எடுத்துக்கொள்ளும் அளவு குறையும். அதன் பிறகு மூன்றே வாரங்களில் Aryaவின் எடை 186.4 கிலோவிலிருந்து 169 கிலோவாகக் குறைந்தது.
பின்னர், உணவுக்கட்டுப்பாடு, மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சி மூலம் தன் உடல் எடையை 82 கிலோவாகக் குறைத்துள்ளான் அவன்.
இப்போது மரம் ஏற்கிறான், ஏன் மோட்டார் சைக்கிள் கூட ஓட்டுகிறான் அவன்.
கூடைப்பந்து முதலான விளையாட்டுகளை விளையாடுவது, தினமும் 3 கிலோமீற்றர் நடப்பது என வாழ்க்கை முறையே மாறிப்போய், பள்ளிக்கும் நடந்தே போகத் தொடங்கிவிட்டான் Arya. (ஆனால், இப்போது கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன).
எந்தப்பக்கம் பார்த்தாலும் எல்லோரிடமும் ஏதோ ஓர் பிரச்சனை இருந்தது அதாவது ஏதாவது ஒரு காரணத்தினால் மக்கள் மனஉளைச்சலுக்கு உட்பட்டிருந்தார்கள் என சுவிஸ் நாட்டில் சமூக சேவையாளராக கடமையாற்றிவரும் தமிழரான நந்தினி முருகவேல் கூறியுள்ளார்.
கோவிட் காலப்பகுதியில் சமூக சேவையாளர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளை பாராட்டி பேர்ண் மாவட்டத்தின் பிரதான பத்திரிகையில் கடமையாற்றும் பத்திரிரிகை நிருபர் ஒருவர் பேர்ண் மேற்குப்பகுதியில் சமூகசேவையாளர்களில் ஒருவராக கடமையாற்றும் இணையர் நந்தினி முருகவேளிடம் நேர்முக உரையாடலை மேற்கொண்டிருந்தனர்.
அதன்போதே அவர் இதனைக்கூறியுள்ளார். இக் கலந்துரையாடலில் நந்தினி முருகவேள் கருத்துத் தெரிவிக்கையில்,
எந்தப்பக்கம் பார்த்தாலும் எல்லோரிடமும் ஏதோ ஓர் பிரச்சனை இருந்தது அதாவது ஏதாவது ஒரு காரணத்தினால் மக்கள் மனஉளைச்சலுக்கு உட்பட்டிருந்தார்கள்.
எடுத்துக்காட்டாக வேலையிடத்தினால் அவர்களுக்கு ஏற்பட்ட வேலைஇழப்பு, வேலைகுறைப்பு, இவற்றினால் அவர்களுக்கு ஏற்பட்ட நிதிப்பிரச்சனை, எல்லோருமே இந்தக்காலப்பகுதியில் வீட்டில் இருந்தமையால் குடுப்பங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், சிறுவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளும் கல்வியில் உள்ள பிரச்சனைளகள்,இவ்வாறு பல உள்ளன.
இவ்வாறான எல்லாப்பிரச்சனைகளையும் என்னிடம் கூறி அதற்கான ஓர் சாதகமான முடிவினை பெற்றுத்தருமாறு தங்களது தலைச்சுமைகளை என்னிடம் இறக்கிவைத்துவிட்டு அவர்கள் நிம்மதியாக வீடு சென்றுவிடுவார்கள். ஆனால் எல்லோருடைய தலைச்சுமையையும் நான் சுமந்ததால் என் தலை மக்களின் பிரச்சனைகளால் நிறைந்து விட்டது.
இவ்வாறான பிரச்சனைகளை நீங்கள் எவ்வாறு தீர்த்து வைத்தீர்கள் என்ற கேள்விக்கு விடையளிக்கும் போது வேலை இழப்பைப் பெற்றுக்கொண்டவர்களின் வேலைவழங்குனர்களுடன் தொடர்பினை மேற்கொண்டு இந்தக் காலகட்டத்தில் நீங்கள் இவர்களை வேலைகளை விட்டு நீக்குவது அவர்களை நிதிரீயாக மட்டுமல்ல உளரீதியாகவும் பாதிக்கும் எனவே தயவுசெய்து உங்களது வேலைநீக்க உடன்படிக்கையை இரத்துச் செய்யுங்கள் என தயவாக வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
எமது வேண்டுகோளை ஏற்று வேலை வழங்குனர்கள் வேலைநீக்க உடன்படிக்கையை இரத்துச் செய்தார்கள். அனைத்து வேலை வழங்குனர்களுக்கும் பேர்ண் மேற்குப்பகுதியின் சமூகசேவையாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்தோம்.
இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு ஏற்பட்ட நிதிப்பிரச்னை தீர்ப்பதற்காக பேர்ண் மாவட்டத்தில் இயங்கிவரும் சமூக நிதி உதவிநிறுவனங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு மக்களுடைய நிதிப்பிரச்சனையை குறுகிய காலத்திலே தீர்த்து வைத்தோம்.
வழமையாக சமூக நிதி உதவியைப் பெறுவதற்கான விண்ணப்பத்திரங்களை பூர்த்தி செய்து அந்திதியினைப் பெற்றுக்கொள்வதற்கு 3 கிழமைகள் தேவைப்படும்.
ஆனால் இந்தக்காலப்பகுதியில் மக்களுக்குத் தேவையான அவசரநிதித் தேவையை தயவுசெய்து உடனடியாகப் பூர்த்தி செய்து தாருங்கள், பின்னர் விபரமாக உங்களுக்கு விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து அனுப்புகின்றோம் என்ற எமது வேண்டுகோளை ஏற்று 1 வாரத்திலே நாங்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் நிதிஉதவியை வழங்கியிருந்தார்கள்.
அத்துடன் இந்தக்காலப்பகுதியில் சமூக நிதி உதவியை விட மேலதிக உதவியாக சுவிஸ் நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழமையான வருமானத்தை விட குறைவான வருமானம் பெற்றவர்களின் வாடகைப்பணம், மருத்துவக்காப்புறுதி போன்றவற்றை பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
இவ் நிதி உதவிக்கான விண்ணப்பங்களையும் நாங்கள் மேற்கொண்டு இவ் நிதியை மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தோம். வயோதிபர்களின் பராமரிப்பும், அவர்களுக்கான தேவைகளை நிறைவுசெய்து கொடுக்கும் பணி இக்காலப்பகுதியில் மிகவும் முக்கியமாக இருந்தது. எல்ல நாட்டு வயோதிப மக்களும் வீட்டிற்குள் முடங்கிய காலப்பகுதி இது.
இவர்களுக்கான அத்தியாவசிப்பொருட்களை அங்காடியில் வாங்கிக்கொடுப்பது, அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்துகொடுப்பது, மொழிபெயர்ப்புகளை மேற்கொள்வது, அவர்களை வைத்தியரிடம் அழைத்துச் செல்வது என பல பணிகளை நாம் மேற்கொண்டோம்.
எங்களுக்கு உதவியாக 100 இற்கு மேற்பட்ட எல்லா நாட்டு உயர்வகுப்பு, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் கை கோர்த்து தங்களது உதவிகளை வழங்கினார்கள். சில நாட்களில் 7 வயோதிபர்களுக்கு ஒரே நாளில் நான் மொழிபெயர்ப்பிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த வேளையில் எனது மகள் அருளினி எனக்கு உறுதுணையாக இருந்து சில மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
தன்னுடைய சுவிஸ் நாட்டு நண்பிகளுடன் இணைந்து எங்களுக்கு உதவியாக இருந்தார். இக் காலகட்டத்தில் எங்களது மனதை உருகவைக்கும் பல நிகழ்வுகளையும் நாம் சந்தித்தோம்.
பல வயோதிபர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலே இருந்தார்கள். இவ்வாறானவர்களுக்கு தேவையான உதவிகளை நானும், என்னுடைய நண்பியும் செய்திருந்தோம். அவர் பேர்ண் மாவட்டத்தின் சமூகசேவையாளர்களின் பொறுப்பாளார் ஆவார்.
அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி நாங்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிக்குள் வைத்துவிட்டு கீழே நின்று அறிவிப்போம். 80 தொடக்கம் 90 வயதுவரையான சுவிஸ் நாட்டு மக்கள் பலரை நாம் இவ்வாறு சந்தித்தோம்.
அவர்கள் தங்களது சாளரத்தைத் திறந்து மேலே இருந்து எம்மைப் பார்த்து எங்களுடன் 5 நிமிடம் கதைத்துவிட்டுச் செல்லுங்கள் எனக் கூறுவார்கள். இந்தச் சந்தர்ப்பங்கள் எங்கள் மனதை உருக்கின. இதன் பின்னர் ஓர் ஒழுங்கான இடைவெளியில் நாம் எல்லோருடனும் உரையாடி அவர்களுடைய மனஉளைச்சளைக் குறைத்திருந்தோம். இவர்கள் எல்லோரும் எங்களை தங்களது பிள்ளைகளாகவே பார்த்தார்கள்.
நாங்களும் அவர்களை எங்களது பெற்றோர்களைப் போலவே மனநிறைவுடன் பராமரித்தோம். மக்களால் எங்களிடம் முன்வைக்கப்பட் கோரிக்கைகளில் 99% ஐ நாங்கள் நிறைவுசெய்து கொடுத்து மனமகிழ்ச்சி அடைந்தோம்.
இக் காலப்பகுதியில் பெண்கள் அதிக பிரச்சனைகளை எதிர்நோக்கினார்கள். காலையில் நான் எழுந்த உடனே தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இரவு 11 மணிமட்டும் தொலைபேசி அழைப்பு வந்துகொண்டே இருக்கும். அதிக நாட்களில் நாங்கள் ஒரு வேளை மட்டுமே இரவுநேரச் சாப்பாட்டை மட்டுமே உட்கொண்டிருக்கின்றோம். பெண்களுக்கான உரையாடல்களை தொலைபேசி மூலமாக ஒவ்வொரு நாளும் மேற்கொண்டிருந்தோம்.
என்னிடம் ஓர் கேள்வியை நிருபர் கேட்டிருந்தார், நீங்கள் ஓர் குடும்பப்பெண்மணி இரு பிள்ளைகளின் தாயார், இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் எவ்வாறு இவ்வளவு சேவைகளைச் செய்தீர்கள் என, என்னுடைய கணவர் இக்காலப்பகுதியில் பகுதிநேரவேலைக்குச் சென்றதால் வீட்டுவேலைகளை என்னுடைய பிள்ளைகளுடன் இணைந்து செய்து எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.
என்னுடை இரு பிள்ளைகளும் தங்களது பாடசாலைக் கல்வி நேரத்தைத் தவிர வீட்டுவேலைகளுக்கும், என்னுடைய சமூகவேலைகளுக்கும் உதவியாக இருந்தார்கள்.
வழமையாக எமது வேலையின் ஒரு பகுதியாக மக்களின் பிரச்சனைகள் கோரிக்கைகள் இருக்கும். ஆனால் இக்காலப்பகுதியில் எமது முழுநேர வேலையாக மக்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதாகவே அமைந்தது.
என்னுடைய வேலை நேரத்தை விட பல நூற்றுக்கணக்கான மணித்தியாலங்களை செலவிட்டு இலவசமாகவே இச் சேவையை நான் வாழும் சுவிசுநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்காகவும், சுவிஸ் நாட்டு மக்கள் உட்பட ஏனைய நாட்டவர்களுக்கும் இக்கட்டான நேரத்தில் வழங்கியிருந்தேன்.
2005 ஆம் ஆண்டிருந்தே பேர்ண் மேற்குப்பகுதியில் நான் சமூகசேவையாளராக கடமையாற்றுகின்றேன். அந்த வகையில் நான் எங்களுடைய மக்களின் பல பிரச்சனைகளை தீர்த்து பல அனுபவங்களைப் பெற்றிருக்கின்றேன். 15 ஆணடு அனுபவங்களும் இக் காலப்பகுதியில் எனக்கு மிகவும் உறு துணையாக இருந்தன.
இங்கே நான் குறிப்பிட்டவை பேர்ண் மேற்குப்பகுதி சமூக சேவையாளர்கள் இக்காலப்பகுதியில் ஆற்றிய பணிகளின் ஒரு பகுதியே ஆகும்.
நான் இச் சமூகசேவைகளை செய்வதற்கு எப்பொழுதும் பக்கபலமாகவும் ஊக்குவிப்பவர்களாகவும் இருப்பவர்கள் எனது கணவர் பொன்னம்பலம் முருகவேள் ஆசிரியர் அவர்களும், என்னுடைய இரு பிள்ளைகளான அருளினியும், அம்பலனும்.
என்னுடைய இச் சேவையைப் பாராட்டுக்களுக்கும் இவர்களும் ஓர் மூல காரணம் . எனவே என்னுடைய கணவருக்கும், பிள்ளைகளுக்கும் தலை தாழ்த்தி இரு கை கூப்பி வணங்கி நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.
இங்கே நான் மேலதிகமாக ஒன்றை இச் சந்தர்ப்பத்தில் கூற விரும்புகின்றேன். என்னுடைய தந்தையார் அமரர் குழந்தைவேலு கிருட்ணசாமி ஓர் சிறந்த சமூக வேவையாளர். இவர் தான் வாழும் காலப்பகுதியில் தன்னால் இயன்ற உதவிகளை தான் வாழ்ந்த இடங்களில் செய்துவந்தவர்.
இறுதியாக இவர் வாழ்ந்த கிளிநொச்சி, விவேகானந்த நகர் மக்களுக்கு செய்த சேவைகளில் இலவசமாச தண்ணீர் வசதியினைப் பெற்றுக் கொடுத்ததும் ஒன்றாகும்.
எங்களுடை தந்தையார் 22.02.2020 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். 22.02.2021 ஓர் ஆண்டு நிறைவு பெறுகின்றது. என்னுடைய சேவையைப்பாராட்டி எனக்குக் கிடைத்த அனைத்துப் பாராட்டுக்களையும் என்னுடைய தந்தையார் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்என்று கூறியுள்ளார்.
இணையர் நந்தினி முருகவேள் பேர்ண் மாவட்டத்தில் பேர்ண் மேற்குப்பகுதியில் தமிழ்மக்களின் சமூகசேவையாளராகவும், ஆலோசகராகவும், சுவிஸ் நாட்டு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராகவும், கணக்காளாராகவும்,
பெண்களுக்கான உரையாடல்களை ஓர் ஒழுங்கான இடைவெளியில் நடத்தும் பொறுப்பாளராகவும், வயோதிபர்களுக்கான சேவைகளை வழங்குபவராகவும், பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் ஆசிரியையாகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியரின் மகள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (21.02.2021) காலை இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார் வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வைத்தியரின் மகள் படுகாயமடைந்துள்ளார்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை – பாலையூற்று பகுதியைச் சேர்ந்த பீ.நிலாசினி (29 வயது) என தெரியவருகிறது. இந்த விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டிலுள்ள அனைத்துப் அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி பெப்பிரவரி 25ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 17ஆம் திகதி வரையில் இந்த விடுமுறை வழக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுற்று நிருபமூடாக மாகாணக் கல்வித்திணைக்கள செயலாளர்கள் தொடக்கம் அதிபர் வரையில் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டிலுள்ள அனைத்துப் அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெறும் 600 கிராம் எடையில் பிறந்த ஒரு குழந்தை மருத்துவர்களின் பெரும் முயற்சியினால் பூரண நலம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பருத்தித்துறையை சேர்ந்த 6 மாதக் கர்ப்பவதித் தாய் ஒருவர் திடீர் பிரசவவலி காரணமாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவர் உடனடியாக குழந்தை பிரசவித்தார். சாதாரண கர்ப்ப காலம் 35 வாரமாகும். எனினும் முன்கூட்டியே, அதாவது 24 ஆவது வாரத்தில் பிறந்த இந்தக் குழந்தையின் நிறை 600 கிராமாக மட்டுமே இருந்துள்ளது.
சிசு பராமரிப்பு வைத்திய நிபுணர் டீபால் நவரட்ண தலைமையிலான மருத்துவக் குழுவினரின் 4 மாத முயற்சியில் அதாவது 97 நாள்கள் பரா மரிப்பில் குழுந்தை பூரண நலமாகத் தேறி தற்போது தாயாருடன் வீடு சென்றுள்ளது. இது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதலாவது சம்பவமாக பதிவிடப்படுகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலம் சிசு பராமரிப்பு வைத்திய நிபுணர் பதவி வெற்றிடமாக இருந்தது. தற்போது அந்த வெற்றிடம் நிரப்பப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை வழங்கப்படுகின்றது.
அதேநேரம் தற்போது மற்றுமோர் தாயார் 25 வார கர்ப்ப காலத்தில் பிரசவித்த குழந்தையும் சுகதேகியாக வைத்தியசாலையில் பராமரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
திருகோணமலை – கந்தளாய்ப் பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது கூ.ரி.ய ஆ.யு.த.த்.தி.னா.ல் கு.த்.து.ம் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தா.க்.கு.த.லு.க்.கு.ள்.ளா.ன பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த தனது மனைவியை, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த கணவன் வழி மறித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வாய்த்தர்க்கத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர், திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூ.ரி.ய ஆ.யு.த.த்.தை எடுத்து, தனது மனைவியைச் ச.ரமாரியாக வெ.ட்.டி.யு.ள்.ளா.ர்.
இதன்போது, அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர், மீண்டும் திரும்பி சென்றுள்ளதைக் காணொளி மூலம் காண முடிந்துள்ளது.
சம்பவத்தில் கா.யமடைந்த பெண், திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் போ.தை.ப்.பொ.ரு.ள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் நாளாந்தம் கோடிக்கணக்கான பணத்தை நிலக்கீழ் சுரங்கத்தில் ப.துக்கி வைப்பதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நாளாந்தம் குறைந்தபட்சமாக மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் இவ்வாறு ப.துக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. குறித்த பணத்தை வங்கிகளில் வைப்பிட முடியாமல் இ.ர.கசியமாக நிலத்தில் ம.றைத்து வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போ.தை.ப்.பொ.ரு.ள் விற்பனை செய்யும் பணத்தை வங்கிகளில் வைப்பிலிடும் கணக்குகளை தே.டி வி.சாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களில் வங்கிகளில் பணம் வைப்பிலிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ச.ட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணத்தை கொண்டு செல்லப்பட்ட போதிலும் அண்மைய காலமாக அந்த நடவடிக்கையும் முடியாமல் போயுள்ளது.
நாட்டில் போ.தை.ப்.பொ.ரு.ளு.க்.கு அ.டிமையானவர்கள் இலட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 கிலோ கிராம் வரையான போ.தை.ப்.பொ.ரு.ள் தே.வைப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போ.தை.ப்.பொ.ரு.ளை வேறு முறையில் பக்கட்களில் அ.டைத்து சில்லறை கடைகளில் விற்பனை செய்வதற்கு வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் பணம் வேறு நபர்களின் பெயர்களில் வைப்பிலிப்படப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ச.ட்டவிரோதமான பணத்தை வங்கிகளில் சேமிக்க முடியாத அளவு சட்டம் கடுமையாகிய பின்னர் போ.தை.ப்.பொ.ரு.ள் வ.ர்த்தகர்கள் பணத்தை நிலத்திற்குள் ப.துக்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போ.தை.ப்.பொ.ரு.ள் த.டு.ப்.பு பிரிவினர் மேற்கொண்ட சு.ற்றிவ.ளைப்பில் ப.துக்கி வைக்கப்பட்ட பணம் க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்னர் கிடைத்த வருமானங்களை கொண்டு சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டது. எனினும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுவதனால் இவ்வாறு நிலத்திற்குள் சுரங்கம் அமைத்து பணத்தை ப.துக்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.